Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Today
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 87 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 22 இன் 33 முதல் 40 வரையிலான கீழே பதியப்பட்ட வசனங்களை ஒருக்கா பார்க்கவும்: " என்ன மகிழ்ச்சி இருக்கிறது ? எங்களுக்கோ குழந்தை கிடையாது. எனவே எங்கள் சந்தோஷம் சாரமில்லாதது" என்றாள் விகார தேவி. அசாதாரண சக்திகள் ஆறும் படைத்த தேரர், தமது ஞான திருஷ்டியில் அவளுக்குக் குழந்தை உண்டாகும் என்பதைக் கண்டார். ராணி என அழைத்து, நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைச் சென்று பார் என்றார். அவள் அவ்வாறே அங்கே சென்றாள். மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருந்த அவரிடம் ராணி சொன்னாள்: " என்னுடைய மகனுகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வீராக. அது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்." என்றாள். துறவி அவ்வாறு சொல்லாமல் இருப்பதைக் கண்ட அவள், இதற்காக ஏராளமான மலர்களைக் காணிக்கையாகச் செலுத்தி மீண்டும் வேண்டினாள். இப்போதும் அவர் விருப்பமில்லாமல் இருக்கவே, சரியான வழியை அறிந்த அவள் அவருடைய சார்பில் பிக்குகள் சங்கத்துக்கு மருந்துகளையும், உடைகளையும் வழங்கிவிட்டு மீண்டும் வேண்டினாள். பிறகு தான், அவர் அரச குடும்பத்தில் மறு பிறவி எடுக்க விரும்புவதாகக் கூறினார். பிறகு மனமகிழ்வுடன் அவள் விடை பெற்றுக் கொண்டு தேரில் ஏறிச் சென்று விட்டாள். அதன் பிறகு துறவி இறந்து விட்டார். ராணி சென்று கொண்டிருக்கும் போதே அவளுடைய கருவில் புதிய பிறவியெடுத்தார். இதை அவள் கண்டதும் நின்றாள். அரசனுக்கு இச்செய்தியை அனுப்பி விட்டு, அவனுடன் திரும்பி வந்தாள். இந்தக் குழந்தை தான் துட்டகாமினி. அதனால், அவர் விகாரதேவியின் கணவரான காகவண்ண தீசனின் உயிரியல் மகன் அல்ல. எனவே, அரியணைக்கு வாரிசும் அல்ல. துட்டகாமினி சமீபத்தில் இறந்த தேரரின் ஒரு அவதாரம் மட்டுமே. இது, சட்ட பூர்வ தந்தைக்கு பிறக்காத, முறைகேடான மகனாக துட்டகாமினி இங்கு காணப்படுகிறார். எனவே துட்டகாமினி ஒரு [அரச உரிமையை] அபகரிப்பாளர் என்ற நிலைக்கு வருகிறார். அதாவது அரியணைக்கு சட்டப்பூர்வ இளவரசர் அல்ல. அவர் பன்னிரண்டு வயதாக இருந்த போதே, தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக தமிழர்களுடன் சண்டையிட எண்ணினார். இது அவருக்கு துட்ட (கெட்ட) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது என்பது வரலாறு. பன்னிரண்டு வயது சிறுவன் எப்படி அந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்? இரத்தக் கறை படிந்த வாளிலிருந்து இரத்தக் கறை படிந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற வக்கிரமான ஆசை கொண்ட அவரது தாயார்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். துட்டகாமினி பத்து "அதிமானுட போர்வீரர்களை" [super human warriors] நியமித்தார். அவர்களில் முதலாவதானவன், நந்தி மித்ரன் [Nandhimithra, also known as Nandhimitta], மன்னன் எல்லாளனின் தளபதியான மித்ரனின் [Mitta] மருமகன் ஆகும். அவனுக்கு பத்து யானைகளின் பலம் இருந்தது. அப்படியே, மனித வலிமை கொண்ட மற்ற ஒன்பது பேரும் உள்ளனர். இந்த கற்பனைக் கதைகளுக்குள் மேலும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவை நிதானமான வரலாற்று கதைகள் அல்ல. பத்து யானைகளின் பலம் கொண்ட ஒரு மனிதன் என்பது எவராலும் நம்பமுடியாத ஒன்று. அப்படியானவர்களில் பத்து பேர் என்பது முழுக்க முழுக்க அபத்தமான பொய். அதிகாரம் 23 – 8 முதல் 9 வரையிலான பகுதிகள், தூபிகளை அவமதிக்கும் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்றன. பத்து யானைகளுடைய பலம் நந்தி மித்ரனுக்கு இருந்தது. அவன் வளர்ந்ததும் நகரத்திற்குள் சென்று தனது மாமாவுக்கு சேவை செய்தான். அந்த நேரத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை தமிழர் நாசப்படுத்தி வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. ஆனால், அதிகாரம் 21 - 21 முதல் 26 வரை தெளிவாக எல்லாளனின் ஆட்சியின் நடுநிலையை, மற்றும் தூபிக்கும் வழங்கும் மதிப்பை விரிவாகக் கூறுகிறது. மும்மணிகளிலும் உயர்ந்ததான ஒன்றின் குற்ற மற்ற பெருமையை அறியாத போதிலும், மரபுகளைக் காப்பவனான அரசன், ஒருமுறை புத்த சங்கத்தினரை அழைப்பதற்காக சேதிய பர்வதத்துக்கு [Cetiya-mountain] தேரில் சென்று கொண்டிருந்தான். அப்போது தேரின் நுகத்தடி [yoke / இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும்போதும், வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள்.] ஒரு தூபத்தின் மீது மோதிச் சற்று பெயர்த்து விட்டது. 'தங்களால் தூபம் காயம்பட்டு விட்டது" என்று மந்திரிகள் அரசனிடம் கூறினர். இது அறியாமல் நேர்ந்ததாயினும், அரசன் தேரில் இருந்து குதித்துத் தரையில் படுத்துக்கொண்டு இதன் சக்கரத்தால், என்னுடைய தலையையும் துண்டித்து விடுங்கள்’ என்றார். "மற்றவர்க்குத் தீங்கிழைப்பதை எங்கள் குரு நாதர் அனுமதிப்பது இல்லை. இடிந்த பகுதியைக் கட்டிக் கொடுத்து (பிக்குகளுடன்) சமாதானம் செய்து கொள்ளுங்கள்' என்றனர் அவர்கள். இடிந்துபோன பதினைந்து கற்களைப் புதிதாக அமைப்பதற்காக அரசன் பதினையாயிரம் கஹப்பணம் [kahapanas, கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால, துளையிடப்பட்ட செப்பு நாணயம் இதுவாகும்] செலவிட்டான். அதன் மதிப்பு சுமார் அரை கிரீடம் ஆகும். அதாவது, மன்னன் எல்லாளன் ஒரு நாள் தற்செயலாக ஒரு தூபிக்கு சேதம் விளைவித்தாலும், அமைச்சர்கள் இதை மன்னனிடம் சுட்டிக் காட்டியபோது, அவர் தன்னைத் தரையில் கிடத்தி, தனது தலையைத் துண்டிக்கச் சொன்னார் என 21 ஆம் அத்தியாயம் எல்லாளனை விவரிக்கிறது. இவ்வாறு சிறந்த இயல்புகளைக் கொண்ட ஒரு மன்னன், தமிழர்களை தூபி மற்றும் பிற புனித கட்டமைப்புகளை சேதப்படுத்த அனுமதிப்பாரா? எல்லாளனின் உன்னத கதாபாத்திரங்களின் கதை அந்தக் கால மக்களிடையே ஒரு புராணக்கதையாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் மகாநாமா 21 ஆம் அத்தியாயத்தை மறந்துவிட்டு, தமிழருக்கு எதிராக இந்த வசைபாடலைக் பாடுகிறார் அல்லது ஒரு வெறித்தனமான யாரோ ஒரு தேரர், 100 - 150 பின்னர் நகலெடுக்கும் பொழுது அதைச் செருகி இருக்கலாம்? இதன் விளைவுகளை தீவின் மூலை முடுக்கிலும் அல்லது எங்கும் உள்ள தமிழர்கள் இன்னும் உணர்கிறார்கள். பத்து யானைகளை விட அதிக பலம் கொண்ட மனிதர்கள் என்பது தேரர் மகாநாமாவின் பெரும் கற்பனைகள். எனவே, அவர்கள் எந்த விமர்சனத்திற்கும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை! Part: 87 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Verses 33 to 40 of chapter 22: Viharadevi said; what is our happiness here, since we have no children? Lo, our happiness is therefore barren. The Thera, who, being gifted with six (super normal) powers, foresaw that she would have, said: ‘Seek out the sick samanera, O queen’. She went thence said to the samanera, who was near unto death: ‘Utter the wish to become my son; for that would be great happiness to us’. And when she perceived that he would not the keen witted woman commanded, to this end, great and beautiful offerings of flowers, and renewed her pleading. When he was yet unwilling, she, knowing the right means, gave to the brotherhood for his sake all manner of medicines and garments and again pleaded with him. Then he did desire (rebirth for himself in) king’s family, and she caused the place to be richly adorned, and taking her leave she mounted the car and went her way. Hereupon the samanera passed away, and he returned to a new life in the womb of the queen while she was yet upon her journey, 22 - 39. This child was Duttha Gamani. He was not the biological son of Kakkavannatissa, the husband of Viharadevi and not the heir to the throne. Duttha Gamni is only an incarnation of the Thera who has just died. This is the legitimacy to the throne of the illegitimate son, Duttha Gamni. Duttha Gamni is therefore a usurper, and not a legitimate prince to the throne. Even when he was twelve years old, he intended to fight Damilas against the will of his father. This earned him the epithet Duttha (bad).How could a twelve-year boy have come to that decision. His mother who had the perverted desire to drink the blood stained water from the blooded sword must have had been the cause. Duttha Gamni recruited ten super human warriors. First, one of them, Nandhimitta, is the nephew of Mitta, a general of the king Elara. He had the strength of ten elephants. There are other nine persons of super human strength. No need to go further into these fantasy tales as they would not make sober history. A man having the strength of ten elephants is untrustworthy and ten of them are ridiculous lies. Nandhamitta’s story is in conflict with the chapter 21. 23 – 8 to 9 speaks of Damilas desecrating the Thupas. Refer to 21 - 15 to 26. The King at that time was Elara, and he, one day accidentally caused damage to a Thupa. When the ministers pointed this to the king, he flung himself to the ground and asked his own head to be severed. This is how Elara is described in the chapter 21. Would a king of these excellent characters allow Damila’s to do damage to Thupas and other sacred structures? The story of Elara’s noble characters must have been a legend among the people of that time. Mahanama forgot the chapter 21 and invented this diatribe against the Damilas or a fanatical copyist inserted it later. The repercussions of this are still being felt by the Tamils nook and corner of the island. Men with strengths greater than ten elephants are the nefarious imaginations of the Thera Mahanama, and do not merit any criticism. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 88 தொடரும் / Will follow துளி/DROP: 1987 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 87] https://www.facebook.com/groups/978753388866632/posts/33238732342441985/?
  3. சிங்கள மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேரர் சொல்லாமல் விட்ட சொல் ''சிங்கள'' ஏனென்றால் அவரது சிங்கள விசுவாசமும் சுவாசமும் ஒன்று. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. நான் அறிந்தவரையில் இவரது எடுபிடிகளும் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..யாழ் கச்சேரிக்கு ஏதாவது அலுவல் செய்யப் போனால் அங்கு லட்சக்கணக்கில் கேட்கிறார்களாகம்.அதுவும் பெண்கள்.ஆகவே சிறிதரன் மற்றும் இன்னும் சிலரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதே சிறந்தது.
  5. வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 03:26 PM வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுவேலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுவேலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும். வெனிசுவேலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில், வெனிசுவேலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன. அதனால், வெனிசுவேலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. எனினும், வெனிசுலா வெளியுறவு மந்திரி யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/235758
  6. சிறீதரன் சாதாரண ஆளாய் வந்து இப்போது கோடீஸ்வரர் ஆகீட்டாராம். சாதாரண ஆளாய் உள்ள இன்னொரு புதியவருக்கு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை வழங்குவது வரவேற்கத்தக்கது தானே.
  7. திருத்தம் செய்து தானே தொடரூந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. அப்ப திருத்தாத பாதையிலா இப்போது ஓடவிட்டுள்ளார்கள்?
  8. அண்ணை, ஆக்குவார் காப்பார் அழிப்பார் அருள்தருவார்! வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை
  9. வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது. டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக. யார் இந்த தமிழ் வம்சாவளி வீரர்? 2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போதிருந்து அவர் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இந்த வதோதரா ஒருநாள் போட்டிக்கு முன்பு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் அதன்பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருவருமே வேலை பெற்றார்கள். அவருடைய நான்கு வயதிலிருந்து நியூசிலாந்தில் இருக்கிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் வரிசையில் இவரும் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடுகிறார்" என்று கூறினார். சோதி, அஜாஸ் படேல் போல் ஆதித்யாவும் ஸ்பின்னர் தான். இவர், கூக்ளி அதிகம் வீசக்கூடிய லெக்பிரேக் பௌலர். நியூசிலாந்து முன்னாள் வீரர் தருன் நேதுலாவிடம் பயிற்சி பெற்று அவர் தன்னுடைய கூக்ளியை மெருகேற்றியிருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா. ஆந்திராவில் பிறந்தவரான நேதுலா, நியூசிலாந்துக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி, 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான இண்டோர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஆதித்யா செயல்பட்டிருக்கிறார். இவர், 2020-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி அவர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். ஆக்லாந்து அணிக்காக 2021-ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டிகளில் அறிமுகமான ஆதித்யா, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் அணிக்கும் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடினார். ஆனால், அதன்பிறகு அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பெரிதளவு அவதிப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பு பெற்றிருக்கிறார் ஆதித்யா அஷோக். பட மூலாதாரம்,Instagram/Adhitya Ashok படக்குறிப்பு,ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார். ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார். இதுபற்றி இந்தப் போட்டிக்கு முன்பாக பேசிய அவர், "நானும் என் தாத்தாவும் எங்கள் பூர்வீக வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். மதிப்புகள், ஒழுக்கங்கள் என அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடினோம். அப்போது பின்னால் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது." "அப்போது அந்த வசனம் வந்தது. அது எனக்கு மிகவும் பெர்சனலான ஒரு விஷயம். அந்த உரையாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதன்பிறகு சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாள்களில் நான் அந்த வசனத்தை டாட்டூ குத்திக்கொண்டேன். இது எனது தமிழ் வேர்களுடனும், வேலூருடனும், பிரபலமான ஒரு தமிழ் சின்னத்துடனும், அதே சமயம் உலகளாவிய சின்னத்துடனும் உள்ள ஒரு தொடர்பாகும்" என்று இஎஸ்பிஎன்-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் ரசிகர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wzdr0ldg4o
  10. இந்த பதக்கத்தை ரம்புக்கு கொடுத்தாலாவது வெனிசூலாவின் ஜனாதிபதியாக்க மாட்டாரா என்று போட்ட கணக்கு பிழைக்குதே.
  11. இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:26 PM 'தித்வா' (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹோ ரயில் நிலையத்தில் இன்றைய தினம் காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235774
  12. இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:16 PM 100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. தித்வாவுக்குப் பின்னர் மீள் கட்டமைப்புக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்கத்தை இது குறிக்கிறது. 2025 டிசம்பர் 22 மற்றும் -23 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வருகையின் போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235773
  13. பகிர்விற்கு நன்றி ஐயா. 300 வருடங்களிலே வரலாறே தலைகீழானதே!
  14. நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன் புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம் தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம். மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்டல் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க மக்கள் வருவார்கள். பெரு வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நுகர்வு அலையை,நுகர்வுப் பசியை உற்பத்தி செய்யும். அந்த அலைக்குள் அள்ளுபட்டு மக்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தின் உயர்தர உணவு விடுதிகளுக்கு இரவுகளில் சென்றால் தெரியும். அங்கு குடும்பமாக வந்து சாப்பிடுவது புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டும் அல்ல அவர்களைவிட அதிக தொகையில் உள்ளூர் மக்கள் வருவார்கள். உயர்தர உணவகங்களில் சாப்பிடுவது என்பது ஒரு பொதுப் போக்கு. ஒரு விடுப்பார்வம். ஒரு வித எடுப்பு. சமூகத்தில் அதிகமாக உழைக்கும் அனேகரை அங்கே காண முடியும். ஆனால் எல்லா அலைகளைப் போலவே இந்த அலையும் ஒரு நாள் தணிந்து விடும். ஹீல்ஸ்,நதியாஸ்,நோ லிமிட் போன்றவற்றுக்கு எப்பொழுதும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதில்லை. பண்டிகை நாட்களைத் தவிர. அதுபோலவே பேர்க்கர் கிங்,காலித் பிரியாணி போன்ற உயர்தர உணவகங்களில் எல்லா ஆசனங்களும் என்றென்றும் நிரம்பி இருப்பதில்லை. டிஜிட்டல் ப்ரோமோஷன் மூலம் துண்டப்பட்ட,உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஓர் அலையும் நிரந்தரமானது அல்ல. அலைகள் நிரந்தரமானவை அல்ல. மனிதர்கள் அரசியல் விலங்குகள் மட்டுமல்ல, இலத்திரனியல் வலைக்குள் சிக்கிய இரண்டு கால் பூச்சிகளுந்தான். அரசியலுக்கும் அப்பால் அவர்களுக்கென்று தெரிவுகள், ஈடுபாடுகள்,பசி,தாகம் இருக்கும். போர்க் காலங்களில் சமூகம் மூடப்பட்டிருக்கும்போது தெரிவுகள் குறையும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் பயப்படுத்துவது இலகுவானது. போர், அடக்குமுறை போன்றன ஒரு சமூகத்தை உணர்வுபூர்வமாக நொதிக்க வைக்கும்போது அங்கே மக்களை அரசியலில் உணர்திறன் அதிகமுடையவர்களாக இருப்பதுண்டு. கடல் அமைதியாக இருக்கும்போது மீன் அதிகம் படாது. கடல் கொந்தளிக்கும் நாட்களில் மீன் அலைக்குத் தப்பி வலைக்குள் விழும். எனவே ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்கு,நொதிக்க வைப்பதற்கு ஒரு கூட்டு உளவியல் சூழல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் அல்லது ஏற்கனவே உள்ள காரணங்களை உணர்வுபூர்வமானவைகளாக மாற்ற முடியவில்லை என்றால் அரசியல் விலங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் வணிக நுகர்வு அலைகளால் அடித்துச் செல்லப்படும். தையிட்டி ஓர் உதாரணம். அங்கே போராட வேண்டிய தேவை இருக்கிறது. போராடும்போது அதைத் தடுப்பதற்கு போலீஸ் வருகிறது. அதாவது போராட்டம் தீவிரம் அடைந்தால் ஒடுக்குமுறை அதிகரிக்கும். ஒடுக்கு முறை அதிகரித்தால் அதற்கு எதிரான போராட்ட உணர்வும் தூண்டப்படும். இது ஒரு சமன்பாடு.தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த கவிஞர் மு.பொன்னம்பலத்தின் கவிதை ஒன்று உண்டு.”அதிகாரம் புரியாத சமன்பாடு” என்ற அந்தக் கவிதையில்…. “சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி” என்றும் ,அது அதிகாரம் புரியாத ஒரு சமன்பாடு என்றும் மு.பொ கூறுவார். பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது; காலி முகத்திடலில் கிராமம் அமைத்துப் போராட வைத்தது. ராஜபக்ஸக்களுக்கு வாக்களித்த மக்கள் 21 மாதங்களில் அவர்களை விரட்டினார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அனுர அலையை உற்பத்தி செய்தது,வெற்றியும் பெற்றது. எனவே அலைகளை உற்பத்தி செய்வதற்கு அதற்குரிய அரசியல்,சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்க வேண்டும். கூட்டு உளவியல் இருக்க வேண்டும்.தென்னிலங்கையில் ஏற்பட்ட ராஜபக்சங்களுக்கு எதிரான வெறுப்பு அலையை,தேசிய மக்கள் சக்தி அனுர அலையாக மாற்றியது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் வாக்களிப்பு அலைகளைக் கூட உற்பத்தி செய்ய முடித்தவைகளாக மெலிந்து வருகின்றன. தமிழ்க் கட்சிகள் அலைகளுக்காகக் காத்திருக்க போகின்றனவா? அல்லது பொருத்தமான தருணங்களில் அலைகளை உற்பத்தி செய்யப் போகின்றனவா? அல்லது அலைகள் ஓய்வதில்லை என்று கூறி பழைய பெருமைகளை இரைமீட்டுக் கொண்டிருக்கப் போகின்றனவா? https://www.nillanthan.com/8044/
  15. நாம் மனிதர்களிடம் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் பேசுகிறோமா என்பதை உண்மையிலேயே கூற முடியுமா? பட மூலாதாரம்,Jesussanz/Getty Images கட்டுரை தகவல் டெய்சி ஸ்டீபன்ஸ் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் ஒரு மனிதருடன் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் (செயற்கை நுண்ணறிவிடம்) பேசுகிறோமா என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? நீண்ட காலமாக, கணினிகள் எந்தளவு புத்திசாலித்தனமானவை என்பதை மதிப்பிடும்போது மக்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இது டூரிங் சோதனை (Turing test) என்பதிலிருந்து உருவானது. இதனை 1950-ஆம் ஆண்டு ஆங்கிலேய கணிதவியலாளரும் கணினி விஞ்ஞானியுமான ஆலன் டூரிங் வடிவமைத்தார். இயந்திர நுண்ணறிவு குறித்த தத்துவார்த்த சிந்தனையை முதன்முறையாக ஒரு அனுபவப்பூர்வமான சோதனையாக அவர் மாற்றினார். இந்தச் சோதனையின்படி, ஒரு கணினியின் நடத்தை மனிதனின் நடத்தையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இருந்தால், அது "புத்திசாலித்தனமான" நடத்தையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. பட மூலாதாரம்,Pictures from History/Universal Images Group via Getty Images படக்குறிப்பு,ஆலன் டூரிங், இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து எவ்வளவு வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை என்பதை அளவிடுவதற்காக ஒரு சோதனையை வடிவமைத்தார். ஆனால் 2014-ஆம் ஆண்டில், ஒரு ஏஐ சாட்பாட் முதன்முறையாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்பட்டபோது, அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைவதற்குப் பதிலாக, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மனிதர்களை போலச் செய்தல் டூரிங் சோதனை என்பது மனிதர்களைப் போலவே செய்யும் ஒரு விளையாட்டைப் போன்றது. இதில் ஒரு நபர் மெசேஜ் மூலமாக மற்றொரு மனிதரிடமும் ஒரு கணினியிடமும் உரையாடுவார். அவர் எத்தகைய கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். அதன் முடிவில், யார் மனிதன் மற்றும் எது இயந்திரம் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். "மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களால் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியவில்லை என்றால், மனிதன் சிந்திக்க முடியும், ஆனால் இயந்திரத்தால் முடியாது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டூரிங் கூறினார்," என்கிறார் நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் உளவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் கேமரூன் ஜோன்ஸ். ஐந்து நிமிடக் கேள்வி-பதில்களுக்குப் பிறகு, குறைந்தது 30% நேரங்களில் கணினிகள் தங்களை மனிதர்களாகக் காட்டி வெற்றி பெறும் நிலையை 2000-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்று டூரிங் கணித்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டூரிங் சோதனை என்பது, ஒரு மனிதர் ஒரு இயந்திரத்திடமும் மற்றொரு மனிதரிடமும் உரை வழியாகக் கேள்விகளைக் கேட்ட பிறகு, அவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை அந்த மனிதரால் கண்டறிய முடிகிறதா என்பதைப் பார்க்கிறது. 'நியாயமாக விளையாடவில்லை' 2014-ஆம் ஆண்டில், யூஜின் கூஸ்ட்மேன் என்ற ஏஐ சாட்பாட், டூரிங் சோதனையில் 33% நடுவர்களை தான் ஒரு மனிதன் என்று நம்ப வைத்தது. இதன் மூலம் போட்டி அமைப்பாளர்கள் நிர்ணயித்த தகுதியை அது எட்டியது. ஆங்கிலத்தில் உரையாடிய அந்தச் செயலி, யுக்ரேனைச் சேர்ந்த 13 வயது சிறுவனைப் போன்ற ஆளுமையை கொண்டிருந்தது. ஜெர்மனியின் ஆர்டபிள்யூடிஹெச் ஆச்சென் பல்கலைக்கழகத்தின் தத்துவஞானியும் கௌரவ விரிவுரையாளருமான முனைவர் மார்கஸ் பான்ட்சர், இது "நேர்மையான முறையில் செயல்படவில்லை" என்று கூறினார். "அந்த சாட்பாட்டின் குறைகள், ஆங்கிலம் பேசும் ஒரு யுக்ரேனிய பதின் பருவச் சிறுவனின் மொழித் திறனில் இருக்கக்கூடிய குறைகளோடு ஒத்துப்போயின," என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,VCG via Getty Images படக்குறிப்பு,ஜோன்ஸின் ஆய்வின்படி, 2025-ஆம் ஆண்டில் சாட்ஜிபிடி 4.5 டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றது. அதன் பிறகு, பல மேம்பட்ட கருவிகள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஓபன்ஏஐ-இன் சாட்ஜிபிடி 4.5 மாடல் 73% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டதாக ஜோன்ஸ் கண்டறிந்தார். இது உண்மையான மனிதர்களைக் காட்டிலும் அதிகப்படியான விகிதமாகும். மெட்டாவின் லாமா 3.1 மாடல் 56% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டது. "உண்மையான மனிதர்களை விடவும் மிக அதிகப்படியான நேரங்களில் இந்த மாடல்கள் மனிதர்களாகக் கருதப்படும்போது, அவை அந்தச் சோதனையில் (டூரிங் சோதனை) தேர்ச்சி பெறவில்லை என்று வாதிடுவது கடினம் என நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இருப்பினும், கணினிகளால் உண்மையில் சிந்திக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றா என்பதில் சிலருக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. 'சீன அறை வாதம்' எனும் பரிசோதனை முறை 1980-ஆம் ஆண்டில், தத்துவஞானி ஜான் சீர்ல் 'சைனீஸ் ரூம் ஆர்குமெண்ட்' (Chinese room argument) எனப்படும் ஒரு பரிசோதனையை முன்வைத்தார். சீன மொழி தெரியாத ஒரு ஆங்கிலேயர், சில சீன எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஆங்கில வழிமுறைகளுடன் ஓர் அறைக்குள் பூட்டப்படுகிறார் என்று தொடங்குகிறது அந்த பரிசோதனை. அறைக்கு வெளியே இருப்பவர்கள் சீன மொழியில் எழுதப்பட்ட கேள்விகளைச் சீட்டுகளாக அவருக்கு உள்ளே அனுப்புகிறார்கள். அவர் தன்னிடம் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, சீன மொழியிலேயே பதில்களைத் தயார் செய்து வெளியே அனுப்புகிறார். வெளியே இருப்பவர்களுக்கு, அந்த மனிதருக்குச் சீன மொழி தெரியும் என்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் தான் என்ன சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியாது. தகுந்த பதில்களைத் தருவதற்கு நிரலாக்கம் செய்யப்பட்ட கணினிகளுக்கும் இதுவே பொருந்தும் என்று சிலர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Malte Mueller/Getty Images படக்குறிப்பு,இயந்திரங்கள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெறுவது வெறும் மனிதர்களைப் போல பாவனை செய்வதால் மட்டும் தான். மாறாக அவற்றுக்கு உண்மையில் சுயமாக அறிவு இருப்பதனால் அல்ல என சிலர் வாதிடுகின்றனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜார்ஜ் மாப்புராஸ், டூரிங் சோதனைக்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், "டூரிங் சோதனை நுண்ணறிவைக் கண்டறிய முயல்வதாகக் கூறினாலும், அது முக்கியமாக ஒரு இயந்திரத்தால் மனிதர்களைப் போலச் சரியாகப் பாவனை செய்ய முடிகிறதா என்பதையே சோதிக்கிறது," என்றார். இதனை விளக்க அவர் ஓர் உதாரணத்தைக் கூறினார். "நீங்கள் எந்த ஒரு ஏஐ சாட்பாட்டையும் திறந்து, ஒரு அனலாக் கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டால், அது துல்லியமாக விளக்கும்," என்றார். ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் காட்டும் கடிகாரத்தின் படத்தை உருவாக்கச் சொன்னால், தற்போதைய ஏஐ மாடல்கள் அதில் தோல்வியடைய வாய்ப்புள்ளது. "அது உண்மையில் தகவலைப் புரிந்துகொள்ளவில்லை," என்று அவர் கூறினார். மறுபுறம், பான்ட்சர் போன்றவர்கள், டூரிங் சோதனையானது நடுவரை ஏமாற்றும் கணினியின் திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதுகின்றனர். மேலும், "உண்மையான புத்திசாலித்தனமான நடத்தையில் ஏமாற்றுவதும் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அதுவே அதன் அடிப்படை அம்சம் கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்று சோதனைகள் பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட மாற்றுச் சோதனைகளில் ஒன்றான சமூக அடிப்படையிலான நுண்ணறிவுச் சோதனை என்பதை பான்ட்சர் உருவாக்கியுள்ளார். ஆய்வக அடிப்படையிலான டூரிங் சோதனையைப் போன்று இல்லாமல், இவரது முறையில் ஒரு ஏஐ அமைப்பு ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் (உதாரணமாக, கணிதவியலாளர்களின் ஆன்லைன் குழுமம்) அவர்களுக்குத் தெரியாமல் வைக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்த உறுப்பினர்களிடம் அது ஓர் இயந்திரம் என்பதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்று சோதனை செய்யப்படும். இதில் ஓரளவுக்கு ஏமாற்றும் முறை இருந்தாலும், அந்த அமைப்பு மனிதர்களைப் போல 'நடிப்பதை' விட, 'மனிதத்தன்மையுடன் நடந்துகொள்வதையே' இந்தச் சோதனை முக்கியமாகக் கருதுவதாக பான்ட்சர் கருதுகிறார். இது ஒரு முக்கியமான வேறுபாடு என்று அவர் கூறுகிறார். "நுண்ணறிவு என்பது இயற்கையான சூழலில், நாம் உண்மையில் ஈடுபடும் சூழல்களில் மதிப்பிடப்பட வேண்டும்," என்றும் அந்தத் தத்துவஞானி குறிப்பிட்டார். இந்தச் சோதனையானது, ஒரு ஏஐ அமைப்பு ஏமாற்றும் அந்த சோதனையில் வெற்றி பெறுகிறதா என்பதில் கவனம் செலுத்தாமல், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மென்பொறியாளர்களை கவனம் செலுத்த ஊக்குவிப்பதாக அவர் கூறினார். மறுபுறம், மாப்போராஸ் ஒரு சோதனையை வடிவமைத்துள்ளார், அது நுண்ணறிவின் மிகவும் உறுதியான அளவுகோலைப் பார்க்கிறது என்று அவர் கூறினார். ஒரு இயந்திரம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த தகவல்களைக் கொண்டு, "ஏதேனும் புதிய அறிவியல் அறிவைக் கண்டறிந்து அதனை விளக்க" முடியுமானால், அது செயற்கை பொது நுண்ணறிவை எட்டிவிட்டதாகக் கருதலாம் என்று அவர் நம்புகிறார். செயற்கை பொது நுண்ணறிவு என்பது ஓர் இயந்திரம் மனிதனுக்கு இணையான அறிவுத்திறனைப் பெற்றிருக்கும் ஒரு கோட்பாட்டு ரீதியான கருத்தாக்கமாகும். பட மூலாதாரம்,Oscar Wong/Getty Images படக்குறிப்பு,திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன ஏஐ ஆராய்ச்சியில் டூரிங் சோதனைக்கு இன்னும் ஓரிடம் இருப்பதாகச் சிலர் நம்புகின்றனர். திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். "இதனை மற்றொரு நிலையான அளவுகோலைக் கொண்டு நாம் மாற்றினால், டூரிங் எதைச் சொல்ல வந்தார் என்பதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் என்றுதான் அர்த்தம்," என அவர் தெரிவித்தார். 'தோல்வியடையும் போர்' எந்தச் சோதனையைப் பயன்படுத்தினாலும், ஏஐ அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, அவை மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு மாறிவிடும் என்று பான்ட்சர் நம்புகிறார். "இறுதியில், நாம் ஒரு தோல்வியடையக்கூடிய போரையே நடத்திக் கொண்டிருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இதனை நிரூபிக்க முடிந்தால், பொறுப்புணர்வு காரணங்களுக்காக, செயற்கை நுண்ணறிவு தன்னை ஏஐ என அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்ட வடிவமைப்புகள் தேவையென்பதை நியாயப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். "பிழையான தரவுகளைக் கொண்ட ஒரு ஆய்வறிக்கையை நான் வெளியிட்டால், அதற்கு நானே பொறுப்பு, ஆனால் அது ஏஐ எழுதிய கட்டுரையாக இருந்தால், யாரும் பொறுப்பேற்க முடியாது" என்கிறார் பான்ட்சர். பட மூலாதாரம்,10'000 Hours/Getty Images படக்குறிப்பு,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிநவீனமாக மாறி வருவதால், அதனுடனான நமது தொடர்பு மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு இயந்திரம் எந்த அளவுக்கு மனிதனைப் போலப் பாவனை செய்ய முடியும் என்பதை அளவிடுவது முக்கியம், இது டூரிங் சோதனையை இன்றும் பொருத்தமானதாக மாற்றுகிறது என்று ஜோன்ஸ் கருதுகிறார். "நாம் இணையத்தில் மற்றவர்களுடன் உரையாடுவதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம், தற்போது மக்களிடையே ஒரு அனுபவம் அதிகரித்து வருகிறது... அதாவது, எக்ஸ் தளத்தில் ஒரு பயனருடன் விவாதத்தில் ஈடுபடும்போது திடீரென, 'உண்மையில், நான் ஒரு மனிதனிடம் பேசவில்லை' என்பதை மக்கள் உணர்கிறார்கள்"என்று அவர் கூறினார். மேலும், "இத்தகைய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை டூரிங் சோதனை துல்லியமாகக் காட்டுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjp73gjkno
  16. தையிட்டி: காணிப் பிரச்சினையா? - நிலாந்தன் வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி வவுனியாவில் கூடி உட்கட்சி முரண்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. வருஷம் பிறந்த மூன்றாம் நாளில் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இது. இத்தனைக்கும் தையிட்டியில் தமிழரசுக் கட்சிக்காரர்களும் காணப்பட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி அது. அதிகளவு நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பது. தானே தலைமைக் கட்சி என்றும்,தானே தமிழ் அரசியலை வழி நடத்துவதாகவும் கூறிக்கொள்கிறது;கருதிக் கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உட்பகையைத் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி. தொடர்ந்தும் பதில் தலைவரின் கீழும் பதில் செயலாளரின் கீழும் இயங்குவதை ஒரு தோல்வியாகச் சுட்டிக்காட்டக்கூடிய மூத்த கட்சி உறுப்பினர்களும் இல்லை. மூத்த ஆதரவாளர்களும் இல்லை. மதத்தலைவர்களாலோ அல்லது சிவில் சமூகத் தலைவர்களாலோ யாராலுமே தீர்க்கமுடியாத ஒரு முரண்பாடாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தானே தனக்குள் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. ஏதாவது ஓர் அணி பலமடைந்து கட்சித் தலைமையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தவிர கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போகும் நிலைமைகள்தான் அதிகரிக்கின்றன. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் சமூக வலைத்தளங்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்குகிறார்கள். ஒருவர் மற்றவரை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவரை சுற்றி வளைக்கும் முற்படுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அது அதிகம் சீரழிந்த ஒரு காலகட்டமாக இதைக் கூறலாமா? இதை அறிவுப்பூர்வமாக அணுகத்தக்க ஒருவருமே கட்சிக்குள் இல்லையா? இந்த முரண்பாட்டை அறிவுபூர்வமாக அணுகினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.கட்சி தனக்குள் இரண்டுபட்டிருக்கும் வரை கட்சியாகவும் உருப்பட முடியாது;தமிழ்த் தேசிய அரசியலையும் முன்னோக்கி நகர்த்த முடியாது. இந்த முரண்பாட்டைத் தீர்க்க கட்சிக்குள்ளும் ஆளில்லை கட்சிக்கு வெளியேயும் ஆள் இல்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பாரதூரமான சீரழிவின் பின்னணியில் தையிட்டி போன்ற போராட்டக் களங்களில் உறுதியாக முன்னோக்கிச் செல்ல முடியுமா? ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடி காணிகளை மீட்க முடியுமா? இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொண்டுவிடும். அரசாங்கம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தை நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தை ஒரு காணிப்பிரச்சனையாக அது குறுக்கப் பார்க்கிறது. கடந்த பௌர்ணமி நாள் போராட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார,”இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை.இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டின் முடிவில் யாழ் அரச அதிபருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பும் அந்த அடிப்படையிலானது தான். தமிழ்ப் பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் மிக்க,நயினா தீவு விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் பக்கம் நின்று கதைத்தாலும், அவரும்கூட இந்த விடயத்தை காணிப் பிரச்சனையாகத்தான் சுருக்குகிறார். திஸ்ஸ விகாரையின் அதிபதி அதனை முழுக்க முழுக்க காணிப் பிரச்சினையாகவே குறுக்குகிறார். ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம். ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா. அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும். அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கம் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது. எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திக்கூடாகச் சித்தரித்தால் அது மிகத்தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009க்குப் பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய உதாரணம். அதிலிருக்கும் அரசியலை நீக்கி அதைக் காணிப் பிரச்சினையாகக் காட்டுவதே ஓர் அரசியல்தான். எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது. அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான். தையிட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொதி நிலையில் வைத்திருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அந்தக் கட்சி தையிட்டியில் போராடும். ஆனால் அந்தப் போராட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும்தான் பங்குபற்றுவதுண்டு. அவை மக்கள் மயப்பட்ட போராட்டங்களாக அநேகமாக இருப்பதில்லை. எனினும் சில விசேஷ தினங்களில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளும்,சிவில் சமூகங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணையும்போது அந்தப் போராட்டத்தில் பெருமளவு சனத் தொகையைக் காணலாம். திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. இப்போராட்டங்களில் சில நாட்களில் அதிக தொகை மக்கள் வருவார்கள். அதற்குக் காரணம் அங்கே எல்லா கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மதகுருக்களும் கூடுவதுதான். கடந்த பௌர்ணமி நாளன்றும் அதுவே நடந்தது. அதற்கு முதலில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திலும் அவ்வாறு அதிகளவு ஜனத்தொகையை காண முடிந்தது. அந்தப் போராட்டத்திற்கு அதாவது ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச சபை. இப்பொழுது நீதி அமைச்சர் கூறுகிறார் அது திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு காணிப் பிரச்சினை என்று. இல்லை.அது காணிப் பிரச்சினையல்ல.அது அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு. காணி உரிமையாளர்கள் மட்டும் அரசாங்கத்தோடு பேச முடியாது.அந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மதகுருக்களும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும். 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாற்றத்தைக் காட்டவேண்டிய ஒரு களம் அது. ஆனால் அனுர அரசாங்கம் திஸ்ஸ விகாரை விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதற்குள்ள இன முரண்பாட்டுப் பரிமாணத்தை இல்லாமல் செய்து விட்டு அதை வெறும் காணிப் பிரச்சினையாகக் காட்டப் பார்க்கின்றது. புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார். ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை விடயத்தில் மாற்றம் இன்மைதான் மாறிலியா? https://www.nillanthan.com/8048/
  17. சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில் 11 Jan, 2026 | 01:51 PM (நா.தனுஜா) இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று எனப் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் கூறியிருப்பதாவது, சட்டத்தரணியும், பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கின்றேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார். இருப்பினும் அவரது சிங்களத் தேசியவாதமும் எமது தமிழ்த்தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ்மொழியையே பேசினர். இந்நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. உண்மையில் மாகாணசபைகள் ஒட்டுமொத்த இலங்கைக்குமான கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமை அல்ல. மாறாக வட, கிழக்கு மாகாணங்களுக்கான சுயாட்சியை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் ஊடாக வடிவமைக்கப்பட்ட முறைமையே அதுவாகும். எனவே வெறுமனே மாகாணசபைகள் முறைமை இலங்கைக்குக் பொருத்தமானதல்ல எனக் கூறுவதற்கு முன்னர், நாட்டின் கடந்தகால மற்றும் அண்மைய வரலாற்றை திலித் ஜயவீர நன்கு அறிந்துகொள்ளவேண்டும். தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235743
  18. இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர் 11 Jan, 2026 | 12:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங், எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திரி எரிக் மேயர் புதிய தூதுவராகக் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார். இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெறுவற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுச் சேவையின் சிரேஷ்ட உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், பங்காளதேசம், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இப்பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும் அவர் பொறுப்பு வகித்தார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் ஆழமான அனுபவம் கொண்ட எரிக் மேயர், வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இலங்கையை ஒரு முக்கியமான மையப்புள்ளியாகக் கருதுகிறார். சமீபத்தில் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு உறவுகள் குழுவின் முன்னிலையில் தெளிப்படுத்திய அவர், தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா முன்னுரிமை அளிக்கவுள்ள முக்கிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். எரிக் மேயரின் வருகையானது, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் 'தித்வா' சூறாவளி பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஒரு முக்கியமான காலப்பகுதியில் அமைகிறது. குறிப்பாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இலங்கையின் கடல்வழியாகவே செல்கிறது. எனவே, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பேணுவதற்கு இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியமானது என மேயர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதார சுதந்திரம் அதன் தேசிய இறையாண்மையுடன் நேரடித் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுடன் இணைந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை ஊக்குவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் இலங்கையை பிராந்திய பொருளாதாரத்தின் தலைமையாக மாற்றும் வல்லமை கொண்டவை என்றும், இது அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் கடன் பொறி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய செனட் குழுவினருக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது துறைமுகங்கள் மீதான முழுமையான இறையாண்மையைப் பேணுவதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார். ஜூலி சங்கின் பதவிக்காலத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பங்களிப்பு, கல்வி மற்றும் கலாசார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது நோக்கம் என எரிக் மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக 2 மில்லியன் டொலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடல்சார் பாதுகப்பு, சட்ட அமுலாக்கக் கூட்டுறவு மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235739
  19. மீண்டும் அதே திசையில்த்தான் சிந்திக்கிறீர்கள். சோனியா எனும் தனி மனிதர் செய்த தவறுகள் குறித்துப் பேசுவதும், நீதிகேட்பதும் எவ்வாறு இந்தியாவைப் பகைப்பது ஆகிவிடுகிறது? பாரதீய ஜனதாக் கட்சி மீது ஈழத்தமிழர்களுக்குப் பகையிருக்கிறதா, என்ன? அல்லது இந்திய மக்கள் மீதுதான் எமக்குப் பகையிருக்கின்றதா? இருப்பதெல்லாம் எம்மீது படுகொலை ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்ட சோனியா எனும் தனிப்பட்ட மனிதருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் தேவைமட்டுமே. ஒரு குற்றவாளி மீது தண்டனையினைக் கோரும்போது அந்த நாட்டினையே பகைப்பது ஆகிவிடுவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் சோனியா என்பது ஒரு நாடல்ல, தனி மனிதர் மட்டுமே. யூகொஸ்லாவியாவின் சேர்பியப் போர்க்குற்றவாளி சுலொபொடான் மிலோசொவிச்சினை கைதுசெய்தபோது அதனை சேர்பியாவுக்கெதிரான பகையுணர்வாக அந்த நாட்டு மக்களே பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நாட்டு மக்களின் உதவியுடனேயே அவன் சர்வதேசப் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டான். அப்படியிருக்க, சோனியா மீதான விமர்சனம் என்பதோ அல்லது தண்டனைக்கான கோரல் என்பதோ எப்படி இந்தியா எனும் மொத்த நாட்டையே பகைப்பதாக ஆகிவிடுகிறது??
  20. அரசியலமைப்பு பேரவையிருந்து விலகுவதற்கு சிறிதரன் எம்.பிக்கு ஒருவார கால அவகாசம் - பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் கடிதம் 11 Jan, 2026 | 03:31 PM (நா.தனுஜா) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகத் தொடர்ந்து செயற்படுவது தம்மையும், தமது கட்சியையும் மேலும் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதனால் கட்சியின் அரசியல் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்புப் பேரவையில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.சு.சுமந்திரன் சிறிதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியாவில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில், சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன், பேரவையில் செயற்படும் விதம் குறித்து அண்மையில் சர்ச்சைக்குள்ளான விடயங்கள் பற்றிய ஆராயப்பட்டது. அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம், இழப்பீட்டுக்கான அலுவலக உறுப்பினர் நியமனம், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம், பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் என்பன உள்ளடங்கலாக இதுவரையில் இடம்பெற்ற 8 நியமனங்கள் தொடர்பான வாக்களிப்பின்போது சிறிதரன் அரசாங்கத்தரப்புடன் இணைந்து வாக்களித்திருப்பதாகவும், அவர்களில் சிலர் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி சிறிதரனுக்குக் கடிதம் அனுப்புவதற்கு அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி 07.01.2026 எனும் திகதியிடப்பட்ட கடிதம் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. https://www.virakesari.lk/article/235753 இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கு 2010 ஜனாபதித் தேர்தலில் வாக்குக்கேட்டுவிட்டு இப்ப என்ன கணக்காய்வாளர் நாயகம் என கணக்கு விடுகிறார்கள்!
  21. உலக விடயங்களில் நிறைவான அறிவினைக் கொண்டிருக்கும் நீங்கள் இப்படி எழுதுவது வியப்பினை அளிக்கிறது. ஏனென்றால், இலங்கையில் சீனத் தலையீட்டினை அனுமதித்ததே இந்தியாதான் என்பதை எப்படி நீங்கள் உணர மறந்தீர்கள்? இறுதி யுத்தச் காலத்தின் ஆரம்ப நாட்களில் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைத் தருமாறு கோத்தாபய முதலில் கேட்ட நாடு இந்தியாதான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய எதிர்ப்பினால் போரில் நேரடியாகப் பாவிக்கும் ஆயுதங்களை தரமுடியாது என்று மறுத்த இந்தியா, இலங்கை "நீங்கள் தராவிட்டால் நாங்கள் வேறு நாடுகளிடம்தான் செல்லவேண்டும்" என்று கோத்தா கூறியபோது சீனாவிடமும் பாக்கிஸ்த்தானிடமும் இர்நுது ஆயுதங்களை நீங்கள் வாங்கலாம் என்று இந்தியா அனுமதியளித்தது. இதன் மூலம் சீனா இலங்கையில் காலடி எடுத்துவைக்க இந்தியாவே வழிகோலியது. ஆனால், தமிழரைப் பழிவாங்க இந்தியா எந்தப் பேயிடமாவது ஆயுதங்ம் வாங்குங்கள் என்று இலங்கையிடம் தெஹ்ரிவித்துபிட, சீனாவும் பாக்கிஸ்த்தானும் இலங்கைக்குள் குடியேறின. இந்த நிலைமை யுத்தம் முடிந்தபின்னர் இன்னும் மோசமாகியது. மகிந்த இந்தியாவை எட்டி உதைந்துவிட்டு சீனாவிடம் அடைக்கலமானார். இதன்பிறகே அம்பாந்தோட்ட, கொழும்பு துறைமுக நகர் என்று சீன ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
  22. புலம் பெயர் தமிழர்களின் காணி தடையின்றி முன்னெடுக்கலாம்; ஏற்பாடுகள் காணப்படுவதாக பதிவாளர் திணைக்களம் அறிவிப்பு 11 Jan, 2026 | 12:38 PM (எம்.மனோசித்ரா) புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென பதிவாளர் திணைக்களம் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். காணிகளைப் பதிவு செய்வதிலும் எவ்விதத் தடையும் இல்லை. வெளிநாடுகளிலுள்ள அந்த மக்களுக்காக உள்நாட்டிலுள்ளவர்கள் காணியொன்றைக் கொள்வனவு செய்வதாயின் காணிப் பதிவு சட்டத்தின் கீழ் காணி விற்பவர் வாங்குபவர் என இருவரும் கையெழுத்திட வேண்டும். விற்பவர் உள்நாட்டிலும், காணியைக் கொள்வனவு செய்பவர் வெளிநாட்டிலும் இருப்பாராயின் அவர் எழுத்து மூலம் ஒரு கடிதம் வழங்குவாராயின் அதுவே போதுமானது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே காணியைக் கொள்வனவு செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் நபரொருவர் தனது காணி தொடர்பில் பிரிதொருவர் போலியான ஆவணமொன்றை தயாரிப்பதாகக் கருதினால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்ள முடியும். குறித்த காணிக்கு தடையுத்தரவு விண்ணப்பம் போடப்பட்டால் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/235738
  23. சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ 11 Jan, 2026 | 12:30 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுவதுடன், 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது இரண்டு நாள் பயணத்தின் போது, வோங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக நீடிக்கிறது. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்கு இந்தக் கப்பல் விவகாரமே பிரதான காரணமாகக் கருதப்படும் நிலையில், வோங் யீயின் வருகையின் போது இவ்விடயம் குறித்து எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/235736
  24. மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு 11 Jan, 2026 | 12:20 PM தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படுவதாக மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சிரேஷ்ட உறுப்பினர் ஜூவரட்ணம் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், இடம் பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானோர் தங்கியுள்ள மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அத்தகைய முன்னேற்றம் காணப்படவில்லை. ஏற்கனவே நிலவும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இம்மக்கள் அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களை அணுகுவதில் போதிய கொள்கைத் தெளிவின்மை, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அனுபவக்குறைவு போன்றவை பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிலத்திற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் மற்றும் வீடமைப்பிற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவியை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உடனடியாகத் தெளிவுபடுத்துவதோடு, நிலங்களை அடையாளம் காண்பதற்கும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் பல்தரப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். மேலும், தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்திய வீடமைப்புத் திட்டத்தைப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அபாயகரமான இடங்களுக்குத் தள்ளாமல் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் பாதுகாப்பான நில உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235734
  25. Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 11 Jan, 2026 | 11:37 AM முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் - படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை (10) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எண்ணக்கருவை நனவாக்கும் வகையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து 900 முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களுக்கு சிறுவர்களின் அடையாளம் காணப்பட்ட பத்து ஆளுமைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் கருவிகள் மற்றும் சிறப்பு வள கருவிகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் மாகாண ஆளுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/235729

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.