Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இ.மி.ச பதிலான புதிய நிறுவனங்களுக்கான முகாமையாளர்கள் நியமனம் Mar 8, 2026 - 03:36 PM கலைக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக புதிதாக நிறுவப்பட்டுள்ள 6 நிறுவனங்களில், 3 நிறுவனங்களுக்காகப் புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கை மின் உற்பத்தி (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்னவும், தேசிய மின் கடத்தல் கட்டமைப்பு சேவை வழங்குநர் (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். எஸ். வெத்தசிங்கவும், மின் விநியோக இலங்கை (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் கே. எஸ். ஐ. குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் கடந்த 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மின்சார சபை ஊழியர் நிதிய (தனியார்) நிறுவனம் மற்றும் எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றுக்கு இதுவரை புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதால், அந்த சபையின் கீழ் ஊழியர்களால் நிறுவப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் ரத்தாகின்றன. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் புதிய புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட வேண்டும். தற்போது மின்சார சபையிலுள்ள 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், தமது புதிய நிறுவனங்களின் கீழ் புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இ.மி.ச பதிலான புதிய நிறுவனங்களுக்கான முகாமையாளர்கள் நியமனம்
  3. பெண்களை வெறும் பயனாளிகளாக கருதாமல் நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருத வேண்டும் - சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் 07 Mar, 2026 | 04:00 PM குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது. எமது அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, பெண்களை வெறும் பயனாளிகளாக மாத்திரம் கருதாமல், நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருதி, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக, "Rights. Justice. Action. For ALL Women and Girls " (அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமையும் நீதியும் கிடைப்பதற்கான செயற்பாடு) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைச் சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் உண்மையான உயிர்நாடியாக எமது பெண்களே விளங்குகின்றனர். குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது. எமது அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, பெண்களை வெறும் பயனாளிகளாக மாத்திரம் கருதாமல், நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருதி, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எமது கொள்கைத் திட்டத்தில் பெண்களுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சில முக்கிய விடயங்களை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன், ஒரு இல்லத்தரசியாக அவர் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பை மதித்தல், பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் அவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல் என்பன எமது முக்கிய இலக்குகளாகும். அத்துடன் பொதுப் போக்குவரத்து, பணியிடம் மற்றும் குடும்பத்திற்குள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும், தேசிய மட்டம் முதல் பிரதேச மட்டம் வரையிலான தீர்மானங்களை இயற்றும் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பின்னணியை உருவாக்குவதிலும், பெண்களின் ஊட்டச்சத்து, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டங்களைச் செயற்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். பெண்கள் என்பவர்கள் இரக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் அறிவு, சகிப்புத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மிக்க சமூகப் பங்காளிகளாவர். ஒரு பெண் அச்சமின்றி வீதியில் பயணிக்கக்கூடிய, அவளது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய, அதேவேளை கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு "வளமான நாட்டை" உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்த சர்வதேச மகளிர் தினம், இந்நாட்டுப் பெண்கள் அனைவரதும் நற்கனவுகள் நனவாகும், அவர்களது கௌரவத்தை உலகுக்கு பறைசாற்றும் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக அமையட்டும் என நான் மனதாரப் பிரார்த்திக்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களை வெறும் பயனாளிகளாக கருதாமல் நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருத வேண்டும் - சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர்
  4. மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை! Mar 6, 2026 - 10:47 AM இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு செயலிழந்தது. இதனால் ஆறு நாட்களுக்கும் மேலாகக் குடும்பத்தாருடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் நேற்று (05) இந்தியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளனர்." அவர்களின் குடும்பப் பொருளாதார நிலமையைக் கருத்தில் கொண்டு, அவர்களை விரைவாகத் தாயகம் அழைத்து வரவும், வாழ்வாதாரமாக விளங்கும் படகு மற்றும் வலைகளை அவர்களிடமே ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் உதவி புரிந்த கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் உறவினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!
  5. இதில் பார்த்தீர்கள் என்றால் சிரியாவில் பெண்கள் சுதந்திரமாக ஆடை அணிந்தனர். ஈரானில் முல்லாக்களின் மத ஆட்சியில் பெண்கள் கல்லால் அடித்து கொல்லபட்டனர் யார் புக்காவால் மூடவில்லை என்பதை பொலீஸ் கண்காணித்து கொண்டிருந்தது.மதவாத சட்டத்தால் மக்கள் ஒடுக்கபட்டனர் ஆனால் சிரியா தாக்கபட்ட போது இலங்கை இந்தியாவில் போராட்டம் நடக்கவில்லை திருமாவளவன் வைகோ எதிர்க்கவில்லை
  6. Kafir ளான இந்தியா ரஷ்யா சீனா மூன்றும் சேர்ந்து அல்லாவால் கைவிடபட்ட தங்களது ஈரானை காப்பாற்றிவிட மாட்டார்களா என்பதே இலங்கை இந்திய முஸ்லிம்களினதும் தமிழ் ஆய்வாளர்களினதும் தற்போதைய ஏக்கமாக உள்ளது
  7. ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் ஈழத் தமிழர்களும் - நிலாந்தன் ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம். ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. இந்தக் கதைக்குள் இருக்கும் செய்தி என்னவென்றால், கொல்வது என்று தீர்மானித்தால் அதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இப்பொழுது ஈரானில் நடக்கிறது. முன்பு ஈராக்கில் நடந்தது; லிபியாவில் நடந்தது. ஈரானை அடிக்க வேண்டும், அதன் எதிர்ப்பை நசுக்க வேண்டும். ஈரான் கீழ்ப்படிந்தால் மேற்காசியா சுருண்டு விடும். எனவே ஈரானை நசுக்க வேண்டும். ஈரான் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஈரான் ஏன் அணுகுண்டை வைத்திருக்கக் கூடாது? அது பாரசீக நாகரிகத்தின் வழித்தோன்றல். பாரசீக நாகரிகமானது இப்போதிருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விடவும் மூத்தது. ஒரு மூத்த நாகரீகம் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது? இதுதொடர்பாக ஓமானின் அனுசரணையோடு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பீட்டர் கிர்னஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். ஓமான் நாட்டின் வெளிவிவிகார அமைச்சின் ராஜதந்திர உதவியாளரான அவர் கூறுவதின்படி, ஈரான் அமெரிக்காவோடு உடன்பாட்டுக்குச் சம்மதித்த பின்னர்தான் அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்கிறது. அதாவது ஈரான் அணுகுண்டு உற்பத்தியைக் கைவிடும் விடயத்தில் அமெரிக்காவோடு ஏதோ ஒரு சமரசத்துக்கு வரத் தயாராக இருந்தது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருந்த ஒரு பின்னணியில்தான் ஈரான் தாக்கப்பட்டிருக்கிறது. ஆயின், இங்கே பேச்சுவார்த்தைகள் எனப்படுகின்றவை ஈரான் உஷார் நிலையில் இருப்பதைத் தடுக்கும் தந்திர நோக்கத்தைக் கொண்டவையா? ஈரானின் அதிபர் இரும்பு கரம் கொண்டு நாட்டை ஆண்டார் என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. பெண்களுக்கு உரிமை இல்லை. அரச எதிர்ப்பாளர்கள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார்கள், உலகில் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடு…. போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவற்றில் உண்மையுண்டு. ஆனால் அது ஈரானியர்களின் பிரச்சினை. அதற்காக ஈரானிய அதிபரை தண்டிப்பதற்கு வெளி நாடுகளுக்கு உரிமையும் இல்லை. அதேசமயம் போரின் தொடக்க நாளில் சில நிமிடங்களிலேயே கொமெய்னியும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படும் அளவுக்கு ஈரான் பலவீனமாக இருந்திருக்கிறது. அதன் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் வலிமையாக இருந்திருக்கின்றன. ஈரானின் வலிமையை உடைப்பதில் அதன் உள் எதிரிகளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. உள்ளே இருப்பவர்கள் வழங்கிய தகவல்களை வைத்துத்தான் கொமெய்னியின் தலை குறி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தானே மூடும் சமூகங்கள் தம்மைத் தாமே காட்டிக் கொடுப்பவர்களை உற்பத்தி செய்கின்றன. எதுவாயினும் கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் அமெரிக்கா தன்னை உலகின் ஏகப் பெரு வல்லரசு என்று நிரூபிக்கும் இரண்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. முதலாவது வெனிசுலாவின் அதிபரை அவருடைய நாட்டுக்குள் இறங்கித் தூக்கியது. இரண்டாவது, ஈரானின் அதிபரும் உட்பட தீர்மானிக்கும் அதிகாரமுடைய உயர்மட்டத் தலைவர்களை போர் தொடங்கிய அன்றே தீர்த்துக் கட்டியது. இறமையுள்ள நாடு ஒன்றின் தலைவரை அந்த நாட்டுக்குள் இறங்கிக் கைது செய்கிறார்கள். மற்றொரு நாட்டின் தலைவரை குண்டு போட்டுக் கொலை செய்கிறார்கள். வெளிநாடுகளின் வான்பரப்புக்குள் ஆளில்லா விமானங்களை அத்துமீறி அனுப்பி ஆட்களைக் கொல்லுகிறார்கள்; இலக்குகளை அழிக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், இறையாண்மை எங்கே இருக்கிறது ? சுதந்திரம் எங்கே இருக்கிறது? நாடுகளின் ஆள்புல எல்லைகளுக்குப் பொருள் என்ன? 10 கோடி மக்களை கொண்ட ஈரானுக்கும் இது பொருந்தும். சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். இலங்கைத் தீவின் 40 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானியக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். அமெரிக்கா எதுவரை தான் வரமுடியும் என்பதனை அங்கே காட்டியிருக்கிறது. சிறிய இலங்கைத் தீவு சுதந்திரம், இறைமை என்றெல்லாம் வீரம் காட்டவில்லை. இந்தியா யாருடைய பக்கம்? இந்தியாவின் மௌனம் அதன் ராஜதந்திரமான வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? ஈரானுக்கு அவர்கள் ஆதரவில்லை என்பதைத்தான். பாரசீகத்தைப் போலவே இந்திய பேரரசும் ஒரு பெரிய பண்பாட்டு நிலப்பரப்பு . ஆனால் ஒரு நாட்டின் ஆல்புல எல்லைக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரைக் கொல்லும் காட்டு விதியை இந்தியா ஆதரிக்கின்றதா? எதிர்கின்றதா? இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை? ஒரு பகுதியினர் ஈரான் தாக்கப்படுவதை ரசிக்கிறார்கள். ஏனென்றால் ஈரான் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. ஈரான் மட்டுமல்ல, கியூபா, வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் ஐநாவில் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்கின்றன. கியூபா எப்பொழுதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் ஒரு நாடு. அங்கே மருத்துவ, பொருளாதாரத் தடை காரணமாக முதியவர்கள் இறந்து கொண்டிருப்பதாக ஒரு சிறுமி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வாசிக்க கிடைத்தது. பொருளாதாரத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஈழத் தமிழர்கள் கியூபாவின் பக்கம்தான் நிக்க வேண்டும். ஆனால் ஐநாவில் கியூபா ஈழத் தமிழர்களோடு நிற்பதில்லை. இன்னுமோர் உதாரணம். மேற்காசியாவில் அரசற்ற குர்திஷ் மக்கள் வெவ்வேறு நாடுகளால் பங்கிடப்படுகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் இப்பொழுது அமெரிக்காவின் உதவியோடு அந்தந்த அரபு நாடுகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் அறநெறியின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்க வேண்டுமா? அல்லது எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று ராஜதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமா? எது சரி ?அறமா? விடுதலையா ? இந்த இடத்தில் அறமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அரசற்ற சிறிய மக்கள் கூட்டத்துக்கு இதுதான் விதி. ஏன் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் இதுதான் விதி. போர் என்று வந்தால் அங்கே தர்மம்,நீதி நியாயங்கள் இருக்காது. வெற்றியை உறுதிப்படுத்துவது என்ற ஒரே இலக்கு மட்டும்தான் இருக்கும். அது ஒரு காட்டு விதி. அது நாகரீகமடைந்த மனிதர்களின் விதியல்ல.மனித குல நாகரீகம் என்பது போரைத் தவிர்ப்பது. ஆனால் விலங்குகளின் விதி அதுவல்ல. அங்கே வெல்வதுதான் பிழைக்கும். அதுதான் காட்டு விதி. இங்கே தொடக்கத்தில் கூறப்பட்ட சிறுவர் கதையில் இருப்பது அதுதான். ஓநாய்கள் பசியோடு திரியும் காட்டுக்குள்தான் ஆட்டுக் குட்டிகளும் வாழ்கின்றன; ஈழத் தமிழர்களும் வாழ்கிறார்கள். ஓநாய்களிடமிருந்தும், சிங்கங்களிடமிருந்தும், ட்ராகன்களிடமிருந்தும் ஈழத் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டும். தமது போராட்டத்தின் நீதிக்கும், தமது ராஜதந்திர இலக்கிற்கும் இடையே ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டும். கிறீஸ்து தன் சீடர்களுக்குப் போதித்ததுபோல”இதயத்தில் புறாக்களைப்போல கபடமற்றவர்களாகவும். செயலில் பாம்புகளைப்போல எச்சரிக்கையுணர்வோடும்” போராட வேண்டும். https://www.nillanthan.com/8178/
  8. கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம் March 8, 2026 10:29 am ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்… இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்த தம் உறவுகளுக்காகவும், மறுக்கப்பட்ட நீதிக்காகவும் வீதியோரக் கொட்டகைகளில் இன்றும் ஓயாது போராடும் வலிமை மிக்க பெண்களின் குரல்களை உலகம் கேட்கத் தவறிவிட்டதா? கண்ணீரை ஆயுதமாக்கி, நீதியைத் தேடி அலையும் அந்தத் தாய்மார்கள் மற்றும் கணவனைப் பறி கொடுத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியலை மையப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் நீதிக்காகப் போராடும் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக ஆதவன் வானொலியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘விசேட தொகுப்பு’ இது.. இன்று சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளும், வெற்றிகளும் கொண்டாடப்படும் வேளையில், ஈழத் திருநாட்டின் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மௌனமான, ஆனால் வலிமையான ஒரு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமல்ல; இது இழந்த தங்கள் உறவுகளுக்காகவும், பறிபோன நீதிக்காகவும் வீதியில் இறங்கிப் போராடும் பெண்களின் குரல். முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், அந்த யுத்தம் பெண்களுக்குத் தந்த பரிசு ‘கைம்மை’. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் யுத்தத்தினால் கணவனைப் பறி கொடுத்த சுமார் 90,000-க்கும் அதிகமான பெண்கள் இன்று தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கிறார்கள். நேற்றுவரை வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று தங்கள் குடும்பத்தைக் காக்கவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வயல்களிலும், ஆலைகளிலும் வியர்வை சிந்துகிறார்கள். சமூகக் கட்டமைப்பு மாற்றமடைந்தாலும், “கணவனை இழந்தவள்” என்ற சமூகப் பார்வை இவர்களை இன்னும் காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் வீதியோரங்களில் அமர்ந்து கண்ணீர் மல்கப் போராடும் பெண்களை நீங்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் காணலாம். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள். தங்கள் கைகளில் மகனின் அல்லது கணவனின் புகைப்படத்தை ஏந்தியபடி, “எங்கள் உறவுகள் எங்கே?” என்று இவர்கள் கேட்கும் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இந்தத் தாய்மார்களில் பலர், நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போதே உயிரைத் துறந்துவிட்டார்கள். போராட்டக் களத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மறைந்த செய்திகள் நம் மனதை உலுக்குகின்றன. சர்வதேச மகளிர் தினத்தில் இவர்களுக்கான நீதி எங்கே என்ற கேள்வி இன்றும் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. யுத்தத்தின் வடுக்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தப் பெண்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. நுண்கடன் என்ற பெயரில் சிக்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், இன்று அந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை வரை தள்ளப்படும் அவலம் தொடர்கிறது. தனது குடும்பத்தைப் பராமரிக்க வழியின்றி, அன்றாடத் தேவைக்காகப் போராடும் இந்தப் பெண்களுக்கு முறையான வாழ்வாதாரத் திட்டங்களோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனைகளோ போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனாலும், இந்தப் பெண்கள் சோர்ந்துவிடவில்லை. நில மீட்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி, வடக்கு – கிழக்கில் பெண்களே இன்று முன்னிலையில் நிற்கிறார்கள். கேப்பாபுலவு முதல் முள்ளிவாய்க்கால் வரை நீதிக்கான தீபத்தை ஏந்தியிருப்பது இவர்கள்தான். இலங்கையின் வரலாற்றில் பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டுமன்றி, சமூகத்தின் அரசியல் மற்றும் நீதித்துறை மாற்றங்களுக்கான முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் வாழ்த்துகளுடன் முடிந்துவிடக் கூடாது. வடக்கு – கிழக்கில் நீதிக்காகப் போராடும் இந்தப் பெண்களின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானது பரிதாபமல்ல, அங்கீகாரம் மற்றும் நீதி. அவர்களின் போராட்டம் வெற்றிபெறும் நாளில்தான் உண்மையான மகளிர் தினம் அர்த்தப்படும். நீதிக்காகப் போராடும் அனைத்துத் தமிழ் பெண்களின் உறுதிக்கும் oruvan இணையத்தளத்தின் வீர வணக்கங்கள் தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/
  9. முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் March 8, 2026 3:30 pm சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ‘எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்விக்கு உரிய பதிலும், சர்வதேச ரீதியிலான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. https://oruvan.com/massive-protest-in-mullaitivu/
  10. கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; ரவிகரன் கடிதம்! முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும், 2026.03.06 ஆம் நாளாகிய நேற்று தொடக்கம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/363276/
  11. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கொலை; உறவினர்கள் சாலை போராட்டம்.! கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் வசித்து வந்த சிவக்குமார் என்ற இலங்கை தமிழர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களின் வீட்டை கொளுத்திய உயிரிழந்த சிவக்குமாரின் உறவினர்கள். அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுளளதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொலைச் சம்பவத்தினை கண்டித்து கும்மிட்டிப்பூண்டி இலங்கை தமிழ் முகாம் மக்கள் தேசிய நெஞ்சாலையினை மறித்து சாலை மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். https://akkinikkunchu.com/363341/
  12. Today
  13. நெதன்யாகுவும் பதவி விலகவேண்டுமென இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிகிறேன், ஒருவேளை இதைத்தான் மாறி சொன்னார்களோ? இந்த இரண்டு சாத்தான்களும் சமூகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள்!
  14. சில நாட்களுக்கு முன்பு யாழ் களத்தில் விஜய் இரசிகை பேசிய காணெளி பார்த்தேன் விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்றார் ஆஸ்பத்திரியில் ICU ல் பிள்ளையை விட்டுட்டு விஜய் பார்க்க வந்தோம் என்று பெருமைபடுகின்ற இரசிகர்கள் மனைவியை வீட்டுகுள்விடாமல் நடிகையுடன் உறவு வைத்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு பேசி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரும் விஜய்யை அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்ற இரசிகர்கள் இவர்கள் தான் விஜய்க்கு நேரடியாக முதலமைச்சராக வரும் ஆசையை கொடுத்தவர்கள்
  15. முட்டாள் பயலுகளே… எந்த முகாமுக்கு அவங்களை கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லாதீங்க. நிண்ட வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி… முழு முகாமையும் இஸ்ரேல்காரன் குண்டு போட்டு அழிக்கப் போறான். 😂
  16. யுத்தத்தில் காணாமல் போன உறவுகளின் நிலையை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 08 Mar, 2026 | 11:29 AM (இராஜதுரை ஹஷான்) யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள்.இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வுபூர்வமானது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசாரணைக்குழு தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறைமைகள் குறித்து விளக்கமளிக்கும் இரண்டாவது தொகுதி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி நேற்று முன்தினம் இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது விசாரணைக் குழுக்களின் பங்கு காணாமல் போனோர் அலுவலகத்தால் வழங்கப்படும் நிறுவன ஆதரவு விசாரணை செயல்பாட்டில் உள்ள படிநிலைகள் விசாரணை நடைமுறைகள் மற்றும் ஆரம்ப விசாரணை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள்இ ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பிரதான அலுவலகங்களாக காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணாமல் போனோர் பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் உன்னிப்பாக அவதானம் செலுத்தின.இருப்பினும் முறையான நடவடிகைகள் தேசிய மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் பற்றி விவகாரம் தனித்துவமானது. இதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக கிடைக்கப்பெற வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்விரு ஒத்துழைப்புக்களும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதுமானதாக கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தோம். காணாமல் போனோர் விவகாரம் வடக்கு,கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களுக்கும் விரிவாக்கப்பட்டதொரு பிரச்சினையாகவே காணப்படுகிறது. எவருக்கும் நாங்கள் எவ்விடத்திலும் சிறப்பு சலுகை வழங்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது. இதனால் தான் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது.அதன் தாக்கங்களும் இன்றளவில் தொடர்கின்றன. யுத்தம் அல்லது வேறேதும் காரணிகளால் ஒரு குடும்பத்தின் உறுப்பினர் காணாமலாக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கி அவர்களை திருப்திப்படுத்த முடியாது. காணாமல் போனோரின் உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்கையில் எம்மால் இதனை உணர முடிகிறது. அவர்களுடன் உரையாடும் போது 'எமது உறவுகளுக்கு என்னவாயிற்று, எப்போது வருவார்கள்' என்று தான் கேட்கிறார்கள். கடந்த கால அரசியல் காரணிகளால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது நம்பிக்கையின்மை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையும் மாற்றமடைந்துள்ளது.தற்போது கட்டம் கட்டமாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. வலிந்து காணாமலாக்கபட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள்.தமது தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன, நீதி என்ன என்றே கேட்கிறார்கள்.அது நியாயமானதே,மனித புதைகுழிகள் அகழ்வு மற்றும் அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு தேவையான நிதி நீதிமன்றத்தின் உத்தரவு ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளன. உண்மை வெளிவர வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாட்டையும், அதன் ஊழியர்களின் சேவையையும் உச்ச அளவில் எதிர்பார்க்கிறோம்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். தள்ளாடும் வயதில் உள்ள பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்காக எதிர்பார்த்துள்ளார்கள்.இதுவொரு தனித்துவமானதொரு விடயம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.காணாமல் போனோர் பற்றிய விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக் கொண்டு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு.நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றி விவகாரத்தை உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும். தேவையான வளங்களை நாங்கள் வழங்குகிறோம்.இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/240431
  17. மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை 08 Mar, 2026 | 02:13 PM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் கூறுகையில், இலங்கையின் கீழ் நாட்டு தேயிலை உற்பத்தியில் 150 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 10 முதல் 15 வீதமான உயர் ரக தேயிலை ஈரானுக்கு அனுப்பப்படுகின்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரான் தேயிலை கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்துகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடருமானால் வாராந்தம் முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும். இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 வீதமான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்துறை மூலமே வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். தேயிலை விற்பனை பாதிக்கப்படுவது இவர்களது வாழ்வாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் என்றார். மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு வான்வழிப் பயணங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் வழிப் போக்குவரத்துகளும் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதுடன் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பிப்பது கடினம். இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார சவால்களை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/240451
  18. வைக்கோல் வண்டி பாரம் .........!
  19. வணக்கம் வாத்தியார் . ....... பெண் : { காதல் வந்ததும் கன்னியின் உள் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயில் இறகாய் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை } (2) நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு பெண் : தூங்காத காற்றே துணை தேடி ஓடி என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா ஆண் : நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா பெண் : உள்ளே எண்ணம் அரும்பானது உன்னால் இன்று ருதுவானது ஆண் : நான் அதை சோதிக்கும் நாள் வந்தது தன்னனனானன பெண் : நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும் உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம் ஆண் : நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம் பெண் : கனா வந்தால் மெய் சொல்கிறாய் கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய் ஆண் : போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்.........! --- காதல் வந்ததும் ---
  20. எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர் இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்." https://adaderanatamil.lk/news/cmmhdu8tn000k356pk4n2bnxq
  21. குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது. அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmhbem07000f356p4bcih8bt
  22. ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானுடனான போரில் வெற்றி பெற அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மிகவும் தாமதமாக மோதலில் இணைவதைப் பற்றி யோசித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடாகவும், அனைத்திலும் சிறந்ததாகவும் இருந்த ஐக்கிய இராச்சியம் இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. எனினும், எமக்கு அத்தகைய உதவி இனி அவசியமில்லை பிரதமர் ஸ்டார்மர், நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பின்னர் போர்களில் இணைபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை – என்று கூறினார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பாக வாஷிங்டனுக்கும் லண்டனுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்துவதை பிரித்தானியா ஆரம்பத்தில் தடுத்ததை அடுத்து, ஸ்டார்மரை ட்ரம்ப் விமர்சித்தார். பின்னர் இங்கிலாந்து அரசாங்கம் அமெரிக்கப் படைகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஸ் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தது. https://athavannews.com/2026/1467557
  23. டிக்கோயா விவகாரத்தில் அதிரடி திருப்பம்: 24 மணிநேரம் கெடு எஸ்.கிருஷ்ணா டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமதிப்பு மற்றும் துஷ்பிரயோக விவகாரம் மலையகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (08) அன்று முன்னெடுக்கப்படவிருந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் நேரடியாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெளிவான பதிலளிப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சினால் முறையான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது." "குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆளுந்தரப்பு எம்.பி. கூறுகிறார். இது எந்த வகையில் நியாயம்? அவர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்." "இவ்வாறான ஒரு கொடூரமான சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் நடந்திருந்தால் அதன் தாக்கம் எப்படியிருந்திருக்கும்? ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்." "இது தேர்தல் காலம் கிடையாது. அநீதிக்கு எதிராக உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு கேட்பது எப்படித் தவறாகும்? அமைதிவழிப் போராட்டத்திற்குத் தடை விதித்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், திங்கட்கிழமை (09) வரை பொறுத்திருப்பதாகத் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/டிக்கோயா-விவகாரத்தில்-அதிரடி-திருப்பம்-24-மணிநேரம்-கெடு/76-373552
  24. யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்! adminMarch 7, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையினை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/230162/
  25. காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! adminMarch 7, 2026 பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட “சிவகங்கை” பயணிகள் படகு, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பின்னர், 92 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான மக்கள்-to-மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முக்கியமான கடல் போக்குவரத்து இணைப்பாக இந்த சேவை கருதப்படுகிறது. சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணிகள் படகு சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த மற்ற 6 நாட்களிலும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வழி பயணத்திற்கான கட்டணம் 28,500 இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230174/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.