stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முன்னர் கூறியது போல கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையேயான பலச்சமநிலையாக உக்கிரேனை இரஸ்சிய உக்கிரேன் முடிந்த பின்னரும் பயன்படுத்தும் நோக்கம் இருக்கலாம் அதற்காகவே 800000 உக்கிரேன் இராணுவத்தினை பேண வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்நிற்கிறது என கருதுகிறேன், இரஸ்சிய எரிபொருளை வாங்கும் கங்கேரி, ஸ்லோவாக்கியாவின் இரஸ்சிய ட்ருஸ்வா எரிபொருள் வழங்கி மீதான தாக்குதல், ஜேர்மனி மற்றும் போலந்து தொடர் நெருக்கடிக்கு போலந்திற்Kஉ ஒரு பலச்சமனிலையாக உக்கிரேனை ஜேர்மனி பார்க்ககூடும். இந்த பலச்சமனிலை பூகோள அரசியல் பனிப்போர் கால உத்தி, இந்த பழைய பனிப்போர் கால அதே பழைய உத்தியினைத்தான் தற்போது ட்ரம்பும் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம் என பழைய கள்ளு புதிய மொந்தையிலாக அமெரிக்க மூலோபாயம் வந்துள்ளது(சீனாவினையும் இரஸ்சியாவினையும் பிரித்து வைப்பது). ட்ரம்ப் இன்னும் ஒரு படி மேலே போய் ஐரோப்பாவினை தள்ளி வைத்துள்ளார் (மொன்ரோ கோட்பாடு). இது பிரித்தானியர்கள் காலனித்துவ காலத்திலேயே பயன்படுத்தும் பிரித்தாளும் அதற பழசான உத்தி. அரசியல் ஆய்வாளர்கள் இனி இதெல்லாம் சரிவராது எனக்கூறுகிறார்கள். இதனைத்தான் எம்மவர்கள் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
- யேர்மனியின் Gelsenkirchen நகரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வங்கிக் கொள்ளை
கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பக அறையின் தரையில் உள்ள கோப்புகள் சிதறிக் கிடப்பதோடு, அந்த அறையில் இருந்த பெட்டிகளும் உடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை. இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்னால் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மறு அறிவித்தல் வரை, வங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படாது என அறிவிப்புகள் பலகையில் போடப்பட்டிருக்கின்றது. புது வருடம் வரும் நேரத்தில் இது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றில்லை, சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தும் blue NewsGermany: Hole in vault triggers rush of bank customersUnknown persons have broken into a bank building in the German city of Gelsenkirchen and ransacked several safe deposit boxes. According to police, the perpetrators used a large drill to get into the- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
அவுஸ்ரேலியாவில் இதே போல் ஒரு சம்பவம் நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்திருந்தது, பஞ்சாப் பின்னணியினை கொண்ட ஒருவரின் தந்தையினை வரவழைத்திருந்தனர், அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளையின குழந்தையினை தூக்கியதாகவும் அதனை ஆந்த குழந்தையின் தாய் காவல்துறையில் முறையீடு செய்து நீதிமன்றம் சென்று அவரின் மகன் நீதிமன்றில் இந்தியாவில் குழந்தைகளை தூக்குவது சாதாரண விடயம் அந்த மனநிலையில் செய்துவிட்டார் என கூறியும் அவரினை (தந்தையினை) நீதிமன்றம் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறினார்கள். இன்னுமொருவர் ஒரு வெள்ளையினை பெண் பின்னால் சுற்றிதாக நீதிமன்றம் சென்றபோது பொலிவூட் சினிமாவில் அவ்வாறுதான் காதலிப்பது என நீதிமன்றில் கூறியதாக வாசித்த நினைவுள்ளது. வேறுபட்ட கலாச்சாரங்களில் வந்தவர்களினால் அறியாமையினால் ஏற்படும் தவறாக இருக்கலாம்.- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இவர். சிறந்த. பௌருளதாரக். கொள்கை. கொண்டவர் என்று. முன்பு. நீங்கள். இந்த. களத்தில். எழுதியுள்ளீர்கள் இல்லையா ?. அங்கிக்கு. கிட்டவும். நிற்க. முடியாத. மனிதன். எதோ. நடக்கட்டும். நடப்பதை. இருந்து பாரப்போம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடுவரின் (கிருபன்) தீர்ப்பே இறுதியானது என்பதால், நான் போட்டியில் தொடர்வதில் சந்தோசமே, யாழ்கள போட்டியில் கலந்து கொள்ளும்போதுதான் போட்டி சுவாரசியமாகிறது (போட்டியினை மைதானத்தில் இருந்து பார்ப்பது போல கள உறவுகளுடன் போட்டியினை பார்க்கும் ஒரு அனுபவம்).- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நித்தியாநந்தா அல்ல டக்லசின் பெயர். அவர் இயற்பெயர் வேறு. இயக்க பெயராக டக்லஸ் தேவானந்தா என்பதை சூடி கொண்டார். இது நித்யானந்தா மீது உள்ள பற்றால் அல்லது அவரின் புகழ் தன் மீதும் கொஞ்சம் பட வேண்டும் என்பதால். பனை அபிவிருத்தி சபையில் டக்கா அதிகாரம் செய்ய வரும் போது, நித்யானந்தா இல்லை என நினைக்கிறேன். ஈபிடிபி க்கு எப்போதும், இன்றும் 10% வாக்கு உண்டு. மிகுதி எல்லாம், 1994 தேர்தலில் வாக்கு சீட்டை புத்தகத்தோடு தூக்கி பெட்டியில் போட்ட வாக்குகளால் கிடைத்த எம் பி சீட்டுகள்.- வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
நான் இவரை முன்னர் அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜஸ்டின். உங்களின் மிகச் சுருக்கமான வடிவத்தில் இருந்து, இந்த நாவல் மிகவும் பக்கச் சார்பாகவும், அடிப்படையிலேயே தவறுகள் உள்ளது போன்றும் தெரிகின்றது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இதை வாசிக்க வேண்டும் என்றிருக்கின்றேன். எவ்வளவு தான் மொழிகளில் ஆற்றல்கள் இருந்தாலும், மண்ணுடனும் அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டி ஒட்டி வாழ்ந்திருக்கா விட்டால், பல விடயங்களை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன்.- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 76 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 12: இது புத்தரின் நம்பிக்கையை பல நாடுகளுக்குப் பரப்புவது பற்றியது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் நாக மன்னர்கள் மற்றும் நாக இனம் பற்றிய பாரபட்சம் உள்ளது. இது இந்த அத்தியாயத்தில் பிரதிபலிக்கிறது. இந்த அத்தியாயம் இலங்கையில் உண்மையில் நடந்த எந்த வரலாற்று நிகழ்வுகளையும் பாதிக்காத ஒன்று ஆகும். இருப்பினும், பகவான் புத்தரின் பெயரில் வரலாற்றுத் திரிபு இங்கு நடந்துள்ளது. மொகாலிபுத்தர் (Moggaliputta), தேரர்களை அருகிலுள்ள நாடுகளுக்கு புத்தரின் நம்பிக்கையைப் பரப்ப அனுப்பினார். அசோகரின் அரசுக்கு, இலங்கை அருகிலுள்ள அண்டை நாடு அல்ல. மகாவம்சம் மற்றும் தீபவம்சத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, அனுப்பப்பட்ட நாடுகள் மற்றும் தேரர்களின் பெயர்கள் அசோக மன்னரின் பாறை அரசாணை 13 உடன் சரியாக உறுதிப்படுத்தப் படவில்லை. பாறை சாசனம் 13 இன் படி, அசோகர் கலிங்கப் போருக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தர்மத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார் என்பதையும் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை விதிகளைப் பயன்படுத்தி நீதி மற்றும் நல்லாட்சி மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் மற்றும் இராஜதந்திர உறவுகளைக் ஏற்படுத்துவதையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில், தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா மற்றும் தாமிரபரணி வரையும் [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Cola, Pandya, Kerala, Satyaputra and as far as Tamaraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று தர்மத்தின் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது. தாமரைபர்ணி என்பது இலங்கை அல்ல, தாமரைபர்ணி நதிக்கரையோரப் பகுதிகளைக் குறிக்கிறது. தாமரைபர்ணி நதி இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாண்டிய நாட்டில் உருவாகி, பாண்டியர்களின் கடற்கரையான மன்னார் கடலுக்கு ஓடுகிறது. அசோகர் தனது எந்த ஆணைகளிலும் இலங்கை அல்லது அதற்கு உரித்தான எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் மேற்கூறிய தமிழ் நாடுகளை அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அரசாணையில் உள்ள தாமரைபர்ணியை எதிர் கடற்கரையில் உள்ள ஒரு இடமாகக் கருத முடியாது. வி.ஏ. ஸ்மித், 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,', என்ற குறிப்பில், இலங்கை என்பது தாமரைபர்ணி என்ற பெயரால் குறிக்கப்படவில்லை என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அசோகரின் ஆணை, சோழர்கள் மற்றும் பாண்டிய நாடுகளை தர்மத்தின் மூலம் அவர் கைப்பற்றிய நாடுகள் என்று தெளிவாகக் குறிக்கிறது, ஆனால் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டும் இந்த நாடுகளைக் குறிப்பிடவில்லை. புத்த மதம் தமிழ் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தது, மகிந்தன் அல்லது மகிந்தரால் காற்றில் பறந்து கொண்டு வந்தது அல்ல என்ற உண்மையை மறைக்க, இது வேண்டும் என்றே விடுபட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சொல்லப்படும் பொய்யை விட, ஒருவரின் தொடர்ச்சியான, கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் பெரும்பாலும் பகுத்தறிவற்ற நடத்தையின் விளைவாகக் கூறப்படும் பொய் இது என்று கருதுகிறேன். அது மட்டும் அல்ல, இந்தியாவில் மூன்றாம் பௌத்த சபை மற்றும் மொகாலிபுத்தர் தேரர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. வி.ஏ. ஸ்மித் [V. A. Smith], மூன்றாம் சபையையும் வரலாற்றுக் குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இலங்கையின் மதமாற்றத்தையும், சரியான வரலாறாக இல்லாமல், கட்டுக்கதைகளாகக் கருதுகிறார். ஏழாம் நூற்றாண்டின் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes transcribed Xuan Tsang), சோழ நாட்டில் தூபி [stupa] இருந்ததாகவும், திராவிட அல்லது பல்லவ இராச்சியத்தில் மற்றொரு தூபி இருந்ததாகவும் கூறுகிறார். இது அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்தவினால் / Vitashoka or Vigatashoka] கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முழு விவரங்களுக்கு 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற குறிப்பின் 49வது பக்கத்தைப் பார்க்கவும். இந்த தம்பி தான் தமிழ்நாட்டிலிருந்து புத்த மதத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றவர். என்றாலும் இலங்கைத் துறவிகள் தமிழ்நாடு வழியாக பௌத்தத்தின் தொடர்பை அழிக்க விரும்பினர் போல் தெரிகிறது. இதனால், அசோகரின் மகன் மற்றும் மகள், மகிந்த மற்றும் சங்கமித்தா ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களை உண்டாக்கினார் என வலுவாக நம்பலாம், ஏனென்றால், புத்தர் மற்றும் அசோகன் பிறந்த இந்தியாவில், இந்த இரு பிள்ளைகளையும், இந்தியாவின் வரலாற்றிலோ இலக்கியத்திலோ எங்குமே காணவே இல்லை. இதேபோல் தான், பேரரசர் அசோகா தனது ஒன்றுவிட்ட 99 சகோதரர்களைக் கொன்றார் என்ற கதையும் இருக்கிறது. 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் 47 முதல் 50 பக்கங்கள், இலங்கைத் தீவின் புத்த மத மாற்றத்தைப் பற்றி அலசுகிறது. Part: 76 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 12: This is about spreading Buddha’s faith to many countries. There are bias in both Dipavamsa and Mahavamsa about Naga kings and the Naga race. This is reflected in this chapter. This chapter has no bearing on any historical events that really took place in Lanka. However, historic distortion took place on the name of Lord Buddha. Moggaliputta sent Theras to propagate the faith to the adjacent countries. Lanka is not an adjacent, not a neighbouring, country to the Asoka’s kingdom. The names of countries and Theras sent to the countries as listed in the Mahavamsa and the Dipavamsa do not properly corroborate with the Rock Edict 13 of the King Asoka. Asoka sent missions, as per his Rock Edict 13, to Yona king Antiyoga, to four kings beyond the king Antiyoga, named Tulamaya, Antekina, Maka and Alikyashudala. Asoka speaks of conquest by Dhamma “likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”. Tamaraparni refers to the regions along the Tamaraparni River, not Lanka. Tamaraparani River originates in the Pandya country, in the present day Thirunelvelly District, and runs to Mannar Sea, the sea coast of Pandyas. Asoka never mentioned the name Lanka in any of his edicts, but he clearly states the above mentioned Tamil countries. Tamaraparni in the edict can never be construed as a place on the opposite coast. V. A. Smith, Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,' was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni. Asoka’s edict clearly identifies the Cholas and Pandya countries as the countries where his conquest by Dhamma took place, but both the Dipavamsa and the Mahavamsa do not mention these countries. This is a deliberate omission to hide fact that the Buddhism came to Lanka from Tamil countries and not by Mahinda by flying through air which is a pathological lie. There is no evidence for the Third Buddhist Council and the convenor Moggaliputta Thera in India. V. A. Smith considers the Third Council and the conversion of Ceylon as described in the chronicles as legends, and not as sober history. The seventh century Chinese pilgrim, Hiuen Tsang, says there was a stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom, believed to be built by Mahendra, the younger brother of Asoka. See page 49 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' for full details. This younger brother, Mahendra is the one who took Buddhism to Lanka from Tamil Nadu. The monks wanted to obliterate the connection of the Buddhism through Tamil Nadu, and invented a son and a daughter of Asoka, Mahinda and Sanghamitta. Similarly they invented the fictitious story that the Emperor Asoka killed 99 of his half brothers. There is no independent record in India, the birth place of Buddhism, Buddha, and Asoka about Mahinda and Sanghamitta. The Pages 47 to 50 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' are quoted below about the conversion of the island. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 77 தொடரும் / Will follow துளி/DROP: 1962 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 https://www.facebook.com/groups/978753388866632/posts/33048586891456532/?- Today
- வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night” குடும்பத்தை விடுமுறைக் கால அங்காடி மேய்தலுக்காக இறக்கி விட்டு பார்ன்ஸ் அன்ட் நோபிள் புத்தகக் கடைக்குள் நுழைந்து நடந்த போது தற்செயலாகக் கண்ணில் பட்டது வி.வி. கணேசானந்தனின் "Bortherless Night” என்ற நாவல். இது இந்திய எழுத்தாளரின் படைப்பா அல்லது இலங்கை எழுத்தாளரினுடையதா என்ற குழப்பத்திற்கான விடை அட்டைப் படத்திலேயே தெரிந்தது: சைக்கிளோடும் பெண்கள் எங்கள் ஊர் வர்த்தகச் சின்னங்கள், ஒரு heritage என்று கூடச் சொல்லலாம். அதிகம் புனைவுகளை வாசிக்காத நான், ஒரு ஆர்வத்தில் வாங்கி வந்து ஆமை வேகத்தில் வாசித்து முடித்தேன். இதைப் பற்றி எழுதுவதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்த போது விவிஜி யின் இன்னொரு சிறுகதை யாழில் இணைக்கப் பட்டிருந்தது நினைவிற்கு வந்தது. விவிஜி நேரடியாக "நாவல்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் கூட, இது ஒரு “வரலாற்று நாவல்”. 83 கலவரத்தில் பாதிக்கப் பட்ட ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம், வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து அதன் பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் போரினால் சூழ்ந்து கொள்ளப் பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. கொழும்பில் ஆரம்பிக்கும் நாவல் 2009 இல் நியூயோர்க்கில் முடிவடைகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால், 83 இல் இருந்து 2009 விடுதலைப் போரின் ஆயுதப் போராட்டம் நிறைவடையும் வரையான சம்பவங்களே நாவலின் சம்பவங்களாக விரிகின்றன. இந்த சம்பவங்களின் நாயகர்களும், நாயகிகளும் கூட, பெருமளவுக்கு நிஜமாக அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களே என்பது அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த ஒரு வாசகருக்கு இலகுவாகப் புரியும். எனவே, இந்தக் காலப் பகுதியில் வடக்கில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள், அரசியல் படுகொலைகள், இந்திய இராணுவ வருகையின் பின்னர் மோசமான மனித உரிமைகளின் நிலை, திலீபனின் உண்ணா நோன்பு, அந்தக் காலப் பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான ராஜினி திராணகம படுகொலை என்பன நாவலின் மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்வுகளின் விபரிப்பின் போது, பின்னணியில் வந்து போகும் பாத்திரங்களில் அந்தக் காலத்து புலிகள் இயக்கப் பிரமுகர்களையும் கூட இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. கிட்டு மாமா தனது "Honda CD200" இல் யாழ் வீதிகளில் பறக்கும் போது அவரது தோள்களில் சில சமயங்களில் அமர்ந்து பயணிக்கும் செல்லப் பிராணியான “மகாக்” குரங்கு கூட வந்து போகிறது கதையில். என்னுடைய புரிதலின் படி, நாவலின் முதுகெலும்பாகத் திகழ்வது புலிகள் அமைப்பு எவ்வாறு மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத, ஒற்றைத் தலைமையைத் தமிழர்களிடம் ஊன்ற விளைந்த ஒரு அமைப்பாகத் திகழ்ந்தது என்ற கதையாடல் தான். இலங்கை இராணுவம்/அரசு, புலிகள் அமைப்பு, இந்திய இராணுவம் என எல்லாத் தரப்புகள் மீதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனம் வைக்கப் பட்டிருந்தாலும், மிகப் பெரும்பான்மையான விமர்சனம் புலிகள் அமைப்பு மீதும், அடுத்த படியாக அதிக பட்ச விமர்சனம் இந்திய இராணுவம் மீதும் வைக்கப் பட்டு எழுத்தாளர் கதையாடலைக் கொண்டு செல்கிறார். புலிகள் அமைப்புப் பற்றிய விமர்சனங்களைப் பொறுத்த வரையில், சில விடயங்களில் உண்மைத் தன்மையும், உறுதி செய்யப் பட்ட தகவல்களும் அடிப்படையாக அமைந்திருந்தாலும், சில முக்கியமான இடங்களில் இணையத்தில் நடக்கும் அரட்டைகளின் வழி பெற்ற தகவல்களும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் கட்டிய கதைகளும் அடிப்படையாக பயன் பட்டிருக்கின்றன. உதாரணமாக, 90 களில் துரோகிகள் எனக் குற்றஞ் சாட்டப் பட்டு மின்சாரத் தூண்களில் கட்டிச் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அதிகமானோர் சாதி நிலையில் குறைந்தவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில்லாத சந்தேகங்கள் நாவலில் குறிப்பிடப் படுகின்றன. இப்படிக் கொல்லப் பட்டோர் எல்லோரும் துரோகிகள் அல்ல என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும், ஆனால் சாதி வேற்றுமை இவர்களது கொலைக்குக் காரணமாக இருந்தது என்பது தரவுகள் இல்லாத ஒரு புனைவு. இதே போல இன்னொரு உதாரணமாக பெண் கரும்புலியாகச் செல்லும் ஒரு போராளி இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளான ஒருவர் என்ற சித்திரிப்பும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஒரு பெண்ணிற்கு தமிழ் சமூகம் காட்டும் வேற்றுமையும், பழிவாங்கும் உணர்வும் கரும்புலிகளாக அந்தப் பெண்கள் மாற முதன்மைக் காரணம் என்பது போன்ற - சில சிங்கள/இந்திய பிரச்சாரவாதிகளால் கட்டப் பட்ட கதைகளின் அடிப்படையிலான- சித்தரிப்பு இது. இந்தப் புலிகளின் மீதான விமர்சனம் என்பது "என் தனிப் பட்ட அரசியல்" என்ற பொறுப்புத் துறப்பை விவிஜி பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். வேறு யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நாவலின் பின்னிணைப்பாக விவிஜி தந்திருக்கும் ஷெல்பி போல்க் என்ற எழுத்தாளருடனான உரையாடலில், "முறிந்த பனை" நூலினை வாசித்த பின்னர் தான் இந்த நாவலை எழுதும் தூண்டுதல் எழுத்தாளருக்கு உருவானதாகக் குறிப்பிடுகிறார். இந்த நாவலுக்கான தன் ஆராய்ச்சியை பல்வேறு நூல்கள், குறுந்திரைப் படங்கள், கட்டுரைகள் வழியாக மேற்கொண்டதாகவும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரைகள், இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பான நூல்கள் அனேகமானவை இந்தியாவின் நாராயணசாமி, இலங்கையின் அகிலன் கதிர்காமர், திருவரங்கன், ஹூல் சகோதரர்கள் ஆகியோரினால் எழுதப் பட்டிருப்பவையாக எனக்குத் தெரிகின்றன (நாவலின் மேலதிக வாசிப்புப் பட்டியலில் இவை இருக்கின்றன). அடிக்கடி இங்கே நான் தாயகத்தை "சின்னத்திரையில் பார்த்து விட்டு எழுதுவோர்" என்று சிலரைக் கண்டிப்பதுண்டு. அதே போல, ஒரு உள்நாட்டுப் போரின் சமூகவியலை - அதுவும் பெரும்பாலும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் சிவிலியன்களின் சமூகவியலை- வெறுமனே, ஒரு குறிப்பிட்ட பார்வை உடைய தரப்பின் வரலாற்று நூல்கள் , கட்டுரைகள் வழியாக மட்டுமே வாசித்து ஆய்வு செய்து ஒரு வரலாற்றுப் புனைவை விவிஜி உருவாக்கியிருக்கிறார் எனக் கருதுகிறேன். இது அவரது படைப்புச் சுதந்திரம் என்றாலும், இதனால் புலிகளின் ஆட்சி மோசமான அடக்கு முறைக் கூறுகள் மட்டுமே கொண்ட ஒரு இஸ்லாமிய ஆயுதக் குழுவின் ஆட்சி போன்றது என்ற விம்பத்தை உண்மை நிலவரம் தெரியாத வாசகர்களிடம் ஏற்படுத்தி விடும் பேராபத்து இருக்கிறது. இது ஆங்கில வாசகர்களை நோக்கிய ஒரு நாவல் என்பதால் இந்த ஆபத்து நிச்சயமாக இருக்கிறது. விவிஜியின் எழுத்துலகப் பிரசன்னம் காரணமாக, அவரது முதல் நாவலான “Love Marriage” சுவீடிஷ், பிரெஞ்சு, குரோஷிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அதே போல இந்த நாவலும் மொழி மாற்றம் செய்யப் படும் போது, ஒரு வரலாற்றுப் புனைவினூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் குறித்து நியாயமில்லாத ஒரு கதையாடலை பரப்பும் பேராபத்தும் இருக்கிறது. -ஜஸ்ரின் வாசுகி கணேசானந்தன்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வி.வி.கணேசானந்தன், இது வரை இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார். இவரது இரண்டாவது நாவலான “Brotherless Night” அமெரிக்க NPR இன் "ஆண்டின் சிறந்த நூல்-2024" என்ற கௌரவம் பெற்றிருக்கிறது. மேலும், 2024 இல், Women’s Prize for Fiction, Carol Shields Prize, New York Times Editors’ Choice ஆகிய கௌரவங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது.- Front cover brotherless night
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா. வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும். ஓ இப்போ வாடகைக்கும் ஆட்களைப் பிடிக்கலாமா?- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதில் அலாதி பிரியம். எப்ப முறைப்பாடு செய்கிறாங்களோ என்று சொல்லுவேன். இந்த கதையை சொல்லும் போது கொஞ்சம் சிந்திக்கிறா. பார்ப்போம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா. வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும். @புலவர்- இரசித்த.... புகைப்படங்கள்.
- Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:-
This is the max clear shot I could find from videos| Ramayana at the Sri Varadharaja Perumal Temple, Thirupuvanam, Puduchery | 907-955 CE
-
The Ramayana at the Pullamangai village | 907-955 CE
-
The Ramayana at Kumbakonam Nageswaran Kovil | 9th Centuary
-
Ship Graffito from Alagankulam, Tamil Nadu.png
-
They did enjoy the crossing the line 'Shellback' ceremony in the Pacific . . Sterling as Neptune..jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (5).jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (4).jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (3).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (6).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (5).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (2).jpg
-
jaffna thoni, Suez canal, James Hornell.jpg
-
Jaffna Thoni, James Hornell.jpg
-
சலங்கு - Jaffna Barque - Parvathapaththini.jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (3).jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (2).jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (Current Sinhala colonization name: Samudragama) | Across the bay is Frederick Fort's wall and the Gokanna Rajamaha Viharaya Buddhist Temple (insert).
-
Ancient Tamil/ Tissamaharama Potsherd with ship graffito - layer of 1st century BC. (H. J. Weisshaar - trench 1G, 23/27, layer 18.jpg
-
veppu vallam, Kerala | வெப்பு வள்ளம்
-
Thekkan Ody, Kerala | தெக்கனோடி
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
விக்கி பதிவில் உள்ளதை சொன்னேன். மற்றும்படி எனக்கு உண்மை/பொய் தெரியாது. பனை வள அபிவிருத்தி சபையில் பொறுப்பான பதவியை நித்தியானந்தா வகித்துள்ளார். டக்லசின் பெயரின் ஒரு பகுதியும் நித்தியானந்தா என உள்ளது. நித்தியானந்தா என்பது குடும்ப பெயரோ தெரியாது. கொழும்பு இந்துவில் கற்கும் காலத்தில் நித்தியானந்தா இல்லத்திலேயே டக்லஸ் வாழ்ந்ததாக விக்கி பதிவில் உள்ளது. இறுதி போருக்கு சில வருடங்கள் முன் யாழ் மாவட்டத்தில் பெருமளவு விடுதலை புலிகள் அமைப்பு ஆதரவாளர்கள், அனுதாபிகள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதன் பின்னால் இராணுவ புலனாய்வு அமைப்பும் ஈ பி டி பி யும் உள்ளதாக அப்போது கூறப்பட்டது. தமக்கு போட்டியாக தேர்தலில் நிற்கக்கூடியவர்களை ஈ பி டி பி போட்டு தள்ளியதோ என எண்ணத்தோன்றுகின்றது. இது பின்னாளில் ஈ பி டி பி அமைப்பு தேர்தலில் அதிக வெற்றியை அடைய வழி வகுத்ததோ தெரியவில்லை.- சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!
சிங்களம் எழுதி கொடுத்து செய்தி போடுவது போல் உள்ளது நேரம் இருப்பவர்களுக்கு மட்டும் .https://www.usnews.com/news/best-countries/sri-lanka- மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.
இது அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகம் நிகழக் கூடிய ஒரு ஆபத்துத் தான். ஜோர்ஜியாவின் தலை நகரான சவன்னாவில் சில ஆண்டுகள் முன்னர் ஒரு இந்திய வயோதிபர் காலை நடைப் பயிற்சி சென்ற போது "சந்தேகத்திற்கிடமானவர் திரிகிறார்" என்று யாரோ பொலிசைக் கூப்பிட பொலிஸ்காரர் வந்து அவரிடம் உரையாட முயல்கிறார். வயோதிபருக்கு ஆங்கிலம் தெரியாது, அவர் சிரித்து விட்டு தொடர்ந்து நடக்க, அந்தப் பொலிஸ்காரர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்திக் கைது செய்ததில் அவரது கழுத்தெலும்பு பாதிக்கப் படுகிறது. பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த அவரது குடும்பம் நகர நிர்வாகம் மேல் வழக்குப் போட்டு சில மில்லியன்கள் நட்ட ஈடு பெற்றார்கள் என நினைக்கிறேன். ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது. இது எங்கள் தென்னாசியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபாடானது தான், ஆனால் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது பாதுகாப்பிற்கு அவசியம். "வெள்ளையின மீட்பர்கள்" வந்து இது போன்ற நிறவாதம் பார்க்கும் இளம் தாய்மாருக்கு உதவுவார்கள். இந்த ஆசியரை 2 மாதங்கள் சிறையில் வைக்கச் செய்த அதே பெண்ணுக்கு, சில நிமிடங்களில், இன்னொரு வெள்ளையின ஆண் அவரது வண்டிலைத் தொட்டு உதவும் வீடியோவையும் வால்மார்ட் சேர்த்தே வெளியிட்டு உதவியிருக்கிறது. எனவே தான், தென் மாநிலங்களில் வசிக்கும் பிறவுண் மனிதர்கள், வெள்ளையின மீட்பர்களை உதவ அனுமதித்து விட்டு வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்க வேண்டுமென்கிறேன்😇.- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டிலேயே செய்யலாம் சோம்பா பொடி..- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
படம்: வானத்தை போல இசை:S.Aராஜ் குமார் பாடியோர்: ஜெயசந்திரன்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்று நமதுள்ளமே.. படம்: தங்க பதுமை இசை: விசுவநாதன் -ராமமூர்த்தி பாடியோர்: TMS & சுசீலா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் ஏற்கனவே சில எறும்புகளைப் கண்காணிக்கிறார். அதற்குள் திறமையானதை தெரிவு செய்வார். ஆள் புலனாய்வு பிரிவு தெரியும் தானே. - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.