Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. முஸ்லிம் மதம் சொல்லிவிட்டது என்பதால் முஸ்லிம்கள் யூத வெறுப்பைகடமையாக கடைபிடிக்கின்றார்கள். பின்பு ஹிட்லரின் யூத வெறுப்பு படுகொலைகள் இப்போது மேற்குலகில் உள்ள ஈழ தமிழர்கள் சிலர் யூத வெறுப்பிலா 🙄 முஸ்லிம் மத ஈரான் அமைப்பின் அம்புலன்ஸ் எரிப்பு மனித விரோத குற்ற செயல் .
  3. புரிகிறது தம்பி. சகலவிதமா கருத்துக்களையும் பகிரத்தான் வேண்டும். இதுவும் உண்மையாக இருக்கலாம். குற்ற விசாரணை முடியட்டும்.
  4. யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு Mar 28, 2026 - 11:01 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9w5z35000a356pv48tkfkz
  5. திருநங்கைகளுக்கு LA28 ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை; பெண்கள் பாதுகாப்பு குறித்த கொள்கையை IOC அறிவித்தது 27 Mar, 2026 | 01:24 PM (நெவில் அன்தனி) ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெணகள் (மகளிர்) பிரிவின் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கான வழிகாட்டி கரிசனைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கைக்கு அமைய லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அதற்கு பின்னரான விளையாட்டு விழாக்களிலும் திருநங்கைகளுக்கு பங்குபற்ற தடை விதிக்கப்படவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் இந்தக் கொள்கைக்கு வியாழனன்று (26) ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அது நடைமுறைக்கு வருவதுடன் முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்றி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்ற பின்னர், தனது முதலாவது மிக முக்கிய மற்றும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முடிவாக 'பெண்கள் பிரிவின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான இந்தக் கொள்கையை வெளியிட்டார். இதற்கு அமைய பாலின வளர்ச்சி குறைபாடுகள் (SRY) உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும். தனிப்பட்ட மற்றும் குழுநிலை போட்டி நிகழ்ச்சிகள் உட்பட ஒலிம்பிக் விளையாட்டு விழாக்கள் அல்லது வெறு எந்த சரவ்தேச ஒலிம்பிக் குழு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் பிரிவுகளில் பாலினத்தை உறுதிசெய்யும் மரபணு (SRY) பரிசோதனையின் மூலம் உயிரியல் ரீதியாக பெண்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பங்குபற்ற முடியும் என இந்தக் கொள்கை விளக்குகிறது. சான்றுகளின் அடிப்படையிலும் நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரிலும் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை லொஸ் ஏஞ்சலிஸ் (LA28) ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அமுலுக்கு வரும். இது மகளிர் பிரிவில் நியாயம், பாதுகாப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை நிலைநிறுத்துகிறது. இது முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது என்பதுடன் எந்தவொரு அடிமட்ட அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுத் திட்டங்களுக்கு இது பொருந்தாது. 'இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் உயிரியல் ரீதியாக ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது,' என உலக விளையாட்டின் உயர் பதவியை வகிக்கும் முதலாவது ஆபிரிக்கரும் பெண் தலைவருமான கிறிஸ்டி கொவென்ட்றி, வியாழக்கிழமை ஒரு காணொளிச் செய்தியில் கூறினார். அந்த செய்தியில், 'இனிமேல் பெண்கள் பிரிவில் போட்டியிட விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களும், அவர்களின் சரியான உயிரியல் பாலினத்தைத் தீர்மானிப்பதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் பாலின நிர்ணயப் பகுதி மரபணுப் பரிசோதனைக்கு ( Sex Determining Region Y) உட்படுத்தப்படுவார்கள் என அவர் விளக்கினார். 'ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் மிகச் சிறிய வித்தியாசங்கள் கூட வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வேறுபாடாக அமையலாம். எனவே, அது நியாயமானதாக இருக்காது என்பது முற்றிலும் தெளிவாகிறது. மேலும், சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பானதாக இருக்காது' என நிறைவேற்றுச் சபை கூட்டத்திற்குப் பின்னர் கோவென்ட்றி விளக்கினார். அதேவேளை, தனிநபர் அல்லது குழுநிலை விளையாட்டுக்கள் உட்பட ஒலிம்பிக்கிலோ அல்லது வேறு எந்த பெண் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறுவது, இனி உயிரியல் ரீதியாகப் பெண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது. 'ஒரு முன்னாள் தடகள வீராங்கனையாக, நியாயமான முறையில் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து ஒலிம்பிக் வீரர்களின் உரிமைகளையும் நான் உணர்வுபூர்மாக நம்புகிறேன். நாங்கள் அறிவித்துள்ள இந்தக் கொள்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் மருத்துவ நிபுணர்களின் தலைமையிலும் வழிகாட்டல்களிலும் தயாரிக்கபட்டுள்ளது' என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றி மேலும் தெளிவுபடுத்தினார். 'ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த செயல்முறை தொடர்பாக நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையுடன் தெளிவான கல்வி மற்றும் அறிவுரைகள் கிடைக்க வேண்டும்.' கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களின் உரிமைகளை மீறுவதாகக் கருதியதால், கட்டாயப் பாலினப் பரிசோதனையை நீண்ட காலமாக எதிர்த்து வந்த சர்வதேச ஒலிம்பிக் குழு, இப்போது இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புதிய கொள்கையை பெண் தலைமையில் துணிந்து வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242076
  6. இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது Mar 28, 2026 - 08:46 AM இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று (27) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த விடுதி ஒன்றில் வைத்து சந்தேகநபர்களுடன் பெருமளவிலான கணினிகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2026.04.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmn9rd93h0005356p2uq6zsd2
  7. அண்ணை, பாதிக்கப்பட்ட தரப்புடன் இருப்பது தான் அறம் என கூறுகிறார்கள். வேறொரு கோணத்திலும் சம்பவத்தை நோக்கியதால் இதனை பகிர்ந்தேன்.
  8. ஒரு இனம் இப்படித்தான் என முன் முடிவு செய்து அதன் படி கருத்து நிலை எடுப்பது…பச்சை இனவாதம். இப்படி ஒரு போலிக்கொடி நடவடிக்கை நடந்தது என்பதற்கு இனவாத மனங்களில் ஏற்பட்ட ஊகங்களை தவிர வேறு ஆதாரம் ஏதும் இதுவரை இல்லை. இரெண்டு பேரை பிடித்து விசாரித்து பிணையில் விட்டுள்ளது பொலிஸ். விசாரணை முடிவுக்கு பொறுத்திருப்போம். இயல்பில் எழுந்த, புகட்டப்பட்ட யூத வெறுப்பில் நாமாக முடிவுகளை எடுக்காமல்.
  9. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது : கப்பல்கள் மீது ‘கடுமையான நடவடிக்கை’ – ஈரான் எச்சரிக்கை 27 Mar, 2026 | 05:29 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (Islamic Revolutionary Guard Corps -IRGC) ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக அறிவித்து, அந்தப் பகுதியை கடந்து செல்லும் கப்பல்கள் மீது “கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அரசின் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணியை ஆதரிக்கும் நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தக் கப்பல்களும் இந்நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கை ஏற்றுச் செல்லும் முக்கிய கடற்பாதையாகும். இந்த நீரிணை மூடப்பட்டதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று கொள்கலன் கப்பல்கள் எச்சரிக்கையினால் திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மேலும் 10,000 அமெரிக்கப் படைகளை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படைகள் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) அருகே நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என அமெரிக்கா ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலும், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததன்படி, அமெரிக்காவும் ஈரானும் இடைமுக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, போரினை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தை ஈரான் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பொருளாதாரம், குறிப்பாக எரிசக்தி சந்தை மற்றும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், மத்திய கிழக்கில் பெரிய அளவிலான இராணுவ மோதலாக மாறும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/242113
  10. அவரவர் உடை என்ன என அவரவர் தீர்மானிப்பதே ஆடை சுதந்திரம். ஆம் சொந்த வாழ்வில் எப்போதும் அப்படித்தான்.
  11. நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு 27 Mar, 2026 | 03:01 PM நேபாளத்தின் 47வது பிரதமராக பாலேந்திர ஷா இன்று வெள்ளிக்கிழமை (27) பதவியேற்றார். அந்நாட்டின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ள இவர், முன்னாள் மேயரும் ராப் பாடகரும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய முக்கியஸ்தரும் ஆவார். நேபாளத்தில் புதிய அரசினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி 275 இடங்களில் 182 இடங்களை கைப்பற்றி பெருவாரியான வெற்றி பெற்றது. ஜாபா 5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகமாக பெற்றார். பாலேந்திர ஷா 1990இல் காத்மண்டுவில் பிறந்தார். அவர் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் கட்டமைப்பு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242087
  12. Today
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. பாரைக் கருவாடுதான் வாங்கவே இல்லை. நீங்கள் வேறை.😃
  14. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல் Mar 28, 2026 - 06:53 AM மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்க, இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://adaderanatamil.lk/news/cmn9nb4dg0002356ppsya4mhe
  15. வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் Published By: Vishnu 27 Mar, 2026 | 10:36 PM பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள், ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள், அரசியல் நாகரீகத்தை பேணவும் போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242125
  16. இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும். 2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. யாழ் மக்களும் சுயநலவாதிகளா? எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்
  17. முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு Mar 27, 2026 - 11:55 PM நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்கள் 91.03 சதவிகிதமாகவும் உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்கள் 75.14 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் 72.25 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 92.47 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 76.45 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 80.17 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொலன்னறுவையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 86.55 சதவீதமும், புத்தளத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் 55.98 சதவீதமும் நீரின் கொள்ளளவு உள்ளது. திருகோணமலையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களில் 95.62 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 59.97 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. https://adaderanatamil.lk/news/cmn98es4v0007356po4c1a4vf
  18. அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களை தாங்கி இரான் அரசு நிலைத்திருப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மார்ச் 21 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு பெண் முழக்கங்களை எழுப்புகிறார். கட்டுரை தகவல் சர்பாஸ் நசாரி பிபிசி மானிட்டரிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், இரான் அரசு உள்நாட்டுப் பாதுகாப்பின் மீதான தனது பிடியைத் தளர்த்திக் கொள்ளவில்லை. தலைமையின் மீது மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி இருந்தபோதிலும், போரின் போது பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறவில்லை. சில நிபுணர்கள் இதனைப் போர் தொடங்கிய பிறகு உருவான அடக்குமுறைச் சூழலோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களை இரானிய அரசு ஒடுக்கிய விதம், மக்களிடையே அச்சத்தைப் பரப்பியுள்ளது. சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புப் படைகளின் குவிப்பு மற்றும் தினசரி கைதுகள் மூலம் அரசு தனது கட்டுப்பாட்டை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், மாற்றுக்கருத்து உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்குப் போர் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட குறி வைக்கப்படுகிறார்கள். ஏறத்தாழ முழுமையான இணைய முடக்கம் காரணமாக, மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் இன்னும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நெட்வொர்க்குகள் பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அரசு ஆதரவாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதி வழங்கப்பட்டு, அரசு சொல்ல விரும்பும் கருத்துகள் (Narrative) இரான் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இதன் விளைவாக, அரசு எதிர்ப்பு என்பது ஆபத்தானது மட்டுமல்லாமல், மக்களை ஒருங்கிணைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது - குறிப்பாகப் போர்க்காலத்தில், மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். விவரிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? பட மூலாதாரம்,TABNAK படக்குறிப்பு,பல முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்ட போதிலும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இந்த அனைத்து முறைகளுடன் சேர்த்து, போர் குறித்த மக்களின் பார்வையை மாற்றவும் அரசு முயற்சிக்கிறது. அதிகாரிகள் இந்த மோதலை இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரானது என்று சொல்லாமல், இரான் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று சித்தரிக்கிறார்கள். இந்த வேறுபாடு முக்கியமானது. அரசு மீது அதிருப்தி கொண்டவர்கள் கூட வெளிநாட்டுத் தாக்குதலின் போது தேசியவாத உணர்வுகளால் ஈர்க்கப்படலாம். இது பெரும்பாலும் 'தேசிய ஒற்றுமைக்கான திரட்சி' (Rally-around-the-flag) விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஜூன் 2025-ல் நடந்த 12 நாட்கள் போரிலும் காணப்பட்டது. இதன் காரணமாக, தற்போது அரசு எதிர்ப்பு அணி திரட்டலுக்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. அரசு ஊடகங்கள் பொதுமக்களின் மரணங்களை சுட்டிக்காட்டுவதன் மூலமும், தங்கள் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை (Defensive) என்று கூறுவதன் மூலமும் இந்த விவரிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. அதேபோல், அரசு ஆதரவு பேரணிகள் மற்றும் போராட்டங்கள் 'கட்டுப்பாடு, உறுதித்தன்மை மற்றும் வலிமை' என்ற பிம்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சிகளைத் தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பட மூலாதாரம்,TASNIM படக்குறிப்பு,அரசு ஆதரவு ஆர்ப்பாட்டங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர். உயர் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த அமைப்பு வீழ்ச்சியடையாததற்குக் காரணம் அதன் கட்டமைப்பாகும். இரான் நாட்டின் அமைப்பு ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல, மாறாக மதம், ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் வலைப்பின்னலில் நிலைபெற்றுள்ளது. அதிகாரம் ராணுவம், மதத் தலைமை மற்றும் பாதுகாப்பு முகமைகள் எனப் பல நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஒரு உயர்மட்டத் தலைவர் அகற்றப்பட்டாலும் அமைப்பு தொடர்ந்து இயங்குகிறது. வாரிசுரிமைக்கான முறையான மற்றும் முறையற்ற ஏற்பாடுகளும் தொடர்ச்சியைப் பேண உதவுகின்றன. இந்த வலிமையின் மையத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உள்ளது. இது வெறும் ராணுவம் மட்டுமல்ல, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சக்தியாகவும் நாடு முழுவதும் ஆழமான பிடியைக் கொண்டுள்ளது. மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் விஷயங்களையும், மக்களின் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்துகிறது. மிக முக்கியமாக பொதுவாக ஒரு ஆட்சி வீழ்வதற்கான ஒரு பெரிய அறிகுறியான ராணுவம் அல்லது பாதுகாப்பு அமைப்பில் பெரிய அளவிலான பிளவு அல்லது கிளர்ச்சிக்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. போரில் 'பிழைத்திருப்பதே' உத்தி இரான் இந்தப் போரில் ஒரு பாரம்பரியமான வெற்றியைப் பெற முயற்சிக்கவில்லை, மாறாக ஒரு தனித்துவமான உத்தியைக் கடைப்பிடிக்கிறது - அதாவது எதிரிக்கு பாதிப்புகளை அதிகரிப்பது மற்றும் மோதலை நீட்டிப்பது. இரானிய தலைமைக்கு 'வெற்றி' என்பது போருக்குப் பிறகும் அதிகாரம் நிலைத்திருப்பதே ஆகும். இதற்கேற்ப, அது தனது வலிமையை, குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தி உலகளாவிய எரிசக்தி சந்தையின் மீது அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் போர் வெறும் ராணுவ மோதலாக மட்டுமின்றி, எஞ்சி நிற்பதே வெற்றி என்ற போராக மாறியுள்ளது. யார் சோர்வடைகிறார்களோ அவர்கள் தோற்பார்கள். அதேநேரத்தில், சித்தாந்தமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஷியா பாரம்பரியத்துடன் தொடர்புடைய 'எதிர்ப்பு, தியாகம் மற்றும் வீர மரணம்' போன்ற சிந்தனைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பில், வீரர்களின் மரணம் தோல்வியாகப் பார்க்கப்படாமல், வீரமாகச் சித்தரிக்கப்படுகிறது. இது 1980-களின் இரான் - இராக் போரில் காணப்பட்டது. எதிர்க்கட்சிகள் எங்கே? இரான் நாட்டில் அதிருப்தி பரவலாக உள்ளது, ஆனால் அதனை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் சவாலாக மாற்றக்கூடிய ஒரு கூட்டுத் தலைமை இல்லை. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன, பல தலைவர்கள் நாட்டிற்கு வெளியே உள்ளனர், உள்ளே இருப்பவர்கள் சிறையில் உள்ளனர். அதிருப்தி மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வரலாறு கூறுகிறது. அதற்கு அமைப்பு, தலைமை மற்றும் மாற்றுத் திட்டம் ஆகியவையும் அவசியம். வெளிநாட்டு அழுத்தத்தால் இந்த அமைப்பு பலவீனமடைந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. லிபியா மற்றும் இராக் போன்ற உதாரணங்கள், ஒரு தயார் நிலையிலான மாற்றுத் திட்டம் இல்லாமல் போனால் நாட்டில் அராஜகமும் நீண்டகால ஸ்திரமற்ற தன்மையும் ஏற்படும் அபாயத்தைக் காட்டுகின்றன. இரானின் இந்த வலிமை எப்போதும் நிலைத்திருக்குமா? பட மூலாதாரம்,Majid Saeedi/Getty Images படக்குறிப்பு,முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமனெயி மறைவைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது பெண்கள் (படம்: மார்ச் 1, 2026). தற்போதைக்கு இரானின் அமைப்பு - நிறுவன வலிமை, ஒடுக்குமுறை திறன், உத்தி ரீதியான நெகிழ்வுத்தன்மை மற்றும் புவி-அரசியல் நிலை காரணமாக நிலைத்து நிற்பதாகத் தெரிகிறது, ஆனால் இதற்கென ஒரு விலையையும் கொடுக்க வேண்டியிருக்கலாம். மக்கள் மீதான தேவைக்கு அதிகமான கட்டுப்பாடு விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் தகவல்களைச் சார்ந்துள்ள அமைப்புகள் காலப்போக்கில் பலவீனமடையலாம், இது எதிர்காலத்தில் பெரிய அதிர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இறுதியில், இரான் நாட்டின் எதிர்காலம் வெளிநாட்டுத் தாக்குதல்களை விட, உள்நாட்டுக் காரணிகளான - சமூக அமைப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுப்பாடு மற்றும் அழுத்தத்திற்கு இடையிலான சமநிலை ஆகியவற்றையே அதிகம் சார்ந்து இருக்கும். இதனால்தான் அரசு வீதிகளிலும் ஒரு சமாந்தரப் போரை நடத்தி வருகிறது. இதன் மூலம் சாத்தியமான எந்தவொரு கிளர்ச்சியையும், மக்களின் கோபத்தையும் ஆரம்பத்திலேயே ஒடுக்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwjxjkkr7po
  19. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது! Mar 27, 2026 - 11:30 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmn97i3350006356p3ihngs4f
  20. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் இலங்கை மீது மீண்டும் புதிய அழுத்தங்கள் ; முதலீடுகளின் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு முழுமையான ஆதரவு - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் 27 Mar, 2026 | 06:21 PM (நா.தனுஜா) இலங்கை இப்போது நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து பொருளாதார மீட்சியையும், வளர்ச்சியையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்ததுல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதந்திருந்தார். இங்கு பல்வேறு சந்திப்புக்களிலும், களவிஜயங்களிலும் ஈடுபட்ட அவர், அது குறித்து மேலும் கூறியிருப்பதாவது: இலங்கை இப்போது ஒரு நிலைமாற்றத்தில் இருக்கிறது. நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து மீட்சியையும், மீண்டெழும் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின்போது இலங்கைக்கான 100 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி வழங்கலை உறுதிப்படுத்தினேன். இந்த உதவி வெளியக அழுத்தங்களில் இருந்து நாட்டின் பரந்துபட்ட பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்புச்செய்யும். அதேவேளை உட்கட்டமைப்பு, இணைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த முதலீடுகளில் இலங்கைக்கான வருடாந்த உதவி வழங்கலை சுமார் ஒரு பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதேபோன்று நான் கேகாலை மாவட்டத்தில் 'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டேன். இவை சார்ந்த மீட்சிகள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை நோக்கி நிலைமாற்றமடையவேண்டும். முதலீடுகளை அடிப்படையாகக்கொண்ட நிலையான வளர்ச்சியை இலங்கை அடைந்துகொள்வதற்கு அவசியமான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/242118
  21. யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது Mar 28, 2026 - 07:37 AM யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வீட்டின் பணிப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை, தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வீட்டிலும் நகைகளைத் திருடியுள்ளதாக அந்தப் பெண் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த பெண்ணைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9owf250003356pczb28am1
  22. உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி? General28 March 2026 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது. கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/456304/second-place-in-the-world-a-massive-economic-crisis-awaits-sri-lanka
  23. பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய முயற்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/பாலியல்-வன்முறையைத்-தடுக்க-Rape-aXe/53-374648
  24. தமிழில் அழகிய நீளம் குறைந்த பெயர்களும் இருக்கிறது. உ+ம்-அகிலன், நேயன், மாறன், எழிழன், யாழவன், சேயோன், சுடர், சுரபி, மயூரன். எனது பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தில் இருந்தே பெயர்கள் சூட்டினேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.