stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
மேஹ்ர் நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையின் படி, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாகிஸ்தான் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் உருவான இரண்டு வார தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்: • இந்த ceasefire ஒப்பந்தம், ஈரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மொஜ்தபா காமெனெய் அவர்களின் அனுமதியுடன் எட்டப்பட்டது. • இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு ஒரு “வெற்றி” என அவர்கள் விவரித்துள்ளனர். • நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாதில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Al JazeeraIran accepts ceasefire after Trump says it will pause bom...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
ஓம் அது தான் இங்கிலாந்தில் இப்போது வசந்தம் தொடங்கிய போது அவுஸ்ரேலியாவில் இலையுதிர் காலம் தொடங்கியதற்கும் காரணம்
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
விசர் தம்பர் அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இஸ்ரேல் நோக்கி ஏவுகணை வீச்சு என்கிறது இஸ்ரேல். பிபிசி Sirens sound in Israel, military sayspublished at 00:05 00:05 Minutes after Trump's announcement, the Israel Defense Forces (IDF) said that they have identified missiles launched from Iran. The IDF says "defensive systems are operating to intercept the threat". The public have also been warned to "enter a protective space and remain there until further notice".
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இஸ்லாமபாத் அக்கோர்ட்ஸ் என அழைக்கப்படும், இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் ஒருங்கிணைத்தாராம். தம்பரின் யுத்த தவிர்ப்பு டிரூத் சோசல் அறிவிப்பை எக்ஸ் இல் பகிர்ந்தார் ரூபியோ.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
டொனால்ட் ஜே. டிரம்ப் @ realDonaldTrump பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்! இவ்வாறு செய்வதற்கான காரணம், நாம் ஏற்கனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம், மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம். கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இந்த இரண்டு வார கால அவகாசம், உடன்படிக்கையை இறுதி செய்து முழுமையாக்க உதவும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாக, ஜனாதிபதியாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகாலப் பிரச்சினை ஒரு தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் https://truthsocial.com/@realDonaldTrump/posts/116365796713313030
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அமெரிக்கா ஈரான் நாடுகள் 2 வார போர் தவிர்ப்பை ஒத்து கொண்டுள்ளனவாம். https://x.com/southasiaindex/status/2041642366713655734?s=46
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் தனது சமூக ஊடகப் பதிவில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள்: பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தலைவரான அசிம் முனீர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவர்கள் கேட்டுக்கொண்டதால், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்பட இருந்த “அழிவுத் தாக்குதலை” தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இதற்கான நிபந்தனையாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாக, பாதுகாப்பாக திறக்க ஈரான் சம்மதிக்க வேண்டும் என்று கூறினார். இந்த இடைநிறுத்தம் இரு தரப்பும் பின்பற்ற வேண்டிய ceasefire என அவர் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ இலக்குகள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன, மேலும் ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தம் உருவாகும் நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன என்று அவர் கூறினார். ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளது; அது பேச்சுவார்த்தைக்கான ஒரு செயல்படுத்தக்கூடிய அடிப்படையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சினைகள் இரு நாடுகளுக்கும் இடையில் தீர்க்கப்பட்டுவிட்டன; மேலும் இரண்டு வார இடைவேளையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார். அமெரிக்காவையும், மத்திய கிழக்கு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த நீண்டகால பிரச்சினை தீர்வுக்கு நெருக்கமாக இருப்பது ஒரு “மரியாதை” என அவர் குறிப்பிட்டார். Al JazeeraTrump says US to suspend ‘bombing, attack of Iran’ for tw...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
RIP US-Israeli strikes on Sharif University of Technology in Tehran கோழைகளின் தாக்குதல் பாடசாலை வாசலில் தொடங்குகிறது, அறிவின் ஒளியைப் பார்த்தாலே அவர்களின் நிழல் நடுங்குகிறது. புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அசைந்தால் கூட அதைப் பயமாக நினைக்கும் மனங்கள் எத்தனை இருளில் வாழ்கின்றன. பல்கலைக்கழகத்தின் மணி ஒலி சுதந்திரத்தின் சத்தம்; அதை மௌனப்படுத்த கோழைத்தனம் எத்தனை முகமூடிகள் அணிகிறது. அறிவை அழிக்க முடியாது, அது மண்ணில் விழுந்தாலும் முளைக்கும் விதை. ஒரு மாணவன் விழுந்தாலும் நூறு மாணவர்கள் எழுந்து நிற்பார்கள். கோழைகளின் தாக்குதல் சுவர்களை உடைக்கலாம், ஆனால் சிந்தனையை உடைக்க முடியாது. பாடசாலை ஒரு கட்டிடம் அல்ல, அது மனித குலத்தின் மூச்சு.
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 8ம் பொருத்தம் போல் உள்ளது😂. பூமி சரிந்த வாக்கில் சூரியனை சுற்றுவதால் - சூரிய ஒளி வெவ்வேறு கோணங்களில் பூமியில் விழுகிறது என்பதே முழுமையான விடை என நினைக்கிறேன். சரியா? வட தென் அரைக்கோள நாடுகளில் (இங்கிலாந்து, அவுஸ்) ஒரு நாட்டில் பனிக்காலமாய் இருக்கும் போது மறு நாட்டில் வசந்த காலமாய் வரவும் இதுவே காரணம்.
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- Today
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தவெகவுடன் போகாததால் ஒரு பறையர் துணை முதல்வர் ஆகும் வரலாற்று வாய்ப்பை விசிக இழந்து விட்டதோ என்ற நினைப்பு போக போக வலுவாகிறது. விசிகவின் எம் எல் ஏக்களை திமுக கன்ரோலில் எடுத்துள்ளது என்பதை திருமாவின் வேட்பாளர் தேர்வு தெளிவாக காட்டுகிறது. தேர்தல் பின் சூழலை வைத்து அவரே போட்டியிட விரும்பியும் முடியாத நிலை. பிரேமலாதாவுக்கு கிடைத்த அளவு கூட சீட் இல்லை. இத்தனையையும் தாங்கி கூட்டில் நிண்டது பிஜேபி காலூன்ற கூடாது என்று. ஆனால் இன்று மம்தா பானர்ஜி - திமுகவும் பாஜகவும் ரகசிய உறவில் உள்ளார்கள் என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். திருமா நல்லதொரு வாய்ப்பை, சாதி கட்சி அடையாளத்தில் இருந்து வெளிவரும் சந்தர்பம் ஒன்றை தவறவிட்டுள்ளார் என்றே படுகிறது. விஜையோடு போயிருந்தால் - அவரை இவர் ஒவர் டேக் கூட பண்ணி இருக்கலாம். ஒவ்வொரு நகர்விலும் திருமாவை திமுக ஒரு வீட்டு காவல் கைதிபோல் கட்டி வைக்கிறது. அது பருத்திவீரனில் செவ்வாழை சொல்லும் வகையான ஆலோசனை என்பது அவர்களுக்கும், எங்களுக்கும் தெரியும்😂
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பொதுவாழ்விற்கு அரசியலுக்கு வருபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவசியம் கூர்ந்து பார்க்கபட வேண்டிய ஒன்று உலகத்தின் முதல் மொழி தமிழ் தான் அதை உயிரெனக் காப்போம் என்று சீமான் முழங்கியதை அவர் முன்வைத்த கொள்கைகளை மட்டும் பார்த்து அவரை தமிழர்களின் காவல் தெய்வம் தமிழர்களின் அரண் என்று நம்பி தொண்டர்கள் ஏமாற அவரோ தனது மகன்களை தமிழ்நாட்டிலேயே தனியார் பாடசாலையில் பல இலட்சங்கள் செலவழித்து ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கின்றார் எங்களுக்கு ஆலோசனைகள் அள்ளி வழங்குபவர்களின் தனிபட்ட வாழ்கையையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் அல்லது அவர்கள் வழங்கிய ஆலோசனைகளை கேட்டு நாங்கள் ரஷ்யாவிற்கும் பெலரஸ்சுக்கும் விசாவிற்கு விண்ணபித்து அலைந்து கொண்டிருக்க அவர்களோ லண்டளிலும் யேர்மனி கனடாவிலும் செற்றிலாகி ஜனநாயக சுதந்திர வாழ்கை வசதிகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள்
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
ஆரம்ப பாடசாலையில் ஒரு ஆசிரியர் இந்த சூரியன் மத்திய கோடு, மகர கோடு, கடக கோடுகளில் உச்சங்கொடுக்கும் காலம் பற்றி படிப்பித்தார், அவரிடம் எதற்காக சூரியன் மேலேயும் கீழேயும் போகிறதென்று கேட்டால், குறிப்பு புத்தகத்தினை (கொப்பி என அழைப்போம்) கொண்டு வரசொல்லி அதில் பல பாடங்களை ஒன்றாக எழுதி இருந்ததினை சுட்டுக்காட்டி என்னை பிச்சு எடுத்துவிட்டார்.🤣 பிறகு நானாகவே ஒரு முடிவுற்கு வந்தேன் ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் பாராட்டுவதோடு நிற்கமாட்டார்கள், அந்த கேள்வி அவர்களுக்கு உவப்பானதாக இருக்க வேண்டும், அப்படி உவப்பானதாக இல்லாவிட்டால் பின் விளைவு பலமாக இருக்கும்🤣. அதனால் பின்னர் கேள்வியே கேட்பதில்லை. சில நாள்களின் பின் நானாகவே ஒரு முடிவிற்கு வந்தேன் பூமி 23.5 பாகை சரிந்திருப்பதாலேயே அது ஏற்படுகிறது என.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நீங்கள் சொல்வது சரியே. இதுவரை வாக்குச் சாவடிகளுக்கு வராதவர்கள் வருவதற்கான பிரதான காரணம் விஜய்யாகவே இருக்கும். தேமுதிகவிற்கு பத்து தொகுதிகள் கொடுத்தது திமுகவின் பெரிய சறுக்கல். அதில் சிலதை விசிகவிற்கு மேலதிகமாக கொடுத்து இருக்கலாம்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
ஒரு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதா?
-
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'
நான் ஒரு தீர்கதரிசி😂 என் பெயர் முகமது பின் துக்ளக்😂
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
வடக்கிருத்தல் என்பது பழந்தமிழர் மற்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு பழக்கவழக்கமாகும் . அவமானம், தோல்வி அல்லது தீராத பழி நேரும்போது, மன்னர்கள் மற்றும் புலவர்கள் வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து, உண்ணா நோன்பிருந்து தங்களின் உயிரைத் துறக்கும் முறை. இது ஒரு தற்கொலை முயற்சி அல்ல, மாறாக உயரிய மான உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு இறுதிச் சடங்காகவே கருதப்படுகிறது. நன்றி - விக்கி
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அங்கே ஒருவர் மிச்சம் இல்லாமல் இருப்பது முழுவதும் மறை கழன்ட கூட்டம். ஹெக்சத் எல்லாம் கட்டிலோடு சங்கிலியால் கட்டி, 18 ம் மாடியில் தனி அறையில் வைத்து வைத்தியம் பார்க்க வேண்டிய கேசு…. அவரின் மண்டையில் இன்னும் சிலுவை யுத்தமே ஓடுகிறது…அதில் அவர் ஒரு பிரெஞ் அல்லது இங்கிலாந்து அரசர். வான்ஸ் யுத்தத்தை விரும்பாதது மாகா மடையர்களை கவர் பண்ணி அடுத்த முறை வெல்ல.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
வாக்கு எண்ணிக்கை, இளவயது வாக்காளர் வாக்கு பதிந்த சதவீதம் வாக்களிப்பன்றே சில முடிவுகளை சூசகமாக காட்டும் என நினைக்கிறேன். நீங்கள் சொன்ன அத்தனை விடயத்தையும் ஏற்கிறேன்… ஒன்றை தவிர….இந்த முறை இளைஞர் அதிகம் வாக்கு போட்டால் அதனை அறுவடை செய்வது விஜைதான். சீமானால் ஈர்க்க முடிந்தாலும் வாக்காக மாற்ற முடியாத கூட்டத்தினர் இந்த 18-40. இவர்கள் வாக்கு சாவடி வரை இந்த முறை வந்தால் அது சீமானால் அல்ல, விஜையால்தான் இருக்கும். திருமாவின் குழப்பம் விஜையின் தலித் வாக்கு வங்கியை கூட்டலாம்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ட்ரம்ப் மட்டுமல்ல, ட்ரம்ப் அணியில் உள்ளவர்களும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் தேவையற்ற வார்த்தைகளை விடுகிறார்கள். ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திட்டங்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. லூயிஸ் ஜூரிசிக் புதன் 8 ஏப்ரல் 2026, அதிகாலை 1:42 AEST 1 நிமிட வாசிப்பு Investing.com - இராணுவ நடவடிக்கைகள் குறித்த தனது சமீபத்திய கருத்துக்களின் போது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூறியதாகக் கூறப்படுவதை வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை மறுத்தது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கப் படைகளிடம் "இதுவரை பயன்படுத்த முடிவு செய்யாத" கருவிகள் இருப்பதாக வேன்ஸ் கூறியதைத் தொடர்ந்து இந்த மறுப்பு வந்தது. இதற்கு வெள்ளை மாளிகை X தளத்தில் பதிலளித்தது "Literally nothing @VP said here ’implies’ this, you absolute buffoons." அந்த அறிக்கை, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் தொடர்புடைய ஒரு கணக்கைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டது. டிரம்ப் "அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்" என்று வேன்ஸ் சூசகமாகத் தெரிவித்ததாக அந்தக் கணக்கு கூறியது. "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது" என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் எச்சரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்தது. இன்று கிழக்கு நேரப்படி இரவு 8 மணிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களையே டிரம்ப் குறிப்பிட்டார். https://au.finance.yahoo.com/news/white-house-denies-plans-nuclear-154211892.html நான் உறுதியாக நம்புகிறேன் இனி எந்த நாடும் (அமெரிக்கா உட்பட) அணுவாயுதத்தினை உபயோகிக்கமாட்டார்களென.
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
வடக்கே அல்லது போர்க்களத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து பட்டினி கிடப்பதானது, போரில் முதுகுக்குப் பின்னால் புண்படுதல், மானம் இழத்தல் அல்லது பெரிய அவமானங்களைச் சந்தித்தல் போன்றவற்றால் வீரர்கள் மேற்கொள்ளும் ஒரு செயலாகும். இதனை தமிழர் மரபுவழியும் தெரிவிக்கிறது. சூரியனுக்கு அப்படி என்னதான் அவமானம் நேர்ந்தது.????
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போர் என்றால் அதன் முதல் பலி உண்மைதான். ஈரானின் மக்கள், கலாச்சாரம், வளர்ச்சி மீதான போரை அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மூவரும் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. தம்பர் மீதுள்ள வெறுப்பால், அல்லது அமெரிக்கா இஸ்ரேல் இந்த போருக்கு போனதில் நான் உடன்படாமையால் மட்டும்…. முல்லாக்களுக்கு வெள்ளை அடிக்கவோ அல்லது அல்ஜசீராவின் அஜெண்டாவை கண்டு கொள்ளாமலோ நான் விடுவதில்லை.