Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை! 16 Jan, 2026 | 11:57 AM எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் (Julie Kozack) அறிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் சேதவிபரங்களை இந்தக் குழு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களையும் அவர்கள் நடத்துவார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236159
  3. இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா? 15 January 2026 அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது, நீதி வழங்குவதாக உறுதியளித்த போதிலும், இதுவரையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை, இலங்கை நிவர்த்தி செய்யத்தவறியது, பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுயுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள், விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளதாகவும், அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440847/public-accusations-about-sri-lankas-war-crimes-will-sri-lankas-silence-on-accountability-be-broken
  4. தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்றை முடக்க முயன்றார். இருப்பினும், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் பின்னர் இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkgilyic03zko29nrtecabjc
  5. முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது 16 Jan, 2026 | 11:11 AM முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து, அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால் முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236148 காதலர்கள் ஜாக்கிரதை!
  6. நடந்து சென்று பலாலி காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி Editorial / 2026 ஜனவரி 16 , மு.ப. 09:55 பலாலியில் இராணுவ படைத் தளபதிகளை இன்று (16.01.2026) காலை சந்தித்த ஜனாதிபதி அனரகுமார திஸாநாயக்க வலி வடக்கின் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எழுபது வீதமான காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக தெரிய வருகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நடந்து-சென்று-பலாலி-காணிகளை-பார்வையிட்ட-ஜனாதிபதி/175-371115
  7. யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236163
  8. தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/236157
  9. 🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨ adminJanuary 15, 2026 யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரையில் பல இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 🗣️ குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு – “எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு.” எனக் குறிப்பிட்டுள்ளார் இனவாதமற்ற சமூகத்துடனான பாகுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், கலாசார மதிப்பை பேண “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார். பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/226606/
  10. சிறிலங்கா வில் பெளத்த‌ர்களும் ,இந்துக்களும் சிறுபான்மை கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் கொடுமைப்படுத்துகின்றனர் என அமேரிக்கா அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.... இதன் பின்னனி என்ன ? ஆசியாவில் உள்ள நாடுகளின் எல்லைகளை மதரீதியாக உருவாக்கியதன் காரணம் என்ன? உலக போர் இரண்டின் பின் மதம் ,சார்ந்த போர்கள் நடத்த வேணும் என தீர்மானிக்க பட்ட ஒர் விடயமாக இருக்குமோ?
  11. வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா! adminJanuary 16, 2026 வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (15.01.26) இடம்பெற்றது. இதில் முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டமும், மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டமும் பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/226615/
  12. 💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊 adminJanuary 16, 2026 மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்களுடன் இணைந்து பேசாலை கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம் மற்றும் உதயபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாடசாலை மாணவரும் அடங்குவார். நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பேசாலை காவற்துறையினர் இந்த துயரச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் மத்தியில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மீளாத் துயரை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2026/226620/
  13. 16ஆவது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆரம்பம் – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியுடன் தொடக்கம் 15 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்தது. ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது. ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஹராரே டக்காஷிங்க விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி குழுவுக்கான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற தன்ஸானியாவுக்கு எதிரான டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தன்ஸானியா 34 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தன்ஸானியாவின் மொத்த எண்ணிக்கையில் 27 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது. துடுப்பாட்டத்தில் டிலான் தக்கார் (36), தர்பன் ஜோபன்புத்ரா (19), காலிதி ஜுமா (12), அக்ரி ஹியூகோ (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் விட்டெல் லோஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிக்கா மெக்கென்ஸி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்குவான் பெலே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 29 ஓவர்கள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மெற்கிந்தியத் தீவுகள் 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டஙகளைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ஸக்கரி கார்ட்டர் (8) ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தனேஸ் பிரான்சிஸ் 52 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். எவ்வாறாயினும் அவர்கள் இருவர் உட்பட நால்வர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (114 - 4 விக்.) ஷமார் அப்ள் (4 ஆ.இ.), ஷக்குவான் பெலே (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் அகஸ்டினோ முவாமெலே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரேமண்ட் பிரான்சிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷக்குவான் பெலே https://www.virakesari.lk/article/236130
  14. Today
  15. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடைக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் டிராக்டர் பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. ஊர் கோவில் காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. படக்குறிப்பு,பாலமேடு ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி துணை முதல்வர் வருவதற்குத் தொடர்ந்து தாமதம் ஆனதால், ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. 2 மணி நேரம் தாமதம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்கு வர தாமதமான நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணியளவில் போட்டி தொடங்கியது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
  16. யாழ் - மன்னார் வீதியில் சோகம்: இருவர் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 09:52 AM யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நாவக்குளி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் காயமடைந்து, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சாவகச்சேரி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/236147
  17. பொன்னாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு முன் சில படங்கள்.
  18. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  20. இது உண்மைதான். தாம் வாழும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் இருந்து தப்பி வெளியே வரும் இவர்கள், தாம் வந்து குடியேறும் மேற்கத்தைய நாடுகளில் தாம் எந்த அடிப்படைவாதத்திலிருந்து தப்பி வெளியேறினார்களோ, அதே அடிப்படைவாதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். அத்துடன் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊற்றி வளர்க்கப்படுகின்றனர். இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டிலும், அவுஸ்த்திரேலியாவில் மிக அண்மையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முன்னின்று படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மேற்குலகில் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய இளைஞர் யுவதிகள்தான் என்பது அதிர்ச்சியான தகவல். 2014 முதல் 2019 வரையான காலப்பகுதியில் உலகையே ஆட்டிப்படைத்த‌ இஸ்லாமிய அடிப்படைவாதக் கொடூரப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் அமைப்பில் இணைவதற்கு மேற்குலகில் பிறந்து வளர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் முன்னின்று சென்றிருந்தனர் என்பதும், இவர்களுள் சிலர் மிகவும் கொடூரமான படுகொலைகளை வீடியோக்களின் முன்னால் நின்று நிகழ்த்திவிட்டு அல்லாவுக்கே மகிமை என்று கூக்குரலிட்டதும் நினைவில் இருக்கலாம். இவ்வாறு அவுஸ்த்திரேலியாவிலிருந்து சிரியா சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதியொருவன் தனது இரு மகன்களையும் அங்கு கூட்டிச் சென்றிருந்தான். அப்பயங்கரவாதியும், அவனது இரு புதல்வர்களும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவர்கள், லெபனானிய பின்புலத்தைக் கொண்டவர்கள். சிரியாவில் இவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர், தான் படுகொலை செய்த இரு சிரியர்களின் தலைகளைக் கொய்து தனது இரு மகன்களினதும் கைகளில் கொடுத்த அவன், அல்லாவுக்கே மகிமை என்று கூவியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரானிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நிச்சயம் துடைத்தழிக்கப்பட வேண்டும். இதற்காக நான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.
  21. இப்போது நீங்கள் கூறும் நானா யாரென்று புரிந்துவிட்டது. அந்த நபரின் குரோதத்தின் காரண‌மும் தெளிவாகிறது. நான் விடயம் தெரியாமல் இனம்பற்றியெல்லாம் எழுதிவிட்டேன். மிக்க நன்றி!
  22. பொங்கல் விழா கொண்டாட யாழ்ப்பாணம் சென்ற அனுராவுடன் காணொளி எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்ததை பார்க்கும் போது அனுரா வரக்கூடிய வாய்ப்புள்ளது. இதுவரையில் எனக்குத்தெரிந்து, ஒரு இலங்கை ஜனாதிபதியை தமிழ் மக்கள் இப்படி வரவேற்றத்தை நான் காணவில்லை எப்படியும் ஒரு கலவரத்தை ஆரம்பித்து இந்த உறவை சிதைக்க முயல்வர் இனவாதிகள்.
  23. அனுரா வருவாரோ இல்லையோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் அர்ச்சுனாவை கொழும்பில் தேர்தலில் நிற்கும்படி சஜித் வற்புறுத்துகிறாரமெல்லே. சஜித் கேட்டாரோ இல்லையோ, இவருக்கு அங்கே நிற்பதுதான் சௌகரியம். சட்டவிரோத தையிட்டி விகாரை விடையத்தில் இவர் பொய்யான தகவல்களை பரப்பி தென்னிலங்கையை மகிழச்செய்யும் அடுத்த சுமந்திரன் இவர்! ஒருநாளைக்கு பிரபாகரன் எனக்கு கடவுள் என்று முழங்குவார், அடுத்தநாள் ராஜபக்ச குடும்பத்தினர் செய்த கொடுமைகளை நான் மறந்துவிட்டேன், நாமலே அடுத்த ஜனாதிபதி, சிங்களவர் எப்படி மஹிந்தவை மறந்தனர் என்று கேள்வி வேற கேட்பார், இன்னொருநாள் சஜித் என்னை அழைத்தார் என்பார், வேறொரு நாள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களியுங்கள் என்பார். இவரும் இவரின் நகைச்சுவை பேச்சுகளும், வைத்தியராக இருந்து சாதித்து அரசியலுக்குள் புகுந்தார், இனி தமிழர் தலைவராகினால் அவருக்கு நோய் முற்றிவிடும். மக்களுக்கும் நீதிமன்றத்தில் இருந்து அடிக்கடி அழைப்பாணை அழைப்பாணை வரும்.
  24. Yesterday
  25. ரமணி மாஸ்டரின் இரசிகர்கள், அவருடைய ஓவியங்களைப் பார்த்த உடனேயே அதன் பாணி மூலமாக அவர் வரைந்தவை என்பதை அடையாளப்படுத்தி விடுவார்கள். நல்ல உடற்கூற்றியலுடன் கூடிய மனித உருவங்களும், விரைவான தன்மை கொண்ட எளிமையான, ஆனால் மிகச்சரியாக அமைந்துள்ள கோடுகளும் அவரின் தனித்தன்மையாகும். அவருடைய நீர்வண்ணம் தீட்டும் பாணி இலங்கையில் முன்னோடியானது. அது, மென்மையான வண்ணக் கலவைகளையும் துடிப்பான தூரிகை வீச்சுகளையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நுட்பமாகும். அவர் நீர்வர்ணத்தின் ஈரமான தன்மையைப் பயன்படுத்தி, பின்னணிகளில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மென்மையாகக் கலக்கும்படி தீட்டியுள்ளதோடு, தாளின் வெள்ளை நிறத்தையே ஒளியாகப் பயன்படுத்தி நிழல்களுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான முப்பரிமாணத் தன்மையை உருவாக்கியிருப்பார். ஓஃப்செட் வருவதற்கு முன்னமே, புளொக் அச்சடிக்கும் நேரத்திலும் அவர் எளிமையான கோடுகளுடனும் சிறப்பான நிறத் தெரிவுகளுடனும் கவர்ந்திழுக்கும் வகையிலான முகப்போவியங்களைப் படைத்திருந்தார். கருப்பு வெள்ளையில் படத்துக்கான ஸ்கெட்ச் வரைந்து, ஒயில் பேப்பரை அதன் மேல் இருக்குமாறு ஒரு பக்கம் மட்டும் ஒட்டி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டிக் குறித்திருப்பார். 1990 அளவில் அவர் தீருவிலில் போராளிகளின் சிற்பத்தைச் செய்தார். ஏழு போராளிகள், ஏழும் வேறு வேறு நிலைகளில், ஆண்கள், பெண்கள், வேறு முகங்கள் முக பாவனைகள் அப்படி ஒரு அமைவு இலங்கையில் வேறு எங்கும் இல்லை. அதன் பிறகு கிட்டு பூங்கா நல்லூரில் அமைக்கும் போது அங்கே கிட்டுவின் சிலையை உருவாக்கினார். கிட்டுவுடைய நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு அவருடைய முப்பரிமாணத் தோற்றத்தைக் கம்பீரமாக உருவாக்கினார். கிட்டுவின் மனைவியும் அங்கே அடிக்கடி வந்து தனது கருத்துக்களைச் சொல்வார். சிலை முடிந்த பிறகு அவர் சிலையைத் தொட்டுத் தடவி மிகவும் பூரிப்படைந்தார். அடுத்ததாக நெல்லியடி மத்திய கல்லூரியில் மில்லர் சிற்பமும் அருமையாக அமைந்து இருந்தது. மில்லரின் தாயார் கூட அவரை மிகவும் பாராட்டினார். பின்னராக அவர் உருவாக்கிய சேர் பொன் ராமநாதன் சிலை, நுண்கலைக் கல்லூரியின் முகப்பில் கம்பீரமாய் நிற்கிறது. தந்தை செல்வா, இந்து போர்ட் ராஜரத்தினம், கந்தையா உபாத்தியாயர், சரஸ்வதி சிலை என்று அதன் பின்னர் தொடர்ந்து சிற்பங்களைச் செய்து கொண்டே இருந்தார். அதன் பின்னர் ஆறுமுக நாவலர், தேவரயாளி நிறுவுனர் சூரன், பின்னர் அவர் செய்த சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய சிலையையும் செய்தார். கடைசியாக அவர் உருவாக்கிய சிவசிதம்பரம் அவர்களுடைய சிலை நெல்லியடிச் சந்தியில் நின்றிருக்கிறது. அவர் தன்னால் இனிமேல் சிற்பங்கள் செய்ய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை என்பது தெரிந்ததும், தன் சிறப்பான மாணவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களை ஊக்குவித்தார். ஈழத்தில் நவீன ஓவியத்தை வெகுஜன ஊடகங்களில் அனைவரும் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பத்திரிகைகளில் வந்த வரைபடங்களிலும் முகப்போவியங்களிலும் அவர் நவீன மற்றும் மறைபொருள் ஓவியங்களை நிறையவே படைத்தார். இதன் மூலம் நவீன ஓவிய ரசனையைத் தமிழ் மக்களிடையே பரப்பினார். கற்பனைத்திறனோடு புத்துருவாக்கம் செய்யும் பிரம்மாவாக அவர் உருவாக்கிய பல ஓவியப் படைப்புகளும் சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. எங்கள் சமூகத்தில் மீளுருவாக்கத்துக்கும் புத்துருவாக்கத்துக்கும் உள்ள வித்தியாசங்களைப் பிரித்தறியும் ஓவிய ரசனையை வளர்க்க அவர் தன்னாலானவற்றைச் செய்தார். காலம் தான் அதற்கான விடையை இனிமேல் அளிக்க வேண்டும். அவருடைய விவரங்களும் படைப்புகளும் இலங்கை ஓவியப்பாட ஆண்டு 10,11 பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த ஒரு மரியாதையே அதுவாகும். தனியே ஒரு வர்த்தக ரீதியிலான ஓவியராக இல்லாமல் அவருடைய தனிப் பாணியில் இலங்கைத் தீவில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மாபெரும் ஓவியரின் தனிச்சிறப்புக்கு இந்த அங்கீகாரம் கட்டியம் கூறி நிற்கிறது. தற்பொழுது அவரிடம் பயின்ற, மற்றும் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கெல்லாம் அவர் படைப்புகள் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது அவருக்குப் பெருமை. வாழ்க அவர் புகழ்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.