stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 11:12 AM இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய புதன்கிழமை (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/237785
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! Feb 4, 2026 - 05:44 PM மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது. எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cml7zo5a00007356n66zcofgo
- Today
-
குட்டிக் கதைகள்.
sonretodSp2753197 mai5tgm0m6tht76g49hcfm5191al559fm6t5hhm249 · அன்பான மனைவி ! அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்! மனைவி - பாத்திரம் கழுவ சொன்னனே? கழுவி விட்டீர்களா! கணவன் - இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே? மனைவி - சரி காய் வெட்டி விட்டீர்களா? கணவன் - அதுக்குள்ளதான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே ! மனைவி - சரி வெங்காயம் பூண்டு கட் பண்ணியாச்சா? கணவன் - அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே. மனைவி - சரி அரிசியாவது ஊற வைத்தாயா ! கணவன் - நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஸிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே! மனைவி - சரி அதையாவது செஞ்சிங்களா? கணவன் - டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக சொன்ன சொன்னாயே! மனைவி - சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா ! கணவன் - இ..ல்..ல.. மனைவி - சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க. கணவன் - காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான் எனக்கு டீ போட்டுட்டு இருக்கேன். மனைவி - ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
உலகம் எங்கும்... இன்னும் நிறைய சிப்பிகள் மூடியபடி உள்ளது. அவற்றிலும் நிறைய முத்துக்கள் இருக்கலாம். ஆனால்... அந்த முத்தை எடுக்க, அவர்கள் விடுகிறார்கள் இல்லை.- 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
சிப்பிக்குள் மூடியிருந்த முத்து ஒன்று வெளிப்பட்டுவந்து பரிசும் பெற்றது. வாழ்த்துக்கள்!!🙌- கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
இவர் அண்மையில் சொல்லி இருந்தார் , நேட்டோ இராணுவ நாவைகையின் போது லிபிய அரசின் தங்க காணாமல் போய்விட்டதாக. நேரடியாக மேற்கு நாடுகளை சுட்டவில்லை. அனல் , நர்\மறைமுகமாக சாடி இருந்த்தார் மேற்கு நாடுகள் பங்கு இருக்கிறது என்று. அதன் பின் இந்த கொலை.- சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
தமிழினத்தின் துன்பங்களுக்கு தீர்வுவரும், விடிவுவரும். அடுத்த பொங்கல், வருடபிறப்பு, தீபாவளி என்று ஆறுதல் சொல்லச் சம்பந்தரும் இல்லையே!😭- 4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
தற்போதுள்ள சிறுவர்களின் அறிவும், திறனும் முதியோர்களிடம் இல்லை. ஆதாரம் இன்றுள்ள தமிழினத் தலைவர்கள். இது தெரிந்துதான் தலைவர் சிறுவர்களை நீதிபதிகளாக நியமித்தார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ரசோதரன் குரு தூக்கத்தில் இருந்தால் யாராவது தட்டி எழுப்பி விடுங்கோ😁...........இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு....................- 4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
எங்கடையல் டான்ஸ் பழகுவதிலும் சோசல் மிடியாக்களில் பொழுதை கழிப்பதையே விரும்புகினம் அண்ணா................ நீச்சல் பழகி இருப்பது எவளவு நல்லம் என்று பலருக்கு தெரியாது.............. இந்த சிறுவவை பாராட்டியே ஆகனும்........................- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ் மாவட்டத்தில் கழுதைகள் கூடாரம். சுதந்திரம் என்றால் என்னனவென்று புரியாது. கற்பூர வாசனையும் தெரியாது.- சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
"இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்!" - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! 04 Feb, 2026 | 02:09 PM காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் (4) அவர்கள் தமது போராட்ட பந்தலில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமலாக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள். அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். இன்று, வவுனியா நகரில், இந்த வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. இந்த அநீதியின் வேர்கள், சொல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது. காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை. சொல்லப்படாத உண்மை, பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்த தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்த பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகிறோம். எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/237803- ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி Feb 4, 2026 - 09:00 AM நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாற்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது அதற்காக "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml7gzaqi04swo29nlnfz4jvf- சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் Feb 4, 2026 - 01:20 PM நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cml7q97j404t3o29nppugd9gi- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலவர், என்ன ஐயா இது? மாட்டை பற்றி எழுத சொன்னால், மரத்தை பற்றி கூட எழுதாமல், மரம் நிற்கும் வளவில் என்ன களைகள் வளர்கிறது என எழுதுகிறீர்கள்😂. சம்பந்தர் எப்படி பட்ட நன்றிகெட்ட மனிதர் என்பதற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை. நான் கேட்டது என்ன என்ற நினைவுபடுத்தல் மறுபடியும். நாம் விவாதிப்பது புலிகளை அழித்தமைக்கு சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார். மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார். ஆதாரம் இருந்தால் போட்டு விடுங்கள்.- 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை Feb 4, 2026 - 12:45 PM 78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 'இலங்கை கடற்படைக் கப்பல் சயுர' போர்க்கப்பலில் இருந்து இந்த மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் 25 வேட்டுக்கள் தீர்க்கும் இந்த கௌரவம், தேசத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml7p19zd04t2o29nkn0hq7xp- ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது Published By: Vishnu 04 Feb, 2026 | 05:35 AM அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை (3) சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது. இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237764- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம் 03 Feb, 2026 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழரசுக்கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது இவ்வாறான பின்னணில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக பதவி வகிக்க கூடாது என அவருக்கு கட்சியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து எஸ். சிறிதரன் அண்மையில் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/237716- 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி Feb 4, 2026 - 08:03 AM சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன. 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன், முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். https://adaderanatamil.lk/news/cml7eyg2v04suo29nalv1s474- புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?
கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளருமா? புற்றுநோய் மருத்துவர் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப்பிரியா பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக புற்றுநோய் தினமான இன்று மக்கள் மத்தியில் அதுகுறித்து இருக்கக்கூடிய அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க உதவும் வகையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. புற்றுநோய் வருவது எப்படி? ஒரு சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாற்றமடைவது எப்படி? தொடர் மலச்சிக்கல் புற்றுநோயின் அறிகுறியா? கீமோதெரபி பற்றி நிலவும் தவறான கருத்துகள் உள்பட அவர் பகிர்ந்த பல்வேறு அறிவியல்பூர்வமான தகவல்களை விரிவாக பார்க்கலாம். புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மனித உடலில் செல்கள் தொடர்ந்து பிரிகின்றன. செல்கள் இரண்டாகவும், இரண்டு செல்கள் நான்காகவும் பெருகி உறுப்புகள் உருவாகின்றன. இயல்பான நிலையில், செல் பகுப்பு ஒரு கட்டுப்பாடான செயல்முறையின் படி நடக்கிறது. ஆனால், சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடான முறை செயலிழக்கும் போது, செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகத் தொடங்குகின்றன. இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. இந்தக் கட்டியையே புற்றுநோய் என்று அழைக்கிறோம். கட்டுப்பாடற்ற செல் பகுப்பால் உருவாகும் கட்டிகளை, சாதாரண கட்டிகள் (Benign Tumors), புற்றுநோய் கட்டிகள் (Malignant Tumors) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சாதாரண கட்டிகளில் இருந்து புற்றுநோய்க் கட்டிகள் வேறுபட்டவை. புற்றுநோய் கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை. பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை. புற்றுநோய் செல்களால் ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்குப் பரவ முடியும். இதை மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம். நோய் உருவான இடத்திலேயே தங்கியிருப்பது முதல் நிலை. ஆனால், மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் அது முற்றிய நிலை. சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறுமா? படக்குறிப்பு,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன் சாதாரண கட்டிகள் பொதுவாக அப்படியே தொடரும். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யக்கூடும்? சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? செங்கிஸ் கான் இந்தியாவை கைப்பற்றாதது ஏன்? - 'தடையாக இருந்த காண்டாமிருகம்' ராணுவ பயிற்சி அளித்த தமிழர்: இந்தியாவில் 7 கிராமங்கள் இணைந்து தனி நாடாக இயங்கிய வரலாறு End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால் ஆண்டுக்கணக்கில் இருக்கும் சாதாரண கட்டிகள் திடீரென பெரிதாகத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவது மிகமிக அரிது என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சார்கோமா (Sarcoma) வகையில் ஏற்படலாம். நூறு பேரில் ஒருவருக்கு இத்தகைய மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அவ்வப்போது கட்டியைப் பரிசோதித்து அதன் நிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அது தாமதமாகக் கண்டறியப்படுவதே பல சவால்களுக்குக் காரணமாக உள்ளது. ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப் பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,Getty Images பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம்? சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பெருங்குடல், மலக்குடல் ஆகியவை செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதிகளாகும். வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், போதிய காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பது, அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடலுக்கு அதிக இயக்கத்தைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், தொடர் மலச்சிக்கல், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு போன்ற காரணங்களால் மலக்குடல் புற்றுநோய் வரலாம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு மிகக் குறைவு. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கும். மலக்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்: ரத்தப்போக்கு: மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் மிக முக்கியமான அறிகுறி. ஆசனவாயில் ரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்தசோகை: ரத்தசோகை, மூச்சுத்திணறல், கால் வீக்கம் திடீர் எடை இழப்பு: காரணமின்றி திடீரென எடை குறைதல் ஓர் எச்சரிக்கை அறிகுறி. மலம் கழித்தலில் மாற்றங்கள்: மலத்தை வெளியேற்றுவதில் சிரமம், மலச்சிக்கல் போன்றவையும் முக்கிய அறிகுறிகள் ஆகும். பட மூலாதாரம்,Getty Images வயிற்றுப் புண் புற்றுநோயாக மாறுமா? பெருங்குடல் புண்கள் மற்றும் இரைப்பை புண்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும். பெருங்குடலில் காணப்படும் புண்களில் 99% புற்றுநோயுடன் தொடர்புடையதாகவே உள்ளன. இவை மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டியவை. இரைப்பையில் காணப்படும் புண்களில் பெரும்பாலானவை சாதாரண புண்களே. அவற்றை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அப்படி கவனிக்காமல் விட்டால், பல ஆண்டுகள் கழித்து அவை புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியமுள்ளது. சாப்பிடுவதில் சிரமம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபியால் கொட்டும் முடி மீண்டும் வளருமா? புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன. இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை. கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கதிரியக்க சிகிச்சை முறை. கீமோதெரபி செய்கையில் கொட்டும் முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். அதற்குப் பதிலளித்த மருத்துவர் ஐயப்பன், "அதைச் செய்யும்போது முடி கொட்டினாலும், சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மீண்டும் நிச்சயம் நன்றாக வளர்ந்துவிடும்" என்றார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்ற அவர், "தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகள். தடுப்பூசிகள், தொடர் மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக" அவர் தெரிவித்தார். நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறைகள் புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மருத்துவர் ஐயப்பன், புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது முழுமையாகக் குணப்படுத்துவதைச் சாத்தியமாக்கும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0ke03edx7do- நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள் Published By: Vishnu 04 Feb, 2026 | 04:24 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்மு ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை. எனினும் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி , தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும். இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/237756#google_vignette- 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை) Feb 4, 2026 - 07:44 AM 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார். https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நான் சீனியில் செய்த கடல் நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் பெண் : உன் காதலி நானே காதல் தானே ஆனதே பெண் : { நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் } (2) பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு பெண் : மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா பெண் : நான் புன்னகை செய்தால் போதும் அட திசைகள் உடைந்திட கூடும் என் நற்பமே என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான் பெண் : என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் பல பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே பெண் : மென் காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும் பெண் : இனி நாளும் என் குரலில் பல கூ கூக்கள் கூவும் பெண் : கமா கமா இது போதுமா…என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..........! --- நான் முத்தம் தின்பவள் ---- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
'எமது வீட்டுக்குள் வந்து எங்களை தாக்குவது போன்றது' - அடையாளம் தெரியாத குழுவால் தாக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 3 பிப்ரவரி 2026 ''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்'' ''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது. தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 'ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை' இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' ''இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்'' என்கிறார் ரத்ன கமகே. படக்குறிப்பு,இலங்கை மீனவர் சுரங்க நிசல் ''அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்'' என்கிறார் ரத்ன கமகே. எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். ''எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்'' என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு,தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்? இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது. வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் - தொடுவாவ பிரதேசத்தின் 'தினிதி துவ' பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் 'சந்துன் புதா' ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். 'தினிதி துவ 1' மற்றும் 'தினிதி துவ 2' ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர். இந்திய பாதுகாப்பு பிரிவினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். "இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்" இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார். ''சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.'' என்கிறார் சுரங்க நிசல். அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். ''இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். 'அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்' என நான் கூறினேன். 'எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.' என கூறினேன்'' ''அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்'' ''எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், 'என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று கூறினேன். அதன்பின்னர் 'இவர்களிடம் ஒன்றும் இல்லை' என கூறி விடுவித்தார்கள்'' தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ''கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை'' என குறிப்பிட்டார். ''அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்'' இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார். இலங்கை கடற்படை கூறுவது என்ன? கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். ''இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்." ''ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.'' ''நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்'' என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது. இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrzwlpd713o - 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.