24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இது உப்பு சத்தியாக்கிரகம் ....உப்பில்லாத சாப்பாடு எவ்வளவும் சாப்பிடலாம் ....இவர் இங்கு இரவு தங்கி நின்றால் ...மனிசி வீட்டிலை ..மகனின் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்திடுவா என்ற பயத்தில்தான் ...வீட்டிற்கு அடிக்கடி போய்வருகிறார் ...தப்ப எடுக்காதையுங்கோ
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
ராஜபக்ச குடும்பத்தை தவிக்க விட்டதற்கு பாவமன்னிப்பு கேட்க போயிருப்பாரோ?
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
எப்படி திருடினார்கள்?
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இவர் இப்போது பாராளுமன்றில் இல்லை. மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார். இது சுழற்சி முறையிலான நுhதனமான போராட்டம். எட்டுமணிநேர வேலை மாதிரி.
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 01:59 PM கிளிநொச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடைகளை ஒன்றரை வருடமாக மோசடியாக திருடி வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் 18.03.2024 முதல் 29.05.2025 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாவனெல்ல மற்றும் கெடஹெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்திணைக்களம் மேற்கொண்டு வருகி கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது! | Virakesari.lk
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
13 Jan, 2026 | 04:21 PM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜூலி சாங்கின் சிறப்பான பணிகளுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்! | Virakesari.lk
-
தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்
13 Jan, 2026 | 05:43 PM இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் உலக அயலகத் தமிழர் தினம் 2026 க்கு என்னை அழைத்தமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழராக கனேடிய மண்ணின் மக்கள் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியையும் பெருமிதமும் அடைகிறேன். தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன். கனடா மற்றும் இந்திய 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளைப் பேணிவருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கனடா - இந்தியா உறவு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருகிறது. இவ்விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்கமுடியும் என நான் நம்புகிறேன். கனடாவில் இலங்கையிலிருந்து குடியேறிய கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாக இருந்தபோதும் தமிழர்களாக இவர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுடன் பிரிக்கமுடியாத உறவை மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பகிர்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச் செய்யமுடியும். அதேபோன்று ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் மிகமுக்கியமானவையாகும். ஈழத்தமிழராக கனேடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்து, இன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள நான், தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்த ற்றும் செய்கின்ற சகல உதவிகளுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார். தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல் | Virakesari.lk
- Today
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
2,000 பேர் பலி! ஈரான் போராட்டம் குறித்து வெளியான பகீர் தகவல் Jan 13, 2026 - 05:07 PM ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. அவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmkcioycp03vqo29n43yaf44x
-
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு Jan 13, 2026 - 02:20 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார். அதற்கமைய, 01.மனிதவள மேம்பாடு 02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் 0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள் 04.பாடத்திட்ட மேம்பாடு 05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkccqg6t03v9o29nivx5lk3f
-
இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இரு தோல்விகளும் இஸ்ரோவுக்கு எவ்வாறு ஒரு பின்னடைவாக மாறக்கூடும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் கவுன்ட்டவுண் முடிந்து புறப்படும் காட்சி கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் மூலம் EOS-N1 செயற்கைக் கோள் உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தை, ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைக் கோள்களை ஏவும் அமைப்பான NSIL (NewSpace India Limited) மேற்கொண்டது. ஆனால் இத்திட்டத்தின் போது ராக்கெட்டின் செயல்பாட்டில் ஒரு முரண் ஏற்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. பயணப்பாதையில் 'ஒரு விலகல்' ஏற்பட்டதாக கூறியுள்ள இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த மே மாதம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி61 திட்டம் முழுமையடையாத நிலையில், பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வர்த்தக ரீதியான செயற்கைக்கோள் ஏவும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது இஸ்ரோவுக்கு என்ன மாதிரியான பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,EOS-N1 செயற்கைக்கோளின் புகைப்படம் பிஎஸ்எல்வி ராக்கெட் உலக சாதனை இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் 63 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இஸ்ரோவின் பெருமை மிகு திட்டங்களான சந்திரயான் 1, செவ்வாய் சுற்றுவட்டப்பாதை திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 போன்ற திட்டங்களுக்கான செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாகவே ஏவப்பட்டன. அத்தோடு 2017ம் ஆண்டில் ஒரே திட்டத்தில் 104 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளது. இவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இஸ்ரோ முன்னிறுத்தும் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்தான் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 திட்டம் முழுமையடையவில்லை. இது இஸ்ரோவின் மிகவும் அரிதான 'ராக்கெட் ஏவுதல்' தோல்வியாக குறிப்பிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 8 மாத இடைவெளியில் ஜனவரி 12-ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிந்துவிடவில்லை, சி61 திட்டத்தில் ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பிபிசி தமிழிடம் பேசிய அவர்,"எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், அது வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் திட்டத்திற்குப் பின் அதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும்." என குறிப்பிடுகிறார். ஆனால் முந்தைய திட்டங்களின் தோல்வி மதிப்பீடு அறிக்கை (Failure Assessment Report) வெளிப்படையாக இருந்ததையும் வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். பிஎஸ்எல்வி-சி61 திட்டத்திற்கான தோல்வி மதிப்பீட்டு அறிக்கையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்பதால், தோல்விக்கான காரணம் தெரியவில்லை என கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். உலக சந்தையை குறிவைக்கும் இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ள இன்-ஸ்பேஸ்(IN-SPACe), அதன் எதிர்வரும் தசாப்தம் மற்றும் கண்ணோட்டங்களுக்கான உத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. "2033-ம் ஆண்டுக்குள் உலக விண்வெளி சந்தையில் 8 சதவிகிதத்தை இந்தியா கைப்பற்றும், இதன் மூலம் அதன் விண்வெளி பொருளாதாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும்" 2023ம் ஆண்டு நிலவரப்படி உலக சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவிகிதமாகவும், பொருளாதார மதிப்பு 8.4 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என இன்-ஸ்பேஸ் குறிப்பிட்டிருந்தது. இந்த லட்சியப் பார்வை வலுவான அரசு ஆதரவு, தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தனியார் விண்வெளித்துறையின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் கூறுகிறது. சர்வதேச சந்தையை குறி வைத்து இயங்கி வரும் நிலையில், இஸ்ரோவால் பெருமைக்குரியதாக முன்னிறுத்தப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் "இருமுறை தோல்வியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கவலை தரக்கூடிய ஒன்று. ஏனெனில், சர்வதேச சந்தையில் பிஎஸ்எல்வி ராக்கெட் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்." என முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். ஆனால் பிஎஸ்எல்வியின் இந்த பின்னடைவு முன்னேற்றத்திற்கான பாடமாகவே இருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய விஞ்ஞானி சுவேந்து பட்நாயக், இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முன்னேற்றங்கள் நிகழும் என தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-62 திட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஜனவரி 12-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதிலிருந்து சுமார் அரை மணி நேரத்தில், ராக்கெட்டின் பயணப்பாதையில் 'விலகல்' இருந்ததை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உறுதி செய்தார். ராக்கெட்டின் நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 நிலைகளைக் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில், மூன்றாவது நிலையின் இறுதியில் இடையூறுகள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் பாதை மாறியது உணரப்பட்டது." என்று கூறினார். தரவுகளை ஆராயந்து வருவதாகவும், விரைவில் முழுமையான விளக்கம் தரப்படும் எனவும் வி.நாராயணன் கூறினார். பிஎஸ்எல்வி ராக்கெட் எப்படி இயங்குகிறது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணத்தை விளக்கும் வரைபடம் பிஎஸ்எல்வி ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதாவது தொடர் வண்டியில் இருக்கும் ரயில் பெட்டிகள் போன்று "இது உண்மையில் 4 ராக்கெட்களின் இணைப்பு" என்று அவர் கூறினார். ராக்கெட் ஏவுதலுக்காக நிலைநிறுத்தப்படும் போது முதலில் கீழே இருப்பது பிஎஸ்1, இதற்கு அடுத்தபடியாக முறையே பிஎஸ்2, பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 நிலைகள் உள்ளன. இவற்றில் பிஎஸ்1 மற்றும் பிஎஸ்3 திட எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்4 திரவ எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ் 1 நிலையிலிருக்கும் திட எரிபொருள் ராக்கெட் பூமியிலிருந்து ஈர்ப்புவிசைக்கு எதிராக கிளம்புவதற்கான உந்துவிசையைக் கொடுக்கிறது. இயக்கமற்ற நிலையிலிருந்து, இயங்கும் நிலைக்கு மாறுவதற்கான விசையைத் தரும் முதல் நிலை, ராக்கெட்டை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உயர்த்தும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். இதன் பின்னர் பிஎஸ் 2 திரவ எரிபொருளைக் கொண்டது, இது ராக்கெட்டின் திசை போன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது. எந்த சுற்றுப்பாதைக்கு ராக்கெட் செல்லவிருக்கிறது என்பதை இந்த நிலை முடிவு செய்யும். இதன் பின்னர், பிஎஸ்3 மீண்டும் திட எரிபொருளைக் கொண்டு ராக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு விண்வெளியில் உயர்த்தும். கடைசியாக, பிஎஸ்4 நிலையில் உள்ள ராக்கெட் திரவ எரிபொருளைக் கொண்டு, செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும். மூன்றாவது நிலையில் ஏற்பட்ட சிக்கல் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தில் இந்த மூன்றாவது நிலை வரைக்கும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது என்பதைக் குறிப்பிடும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "மூன்றாவது நிலையின் செயல்பாட்டுக்கு இடையே பெரிய சிக்கல்" ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். Vapor Pressure போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு காரணம் என அறிவியலாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இதன் பின்னுள்ள அறிவியல் காரணத்தை எளிமையாக விளக்கினார். "காற்று ஊதப்பட்ட பலூனின் வாயைத் திறந்து விட்டால், அது எதிர்திசையில் வேகமாகச் செல்லும். இதுவே, பலூனின் வாயை பெரிதாக திறந்தால் காற்று வேகமாக வெளியேறி பலூனின் வேகத்தில் மாறுபாடு ஏற்படலாம். இதே போன்று தான் ராக்கெட் இயங்கும் போது, அதன் புகை வெளியேறக்கூடிய முனையில், (Nozzle) திட்டமிட்டிருந்த அழுத்தம் உருவாகவில்லை." என விளக்கினார். "இந்த அழுத்தம் சரியாக உருவாகாமல் இருந்ததற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்பதில் தான் பிரச்னை உள்ளது. குறுகிய முனையின் (Nozzle) வாய்ப்பகுதி உடைந்திருக்கலாம். பிஎஸ்3 எரிபொருளில் பிரச்னை இருக்கலாம் அதாவது திட எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பும் போது சரியான விகிதத்தில் அது இல்லாமல் இருந்திருக்கலாம். இதில் சரியான காரணம் என்ன என்பதை இஸ்ரோ இன்னமும் அறிவிக்கவில்லை" என்பதை குறிப்பிடுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். ஆனால், கடந்தமுறை 2025 , மே மாதம் செயல்படுத்தப்பட்டு முழுமையடையாத சி-61 திட்டத்திலும், இதே மூன்றாவது நிலையில், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது என குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இது குறித்த அறிக்கை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்பதையும் கூறினார். எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அது குறித்த அறிக்கை தயார் செய்யப்படும். இதிலிருந்து தான் இஸ்ரோவுக்கு உதிரிபாகங்கள் வழங்கியவர் தரமானதை வழங்கினாரா? இஸ்ரோவில் போதுமான பரிசோதனை செய்யாமல் அனுப்பினார்களா? யார் மீது தவறு? என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள முடியும்." என த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvqn6dv0po
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
"முழு நாடுமே ஒன்றாக": நாடு தழுவிய சுற்றிவளைப்பில் 871 பேர் கைது! Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 11:25 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 339 கிராம் ஹெரோயின், 447 கிராம் ஐஸ், 05 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 4,636 கஞ்சா செடிகள், 06 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 92 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 610 போதை மாத்திரைகள், 347 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 24 கிலோகிராம் 542 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 888 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 09 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235905
-
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய், பிபிசி கிளேர் கீனன், பிபிசி 42 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் பயன்படுத்துவதற்கான பரந்த அளவிலான உளவு மற்றும் ராணுவ முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் இருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர். நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் சாத்தியமான தலையீட்டிற்கான ஒரு வழியாகத் தொடர்கின்றன. அதே நேரத்தில், சைபர் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் ரீதியான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையில், இரானுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் திங்களன்று அறிவித்தார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் "போருக்கும் தயாராக" இருப்பதாகவும் இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images 'மிகவும் வலிமையான வழிகள்' இரான் குறித்து விவாதிக்க டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழு செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கொள்வாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. மேலும் இரானில் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் தலையீடு செய்ய "மிகவும் வலிமையான வழிகள்'' குறித்து தனது ராணுவம் பரிசீலித்து வருவதாக டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். இரான் தலைவர்கள் "பேச்சுவார்த்தை" நடத்த தன்னை அழைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் "ஒரு சந்திப்பு நடைபெறும் முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்றும் கூறினார். பட மூலாதாரம்,Getty Images திட்டம் என்ன? இரானிய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி, தற்போது இரானின் அதிஉயர் தலைவர் காமனெயியின் ஆட்சிக்கு எதிரான ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. திங்களன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இரானிய அதிகாரி ஒருவர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தேவை என்று கருதினால், "ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டார்" என்று அவர் எச்சரித்தார். சிபிஎஸ் நிறுவனத்துடன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நபர்கள் பேசுகையில், இரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது பெரும்பாலும் விமானப் படைத் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அதே சமயம் இரானின் கட்டளை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான வழிகளையும் இத்தாக்குதல் குறித்து திட்டமிடுபவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர். இரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வெளியேறும் திட்டத்தை வைத்திருக்கும்படியோ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இரானில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகளைப் பாராட்டிய காமனெயி, அமெரிக்கா "ஏமாற்று வேலை" செய்வதாகவும், "துரோகமிழைக்கும் கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், "இரானிய தேசம் ஒரு வலிமையான தேசம், அது விழிப்புணர்வுடன் உள்ளது, தனது எதிரிகளை அறியும், மேலும் ஒவ்வொரு களத்திலும் அது இருக்கும்" என்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளைத் தொடர்ந்து, பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் திரண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. நாட்டிற்குள் இருப்பவர்களை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதே சமயம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பிபிசி பாரசீக சேவை கண்டது. பட மூலாதாரம்,Getty Images 25% வரி திங்கள்கிழமை அன்று, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், இரானுடன் "வணிகம் செய்யும்" நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று பதிவிட்டார். இது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்காத அவர், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது" என்று கூறினார். ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் இரான், தற்போது நாணய வீழ்ச்சியையும் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளது. இரானின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் ஆகும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கட்டுப்பாடுகள், உணவுத் தட்டுப்பாட்டையும் செலவுகளையும் மேலும் மோசமாக்கக்கூடும். புதிய வரிகள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் தகவல்களைப் பகிரவில்லை. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இரான் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், அமெரிக்காவில் வாழும் இரானின் கடைசி மன்னரின் மகனான ரெஸா பஹ்லவி, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க அதிபர் டிரம்ப் "விரைவாக" தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரானிய அரசு "மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி உலகை ஏமாற்ற முயல்கிறது" என்று பஹ்லவி கூறினார். அதிபர் டிரம்ப்பை "தான் சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர்" என்றும், "தற்போதைய சூழலின் விபரீதத்தை நன்கு அறிந்தவர்" என்றும் அவர் விவரித்தார். மேலும், "அதிபர் மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் பஹ்லவி கூறினார். நார்வேயைத் தளமாகக் கொண்ட 'இரான் மனித உரிமைகள்' (IHRNGO) அமைப்பின் தகவல்படி, இரானில் 18 வயதிற்குட்பட்ட 9 பேர் உட்பட குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று இரானுக்குள் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. பிபிசி மற்றும் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedwg0z67d4o
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
2) முன்னோடிக்கான இரண்டாவது நன்கொடை ரூபா 10,493.65 சதம் 13/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 13/01/2026 வங்கி மீதி ரூபா 111,573.67 சதம் ஆகும். இரண்டாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறட்டும்.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச! கல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வாசலுக்கு முன்பாக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டிருந்தனர். இதன்போது, கூடாரத்தை அகற்றுமாறு பொலிசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடதக்கது. https://athavannews.com/2026/1459826
-
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
றோ ஏஜெண்டுகள் நல்ல விசுவாசமாய் வேலை பார்க்கறீனம் போல.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
கிந்தியா என்று எழுத்து பிழை என்று முதலில் நினைத்துவிட்டேன் 😂 காரணம் பின்பு இரண்டாம் தடவை இலங்கை தமிழர்கள் இந்தியாவின் என்று வந்தது பின்பு கிந்தியா என்று எழுத்து பிழை கிழவி 🤣 ஈழ தமிழர்களில் கிழவிகளே இல்லை தலைக்கு டை அடிச்ச அல்லது புர்க்காவால் மூடிய மார்க்கண்டேயரின் தங்கைகள் மட்டுமே உள்ளனர்.
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 ✈️ பாகம் 03 – விமான நிலைய சாகசம் அன்று காலையிலே வீடு உற்சாகத்தில் மூழ்கி இருந்தது. நிலன், தன் சிறிய தோள் பையை இறுகப் பிடித்துக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் கொண்டு இருந்தான். திரேன், பெரியவன் என்பதால், தன் பாஸ்போர்ட் [Passport] மற்றும் போர்டிங் பாஸ் (Boarding Pass) இரண்டையும் அடிக்கடி மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டு இருந்தான். எதையும் புரியாத வயது கொண்ட ஒரு வயது ஆரின் — சுற்றியுள்ள உற்சாகத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக “கூ கூ” என ஒலித்தான். “நாம் உண்மையிலேயே இன்று விமானத்தில் போகிறோமா, தாத்தா?” என்று நிலன் கண்கள் அகலமாக, எதிர்பார்ப்புடன் மின்னின. தாத்தா புன்னகையுடன், "ஆமாம், சின்ன பைலட் [விமானி]," தாத்தா புன்னகையுடன் கூறினார். "இன்று, நாம் மேகங்களுக்கு மேலே பறந்து உலகை உயரத்திலிருந்து பார்க்கப் போகிறோம்." என்றார். விமான நிலையத்திற்குச் செல்லும் பயணம் சிரிப்பாலும், அரட்டையடிப்பதாலும் நிறைந்திருந்தது. தாத்தா விமான நிலையம் போகிற வழியில், வெவ்வேறு வாகனங்களைச் சுட்டிக்காட்டினார் - ஒரு பெரிய சிவப்பு பேருந்து, ஒரு கருப்பு டாக்ஸி [taxi], மற்றும் ஒரு பளபளப்பான டெலிவரி வேன் [delivery van] . “ஒவ்வொரு வாகனத்துக்கும் அவை அவற்றுக்காக ஒரு பிரத்தியேக வேலையுண்டு?” என்று அவர் கூறினார். “ஒரு நாள், ஒருவேளை நீங்கள் உங்கள் சொந்த விமானத்தை ஓட்டுவீர்கள்!” என்றார். விமான நிலையத்தை அடைந்ததும், அதன் பிரம்மாண்டமான அளவு குழந்தைகளை மூச்சுத் திணறச் செய்தது. விமான நிலைய முனையம் [terminal] பளபளப்பான தரைகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களால் மின்னியது, அதனூடாக உள்ளே பாய்ந்த சூரிய ஒளி அங்கு பிரதிபலித்தது. மக்கள் சூட்கேஸ்களை [suitcases] இழுத்துக் கொண்டும், தொலைபேசிகளில் பேசிக் கொண்டும் அல்லது சிலர் குழந்தைகளுடன் நெரிசலில் ஸ்ட்ரோலர்களை [strollers] உருட்டிக் கொண்டும் வேகமாக கடந்து சென்று கொண்டு இருந்தனர். “அட! இது கட்டிடத்துக்குள்ளே ஒரு நகரம் மாதிரி இருக்கே!” என்று திரேன் அதிசயித்தான். தாத்தா அவர்களை பாதுகாப்புப் பாதை வழியாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு அடியையும் பொறுமையாக விளக்கினார். “காலணியை கழற்றுங்க, பெல்ட்டை [belt] கழற்றுங்க, உங்கள் ஒவ்வொருவரின் தோள் பையையும் [backpacks] அந்த மெஷினில் வையுங்கள் … பீப் சத்தம் [beep] வந்தாலும் கவலைப்படாதீங்க — இதெல்லாம் சாகசத்தின் ஒரு பாகம் தான்!” என்று சிரித்தபடி சொன்னார். கன்வேயர் பெல்ட்கள் [conveyor belts] ஸ்கேனர்கள் [scanners] வழியாக தங்கள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதை நிலன் வியப்புடன் பார்த்து மூச்சே விட்டான். பாதுகாப்பைக் [security] கடந்ததும், சாகசம் உண்மையிலேயே தொடங்கியது. அவர்கள் புறப்படும் லவுஞ்சிற்குள் [departure lounge] நுழைந்தனர், அங்கு காணப்பட்ட பெரிய ஜன்னல்கள் வழியாக, ஓடு பாதையில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் பரந்த காட்சியைப் பார்த்தனர். நிலன் தனது மூக்கை கண்ணாடியில் அழுத்தி - அங்கே ஒரு பெரிய விமானத்தின் இயந்திரங்கள் சத்தமாக ஒலித்துக் கொண்டு, ஓடுபாதையில் நகரத் தொடங்கி, புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் - இயந்திரங்களின் சத்தம், தரையின் அதிர்வு, ஒளிரும் விளக்குகள் நிலனுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. "தாத்தா! நாம அதுக்குள்ள போகலாமா?" என்று ஆவலாகக் கேட்டான். தாத்தா சிரித்தார். “சீக்கிரம், என் சின்னஞ்சிறு சாகசக்காரர்களே. சீக்கிரம் நாம் போகிறோம்.” என்றார் காத்திருக்கும் நேரத்தை வேடிக்கையாக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் வண்ண பென்சில்களையும் கொடுத்தார். “நீங்கள் காணும் விமானங்களை வரையுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார். வானவில் இறக்கைகள் கொண்ட ஒரு விமானத்தை நிலன் ஆவலுடன் வரைந்தான், அதே நேரத்தில் திரேன், இரவு வானில் பறக்கும் ஒரு விமானத்தை, அது வெளிவிடும் புகை அல்லது நீராவிக்குப் பதிலாக, மின்னும் நட்சத்திரங்களை வெளியே தள்ளி விட்டுக் கொண்டு போவது போல - ஒரு மாயாஜால விமானம் அல்லது ஒரு நட்சத்திரம் போல - கற்பனை செய்து வரைந்தான். குட்டி ஆரின் கூட கைகளைக் காற்றில் ஆட்டி ஆட்டி, விமானம் பறக்கிற மாதிரி நடித்தான். அவசர அறிவிப்பு ஒலித்தது — அவர்களின் விமானம் தயாராகி விட்டது என்று! எனவே அவர்கள் ஜெட் பாலத்தின் [Jet bridge or jetway or passenger boarding bridge (PBB)] ஊடாக விமானத்துக்குச் சென்றார்கள். நிலன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அடைந்து அதனுள்ளாக ஓடிப் போனான். விமானத்தின் அறை [கேபின்] விசாலமாக இருந்தது, வரிசையாக இருக்கைகள் அழகாக இருந்தன. பொதிகள் வைக்க தலைக்கு மேல் மூடக்கூடிய பெட்டிகள் [மேல்நிலை பெட்டிகள் / overhead compartments] இருந்தன. மற்றும் குழந்தைகளைப் அன்பாகப் பார்த்து பழகும் நட்பு விமானப் பணிப்பெண்கள் ["Airhostess"] அங்கு இருந்தனர். தாத்தா அவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக இருக்கைப் பட்டை [seat belt] போட்டு அமர உதவினார். விமானம் நகரத் தொடங்கியதும், நிலன் தனது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, அவனின் கண்கள் வியப்புடன் விரிந்தன. தரை வேகமாகவும் வேகமாகவும் கடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது, திடீரென்று, மெல்ல உயர்ந்து, அது காற்றில் பறந்தது. "நாங்கள் பறக்கிறோம்! நாங்கள் பறக்கிறோம்!" என்று அவன் சிரித்துக் கொண்டே, கீழே உள்ள சிறிய கார்களையும் கட்டிடங்களையும் சுட்டிக்காட்டினான். அவை மங்கியபடி, சிறிதாகத் தெரிந்தன. விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மூன்று பேரனுக்கும் மாயாஜாலம் போல் இருந்தது. தாத்தா அவர்களுக்கு சீட் பெல்ட்களை எப்படி கட்டுவது, ஜன்னலுக்கு வெளியே எப்படி பாதுகாப்பாகப் பார்ப்பது போன்றவற்றைக் கூறி, ஆனால், சிறிய தட்டு மேசைகளை [மேசைத் தாம்பாளம் / little tray tables] அவர்களே சரிபார்த்து பொருத்த அனுமதித்தார். குழந்தைகள் சிற்றுண்டிகளால் மகிழ்ச்சியடைந்தனர் - ஒரு சிறிய பொட்டலம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் - மேகங்கள் சோம்பேறித்தனமாக ஜன்னலைக் கடந்து சென்றன, சில பஞ்சுபோன்ற யானைகள் மற்றும் பெரிய அரண்மனைகள் போல இருந்தன. விமானப் பயணத்தின் நடுவில், தாத்தா தான் கொண்டுவந்த ஒரு சிறிய போட்டி விளையாட்டு ஒன்றை வெளியே எடுத்தார் - 'வானத்தில் புதையல் வேட்டை'. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சரிபார்ப்புப் பட்டியல் இருந்தது: ஒரு டிராகன் போன்ற வடிவிலான மேகத்தைக் கண்டுபிடி, தூரத்தில் ஒரு விமானத்தைக் கண்டுபிடி, அல்லது கீழே நிலத்தில் வளைந்து செல்லும் ஒரு சிறிய நதியைக் கண்டுபிடி என பல கேள்விகள் அங்கு இருந்தன. நிலன் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் பெருமையில் பூரித்தன. திரேன், வழமைபோல் ஆர்வத்துடன், கவனத்துடன் போட்டியிட்டான். ஆரின் கூட எதோ ஒரு புரிதலுடன் எதையெதையோ "சுட்டிக் காட்டி, என்னென்னெவோ சத்தம் போட்டான். விமானம் துபாயை நோக்கி தரை இறங்கும் போது, குழந்தைகள் தங்கள் முகங்களை மீண்டும் ஜன்னல்களில் அழுத்திக் கொண்டனர். அவர்களுக்குக் கீழே நகரம் ஒரு மின்னும் புதையல் பெட்டியைப் போல விரிந்தது: மின்னும் வானளாவிய கட்டிடங்கள், வளைந்து செல்லும் நீர்வழிகள், மற்றும் அடிவானம் வரை நீண்டு கிடக்கும் சிறிய சிறிய மணல் மேடுகள். நிலன் மூச்சுத் திணறினான். "இது மாயாஜாலம் போன்றது!" என்று நிலன் பெரு மூச்சு விட்டான். விமானம் இறுதியாக தரையிறங்கியதும், விமான நிலையத்தின் பரபரப்போடு சாகசம் தொடர்ந்தது: நீண்ட தாழ்வாரங்கள் [long corridors] வழியாக நடந்து, சாமான்களை [luggage] சேகரித்து மற்றும் ஆங்கிலம் மற்றும் அரபியில் வேடிக்கையான பலகைகளையும் கண்டனர். தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்து, கூட்டத்தின் வழியாக அவர்களை கவனமாக பாதுகாப்பாக வழிநடத்தினார். அப்பொழுது சுவாரஸ்யமான காட்சிகளைச் சுட்டிக்காட்டிட தவறவில்லை - நகரும் நடைபாதை [moving walkway, also known as a travelator], வண்ணமயமான நினைவுப் பொருட்களின் காட்சி, மற்றும் சிறிய மீன்கள் நீந்தும் நீரூற்று [fountain] போன்றவை. அவர்கள் வெளியே வந்த நேரத்தில், சூடான துபாய் சூரியன் அவர்களை ஒரு பழைய நண்பரைப் போல வரவேற்றது. குழந்தைகள் புதிய நகரத்தை சுவாசித்தனர், வரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்பார்த்து உற்சாகமாக இருந்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் பிரகாசிப்பதைக் கண்டு தாத்தா சிரித்தார். "துபாய்க்கு வருக, என் சிறிய ஆய்வாளர்களே," என்று அவர் செல்லமாக அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து கூறினார். "ஆனால் இது வெறும் ஆரம்பம் தான்." என்றார் 🌍✈️ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 1991 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33261397920175427/?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கு விவாதங்கள் எல்லாமே எந்த கோணத்தில் நடத்தப்படுகின்றதென்றால், நமது பக்கதிலே எல்லோருமே சுத்தமான சூசைப்பிள்ளைகள், அடுத்தவர்கள் எல்லோருமே முழுமையான குற்றவாளிகள். சாகும் மட்டும் இந்த கோணத்தில் விவாதிப்பதால் ஐந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அந்த இடத்திலே நின்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். அடுத்தவனை குற்றம் சாட்டி விவாதிப்பதில் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பத்து வீதததையேனும் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள எடுத்து கொண்டிருந்தாலே நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். கண்ணதாசன் வரிகளில் கூறினால்… மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து உங்கள் முதுகைப் பாருங்கள்…! முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்….!
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
காணொளி: 👉 https://www.facebook.com/reel/860162666636509 👈 தண்ணீர் குடித்து... உண்ணாவிரதம். 😂 🤣
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
சென்ற முறை... "மலிபன் பிஸ்கற்" சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த போது... கோத்த பாயா... தவண்டு வந்து, ஆறுதல் சொல்லிய காட்சி. 😂
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂
-
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம் 13 January 2026 இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது. "வெள்ளை யானை" என விமர்சிக்கப்படும் மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது. இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும். அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் போன்ற விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன. இது விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440408/loss-of-rs-390-crore-in-6-years-new-plan-to-revive-mattala-airport
-
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சேர்ந்த வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பேதுருஆரச்சி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkc6hsg303ulo29ncanq1074
-
பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது
பாலியல் காட்சிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகளை வீடியோவாக பதிவு செய்து, வீடியோக்களை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் கூறுகையில், குற்றவாளிகள் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய மேம்பட்ட தொழில்நுட்ப கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். “இந்த கேமராக்கள் சட்டை காலர்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, பாக்கெட்டில் பேனா அல்லது லாட்ஜ்களில் படுக்கைகளுக்குள் உள்ளன. தனிநபர்கள் தங்கள் எஜமானிகள் மற்றும் இளம் காதலர்களுடனான பாலியல் உறவுகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், தாங்கள் காதலிக்கும் பெண்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று, அந்த இளம் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்துகின்றனர்.” “சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் 45 வயதுடைய ஒரு பெண், ஒரு பேக்கரியில் பணிபுரியும் ஒரு ஊழியரை காதலித்தார். அவர் அவர்களின் பாலியல் உறவுகளை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த காட்சிகளை இணையதளங்களில் பகிர்வதாக மிரட்டி இப்போது தன்னிடம் பணம் பறிப்பதாக அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.” "இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நோய்வாய்ப்பட்ட குழந்தையை மந்திரங்கள் மூலம் குணப்படுத்துவதற்காக வீட்டில் தங்கியிருந்த ஒரு பேய் விரட்டுபவர், அந்தப் பெண்ணை அவள் கிரகத்தின் தீய செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும், அதை அகற்ற சடங்குகளைச் செய்வதாகவும் கூறி, தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி கவர்ந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். புலன்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த பேய் விரட்டுபவர் இப்போது மிரட்டி பணம் பறிக்கின்றார். இது தொடர்பிலான முறைப்பாடும் கிடைத்துள்ளது," என்று காவல்துறை அதிகாரி கூறினார். இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களுடன் ரகசிய உறவு வைத்திருப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பாலியல்-காட்சிகள்-மூலம்-பணம்-பறிக்கும்-கும்பல்-அதிகரித்து-வருகிறது/175-370959