stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மைதான் ஐயா… இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம். இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம். அதன் போது பதிவதை செய்வதா அல்லது இன்னும் பொறுத்து செய்வதா என முடிவு செய்யலாம். நாட்டில் நடைமுறை மேலாண்மை ஏராளன்(project implementation oversight) . உதவி - வாத்தியார் அண்ணா மற்றும் நான். நிதி திரட்டல் (fund raising). குசா அண்ணா. ஏனையோர் எவரும் முன்வரலாம். ஏராளன் பகிருவார். Hybrid (இரெண்டு மாதிரியும்) முறையில் செய்யலாம். நான் முதலில் ஒரு தொகையை கொடுத்து விட்டு, பின்னர் மாதாந்தம் அனுப்பலாம் என நினைக்கிறேன். முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்.
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
நல்லதொரு திரைப்படம். நீண்டகாலம் நினைவில் நிற்கும்
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்லது. பரீட்சார்த்தமாகவும் இருக்கும். படிப்பினையையும் தரும். அந்தத் திட்டம் நல்லமுறையில் நடந்தால் புது உத்வேகமும் கிடைக்கும். இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை. என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன, முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்? வங்கி விபரங்கள் என்ன? திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா? வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இவர்தான் அந்தத் தம்பர்
- Today
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
டிரம்பை தமிழ் ஶ்ரீ அண்ணா அப்படித்தான் வாஞ்சையாக அழைப்பார்😂
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இன்ஷா அல்லாஹ்
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒரு சின்ன ஐடியா. பெரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா? அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா? உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே. கருத்தை சொல்லவும்.
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
எனது வாட்ஸ் அப் இலக்கத்திற்கும் அனுப்பிவிடுங்கள்.🙏 நீங்கள் முதல் தெரிவித்த தொகையை அனுப்பி விடுகின்றேன்.
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி. இங்கே பதிவிடுவது நல்லது என எண்ணுகிறேன். சம்மதமே.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஆர் உந்தத் தம்பர்?
-
சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை ; அவர் இந்தியாவில் இருப்பதாகவும் தகவல் இல்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 07 Jan, 2026 | 03:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை என இடம்பெறும் விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் அவர் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்பான சாரா ஜெஸ்மின் தொடர்பில் 2020க்கு பின்னர் கோட்டாப ராஜபக்ஷ் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசாரணைக்குழுவின் 3ஆவது விசாரணையிலேயே சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக தெரிவிப்பதற்கு முயற்சித்தார்கள். என்றாலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக நாங்கள் யாரும் நம்புவதில்லை. அவர் தப்பிச்சென்றுள்ளார் அல்லது தப்பிச்செல்ல சிலர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தார். அதேநேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருன ஜயசேகர, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அத்துடன் சாரா ஜெஸ்மின் தப்பிச்சென்றதும் இந்த காலப்பகுதியிலாகும். அரசாங்கம் பாதாள குழுக்களை கைதுசெய்ய திறந்த பிடியாணைகளை பெற்று செயற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகியும் சாரா ஜெஸ்மினை கைது செய்ய ஏன் பிடியாணை பிறப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் இந்த அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நாட்டுக்கு வந்து சென்றார். ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இவ்வாறான கலந்துரையாடல்களின்போது, சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருந்தால், அவரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடி இருந்தீர்களா? அதேநேரம் சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க ஏன் திறந்த பிடியாணையை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்ர் தொடர்ந்து பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இருந்து ஒருசில தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை எனவும் விசாணைகளில் இருந்து தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.. அதேபோன்று சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. என்றாலும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஏதாவது சதித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற விசாரணையே புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகிறது. அதனால் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய பிடியாணை பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/235443
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
மெய்க்காப்பாளரின் துரோக செயலா? | Ravi IPS உள்வீட்டு வேலை!!!
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
மிக வித்தியாசமான ஒரு விறுவிறுப்பான திரைப்படம். கடைசி சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. அந்த முடிவை புரிந்து கொள்வதற்கு கூட சில கணங்கள் எடுக்கலாம். ஏராளன் quote பண்ணியுள்ள வசனங்கள் தரும் அர்த்தம் தான் படம். இப்படியான சிக்கலான அதே நேரம் யதார்த்தமான உண்மையை திரைக்கதை ஆக்கும் கலை மலையாள இயக்குனர்களுக்கு கை வந்த கலை. படத்தில் வரும் நாய்கள் தான் உண்மையான கதா நாயகர்களோ என்று எண்ணத் தோன்றும். நேற்றிரவு பார்த்தேன்.. ஒரு போதும் இப் படம் நினைவில் அழியாது இருக்கும். வித்தியாசமான படங்களை விரும்புகின்றவர்களுக்கான சினிமா படம் இது.
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.
-
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா 07 Jan, 2026 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/235467
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.
-
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
'பூமியின் நரகம்': அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images கட்டுரை தகவல் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பிபிசி நியூஸ் முண்டோ 7 ஜனவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 7 ஜனவரி 2026, 03:44 GMT நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்? வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் "பூமியின் நரகம்" என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கைவிலங்கு இடப்பட்டு, இரண்டு போதைப்பொருள் தடுப்பு முகவர்களால் அழைத்து வரப்பட்ட மதுரோ, நியூயார்க் வந்தடைந்தவுடன் நகைச்சுவையாகப் பேசினார். குட் நைட் என்பதை பியூனாஸ் நோச்சஸ் என்று நீங்கள் சொல்வது சரியா? குட் நைட்! புத்தாண்டு வாழ்த்துகள்!"என்று அவர் கூறினார். அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (டிஈஏ) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் (எம்டிசி) உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் வரை, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அங்கேயே இருப்பார்கள் (அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் மறுக்கிறார்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Adam Gray/Getty Images படக்குறிப்பு,வழக்கறிஞர்கள் "பூமியின் நரகம்" என்று விவரிக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார். எஃகு தடுப்புகள் மற்றும் கேமராக்கள் புரூக்ளின் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.டி.சி என்பது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கான்கிரீட் மற்றும் எஃகு சிறையாகும். இது துறைமுகத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலும், ஐந்தாவது அவென்யூ, சென்ட்ரல் பார்க் மற்றும் பிற பிரபலமான சுற்றுலா மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நகரச் சிறைச்சாலைகளில் நிலவிய அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 1990-களின் தொடக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டது. துறைமுகத்தில் வந்து இறங்கும் அல்லது கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிக்கும் கிடங்குகள் இருந்த இடத்தில் தான் இந்த மையம் தற்போது அமைந்துள்ளது. மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும், குறுகிய கால தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை அடைக்கவும் இந்த தடுப்புக்காவல் மையம் பயன்படுத்தப்படுகிறது என்று ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் (பிஓபி) வலைத்தளம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸால் இயக்கப்படும் ஒரே ஒரு தடுப்புக் காவல் மையம் இதுதான். 2021-ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் இருந்த இதுபோன்றதொரு மையத்தை ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் மூடிவிட்டது. பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-இல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்புக்காவல் மையம் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் இரண்டு ஃபெடரல் நீதிமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது எஃகு தடுப்புகளாலும், நீண்ட தூரத்திலிருந்தே படம்பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. மதுரோ வருகைக்குப் பிறகு, வெளிப்புறப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்து பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு விளையாடுவதற்கான வசதி, மருத்துவப் பிரிவுகள் மற்றும் நூலகம் போன்றவை உள்ளன என, பொது ஒளிபரப்பு சேவை (பிபிஎஸ்) செய்தி தெரிவித்துள்ளது. அங்குள்ள கைதிகள் நாளின் பெரும் பகுதியை மிகக் குறுகிய அறையிலேயே கழிக்கிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, சிலியா ஃபுளோரஸ் மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் அமெரிக்க முகவர்களால் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். 'மனிதாபிமானமற்ற சூழல்' ஊடக அறிக்கைகளின் படி, 1,000 பேரை அடைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த மையத்தில், 2019-ஆம் ஆண்டில் 1,600 பேர் இருந்தனர். பிஓபி இணையதளத்தின்படி, தற்போது அங்கு 1,330-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நவம்பர் 2024-இல் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த மையமானது, பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது எனத் தெரிய வருகிறது. அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான், எம்.டி.சியில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பும் கவலைக்குரியதாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் தடையின் போது, கடுங்குளிரில் வெப்பமூட்டும் வசதி இன்றி அங்கிருந்தவர்கள் பல நாட்களாக தவித்தபோது அது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. "எம்.டி.சியின் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானமற்றது," என்று அப்போதைய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் அறிவித்தார். தடுப்புக்காவல் மையத்தின் மோசமான நிலை குறித்து அவர் அரசாங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். "சிறையில் அடைக்கப்படுவதால் மனித உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் மையம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதோடு, சுவர்களாலும் கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆண்ட்ரூ டாலக் போன்றவர்கள் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், இந்தச் சிறை "பூமியின் நரகம்" என்று குறிப்பிட்டனர். 2024-ஆம் ஆண்டில், எட்வின் கார்டெரோ என்பவர் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக வாதாடிய டாலக் இவ்வாறு கூறினார். 2021 முதல் 2024 வரை பல கைதிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையத்தின் மோசமான சூழலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அங்கு கைதிகளை அனுப்பவே தயங்குகின்றனர். மாவட்ட நீதிபதி கேரி பிரவுன் ஆகஸ்ட் 2024-இல், வரி ஏய்ப்பு செய்த 75 வயது முதியவருக்கு தான் விதித்த ஒன்பது மாத சிறைத்தண்டனையை ரத்து செய்வதாகவும், பிஓபி அவரை புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பினால், அதற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைப்பதாகவும் கூறினார். "இங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மேற்பார்வை குறைபாட்டையும், அமைதி சீர்குலைந்திருப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான நிர்வாகத்தை கொண்டுள்ள ஒரு குழப்பமான சூழலையும் வெளிப்படுத்துகின்றன" என்று பிரவுன் கூறியதாக தி இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளும் இதனை செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க நீதித்துறை 25 பேர் மீது (கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட) வன்முறை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தொடர்பான 12 வெவ்வேறு வழக்குகளில் விசாரணை அறிவித்தது. பி.ஓ.பி முன்பு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதையும், சிறைப் பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பேணுவதையும் நாங்கள் ஒரு கடமையாகக் கருதுகிறோம்," என்று தெரிவித்தது. எம்.டி.சி.யில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒரு அவசர நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகளை முடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கார்டெரோ மற்றும் பிறரின் மரணங்களைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Hollywood To You/Star Max/GC Images படக்குறிப்பு,ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ், தனக்கு தண்டனை விதிக்கப்படும் வரை இந்த மையத்தில் சில மாதங்களை கழித்தார். இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த மற்ற முக்கிய நபர்கள் புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மோசமான சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முக்கியமான நபர்களை அங்கு அனுப்பி வருகின்றனர். உதாரணமாக, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர் மதுரோ அல்ல. ஹோண்டுராஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ் கடந்த ஜூன் மாதம் வரை இந்த மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் வேறொரு சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். மெக்சிகோவின் முன்னாள் பொதுப் பாதுகாப்புச் செயலர் ஜெனாரோ கார்சியா லூனா என்பவரும் இந்த தடுப்புக் காவல் மையத்தின் ஓர் அறையில் அடைபட்டுள்ளார். மிகவும் பிரபலமான மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஜோவாக்வின் "எல் சாப்போ" குஸ்மான் இங்கு அடைக்கப்பட்டிருந்தார். சினலோவா கார்டெல் தலைவர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த இஸ்மாயில் "எல் மாயோ" சம்பாடா, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக இப்போதும் அதே கட்டடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரபல ராப் பாடகரும் இசையமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ் சில மாதங்கள் இந்த தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பெண்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். எப்ஸ்டீனின் கூட்டாளியும், முன்னாள் துணைவருமான கிஸ்லேன் மேக்ஸ்வெல், திவாலான எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ தளத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் மற்றும் நிதி மோசடிகளுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோரும் புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தில் அடைபட்டிருந்த முன்னாள் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04170dd9x5o
-
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! 07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. https://www.virakesari.lk/article/235438
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Shoe lace சை மட்டும் அல்ல, கோவணத்தைக் கூட.
-
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 7 ஜனவரி 2026, 13:36 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது. இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இரு புலிகளுக்கு இடையில் நடந்த 'ஏரியா' சண்டை! உதகை அருகேயுள்ள போர்த்தி ஆடா என்ற கிராமத்தையொட்டியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று ஒரு புலி படுத்துக்கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த புலி, வேறெங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. தகவல் கேள்விப்பட்டு, வனத்துறையினர் அங்கு வந்தனர். டிரோன் மூலமாக புலியின் நடமாட்டத்தைப் பார்த்தபோது, அதன் முன்னங்கால் ஒன்றில் பலத்த காயமடைந்திருப்பதால் நடக்க முடியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புலியைப் பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கோபமடைந்த சிலர், 'அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதுவரை அதற்கு உணவாக இறைச்சி வழங்கவேண்டுமென்றும்' ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர். புலியைப் பிடிப்பதற்கு வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர், நேரடியாகவும், டிரோன் மூலமாகவும் புலியின் நிலையை கண்காணித்து வந்தனர். அங்கிருந்து வேறெங்கும் நகராமலிருந்த புலி, கடந்த 5 ஆம் தேதியன்று உயிரிழந்தது. அதே இடத்தில் அந்த புலிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு புதைக்கப்பட்டது. புலிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டபோதுதான் காயமடைந்திருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ.) வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இதுவொரு இயற்கையான நிகழ்வு என்பதால் அந்த புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்தோம்.'' என்றார். வனத்துறையினரின் இந்த விளக்கம், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. காயமடைந்துள்ள ஒரு புலிக்கு சிகிச்சை அளிக்காமலிருக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறை அறிவுறுத்துகிறது என்றால், புலிகளை கையாள்வது தொடர்பாக வேறு என்னென்ன வழிகாட்டுதல்கள் உள்ளன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 248 பக்கங்களுக்கு மிக விரிவாகவுள்ளது. புலிகளைக் கையாள்வது குறித்து அதிலுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சிலர் பிபிசி தமிழிடம் விளக்கினர். வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த கேள்வி–பதில் தொகுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்தது ஏன்? கேள்வி: உதகை அருகே காயம்பட்டிருந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்ததற்கு காரணமென்ன...இயற்கையாக நடந்த சண்டையில்தான் இந்த புலி காயமடைந்தது என்பது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது? ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சண்டை நடந்துள்ளது. அந்த சண்டையில் படுகாயமடைந்த பின்பே அந்த புலி, தேயிலைத் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்பதால், அதற்கு சிகிச்சை அளிக்காமல் அதனால் மக்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் கண்காணிக்க வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை'' என்கின்றனர் வனத்துறையினர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் எல்லையை வரையறுப்பதில் சண்டை நடந்துள்ளது. நாங்கள் அந்த சூழல் காரணிகளை ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து இரு புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்துள்ளதை உறுதிசெய்துள்ளோம். அதில் புலியின் 2 முன்னங்கால்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்திருந்தன. இறந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும். அதை விட வயது முதிர்ந்த ஒரு புலி இதைத் தாக்கியிருக்கலாம். '' என்றார். ''அதன் உடலில் வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இயற்கையாக நடந்த சண்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பதால்தான் சிகிச்சை தரவில்லை. என்.டி.சி.ஏ. கூறியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையின்படி அதைக் கண்காணித்தோம். வேறு ஏதாவது விபத்து போன்ற மனித செயல்களால் காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் சிகிச்சை அளித்திருப்போம்.'' என்றார். இறந்து போன புலிக்கு, சண்டைக்குப் பின் நிறைய ரத்தம் வெளியேறியதுடன் 3–4 நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த புலி இரையை அடிப்பதற்கு உதவும் முன்னங்கால்கள் இரண்டும் முற்றிலும் சேதமடைந்திருந்ததாகக் கூறிய வனத்துறையினர், அதற்கு மேல் அந்த புலியால் வேட்டையாடவும் முடியாது என்ற தகவலையும் பிபிசியிடம் பகிர்ந்தனர். புலி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியல் ஒன்றில் (schedule 1 animals) இருக்கும் உயிரினம் என்பது போலவே, கடமானும் அதே பட்டியலில் உள்ள உயிரினம்தான் என்று கூறிய மாவட்ட வன அலுவலர், ஒரு புலி அடித்து கடமான் காயப்பட்டிருந்தாலும் அதற்கு சிகிச்சை தரமுடியாது என்றார். அப்படிச் செய்வது காடு மற்றும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியை அறுக்கின்ற ஒரு செயலாக இருக்குமென்கிறார் அவர். படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம் 'தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம்' கேள்வி: இதுபோன்று காயமடைந்த ஒரு புலிக்கு சிகிச்சையளித்து, வன உயிரினப் பூங்காவில் வைத்து பாதுகாத்திருக்க முடியாதா? இதற்கு பதிலளித்த கெளதம், ''அதற்கான தேவையும், அவசியமும் எழவில்லை'' என்றார். ''புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் அனுமதி பெற வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. தரும் வழிகாட்டுதல். அதேபோன்று பிடித்து வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு செல்லவும் அவரின் அனுமதி பெறவேண்டும்.'' என்றார் கெளதம். 'சட்டமே சொல்கிறது' கேள்வி: இதே புலி ஓர் ஊருக்குள் நுழைந்திருந்தால் அதைப் பிடிக்காமல் கண்காணிக்க முடியாது என்பதால், அப்போது வனத்துறை என்ன செய்திருக்கும்? இதுகுறித்து என்.டி.சி.ஏ. கூறும் வழிகாட்டுதல் என்ன? ''என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் என்பது எல்லாப்பகுதிகளுக்கும் ஒரே மாதிரியானதுதான். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் புலியை காட்டுக்குள் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். முடியாதபட்சத்தில் மாநிலத்தின் தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு (Chief Wildlife Warden) முறைப்படி விண்ணப்பித்து, அதை கூண்டு வைத்து அல்லது மயக்க மருந்து செலுத்திப்பிடிப்பதற்கு அனுமதி பெற்று பிடிக்கப்படும்.'' என்றார் கெளதம். கேள்வி: ஒரு புலியால் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறவேண்டியது அவசியமா? இதுகுறித்து விளக்கிய பெயர் கூற விரும்பாத மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி, ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலி உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு மட்டுமே உள்ளது. '' என்றார். ''ஒரு புலி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கே வந்துவிட்டாலும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் அதைப் பிடிக்கவோ, சுடவோ கூடாது என்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை. எந்த சூழ்நிலையாக இருந்தால் வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியதும் கட்டாயம். இதை வழிகாட்டுதல் விதிகளில்லை; வன உயிரினப் பாதுகாப்புச் சட்டமே சொல்கிறது. '' என்றார் அவர். படக்குறிப்பு,கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஒரு புலி கேள்வி: ஒரு புலியைப் பிடிப்பதற்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது? ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு புலியால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால் அதைப் பிடிக்கவும், பிடித்து இடமாற்றம் செய்யவும் அல்லது சுடவும் தலைமை வன உயிரினக்காப்பாளரால் அனுமதியளிக்க முடியும். அதேபோன்று அறிவியல்பூர்வமான காரணங்களுக்காக ஒரு புலியைப் பிடிப்பதாக இருந்தாலும் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. மாவட்டம் அல்லது மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், சூழ்நிலை அல்லது நிர்பந்தத்துக்கேற்ப புலிகளைப் பிடிக்கவும் கொல்லவும் அனுமதியளிக்கும் அபாயம் இருப்பதால்தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என கூறினார் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர். இயற்கையாக இறக்கும் காட்டுயிர்களை காப்பாற்றினால் என்னவாகும்? கேள்வி: காயமடைந்த புலியை சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை என்ற முடிவை எதன் அடிப்படையில் தலைமை வன உயிரினக்காப்பாளர் எடுக்கிறார்? ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பாதுகாப்பது குறித்த முடிவை தலைமை வன உயிரினக் காப்பாளர் எடுக்கிறார் என்று வனத்துறையினர் விளக்குகின்றனர். ''நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை நன்றாகவுள்ளது. மாவட்டம் முழுவதும் 250–300 எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, இதுபோன்று இயற்கை நிகழ்வில் காயம் ஏற்படும் புலிகளையும் காப்பாற்றினால் இயற்கையாக நடக்கும் புலிகளின் பிறப்புக்கும், இறப்புக்குமான விகிதாச்சாரம் மாறுபட்டு, புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும். அதனால் இது தேவையற்றது.'' என்றார் கெளதம் கேள்வி: யானை, புலி போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் நோய் அல்லது காட்டுக்குள் உள்ள சூழல் பாதிப்பில் இறக்க நேரிட்டால் அப்போதும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கையாளப்பட வேண்டுமா? இதற்கு பதிலளித்த வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''சாலை விபத்து, வேட்டை, மின்சார வேலி, வெடி போன்ற மனித செயல்பாடுகளால் காட்டுயிர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுக்குள் இயற்கையாக நிகழும் காட்டுயிர்களின் மரணங்களைத் தடுக்கக்கூடாது. '' என்றார். உதாரணமாக 300 யானைகள் வாழும் ஒரு காட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் யானைகள் இயற்கையாக இறக்கும் எனும்போது, அவற்றுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றப்படும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என்பதை விளக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அப்படி அதிகரித்தால் காடு அழியும் ஆபத்து இருப்பதாக கூறினர். ஜிம்பாப்வே போன்ற தென் ஆப்ரிக்கா நாடுகளில் காடுகளின் வளம் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை அழிக்கும் முறை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெயர் கூற விரும்பாத ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர், ''காட்டைக் காப்பதா, காட்டுயிர்களைக் காப்பதா என்றால் காட்டைக் காப்பதுதான் வனத்துறையின் முதல் பணி. காட்டுயிர்களைக் காக்க வேண்டுமென்று, இயற்கையாக, நோய் வாய்ப்பட்ட காட்டுயிர்களுக்கு எல்லாம் காட்டுக்குள் சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி எடுத்தால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி காடே காலியாகிவிடும். காடழிந்தால் அதன்பின் காட்டுயிர்களும் அழிந்துவிடும். அதனால் காட்டுயிர்கள் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1evz9dvze9o
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
தம்பர் தன்னுடைய shoe lace அவிழ்ந்துவிட்டது, ஓடிவந்து கட்டி விடுங்கோ பாய் என்று கேட்டால்... சிங்கம் இப்பவே ஓடிப்போய் குனிந்து கட்டிவிடும்.
-
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப் 07 Jan, 2026 | 04:29 PM “அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தியப் பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்” என்றும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்தியது. இதை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரியை அறவிட என்னால் முடியும் என்று ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (5) தெரிவித்துள்ளார். மேலும் அவர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். எனக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், இந்தியா அதிக வரி செலுத்துவதால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது கனிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் வலிமையானதாகவும் மரியாதைக்குரிய நாடாகவும் விளங்குகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235450
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
இவரது கண்டனத்தை அடுத்து அமெரிக்கா நடு நடுங்கி மடூரோவை வீட்டிற்கு அனுப்பிவிடப்போகிறது.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறுதி யுத்தத்தில் இந்திய இலங்கைக்கு எந்தெந்த வகையில் உதவியது? 1. புலநாய்வுத்தகவல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து இலங்கை இராணுவத்திற்கு அறியத் தந்தது. 1. Intelligence Sharing and Maritime Tracking India’s intelligence agencies (including RAW and naval intelligence) worked with Sri Lanka’s military to track LTTE movements, especially maritime logistics routes: India shared radar data, satellite imagery and naval intelligence on LTTE ship movements with the Sri Lankan Navy, significantly aiding the interdiction of arms and supplies. Grokipedia Sri Lankan naval commanders credited intelligence support in tracking and destroying LTTE “warehouse” vessels — large supply ships that brought arms and materiel from abroad — far out at sea (up to 1,600 + nautical miles from Sri Lanka). sangam.org Impact: These intelligence inputs reportedly helped cut the LTTE off from resupply, degrading its ability to fight in the final phase of the war. sangam.org இலங்கைக் கடற்படையுடன் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தடுத்து அழிப்பதில் பங்குகொண்டது Naval Cooperation and Patrols India’s naval forces and Coast Guard engaged in joint maritime operations with Sri Lanka to pressure LTTE supply and Sea Tiger (LTTE naval) activities: Indian Navy and Coast Guard ships patrolled strategic sea lanes (e.g., Palk Strait, Gulf of Mannar) to deter Sea Tiger operations and monitor suspect vessels. Rediff Coordination between Indian and Sri Lankan naval forces helped identify and interdict LTTE supplies approaching Sri Lanka’s territorial waters. Rediff These patrols — while not a “formal blockade” in the legal sense — acted as a de facto maritime pressure mechanism on LTTE logistics. Rediff ஆயுதங்களை வழங்கி, இலங்கை இராணுவத்தைப் பயிற்றுவித்து, தொழிநுட்ப உதவிகளை வழங்கியது Military Hardware, Training, and Technical Support India provided various forms of material and technical support to Sri Lanka’s armed forces which indirectly affected the operational context of the final war: India supplied surveillance radars to Sri Lanka and has a longstanding program of training Sri Lankan military personnel at Indian defense institutions. Stiftung Wissenschaft und Politik (SWP)+1 Although formal export of lethal weapons was limited due to domestic politics, technical and tactical expertise (e.g., training, radar data) helped Sri Lanka’s forces operate more effectively in tracking LTTE Naval units. Stiftung Wissenschaft und Politik (SWP) இலங்கையின் அரச, இராணுவ அதிகாரிகளுடன் இறுதி யுத்தம் நடைபெறவேண்டிய விதம் தொடர்பாகத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் போரின் போக்கினைத் தீர்மானித்தது Joint Condition Monitoring and Strategic Counseling Beyond hardware and intelligence: Indian and Sri Lankan military/intelligence officials regularly met and exchanged information during the years leading up to and including the final war, reflecting deeper cooperation than just high-level diplomacy. South Asia Journal This included informal high-level exchanges between strategic officials on both sides (national security advisors, defense secretaries, etc.) from about 2007–2009. South Asia Journal வெளியுலகில் இருந்து வந்த போர்நிறுத்தத்திற்கான அழுத்தங்களை முறியடிப்பதில் தனது இராஜதந்திரச் செல்வாக்கினைப் பாவித்து போர் தொய்விஒன்றி நடந்து, புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை உறுதி செய்தது. Diplomatic Positioning — Shaping External Pressure India’s government took strategic positions that affected international pressure on Sri Lanka: India worked to ensure the LTTE remained widely designated as a terrorist organization, which undercut external pressure for a ceasefire that could have weakened Colombo’s military campaign. South Asia Journal At the United Nations and in international diplomatic fora, India supported Sri Lanka’s sovereignty and repeatedly opposed calls for a ceasefire during the final months, emphasizing civilian protection via safe zones rather than a complete stop to operations. South Asia Journal
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை செ.ஞானபிரகாஷ் Updated on: 06 Jan 2026, 9:50 am கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்). மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார். அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை. ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர். கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக். உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது. ‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு. “நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை. உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை