24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்! கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தீர்மானங்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (21) பின்வாங்கினார். அதேநேரம், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கிரீன்லாந்து குறித்த சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து சமூக ஊடகங்களில் சில விடயங்களை மாத்திரம் முன்வைத்த ட்ரம்ப், நேட்டோ தலைவருடனான “மிகவும் பயனுள்ள சந்திப்பு” கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு வழிவகுத்ததாகக் கூறினார். இந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று நேட்டோ விவரித்தது – மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பின் மீதான விவாதங்கள் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் கூறியது. முன்னதாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அந்தப் பிரதேசத்தின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறினார். இந்த நிலையில் புதன்கிழமை இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தீர்வு நிறைவேறினால் அது அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் – என்றார். எனினும், தன்னாட்சி பெற்ற டேனிஷ் சார்பு பிரதேசத்தின் அமெரிக்க உரிமையை இந்த திட்டம் உள்ளடக்கியதா என்று அவர் கூறவில்லை. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460895
-
பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு.
பாகிஸ்தானில்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா வீதியில் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகள் உட்பட கட்டிடத்தின் 03 தளங்களிலும் தீ பரவியது. இதுபற்றி கராச்சி நகர தெற்கு பகுதிக்கான பொலிஸ் திணைக்கள டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவிக்கையில், ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர 03 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது. ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. எனினும், மரபணு பரிசோதனை அறிக்கைகளின் முடிவிலேயே இறுதியான விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது பல்வேறு கடைகளுக்கும் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460946
-
அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை!
அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை! 22 January 2026 அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை. இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/442073/important-warning-for-sri-lankans-going-to-the-us-violation-of-visa-regulations-will-result-in-a-lifetime-ban
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பனர் சரியா? ஏதும் திருத்தம் செய்யவேண்டுமா? @goshan_cheஅண்ணை, @valavanஅண்ணை, @வாத்தியார் அண்ணை மற்றும் உறவுகள் உங்கள் கருத்தைச் சொல்லுங்க.
-
புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்!
புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (21) காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20,023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13,168 குடும்பங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15,260 பாடசாலை மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் இராமன் செட்டியார், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் உடனிருந்தார்கள். https://adaderanatamil.lk/news/cmkoyz5xr048vo29nio3ed8f4
-
ஜே.வி.பியின் அரசியல் வித்தை
ஜே.வி.பியின் அரசியல் வித்தை லக்ஸ்மன் அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்கை உரப் பாவனை போன்றவைகள் உருவாக்கிக் கொண்டவைகள். கொவிட் பெருந்தொற்று உலகளவில் தானாக ஏற்பட்டது. அவற்றினால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தம்கூட சாதக பாதகங்களையே கொடுத்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால், அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையே. இதனை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கத்துக்குட்படுத்துவர். தமிழர்கள், உழவர்கள் வாழும் நாடுகளில் கடந்த வாரம் தைப்பொங்கல் வாரம். இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த வாரம் பெரும் களேபரமான வாரமாகத்தான் கழிந்திருக்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் தித்வா சூறாவளியால் நாடு அல்லோல கல்லோலத்துக்குட்பட்டது. இன்னமும் மலையகத்தின் பல பகுதிகளில் சரியான அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களுக்கு பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய வருகை தரவுள்ளனர். உலகின் பல நாடுகளின் உதவிகள் இன்னமும் சரியாக வந்து சேரவில்லை. இவ்வாறிருக்கையில் அதற்குள் ஒரு அரசியலைச் செய்து கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடந்தேறியிருக்கின்றன. இதனை அரசியல் தெரிந்த, கலாசாரம் தெரிந்த, இலங்கை அரசாங்கத்தின் சம்பிரதாயம், வழமையான பாரம்பரியம் தெரிந்த, யாருமே மறுக்கமாட்டார்கள். தித்வா சூறாவளியினால் நாடு பட்ட துயரத்தின் வலியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்து பிறப்பு, நத்தார் ஒளி விழாக்களைக் கோலாகலமாக நடத்தவில்லை. புதுவருடப் பிறப்பினை களியாட்டமாகக் கொண்டாடவில்லை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் கூட அனுமதிகளை மறுத்திருந்தன. அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தனர். ஆனால், நாட்டில் தலைவர் தைப் பொங்கல் விழாவை தமக்கான, மக்கள் விடுதலை முன்னணிக்கான(ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். (இது பொதுவான கருத்து) புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக தேசிய தைப் பொங்கல் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், வட மாகாண தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. தேசிய பொங்கல் விழாவில் பங்குபெறாமல் ஜனாதிபதி ஏன் வடக்கு சென்றார் என்பதில்தான் அரசியல் இருக்கிறது. ஆனால், வடக்கு விஜயத்திற்குரிய திட்டமிடல்கள் ஏற்கெனவே முடிந்திருக்கின்றன. வடமாகாணத் தைப் பொங்கல் விழாவுக்கு மறுநாள் முழு நாடுமே ஒன்றாகத் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையானது, அரச அதிகாரிகளாலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தது. ஆனால், தற்போது சற்று அதிகமாக மேற்கொள்ளப்படுவதையே இந்த தேசிய வேலைத் திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது என்கிற விமர்சனங்கள் உருவாகிவருகின்றது. அதே நேரத்தில், நாட்டில் இருக்கின்ற போதைப்பொருள் பிரச்சினைகளைத் தவிர, வேறு விடயங்கள் இல்லை போலும் என்ற மாயை ஒன்றும் உருவாக்கப்படுவதாகவும் உணரமுடிகிறது. இந்த மாயையானது மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சினைகளை மறைத்து மேலோட்டமாக மக்களை நகர்த்தி தங்களது அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள ஜே.வி.பி. முனைந்து வருவது தெரிகிறது. மற்றொன்று வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரஜா சக்தி செயற்பாடுகளுக்காக தமது கட்சியின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த நடவடிக்கையானது, இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் இலக்காக் காணப்படுகின்றன. மற்றைய கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் செயலாளர் அரசியலை மாத்திரம் மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. நீண்டகாலமாக மேற்கொண்டுவந்த தீவிர அரசியலை அரச அதிகாரத்துடன் தற்போது மேற்கொள்கின்றது என்றே சொல்லமுடிவதாக அரசியல்வாதிகள் கருத்துத் வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். தங்களது கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள பிரஜா சக்தியானது நாட்டின் பிரதேச செயலகங்களின் கீழுள்ள கிராம சேவகர்களே மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த கிராமத்திற்குத் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில் பிரஜா சக்தி மேற்கொள்ளும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது விமர்சனமாக இருக்கிறது. அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பாக பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் செயல்பாடாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையில்தான் பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில் அனுமதிக்க முடியாது என்கிற கோசம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சி பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ள சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது எனலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சீர் செய்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுக்குமிடையில் சுனாமி கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில், ஜே.வி.பியினர் ஒப்பந்த உருவாக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் சுனாமி கட்டமைப்பு உருவாக்கத்தினை தடுத்திருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் ஒரு அங்கீகாரத்துக்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிராக இருந்த ஜே.வி.பி. தற்போது வடக்கு மக்களிடம் தமது அரசியலைச் செய்ய முனைவது அவர்களது அரசியலுக்காக என்பதனைக்கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுவதானது தமிழ் மக்களின் அரசியல் வறட்சியையே காட்டுகிறது. இந்த இடத்தில்தான், 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் புதைத்துவிட்டு நாட்டையே கைப்பற்றிக் கொள்வதற்காக ஆயுத ரீதியாக போராடிய ஜே.வி.பியினரின் ஏமாற்று அரசியலில் வீழ்ந்து ஒன்றுமில்லாதவர்களாக, நிலைப்பாடுகளை மறந்தவர்களாக, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டவர்களாகப் புதைந்து போன பின்னர் கவலையை மாத்திரம் மிகுதியாகப் பாதுகாக்கப்போகிறோமா என்பதே தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்காக தங்களது எதிர்கால அதிகாரத்துக்காக அரசியலைச் செய்வதொன்றும் புதிதல்ல என்ற வகையில் போதைப் பொருள் தடுப்பு என்றவகையில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாகத் தேசிய வேலைத்திட்டம், திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் வரவுள்ள இன்னும் பல வேலைத்திட்டங்களும் கண்டும் காணாமல் விடப்பட வேண்டியவைகளே. எவ்வாறானாலும், மக்களுக்காகக் கடந்த காலங்களில் சரியான அரசியலைச் செய்ய மறந்தவர்கள் தற்காலத்தில் கவலைகொள்வதும் எதிர்ப்பு வெளியிடுவதும் வழக்கு தாக்கல் செய்வதும் இயலாதவர்களின் செயற்பாடு என்ற மக்களின் எதிர்வினையால் ஜே.வி.பிக்கே சாதகமாக மாறிப்போகும் என்பதே வெளிப்படை. அந்தவகையில், எல்லோரும் சொல்லும் மக்களை ஏமாற்றும் வித்தையான அரசியலைக் கவனமாக செய்யும் ஜே.வி.பியைப் பாராட்டத்தான் வேண்டும். ஜே.வி.பியின் அரசியல் வித்தை தொடரட்டும். அதில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பாடுகளை நாம் பார்க்கலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-வி-பியின்-அரசியல்-வித்தை/91-371359
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் இரண்டாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன். இருப்பு இருப்பு 255,870.67-50025=ரூ 205,845.67 சதம் இன்று 22/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். வைப்புச்செய்த இலத்திரனியல் பற்றுச்சீட்டு.
-
இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு
இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது. இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரு கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன், முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரல, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர். இந்த விஜயத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இந்தக் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருட்களைப் பார்வையிடும் பயணமும் பயணத்திட்டத்தில் அடங்கும். இந்த விஜயம் தொடர்பான ஒரு சுமுகமான கலந்துரையாடல் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமீபத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-குடியரசு-தின-விழாவில்-பொதுஜன-பெரமுனவினர்-பங்கேற்பு/175-371396
-
📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்!
📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்! adminJanuary 22, 2026 வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் 36 வருடங்களாகத் தவிப்பதாக வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கவலை வெளியிட்டுள்ளார். மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா குரும்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 📍 மயிலிட்டி நூலகம்: ஏனைய நூலகங்கள் சிறப்பாக இயங்கினாலும், மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூலகம் வசாவிளான் சந்தியில் இன்றும் ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது. வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி திறக்கப்பட்டாலும், பாடசாலை இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே முடக்கப்பட்டுள்ளது. தற்காலிக இடங்களில் இயங்கும் போதிலும், வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் வாசிப்புப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ⚠️ தென்னிலங்கையினூடாகக் கொண்டு வரப்பட்டுள்ள “பிரஜாசக்தி” திட்டமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என தவிசாளர் இதன்போது எச்சரித்தார். “மக்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. உங்கள் தேவைகளுக்கு நேரடியாக பிரதேச சபையை அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2026/227099/
-
சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்
சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம் adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போது, உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எழுப்பினார். 2016-ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த ‘எக்கோ ரூறிசம்’ (Eco-tourism) திட்டம் உருவாக்கப்பட்டது. வேலணையின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். எனினும் முறையான பொறிமுறை இல்லாததால், சுற்றுலாப் பயணிகளுக்காக வாங்கப்பட்ட படகுகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்து கிடக்கின்றன. பல பொருட்கள் மர்மமான முறையில் சூறையாடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாத் தளம் என்ற பெயரில், தற்போது அது மதுபானம் அருந்தும் இடமாகவும், சமூகச் சீரழிவுக்கான களமாகவும் மாறி வருவதாக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பலரும் இவ்வாறான செயல்களுக்காகவே இவ்விடத்தைத் தேர்வு செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் முறையாகக் கிடைக்காததுடன், இந்தத் திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வர்த்தக நோக்கில் இந்த மையத்தைப் பராமரிக்கும் தனியார் தரப்பினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தினார். இந்தப் பிரதேசத்தின் மாண்பைக் காக்க, மண்டைதீவு சுற்றுலாத் தளத்தை மீண்டும் அதன் உண்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேலணை பிரதேச சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவில் சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் 2024 செப்டம்பரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (அன்றைய நிலையில்) அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டன. சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் (மொத்தமாக 138 ஏக்கர் விளையாட்டு நகரமாக – Sports City) இந்த மைதானம் அமையவுள்ளது. 10 மத்திய விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச தரத்திலான எல்லைக் கோடுகளைக் கொண்ட மைதானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் மற்றும் கனமழை காரணமாகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 2026 ஜனவரியில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 2026-ல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் T20 உலகக்கோப்பைக்குப் பிறகு, இங்கு முதலாவது முன்னோடிப் போட்டி (Trial Match) நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இந்த மைதானத் திட்டத்திற்கு எதிராகப் பல சூழலியல் அமைப்புகள் (குறிப்பாக WNPS) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) இன்றி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மண்டைதீவு ஒரு முக்கியமான சூழலியல் வலயமாகும். அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதால், இறால் மற்றும் நண்டுப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதையும் என அஞ்சப்படுகிறது. மண்டைதீவு இயற்கையாகவே ஒரு தாழ்வான பிரதேசம். டிட்வா புயலின் போது மைதானம் அமையவுள்ள பகுதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்பியது. மறுபுறம், இலங்கை கடற்படையினர் மற்றும் யாழ். பல்கலைக்கழகத் தாவரவியற்றுறை இணைந்து மண்டைதீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான கண்டல் தாவரக் கன்றுகளை நடும் (Mangrove Restoration) பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2026/227089/
-
குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்!
குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்! adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளர், அவருடன் பயணித்த பிரதேச செயலக சக உத்தியோகஸ்தர் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனா். படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Base Hospital) அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கிழக்கு வீதிகளில் அண்மைக்காலமாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடத்தனை, மணற்காடு வீதிகள் புயலுக்குப் பின் சீரமைக்கப்பட்ட போதிலும், போதிய போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாதது ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. https://globaltamilnews.net/2026/227102/
-
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்!
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்! adminJanuary 22, 2026 வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தனது மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள JICA நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா (Kenji Kuronuma) அவர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு JICA வழங்கிய பங்களிப்புக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மாகாணத்தின் தற்போதைய பிரதான சவாலான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப உதவிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக JICA பிரதிநிதி தெரிவித்தார். அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. வடக்கின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கென்ஜி குரோனுமா இதன்போது உறுதி அளித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/227103/
-
பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 22 Jan, 2026 | 09:05 AM கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலையின் நிர்மாணப் பணிகள் புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் ஹந்துன்நெத்தி தலைமையில், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் பிரதான உற்பத்தி ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, பரந்தன் இரசாயன நிறுவனத்தை மீளச் செயல்படுத்துவது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி வலுப்படுத்தலுக்கும் முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, இரசாயன உற்பத்தியில் இறக்குமதி சார்பை குறைத்து, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த உற்பத்தி ஆலை நிர்மாணம் நிறைவடைந்த பின்னர், விவசாயம், தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளுக்குத் தேவையான முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்தத் திட்டம் வடக்கு மாகாணத்தின் பொருளாதார மீட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் அரச அதிகாரிகள், பரந்தன் இரசாயன நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். - இணையத்தள செய்திப் பிரிவு https://www.virakesari.lk/article/236653
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
தவறான பதிவு
-
இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 09:48 AM இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கண்டறியப்பட்டுள்ள குகை ஓவியங்கள், மனித நாகரிகத்தின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த கைரேகை ஓவியங்கள் குறைந்தது 67,800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட குகைச்சுவர் ஓவியங்களிலேயே இதுதான் மிகவும் பழைமையானது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை, ஆனால் குகைச் சுவர்களில் வரையப்பட்ட சிக்கலான கலை வடிவம் இதுவே முதன்மையானது. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை (Pigment) ஊதி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் (கிரிஃபித் பல்கலைக்கழகம்) இணைந்து சுலவேசி தீவின் தென்கிழக்குப் பகுதியில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஓவியங்களின் மேல் படிந்திருந்த தாதுப் படிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் இவற்றின் காலம் கணிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் 'நேச்சர்' (Nature) இதழில் புதன்கிழமை (ஜன 21) அன்று வெளியிடப்பட்டது. இந்த ஓவியங்களை வரைந்தது யார் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இரண்டு முக்கியக் கருத்துகளை முன்வைக்கின்றனர்: 01.டெனிசோவன்கள் (Denisovans): அந்தப் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பண்டைய மனித இனம். 02.ஹோமோ சேபியன்கள் (Homo sapiens): ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற நவீன மனிதர்கள். மனிதர்கள் எப்போது கோடுகளையும் புள்ளிகளையும் தாண்டி, தங்களைப் பற்றியும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் அர்த்தமுள்ள கலைகளை உருவாக்கத் தொடங்கினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. சுலவேசி தீவு ஒரு செழிப்பான கலை கலாச்சாரத்தைக் கொண்டிருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/236664
-
மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை
மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் சுற்று நிறைவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் வீரர் சண்முகநாதன் ஷாருஜன் அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சுற்றில் 500 ஓட்டங்களை மொத்தமாக குவித்த ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் ஷாருஜன் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ் யூனியன் கழகம் இக்கட்டான நிலையை எதிர்கொண்ட போதெல்லாம் அனுபவசாலி போன்று ஷாருஜன் பொறுப்புணர்வுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்தது. நடப்பு பருவகால கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன் 3 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 69.87 என்ற சராசரியுடன் 559 ஓட்டங்களைக் குவித்து அதிகூடிய மொத்த ஒட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதல் நிலையில் இருக்கிறார். பதுரெலியா கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் ஷாருஜன் சதம் குவித்து அசத்தி இருந்தார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் குவித்தவர் என்ற பெருமையை 19 வயதான ஷாருஜன் பெற்றுக்கொண்டார். சிறு பராயத்தில் இருந்து கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி பயின்ற சண்முகநாதன் ஷாருஜன், 13, 15, 17, 19 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாடியதுடன் 2023, 2024ஆம் ஆண்டுகளில் அணித் தலைவராக விளையாடி இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் ஷாருஜன் 118 ஓட்டங்களைப் பெற்றார். விக்கெட் காப்பாளராக 5 பிடிகளை எடுத்ததுடன் 2 ஸ்டம்ப்களையும் செய்திருந்தார். மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஷாருஜன் பெற்ற ஓட்டங்கள் 123 மற்றும் 3 எதிர் பதுரெலியா கிரிக்கெட் கிளப் 60 எதிர் முவர்ஸ் கிரிக்கெட் கிளப் 24 மற்றும் 23 ஆ.இ. எதிர் பேர்கர் ரெக்ரியேஷன் கிளப் 0 மற்றும் 122 ஆ.இ. எதிர் குருநாகல் யூத் கிரிக்கெட் கிளப் 87 மற்றும் 2 எதிர் நொண்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் 103 ஆ.இ., மற்றும் 12 எதிர் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கிளப் https://www.virakesari.lk/article/236530
- Today
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியாவுக்கு வெளியே டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த வங்கதேசம் கோரிக்கை – ஐசிசி பதில் என்ன? பட மூலாதாரம்,Getty Images டி20 உலகக் கோப்பையில் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மைதானங்களிலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த மேல்முறையீட்டிற்குப் பிறகு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்ததாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்று முடிவு செய்யப்பட்டதாகவும் ஐசிசி தற்போது கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3Adcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b#asset:dcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையை தொடர சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானம் Published By: Vishnu 21 Jan, 2026 | 09:19 PM (ஐசிசி ஊடக அறிக்கை) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, எதிர்கால வழிமுறை குறித்து கலந்தாலோசிக்க கூட்டப்பட்ட ஐசிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ-கலந்துரையாடல் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த இடங்களிலும் பங்களாதேஷ் வீரர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை குறித்த சுயாதீன மதிப்பாய்வுகள் உட்பட நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலகக் கிண்ணம் நெருங்கிவரும் காலப்பகுதியில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும், நம்பக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலையில் அட்டவணையை மாற்றுவது எதிர்கால ஐசிசி நிகழ்வுகளின் மகத்துவத்தை பாதிப்பதுடன் உலகளாவிய நிர்வாக அமைப்பாக அதன் நடுநிலைமையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்ற ஒரு நிலையை ஏற்படுதக்கூடும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்கும் முயற்சியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐ.சி.சி நிர்வாகம் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளில் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டது. அத்துடன் போட்டிகளுக்கான பாதுகாப்புத் திட்டம் குறித்த விரிவான தகவல்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐசிசி பகிர்ந்து கொண்டது. இதில் கூட்டாட்சி மற்றும் மாநில சட்ட அமுலாக்கல் ஆதரவு ஆகியவை அடங்கும். இது தொடர்பாக ஐ.சி.சி. பேச்சாளர் தெரிவிக்கையில், 'கடந்த பல வாரங்களாக, போட்டியில் பங்களாதேஷின் பங்கேற்பை தெளிவான நோக்கத்துடன் உறுதிப்படுத்துவதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஐசிசி ஈடுபட்டது. இந்த காலகட்டத்தில், ஐ.சி.சி சுயாதீன பாதுகாப்பு மதிப்பீடுகள், விரிவான திறந்தவெளி பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வரவேற்பு நாட்டின் (Host country) அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவாதங்கள் உள்ளிட்ட விரிவான உள்ளீடுகளைப் பகிர்ந்து கொண்டது. இவை அனைத்தும் இந்தியாவில் பங்களாதேஷ் அணியினரின் பாதுகாப்பு அல்லது உயிர்களுக்கு நம்பக்கூடிய அல்லது உறுதிப்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தொடர்ந்து முடிவு செய்தன. 'இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது நிலைப்டில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. போட்டியில் பங்கேற்பதை அதன் வீரர்களில் ஒருவரின் உள்நாட்டு லீக்கில் ஈடுபடுவது தொடர்பான ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொடர்பில்லாத சம்பவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தியது. இது போட்டியின் பாதுகாப்பு கட்டமைப்பிலோ அல்லது ஐ.சி.சி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை நிர்வகிக்கும் நிபந்தனைகளிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 'ஐ.சி.சி.யின் இடம் மற்றும் திட்டமிடல் முடிவுகள் புறநிலை அச்சுறுத்தல் மதிப்பீடுகள், வரவேற்பு நாட்டு அதிகாரிகளின் உத்தரவாதங்கள் மற்றும் போட்டியின் ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கேற்பு விதிமுறைகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன, அவை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 20 அணிகளுக்கும் ஒரே விதமாகப் பொருந்தும். பங்களாதேஷ் அணியின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சுயாதீனமான பாதுகாப்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில், ஐ.சி.சி. போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க தளவாட மற்றும் திட்டமிடல் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஐ.சி.சி நிர்வாகத்தின் நடுநிலைமை, நியாயத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆபத்துடன் கூடிய நீண்டகால சவால்களையும் உருவாக்கும். 'ஐ.சி.சி நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கும், நிலையான தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கும், உலகளாவிய விளையாட்டின் கூட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது' என்றார். -- (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/236634
-
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 22 Jan, 2026 | 10:29 AM நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், "உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்பதைச் சுட்டிக்காட்டினார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார். அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்' தான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த தூதுவர், கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றம் எனக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், "தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன" என வலியுறுத்தினார். மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். அண்மையில் வீசிய 'டித்வா' (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/236667
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
இப்பதானே Free டெலிவரி இருக்கு. பனிக்குள் போய் ஏன் விழுந்து முறிவான். இது குளிர்காலம் வழமையான குளிர்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
பன்னாடைக்கு உரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது👍. பேச்சின் போது கிறீன்லாந்தையும், ஸ்கன்டினேவிய நாடான "ஐஸ்லாந்தையும்" 4 தடவைகள் போட்டுக் குழப்பிப் பேசி அமெரிக்காவில் தனக்கு வாக்குப் போட்ட முட்டாப் பீசுகளுக்கு தான் உரிய தலைவர் தான் என நிரூபித்து விட்டு வந்திருக்கிறது பன்னாடை😂! நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, "பல் துருவ உலகம்" உருவாக வேண்டும். ஆனால், ஐரோப்பியம், கனடா, அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய துருவங்கள் தான் எதிர் துருவங்களாக வளர வேண்டும்.
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
“பனியன்…. ட்ரம்ப்”, ஆட்சி செய்யும் நாட்டில்… “பனி”.. கொட்டாமல், வேறு என்ன கொட்டும். 😂 🤣 இதுவும் கடந்து போகும் என்று, கவனமாக இருக்க வேண்டுகின்றேன். 🙂
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
பனி குவியலை அகற்றுவதில் இருந்து கடைக்கு போவது வரை வீட்டில் இருந்தே செய்ய முடியாதே.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
🤣 ஓம் யேர்மன் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தண்டனை வரிவிதிப்பு பயமுறுத்தலை ரம்ப் வாபஸ் பெற்றுள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் மூலம் பணிய வைத்துள்ளார்கள் 👋
- Yesterday
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
One of the most extreme winter storms in years is set to deliver damaging ice and heavy snow to nearly half the US. https://www.cnn.com/2026/01/20/weather/winter-storm-snow-ice-central-eastern-us-climate நீங்க work from home தானே.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
வரவேற்க நாதியற்று போனியே தம்பா😂