Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images 22 மார்ச் 2026, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்குப் புதிய காலக்கெடு விதித்துள்ளார். இரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று அவர் கூறினார். டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா இரானின் பல மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இது அவர்களின் மிகப்பெரிய நிலையத்திலிருந்து தொடங்கும்," என்று பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் அறிவிக்கப்படாத அணுசக்தி தளம் உட்பட தெற்கு இஸ்ரேலில் இரண்டு இரானிய ஏவுகணைகள் தாக்கிய சில மணிநேரத்திற்குப் பிறகு, சனிக்கிழமை (மார்ச் 21) டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. போர் தொடங்கிய பிறகு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. டிரம்ப் இந்த சமீபத்திய பதிவை இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அதிகாலை சுமார் 5 மணியளவில் வெளியிட்டார். உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் இரான் மீது பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உலகின் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய் விநியோகம் சிக்கலாகியுள்ளது. இந்த நீர்வழிப் பாதையின் வடக்கே இரானும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. இது அதன் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் அகலமும், அதன் மிகக் குறுகிய புள்ளியில் சுமார் 33 கிலோமீட்டரும் அகலமும் கொண்டது. இது வளைகுடா நாடுகளை அரபிக் கடலுடன் இணைக்கிறது. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG - எல்என்ஜி) இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதில் இரானின் எண்ணெய் மட்டுமல்லாமல், கத்தார், இராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற வளைகுடா நாடுகளின் எண்ணெயும் அடங்கும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 21 அன்று டிமோனா மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் ஏஎஃப்பிடிவி காட்சிகளின் ஸ்கிரீன்ஷாட். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கம் வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கின்றன. ஆனால் சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, போர் தொடங்கியது முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, குறிவைக்கப்பட்டுள்ளன அல்லது தாக்குதலுக்கு உள்ளானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளன. போருக்குப் பிறகு உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை இப்போது ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இரான் பற்றி டிரம்ப் வேறு என்ன சொன்னார்? கடந்த சில மணிநேரத்தில், டொனால்ட் டிரம்ப் இரான் குறித்து சில புதிய அறிக்கைகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் செய்தியொன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, "அமெரிக்கா இரானை வரைபடத்திலிருந்தே அழித்துவிட்டது," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். டிரம்பின் போர் சாதனைகளைப் பகுப்பாய்வு செய்யும் அந்த அறிக்கை, "டிரம்ப் இரான் போர் குறித்த உண்மையை மறைக்கிறார்" என்ற தலைப்பில் வெளியானது. இரானில் தனது இலக்குகளை அடைவதில் "தோல்வி" அடைந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் கூறுகையில், "ஆம், நான் சாதித்துவிட்டேன், அதுவும் திட்டமிட்ட நேரத்திற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே." என்று குறிப்பிட்டுள்ளார். "அவர்களின் தலைமை இல்லாமல் போய்விட்டது, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டன, அவர்களிடம் தற்காப்புக்கு எதுவுமே இல்லை, இப்போது அவர்கள் சமரசம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை." என்று அவர் கூறியுள்ளார். இரான் பதில் பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகிறார் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, டிரம்ப் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களைத் தாக்கப்போவதாக இரானிய ராணுவம் மிரட்டியுள்ளது. முன்னதாக, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்ரி காலிபாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்து ஏற்கெனவே எடுக்கப்பட்ட அடுத்தக்கட்ட உத்திகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது," என்று பதிவிட்டிருந்தார். "மிகவும் பாதுகாக்கப்பட்ட டிமோனா பகுதியில் கூட இஸ்ரேலால் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை என்றால், இந்த மோதல் செயல்பாட்டு ரீதியாக ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். இஸ்ரேலின் வான்பரப்பு இப்போது பாதுகாப்பற்றதாக உள்ளது," என்று காலிபாஃப் கூறினார். இஸ்ரேலின் 'அணுஆயுத' கிடங்கிற்கு இரான் குறியா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் அராட் நகரில் இரான் தாக்குதலில் ஏற்பட்ட சேதம் இரானின் சமீபத்திய தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி, குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறங்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, தரையில் பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளன. மீட்புக் குழுவினரின் தகவல்படி, "அராட் நகரில் 88 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, அருகிலுள்ள டிமோனாவில் 33 பேர் காயமடைந்தனர்." ஏ.எஃப்.பி.டிவி காட்சிகள், தரையில் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம், சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் பரவலான அழிவைக் காட்டின. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு டிமோனாவில் இருப்பதாக நம்பப்படுகிறது; இருப்பினும் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதில்லை. டிமோனாவில் உள்ள ஒரு கட்டடம் "நேரடி ஏவுகணைத் தாக்குதலுக்கு" உள்ளானதாக இஸ்ரேலிய ராணுவம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதில் ஏவுகணை சிதைவு தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான். அராட் நகரில், கடுமையாக சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'ஒவ்வொரு முனையிலும்' பதிலடி கொடுப்பது குறித்துப் பேசினார். இந்தத் தாக்குதலை "மிகவும் கடினமான மாலைப் பொழுது" என்று விவரித்த நெதன்யாகு, இரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என உறுதியளித்தார். சில மணிநேரத்திற்குப் பிறகு, தெஹ்ரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது. இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது. நடான்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்தி விபத்து அபாயத்தைத் தவிர்க்க "ராணுவக் கட்டுப்பாட்டை" கடைபிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் கிராஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் இயந்திரங்கள் நடான்ஸ் நிலையத்தில் உள்ளன. இது ஜூன் 2025 போரிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz78jgjln1po
  3. இன்றிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு 21 Mar, 2026 | 11:59 PM நாட்டில் எரிபொருள் விலைகள் இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Geographic Reference ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து முக்கிய எரிபொருள் வகைகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு: * ஒட்டோ டீசல் – ரூ. 79 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 382 * சூப்பர் டீசல் – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 443 * பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 81 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 398 * பெட்ரோல் ஒக்டேன் 95 – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 455 * மண்ணெண்ணெய் – ரூ. 60 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 255 இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் இந்த திடீர் உயர்வு பொதுமக்களின் வாழ்வுச் செலவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் தாக்கம் காணப்படக்கூடும். https://www.virakesari.lk/article/241593
  4. ஈரானின் 17 மாகாணங்கள் மீது ஒரே நாளில் 640 தாக்குதல்கள் Mar 21, 2026 - 10:03 PM ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சிறுவர்களா, பொதுமக்கள் அல்லது இராணுவத்தினரா என்பது குறித்த வகைப்படுத்தல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஆரம்பமாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை குறைந்தது 1,398 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 210 சிறுவர்களும் அடங்குவதாக மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானிய இராணுவ அதிகாரிகள் 1,165 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மேலும் 657 மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும், அவர்கள் பொதுமக்களா அல்லது இராணுவ அதிகாரிகளா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை என சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmn0jphs3000w356p2ep8yoqb
  5. மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; 03 பேர் 24 மணித்தியாலத்தில் கைது Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 10:44 AM மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றின் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர்கள் வவுணதீவு பகுதியில் சனிக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகரத்துக்கு 2½ வயதுடைய குழந்தையுடன் சென்ற இளம் தாய் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை, அவர் பாழடைந்த கிணற்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவருடைய குழந்தை வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதே கிணற்றில் அழுகிய நிலையில் மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பல பொலிஸ் நிலையங்களும், விசேட குற்ற விசாரணைப் பிரிவும், புலனாய்வு பிரிவும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டன. சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளம் தாயை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் ஒரு பெண் தொடர்பாக தகவல்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து, வந்தாறுமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 26 வயதுடைய பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது கணவர் (34) மற்றும் கணவனின் தம்பி (22) ஆகியோரும் வவுணதீவில் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறுமூலையில் உள்ள தங்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்குச் சென்றுள்ளனர். பின்னர் ஆயித்தியமலை பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வவுணதீவு பிரதேச செயலக அலுவலகம் முன்பு குழந்தையுடன் பஸ்ஸூக்கு காத்திருந்த இளம் தாயை கண்டுள்ளனர். அப்போது முச்சக்கர வண்டியை நிறுத்தி, எங்கு செல்லவுள்ளதாக கேட்டபோது, அவர் மட்டக்களப்பு நகரத்திற்குச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, “நாங்களும் அங்கு செல்கிறோம், வரலாம்” எனத் தெரிவித்துள்ளனர். அதற்கு இளம் தாய், முச்சக்கரவண்டியில் செல்ல பணம் இல்லை என தெரிவித்துள்ளார். அதற்கு “100 ரூபாய் கொடுத்தால் போதும்” என கூறி, இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கி பயணம் செய்துள்ளனர். பயணத்தின் போது, குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்டெடுக்க வேண்டும் இளம் தாய் என கூறிய நிலையில், நகரை வந்தடைந்ததும் இளம் தாய் குழந்தையுடன் இறங்கியுள்ளார். பின்னர், குறித்த பெண்ணும் தானும் பின்னால் வருவதாக கூறி அவரை பின்தொடர்ந்துள்ளனர். அங்கு குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துள்ளனர். அதன் பின்னர், “நாங்கள் மீண்டும் வவுணதீவுக்கு திரும்புகிறோம்; உங்களுடன் இன்னொருவரையும் ஏற்றி குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வோம்” என்று கூறி மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டுள்ளனர். வலையிறவு பாலம் அருகே சென்றபோது, மயக்க மருந்து கலந்து பழச்சாறு கொண்ட ஜூஸ் போத்தலை குடிக்க வழங்கியுள்ளனர். அதை குடித்த இளம் தாய் மயக்கம் அடைய ஆரம்பித்துள்ளார். பின்னர், முச்சக்கர வண்டி வலையிறவு பாலத்தை கடந்து சென்று வண்டியை நிறுத்தியபோது, அதில் இருந்த பெண் இறங்கிய நிலையில், அங்கு காத்திருந்த 22 வயது இளைஞன் வண்டியில் ஏறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடுமாறு கோரியபோதும், பின்னர் முழுமையாக மயக்கமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த 05 பவுண் தாலிக் கொடி மற்றும் 1 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றி கொள்ளையடித்துள்ளனர். பின்னர், குழந்தையை கொத்தியவலை வயல்வெளியில் வீசி எறிந்து, மயக்கமடைந்த இளம் தாயை தாந்தாமலை பகுதியில் உள்ள நெல்லிகாடு வயல்வெளிக்குக் கொண்டு சென்று அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி தங்களது வீட்டிற்குச் சென்றதுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஈடு வைத்து பணம் பெற்றுள்ளனர். மேலும், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணையும் இதே முறையில் கொலை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/241615
  6. தம்பரை அதிகம் எதிர்பார்த்து உடைத்து போன உங்கள் மனநிலை அதிகம் பதிக்கப்பட்டு இப்படி கேவலமாக உளற வைத்துவிட்டதே😄
  7. சட்டவிரோத கடலட்டைப் பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் கடற்றொழில் அமைச்சர் ; கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு! 22 Mar, 2026 | 11:59 AM சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் கூறுகையில், கிராஞ்சி கடற்பகுதியில் தற்போது கடற்றொழில் சமூகத்தினரை தவிர்ந்த ஏனையவர்களே பல நூறு ஏக்கர் கடற்பரப்பில் பண்ணைகளை வைத்துள்ளனர். இதில் சிலர் சட்டவிரோதமாக 30 முதல் 40ஏக்கர் வரை கபளீகரம் செய்து தமது பண்ணைகளை முன்னெடுக்கின்றனர். இதனால் எமது பொருளாதாரம் முற்றாக பறிக்கப்பட்டு விட்டது. நாம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அவர் பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார். நாம் எமது நிலையை சொன்னால் வருகிறார் பார்க்கிறார் தீர்வு மட்டும் தரார். ஏனெனில் அவருக்கு பண்ணைகளை செய்பவர்களுடன் முரண்பட விருப்பமில்லை. சட்ட நடவடிக்கை எடுப்போம் என எமக்கு சாக்குப்போக்கு சொல்லி காலத்தை ஓட்டுகின்றார். எனவே எமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கு உரிய தீர்வை அனுர அரசு தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். https://www.virakesari.lk/article/241622
  8. உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி பட மூலாதாரம்,Instagram mirzapur.police படக்குறிப்பு,மிர்சாபூர் எஸ்பி அபர்ணா ரஜத் கௌசிக் கட்டுரை தகவல் சையத் மௌஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா ரஜத் கௌஷிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இந்த வீடியோவில், காவல் கண்காணிப்பாளர் விளக்கும் விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அவரின் உருவம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மிர்சாபூர் காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா கௌஷிக்கின் செய்தியாளர் சந்திப்பு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர். ஐந்து நாட்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ 47 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 65,000 கமெண்டுகளை பெற்றுள்ளது. காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் தோற்றம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உருவக் கேலி தொடர்பான இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, காவல்துறை அந்தப் பதிவில் கமெண்ட் இடும் பகுதியை முடக்கியது. இந்த விவகாரம் குறித்து அபர்ணா ரஜத் கௌஷிக்கைத் தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்தது, ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அலுவலகப் பணிகளில் மும்முரமாக இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உடல் தோற்றத்தை இழிவுபடுத்துவது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சமூகம் எந்த அளவுக்குப் பண்பாடற்றதாகிவிட்டது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் உருவம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அமேதியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் தீபக் சிங், சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்டித்துள்ளார். மேலும், இது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அபர்ணா ஜி அமேதியில் இருந்தபோது அவரைப் பலமுறை சந்தித்துள்ளோம். அவர் மிகவும் யதார்த்தமான பெண்மணி. ஓர் அதிகாரியைப் பற்றிய கருத்துகள் அவர்களின் வேலையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் இருக்கக்கூடாது. இப்போது பகிரப்படும் கருத்துகள் சரியானவை அல்ல," என்றார். இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூக ஆர்வலருமான ரூப் ரேகா வர்மா, "சமூகம் மிகவும் பண்பாடற்றதாக மாறிவிட்டது" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் மற்றும் பொதுமக்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு பெண், இது போன்ற அநாகரிகத்திற்கும் இழிவான மொழிக்கும் ஆளாக்கப்பட்டு, அவரது கண்ணியம் புண்படுத்தப்பட்டால், சமீப காலங்களில் நமது சமூகம் எவ்வளவு தூரம் வீழ்ந்துள்ளது என்பதையும், அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது," என்றார். "ஒருவர் மற்றொருவரை எப்படிப் பார்க்கிறார் என்பது அந்த நபரின் பார்வையைப் பொறுத்தது," என்றும் ரூப் ரேகா வர்மா கூறுகிறார். இந்தச் சிக்கல் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா ரஜத் கௌஷிக்கோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதேபோல், பெண்கள் மட்டும் குறிவைக்கப்படுவதில்லை. நமது உயரம், நிறம் அல்லது உருவம் குறித்து சமூக ஊடகங்களிலோ அல்லது அன்றாட வாழ்விலோ நாம் அனைவரும் ஏதோ ஒன்றைக் கேட்டிருப்போம். அன்றாட சமூகத்தின் ஒரு பகுதி 2019-ஆம் ஆண்டு ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, உருவக் கேலி என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்பதை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்னை சமூக ஊடகங்களில் மட்டும் காணப்படுவதில்லை, மாறாகப் பள்ளிகளிலும் பணி இடங்களிலும் பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின்படி கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் இந்த எதிர்மறையான கருத்துகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமிருந்தும் வருகின்றன. கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 47.5 சதவீதப் பெண்கள் பள்ளி அல்லது வேலை இடங்களில் உடல் உருவக் கேலியை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டிய இடங்கள், சில நேரங்களில் சங்கடமானதாகவும் மன ரீதியாகச் சவாலானதாகவும் மாறக்கூடும் என்பதை இது காட்டுகிறது. அதே நேரத்தில், 32.5 சதவீத வழக்குகளில் எதிர்மறையான கருத்துகள் அறிமுகமில்லாதவர்களால் அல்லாமல் நெருங்கிய நண்பர்களால் தெரிவிக்கப்பட்டன என்பது இந்தக் கணக்கெடுப்பின் மற்றொரு உண்மையாகும். உடல் உருவக் கேலி என்பது வெறும் வெளிப்புறச் சமூக நடத்தை மட்டுமல்ல, அது நமது அன்றாட உறவுகள் மற்றும் உரையாடல்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது என்பதை இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது. எடை, உடல் அமைப்பு, தோல் நிறம் மற்றும் முடியின் தரம் போன்ற அம்சங்கள் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒரு நபரின் தன்னம்பிக்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். லக்னோவில் உள்ள யூனிட்டி பிஜி கல்லூரியின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலி என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல, அது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பான நடத்தை போன்றவை அவசரமாகத் தேவைப்படும் ஒரு பரவலான சமூகப் பிரச்னை" என்றார். ஷம்சி அக்பரின் கூற்றுப்படி, "உடலைப் பற்றிய இழிவான கருத்துகளைத் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம், ஒரு நபரின் சுயமரியாதை படிப்படியாக உடையத் தொடங்குகிறது. அவர் தன்னை மற்றவர்களை விடத் தாழ்ந்தவராகக் கருதத் தொடங்குகிறார் மற்றும் அவருக்குள் தாழ்வு மனப்பான்மை வேரூன்றுகிறது." சட்டம் என்ன சொல்கிறது? அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழக்கறிஞர் சைமா கான் கூறுகையில், அபர்ணா ரஜத் கௌஷிக் போன்ற ஓர் அதிகாரி மீதே இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்றால், சாதாரண பெண்களுக்கு ஆன்லைன் தளம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றார். அவர் மேலும் கூறுகையில், "ஒரு பெண்ணின் உடல் தோற்றம் குறித்து அநாகரிகமான, இழிவான அல்லது ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பது, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சட்டப்படி குற்றமாக கருதப்படலாம்." என்றார். சைமா கானின் கூற்றுப்படி, "இது போன்ற இணையக் கேலி மற்றும் உடல் உருவக் கேலிக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம், அப்போதுதான் ஒரு மூத்த பெண் போலீஸ் அதிகாரியின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்." உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலியை எதிர்கொள்பவர்களுக்குப் பதற்றம் , மனச்சோர்வு மற்றும் குறைந்த சுயமரியாதை போன்ற பிரச்னைகள் உருவாகலாம். பல சந்தர்ப்பங்களில், இந்த நிலை 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்' வடிவத்தை எடுக்கிறது, இதில் அந்த நபர் தனது உடலைப் பற்றி மிகவும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார். இதன் காரணமாக, அவர் மீண்டும் மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார் மற்றும் ஒருபோதும் திருப்தியடைவதில்லை," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினை ஈட்டிங் டிஸார்டர் போன்ற ஆபத்தான நடத்தைகளுக்கும் வழிவகுக்கும், அங்கு ஒரு நபர் தனது உடலை மாற்றிக்கொள்ள ஆரோக்கியத்திற்குப் புறம்பான முறைகளைக் கையாளத் தொடங்குகிறார்"என்றும் விளக்கினார். அபர்ணா ரஜத் கௌஷிக்கின் பின்னணி பட மூலாதாரம்,Instagram mirzapur.police படக்குறிப்பு,உடல் உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த அபர்ணா ரஜத் கௌஷிக், 2015-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி . உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக அவர் எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர் அபர்ணா ரஜத் கௌஷிக். அவர் ஐபிஎஸ் அதிகாரியாவதற்கு முன்பு, குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐபிஎஸ் அதிகாரியான பிறகு, உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றினார். அதன் பிறகு அமேதியில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். கஸ்கஞ்ச் மற்றும் அவ்ரையா போன்ற மாவட்டங்களிலும் அவர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், லக்னோவில் துணைக் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பிரயாக்ராஜ் என்ஐடி-யில் பி.டெக் முடித்துள்ளார் அபர்ணா ரஜத் கௌஷிக். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl9pnrqlwo
  9. Today
  10. சரி ஆச்சி 15-16-17 எதணை வேணும்? கதையோட கதையா எனக்கும் உந்த டிக்டொக்கை ஒருக்கா பழக்கி விடணை.
  11. ஊர் நடப்பை நகைச்ச்வையாக சொன்ன உங்கள் ஆக்கத்துக்கு நன்றி😅
  12. உண்மை பொய் தேவையில்லை உன் செய்தியில்… உண்மையை உரக்கச் சொல்ல தேவையில்லை பொய் செய்திதானென்று பயம் தேவையில்லை கண்ணசைவும் கையசைவும் இருந்திட்டால் உலகம்பூராவும் உன்காலடியில் எடுத்த விடையம் என்னவானாலும்…. எதுகை மோனை உனக்குத் தேவையுமில்லை.. உண்மையோ எள்ளளவும் வேண்டாம் எடுத்தை தூக்கிப் போட்டாலே காணும் கைப்பேசி உன்னை படமெடுக்கும் கண்டதை கதைத்தாலும் கண்டிக்காது சொன்னதை அப்படியே சொல்லும் சொரணை கெட்டசனம் சொக்கிப்போய் திரும்ப திரும்ப பார்க்கும் பார்வைக்கு ஒரு விருப்பும் ஒரு ஏற்பும் இருந்தாலே நீ ஒரு செய்தியாளன் சொந்தமாக சொத்து சேர்த்து விட்டால் மகா செய்தியாளன் செய்திக்கு .ஒரு தாற்பரியம் இருக்கு ஒரு தார்மீகமும் இருக்கு சொல்வதில் ஒரு செம்மையும் இருக்கு சொல்வடிவமும் இருக்கு… இவை இல்லையெனின்… அது செய்தியல்லடா… செய்தியை…சொல்லுங்கடா..உண்மை செய்தியாய் சொல்லுங்கடா…
  13. போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
  14. என்ன நீங்க அப்படிச் சொல்லுறியள் இலங்கையில் இருந்து..அல்லாகு அக்பர் கோசமல்லவா ஒலிக்குது ..இது உண்மையா
  15. பாராட்டுக்கள் ...தொடரட்டும் கவிதையில் வரும் வரிகள் யாவும் காட்சியாக வரும் என நினைத்து ஏமாந்து போனேன்🤣...ஈரான்காரனின் ஏவுகணைகள் எத்தனை இலக்க்கை தாக்காமல் வீணாக வானில் வெடிக்குது தானே என நினைத்து சமாதானம் அடைந்தேன்...🤣
  16. இதற்கும் என்.பி.பி அடியாட்களை நியமித்துவிட்டால் ...வியாபாரம் களைகட்டும்
  17. பூக்குழியில் இறங்குதல் =தீமிதிப்பு கொசுறுச் செய்தியும் ஒன்றிருக்கு....என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் ...எமது ஆலயத்தில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இந்த தீ மிதிப்பை செய்திருக்கின்றேன்....இப்போது நினைத்தாலும் பெரும் அதிசயமாகவே தெரியும் இந்த பூக்குழி இறக்கம்... புகழ் பெற்றது ...உடப்பும் ...பாண்டிருப்பு திரொபதை அம்மன் கோவிலும் ... ஆர்வ பக்தி...மிகுதியிலும் ...இந்த இரண்டு கோவில் தரிசனமும் செய்திருக்கின்றேன்....
  18. உண்மை தான்,மதங்கள் தான் இனி தாயகத்தை காப்பாற்ற வேண்டும்...பெளத்தமும் ,இஸ்லாமும் அதை செய்யப்போவதில்லை... சைவமும் கிறிஸ்தவமும் தமிழ்மொழி ஊடாக தாக்கு பிடிக்கும் சந்தர்ப்பம் உண்டு...காலம் பதில் சொல்லும் 50 வருடங்களின் பின் சிங்களவர்களே இந்தியாவிடம் தங்கள் நிலப்பரப்பை இழந்து விடுவார்கள் , சிறிலங்காட‌ ஜெயவேவா என்று சொல்வதற்கு பதிலாக ,ஜெய்ஹிந்த் சொல்லவேண்டிய நிலை வருமோ தெரியாது
  19. அமெரிக்க கடன் 39 ரில்லியன்!!! --- --- --- *சீன யுவான் சர்வதேச சந்தையில் 30 சதவீதமாகும் வாய்ப்பு *சீன யுவானில் எரிசக்தியை கொள்வனவு செய்த இந்தியா! *ஈழத்தமிழர்கள் சீன அபிவிருத்தி திட்டங்களை ஏன் எதிர்த்தனர்? --- --- --- ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர், அமெரிக்க டொலரை (Us Dollar) காப்பாற்றும் நோக்கில் சீன யுவானுக்கு (Chinese Yuan) எதிராக நடத்தப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் காலம் காலமாக அமெரிக்க டொலர் ஒற்றை நாணயமாக செல்வாக்குச் செலுத்தி வந்தது. எண்ணெய் வர்த்தகத்தில் கூட அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. தற்போதும் சர்வதேசச் சந்தையில் சுமார் 80 வீதம் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில், சீனாவின் யுவான் நாணயம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரண - காரியமாக ரசியாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, மோடிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்தியா, ரசியாவிடம் இருந்து சீன யுவானில் 10.2 வீதமான கச்சா எண்ணெய்யை கொள்வனவு செய்ததாக ரொய்டர்ஸ் (reuters) செய்தி நிறுவனம் சென்ற 19 ஆம் திகதி தெரிவித்திருந்தது. ஆனால் இது பிரத்தியேகமான கட்டண முறை அல்ல, ஏனெனில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நெகிழ்வான கட்டண விதிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரசிய எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சொரோகின் (Pavel Sorokin) தெரிவித்துள்ளார். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஈரான் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், இந்தியா வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை யுவானில் கொள்வனவு செய்தால், அமெரிக்காவுக்கு மிகப் பெரும் தலையிடியாக அது இருக்கும் என்று எக்கனாமிக் ரைமஸ் (economictimes) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 120 பில்லியனுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய உள்ளடக்கிய வளைகுடா நாடுகள், சீன- ரசிய மற்றும் இந்தியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இணைந்த பின்னர், உலக எரிசக்தி விற்பனை 80 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைவடைந்துள்ளது. சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் நுழைவது பற்றி அல்ஜசீரா ஊடகம், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி என வர்ணித்துள்ளது. ரசியா - ஈரான் ஆகிய நாடுகள் தமது சர்வதேச வர்த்தக செயற்பாடுகளை யுவானுக்கு மாற்றியுள்ளதாக அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் ஆகக் குறைந்தது 30 சதவீதத்தை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான ஈரான் போன்ற நாடுகள் சீன யுவானில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. தற்போது ஆயுத உற்பத்திக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சீனா, ஈரானுக்கு வழங்குகிறது. ஆகவே, இப்பின்னணியில் ”பிறிக்ஸ்” (BRICS) பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சியும் வளைகுடாவை மையப்படுத்திய மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் எல்லாமே பிறிக்ஸில் இணைந்துள்ள பின்னணியில், தற்போது அமெரிக்காவின் தேசியக் கடன் $38.5 ட்ரில்லியனாக உயர்ந்து, வட்டிச் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 இன் பிற்பகுதியில், மாதாந்த வட்டி செலுத்துதல்கள் மட்டும் $276 பில்லியனைத் தொட்டன, இது இப்போது சில கூட்டாட்சி நிறுவனங்களின் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் போட்டியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் விகிதம், ஏறத்தாள 126% இருப்பதால், "நிதி ஆபத்து மண்டலம்" (Financial risk zone) என்று அழைக்கும் பகுதிக்குள் அமெரிக்கா நுழைவதாக எக்கனமிக் ரைம்ஸின் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரச் சரிவுகளின் போது அது ஒரு நாட்டின் முன்னோடித் திறனை வரலாற்று ரீதியாக வரம்புக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் $8 பில்லியன் கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைமையை அடைகிறது. $38.5 ட்ரில்லியன் கடன் என்பது உடனடிக் கணிப்பீடு. ஆனால், இத் தொகை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மிக நீண்ட வட்டி விகிதத்தை அமெரிக்கா செலுத்தியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு எக்கனமிக் ரைம்ஸ் விளக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்புகள் 1.5% இற்கு கீழ்நோக்கி அமைந்துள்ளன. இது அமெரிக்கா சேர்த்து வைத்த உறுதியான நிதிக் கட்டமைப்பை அடித்துச் செல்லும் சுனாமி போன்றது என எக்கனமிக் ரைம்ஸ் வர்ணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளும் சர்வதேச சந்தையில், பல்வகை நாணய பயன்பாட்டுக்கு ((Multi currency) இணங்கி வரும் சூழலில், ஒற்றை நாணயச் செயற்பாடு (Single currency) என பிடிவாதமாக நின்ற அமெரிக்காவும் அதன் டொலரும் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளது. ஆனால், இந்த விடயங்கள் தொடர்பாக ட்ரம்ப் ஆராய்வதாக இல்லை. ட்ரம்பினுடைய உடனடிக் கவனம் என்பது ஈரான் அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கைப்பற்றி அதன் ஊடாக எண்ணெய் வருவாய்களை அதிகரிப்பது மாத்திரமே. சர்வதேச சந்தையில் ஒற்றை நாணய பயன்பாட்டை தொடர முடியும் என ட்ரம்ப் நம்புகிறார். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர், குறிப்பாக ஈரானின் மூளையாக செயற்படும் சீனாவினால் ட்ரம்பின் இந்தக் கனவுக்கு இடமளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், அமெரிக்க கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் கூட ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒத்துழைப்பதாக இல்லை. இந்தியாவும் ரசிய - சீன கூட்டு என்ற நிலைமக்குள் தற்போது வந்துள்ளது போல் தெரிகிறது. ஆகவே, ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது பட்டவர்த்தனம். ஆனாலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள்- அமெரிக்க தீர்மானம் எடுப்போர் அது பற்றி தீவிரமாக ஆராய்கின்றனர். இருந்தாலும் சர்வதேச சந்தையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் தாக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்த முடியாது என விஞ்ஞானியும் பசிபிக் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனருமான பீட்டர் க்ளீக் (Pacific Institute co-founder Peter Gleik) குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் கடன் (loan) என்பது நேரடியானது அல்ல. அமெரிக்க மக்கள் (individual investors) வங்கிகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள் (mutual funds - pension funds) அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அரசு அமைப்புகள் (Social Security fund) ஆகியவற்றிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. அமெரிக்க அரசின் அரச பத்திரங்கள் எனப்படும் பிணைமுறி (Treasury bonds / bills / notes) ஆகியவற்றை அமெரிக்கா விற்பனை செய்தும் நிதியை பெறுகிறது. அமெரிக்க மக்கள் மற்றும் ஏனைய நாடுகள் அந்த பிணை முறிகளை கொள்வனவு செய்கின்றன. இதுவே அமெரிக்க கடனாகவும் மாறுவதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. சுமார் 70%–75% கடன் அமெரிக்க உள்ளக முதலீட்டாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் சுமார் 80 சதவீதம் டொலரின் ஆதிக்கம் உண்டு என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்ட இக் கடன்கள், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்ற தொனியை அல்ஜசீரா ஊடகம் வெளிப்படுத்துகிறது. ஆகவே, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது 2025 ஆம் ஆண்டு மையப் பகுதியில் அமெரிக்காவுக்கு குறிப்பாக ட்ரம்புக்கு இவை தெளிவாக தெரிந்த பின்னணியில் தான், இறக்குமதி ஏற்றுமதிகளில் அதிக வரியை (tariff tax) ஏனைய நாடுகள் மீது சுமத்தியுள்ளார் என்பது கண்கூடு. இந்தப் பின்புலத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுடன் இருந்த பொருளாதார உறவை மாற்றி ரசிய - சீன உறவு முறைமை ஒன்றுக்குள் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. இதனை இலங்கையும் சாதகமாக பயன்படுத்தி வந்தது. ஏனெனில், இலங்கை ஏற்கனவே சீன உறவை வைத்திருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க - இந்திய தயவை நாடியிருந்தது. ஆனால் ஈரான் போர் மற்றும் அமெரிக்க நிதி நெருக்கடிகள் காரணமாகவும் சீன யுவானில், இந்திய எரிசக்தியை கொள்வனவு செய்ய ஆரம்பித்தமையும் இலங்கைக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே, புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலுக்குள் எந்த ஒரு வல்லரசு நாடுகளையும் நேரடியாக ஆதரிப்பதை விட, தமது நாடு என்ற கொள்கையோடு செயற்பட்டால், நிலைமையை சமாளிக்க முடியும். குறிப்பாக அரசு அற்ற தேசிய இனங்கள் இக்கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குர்திஸ் இன போராளிகள் காலத்துக்கு காலம் அமெரிக்காவை ஆதரித்து பின்னர் அமெரிக்காவினால் தூக்கி எறியப்படுவது போன்ற காரணத்தால் இன்று வரை அவர்கள் தமது அரசியல் விடுதலையை அடைய முடியாத சிக்கல் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனநாயக சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகள், அமெரிக்க - இந்திய அரசுகள் என்ற இரண்டு அரசுகளைத் தவிர வேறெந்த அரசுகளுடனும் உறவை பேணவில்லை. ஏனைய நாடுகளுடன் ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய விடயங்கள் பற்றிப் பேசியதும் இல்லை. குறிப்பாக சீனா, வடக்கு கிழக்கில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை செய்ய முற்பட்டால் உடனடியாக எதிர்த்து, இந்திய விசுவாசத்தை காண்பிப்பது போன்ற உத்திகளை மாத்திரமே கையாண்டனர். ஆனால் அந்த உத்திகள் மிகத் தவறானது என ஏலவே, இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஈரான் போருக்குப் பின்னர் மாறவுள்ள உலக அரசியல் ஒழுங்கில் இந்திய - சீன உறவு, இந்திய - ரசிய உறவு வலுவடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக பொருளாதார முறைமைகளில் இந்திய - சீன உறவு மேலோங்கவுள்ள பின்னணியில், சீனாவுக்கு எதிரான இந்தோ - பசுபிக் பிராந்திய இராணுவ செயற்பாடுகளிலும் அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. பாதுகாப்பு விடயத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்பின்னணியில், ஈழத்தமிழர் தரப்பு இனிமேலாவது தமக்குரிய வெளியுறவுக் கொள்கையை வகுத்து சார்புத் தன்மை அற்ற உத்திகளை கையாள வேண்டும். ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்படுகின்றனர். அதேபோன்று அமெரிக்கா - இந்தியா - சீனா ஆகிய மூன்று நாடுகளையும், ஒரு புள்ளியில் நின்று கட்சி அரசியலுக்கு அப்பால் கையாளுகின்றனர். இந்திய வெளியுறவுக் கொள்கையோடு ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு அனுசரித்துச் செல்கிறது. ஆகவே, ஈழத்தமிழர் ”அரசியல் விடுதலை” என்பதை இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குள் முற்றாக மாற்றக் கூடிய ஏற்பாடுகளை அநுர அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள பின்னணியில். ஈரான் போரின் பின்னரான உலக அரசியல் ஒழுங்கில் கூட, ஈழத்தமிழர் பக்கம் நியாயம் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான வழிமுறைகளை தேட வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. இன்னமும் காலம் சென்றுவிடவில்லை. ஆனால், எந்த வகையான தயாரிப்புகளும் ஈழத்தமிழர் தரப்பில் இருப்பதாக அல்லது அதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0AenR8ViQdroSpnMHwMygXRdHfGGHBV82LF1u9JzQ2DFNn3ktrDVcsPov1qztvp92l/?mibextid=wwXIfr
  20. இருக்கலாம்.. சைபிரஸ் மீது ஏவப்பட்ட ஏவுகணை கூட ஈரானில் இருந்து வரவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு முன்னர் அறிவித்தது. முதலில் இதை ஈரான் உரிமை கோரியதாக சொன்னார்கள் 4000 கிமி போக கூடிய ஏவுகணை ஈரானிடம் உள்ளது என இதுவரை அறியப்படவில்லை ஒன்று வரும் வழியில் வெடித்தது, இன்னொன்று சுட்டு வீழ்தப்பட்டது என்றார்கள். ஆனால் சுட்டோர் யார் என்ற உரிமை கோரல் இல்லை. பிரித்தானியா அதீத மெளனம்
  21. அடபாவிகளா எரிபொருள் விலையை உயர்த்திவிட்டு வாங்கோ வாங்கோ என்றால் யார் வருவான்? பழைய அளவுக்கே எவரும் எரிபொருளை வாங்க மாட்டார்கள்.
  22. ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி அவிக்கின்றார்கள். உண்மை, பொய்யை பிரித்தறிய முடியாத நிலை. எதுவரை செல்கின்றது என பார்ப்போம்.
  23. 😂 நல்ல கதை சொல்லவா, நல்லா இழுத்து சொருகவா.. கருணைகொலை கத்தரி இலை கத்தாரில் போட்டது ஈரான் வலை முன்பே எசுலிளுளேன்… சிறிமா வீட்டில் சித்தப்பு சிப்பந்தி மாமா மகிந்த வீட்டில் மருமகனோ மைத்திரி யோடு, எல்லாம் ஓரல் வழிதான், மீழவ ம்ன்னகுல கசட்ச் கவற எழுத்தில் எழுதுவது அமைச்சரவை வழக்கம் இல்லை, டுமீல் குப்பம் வெளவாலு…நலன்கு புகுபுடு தெரியாதவன் மொக்கு, தக்காளி தொக்கு. மேற்கு அவுஸ்ரேலியாவிலும் கிழக்கேதான் சூரியன் உதிக்கும், இது ராஜதந்திர ரகசியம் வெளிப்படையாக சொல்லமாட்டர்கள். முன்பே லொள்ச மரந்து டுட்பேன்.. சீனா தாய்லாந்து ஈரான் மேற்கு பெற்றொல் டாலர் யுவான் யங் சிகி உஆன் சுசிகி கவஆச்கி கர்தர் பெயரில் விபிலிய கிருமி.
  24. எனக்கு இஸ்ரேல் மீதே சந்தேகம். பிரித்தானியாவை இழுத்துவிடும் நோக்கமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.