stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
-
களைத்த மனசு களிப்புற ......!
ரொனால்ட்டினோ & கோல்கீப்பர்ஸ் .........! 😂
- Today
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
திருப்பதியில் இருப்பது முருகன் கோவில்தான், அதன் முகத்தில் தெலுங்கு வைணவர் வெள்ளி கவசத்தை இறக்கி அதை வெங்கடாசலபதியாக மாற்றி விட்டார்கள் என்று ஒரு கதை உண்டு. 1990 களின் இறுதியில் மாலை முரசு என நினைக்கிறேன் அதில் ஏன் வேண்டாம் இன்பத் திராவிடம் என ஒரு கட்டுரை வந்தது. அதில் இது பற்றி வாசித்துள்ளேன். (ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் முரசொலி மாறன் எழுதிய நூல்).
-
யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது written by admin March 27, 2026 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு என 54 வயதுடைய பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த 14 பவுண் நகை காணாமல் போயுள்ளது. அதனை அடுத்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டின் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் இருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளையும் காவல்துறையினா் மீட்டுள்ளனர். அதேவேளை , குறித்த பெண் முன்னர் தான் பணியாற்றிய வீட்டிலும் நகைகளை களவாடியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பணிப்பெண்ணை காவல்துறையினா் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2026/231143/
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
இஸ்லாமுக்கு முன் பாரசீகத்தின் (ஈரானின்) மதம் செளராஸ்டிரம். நெருப்பு வணக்கம். அதன் ஒற்றை கடவுளின் பெயர் மாஸ்டா. அதைத்தான் ஜப்பான் காருக்கு பெயராக வைத்தார்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
Houthis enter the Iran war with missile strike against Israel • Houthis enter war: Yemen’s Iran-backed Houthi rebels said they carried out the “first military operation” in support of Iran, after Israel’s military earlier said it detected a missile from Yemen. https://edition.cnn.com/2026/03/28/world/live-news/iran-war-us-israel-trump
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @நியாயம் @வீரப் பையன்26 @alvayan @கறுப்பி @Ahasthiyan @Newbalance @வாதவூரான் @Eppothum Thamizhan @தமிழ் சிறி @நிலாமதி @செம்பாட்டான் வெல்பவர்களுக்கு ஒரு பரல் மசகு எண்ணெய் கிருபன் வழங்குவார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,(க்ரெடிட்ஸ்: கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்) கட்டுரை தகவல் ஜோஸ்லின் டிம்பர்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது. அக்டோபர் 1793-இல், புதிதாக நிறுவப்பட்ட பிரெஞ்சு குடியரசு ஒரு துரதிர்ஷ்டவசமான சோதனையைத் தொடங்கியது. அந்த சோதனை நேரத்தை மாற்ற முடிவு செய்தது. இனி ஒரு நாள் 24 மணிநேரத்திற்குப் பதிலாக 10 மணிநேரங்களாகப் பிரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மணிநேரமும் 100 ' நிமிடங்களை' கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் 100 ' விநாடிகளால்'ஆனவை என்றும் புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த நேர முறைமை ஒரு விரிவான புரட்சிகர காலண்டரின் ஒரு பகுதியாகும், இது புதிய 10 நாள் வாரத்தை உள்ளடக்கிய ஆண்டின் கட்டமைப்பை பகுத்தறிவு ரீதியாக்குவதை (மற்றும் கிறிஸ்தவமயமாக்கலை நீக்குவதை) நோக்கமாகக் கொண்டது. தற்போதுள்ள கடிகாரங்களை இந்த தசம முறைக்கு மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கின. நகர அரங்குகளில் தசம கடிகாரங்கள் பொருத்தப்பட்டன மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் புதிய காலண்டரைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டன. இது விரைவில் தீராத தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கியது என்று பிரிட்டனின் லண்டனில் உள்ள ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச்சின் அறிவியல் தொடர்பாளர் ஃபின் புரிட்ஜ் கூறுகிறார். இந்த அருங்காட்சியகம் தான் ராயல் வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம் மற்றும் கிரீன்விச் மீன்டைம் நிறுவப்பட்ட இடமாகும். ஏற்கனவே இருந்த கடிகாரங்களை மறுவடிவமைப்பு செய்வதும் மாற்றுவதும் மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறை பிரான்சை அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தியது, அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு நாள் வருவதை வெறுத்தனர். இறுதியில், இந்த தசம நேர முறை பிரான்சில் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. இருப்பினும், ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்திற்கு 60 நிமிடங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள் என்று நாம் எவ்வாறு கணக்கிடத் தொடங்கினோம், இன்றும் எப்படி கணக்கிடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, காலக்கணிப்பு முறை தோன்றுவதற்கு முந்தைய காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் இது ஆரம்பகால எண் முறைமைகளில் ஒன்றின் கதையாகும். இது தான் நம்மை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியது. மேலும் இந்தச் சிக்கலான முறை அதனை உருவாக்கிய நாகரிகங்களை விட நீண்ட காலம் நீடித்திருப்பதையும் இது விளக்குகிறது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... அறுபதின்ம முறையின் அடித்தளம் இதன் தொடக்கத்தில் இருப்பவர்கள் சுமேரியர்கள். மெசபடோமியாவில் (தற்போதைய இராக் பகுதி) சுமார் கி.மு. 5300-1940 வரை வாழ்ந்த பழங்கால மக்கள் மற்றும் நகரங்களை உருவாக்கிய முதல் நாகரிகங்களில் சுமேரியர்களும் அடங்குவர். நீர்ப்பாசனம் மற்றும் ஏர் உழுதல் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுடன், முதன்முதலில் அறியப்பட்ட எழுத்து முறையை உருவாக்கிய பெருமையும் இவர்களையே சாரும். இது 60-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையை உள்ளடக்கியிருந்தது. உங்கள் கையை உங்களுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்து, ஒரு விரலை மடக்கிப் பார்த்தால் அதில் மூன்று மூட்டுகள் இருப்பதைக் காண்பீர்கள். ஒரு கையின் விரல்களில் உள்ள அனைத்து மூட்டுகளையும் (கட்டைவிரலைத் தவிர) எண்ணினால் 12 வரும். உங்கள் மற்றொரு கையின் ஒரு விரலைப் பயன்படுத்தி இந்த 12-ஐ ஒன்று எனக் கணக்கிட்டு, மீண்டும் முதல் கையில் 12 வரை எண்ணைத் தொடங்குங்கள். உங்கள் இரண்டாவது கையின் ஐந்து விரல்களும் பயன்படுத்தப்படும் வரை இதைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் எதை எட்டியிருப்பீர்கள்? அறுபது. சுமேரியர்கள் தங்களின் வளர்ந்து வரும் கணித முறையை 10-ஐ அடிப்படையாகக் கொள்ளாமல், 60-ஐ அடிப்படையாகக் கொண்டு ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஊகக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்த முடிவு இன்றும் நாம் நேரத்தை அளவிடும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பட மூலாதாரம்,The Fitzwilliam Museum, University of Cambridge படக்குறிப்பு,18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சிகர அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நேர முறையை ஒரு தசம கடிகாரம் காட்டுகிறது (படம் : தி ஃபிட்ஸ்வில்லியம் மியூசியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்). வளர்ந்து வரும் தங்கள் நகரங்களுக்கு ஆதாரமாக விளங்கிய, மேலும் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறிய விவசாய முறையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமே, அவர்கள் எண்களை எழுதத் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் கியூனிஃபார்ம் (பண்டைய மத்திய கிழக்கின் ஆரம்பகால எழுத்து முறைகள்) கலாச்சார நிபுணர் மார்ட்டின் வில்லிஸ் மன்ரோ. எண்களைக் குறித்து வைப்பதற்காக, அவர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் அளவு அல்லது அதைவிட சிறியதான சிறிய களிமண் பலகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மென்மையான களிமண்ணில் விவரங்களைப் பொறித்தனர். விரைவில் மற்ற சித்திரக் குறியீடுகளும் தோன்றி, சுமேரியர்களின் புகழ்பெற்ற கியூனிஃபார்ம் வடிவ எழுத்துகளாக வளர்ந்தன . 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இந்த களிமண் பலகைகள் கண்டறியப்பட்டு அதன் பொருள் அறியப்படத் தொடங்கியது. சுமேரியர்கள் பலவிதமான எண் முறைகளைப் பயன்படுத்தியதை அவை காட்டுகின்றன. ஆனால் கணிதத்திற்கும், அதன் மூலம் வானியல் மற்றும் நேரத்திற்கும் மிக முக்கியமானதாக 'செக்ஸாஜெசிமல்' எனப்படும் அறுபதின்ம முறை (60-ஐ அடிப்படையாகக் கொண்ட) முறை உருவானது என்கிறார் மன்ரோ. நாம் இப்போது 10-ஐப் பயன்படுத்துவது போன்றே சுமேரியர்கள் 60-ஐப் பயன்படுத்தினர். நாம் ஒன்பதை எட்டும்போது, இடதுபுறம் ஒரு இடத்திற்கு நகர்ந்து ஒன்றை எழுதி, வலதுபுறம் பூஜ்ஜியத்தைச் சேர்க்கிறோம் என்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துல்லியமான அறிவியல் மற்றும் தொல்பொருள் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற எரிகா மெஸாரோஸ் கூறுகிறார். "அறுபதின்ம முறைமைக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் 59 வரை சென்றுவிட்டு, 59-ஐ விட அதிக எண்ணைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரு இடத்திற்குத் தள்ளி ஒன்றை மட்டும் பயன்படுத்துகிறார்கள்"என்று அவர் குறிப்பிட்டார். மேலே கூறப்பட்ட விரல் எண்ணும் கோட்பாடு கவர்ச்சிகரமாக இருந்தாலும், சுமேரியர்கள் ஏன் 60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "60 எங்கிருந்து வந்தது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று மன்ரோ கூறுகிறார். இந்த முறை சுமேரியர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் பயன்பாட்டு எளிமை தெளிவாக உள்ளது. பின்னங்கள் அல்லது தசமங்கள் தேவையின்றி 60-ஐ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, 10, 12, 15, 20, 30 மற்றும் 60 ஆகிய எண்களால் வகுக்க முடியும். 10-ஐ ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10-ஆல் மட்டுமே வகுக்க முடியும் என்பதோடு ஒப்பிடும்போது இதன் நன்மைகள் புரியத் தொடங்கும். "கணக்கியல், வரிகள் அல்லது நிலங்களை அளவிடுதல் மற்றும் வாரிசுரிமைக்காக நிலங்களைப் பிரித்தல் போன்ற நடைமுறை நோக்கங்களுக்காக நீங்கள் எண்களை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்த கணிதச் செயல்பாடுகளைச் செய்ய எளிதான வழி இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்" என்கிறார் மெஸாரோஸ். காலத்தின் தோற்றம் சுமேரியர்கள் நேரத்தைப் பயன்படுத்தியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், கி.மு. 1000-இல் பாபிலோனியர்களால் (சுமேரியர்களுக்குப் பிறகு வந்த ஒரு பண்டைய மெசபடோமிய நாகரிகம்) சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் முதன்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தப் பிராந்தியத்தில் காலக்கணிப்பு முறை இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று மன்ரோ கூறுகிறார். ஒரு நாளை மணிநேரங்களாகப் பிரித்ததாக அறியப்படும் முதல் நாகரிகம் பண்டைய எகிப்தியர்களுடையது தான் என்று சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் வானியலாளர் ரீட்டா கௌட்ச்சி கூறுகிறார். இது கி.மு. 2500-ஆம் ஆண்டைச் சேர்ந்த மத நூல்களில் காணப்படுகிறது. மணிநேரங்கள் தொடர்பாக முதலில் அறியப்பட்ட பொருட்கள் ஆரம்பத்தில் இரவின் 12 மணிநேரங்களைக் குறிக்கின்றன. இவை கி.மு. 2100 மற்றும் 1800-க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய பிரபுக்களின் சவப்பெட்டிகளின் உட்புற மூடியில் காணப்பட்ட டயகனால் ஸ்டார் கிளாக் என்று கௌட்ச்சி விளக்குகிறார். பட மூலாதாரம்,The Board of Trustees of the Science Museum, London படக்குறிப்பு,நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளில் ஒன்றான சூரியக் கடிகாரங்கள், கி.மு. 1500 வாக்கில் எகிப்தில் தோன்றத் தொடங்கின (படம் : தி போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் ஆஃப் தி சயின்ஸ் மியூசியம், லண்டன்). எகிப்தியர்கள் ஏன் சரியாக 12 என்ற உட்பிரிவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை . இதுவே இறுதியில் முழு நாளிலும் 24 மணிநேரங்கள் ஏற்பட வழிவகுத்தது. எகிப்தியர்கள் 12 விண்மீன் தொகுப்புகளைக் கொண்ட ஒரு ராசி சுழற்சியைக் கொண்டிருந்தனர், ஆனால் இது 12 மணிநேரங்கள் குறித்த முதல் குறிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு கையின் விரல்கள் மற்றும் மூட்டுகளைப் பயன்படுத்தி 12 வரை எண்ணுவது மற்றொரு சாத்தியமாகும். அவர்கள் தேர்ந்தெடுத்த 10 நாள் வாரம் என்ற கணக்கு சில நட்சத்திரங்களின் தெரிவுநிலையுடன் எவ்வாறு இணைந்தது என்பதன் காரணமாகவும் இது இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளான சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் கி.மு. 1500-இல் எகிப்தில் தோன்றின. அவற்றில் சில அன்றாட வேலைகளின் போது பயன்படுத்தப்பட்டன, ஆனால் பெரும்பாலானவை காலக்கணிப்பை விட "மத ரீதியான சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் தொடர்புடையதாகவே" இருந்திருக்கலாம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "தனிப்பட்ட முறையில், அவற்றில் பல கடவுள்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் அல்லது நேர்த்திக்கடன்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறும் அவர், "அந்தக் காலத்தின் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு குறித்து எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை"என்றும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில், அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் குறித்த நூல்களில், மிகச்சிறிய நேர அலகு பொதுவாக வேலை மாற்றமாகவே இருந்தது, இது பொதுவாகக் காலை அல்லது மதியம் என்று கற்பனை செய்யப்பட்டது என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் பண்டைய எகிப்தின் ரோமானிய காலத்திலிருந்து (கி.மு. 30 முதல்), மணிநேரங்கள் ஒரு தரநிலையாக மாறின, அதனுடன் அரை மணிநேரங்களும் தோன்றத் தொடங்கின என்றும் அவர் தெரிவித்தார். நிமிடங்களின் வருகை இதற்கிடையில், பாபிலோனியர்களும் மணிநேரங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுவந்தனர். நேரத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக இல்லாவிட்டாலும், ஒரு மணிநேரத்தை மிகச்சிறிய அலகுகளாகப் பிரித்த முதல் நபர்களாக இறுதியில் அவர்களே இருந்தனர். கி.மு. 2000 முதல் கி.மு. 540 வரை செழித்தோங்கிய பாபிலோனியர்கள், சுமேரியர்களிடமிருந்து கியூனிஃபார்ம் எழுத்து முறை மற்றும் அறுபதின்ம எண் முறை ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். கி.மு. 1000-ஆம் ஆண்டில், சூரியன் வானில் மீண்டும் அதே நிலைக்குத் திரும்ப எடுக்கும் காலத்தை (360 நாட்களுக்குச் சற்று அதிகம்) அடிப்படையாகக் கொண்ட ஒரு காலண்டரை அவர்கள் உருவாக்கியிருந்தனர் என்று மெஸாரோஸ் கூறுகிறார். ஏற்கனவே 60-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணும் முறையைப் பயன்படுத்தும் ஒரு நாகரிகத்திற்கு இது ஒரு வசதியான எண்ணாக இருந்தது. "60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையில் இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்கள்" என்கிறார் மெஸாரோஸ். "உண்மையில், இது தலா 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களுக்கு மிகச் சரியாக வழிவகுத்தது" இது நிலவு சுழற்சியுடனும் ஒத்துப்போனது என்றும் அவர் கூறுகிறார். எகிப்தியர்களைப் போலவே, பகலையும் இரவையும் தலா 12 ஆகப் பிரிக்கும் அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறை நேர முறையை பாபிலோனியர்கள் உருவாக்கினர். இந்த "பருவகால மணிநேரங்களின்" நீளம், பகல் மற்றும் இரவின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும். "இரவு வானத்தை 12 மாதங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரிப்பதால், பகலையும் 12 ஆகப் பிரித்தோம்" என்கிறார் மெஸாரோஸ். வேறு பல பண்டைய நாகரிகங்களும் பருவகால மணிநேரங்களைப் பயன்படுத்தின, அவை 15-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் 19-ஆம் நூற்றாண்டு ஜப்பானிலும் பயன்பாட்டில் இருந்தன. இருப்பினும், இந்த பருவகால நேரம் நடைமுறை பயன்பாட்டிற்காக ஒருபோதும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்படவில்லை என்று மன்ரோ குறிப்பிடுகிறார். "[அது] நவீன காலத்தின் ஆரம்பம் வரை ஒரு விஷயமாகவே இல்லை... மெசபடோமியா மற்றும் பிற பண்டைய கலாச்சாரங்களில் அது இல்லை, ஏனென்றால் அதற்கு உண்மையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை"என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,கி.மு. 3200 காலத்தைச் சேர்ந்த இந்தச் சுமேரியப் பலகை, மிகப் பழமையான கணிதப் பயிற்சிகளைக் கொண்டுள்ளது (படம் : கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்). பாபிலோனியர்கள் வானியல் நிகழ்வுகளைக் கணக்கிடுவதற்கும் அளவிடுவதற்கும் மற்றொரு நேர முறையை உருவாக்கினர், ஆனால் இது அன்றாட பயன்பாட்டிற்கானது அல்ல. இது ஒரு நாளை 12 "பெரு" ஆகப் பிரித்தது, இதனை நவீன காலத்தின் இரண்டு மணிநேரங்களுக்குச் சமமாகக் கருதலாம். இதைப் பயன்படுத்திய ஒரே பண்டைய கலாச்சாரம் பாபிலோனியா மட்டுமல்ல. உதாரணமாக, இவை பண்டைய சீனா மற்றும் ஜப்பானிலும் காணப்பட்டன. தங்கள் கணக்கீடுகளில் இன்னும் நுணுக்கமான அளவீடுகளின் தேவை காரணமாக, பாபிலோனியர்கள் இந்த இரண்டு மணிநேர 'பெரு' அலகுகளை 'உஷ்' எனப்படும் 30 பண்டைய நிமிடங்களாகப் பிரிக்கத் தொடங்கினர். இதில் ஒவ்வொரு நிமிடமும் நமது தற்போதைய நான்கு நிமிடங்களுக்குச் சமம். இவை மேலும் 60-ஆல் வகுக்கப்பட்டு 'நிண்டா' எனப்படும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் சுமார் நான்கு நவீன வினாடிகளுக்குச் சமம். "அறுபதின்ம முறைமையில் நாம் விஷயங்களை 60 குழுக்களாகப் பிரிப்பதாலேயே" இந்த உட்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெஸாரோஸ் கூறுகிறார். இருப்பினும், பாபிலோனியர்கள் இதனை "நேரத்தைப் பிரிப்பதாக நினைக்கவில்லை" என்றும், "அவர்கள் இதனை வானில் தூரத்தை அளவிடும் எண்களை அல்லது கிரகங்களின் வேகத்தைப் பிரிப்பதாகவே நினைத்தார்கள்"என்றும் மன்ரோ குறிப்பிடுகிறார். இதுபோன்ற அனைத்து பண்டைய கால வளர்ச்சி முறைகளிலும் யார் யாருடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள் என்று துல்லியமாகக் கூறுவது கடினம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "சுமார் கி.மு. 330 முதல், அலெக்ஸாண்ட்ரியாவில் புதிய அறிவியல் மையம் உருவானதால், எகிப்து, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைந்த ஒரு சங்கமமாக மாறியது," என்று கூறும் அவர், "இதைத்தான் நாம் ஹெலனிஸ்டிக் உலகம் என்று அழைக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பண்டைய கிரேக்கர்கள் பாபிலோனிய வானியல் நேர முறையை ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று மெஸாரோஸ் கூறுகிறார். மேலும், "அவர்கள் அதே பிரிவை வைத்திருந்தனர், ஏனெனில் இது ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்புகளுடன் புதியவற்றைச் சேர்க்க அவர்களுக்கு அனுமதி அளித்தது... இது பாபிலோனியர்களுக்கு நன்றாக வேலை செய்த ஒரு அமைப்பாக இருந்ததால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் வானியல் தரவு மற்றும் மரபுகளைப் பெறுவதற்காக அதை அதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்"என்றும் அவர் விளக்கினார். வினாடிகளை எண்ணுதல் "மக்கள் பேசுவதற்கு சமமான நேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக" கிரேக்கர்கள் தங்கள் அரசவையில் மணல் கடிகாரங்களை வைத்திருந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பாபிலோனிய நேர முறையானது ஜோதிடர்களால் கருத்தியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலும் "அன்றாட வாழ்க்கைக்கு உண்மையில் பொருத்தமற்றதாக இருந்தது" என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் ஹெலனிஸ்டிக் கலாச்சார சங்கமத்திலிருந்து உருவான மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் போன்ற கருத்துக்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றைய நாள் வரை வந்துள்ளன. இருப்பினும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நிமிடங்களும் விநாடிகளும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அளவிற்கு காலக்கணிப்புக் கருவிகள் துல்லியமானதாக மாறின. வினாடி என்பது இப்போது எண்ணற்ற அறிவியல் வரையறைகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வினாடியை விடச் சிறிய நேர அலகுகளைக் கணக்கிடத் தொடங்கியவுடன், விஞ்ஞானிகள் மெட்ரிக் முறைக்கு மாறி, அதனை மில்லி மற்றும் மைக்ரோ விநாடிகளாக (முறையே ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு மற்றும் மில்லியனில் ஒரு பங்கு) பிரித்தனர். 20-ஆம் நூற்றாண்டில், அணு கடிகாரங்கள் வினாடியை துல்லியமாக மறுவரையறை செய்யசெய்ய விஞ்ஞானிகளுக்கு உதவின. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வரையறையிலிருந்து, சீசியம்-133 அணுக்களால் மைக்ரோவேவ் கதிர்வீச்சை உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் அடிப்படையிலான துல்லியமான மதிப்பிற்கு அது மாறியது. இன்று, நமது உலகளாவிய அணு கடிகாரங்களின் வலையமைப்பு கிட்டத்தட்ட அனைத்து நவீன கடிகாரங்களின் நேரத்தையும் பராமரிக்கிறது, மேலும் இது இணையம் முதல் ஜிபிஎஸ் மற்றும் அதிநவீன எம்ஆர்ஐ இமேஜிங் வரை அனைத்திற்கும் பின்னணியாக உள்ளது . படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் இருப்பினும், கால கணக்கீட்டின் வரலாற்றைக் கண்டறியும்போது, அது உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், மனித முடிவுகளால் தீர்மானிக்கப்பட்டது என்பதும் வெளிப்படுகிறது. மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் ஆகியவை தொடர்ச்சியான தேர்வுகள், தற்செயல்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக நம்மிடம் வந்தடைந்தன. ஆனால் அவை பல நூற்றாண்டுகளாகப் பயனுள்ள பாரம்பரியமாக நம்மிடம் நிலைத்துவிட்டன. பண்டைய காலத்தின் இந்தத் தாக்கம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்றால், இப்போது இந்த அமைப்பை மாற்றுவது கையாளுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நேரத்தைத் தசம முறைப்படுத்த முயன்றபோது கூட, நடைமுறையில் அந்தப் புதிய முறை அரிதாகவே பயன்படுத்தப்பட்டது . அதே சமயம் , குடியரசின் தூர அளவீடுகளையும் நாணயத்தையும் தசம முறைப்படுத்துவதற்கான இதே போன்ற முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தசம நேர முறை வெறும் 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது, இருப்பினும் அந்த நாட்காட்டி சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு ஓரளவு பயன்பாட்டில் இருந்தது. "இது தொடர்பாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது,அது மக்களிடையே எடுபடவில்லை," என்று புரிட்ஜ் கூறுகிறார். 1795-ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசிய மாநாட்டின் உறுப்பினரான கிளாட்-அன்டோயின் பிரியர் ஆற்றிய உரையே, தசம நேர முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருந்திருக்கலாம். இது யாருக்கும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நன்மையும் அளிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், மற்ற புதிய மெட்ரிக் அளவீட்டு முறைகள் மீது இது ஒரு கெட்ட பெயரை உருவாக்குவதாகவும், அவை இதற்கு மாறாகப் பயனுள்ளவை என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk14g8vj06o- ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
அமெரிக்காவும் ஈரானும் சேர்ந்து கப்பல்களுக்கு பணம் வாங்குவோம் என்று ரம் கூறியதாக ஒரு செய்தி உலாவுகிறது. ஒரு பரலுக்கு ஒரு டாலர் என்றால் எத்தனை லட்சம் பரல் ஒரு நாளைக்கு விற்பனையாகும். பணத்தக்காகவும் புகழுக்காகவும் ரம் நாக்கைத் தொங்கபோட்டு அலைகிறாரோ?- மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!
RMV ஆணையாளர் நாயகம் விளக்கமறியலில் Mar 28, 2026 - 07:39 PM மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியாகப் பதிவு செய்வதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmnaemvku000t356phszh55eo- அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!
அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்! Mar 28, 2026 - 08:40 PM யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார். கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந்தக் கூற்றுத் தொடர்பாகவே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கின் ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த காணொளி தன்னாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அந்தத் தகவல் தன்னாலேயே கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றில் நிரூபிப்பதாகத் தமது தரப்பு நியாயத்திலும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த வைத்தியர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகள் மருத்துவச் சீட்டு இன்றி வழங்கப்படுவது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தார். மருந்தகங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் சான்றாதாரங்களுடன் விளக்கமளித்தார். விசாரணையின் போது அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதன்போது அர்ச்சுனாவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். சாட்சியமளித்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் எவ்விதக் களங்கமும் ஏற்படாத நிலையில், திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக இந்தக் காணொளி வெளியானதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார். அடுத்த அமர்வின் போது பணிப்பாளர் கேதீஸ்வரன், அர்ச்சுனாவின் சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேஷ், சி. அபினாஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார். அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnags05d000v356pylfilq5q- கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சியை தடுக்குமாறு ரவிகரன் எம்.பி அனுப்பியுள்ள கடிதத்திற்கு நடவடிக்கை மேற்கொள்க ; மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்து 28 Mar, 2026 | 05:58 PM (இணையத்தள செய்தி பிரிவு) முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளிப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் பெரும்பான்மை இனத்தவரால் அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அனுப்பிவைக்கப்பட்டுள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (07) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் பிரதியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களின் பூர்வீக தனியார் வயல் காணிகளையும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களையும் மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அத்தோடு குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் தனியார்காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைக்கப்படும் செயற்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரமரின் அலுவலகத்திலிருந்து மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் தொடர்புக்குரிய சிரேஷ்ட உதவிச் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள PMO/PRD/12/25/227448 என்னும் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயிலுள்ள தனியார் காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைப்பது தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 2026.03.07 திகதி பிரதமருக்கான பிரதியோடு தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தங்களின் மேலான கவனத்திற்கும் தேவையான நடவடிக்கைக்கும் அனுப்பப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் அழுத்தத்தினையடுத்து குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்கனவே 10.03.2026ஆம் திகதி மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242168- ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
இலவசமாக திறந்திருந்த ஹார்முஸ் கால்வாயை... அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை ஆரம்பித்து பூட்ட வைத்து விட்டு, இப்போ... பாதையை திறக்க, உலக நாடுகள் எல்லாரும் ஈரானை வற்புறுத்த வேண்டுமாம். சும்மா கிடந்த தேரை இழுத்து, தெருவில் விட்டது யார்?- 453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!
453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்! 28 Mar, 2026 | 05:45 PM தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 வைத்திய பட்டதாரிகளுக்கு, ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025.07.04 ஆம் திகதியுடன் பயிற்சியை முடித்த 453 வைத்திய பட்டதாரிகள் இந்த ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 2026.04.04 நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியாகும்.குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். குறித்த திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரிகள் தொடர்பாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என அந்த அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242165- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
தொடங்கியது ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் பட மூலாதாரம்,Abhishek Chinnappa/Getty Images 10 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் 2026 ஐபிஎல் தொடர் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள். டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேப்டன்கள் சொன்னது என்ன? டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார், "இது ஒரு சீசன் தொடக்க ஆட்டம். அதனால் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கடந்த சீசனிலிருந்து நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளன. நாங்கள் எதையும் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை, ஐபிஎல் 2026-லும் நாங்களே வெற்றி பெறுவோம். [காயங்கள் பற்றி] அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், அதேபோல் மாற்று வீரர்களும் சிறப்பாக உள்ளனர். வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள், மருத்துவக் குழு அவர்களைக் கவனித்து வருகிறது" என்று கூறினார். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் இஷான் கிஷன் தற்காலிகமாக அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸின் போது பேசிய அவர், "நாங்களும் முதலில் பந்துவீசவே (fielding) விரும்பினோம். எங்களின் உள்ளுணர்வை நம்பி விளையாட நினைக்கிறோம். இது ஐபிஎல் என்பதால் புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே போதும். பேட் கம்மின்ஸ் நிச்சயமாகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், ஆனால் மற்ற அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது; இந்த முறை நாங்களே வெற்றி பெறுவோம் என்று உணர்கிறேன்." என்று கூறினார். இரு அணிகளிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா. இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட். இம்பேக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், ஆர் ஸ்மரன், சகிப் ஹுசெய்ன். ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதால், அவர்கள் அடுத்ததாக பேட்டிங் செய்யும்போது படிக்கல் அல்லது வெங்கடேஷ் ஐயர் இருவரில் ஒருவர் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கலாம். சன்ரைசர்ஸ் அணியில் அவர்கள் பந்துவீசும்போது சலில் அரோரா, ஷிவாங் குமார், டேவிட் பெய்ன் ஆகிய பௌலர்களில் ஒருவரை அவர்கள் பயன்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவேளை முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங் தேவைப்பட்டால் லியாம் லிவிங்ஸ்டனையும் களமிறக்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04xzd964plo- ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும் Mar 28, 2026 - 03:54 PM ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் நிறைவடையும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தரைவழி ஆக்கிரமிப்பு இன்றி அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என அவர் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் 'G7' பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே மார்கோ ரூபியோ இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பல மாதங்கள் நீடிக்காது என்றும், சில வாரங்களுக்குள்ளேயே தகுந்த முறையில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் ரூபியோ மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஹார்முஸ் நீரிணை ஊடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டணங்களை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து G7 பிரதிநிதிகள் அவருடன் கலந்துரையாடியுள்ளனர். ஹார்முஸ் நீரிணை ஊடாக வர்த்தக நன்மைகளைப் பெறும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், சுதந்திரமான போக்குவரத்துப் பாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmna5twyl000j356pdune110a- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு! 28 Mar, 2026 | 03:17 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்முறை (மார்ச் மாதம்) மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர், தற்போதைய நிலையில் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றத்தையும் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலைகளின் மாற்றங்களுக்கு அமையவே அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும். எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான இறுதி முடிவை அரசாங்கம் வரும் நாட்களில் எடுக்கும் என தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்படி, எரிபொருள் நிலையங்களில் தற்போது நடைமுறையிலுள்ள விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242155- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
இண்டியன் பிறீமியர் லீக் திருவிழா சனிக்கிழமை ஆரம்பம்; ரசிகர்களுக்கு 2 மாதங்களுக்கு கொண்டாட்டம் Published By: Vishnu 27 Mar, 2026 | 07:33 PM (நெவில் அன்தனி) கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் 'மினி உலகக் கிண்ணம்' என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகிறது. 19ஆவது ஐபிஎல் அத்தியாயம் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் பெங்களூருவில் நாளை சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது. 2024இலும் 2026இலும் அடுத்தடுத்து ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களையும் 2025இல் ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண பட்டத்தையும் வென்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் ஒரு பொற்காலத்தில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஆதிக்கத்தின் அச்சாணியாக விளங்கும் இண்டியன் பிறீமியர் லீக் மீது முழு உலகின் கவனம் இப்போது திரும்பியுள்ளது. இண்டியன் பிறீமியர் லீக்கில் உலகின் தலைசிறந்த வீரர்கள், பயிற்றுநர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், அணிகளின் முகாமைத்துவ குழுவினர்கள், உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றினைவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கு பெரு விருந்து காத்திருக்கிறது. தலா ஐந்து தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018, 2021, 2023) மற்றும் மும்பை இண்டியன்ஸ் (2013, 2015, 2017, 2019, 2020), மூன்று தடவைகள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014, 2024), நடப்பு சம்பயின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (2025), முன்னாள் சம்பியன்களான ராஜஸ்தான் றோயல்ஸ் (2008), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), குஜராத் டைட்டன்ஸ் (2022) ஆகியவற்றுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய பலம்வாய்ந்த பத்து அணிகள் இண்டியன் பிறீமியர் லீக் மகுடத்திற்காக இந்த வருடம் களம் இறங்குகின்றன. முதல் இரண்டு அத்தியாங்களில் விளையாடி 2009இல் சம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அதன் பின்னர ஐபிஎல் இல் விளையாடவில்லை. வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், துல்லியமான பந்துவீச்சு, அற்புதமான களத்தடுப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கே தரும் இண்டியன் பிறீமியர் லீக் இம்முறையும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது. இந்த வருடம் வீரர்களுக்கென புதிய நடத்தை விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. வீரர்களது பயிற்சிகள் தொடர்பான புதிய விதிகளே இதில் அடங்குகிறது. இது தொடர்பில் பத்து அணிகளினதும் தலைவர்கள் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த வருடம் முதல் தடவையாக ரசிகர்கள் நேரலையில் போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்தியாவின் 15 நகரங்களில் ஐபிஎல் ரசிகர்கள் பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இம்முறை இரண்டு முக்கிய வீரர்கள் ஏலத்தின் மூலம் வெறு அணிகளுக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த ரவிந்த்ர ஜடேஜா, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இணைந்துள்ளதுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய சஞ்சு செம்சன் இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸில் இணைந்துள்ளார். அத்துடன் இந்தத் தொடர், இரண்டு நிறுவன உரிமையாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையாளர் மாற்றங்களுக்கு மத்தியில் தொடங்குகிறது. இந்த வாரம், சில மணி நேர இடைவெளியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள், முறையே ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் கல் சோமனி தலைமையிலான கூட்டமைப்புகளுக்கு சாதனை ஒப்பந்தங்களில் விற்கப்பட்டன. இதன் மூலம் அந்த அணிகள் மதிப்பு முறையே 1.78 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். கடந்த வருடம் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதல் தடவையாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியனாகி இருந்தது. இந்த வருடம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியன் பட்டத்தை தக்கவைக்க கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சென்னை சுப்பர் சிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகள் ஆறாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளன. இதுவரை சம்பியனாகாத அணிகளும முதல் தடவையாக கிண்ணத்தை வென்றெக்க முயற்சிக்கவுள்ளன. எனவே இந்த வருட ஐபிஎல் பரபரப்பான முடிவுகளைத் தரும் என நம்பப்படுகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தடையில்லாச் சான்றிதழ்களை பெற்ற ஐந்து இலங்கை வீரர்கள் ஐபிஎல் இல் விளையாடவுள்ளனர். அந்த ஐவரும் ஏற்கனவே தத்தமது அணிகளில் இணைந்துகொண்டுள்ளனர். இரண்டு வீரர்களுக்கு இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. கமிந்து மெண்டிஸ், ஏஷான் மாலிங்க ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ளனர். பெத்தும் நிஸ்ஸன்க, துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதேவேளை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஒப்பந்தும் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து சகலதுறை வீரர் சாம் கரன், காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதில் தசுன் ஷானக்க அவ்வணியில் இணைந்துள்ளார். இந்த ஐந்து வீரர்களும் கட்டாய உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாமல் இருக்கும் வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திராண ஆகிய இருவரும் தேவையான உடல் செயல்திறன் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியில் வனிந்து ஹசரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷ பத்திரனவை இந்திய நாணயப்படி 18 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் சாதனைகள் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் விராத் கோஹ்லி ஆவார். அவர் முதலாவது அத்தியாயத்திலிருந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கோஹ்லி 259 இன்னிங்ஸ்களில் 8 சதங்கள், 63 அரைச் சதங்களுடன் 8661 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். ஐபிஎல் இல் அதிக சதங்கள் மற்றும் அதிக அரைச் சதங்கள் குவித்த சாதனையாளராகவும் கோஹ்லி திகழ்கிறார். அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையாளர் யுஸ்வேந்த்ர சஹால் ஆவார். 2013இலிருந்து மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக யுவஸ்வேந்த்ர சஹால் விளையாடியுள்ளார். அவர் 172 இன்னிங்ஸ்களில் 221 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்களைப் பூர்த்திசெய்த ஒரே ஒரு வீரர் யுஸ்வேந்த்ர சஹால் ஆவார். சஹால் 8 தடவைகள் 4 விக்கெட் குவியல்களையும் ஒரு தடவை 5 விக்கெட் குவியலையும் பதிவுசெய்துள்ளார். அத்துடன் ஒரே பருவகாலத்தில் இரண்டு ஹெட்ரிக் சாதனைகளை நிலைநாட்டியவரும் சஹால் ஆவார். ஐபிஎல் வரலர்ற்றில் 3 ஹெட்ரிக்குளை பதிவு செய்தவர் அமித் மிஷ்ரா ஆவார். தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை புனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக 2013இல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கிறிஸ் கேல் குவித்த 175 ஓட்டங்களே இன்றும் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்த வருகிறது. அதிகூடிய மொத்த எண்ணிக்கையை பெற்ற அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 2024இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 287 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது. இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால் ஐபிஎல் இல் பெறப்பட்ட அதிகூடிய நான்கு மொத்த எண்ணிக்கைகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினாலேயே பெறப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் பெறப்பட்ட மற்றைய 3 அதிகூடிய மொத்த எண்ணிக்கைகள் வருமாறு: 277 - 3 விக். எதிர் மும்பை இண்டியன்ஸ் (2024) 278 - 3 விக். எதிர் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் (2025) 286 - 6 விக். எதிர் ராஜஸ்தான் றோயல்ஸ் (2025) மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை 49 (9.4 ஓவர்கள்) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2017) மிகச் சிறந்த இணைப்பாட்டம் 229 ஓட்டங்கள் - 2ஆவது விக். விராத் கோஹ்லி மற்றும் ஏ.பி. டி வில்லியர்ஸ் - றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் குஜராத் லயன்ஸ் (2016) https://www.virakesari.lk/article/242121- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் இயக்குநர் சுந்தர் சி 28 Mar, 2026 | 04:23 PM அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அக்கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தமிழக முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்கூட்டனையில் இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் புதிய நீதி கட்சியின் தலைவரான ஏசி சண்முகமும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கை சாத்திட்டனர். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக திரைப்பட இயக்குநர் சுந்தர் சி தெரிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் ஆறாம் திகதி தமிழக சட்டப்பேரவைக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால் அதற்குள் சுந்தர் சி வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்கள் இடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே இயக்குநர் சுந்தர் சி யின் மனைவியும் ,நடிகையுமான குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் துணைத் தலைவர் என்பதாலும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பிடித்திருப்பதாலும் சுந்தர் சிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242158- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS எதிர் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR எதிர் RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS எதிர் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI எதிர் RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB எதிர் LSG 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI எதிர் PBKS 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT எதிர் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH எதிர் CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG எதிர் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC எதிர் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR எதிர் SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG எதிர் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC எதிர் RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT எதிர் RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR எதிர் DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC எதிர் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG எதிர் RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK எதிர் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB எதிர் MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS எதிர் RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR எதிர் MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK எதிர் GT 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH எதிர் RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI எதிர் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR எதிர் DC கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? அணி? அணி? அணி? 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். - ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.