Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை Mar 10, 2026 - 05:20 PM மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாலும், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ஆரம்பித்துள்ள போர்ச் சூழலினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் வியட்நாமும் உள்ளடங்குகிறது. வியட்நாம் தனது எரிசக்தித் தேவைகளுக்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிலேயே தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் முன்னணி எரிபொருள் வர்த்தக நிறுவனமான பெட்ரோலிமெக்ஸ் (Petrolimex) தரவுகளின்படி, கடந்த மாத இறுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன: பெற்றோல் - 32% டீசல் - 56% மண்ணெண்ணெய் - 80% விலை அதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக தலைநகர் ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நீண்ட வரிசைகளை இன்று (10) காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmkjqksd000y356pdr5e3tco
  3. இந்தியாவும் சீனாவும் எத்தனை நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைத்துள்ளன? பட மூலாதாரம்,Getty Images 10 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய கால உயர்வு என்பது, உலக அமைதிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு சிறிய விலையே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு 30 நாள் அனுமதியை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. ஆனால் தீவிரமடைந்து வரும் மோதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. தாக்கம் என்ன? தற்போதைய சூழலில் எண்ணெய் விலை உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பிபிசி ஹிந்தியின் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள வெளிநாட்டு கொள்கை நிபுணர் ஹர்ஷ் வி. பந்த், உலகின் பெரிய பொருளாதாரங்களுக்குக் கூட சிரமங்கள் உருவாகும் எனவும் பலவீனமான பொருளாதாரங்கள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் எனவும் கூறுகிறார். "இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் வகையில் மாற்றியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கியபோது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு உலக எண்ணெய் சந்தையின் முக்கிய மையமாக இருப்பதால் அங்கு ஏற்பட்ட மோதல்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என பந்த் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவில் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது? தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அனுமதி அளித்திருந்தாலும், முன்னதாக அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவிற்கு வரும் ரஷ்ய எண்ணெய் வரத்து குறைந்தது. எரிசக்தி நிபுணர்கள் இந்தியாவின் எண்ணெய் இருப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். ''ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் 137 கப்பல்கள் சென்ற நிலையில், கடந்த சில நாட்களில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மட்டுமே செல்ல முடிந்ததாக" பிபிசி நிகழ்ச்சியில் ஆற்றல் நிபுணர் நரேந்திர தனேஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகள் இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள நிலையில், தற்போது இங்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக குறிப்பிடும் அவர், கடந்த ஓர் ஆண்டாக சீனா தினமும் சுமார் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை இரானில் இருந்து வாங்கி தனது கையிருப்புகளில் சேமித்துள்ளதாக விவரிக்கிறார். "கடந்த 365 நாட்களில் அவர்கள் சேமித்துள்ள எண்ணெய், அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி நரேந்திர தனேஜா கூறும் போது, இந்தியா உலகம் முழுவதும் 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், தற்போது நிலத்தடியில் உள்ள இந்தியாவின் வியூக ரீதியான கையிருப்பு சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார். "இதற்கு மேலாக சேமிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக கையிருப்புகளை சேர்த்தால் சுமார் 50 நாட்களுக்கு போதுமான எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அனைத்து தொட்டிகளையும் முழுவதுமாக காலி செய்ய முடியாததால், நடைமுறையில் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் உள்ளது," என நரேந்திர தனேஜா கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images எதிர்கால விளைவு இப்போது பீதியடையத் தேவையில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார். ''உண்மையில், நமது கவலை எண்ணெய் கிடைக்குமா என்பது அல்ல, மாறாக அதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான். இரான் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 65 டாலராக இருந்தது, ஆனால் இப்போது அது உயர்ந்துள்ளது.'' என்கிறார் அவர். ''இதுவரை அரசு எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் போர் நீண்ட காலம் தொடர்ந்தால், அரசு எப்போதும் விலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஒரு கட்டத்தில் அரசு மற்றும் நிறுவனங்கள் விலையை குறைவாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால், 'இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்', 'நுகர்வோருக்கு என்ன செய்தி வரும்' போன்ற கேள்விகள் எழும்'' என்கிறார் அவர் குண்டுகள் விழுவது நின்றுவிடலாம், ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் என்று சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார். "இரானில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மற்றும் பொது பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதேபோன்ற பதிலடியை தூண்டுகின்றன. மேலும் ஆழமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன," என்று பிரம்மா செல்லனி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். மேலும், "வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பு ஏற்கெனவே சேதமடைந்துள்ளது. இதில் ஏவுகணைகளைத் தடுக்கும் முயற்சிகளால் ஏற்பட்ட சேதங்களும் அடங்கும். உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், தளங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் விநியோக அமைப்புகளின் மீதான அழுத்தம் ஆகியவை குண்டுவீச்சு நின்ற பிறகும் பல மாதங்களுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8g1183n1go
  4. உங்கள் சிரமத்திற்கு நன்றி! கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
  5. இரத்ததானம் செய்வோர் உடனே உதவுங்கள். இளைஞர்களே, கனரக வாகன சாரதிகளே, தனியார் பொதுப்போக்குவரத்து சாரதிகளே வேகத்தை குறைத்தும், அவதானமாகவும் வாகனங்களை செலுத்தி தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பீர்.
  6. 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு! காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தலைமை நீதிவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மார்ச் 4 அன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்திய அதை மூழ்கடித்தது. இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் இருந்து கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கை இல்லாமல் இந்தத் தாக்குதல் நடந்தது. மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தப் படுகொலை, ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும். தாக்குதலின் பின்னர் மூழ்கத் தொடங்கிய ஈரானியக் கப்பலில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி என இரண்டு அவசர அழைப்புகளுக்கு இலங்கை கடற்படை பதிலளித்து, உயிர் பிழைத்த 32 பேரை மீட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடற்படை மூழ்கிய கப்பலில் இருந்து டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை மீட்டது. மார்ச் 4 ஆம் திகதி 208 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் புஷேர், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. ஆரம்பத்தில் கோரிக்கையை நிராகரித்த பின்னர் பதட்டமடைந்த இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மார்ச் 5 ஆம் திகதி கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தது. அதன் பணியாளர்கள் இறக்கிவிடப்பட்டு, கப்பல் நாட்டின் மறுபக்கத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்படத்தக்கது. https://athavannews.com/2026/1467891
  7. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1467902
  8. யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது, இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம். தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம். ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1467888
  9. அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்' பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும். கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் குழு‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானிய அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இரானின் நீண்டகால சமச்சீரற்ற போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கக்கூடும். இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கூறுவது என்ன? இரானிய அதிகாரிகள் நாடு ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது நீண்ட போருக்கு ஏற்ற வகையில் தயார்நிலையில் இரான் இருக்கிறது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது. உச்ச தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி மார்ச் 2ஆம் தேதி இரானின் நீண்ட கால மோதலுக்கான தயார் நிலையை அறிவித்தார். அப்போது, "அமெரிக்காவை போலன்றி, இரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். அதோடு, பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் அவர் நிராகரித்தார். "ஆக்கிரமிப்புக்கு" இரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். "நாங்கள் நிச்சயமாக போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும்," என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கபிபாஃப் மார்ச் 8ஆம் தேதி கூறினார். இரான், இஸ்ரேலுடன் இருப்பை தக்க வைப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக், இரானால் "எதிரி எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு நீண்ட காலம் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை" தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார். இரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதத்தை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தனது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மேம்பட்ட ஆயுதங்களில் சிலவற்றைப் போரின் பிந்தைய கட்டங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இரான் பயன்படுத்தும் உத்தி என்ன? அட்ரிஷன் என்ற உத்தியை இரான் பயன்படுத்துவதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் விரைவாக வெற்றி பெறுவதற்குப் பதிலாகக் காலப்போக்கில் எதிரியை மெதுவாகப் பலவீனப்படுத்த முயல்வதாகும். இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல இலக்குகள் குறிவைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன. எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும், தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைவிட அதிக விலை கொண்டவை. இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தி வாஷிங்டன் போஸ்டின் செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,U.S. Navy via Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் இரானிய அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய விகிதத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இரானிய தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். இதன் காரணமாக, இரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது. இந்த உத்தி, இரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இரான் - இராக் இடையிலான போருக்குப் பிறகு, இரான் சமச்சீரற்ற போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது. ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும். பொருளாதார பாதிப்புகள் எவை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துபையில் தாக்குதலுக்குப் பிறகு எழுந்த புகை ஒரு நீண்ட போர் இரானிலும் உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அதில் முக்கியக் கவலை எரிசக்தி விநியோகம். உலகின் எண்ணெயில் பெரும்பகுதி பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு. போர் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, இந்தக் குறுகிய பாதை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இது உலகளவில் மக்கள் மற்றும் தொழில்களுக்கான எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும். பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் மூடப்பட்ட வான்வெளியும் இந்தப் பகுதியில் வர்த்தகப் பாதைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இரானுக்குள்ளும் பொருளாதார அழுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளால் அந்த நாடு ஏற்கெனவே பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் ராணுவத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதாலும், தேசிய நாணயம் நிலையற்றதாக இருப்பதாலும், வர்த்தகம் மற்றும் சேவைகள் சீர்குலைவதாலும் போர் ஏற்கெனவே நிலவும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது. போர் நீண்டகாலம் தொடர்ந்தால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், நாட்டுக்குள் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறும் நிபுணர்கள், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர். இரான் அரசாங்கம், குடிமக்களை போர் முயற்சிகளை ஆதரிக்க ஊக்குவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவுவது ஒரு தேசிய கடமை எனக் கூறி, அரசுக்கு பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது. அரசியல் சிக்கல்கள் போர் நீண்டகாலம் தொடர்வது, அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அபாயங்களைப் பெரிதாக அதிகரிக்கும். குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை கொண்டுள்ளன. இரான் இந்தப் பகுதியில் "ஆக்கிரமிப்பாளர்களின் சொத்துகள் மற்றும் தளங்கள்" என்று தான் அழைப்பதைக் குறிவைத்து வருகிறது. இதன் காரணமாகப் பல வளைகுடா நாடுகள், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்திய போராக மாறி கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சுகின்றன. இந்த நாடுகளில் சில ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில், போர் பிராந்தியத்தில் அரசியல் உறவுகளை மாற்றக்கூடும். சில அண்டை நாடுகள் இரானின் எதிரிகளாக மாறக்கூடும். இரானை பொறுத்தவரை, போரைத் தொடர்வது என்பது அதன் ராணுவ திட்டங்களை அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பது மற்றும் உள்நாட்டில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்த முயல்வதாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுத்தவரை, சவால்கள் வேறுபட்டவை. அவர்கள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், அதே நேரத்தில் ஒரு நீண்ட போரின் நிதிச் சுமை, அரசியல் அழுத்தம், உலகளாவிய விளைவுகள் ஆகியவற்றையும் கையாள வேண்டும். பிபிசி தமிழுடன் பகிருங்கள் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20ly2pyv0do
  10. தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்! தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர். இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழக அரசுப் பாடசாலை மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் நோய்வாய்ப்படுவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உணவு விஷம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் 33 மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsதமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வா
  11. Today
  12. அண்ணை, கேள்விகளை குறைத்து நேரடி வெற்றி தோல்வி, தொடர்நாயகன், கூடுதல் ஓட்டம், கூட விக்கெற் எடுப்பவர் யார் யார் என போட்டியாளர்களுக்கு கடுமை இல்லாமல் இருந்தால் பங்குபற்றுவார்கள். வழங்கம்போல 10பேருக்கு மேல் பங்குபற்ற உறுதியளித்தால் போட்டியை தொடங்குங்கோ.
  13. நாளைதான் போட்டி விபரங்கள் வரும். 26 மார்ச் ஆரம்பிப்பார்கள். இதற்குள் கேள்விக்கொத்து தயாரித்தாலும் எத்தனை பேர் உடனடியாக பதில்கள் தருவார்கள்?
  14. இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் Veeragathy Thanabalasingham on March 10, 2026 Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கரையோரத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அண்மைய தசாப்தங்களில் வெள்ளை மாளிகையில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் படுமோசமான போர்வெறியராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இனப்படுகொலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதான்யாகுவும் ஈரானுக்கு எதிராக விரைவாகப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் போருக்கு விரைவான முடிவு கிட்டப்போவதில்லை. போர் தொடங்கிய முதல்நாளன்றே ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தெரிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். புதிய ஆன்மீகத் தலைவராக கொலையுண்ட தலைவரின் மகன் மொஜ்ராபா காமெனி தெரிவாவதை அனுமதிக்க முடியாது என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஈரானில் அமையக்கூடிய அடுத்த அரசாங்கம் தனது பொம்மையாக இருப்பதை உறுதி செய்வதே அவரது நோக்கம். ஜனவரியில் வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிகஸைப் போன்று வாஷிங்டனின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவரை ஈரானில் பதவியில் அமர்த்துவதே ட்ரம்பின் திட்டம். அயத்தொல்லா காமெனியின் கொள்கைகளைப் பின்பற்றும் புதிய ஈரானியத் தலைவரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய ஒரு கையாளை இன்றைய ஈரானிய அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அயத்தொல்லா காமெனியின் மறைவையடுத்து ஈரானிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இதுவரையில் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை நடத்தி ஈரானில் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அதேவேளை, அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு அந்த நாட்டு மக்களை கேட்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்ட போதிலும் ஈரான், இஸ்ரேல் மீதும் அயல் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள், சொத்துக்கள் மற்றும் தூதரகங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆசியாவுக்கான வர்த்தகம் உட்பட உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறிய அதேவேளை, ட்ரம்ப் ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறினார். நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர, ஈரானுடன் வேறு எந்த உடன்பாட்டுக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடு. பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரான் தீட்டிக்கொண்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே தாக்குதல்களை தொடங்கியதாகக் கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு சான்றையும் உலகின் முன்வைக்கவில்லை. கடந்த வருடம் ஜூனில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானின் சகல அணுவசதிக் கட்டமைப்புக்களும் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்டத்தையும் கொண்டிருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், ஈரான் அணுவாயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அதற்கெதிராக உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்குப் படைபலத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. அல்லாவிட்டால் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரமே தாக்குதலை நடத்த முடியும். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி போரைப் பிரகடனம் செய்வதற்கு காங்கிரஸின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளில் எந்தவொன்றையும் ட்ரம்ப் நிறைவேற்றவில்லை. ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல இன்றைய பிரச்சினை. உலகின் உறுதிப்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சட்ட முறைமைகள் சகலதையும் அவர் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெனிசூலாவின் இறைமையை மீறி மதுரோவை கடத்திச் சென்றது குறித்து கண்டனங்கள் கிளம்பியபோது சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு (ஐக்கிய நாடுகள்) அமெரிக்காவுக்கு அநாவசியமான சுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியது கவனிக்கத்தக்கது. முன்னெச்சரிக்கையாக படைபலத்தைப் பயன்படுத்துவது என்பது வழமையானதாக்கப்பட்டுவிட்டால், எந்தவொரு அரசும் தனக்கு நீண்டகால நோக்கில் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்று சந்தேகிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் விரும்பிய நேரத்தில் படை பலத்தைப் பிரயோகிக்கக்கூடும். இது பேராபத்தான ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்ற இன்றைய யுகத்தில் பயங்கரமான முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான போர்கள் சர்வசாதாரணமாகிவிடும். தற்போதைய உலகை பல்துருவமயப்பட்டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது, பல நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவையாக வளர்ந்துவிட்டதால் அமெரிக்கா போன்ற தனியொரு வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழானதாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்காது என்று நம்பினோம். எவ்வாறு, எந்த நேரத்தில் நடந்துகொள்வார் என்று முன்கூட்டியே கூறமுடியாத ட்ரம்பின் தலைமையின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா செய்துவருகின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாதவையாக உலக நாடுகள் பரிதாபகரமான ஒரு நிலையில் இருக்கின்றன. இரு மாதகால இடைவெளியில் அமெரிக்கா சீனாவின் நெருங்கிய இரு நேசநாடுகளில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கிறது. வெனிசூலாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் கடந்தவாரம் குண்டு வீச்சுக்களில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதையும் சர்வதேச சட்டமீறல் என்று கண்டனம் செய்யச் சீனாவினால் முடிந்ததே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ரஷ்யாவின் நிலையும் அதுவே. இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியான தலையீடுகளைச் செய்ய முடியாதவையாக இருக்கின்றன. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு எதிரான அமெரிக்க — இஸ்ரேலிய போரை கண்டனம் செய்ய முன்வரவில்லை. அயத்தொல்லா காமெனியின் மறைவுக்கு காலந்தாழ்த்தியே இந்தியா அனுதாபம் தெரிவித்திருக்கிறது. புதுடில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். ஈரானியத் தூதரகங்களுக்குச் சென்று அனுதாபப் புத்தகங்களில் கைச்சாத்திட வேண்டாம் என்று உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு அமெரிக்காவைப் புண்படுத்தக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் கடுமையான கரிசனையுடன் இருக்கிறது. இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற – கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது. இது இவ்வாறிருக்க, கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதைத் தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12620
  15. யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை adminMarch 10, 2026 சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/230304/
  16. புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா adminMarch 10, 2026 யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள். இந்நிலையில் கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ” கிட்டு பூங்கா” திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் , கிட்டு பூங்கா முற்றாக அழிக்கப்பட்டது. அதனை அடுத்து “கிட்டு பூங்கா” புனரமைக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த போதிலும் , 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கிட்டு பூங்காவை , சங்கிலியன் பூங்கா என பெயர் மாற்றம் செய்து புனரமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அவை முழுமை பெறாது கைவிடப்பட்டது. பின்னர் பூங்கா புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாத போதிலும் , பூங்கா அமைந்திருந்த பகுதியில் அரசியல் பிரச்சார கூட்டங்கள் , கண்காட்சிகள், கூட்டங்கள் என்பன நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது கிட்டு பூங்காவை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள நிலையில் , முதல்கட்டமாக பூங்காவை சுற்றி சுற்று மதில் கட்டி , அதனை பாதுகாப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டே யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் , ஆணையாளர் , உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் கலந்து கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2026/230307/
  17. ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை 11 Mar, 2026 | 09:22 AM மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இது தடைப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் (பெற்றோல், டீசல், எரிவாயு) அதிரடியாக அதிகரித்துள்ளன. சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. இது முடங்கியுள்ளதால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோமுஸ் நீரிணை ஊடாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240685
  18. 18 நாள்தான் இருக்குது ...எப்ப கேள்வி வாறது ..நாங்கள் கொப்பியடிச்சு போட்டிக்கு போறது ...முடியல
  19. அந்த திரியில் நிங்கள் கூறிய கருத்து👇 அதற்கு எனது அந்த திரியில்👇 IAEA ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறிய செய்தியினையும் அந்த திரியிலேயே இணைத்துள்ளேன் https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/ IAEA துறைசார் வல்லுனர்களின் கருத்தினடிப்படையில் அணுகுண்டு தயாரிக்காவில்லை என கூறும் நிலையில் நீங்கள் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டிற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுவது (90% செறிவூட்டலின் பின்னரே அணுகுண்டு தயாரிப்பினை மேற்கொள்ளலாம் என கூறுகிறார்கள், நான் துறைசார் நிபுணன் இல்லை) எனும் உங்கள் கருத்திற்கான பதிவினை நீங்கள் இப்போதும் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளீர்களோ தெரியவில்லை. நான் வெளிநாடு வந்த காலத்தில் என்னை பார்க்க வந்த ஒருவர் என்னை காரில் அழைத்து சென்றார், நாங்கள் மொத்தம் 5 பேர் அந்த காரில் பயணித்தோம், நகரத்திற்கு செல்லும் ஒரு குறுகலான இரு வழிப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாலை நேரமாக நினைவுள்ளது. காரினை ஒரு "U" வடிவ திருப்பம் ஒன்றினை அந்த நெரிசலில் மிகவும் சிரமப்பட்டு எடுத்தார், அது இலகுவாக இருக்கவில்லை, துரதிர்ஸ்டவசமாக எங்கிருந்தோ திடீரென காவல் துறை வாகனம் (சாதாரண கார் போல) வந்து எமக்கருகில் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டார், காரை ஓட்டினவர் பயிலுனர் அனுமதி அட்டை மட்டுமே வைத்திருந்தார் (காரில் வெளிப்புறத்தில் பயிலுனர் எனும் இலச்சினை வைத்திருந்தாரா என்பது நினைவில்லை). காவல் துறையில் இருந்த பெண்மணியிடம் காரை ஓட்டினவர் நான் நீண்டகாலமாக கார் ஓட்டுகிறேன் என அவரது பேச்சிற்கு எதிர் பேச்சாக பேசிக்கொண்டிருந்தார், உள்ளே இருந்த எனக்கு இவர் எதற்காக அந்தப்பெண்மணியிடம் வம்பிழுக்கிறார் என திகைப்பாக இருந்தது, காரை ஓட்டியவரரது சாரதி அனுமதி பத்திரத்தினை வாங்கிக்கொண்டு காருக்கு வந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் உனக்கு சாரதி முழு அனுமதி பத்திரம் உள்ளதா? என கேட்டார், அதற்கு அவர் இல்லை என கூறினார். பயிலுனர் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சரியான மேற்பார்வையின்றி வாகனம் செலுத்தியமை, போக்குவரத்து நெரிசல் உண்டாக்கியமை என இரு அபராதங்களை விதித்து விட்டு சென்றார்கள் (ஆனால் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்கள்?) நான் முதலில் இவர் வம்பிழுத்ததாக நினைத்தேன் பின்னர் அவரரது ஆங்கில புலமை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இருந்ததால் அவர் தனது வாகன செலுத்தும் திறமையின்மையினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறை நினைத்திருக்க கூடும் என நினைத்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை என நினைக்கிறேன். IAEA தெரியாத விடயம் ஜஸ்ரினிற்கு தெரிகிறது என்பதால் எனக்கு முரண்பாடெதுவும் இல்லை (இப்படியும் இருக்குமோ என்பதே எனது அபிப்பிராயம்).
  20. அதுசரி பிரியன் சார் ....பில்லியன் , மில்லியன் , லட்சக் கணக்கா உந்த சாமானுகளை பிடிக்கினம் ...எங்கைய்யவது நாட்டுக்கு இரகசியமா வித்து ...கடனில்லாமல் இருக்கலாமே
  21. மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல் 11 Mar, 2026 | 10:27 AM நாட்டின் தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பணிக்கு வரத் தவறினால் அது கடும் ஒழுக்காற்று குற்றமாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்வீஸ் புரொவைடர் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். எஸ். வெத்தசிங்க வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் மின்சார பரிமாற்ற அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை எந்தவித தடையும் இன்றி பராமரிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) கீழ், இலங்கை மின்சார சபையின் முக்கிய செயல்பாடுகள் 2026 மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு வாரிசு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Beaches & Islands அறிக்கையின்படி, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண் 2477/47 இன் கீழ் மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஏற்கனவே அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப இடமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், தற்போதுள்ள மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் வழக்கம்போல தங்களது கடமைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறி சில ஊழியர்கள் பணிக்கு வரத் தவறியதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அத்தகைய செயல்பாடுகள் கடும் குற்றமாகக் கருதப்படும். அதற்கேற்ப ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240688
  22. வீட்டில் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் இரவில் வந்து அவர்கள் வைக்கும் பாலையும், பிஸ்கட்டினையும் குடித்து, உண்டுவிட்டு அவர்களுக்கு சான்டா பரிசில்கள் வைத்துவிட்டு போகும் நடைமுறையினை நம்பியிருந்த காலகட்டத்தில்; அது பெற்றோரே அதனை செய்கிறார்கள் என்ற உண்மையினை சொன்னபோது குழந்தைகள் அதனை விரும்பவில்லை, குறிப்பாக எனது மகன் நான் பொய் சொல்வதாக கூறினார், நான் செய்த அந்த செயல் சிறிய குழந்தைகளை எவ்வளவு மோசமாக பாதித்தது என உணர்ந்த போது கடினமான மன உணர்வு ஏற்பட்டது. சில நம்பிக்கைகளுக்கு அளவு கடந்த சக்தி உண்டு, அந்த விம்பம் உடைக்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம், மறுதலிப்புகள் ஒரு தற்காலிக மன ஆறுதலை வழங்குகிறது, ஆனால் அவர்கள் எப்படியோ எது உண்மை என தாங்களாகவே ஒரு கட்டத்தில் உணர்ந்து விடுவார்கள்.
  23. இதுவே அமெரிக்கா என்றால் எங்கிருந்து பெற்றார்கள் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என முழு விபரமும் அறிந்த பின்பே விடயம் வெளியே வந்திருக்கும். இப்போது வெளியே உள்ளவர்கள் உசாராகி இருப்பார்கள்
  24. விசுகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.