Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பலன் கொடுக்காத ஷிவம் துபே அதிரடி: இந்தியா மேற்கொண்ட 3 சோதனை முயற்சிகளின் முடிவு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் டிம் செய்ஃபர்ட் (62 ரன்கள்), டெவன் கான்வே (44 ரன்கள்) ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கமும், டேரில் மிம்ட்செலின் அதிரடி ஃபினிஷிங்காலும் (18 பந்துகளில் 39 ரன்கள்) அந்த அணி அந்த ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மட்டுமே ஓரளவு போராடி 65 ரன்கள் எடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம். துபேவுக்கு ரிங்கு சிங் தவிர்த்து யாரும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஏற்கெனவே இந்தத் தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. அவற்றுள் எந்த முடிவுகள் கைகொடுத்தன? எவை கைகொடுக்காமல் போயின? ஒரு பேட்டர் குறைவு டாஸின் போதே இந்திய அணி சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை சொல்லாமல் சொன்னார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இஷான் கிஷன் சிறு காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். ஒரு பேட்டருக்குப் பதிலாக, ஒரு முழுநேர பௌலரைக் களமிறக்கியது இந்திய அணி. டி20 போட்டிகளில், கடினமான சூழ்நிலைகளில் கூட அதிரடி அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது இந்திய அணி. 7 பேட்டர்களுடன், எட்டாவதாக அக்‌ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணா என பேட்டிங் செய்யக்கூடிய வீரர் ஒருவர் என்றுதான் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இப்படி பெரிய பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது, அது அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையை பேட்டர்களுக்குக் கொடுத்தது. சூழ்நிலை பற்றிய குழப்பங்கள் இல்லாமல் அவர்கள் அதைக் கையாண்டார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பேட்டர்களில் ஷிவம் துபே மட்டுமே நெருக்கடியை உணராமல் விளையாடி அரைசதம் அடித்தார் ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதாலும், உலகக் கோப்பைக்கு தயாராகவேண்டும் என்பதாலும், அந்த கூடுதல் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது அணி நிர்வாகம். அதனால், அர்ஷ்தீப்பைக் கொண்டுவந்து ஒரு பேட்டரைக் குறைத்திருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை உறுதி செய்தார். "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பேட்டர் குறைவாக விளையாடினோம். ஐந்து பௌலர்களோடு விளையாடி எங்களுக்கு சவால் ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு 180-200 என்ற இலக்கை எப்படி சேஸ் செய்கிறோம் என்று பார்க்க நினைத்தோம்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தியா ஏற்படுத்திக்கொண்ட சவாலை இந்தப் போட்டியில் அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்த போட்டியில் டாப் ஆர்டர் சீக்கிரமாக அவுட் ஆகிவிட்டபோது, மிடில் ஆர்டர் மீது சற்று கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்றைய சூழ்நிலையில் அது மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும் பாதித்தது. சாம்சன் அவுட் ஆனதற்கும், ரிங்கு சிங் அவுட் ஆனதற்கும் இடைப்பட்ட 3.5 ஓவர்களில் இந்தியா 27 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஏனெனில், ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியில் கவனம் அதிகம் செலுத்தவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய சேஸின்போது ஹர்ஷித் ராணா 11வது ஓவரிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த துபேவும் 15வது ஓவரிலேயே அவுட்டாக, ஒரு 200+ சேஸின் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் யாரும் களத்தில் இருக்கவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்தது 'விக்கெட் வீழ்ச்சி' பற்றி கவலைப்படாமல் ஆடிய இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இந்தப் போட்டி பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "(இந்தத் தொடரின்) முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி சரியான அணி என்று நினைக்கிறேன். பும்ரா, அர்ஷ்தீப், வருண் மற்றும் 8 பேட்டர்கள் ஆடுவது சரியாக இருக்கும்" என்று கூறினார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் இன்னொரு வீரர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரண்டாவது ஓவர் முடிந்ததுமே இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார் ரிங்கு சிங் பொதுவாகவே விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விழும்போது, விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணிக்கு நிலைத்தன்மையை கொடுக்கும் வகையில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த ரோலை குறிப்பிட்ட சில வீரர்கள் சரியாகச் செய்வார்கள். இந்திய அணிக்கு, விராட் கோலி அவர் இருந்த வரை அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார். இந்த அணியில் அக்‌ஷர் பட்டேல் அப்படியான சூழ்நிலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தார். இந்தப் போட்டியில் அவர் இல்லாததால், ரிங்கு சிங் கையில் அந்த வேலை கொடுக்கப்பட்டது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 9/2 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கினார் ரிங்கு சிங். மிகவும் நிதானமாகத் தொடங்கிய அவர், சரியான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களும் அடித்தார். ஆனால், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், அடிக்கக்கூடிய வகையில் வந்த பந்துகளை மட்டுமே டார்கெட் செய்தார். நன்கு அதிரடி காட்டி ஆட்டத்தை முடிக்கக்கூடியவர் என்பதால் ரிங்கு சிங் பெரும்பாலும் ஃபினிஷராகவே கருதப்படுகிறார். பல போட்டிகளில் அவர் தாமதமாகவே களமிறக்கவும் படுவார். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தையும் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒருசில முறை அந்த வேலையை செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல், ஷிவம் துபே இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபோக்ஸ், ஹென்றி போன்றவர்களின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்திருப்பதால், அவரை ஃபினிஷராகப் பயன்படுத்துவதற்கு அது அணியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் ரிங்கு சிங்கின் 'ரோல்' சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல பௌலிங் ஆப்ஷன்கள் இருந்தும், இந்தப் போட்டியில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியது அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்குவதன் மூலம் நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு எப்போதுமே இருந்தது. கேப்டன் சூர்யாவும் அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 5 முழுநேர பௌலர்களைக் களமிறக்கியதால், அவர்களை மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டார். முதல் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து 14 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்கள். அதில் அவர்கள் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களுக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. "உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று போட்டிக்குப் பின் சொல்லியிருந்தார் சூர்யா. ஒருவேளை உலகக் கோப்பைக்குள் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீளாதபட்சத்தில் அவருடைய இடத்தில் ரவி பிஷ்னாயை சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், நியூசிலாந்து பௌலர்கள் பிஷ்னாய் வீசிய 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் மற்றும் துபே ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் தன்மையையும் இந்தியா இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை. குறிப்பாக பவர்பிளேவில் ஹர்திக் நல்ல தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரை அங்கு பயன்படுத்தாமலேயே விட்டார் சூர்யா. நியூசிலாந்தின் முதல் விக்கெட் ஜோடியும் 8.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் எடுத்து இந்தியாவைப் பின்தங்கவைத்துவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4zr97lrro
  3. 'கனவுப் பாடசாலை' நோக்கிய பயணம் ஆரம்பம் Jan 29, 2026 - 11:50 AM இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார். இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkz2f2hn04kgo29ngonu78ld
  4. 19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: அரை இறுதிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா தகுதிபெற்றது Published By: Vishnu 29 Jan, 2026 | 03:51 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதியில் விளையாட முதலாவது மற்றும் தோல்வி அடையாத அணியாக நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா தகுதிபெற்றது. ஏ குழுவில் ஈட்டிய 4 வெற்றிப் புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸஸ் குழு 1இல் தென் ஆபிரிக்காவையும் இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சவாலுக்கு மத்தியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அணித் தலைவர் ஒலிவர் பீக் குவித்த அபார சதம், சார்ள்ஸ் லெச்மண்ட் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஒலிவர் பீக் 109 ஓட்டங்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல் 56 ஓட்டஙகளையும் வில் மலாஜ்சுக் 46 ஓட்டங்களையும் அலெக் லீ யங் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜக்கீம் பொலார்ட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆர்'ஜய் கிட்டன்ஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸக்காரி கார்ட்டர் 64 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஷுவா டோர்ன் 62 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் குணல் திலோகனி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெச்மண்ட் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆரியன் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹேடன் ஷில்லர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஒலிவர் பீக். https://www.virakesari.lk/article/237278
  5. 'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம் பட மூலாதாரம்,Handout via Reuters படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் 29 ஜனவரி 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின. "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது. மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,Vahid Online படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்) இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது. "இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார். "போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார். மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார். டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, "இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார். "எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார். "செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார். பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன. மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன. டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது. "அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார். குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,Maxar Techn படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது. இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின. இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது. அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார். கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o
  6. Today
  7. ஜெர்மனியில் வாழ்க்கையை பரிபூரணமாக கொன்டு செல்வதற்கே வேலை செய்வதாக சொல்வார்கள். uk இல் வேலைசெய்வதற்கே வாழ்கை (எனவே சம்பளம் சராசரியாக குறைவு ) என்று ஜெர்மனியில் UK க்கு ஏளனமாக சொல்லப்படும் உரையாடல் அனல், uk (மற்ற ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து) அமெரிக்கா வேலை கலாசாரத்தை பின்பற்றி இருப்பதால் பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக, வேலை நேரமும் கூட (அமெரிக்கா போல் இல்லைத்தான்), அதனால் ஏற்கனவே குறைவாக இருந்த சம்பளம் மிகவும் இறங்கி விட்டது. அனால், இப்போதைய வறுமை பழமையாத கட்சி கொள்கையால் (அதன் தொடர்ச்சியால்) தூண்டப்பட்ட, உருவாக்கப்பட்ட செயற்கை வறுமை.
  8. அரசியல் சம்பந்தமான காரணங்களை வைத்துத்தான் புகலிடக் கோரிக்கை வைக்கமுடியும் என்ற இலக்கியவாதிகளின் எண்ணத்தை வாத்தியார் கணக்கு மாற்றிப் போட்டிருக்கிறது. புலம்பெயர் இலக்கிய வாதிகளோடு ஷோபா சக்திக்கு என்ன பிரச்சினையோ? கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. வடமராட்சியில் பனைமுனை என்ற ஊரை எனக்குத் தெரியும். காடல்முனை அறியப்படாத ஊராக இருக்கிறது. எது எப்படியோ காடல்முனை ஆட்களை நம்பவே கூடாது.
  9. அவர் இரத்தம் மாற்றி தூய தமிழ் இரத்தம் பெற்று பாற்கடலில் நீத்தி செந்தமிழன் ஆகியது உங்களுக்கு தெரியாது போலும். அவர் மேடையில் பேசும் செந்தமிழை விட டெலிபோனில் தம்பிகளுடன் பேசும் செந்தமிழ் உயர்வானது.
  10. தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா! புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை (29) தங்கம் அதன் அனல் பறக்கும் விலை ஏற்றத்தை நீடித்தது. அதன்படி, வியாழக்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,600 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது. திங்களன்று முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது, மேலும் இந்த வாரம் இதுவரை 10% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. வலுவான பாதுகாப்பான புகலிட தேவை, உறுதியான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல் மற்றும் பலவீனமான டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டில் 64% ஏற்றத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தங்கம் 27% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (29) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462139
  11. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார். அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியது. அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையில் ஒருவர். கேவலம் கெட்ட தேசியபபட்டியலில் ஒருவர். இன்னொரு ஆள் பெட்டி வாங்கி எல்லோரையும் உள்வாங்கி, எல்லோரும் உள்ளுக்கு வந்து இன்றைக்கு கட்சியை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு துணிவிருந்தால் இந்த மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்டுங்கள். நீங்களே தலைவராக வர முடியுமாக இருந்தால் பரீட்சித்துப் பாருங்கள் எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1462091
  12. 2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு! 2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன. இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2026/1462121
  13. உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி. மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். https://athavannews.com/2026/1462120
  14. கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மதகுரு தெரிவித்துள்ளார். இதை அடுத்து 6 பேருக்கும் பிணை வழங்கியதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1462148
  15. இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு! அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது. பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர் தேவையில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கொள்கை முடிவின் முடிவில் விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, டொலர் குறியீடு அதன் 4-1/2 ஆண்டு குறைந்த அளவிலிருந்து உயர்ந்த பின்னர் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இதுவரை, ரூபாய் மதிப்பு 2% சரிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வரிகளை விதித்ததிலிருந்து இது கிட்டத்தட்ட 5% குறைந்துள்ளது. இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% வளர்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1462133
  16. சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு! மியன்மாரில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் குறித்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த கும்பல், சட்டவிரோத ஆயுதக் குழுக்களைப் பராமரித்தல் மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபடுதல், வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான சீன மற்றும் ஏனைய நாட்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, மோசடி மையங்களில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கல், இலக்குகளை அடையாத ஊழியர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சிறைவைத்தல் மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் சீனாவிற்குள் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீன அரசாங்கம் மியான்மர் இராணுவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் சீனாவிற்குக் கடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். சீன நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது குற்றங்கள் மனிதாபிமானமற்றவை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அக்குடும்பத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இயங்கும் இவ்வாறான மோசடி மையங்களை வேரோடு அழிப்போம் எனச் சீனா சூளுரைத்துள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றம், எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்ட ஒரு கடும் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462134
  17. சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு 29 January 2026 2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 545 முறைப்பாடுகளும், பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து 231 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அத்துடன் 38 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள், 3 கருக்கலைப்புகள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் தொடர்பாக 150 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 20 சிறுவர்கள் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் குறித்து 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுத் தாய்மார்கள் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hiru Newsசிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவ...சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு . Most visited website in Sri Lanka.
  18. சுண்ணக்கல் அகழ்வால் பரபரப்பான தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடக்கு யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்மராட்சி பிரதே செயலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் தலைமையில் நேற்று (28) குறித்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தின் போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுதல், பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkz4tktf04klo29nmv4km5zg
  19. கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும் மொஹமட் பாதுஷா வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர். கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் வட மாகாணத்திலேயே இந்த பாதிப்பு அதிகமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள்; வருடக் கணக்காக உரிமை பற்றியே பேசி வருகின்ற ஒரு பின்புலத்தில் வடக்கின் பல பகுதிகளில் வாழ்வாதார உதவிகள் தேவையான மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் சற்று முன்கூட்டி இடம்பெற்றமையால் மக்கள் வாழ்வில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் அபிவிருத்திகள், நலனோம்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இருக்கவே செய்கின்றார்கள். இந்த விடயத்தில், வடக்கையும் கிழக்கையும் விட மலையக தோட்டப்புற மக்கள்தான் அதிகமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு கிழக்கு மாகாணத்திற்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. கிழக்கு விடுக்கப்பட்ட பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து இது இன்னுமொரு பரிமாணத்தை எடுத்தது. ஆனால், ஒப்பீட்டளவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகக் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. வீதிகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கிலான செயற்றிட்டங்கள், சமூகத்திற்குப் பரவலாகப் பயன்படக் கூடிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறைவாகும். அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதோ இந்தப் பிரதேசத்தை துணையாக, சிங்கப்பூராக மாற்றப் போகின்றோம் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களே தவிர, கிழக்கில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தவிர, மற்ற யாருமே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் கொண்டு வரவில்லை. சமகாலத்தில், தமிழ் அரசியல்வாதிகள் வடக்கைப் போல, கிழக்கிலும் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு செல்வதற்குத் தவறி விட்டனர். அபிவிருத்தி திட்டங்களுக்கான அழுத்தங்களையாவது அவர்கள் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் ஊடாக அபிவிருத்திகள் பெரியளவில் கிழக்கிற்கு வந்து சேரவில்லை எனலாம். இப்போது, நிலைமைகள் சற்று மாறி வருகின்றது. புதிய அரசாங்கம் எல்லா மக்களுக்கும் அபிவிருத்தியை சமமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றது. இருப்பினும், ஒரு காலத்தில் கிழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவதில்லையா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது. ஆனால், வேறு அரசியல் மற்றும் பரப்புரை சார் காரணங்களுக்காக வட மாகாணத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு, பிம்பம் கட்டியெழுப்பப்படுகின்றதா? என்றும் அந்த விடயத்தில் கிழக்கு இரண்டாம் பட்சமாக நோக்கப்படுகின்றதா? என்பதும் ஒரு சாதாரண பொது மகனுக்கு எழுகின்ற சந்தேகமாகும். தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவையும் அதனூடாக சர்வதேச சமூகத்தை ஆசுவாசப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது. 13ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் ஒரு படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்த நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருப்பது யதார்த்தமானதே. இந்தப் பின்னணியில் ஒரு அவதானிப்பு இருக்கின்றது. அதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது, அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்ற போதும், வடக்கிற்கான விஜயங்கள் கிழக்கிற்கான விஜயங்களைவ விட அதிகமாக இடம்பெற்றதை, இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அரசுக்கு எதிரான தமிழ்த் தரப்பின் அழுத்தத்தைக் குறைப்பது, இந்தியாவைக் கையாள்வது, தமிழ் மக்களை மனம் குளிரச் செய்வது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு மாகாணத்திற்கு முக்கியத்துவம், அந்த நிர்ப்பந்தம் இல்லாத மாகாணத்திற்கு வேறு ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. வடக்கிற்கு அபிவிருத்தி செய்தால் எமக்கும் தர வேண்டும் என்று பொறாமைக் கண்ணுடன் கிழக்கு மக்கள் கேட்கின்றார்கள் என்று இதனைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் அதிக அபிவிருத்திகள் இடம்பெற்றபோது, நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. கிழக்கில் அபிவிருத்திகள் பெருவீச்சில் இடம்பெற்றபோது, வடக்கு, மலையக மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை. எனவே, இப்போது வட மாகாணத்திற்கோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளுக்கோ அதிக கவனம் செலுத்தப்படுவது கிழக்கு போன்ற ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனால், அதே கவனம் தங்கள் மீது ஏன் செலுத்தப்படவில்லை என்று அவர்களது மனக் கிடக்கை நியாயமானதுதானே.?! வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு வாழ்கின்றனர். அங்கு நடக்கின்ற விடயங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இதில் மக்கள் சேவைக்கு அப்பால் ஆளும் கட்சிக்கு ஒரு அரசியலும் இருக்கின்றது எனலாம். கிழக்கில் நிலைமைகள் வேறு மாதிரி உள்ளன. கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமாகும். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்களவர்களும் கணிசமாக உள்ளனர். எனவே, வடக்கில் செய்கின்ற அரசியலைக் கிழக்கில் அதே பாணியில் செய்ய முடியாத ஒரு சிக்கல் கடந்த அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே என்.பி.பி. அரசாங்கமும் இருப்பதாக கருதுவதற்கு இடமுள்ளது. எது எப்படியாயினும், நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக பகிரப்படப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் வடக்கும், கிழக்கும் இரு கண்கள் போன்று பார்க்கப்பட வேண்டும். கிழக்கிற்கும் அபிவிருத்திகள், அரச அலுவலகங்கள் வர வேண்டும். பாரிய செயற்றிட்டங்கள், முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கைப் போல, கிழக்கிற்கும் அரச தலைவர்கள், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக அபிவிருத்தியில் பாரிய தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளது. மக்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடக்கிற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்திற்குக் கொடுக்கப்படுவதாக ஆறுதல் கொள்ள முடியாத நிலைமைகளே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் சுமார் 75,000 ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே தமிழ், சிங்கள மக்களுக்கும் காணிப் பிணக்குகள் உள்ளன. கிழக்கைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். பல நூறுபேர் ஒவ்வொரு வாரமும் கடவுச்சீட்டு எடுப்பதற்காக நெடுந்தூரம் செய்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் கிழக்கில் ஒரு அலுவலகமாவது இதுவரை திறக்கப்படவில்லை? கிழக்கு மாகாணத்திலும் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிறுவப்படுவதுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களும் தொழில்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பெரிய கனவுகளோடும் பெரும் பொருட்செலவிலும் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலனில் கால்வாசியைக் கூட பெற்றுத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றுக்கும் உதவாத ஒரு செயற்றிட்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஏனைய துறைமுகங்களை மேம்படுத்துவது போல, அனுர அரசாங்கம் ஒலுவில் துறைமுகத்தையும் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. திருகோணமலை துறைமுகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க விடாமல் தடுப்பதுடன், நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் இத்துறைமுகமும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். வாழைச்சேனை காகித ஆலை, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என கிழக்கில் பல தொழிற்சாலைகள் ஒன்றில் மூடப்பட்டுள்ளன அல்லது தூர்ந்து போயுள்ளன. இவற்றை மறுசீரமைக்கவும் இதுபோன்ற திட்டங்களைக் கிழக்கிலும் அமுல்படுத்தவும் வேண்டிய கடப்பாட்டைச் சமத்துவம் பேசும் என்.பி.பி. அரசு கொண்டுள்ளது. கிழக்கிற்கான புகையிரத பாதையை பொத்துவில் வரைக்கும் விஸ்தரிப்பதற்கான செயற்றிட்டத்தை அனுர அரசு மேற்கொள்ளுமாயின், அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த வாக்கின் பலனை அடுத்த தலைமுறையிலும் உணர்வார்கள். இன்று நாட்டில் எத்தனையோ அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றைக் கணிசமான வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால், பெயருக்காவது கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தவில்லை. எனவே கிழக்கில் உள்ள மக்கள் சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்தே குருணாகல் அல்லது மாத்தறை நெடுஞ்சாலையில் ஏற வேண்டியிருக்கின்றது. கிழக்கு மக்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது என்பதை இந்த அரசாங்கமாவது உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கிழக்கு மக்கள் கருதுவது நியாயமில்லை என்று எந்த நியாயவாதியாவது கூற முடியுமா? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கும்-கவனிக்கப்பட-வேண்டும்/91-371643
  20. ’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீதான-தாக்குதலுக்கு-துணைபோக-மாட்டோம்/50-371716
  21. இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
  22. அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது adminJanuary 29, 2026 அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. அதனால் அவர்களை கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டு , அதனை குழுக்கள் கூடாக கண்காணிக்கின்றோம் என தெரிவித்தார். குறித்த உறுப்பினரால் சபையில் கடுமையான அமளி ஏற்பட்டு , குறித்த உறுப்பினரின் கருத்துக்கு தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தமது கண்டனங்களை சபையில் பதிவு செய்தனர். பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் 20 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அந்நிலையில் , பிரஜாசக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227802/
  23. அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு கண்டனம். adminJanuary 29, 2026 மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது. பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும். பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும். அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது . பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன் தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/227804/
  24. சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 09:18 AM 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237293

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.