Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நீங்கள் பிழைக்க தெரிந்த ஆள், பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொண்டு எங்களை இத்து போன கூட்டணியில் இணைத்துவிடப்பார்க்கிறீர்கள், தமிழ்நாட்டு வழக்கில் சொன்னால் உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா, அன்ட்ரேமார்க்கும் இல்லை உங்க காட்டிலை மழைதான்.🤣
  3. அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️
  4. அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.
  5. ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன். தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது…. இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன். வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது. பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.
  6. யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂
  7. இந்த விவகாரம் (விஜயின் குடும்ப விவகாரம்) த வெ க இனை தேர்தலில் பாதிக்கும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்து என்ன?
  8. ஓம்…ஆனால் ஈராக், சிரியா, லிபியா போல ஆகக்கூடாது. அதுதான் எனது ஒரே யோசனை.
  9. Yesterday
  10. இந்திய முன்னால் வீரர்கள் இந்தியா இப்போட்டியில் மிக இலகுவாக வென்றுவிடும் என கூறியுள்ளனர், இந்தியணியின் நம்பிக்கை உயர்வாகவுள்ளது. இவ்வாறான கருத்துக்களை பார்க்கும் போது இன்றைய இறுதி போட்டி ஒரு பக்க சார்பான (இந்திய) போட்டியாக மாறவாய்ப்புள்ளது போல காணப்படுகிறது. நியுசிலாந்து பார்வையாளர்களை ஏமாற்றி விடக்கூடாது, ஒரு தரமான கடும் போட்டியினை இந்தியாவிற்கு வழங்கவேண்டும்.
  11. சரி நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை. இதோ ஆதாரங்கள் இலங்கை vLexRATNAMMA v. RASIAH. இரெட்ணம்மா எதிர் இராசையா என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு - தாலி கட்டி இந்து முறை படி செய்த திருமணம், பதியப்படாவிடிலும், தம்பதிகள் கணவன்-மனைவியாக ஊரறிய வாழ்ந்திருப்பின் சட்ட வலுவுடையது என்கிறது. ஆனால் பொது விவாக சட்டதின் அடிப்படை கூறுகளான, தகாத உறவு, சிறார் மணம் போன்றவற்றை மீறும் எந்த கலாச்சார திருமணத்துக்கும் நீதி மன்றம் சட்ட வலு கொடுக்காது. மேலதிக தகவல்கள் கீழே. https://www.scribd.com/document/591706099/2-චාරිත-ර-නුකුල-විවාහය இந்தியா “சப்தபடி” எனும் 7 சம்பிரதாயங்களை பூர்த்தி செய்யும் இந்து திருமணம் சட்டபூர்வமானது எனவும், இதை நிரூபிக்க பதிவு தேவையில்லை ஆனால் விரும்பினால் அதையும் செய்யலாம் என இந்திய இந்து திருமண சட்டம் 1955 சொல்கிறது. Bhatt & Joshi AssociatesValidity of Hindu Marriage Customs and Rites Under Indian...Explore the legal validity of Hindu marriage customs under Indian law and the importance of ceremonial compliance.
  12. நெத்தன்யாகுவின் குடும்பம் புளோரிடாவில் உள்ளதாக கூறுகிறார்கள், உண்மை நிலவரம் தெரியாது. இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றி பற்றிய செய்திகள் பரவலாக ஊடக தரப்பில் வெளிச்சம் போட்டுக்காட்டும் விகிதத்துடன் ஒப்பிடும் போது போர் நீடிக்கும் கால அளவுகளை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே உள்ளது, ஆனால் போர் வெற்றி ஈட்டப்படும் வரை தொடர நினைத்தால் அது அனுமனின் வால் போல நீண்டு போகும் அதனால் எந்த இலாபமு ஏற்படாது நட்டமே ஏற்படும். அதனால் ஈரான் அணுகுண்டு ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது (முன்பும் இவ்வாறே கூறினார்கள்), கமேனி கொல்லப்பட்டுவிட்டார், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டது (ஈரானிடம் தாக்குதலை நிறுத்த சொல்லி விட்டு) என கூறி போரினை முடித்து வைக்கலாம்.
  13. அண்ட புழுகு, ஆகாச புழுகு, இது ஏஐ புழுகு… இந்திய படையை இலங்கையில் இறக்கி இந்திய தூதரகத்துக்கு அல்வா தீத்திய சிறி அண்ணைக்கே வீபூதி அடிச்சிட்டியே பரமா😂. வந்த கையோட, நீலங்கரை வீட்டில் உள்ளே போக விஜை அனுமதி மறுப்பு. அதில் எனக்கு சரிபாதி உண்டு. சென்னையில் இருக்க வீடில்லாமல் தவிக்கிறேன் என ஒரு மேலதிக மனுவை கோர்ட்டுக்கு தட்டி விட்டுள்ளார் சங்கீதா அண்ணி. அண்ணை @குமாரசாமி என்ன சத்தத்த காணோம்?
  14. நிதிக்கடத்தலலின் பின்னணியில் முன்னால் புலனாய்வாளர்கள் உள்ளது ஒரு வகை சதித்திட்டத்தின் பங்காக இருக்கலாம், கங்கேரி மீது ஒரு தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் அல்லது அதன் அரச தேர்தலில் செய்யப்படும் இடையூறுகளாகவும் இருக்கலாம். ட்ருஸ்பா எண்ணெய் வழங்கி உக்கிரேன் பிரிவில் எந்த வித சேதமும் காணப்படவில்லை என்பதனை செய்மதி பட மூலம் காட்டுகிறது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறமையினை மீறும் செயல்களில் தொடர்ச்சியாக உக்கிரேன் ஈடுபடுகின்றது, முதலில் இந்த எண்ணெய் வழங்கி மீது தாக்கிய போது செலன்ஸ்கி கருத்துக்கள் என்பன ஒரு திட்டமிடாத எதிர்வினையாற்றும் நடவடிக்கையாகவும், ஒரு நீண்டகால இராஜதந்திர சிக்கலை உருவாக்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது. உலக ஒழுங்கு மாற்றம் இப்போது ஆதரவாக உள்ள சக்திகள் நாளை கை கழுவி விடும் நிலை ஏற்படலாம் எனும் நிலையில், தற்போது நிகழ்த்தும் சில செயல்கள், கருத்துக்கள் நீண்ட கால நோக்கில் உக்கிரேனுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் சில மாற்றங்களை ஐரோப்பாவில் ஏற்படுத்த தொடங்கிவிட்டததிற்கான ஆரம்ப கட்ட மாற்றங்கள் தெரிய தொடங்கி விட்டது, தற்போதய நிலையில் எவ்வளவு காலம் மத்திய கிழக்கு நிலை நீடிக்கும் என தெரியாத நிலையில், சில தடாலடி அரசியல் கொள்கை மாற்றம் ஐரோப்பாவில் நிகழலாம்.
  15. ஆம். ஒரு ஏவுகணையின் விலை சும்மா இலகுவாக குறிப்பிட்டு இது சாதாரணமானது, இதை விட விலை கூடிய ஆபத்தான ஆயுதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று கணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணுஆயுதத்தை பாவிப்போமென மிரட்டுகிறார்கள், பொது மக்களின் உழைப்பில், அந்த மக்களை, அவர்களின் சீவியகால உழைப்பை, கனவை அழிக்கிறார்கள். இதனால் இவர்கள் காணும் பயன் என்ன? உலகம், மக்கள் இருந்தாற்தானே இவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்ட முடியும். அணுகுண்டை பாவிப்போம் என்று எதிரியை மிரட்டுவார்களே அன்றி பாவிக்க மாட்டார்கள். நெதன்யாகு தலைமறைவு என்றும் சொல்கிறார்கள். உலக நாடுகள் சேர்ந்து ட்ரம்ப், நெதன்யாகுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை ஈரான் தோற்றாலும் ட்ரம்ப் ஈரானால் அழிக்கப்படுவார் அல்லது இந்தப்போரை வலிந்து ஈரான் மீது திணித்ததற்காக வருந்துவார் தவறான முடிவை எடுத்து விட்டொமேயென. மனித குலத்திற்கு எதிரான சாத்தான்கள் களை எடுக்கப்படவேண்டும்.
  16. இறுதிப் போட்டி நடைபெறப் போகும் வேளை, களம் இவ்வளவு அமைதியாக் கிடக்கு. ஒருத்தருக்கும் இரண்டு நாடுகளையும் பிடிக்காதோ.
  17. ஜனாதிபதி மன்னிப்பு தவறுதலாக கேட்டுள்ளார் - தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது ஈரானிய இராணுவ தலைமை. சுப்ரீம் லீடரும் இல்லை, 88 முல்லாக்களுக்குள் பிடுங்குபாடு, ஜனாதிபதிக்கு ஒரு மதிப்பும் இல்லை, இராஊவ தளபதிகளே நேரடியாக பவரை கையில் எடுத்துள்ளார்கள்.
  18. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதல்கள் நடத்திய நாடுகளிடம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதால் ஈரானில் உள்ள இலங்கை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போன்ற ஆட்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார். இவரின் வினோதமான மன்னிப்பு பரவலான வருத்தத்தை தூண்டியுள்ளதாகவும் பலவீனத்தை காட்டிவிட்டதாகவும் நாட்டின் தேசிய பெருமையை புண்படுத்துவதாகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டபட்டார். எங்கள் ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் உங்களிடமிருந்து இவ்வளவு அவமானகரமான மன்னிப்புக்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை இந்த இழிவான மன்னிப்பிற்கு ஈரான் ஜனாதிபதி தான் ஈரான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
  19. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதோடு அந்த நாடுகளின் அடுத்த இலக்கு தமக்கு உதவி செய்வோரே. துரோகியை, உதவி பெற்றவனே நம்பமாட்டான். இன்று இவன் தன் தலைவனுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு, இனத்திற்கு செய்யும் துரோகம் நாளைக்கு தனக்கெதிராக திரும்பாது என்பது என்ன நிட்சயம்?
  20. பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான வரலாறு ஈரான் விவகாரத்தில் அமெரிக்க இங்கிலாந்து நாடுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த ஈரான் போரை பெரிதாக பின் தொடரவில்லை, ஆனால் தற்போது அதன் தாக்கம் இரஸ்ஸிய உக்கிரேன் போரினை விட அதிகமாக உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆரம்பித்த போர் சரியான முறையில் செல்ல்லவில்லை போல உள்ளது, ஈரானில் தரைப்படை இறங்காமல் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியாது, ஆனால் தரைப்படையினை அனுப்ப அமெரிக்கா விரும்பவில்லை போல தெரிகிறது. இந்த போர் அமெரிக்க தரப்பின் பலவீனத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது போல உள்ளது, ஒரு வாரத்திற்கு மேலாகவும் தொடரும் போர் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உலக மனித குலத்திற்கு இன்னொரு சிரமமான போராக மாறியுள்ளது.
  21. வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல.....உலகில் எல்லா இடங்களிலும் உணவுக்கலப்படம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மேலைத்தேய நாடுகளில் மோசமான கலப்படங்கள் உள்ளது.எது, எப்படி என தெரிந்தால் ஒரு முறடு தண்ணீர் கூட குடிக்க முடியாது.
  22. இந்தியா எப்போது உண்மையின் பக்கம் நின்றது? அது, தான் ஆசியாவின் வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்கிறது. அதற்காக மேலெழும் நாடுகளை, இயக்கங்களை தடுக்கிறது. அமெரிக்காவை எதிர்த்தால் தனது வல்லரசு கனவு தகர்ந்துவிடுமென தயங்குகிறது. அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை இந்தியா. காஷ்மீர், இலங்கைத்தமிழர் மீதான தாக்குதல், துரோகம் அதற்கு சாட்சி! ஆனால் அமெரிக்காவிற்கு, தாக்க நினைத்தால் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, காரணமும் தேவையில்லை, தானே காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கும். ஒசாமா பின் லேடன், லிபியா முன்னாள் தலைவர் கடாபி போன்றவர்கள் அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்கள். தனது லாபத்திற்காகவே உதவி செய்வதாக மாயை காட்டி உள்நுழைப்பவர்கள். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது.
  23. இதுதான் உண்மை! மனித நேயம், அணுகுண்டு தயாரிப்பு குற்றச்சாட்டெல்லாம் சும்மா கூறப்பட்ட காரணங்கள். அந்த கறுப்பாடு பிடிபடாமல் இருந்திருந்தால்; அதுதான் ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்.
  24. துரோகத்தினால் காட்டிக்கொடுப்பில் கொல்லப்பட்டுள்ளார். முக்கிய தளபதி அயத்துல்லா அலி கமெய்னியுடன் கூட இருந்து குழி பறிக்கப்பட்டது. அலி கமெய்னியுடன் நிழலாக தொடர்ந்தானே. எங்களின் தலைவருக்கும் விடுதலைப்போருக்கும் நடந்தது இதே. இந்தப்போர் நமது விடுதலைப்போருடன், தாக்குதலுடன், அழிவுகள், இழப்புடன், காட்டிக்கொடுப்புடன் ஒத்துப்போகிறது. ஒரு பலமான அரசை, விடுதலை இயக்கத்தை அழிக்க ஒரு துரோகி துணைபோவதுடன் அந்த இயக்கமோ, அரசோ மீள எழாது எதிரியின் காலடியில் விழச்செய்துவிடும் என்பதற்கு ஈரான் தலைவரின் மரணத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த துரோகி பழியை சுமந்தவன், அதி உச்ச பாதுகாப்பு தலைவர் என்கிறார்கள், புரட்சிகர காவல் படையின் தளபதி என்கிறார்கள், பெயர் அலி ஷம்கானி என்று கூறப்படுகிறது. அந்தப்பதவிக்கேஅவமானம்! அவனால் தன் தலைவனை காட்டிக்கொடுக்க முடிந்ததென்றால், அவனை எவ்வளவு நம்பியிருந்திருப்பார்கள், அந்த நாட்டின் முதுகெலும்பாய் நினைத்திருந்திருப்பார்கள், தலைவனுக்காய், நாட்டுக்காய் உயிரை கொடுப்பானென எண்ணியிருந்திருப்பார்கள். இவனுக்கு ஏற்படப்போகும் முடிவுக்கு இவனை பயன்படுத்தியவர்கள் வருந்தப்போவதில்லை, மன்னிப்பு கேட்கபோவதுமில்லை.
  25. உக்ரேன் போர் ஆரம்பத்ததிலிருந்தே நாம் இதைத்தானே சொல்லிக்கொண்டு வருகின்றோம். ஐரோப்பாவிலேயே ஊழலுக்கும் உதவாத தொழில்களுக்கும் பெயர் போன நாடு. இது எனக்கு 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். இவர்களை நம்பி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேன் எனும் ஆற்றில் இறங்கியது சொந்த செலவில் சூனியம் செய்தற்கு சமன். இன்றைய ஜேர்மன் நாளிதழில் வந்த செய்தி இது.👇 Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.