Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைக்கக்கூடாது என கொக்கரிக்கும் எவரும் தாமோ, தம் சார்ந்தாரோ இந்த பாடலை, இவை போன்ற இன்னும் பலப்பல பாடல்களை கேட்கவோ, கேட்டு இரசிக்கவோ, குத்தாட்டம் போடவோ, கிளுகிளுப்பு அடையவோ இல்லை இல்லை என நம்புவோமாக!
  3. Today
  4. இவ்வளவு வேகமாக தொடர்கதை எழுதுபவர் நீங்கள் தான் அண்ணை! 4 பேருடைய தொலைந்த வாழ்வு மீண்டமைந்தது மகிழ்ச்சி. நன்றி @suvy அண்ணை. தனித்து இருப்பதை விட இணைந்து செயல்படுவது தங்களுக்கு அதிகப் பயன் தரும் என்று அனைவரும் உணரும்போதுதான் அங்கே உண்மையான ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மலர்கின்றன. மாறாக, அன்பு, பாசம், ரத்த பந்தம் மாதிரியான உணர்ச்சிகளால் மட்டுமே பிணைக்கப்பட்டிருப்பதாக நினைப்பவர்கள் ஏமாற்றமடைந்து, தங்களையும் வருத்திக்கொண்டு மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள். ~ நியாண்டர் செல்வன்
  5. கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம் 18 Mar, 2026 | 05:31 PM இசிகேஷ் மற்றும் எம்கேஷ் (eZcash and mCash) போன்ற இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கமைய சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கும் அவற்றில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் தலைமையகம், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு புதிய தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இலகுவாகப் பணப்பரிமாற்றம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தலைமையில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைப்பேசி பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/241315
  6. சங்கீதா இந்திய தேர்தலில் போட்டியிட முடியாது. மாட்டார். விஜை சங்கிதா சொத்து பிரிப்பில்தானாம் தகராறு, இருவரும் பிரிய ஓக்கேயாம்.
  7. ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது --- --- --- *வோசிங்டன்போஸ்ட் ஊடகம் விமர்சனம் *கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பரிந்துரை *ஈரான் பலமாக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு... --- --- --- ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ள, ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதாக வோசிங்டன்போஸ்ட் (washingtonpost) இன்று செவ்வாய்கிழமை பிரசுரித்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது எனவும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதாவது, ஈரானியர்களை வீதியில் இறங்கி கிளர்ச்சி செய்ய இஸ்ரேல் தூண்டுவதாக வோசிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் ஜோன் கட்சன் (John Hudson) எழுதிய செய்திக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது. வோசிங்டன்போஸ்ட் அமெரிக்காவின் பிரதான ஊடகமாகும். ஜோன் கட்சன், இந்த ஊடகத்தின் தேசிய பாதுகாப்புச் செய்தியாளர் (National security reporter). தான் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ஈரான் பக்கம் கூடுதல் கவனத்தில் வைத்திருக்க இஸ்ரேல் முற்படுவதாக குற்றம் சுமத்துகிறார். ஈரானின் ஆட்சியில் "விரிசல் இல்லை" பெப்ரவரி 28 ஆம் திகதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டாலும், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஈரான் இறுதிவரை போராட தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் மதிப்பீடு ஒன்றை செய்திருக்கிறது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை இஸ்ரேல் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்துள்ளதாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானில் ஒரு மக்கள் கிளர்ச்சி எழும் என நம்புவதாகவும், அப்படி ஒரு கிளர்ச்சி நடந்தால், ஈரான் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக அக் கட்டுரை மேலும் கூறுகிறது. உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டபோது தான், புதிதாக பதவியேற்றுள்ள அவருடை மகன், மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். அதேநேரம், அமெரிக்க இராஜதந்திரிகளையும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளையும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற தொனி ஜோன் கட்சன் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில் தெரிகிறது. ஈரானின் பிரதான இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர படை கூடுதல் அதிகாரம் கொண்டது என இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்க அதிகாரிகளை, இஸ்ரேல் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கட்டுரையாளர் கற்பிதம் செய்கிறார். அதேவேளை, ஈரான் தமது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறுவதாக வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்திக் கட்டுரையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் தெஹ்ரானில் பலவீனமான, ஆனால் மிகவும் கடினமான அரசாங்கத்தை அமெரிக்க அதிகாரிகள் காண்பதாக வோசிங்டன்போஸ்ட் விபரிக்கிறது. ஈரானின் ஆட்சி அப்படியே தைரியமாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டுள்ளது. போரின் ஆரம்பத்தில் இருந்து இந்த மதிப்பீட்டை அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்டிருக்கிறது. ட்ரம்பை எதிர்த்து நின்று உயிர் பிழைத்ததாக ஈரான் நம்புவதாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பிட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் விபரிக்கிறது. ஈரான் அரசின் மூலோபாயம் உறுதியாக உள்ளது. ஹார்மூஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்தி, அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது. நீண்ட ஒரு போருக்கு ட்ரம்ப் தயாராக இல்லை என்பதை ஈரான் உணர்கிறது எனவும் அந்தக் கட்டுரை கூறுகிறது. சென்ற வெள்ளிக்கிழமை வரை 15,000 இலக்குகளைத் தாக்கி, ஈரானின் இராணுவம் மற்றும் அதன் தலைமையின் மீது அமெரிக்க - இஸ்ரேல் இராணுவங்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய அழிவை, ட்ரம்பின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார். ஆனால், ஈரான் வலுவாக இருப்பதாக அக் கட்டுரை ஆதாரங்களுடன் தனது விமர்சனத்தை முன்வைக்கிறது. அதேநேரம், ஐரோப்பிய நாடுகள், ட்ரம்பின் தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பாக தப்பியுள்ளன என்று வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஐரோப்பாவில் உள்ள வோசிங்டனின் கூட்டாளிகள் போரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியிருப்பதாக வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான அமெரிக்கா அனுபவிக்காத எரிபொருள் விலை உயர்வை, ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதால் ட்ரம்ப்புக்கு ஒத்தழைக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. (The spike in energy costs is threatening to slow economic growth and increase prices in Europe more sharply than in the United States) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bR7Y33RuCDGMpbYDWtASavJLkuep63iLu3TeyEZkpzCmFr3RwNwPYpsiyAbfAcpUl&id=1457391262&mibextid=wwXIfr
  8. இத்தனை நாள் சந்தேகத்தை தெளிவா விளக்கிட்டார் மன்னார்குடி மருத்துவர்| Positivitea | Dr Prakashmurthy Positivitea இன் இந்த எபிசோடில், டாக்டர் பிரகாஷ்மூர்த்தியுடன் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாக எண்ணெய், முட்டை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். ரேஷன் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செக்கு எண்ணெய் போன்றவற்றைப் பற்றி அவர் எங்களிடம் ஒரு சிறந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.
  9. அப்போ இவர் கூட இருந்து கொமென்றி கொடுக்கும் ரமீஸ் ராஜா, அக்ரம் எல்லாரும் பாகிஸ்தானில் கட்டும் வரியும் இப்படித்தானே செலவாகும்? இதை கைவிடுவாரா காவாஸ்கர்? காவ்யா தான் பெரியாரின் பேத்தி என்பதை காட்டி உள்ளார். ஆனால் வரும் அழுத்தம் கடுமையாக இருக்கும். இதே நிலைப்பாட்டில் நிற்பாரா?
  10. suvy, இரண்டு வர்ணத்தில் உள்ள பாடலொன்றின் இரண்டு வரிகள் சொல்லட்டுமா? கண்ணதாசன் எழுதியது, “காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கண்கூடாய் நான் பார்த்ததுண்டு புத்தன் யேசு காந்தியைக் கூடக் குற்றம் சொல்லிக் கேட்டதுண்டு…”😉
  11. அடபாவி இளைப்பாறச் சொல்லி தவம் கிடக்கிறார். இவர் தான் இளைப்பாறி விட்டு தோனியை முதலாளாக விளையாட வேண்டுமாம்.
  12. மின்சாரக் கட்டணத்தை 13.56 வீதத்தால் அதிகரிக்கக் கோருகிறது இலங்கை மின்சார சபை 18 Mar, 2026 | 03:32 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது. இந்த கட்டண முன்மொழிவினை மின்சார சபையானது, 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் மின்சார சபையின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகவே இந்தக் கட்டண உயர்வினை மின்சார சபை கோரியுள்ளது. இந்த முன்மொழிவில் இறுதிப் பயனர் கட்டணங்கள் மற்றும் மொத்த விநியோகக் கட்டணங்கள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் மதிப்பாய்வு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின்சார கட்டணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன், உரிய தரப்பினர் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்தாலோசனை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது https://www.virakesari.lk/article/241291
  13. இன்னொரு மத மாணவருக்கு இன்னொரு மதம் பிடித்தவர் இன்னொரு மத புத்தகத்தை ஏன் கொடுக்கணும். இன்னொரு மதத்தைப் பற்றி அறிய இன்னொரு மதத்தவனுக்கு ஆர்வம் இருந்தால் அவனாகவே வாங்கிப் படிப்பான்.
  14. அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது? தெஹ்ரான்: ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்பு மொஜ்தபா காமேனியும் அவருடன்தான் இருந்தார் என்றும், தாக்குதலுக்கு சில நொடிகள் முன்புதான் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. முதல் தாக்குதலே, உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும், ராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் குறிவைத்து நடத்தப்பட்டது. உச்சத் தலைவர் தங்கி இருந்த மாளிகையை நோக்கி இஸ்ரேல் அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அயதுல்லா அலி காமேனி, ராணுவத் தளபதி, முக்கியத் தலைவர்கள், அயதுல்லா அலி காமேனியின் குடும்பத்தினர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி ஈரானின் மூத்த மதகுருமார்கள், இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், அயதுல்லா அலி காமேனியின் அலுவலக நெறிமுறைப் பிரிவின் தலைவர் மசாஹர் ஹுசைனி பேசியதன் ஆடியோ தற்போது கசிந்துள்ளது. அதில், மசாஹர் ஹுசைனி பேசியதை தி டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் மசாஹர் ஹுசைனி கூறி இருப்பதாவது: தாக்குதலுக்கு சற்று முன்பு வரை மொஜ்தபா காமேனி, தனது தந்தையுடன் அந்த மாளிகையில் இருந்தார். ஏவுகணைகள் தாக்கும் சில கணங்களுக்கு முன்பே அவர் வெளியேறினார். ஏதோ ஒரு வேலையாக மொஜ்தபா வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருந்துள்ளது. கட்டிடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்தபோது அவர் வெளியே மேல் தளத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று ஏவுகணைகளாவது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு ஏவுகணை மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி இருந்த வளாகத்தின் பகுதியை தாக்கியது. மற்றொரு ஏவுகணை மொஜ்தபா காமேனியின் குடியிருப்பைத் தாக்கியது. மூன்றாவது ஏவுகணை அவரது மைத்துனரான மிஸ்பா அல்-ஹுதா பாகேரி கானியின் வீட்டைத் தாக்கியது. இந்த தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி முகமது ஷிராசியின் உடல் துண்டு துண்டாக சிதறிவிட்டது. அவரது உடலின் எந்தப் பகுதியையும் கண்டறியமுடியவில்லை. இறுதியில் சில கிலோ கிராம் சதைகள் மட்டுமே கண்டெடுத்து அதுவே அவரது உடல் என்று அடையாளம் கண்டனர். இந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனியின் காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இவ்வாறு மசாஹர் ஹுசைனி பேசியதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி
  15. ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்: அமெரிக்க அதிகாரிகள் தகவல் ஈரானின் கார்க் தீவு Updated on: 17 Mar 2026, 12:10 pm 1 min read வாஷிங்டன்: ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் நேட்டோ நாடுகள் உதவவில்லை என்றால், மோசமான எதிர்காலத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுகிறது. இத னால் ஈரானின் வருவாயை முடக்க, இந்த தீவுக்கு ராணுவத்தை அனுப்பி கைப்பற்றும் திட்டம் குறித்தும் அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார். ஆனால், இந்த தீவுக்கு அமெரிக்க ராணுவம் சென்றால், ஈரான் பதிலடியில் இறங்கும். சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் கூறுகையில், "ஈரானுக்குள் ஊடுருவும் எண்ணம் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இல்லை. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த மட்டுமே இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன" என்றார். ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்
  16. ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை வாஷிங்டன்: ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் தமக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (மார்ச் 16) இருமுறை தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “ஈரான் மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் குறிவைத்துத் தாக்க முற்பட்டிருக்கக் கூடாது. இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்றார். இந்த சூழலில், அமெரிக்க உளவுத்துறை தரப்பில் வெளியான தகவல்களில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் முற்படக்கூடும் என ட்ரம்ப்புக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டக்கூடும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகள் அமெரிக்கத் தாக்குதல்களை அங்கீகரிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ ஈரான் கருதினால், அந்நாடுகளின் தலைநகரங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று போருக்கு முன்னரே ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார். மேலும், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதல்கள் மூலம் ஈரானிய தலைவர்களைக் கொல்ல முயல்வது, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் தூதரகத் தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது பிப்ரவரி 28-ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக கடந்த இரண்டு வாரங்களாக, ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கியுள்ளன. அதேபோல, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் ஈரான் நிறுத்தியுள்ளது; இதனால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்
  17. தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் இடம்: கோத்தகிரி சாலை படம்: எம்.சத்தியமூர்த்தி தமிழினி Updated on: 18 Mar 2026, 4:00 pm 1 min read சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
  18. பண்புத்தமிழ் பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு. 1. சொற்களில் கண்ணியம் தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது. 2. இலக்கியங்களில் பண்பாடு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர். 3. விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன. 4. பணிவும் அன்பும் "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி. 1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர். நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும். hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று. மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு. ’வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?! சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும். சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர் - அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி. 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰. -பழமைபேசி. https://maniyinpakkam.blogspot.com/2025/12/blog-post_27.html
  19. முன்வரிசையில் தோனி களமிறங்க வேண்டும்: டி வில்லியர்ஸ் யோசனை மும்பை: வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் கூறியதாவது: வரும் 28-ம் தேதி தொடங்கும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக தோனி விளையாடி வருகிறார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்றதற்கு தோனியின் பங்களிப்பு அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் களமிறங்கி பினி ஷருக்கான பணியைச் செய்து வருகிறார். அவர் அப்படி செய்யக் கூடாது. அவர் முன்வரிசையில் வந்து விளையாடுவது அணிக்கு நல்லது. நான்கு, ஐந்து அல்லது ஆறாவது இடங்களில் இறங்கி விளையாடலாம். எப்போதும் முன்வரிசையில் அவர் இறங்கி விளையாட வேண்டும் என்று நான் கூறவில்லை. பேட்டிங் வரிசையில் முன்னதாக இறங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தும். தோனி கேப்டனாக இல்லாததால் 7 அல்லது 8-வது இடத்தில் இறங்கி விளையாடுகிறார். இந்த வரிசையில் விளையாடும்போது அவருக்கு போதுமான பங்கு இல்லாமல் போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். அவரது பேட்டிங் எவ்வளவு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். 44 வயதிலும் தோனியின் பங்கு அணிக்கு கூடுதல் வலுவைப் பெற்றுத் தருகிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளையாடவேண்டும். மேலும், சிஎஸ்கே அணியில் தற்போது சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரியான நபருக்காக அவர் (தோனி) காத்திருக்கிறார். அழுத்தங்கள் இருக்கும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனக்கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளையாட வேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் போட்டிகளை அவரால் எளிதாக கையாள முடியும். அதற்கான சந்தர்ப்பத்தை சஞ்சு சாம்சனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார். ஜெர்ஸி எண் மாறுகிறதா? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரருமான எம்.எஸ்.தோனியின் ஜெர்ஸி எண் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, இந்திய அணிக்காக விளையாடியபோது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருந்தார். சிஎஸ்கே-வுக்காக விளையாடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அவர் அணிந்துவந்தார். இந்நிலையில், தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்ஸியை பயன்படுத்தபோவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறப் போவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், “சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்றுதான் 7. ஆனால் இன்று.. 8-ம் எண்ணுக்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்ஸியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/sports/dhoni-should-be-in-the-front-row-ab-de-villiers
  20. அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு! டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான். செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் ராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முறியடிக்கவே இத்தாக்குதல் என்று விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் போர் பதற்றத்தைக் குறைப்பது, மோதலை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் காமேனி முதன்முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிபணியும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்பது சரியானது அல்ல. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியதாகத் தகவல். இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் நேரில் பங்கேற்றாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பங்கேற்றாரா என்பதுகூட தெரியவில்லை. ஈரான் கடற்கரையை குறிவைக்கும் அமெரிக்கா: போர்ப் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. https://www.hindutamil.in/news/world/iran-strikes-tel-aviv-with-cluster-warheads-after-israel-kills-larijani
  21. இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்ட கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த 7 வெளிநாட்டினர் கைது புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்டும் வகையில் மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலவனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மார்ச் 27ம் தேதி வரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர்களில் 6 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்கர். இவர்கள் மியான்மரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து எல்லையில் இன மோதல்களை தூண்ட திட்டமிட்டிருந்தனர். டெல்லி, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முறையான விசா மூலம் இந்தியா வந்தடைந்தாலும், பாதுகாக்கப்பட்ட பகுதியான மிசோரமுக்கு செல்லத் தேவையான முறையான அனுமதியைப் பெறாமல் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எல்லை தாண்டி மியான்மருக்குள் நுழைந்து, அங்குள்ள இனவாத ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் ஐரோப்பாவில் இருந்து பெருமளவிலான அதிநவீன ட்ரோன்களை இந்தியா வழியாக கடத்திச் சென்றுள்ளனர். இந்தியாவிலுள்ள பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புடைய மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் போர்ப் பயிற்சி அளித்ததும் விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் கூறினர். https://www.hindutamil.in/news/india/7-foreigners-arrested-who-trained-rebels-for-ethnic-conflict
  22. நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம் தி ஹண்ட்ரட் 2026 தொடருக்கான ஏலத்தில் சன் ரைசர்ஸ் லீட்ஸ் பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்தது தொடர்பாக கவாஸ்கர் கடும் விமர்சனங்களைத் தொடுக்க அவர் மீது பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து வீரர் அஜீம் ரஃபீக் கடும் எதிர் விமர்சனங்களைத் தொடுத்துள்ளார். மிட் டே ஊடகத்தில் கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலம் எடுத்ததைக் கடுமையாகச் சாடியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி, சென்னையைச் சேர்ந்த சன் டிவி நெட்வொர்க்கிற்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவர்களுடையதுதான். கவாஸ்கர் அந்தப் பத்தியில் கூறியதாவது: “'தி ஹன்ட்ரட்' தொடரில் ஒரு இந்திய ஃபிரான்சைஸிகள் பாகிஸ்தான் வீரர் ஒருவரை வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சை ஆச்சரியப்படுவதற்கில்லை. 2008 நவம்பரில் நடந்த மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய ஃபிரான்சைஸ்கள் ஐபிஎல் போட்டிகளுக்காக பாகிஸ்தான் வீரர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகின்றனர். ஒரு பாகிஸ்தானிய வீரருக்கு அவர்கள் வழங்கும் சம்பளம், அதன் மூலம் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு வருமான வரியாகச் செலுத்தப்படுகிறது. இதுதான் அவர்கள் ஆயுதங்களை வாங்குவதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் இறப்புகளுக்கும் மறைமுகமாகப் பங்களிக்கிறது என்ற புரிதல், பாகிஸ்தானிய கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் பணியமர்த்துவது குறித்து பரிசீலிப்பதிலிருந்தே இந்திய நிறுவனங்களைத் பின்வாங்கச் செய்துள்ளது. பணம் செலுத்துவது ஒரு இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது அந்த நிறுவனத்தின் வெளிநாட்டுத் துணை நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் உரிமையாளர் இந்தியராக இருந்தால், அவர் இந்திய உயிரிழப்புகளுக்கு மறைமுகமாகப் பங்களிக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியிருந்தார். கவாஸ்கரின் இந்தச் சாடலுக்கு இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடியவரும் பாகிஸ்தான் வம்சாவளி வீரரும் கராச்சியில் பிறந்தவருமான அஜீம் ரஃபீக் கவாஸ்கருக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்: “கவாஸ்கரின் கருத்துக்கள் முற்றிலும் அபத்தமானவை. இத்தகையக் கருத்துக்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் இவை. நீங்கள் எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை கவாஸ்கர். கவாஸ்கரின் மிக மிக மோசமானச் செய்கை இது. இத்தகைய போட்டிகளில் நான் வர்ணனை செய்ய மாட்டேன் என்று கவாஸ்கர் புறக்கணிக்க வேண்டியதுதானே? செய்தாரா?” இவ்வாறு சாடினார் அஜீம் ரஃபீக். நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம்
  23. பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ஆண்ட்ரே பியர்நாத் பிபிசி நியூஸ் பிரேசில் 18 மார்ச் 2026, 03:09 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பிரபஞ்சத்தின் முடிவு பல்வேறு வழிகளில் நிகழக்கூடும். அதுவொரு மெதுவான, குளிர்ந்த, அமைதியான முடிவாக இருக்கலாம். அல்லது அது திடீரெனவும் வன்முறையானதாகவும் நிகழலாம். சிலர், அதுவொரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும் முடிவாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். எதிர்காலத்தில் ஒருவேளை பிரபஞ்சம் அதன் முடிவைச் சந்தித்தால், அது எவ்வாறு அதன் முடிவு இருக்கக் கூடும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கொண்டுள்ள 3 முக்கியக் கருதுகோள்களை இங்கு பார்ப்போம். பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர். பிரபஞ்சம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும் என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தொடக்கம் எவ்வாறானது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். எல்லாவற்றுக்குமான தொடக்கம் பிரபஞ்சம் என்பது அனைத்தையும் குறிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, அது அனைத்து வெளி, பருப்பொருள் (எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல் மற்றும் காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பெருவெடிப்புக் கோட்பாடு எனப்படும் ஒன்றில் இருந்து பிரபஞ்சம் தொடங்கியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்தக் கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின. இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும். பிரேசிலில் உள்ள சாண்டா கத்தாரினா ஃபெடரல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்சாண்டர் ஸாபோட், "நமது பணி என்பது ஒரு நதியின் வழியே செல்லும் அனைத்து நீர் மூலக்கூறுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், அந்த நதியின் நடத்தையையும் ஓட்டத்தையும் மட்டுமே கவனிப்பதைப் போன்றது." என்று விளக்குகிறார். அதாவது, பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது. ஆனால், அதனுள்ளே இருக்கும் அனைத்து சிறிய விவரங்களையும் அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,FlashMovie via GettyImages படக்குறிப்பு,பிரபஞ்சம் ஓர் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி, விரிவடைந்து நீண்டுள்ளது என்று பெருவெடிப்புக் கோட்பாடு கூறுகிறது. பெருங்குளிர் உறைவு பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் விளக்குகிறது. டிரில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் இருண்டு, குளிராகி, கிட்டத்தட்ட வெறுமையாகிவிடும். இந்தக் கருத்து பெருங்குளிர் உறைவு (Big Freeze) என்று அழைக்கப்படுகிறது. இது வெப்ப மரணம் எனவும் அறியப்படுகிறது. இதன் பொருள், இறுதியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைத்து இடங்களிலும் ஒரே வெப்பநிலையை அடையும் என்பதாகும். அது நிகழும்போது, அதன் பிறகு பெரிதாக எதுவும் நடக்காது, எல்லாம் அசைவற்று ஸ்தம்பித்துவிடும் என்று ராயல் இன்ஸ்டிடியூஷன் விவரிக்கிறது. பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக் கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் ரவுல் அப்ராமோ, "பிரபஞ்சம் மென்மேலும் வெறுமையாகவும், குளிராகவும், பெரிதாகவும் மாறும் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன" என்று விளக்குகிறார். அதாவது, "விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும்" என்கிறார் அவர். எளிதாகக் கூறுவதெனில், பிரபஞ்சம் மெதுவாக மறைந்து, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாத ஒரு குளிர்ந்த, இருண்ட, அமைதியான இடமாக மாறிவிடும். பட மூலாதாரம்,Arctic Images via Getty Images படக்குறிப்பு,பெருங்குளிர் உறைவு (Big Freeze), பெரும்பிளவு (Big Rip), பெருஞ்சுருக்கம் (Big Crunch) என்பவை பிரபஞ்சம் எவ்வாறு அதன் அழிவைச் சந்திக்கக்கூடும் என்பது குறித்த கோட்பாடுகளாகும். பெரும்பிளவு பெருங்குளிர் உறைவு என்ற கருத்து நம்பும்படியாக இல்லையெனில், மற்றொரு கோட்பாடு உள்ளது. அது மிகவும் தீவிரமானது. இந்தக் கருதுகோள், பிரபஞ்சம் வெறுமனே விரிவடைவது மட்டுமின்றி, இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றின் காரணமாக மென்மேலும் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ந்து நடந்தால், இந்த விரிவாக்கம் மிகவும் வலுவாகி, ஈர்ப்பு விசையால்கூட இனி பொருட்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத நிலை உருவாகும் என்று ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச் கூறுகிறது. இந்தக் கோட்பாடு பெரும்பிளவு என்று அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விசை என்பது பொருட்களை ஒன்றாக இழுக்கும் ஒரு விசையாகும். நாசாவின் கூற்றுப்படி, இது கோள்கள் சூரியனை சுற்றி வர வைக்கிறது. பூமியை ஒன்றாக வைத்திருக்கிறது. நாம் விண்வெளியில் அதன் போக்கில் மிதந்து செல்வதைத் தடுக்கிறது. இது நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், விண்மீன் திரள்களை ஒன்றாக கட்டி வைத்திருக்கிறது. இருண்ட ஆற்றல் இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. அது பொருட்களை வெளியே தள்ளிவிட்டுப் பிரிக்கிறது என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட். "இருண்ட ஆற்றல் எதனால் ஆனது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், அது ஈர்ப்பு விசைக்கு எதிரானதைப் போல, விலக்கு விசையை ஏற்படுத்துகிறது என்பது அறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர். நாசாவின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை மென்மேலும் விரிவடையச் செய்கிறது. சுமார் 68.3% முதல் 70% வரையிலான பிரபஞ்சம் இருண்ட ஆற்றலால் ஆனது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கோள்கள், விண்மீன் திரள்கள் போன்ற சிறிய மட்டங்களில் ஈர்ப்பு விசை வலிமையாக இருப்பதால், இது நீண்டகாலமாக கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. பின்னர் 1990களின் பிற்பகுதியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இருண்ட ஆற்றல் மிகப்பெரிய விண்மீன் திரள்களுக்கு இடையிலான அளவுகளில் மட்டுமே கவனித்தக்கதாக இருக்கிறது. "பிரபஞ்சம் எவ்வளவு அதிகமாக வளர்ந்து அதன் கன அளவைப் பெறுகிறதோ, அந்த அளவுக்கு இருண்ட ஆற்றலுடன் தொடர்புடைய விலக்கு விசை அதிகரிக்கிறது," என்று விளக்குகிறார் ஸாபோட். "பிரபஞ்சத்தின் அளவு அதிகரிக்கும்போது, இருண்ட ஆற்றல் சிறிய அளவுகளில் அதிக முக்கியத்துவம் பெறக்கூடும்." இருண்ட ஆற்றல் நிலையற்றதாக மாறினால், அதுவொரு பெரும்பிளவுக்கு வழிவகுக்கும். இந்தச் சூழ்நிலையில், பிரபஞ்சம் மிகத் தீவிரமாக விரிவடையும். அதன் விளைவாக, நட்சத்திரங்கள், கோள்கள், அவ்வளவு ஏன் அணுக்கள்கூட, நாசா விவரிப்பது போல, முழுவதுமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அல்லது 'ஒட்டாமல் விலகிவிடும்.' "அதனால்தான் இந்தக் கோட்பாட்டிற்கான ஆங்கிலப் பெயர் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளது. இது 'பிக் ரிப்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு பெரிய பிளவு அல்லது கிழிவு. ஆனால், ரிப் என்பது ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்பதன் சுருக்கமும் ஆகும்" என்று அலெக்சாண்டர் ஸாபோட் விவரிக்கிறார். எளிமையாகக் கூறுவதெனில், ஒரு நாள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் முற்றிலுமாகக் கிழித்து எறியப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. பட மூலாதாரம்,Fotograzia via Getty Images படக்குறிப்பு,பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாகும்; இதில் நமது விண்மீன் மண்டலம், முழு விண்வெளி மற்றும் அந்த விண்வெளியில் அடங்கியுள்ள அனைத்துப் பருப்பொருள்களும் ஆற்றலும் அடங்கும். பெருஞ்சுருக்கம் பிரபஞ்சத்திற்கு இன்னும் வியத்தகு முடிவுகளைத் தரக்கூடிய பிற சாத்தியக்கூறுகளும் உள்ளன. இருண்ட ஆற்றல் வலுவிழந்து அதன் விளைவை மாற்றினால், ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும். இது பிரபஞ்சத்தை ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கச் செய்யலாம். நாசாவின் கூற்றுப்படி, இந்தக் கருத்து 'பெருஞ்சுருக்கம்' என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு கருத்து 'பெரும் மீள்வு' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டில், பிரபஞ்சம் மீண்டும் ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கி, பின்னர் மற்றொரு பெருவெடிப்புடன் மீண்டும் தொடங்குகிறது. இதன் பொருள், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் மீண்டும் மீண்டும் விரிவடைந்து சுருங்கிக்கொண்டே இருக்கலாம் என்பதாகும். "ஆனால், இது முற்றிலும் விசித்திரமான ஒரு மாதிரி. இதற்கு நம்மிடம் எவ்வித தரவுகளோ ஆதாரங்களோ இல்லை" என்கிறார் ரவுல் அப்ராமோ. அப்படியானால், பிரபஞ்சம் எப்போது அழியக்கூடும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியுமா? "இல்லை, எதிர்காலத்தில் ஒரு பெரிய பிளவோ அல்லது பெரும் சரிவோ ஏற்படும் என்பதற்கு நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை," என்கிறார் அப்ராமோ. "இந்த முடிவைப் பற்றிய சில மதிப்பீடுகள் டிரில்லியன்கணக்கான ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. மற்றவை அதைவிட இன்னும் நீண்டகால அளவுகளைப் பற்றி ஊகிக்கின்றன" என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட். அது எவ்வளவு காலம் என்பதைப் புரிந்துகொள்ள, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு டிரில்லியன் ஆண்டுகளை எட்டுவதற்கு மட்டுமே இன்னும் சுமார் 986.2 பில்லியன் ஆண்டுகள் ஆகும். நாம் நினைத்ததைவிட பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார் 10⁷⁸ ஆண்டுகள் (அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "உண்மை என்னவெனில், அண்டவியல் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்" என்கிறார் அப்ராமோ. பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இன்னும் போதுமான கருவிகள் இல்லை என்று அவர் விளக்குகிறார். இதன் காரணமாக, பல கருத்துகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. ஒரேயொரு பிரபஞ்சம் மட்டுமே இல்லை, பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்ற கருத்தான பல்பிரபஞ்சம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24dej96ddeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.