24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
வகுப்பிற்குப் பதிவு செய்த மாணவர்களே வந்திருந்து குறட்டை விட்டுத் தூங்கும் விரிவுரைகளில் பதிவு செய்யாத வெளியார் ஏன் தான் வந்திருக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தான் இந்த நெகிழ்வுப் போக்கிற்குக் காரணம்😂. இது திறந்த வகுப்பறை - Open classroom என்ற கொள்கையினால் வந்த நடைமுறையல்ல. இப்படி விரிவுரை மண்டபங்களைத் திறந்து வைத்திருந்த சில இடங்களில் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்பட்டிருக்கிறது. அண்மையில், பிறவுண் பல்கலையினுள் சனிக்கிழமை நடந்து கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் நுழைந்த மாணவரல்லாத ஒரு லூசுப் பயல் சுட்டதில் இருவர் உயிரிழந்தார்கள். இப்படி பட்ட சவால்கள் இந்த திறந்த வகுப்பறைகளில் இருக்கின்றன.
-
நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்
நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன் 21 Jan, 2026 | 03:54 PM வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236617
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran
-
பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல்
பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபிலிப்பா ராக்ஸ்பி & ஜிம் ரீட் சுகாதார செய்தியாளர்கள் 21 ஜனவரி 2026, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை "நல்லதல்ல" என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க "கடுமையாகப் போராட வேண்டும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு "நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. 'தி லான்செட்' மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர். கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் 'அசிட்டமினோஃபென்' என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வாதங்கள் பெண்களிடையே குழப்பத்தையும், சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தின. இதுவே இந்தப் புதிய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 'லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்' (The Lancet Obstetrics, Gynaecology & Women's Health) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட 43 வலுவான ஆய்வுகளை ஆராய்ந்தது. குறிப்பாக, பாராசிட்டமால் உட்கொண்ட தாய்மார்களின் கர்ப்ப காலத்தையும், உட்கொள்ளாதவர்களின் கர்ப்ப காலத்தையும் ஒப்பிட்ட ஆய்வுகளை அது ஆராய்ந்தது. பட மூலாதாரம்,Getty Images உடன் பிறந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர்தர ஆய்வுகளைப் பயன்படுத்தியதன் மூலம், மரபணுக்கள் மற்றும் குடும்ப சூழல் போன்ற பிற காரணிகளைத் தங்களால் நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இந்த ஆய்வு 'மிகவும் உயர்தரமானது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பாரபட்சமற்ற ஆய்வுகளையும், ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கண்காணித்த ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. "நாங்கள் இந்த ஆய்வைச் செய்தபோது, பாராசிட்டமால் ஆட்டிசம் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படும் கூற்றுடன் எந்தத் தொடர்போ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை," என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர், "வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே நீடிக்கிறது என்ற செய்தி தெளிவாக உள்ளது," என்று கூறினார். இது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மருத்துவ அமைப்புகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்துகிறது. பாராசிட்டமால் மருந்துக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தொடர்புகள், மருந்தின் நேரடி விளைவைவிட பிற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. "கர்ப்பிணிகளுக்கு வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து பாராசிட்டமால் என்பதால் இது மிகவும் முக்கியமானது," என்று லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழகத்தின் தாய்-சேய் மருத்துவப் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கர்ப்ப காலத்தில் அதிக வெப்பநிலையைக் குறைக்கவோ அல்லது வலியைப் போக்கவோ பாராசிட்டமால் எடுக்காவிட்டால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார ஆலோசனைகள் எச்சரிக்கின்றன. இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். இது பெண்களிடையே உள்ள கவலையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் இதுகுறித்துப் பேசியபோது, "தலை வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியால் எழும் மன அழுத்தத்திற்கு கர்ப்பிணிகள் ஆளாக வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்," என்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் இயன் டக்ளஸ், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத தாய்மார்களுக்கு இடையே இருக்கும் அடிப்படை நோய்கள் போன்ற முக்கிய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாத தரம் குறைந்த ஆய்வுகளைத் தவிர்த்துள்ள காரணத்தால் இந்த ஆய்வு "சிறப்பாக நடத்தப்பட்டது எனக் கூறலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 2025இல் ஓர் உரையில், கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை தவிர்க்க வேண்டுமென்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியது சர்ச்சையானது பெர்கன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நரம்பியல் விஞ்ஞானியும் மனநல மருத்துவருமான பேராசிரியர் ஜான் ஹாவிக், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆட்டிசம், ஏடிஹெச்டி அல்லது அறிவுசார் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்பதற்கு இந்த ஆய்வு "வலுவான ஆதாரங்களை" வழங்குவதாகவும், "இந்தக் கேள்விக்கு இது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனவும் கூறினார். ஆட்டிசம் என்பது மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் உள்படப் பல சிக்கலான காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது என்பது இந்தத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்தாகும். அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் (பாராசிட்டமாலுக்கான அமெரிக்க பெயர்) பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளனர்" என்றார். உதாரணமாக, ஆகஸ்ட் 2025இல் ஹார்வர்ட் டி.ஹெச். சான் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் மருத்துவர் ஆண்ட்ரூ பாக்கரெல்லி தலைமையிலான ஆய்வு ஒன்றில், கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக "அதிகமான அல்லது நீண்ட காலப் பயன்பாடு" குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ஆட்டிசம் பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறியப் போவதாக உறுதியளித்திருந்தார். செப்டம்பர் மாதம் ஓவல் அலுவலகத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையில், கர்ப்பிணிகளுக்கு இந்த வலி நிவாரணியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து இதுதான் என்றும் குறிப்பிட்டது. தனது இணையதளத்தில், இந்த மருந்துக்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே "நேரடித் தொடர்பு" இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் எஃப்டிஏ கூறுகிறது. பாராசிட்டமால் இன்னும் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை பிரிட்டனின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82zq0v1y4o
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சிவஞானமும், டக்ளஸ் தேவானந்தாவும். "ஹனிமூன்". ❤️ ❤️ ❤️
-
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது!
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 21 Jan, 2026 | 11:34 AM இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII ’ இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சி ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேவில் மற்றும் மாலைத்தீவின் கடற்கரையை மையமாகக் கொணடு நடைபெற்றதுடன், இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல, இலங்கை கடலோர காவல்படைத் துறையின் குழுவுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றது. மேலும், இந்திய கடலோர காவல்படைத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ‘Varaha’, ‘Atulya’ மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல்களான ‘Huravee’ மற்றும் ‘Ghazee’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றதுடன், இந்தப் பயிற்சியின் துறைமுக கட்டம் மாலேயில் உள்ள வணிகத் துறைமுக வளாகத்திலும், ஃபனாதூ (Funadhoo) தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் நிலப் பகுதிகளிலும் நடைபெற்று. இந்தப் பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் எண்ணெய் கசிவு மேலாண்மையில் ஈடுபட்டு, கப்பல் ரோந்துப் பணிகளில் பங்கேற்று, ஏறுதல், ஆய்வு மற்றும் பறிமுதல் நடைமுறைகளின் தத்துவார்த்த அம்சங்களைப் பற்றி விவாதித்தனர், மேலும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை சோதித்தனர். அதன்படி, இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் போது, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றுதல் (Medical Evacuation), படகுகளுக்கான அணுகல், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு பயிற்சிகள் (Visit Board Search & Seizure & Piracy), தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் (Search and Rescue Drill) மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் உட்பட (Steam Past) பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சியில் இலங்கை கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், இலங்கை கடலோரக் காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சேனக வாஹல ஆகியோரும் பயிற்சியுடன் இணைந்து நடைபெற்ற இருதரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். மேலும், பிராந்திய கடல்சார் தரப்பினரின் பங்கேற்புடன் இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புதிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிக்கவும் தீர்வுகளைக் கண்டறியவும் முடியும். https://www.virakesari.lk/article/236581
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ஓம். இங்கே இணைப்புத் தர முடியாத செய்தியென்பதால் வட்சப் செய்தியாக இருக்கலாம்!
- Today
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
தேர்தலுக்கு முன் 10 கட்சிகள்! தேர்தல் நடக்கும் காலத்தில்... மக்களை ஏமாற்ற, ஒன்று சேரும் கட்சிகள்! தேர்தலின் பின், பதவி போட்டியில்.. மீண்டும் 10 தனிக் கட்சிகள்! மக்களை... முட்டாள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றது சுத்துமாத்து கூட்டம். Magen Anu ################ ############## ################# இந்த நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள் அனைவரும்... சாதாரண மனிதர்கள் எங்களுக்கு தெரிந்த விடயங்கள் கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால்.. தமிழர்கள் பாவம். Niroshan Srt
-
நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு
நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 11:15 AM நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் பல பகுதிகளில் வெப்பநிலைக் கணிசமாகக் குறைந்துள்ளது. நாட்டில் இன்று புதன்கிழமை (21) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வளிமண்டலவியல் திணைக்களத்தில் அதிகாலை வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. பிராந்திய ரீதியான வெப்பநிலை விபரங்கள் இன்றைய தினம் அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் பின்வருமாறு: நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூடுபனி: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி நிலவக்கூடும். தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களால் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், நாட்டின் தற்போதைய வெப்பநிலை விநியோக வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/236580
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல் Jan 21, 2026 - 01:36 PM சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (20) இரவு வேளையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmknqo916047xo29ny98j2hez
-
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம் Jan 21, 2026 - 07:03 PM தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9
-
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிரியர் விளக்குகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெண்காரம் என்றழைக்கப்படும் போராக்ஸ் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்) இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை சார்ந்து இத்தகைய தவறான பரிந்துரைகளைத் தெரிவிக்கும் யூட்யூப் சேனல்களை அரசு தடுக்க வேண்டுமென்று அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை இளம்பெண் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வெண்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) என்று அழைக்கப்படுகிறது. இதன் தன்மை உண்மையில் எத்தகையது? இதை உட்கொள்வதால் உடலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு நிபுணர்களிடம் பேசியது. 'யூட்யூப் பார்த்து வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண்' மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கலையரசி, ஒரு தனியார் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 'உடல் சற்று பருமனாக இருந்த கலையரசி, யூட்யூப் சேனல் ஒன்றில், உடல் எடையைக் குறைக்க வெண்காரம் உதவுமென்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மருந்துக் கடையில் அதை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்' என காவல்துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத் (சித்தரிப்புப் படம்) அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அதிகளவில் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இரவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறை விசாரணையில், அந்தப் பெண் நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கலையரசி ஒரு யூட்யூப் சேனலில் இருந்த வீடியோவை பார்த்து வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகள் யூட்யூப் சேனலை பார்த்து, சுயமாக நாட்டு மருந்து வாங்கி வந்து சாப்பிட்டபோதே, தான் அதைத் தடுத்ததாக கலையரசியின் தந்தை வேல்முருகன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் வெண்காரம் என்பது என்ன? எளிமையாகச் சொல்வதெனில், அது நமது கேரம் போர்டில் பயன்படுத்தும் பவுடர்தான் என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் செல்வராஜ். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது மிகவும் மெல்லிய தன்மையைக் கொண்ட உப்பாகும். பொதுவாக இதை முகத்திற்குப் பூசும் பவுடர்களில் சிறிய அளவில் சேர்ப்பார்கள்'' என்று தெரிவித்த அவர், "'துத்தநாகத்தைக்கூட நமது மருந்துகளில் சிறிய அளவில் கலக்கிறார்கள். ஆனால், அந்த துத்தநாகத்தை நேரடியாகச் சாப்பிட்டால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ அதைத்தான் வெண்காரமும் ஏற்படுத்தும்" எனவும் எச்சரித்தார். அவரது கூற்றுப்படி, சோடியம் போரேட் (sodium borate) என்ற ரசாயனம்தான் இந்த பவுடர், பேச்சுவழக்கில் அதை போராக்ஸ் என்பார்கள். ஆனால் "இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே இல்லை.'' ''சுத்திகரிப்பு செய்வதற்கான மூலப்பொருளாக மட்டுமே இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதே தவிர, நேரடியாக உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு உகந்த பொருளில்லை. சுருங்கக் கூறுவதெனில், அதுவும் பூச்சிக்கொல்லியை போன்றதொரு ரசாயனம்தான்'' என்றார் பேராசிரியர் செல்வராஜ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சித்த மருத்துவத்தில் வெண்காரம் பயன்படுத்தப்படுகிறதா? போராக்ஸ் பவுடரை சித்த மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கியபோது, "வாய்ப்புண்ணுக்கு வெளிப்புறமாகப் போடக்கூடிய மருந்தாகவும் அதை பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த சித்த மருத்துவத்தில் எடையைக் குறைப்பதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். மாத்திரைகளால் உடல் எடையைக் குறைக்க முடியாது என வலியுறுத்தும் கு.சிவராமன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவையே உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை என்கிறார். வெண்காரம் சித்த மருத்துவத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "வெண்காரம் சில சித்த மருந்துகளில் மிகச் சிறிய அளவு கலக்கப்படுமே தவிர, நேரடியாக மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுவதில்லை. அதையும் முறையாகச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார். வெண்காரம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகவும் இருப்பதாக, சித்த மருத்துவர் வீரபாபு கூறுகிறார். அதுமட்டுமின்றி, ''பொதுவாக வாய்க்குள், பற்களில் இருக்கும் தொற்றுகளுக்கு, வாய்ப்புண்ணுக்கு இவற்றைச் சிறு அளவில் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் வெண்காரம் எந்த வகையிலும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து கிடையாது'' என்றும் சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார். படக்குறிப்பு,வி.ஜி. மோகன் பிரசாத் பாதிப்புகள் என்ன? போராக்ஸை மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் நேராது என கூறுகிறார் குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத். வயிறு மற்றும் செரிமான மண்டல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி அமைப்பின் தலைவராக உள்ளார். ''சுத்திகரிக்கப்பட்ட போராக்ஸ் பவுடரை மிகவும் நுண்ணிய அளவில் எடுத்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் எந்த வயதினராக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் சிறிது நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மை பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். நேரமாகிவிட்டால் அதைச் சாப்பிட்டவரைக் காப்பாற்றுவது சிரமம்'' என்றார். ஒருவேளை யாரேனும் தவறுதலாக வெண்காரத்தைச் சாப்பிட்டாலும்கூட "ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டியூப் போட்டு நஞ்சை வெளியே எடுத்து விடுவதன் மூலம் காப்பாற்ற முடியும்" என்கிறார் குடலியல் நிபுணர் வி.ஜி. மோகன். அதேவேளையில், தாமதம் ஆகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரித்த அவர், "போராக்ஸின் நச்சுத்தன்மை காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். சிறிது நேரத்தில் சிறுநீரகம் செயலிழந்துவிடும், ரத்தப்போக்கு ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லும்பட்சத்தில் நஞ்சை வெளியேற்ற முடியும்" என்று விவரித்தார். சமீபகாலமாக யூட்யூப் சேனல்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதும், மருத்துவ சிகிச்சைகளைச் செய்துகொள்வதும் அதிகரித்து வருவதாக அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபற்றிப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, ''முறையான சித்த வைத்தியம் படிக்காமல், எவ்வித ஆராய்ச்சி அனுபவமும் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் இயற்கை வைத்தியர் என்ற பெயரில் எதையெல்லாமோ மருந்தாக, உணவாகப் பரிந்துரைக்கிறார்கள். அரசு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் இத்தகைய பதிவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clynk91q9qlo
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்! 20 Jan, 2026 | 12:31 PM ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது. அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236512- மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்
மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம் Jan 21, 2026 - 12:37 PM கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும். https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1- "வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?
"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன? பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 20 ஜனவரி 2026 இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர். மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார். அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. படக்குறிப்பு,குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார். ''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார். "'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,குருந்தூர் மலை இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார். ''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார். இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு,வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது சமூக செயற்பாட்டார்களின் பார்வை? வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார். ''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார். "நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார். ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்? வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார். ''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார். ''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,VITHIYADARAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார். ''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார். பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது, இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9rzw210ndo- 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
அட்றா சக்கை. சுத்துமாத்து சுமந்திரன்... சங்கு கூட்டணியுடன், வட்ட மேசையில் இணைந்து விட்டார்.. சங்கு கூட்டணியை ... தொண்டை கிழிய திட்டித் தீர்த்தவர்களும், கை உழைய, கேலிச் சித்திரம் வரைந்தவர்களும்... தலையை... எங்கே புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசியல் சுத்துமாத்துக்களுக்கு வெள்ளை அடித்தவர்கள்... எப்படிப் பட்ட, "நய வஞ்சகர்கள்" என்றும், "தற்குறிகள்" என்றும்.... இப்போ எல்லோருக்கும் புரிந்து இருக்கும். எல்லா கள்ளரும் வட்ட மேசையில் சுத்தி இருக்க, பெரிய கள்ளன் டக்ளஸ் தேவானந்தாவை ஏன் விட்டு விட்டார்கள். த்தூ... வெட்கம் கெட்ட, அயோக்கியக் கூட்டம். அரசியல் அனாதையான... "வெத்து வேட்டுக்கள்" எல்லாம் ஒன்றாக சேர்ந்த தருணம் இது. சுத்துமாத்து சுமந்திரனுக்கு... இவர்களை வைத்து, மாகாண சபை தேர்தலில் காரியம் ஆக வேண்டி இருக்கு, அதுதான் பம்மிக் கொண்டு இருக்கிறார். தேர்தலில் சுமந்திரன் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. மீண்டும் தோற்ற கையுடன் இவர்களை அடித்து விரட்டி விடுவார். அது தெரியாமல் வட்ட மேசையில்... ஒட்டி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்குதுகள் "அலுவோசுகள்".- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ண நெருக்கடி: பங்களாதேஷுக்கு ஆதரவாக ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் 21 Jan, 2026 | 05:44 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் பங்கேற்பு குறித்து இன்றுவரை காலக்கெடு விதித்திருந்த ஐசிசி, அதன் நிலைப்பாட்டை இன்று வெளியிடத் தயாராகி வருகிறது. இந் நிலையில், இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற பங்களாதேஷின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகல்களை ஐசிசி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக பங்களாதேஷின் உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையில், அதன் கோரிக்கை தொடர்ப்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க இன்றைய தினம் பணிப்பாளர் சபை கூட்டத்திற்கு ஐசிசி அழைப்பு விடுத்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடும். ஆனால், ஐசிசியின் தீர்மானத்திற்கு அந்தக் கடிதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரியவருகிறது. இந்தியாவுடன் ரி20 உலகக் கிண்ண இணை ஏற்பாட்டாளரான இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது. இவ்விடயத்தில் உறுதியாக இருக்கும் ஐசிசி, தனது நிலைப்பாட்டை பங்களாதேஷுக்கு கடந்த வார கலந்துரையாடலின்போது அறிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/236629- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
இலங்கையில் இப்படி நடப்பது அரிது. ஆனால் சிலர் நூதனமாக களவு செய்வார்கள். உதாரணமாக ஏ எல் பாஸ்பண்ணி பல்கலை வெட்டுபுள்ளி எடுத்து மருத்துவம், சட்டம், பொறியியல் போவது மிக கஸ்டம். ஜனாதிபதி, அமைச்சர்களின் பிள்ளைகள் கூட களவு செய்து யூனி உள்ளே போனதாக இல்லை. ஆனால் அதி உயர் அதிகாரிகள் மிக அரிதாக இப்படி களவு செய்து அனுப்பியதாக பரவலாக நம்பபடுகிறது. ஒன்றில் பேப்பரை அவுட் ஆக்கி, அல்லது வேறு ஆளை சோதனை செய்ய வைத்து (குதிரை ஓடல்), அல்லது திருத்தும் இடத்தில் பேப்பரை மாற்றி இப்படி செய்வாகளாம். முன்னர் சிறி ரங்கா என ஒரு தறுதலை எம்பியாக இருந்தது. அதுவும், சைக்கிள் கஜன்ஸ்சில் ஒருவரான குதிரை கஜனும் இப்படித்தான் உள்ளே போனதாக சொல்லப்படும். குதிரை கஜன் காரணப்பெயர்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வங்காளதேசம் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்தால் சிலவேளை நாளை ஐசிசியில் உள்ள அங்கத்தவர்களுக்கு இடையே வாக்களிப்பு நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதில் வங்காளதேசத்துக்கு எதிராக அதிக வாக்குகள் விழுந்தால் வங்களாதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி இந்த உலக கோப்பையில் விளையாட சந்தர்ப்பம் இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு அங்கத்தவர்கள் வங்காள அணிக்கு பெரும்பாலும் சாதகமாக வாக்களிப்பார்கள்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மையில் 10 வருடங்களுக்கு முன்வரை ஓரளவு நியாயமான சம்பளம் தான் வாங்கினார்கள். இந்த அரச ஒப்பந்த விலைக்கணிப்புகளை(Estimate) எப்போது அறிந்து கொண்டார்களோ அன்றிலிருந்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சம்பளம் கேட்கிறார்கள்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்ல விடையம் அவர் தனது கூலியை ஒரு மட்டுப்படுத்திய, இரு தரப்பிற்கும் பாதிக்காத வகையில், ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக அவருக்கே எங்கள் திட்டம் சார்பான வேலைகளை வழங்கலாம் .என்று நினைக்கின்றேன்- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் பெற்ற தகவல்களின்படி புதிய கொமட் பொருத்த 5500 - 7500 ரூபா வரை வாங்குவதாக கூறினார்கள். சிலர் புதிய கொமட் பொருத்த 12000 ரூபா வரை வாங்குவதாக தெரிவித்தனர். சீலனுக்கு நன்றாக விளங்கப்படுத்தினேன், அவரும் புரிந்து கொண்டதாகக் கூறினார். லாப நோக்கு மட்டும் இருந்தால் பலருடைய அடிப்படைச் சுகாதார வசதி செயற்திட்டத்தைப் பாதிக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
தண்ணீர் கொள்கலன் வைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுக்கலாம் என்பதே எனது கருத்தும் ஆரம்பித்த வேலையை முழுமையாக முடித்த திருப்தி எல்லோருக்கும் வரும் அராலி வேலையையும் தொடரலாம் அதற்கான நிதியை நீங்கள் விடுவிப்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்- சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி!
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி! சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க பிரித்தானியாவில் தனது புதிய தூதரகக் கட்டிடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறை சர்வதேச இராஜதந்திர விதிமுறைகள் மற்றும் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இன்று (21) நடைபெற்ற வழக்கமான ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். உளவு பார்ப்பதற்கான தளமாக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பெய்ஜிங்குடனான உறவை மேம்படுத்தும் நம்பிக்கையில், ஐரோப்பாவில் அதன் மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் நிர்மாணிப்பதற்கு செவ்வாயன்று (20) பிரித்தானியா ஒப்புதல் அளித்தது. இரண்டு நூற்றாண்டு பழமையான ரோயல் மின்ட் கோர்ட் இருந்த இடத்தில் புதிய தூதரகத்தைக் கட்டும் பெய்ஜிங்கின் திட்டங்கள், உள்ளூர்வாசிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிரித்தானியாவில் உள்ள ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு பிரச்சாரகர்களின் எதிர்ப்பால் மூன்று ஆண்டுகளாக முடங்கின. எவ்வாறெனினும் தூதரகத்தை அமைப்பதற்காக ஜனவரி 20 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள அனுமதி அடுத்த வாரம் இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு பிரிட்டிஷ் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460837 - ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.