stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இதனை ஏன் கூறினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நல்ல மனிதர் என்று எப்படி முடிவுசெய்தீர்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை எம்மை அழித்தவர்கள் நிம்மதியாக வாழவோ அல்லது அமைதியான வழியில் மரணிப்பதையோ நான் விரும்பவில்லை. அவர்களின் குற்றங்களுக்கான தண்டனையினை அவர்கள் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும், ஏதோ ஒரு வகையில். அதிலும் குறிப்பாக ஒரு இனத்தின் இருப்பையே நிர்மூலமாக்கிவீட்டுச் செல்பவர்கள் தமக்கான தண்டனையினை அனுபவிக்கவேண்டும். இதனைக் கூறுவதால் நான் கெட்ட மனிதன் என்று ஆகுமானால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது எப்போது நடந்தது? அமெரிக்கா இதனை யாரிடம் தெரிவித்திருக்கிறது? தமிழர் பற்றி அமெரிக்கா திடீரென்று அக்கறை கொள்வது ஏன்? இதனை எப்படி அறிந்துகொண்டீர்கள்?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அழுந்திச் சாதல் என்பதன் மூலம் நான் சொல்ல வந்தது சாகும் தறுவாயிலாவது தான் ஈழத்தமிழருக்குச் செய்த கொடுமைகளை நினைத்துக் கொண்டு சாகவேண்டும் என்பதுதான். அதைவிடுத்து சாதாரண மரணம் என்பது கூடாது என்பதே எனது எண்ணம். அடுத்தது, தான் செய்த கொடுமைகளுக்கான தண்டனையினை அவர் வாழும் காலத்தில் அனுபவிக்கவேண்டும். அவர் சாகும் முன்னர் இது நடக்கவேண்டும். இவருக்கெதிரான வழக்குகள் பதியப்பட்டு இவரது குற்றங்களுக்கான தண்டனை கிடைக்கவேண்டும். இதுவே நான் விரும்புவது. உதாரணத்திற்கு ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமலும், கைதுசெய்யப்படாமலும் உலகின் ஏதோ ஒரு மூலையில், வயது முதிர்ந்து மரணிக்கும் தறுவாயினை எட்டுகிறான் என்று ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட அவனை, "வயது முதிர்ந்த ஒரு மனிதனை அழுந்திச் சாகு என்று கூறுவது சரியில்லை" என்றுதான் சொல்வீர்களோ? நீங்கள் மிகச் சிறந்த மனிதாபிமானியாக இருக்கலாம், என்னால் அப்படியிருக்க முடியாது. ஒற்றை மனிதனின் மரணத்திற்காக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்றும், அவர்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்தும் பழிவாங்கிய ஒருவரை சாதாரணமாக "வயது முதிர்ந்த மூதாட்டி" என்று கருணை காட்ட என்னால் முடியவில்லை. அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீங்கள் சென்று கூறிப்பார்க்கலாம். ஒருவர் வயது முதிர்ந்துபோவதால் மட்டுமே அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா என்ன?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
தனிநாடு என்பது எமது சிந்தனை வட்டத்திற்குள் இருந்து காணாமற்போய் பல வருடங்கள் கடந்துவிட்டது. எம்மில் எவரும் இப்போது தனிநாடு பற்றி யோசிப்பதில்லை. எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்கிற அவலமான நிலையில் நாம் இருப்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அதனை ஏன் செய்யவேண்டும்? புலிகளை முற்றாக அழித்தபின்னர், தமிழருக்குக்கான நியாயமான தீர்வினை நான் வழங்குவேன் என்று மகிந்த எம்மிடம் வாக்குறுதி அளித்தார், நாமும் அதனை நம்பியே போருக்கான உதவிகளைப் புரிந்தோம், ஆனால் போர் முடிந்தபின்னரோ மகிந்த எம்மை ஏமாற்றிவிட்டார் என்று தாமே முன்னின்று நடத்திய இனக்கொலையினை பசப்பு வார்த்தைகளால் அன்று மூடி மறைத்த காங்கிரஸ் கட்சி, தான் பதவியில் இருந்து விரட்டப்படும்வரை குறைந்த பட்சத் தீர்வான 13 ஆம் சட்டத் திருத்தத்தைத்தன்னும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அப்படியிருக்கையில் இனிமேல் அதனைச் செய்யும் என்று எப்படி நம்புகிறீர்கள்? குறிப்பாக ஈழத்தமிழர் மீது இன்றுவரை, அடிமட்டத் தொண்டன் முதல் கட்சியின் தலைமைவரை தனிப்பட்ட ரீதியில் பகையுணர்வு பாராட்டும் காங்கிரஸ் கட்சி எதற்காக எமக்கான தீர்வைத் தர விரும்புகிறது? அதனைச் செய்யவேண்டிய தேவை அதற்கு ஏன் வருகிறது? இல்லை. உண்மையாகவே நீங்கள் ரஸ்ஸிய அபிமானி என்று நாம் நம்புகிறேன். அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி இந்தியா இன்றுவரை ரஸ்ஸியாவின் எண்ணையினையும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. அதாவது ரஸ்ஸியாவுடன் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை இந்தியா கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்தியாவுடன் பகைக்கவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று எழுதினேன். மற்றையவர்களுக்கு எழுதிய கருத்தில் உங்களை மேற்கோள் காட்டியதன் காரணம் உங்களின் சிந்தனையினை மற்றையவர்களுக்கும் அறியத்தரவே. இதில் குழுச்சேர்ப்பு இடம்பெற்றிருப்பின், அதனையும் மறுக்கவில்லை.
- Today
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகப்போகும் நட்பு எவ்வாறு ஈழத்தமிழருக்கு உதவியாக அமையும்? அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகப்போகும் நட்பு எமக்கு எந்தவிதத்தில் உதவும் என்று கருதுகிறீர்கள்? 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்கிறது என்பதற்காகவே இந்திரா அம்மையார் ஈழத்தமிழருக்கு உதவ முன்வந்தார், அதுகூட இந்தியாவின் நலன்களுக்காக மட்டும்தான், ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக இல்லை என்பது எமக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் எதிரும் புதிருமாக இருந்த காலத்தில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எமக்கு உதவ வேண்டும் என்கிற அழுத்தம் அன்று இருந்தது. ஆனால் அமெரிக்காவோ இன்று இந்தியாவுடன் நட்புப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறபோது, எமக்கு உதவ வேண்டும் என்கிற தேவையோ அழுத்தமோ காங்கிரஸின் இந்தியாவிற்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சரி, இந்தியா வழங்கப்போவது இல்லை, ஆனால் அமெரிக்காவே தீர்வை வழங்கும் என்று நீங்கள் கருதினால், அது எப்படி நடக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எமக்கான தீர்வை அமெரிக்கா ஏன் வழங்க விரும்புகிறது? அதற்குப் பிரதியுபகாரமாக அமெரிக்கா எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறது?
-
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.
ஹரிணிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன். பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது. முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன. ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன. “உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார். ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது. இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை. தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள். ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு. அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது? ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார். இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்? ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு. கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது. https://athavannews.com/2026/1459414
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!

கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன. அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர். இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது. மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின. அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்" பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல் அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love, or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை. கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது. மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது. உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை. ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது. மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக. கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்]. அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம். தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்.. உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும் ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும் உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான் உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது உண்பது நாழி உடுப்பவை இரண்டே உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
-
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்றும் விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459396
-
சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா!
அடேங்கப்பா… இனி, சீனா பாடு திண்டாட்டம்தான்.
-
மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தேவை. 😂 - விசர் தம்பர். - 🤣
-
தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். https://athavannews.com/2026/1459391
-
மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
பைத்தியம் பிடித்தவனுக்கு... நோபல் பரிசு கொடுக்கக் கூடாது! 😂 🤣
-
கருத்து படங்கள்
- ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!
ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்! பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1459342- சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா!
சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா! பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர். இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது. சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது. https://athavannews.com/2026/1459360- ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!
ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைரா பகுதியில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459368- மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
ட்ரம்பு தான்.... நோபல் பரிசு தனக்கு வேணும் என்று, அடம் பிடிக்கிறான் சார்.- 2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு!
2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு! Published By: Digital Desk 1 11 Jan, 2026 | 10:03 AM இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வருடம் ஏழு முக்கிய பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின்படி, இந்த ஆண்டின் முதல் பரீட்சையானது 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும். இது 2026 ஜனவரி 11ஆம் திகதி நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சையின் (General Certificate Of Education Advanced Level)மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும். 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும். 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஒகஸ்ட் 9ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும். 2027ஆம் ஆண்டு, முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை(GIT) 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும். இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235715- மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
நோபல் பரிசை யாருக்கும் மாற்ற முடியாது! ; மச்சாடோ கருத்துக்கு நோபல் நிறுவனம் அதிரடி பதில் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 10:37 AM வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு நேர்காணலில் சூட்சுமமாக தெரிவித்தார். இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே நோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ சட்டப்படி இடமில்லை. நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, விருது குறித்த தீர்மானம் இறுதியானது மற்றும் நிலையானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. விருது பெற்றவர்கள் அதன் பின்னர் செய்யும் செயல்கள் அல்லது அவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து நோபல் குழு எந்தவித விமர்சனமும் செய்யாது. மச்சாடோவிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பரிசைப் பெறுவது தனக்குப் பெருமை அளிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் வொஷிங்டனில் இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், நோபல் நிறுவனத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நோபல் குழுவின் விதிகளின்படி அந்த கௌரவம் அவருக்கு மட்டுமே உரியது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235724- இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Jan 10, 2026 - 11:30 PM இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk8m1qit03rio29nf6wwpyil- இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
தாழமுக்கம் வலுவிழக்கிறது; மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! Jan 11, 2026 - 06:30 AM மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மீனவர் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்பகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும். எனினும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk911iym03rjo29nfe7yw7xe- "பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்?
"பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Lakshmi Jangde படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது." சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார். அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது. இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும். பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர். இந்த நிலை ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார். 40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர். தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது. மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது. பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார். ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது. இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள். மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார். உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார். இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார். பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார். அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும். ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. "கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார். நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது. வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. "ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார். ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். "இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர். சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார். ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது. தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o- வெனிசுலா அதிபரை கைது செய்தது போல், புடினை கைது செய்ய உத்தரவிடும் சாத்தியம் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
வெளியில் இப்பொது வரும் கதை. ரசூசிய இதுவரை சொல்லி வந்ததை அமெரிக்கா சரி, யதார்த்தத்துக்கு இடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளது. டிரம்ப் இதில் வகிபாத்திரம் மாத்திரம்,- தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
ஓம் அது உண்மை தான் கிரீன்லாந்து டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும் ஆனால் விரிவான சுதந்திரத்தை சுயாட்சியை அனுபவிக்கிறது. ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளை மேற்குலநாடுகள் வலிந்து கடத்தி வரவில்லை அவர்களாகவே வலிந்து விரும்பி வந்து சுதந்திர வாழ்வை அனுபவிப்பதுடன் ஒப்பிடலாம் - ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.