Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 11:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும். இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை. ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்: இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. https://www.virakesari.lk/article/242629
  3. யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு Apr 3, 2026 - 09:56 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnieh1hv0009356pjbggkdzx
  4. அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார் Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 09:39 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது. எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை "தோற்றுப்போனவர்" என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242618
  5. மார்ச் 30 இல் தனது பிறந்தநாளை கொண்டாடிய @யாயினி அக்காவிற்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வளத்துடன் வாழ்க.
  6. பெரிய வௌ்ளி தினம் இன்று! Apr 3, 2026 - 06:45 AM இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த பெரிய வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் இன்றைய நாளில் நினைவுகூருவார்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் இது தொடர்பான மூன்று மணிநேர விசேட ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. https://adaderanatamil.lk/news/cmni7p2kv0002356pco1szip0
  7. புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II Apr 3, 2026 - 05:22 AM புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmni4pfsc0000356p7dn50pgz
  8. Today
  9. எழுச்சியான பாடல் ...அருமை தொடருங்கள்
  10. பாடலும் இசையும் மட்டும் அல்ல, ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு அழகும், ஒவ்வொரு ஒலியிலும் ஒரு உயிரும் தெரிகிறது. முழுக்க முழுக்க மனதை கவரும் அளவுக்கு நன்றாக உள்ளது.
  11. இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂
  12. Yesterday
  13. உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
  14. அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
  15. நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.
  16. 2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣
  17. மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.
  18. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?
  19. ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂
  20. Teen charged after Brampton’s Tamil Genocide Memorial defaced with derogatory messages: police By Joanna Lavoie Opens in new window Published: April 02, 2026 at 3:53PM EDT CKTB - News - Peel Police A 14-year-old boy has been charged after the Tamil Genocide Memorial at Brampton’s Chinguacousy Park was recently vandalized with derogatory spray-painted messages. Peel Regional Police said they were called to that area on March 20 after receiving reports that the memorial had been defaced. “Upon arrival, officers confirmed the vandalism and immediately assigned the investigation to the Hate Crime Unit,” police said in a news release. After a thorough investigation, a teenage boy from Brampton was arrested and charged on March 31 with two counts of mischief over $5,000. The accused, who cannot be identified under the provisions of the Youth Criminal Justice Act, is set to appear in court at a later date. “Peel Regional Police will not tolerate vandalism — especially hate-motivated crimes of spaces that are meaningful to our communities. People across the region have the right to feel safe in public spaces,“ Police Chief Nishan Duraiappah said in a release. “We thank our Hate Crime Unit for acting swiftly to locate and hold those responsible accountable.” The force recently launched a centralized Hate Crime Unit, which is aimed at enhancing its response to hate-motivated crimes and incidents as well as culturally sensitive incidents. Anyone with further information is asked to contact the Hate Crime Unit at 905-453-2121, ext. 6098, or Crime Stoppers anonymously. Joanna Lavoie Opens in new window Journalist, CP24.com
  21. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர். யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. படம்-இன்ஸ்டாகிராம்
  22. இந்த வான் ஓடத்தில் டிரம்ப் ஐயாவையும், நெத்தென்யாகு ஐயாவையும் ஏற்றி இருக்கலாமே.
  23. GMOA முடிவுக்கு எதிராக சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை Apr 2, 2026 - 10:06 PM அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அது வெறும் அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இன்று (02) ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பயிற்சி முடித்த 453 புதிய வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதைத் தடுத்து, அவர்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த வைத்தியர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் சனிக்கிழமை (4) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார். வைத்தியர்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும். குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்காத வைத்தியர்களின் வைத்தியசாலை சேவை மற்றும் சம்பளம் அன்றோடு நிறுத்தப்படும். அவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைய வேண்டுமானால், அடுத்த 1,300 பேர் கொண்ட குழுவுடனேயே இணைய முடியும். அப்போது அவர்கள் சிரேஷ்டத்துவத்தை இழந்து பட்டியலின் இறுதிக்கே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார். 453 புதிய வைத்தியர்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்களைப் அச்சுறுத்தி, தவறான தகவல்களை வழங்கி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயல் மனிதாபிமானமற்றது. எவருக்கும் அஞ்சாமல் சுயாதீனமாக முடிவெடுத்து அரச சேவையில் இணையுங்கள் என அமைச்சர் இளம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhp0vcw000h356pizftwmr3
  24. அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்! 02 Apr, 2026 | 03:25 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் விளைவாக, வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காவிட்டால் அந்த நாட்டை “கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம்” என எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்காக ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், பொதுமக்கள் மீது ஈரானுக்கு எந்தவித எதிர்மறை அணுகுமுறையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஈரானை அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று உண்மைகளுடனோ தற்போதைய நிலவரங்களுடனோ பொருந்துவதில்லை. இது சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தவறான சித்தரிப்பு” என்று கூறியுள்ளார். மேலும், எதிரி இல்லாதபோது அதை உருவாக்கி அழுத்தம் செலுத்துவது, இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுத தொழில்துறையை தக்க வைத்துக்கொள்வது போன்ற நோக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளின் மக்களுடன் ஈரான் மக்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும், ஈரான் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் விரும்பும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாட்டின் மீது அமெரிக்கா சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் இராணுவத்தை திரட்டியுள்ளது என்றும், அந்தத் தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தாமல் இருக்காது. ஈரான் மேற்கொள்வது அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான பிரதிநிதியாக செயல்படுகிறது என்றும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து உலக கவனத்தைத் திருப்புவதற்காக ஈரான் அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையில், அசோசியேட் பிரஸ், வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புதிய ஆட்சி தலைவர் சமாதான ஒப்பந்தம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “அடிப்படையற்றது” என மறுத்துள்ளது. மேலும், இந்த போர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உண்மையில் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் பெசெஷ்கியான் எழுப்பியுள்ளார். “தவறான தகவல் இயந்திரங்களை தாண்டி உண்மையைப் பாருங்கள்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மோதலை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போர், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்து வருகிறது. https://www.virakesari.lk/article/242567
  25. உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து Apr 2, 2026 - 08:16 PM உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது பங்களிக்கவுள்ளது. தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பலப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மற்றும் வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர காலத்தில் 7% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்காகும். உலக வங்கி கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் பயணித்துள்ளது இந்த புதிய ஒப்பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும், என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த புதிய கூட்டாண்மையின் மையமாக தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காணப்படுகிறது. அடுத்த தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தனியார் முதலீடுகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி மற்றும் திரட்டப்பட்ட முதலீடுகள் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) வழங்கவுள்ளது. அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வரையிலான குறைந்த வட்டி கடன் வசதியை உலக வங்கி வழங்கவுள்ளது. அரச ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலராக உயர்த்த இந்த கூட்டாண்மை ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் 2030க்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறுதல். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2026-2030 க்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரத்யேக முதலீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். 2025 நவம்பரில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எதிர்கால அனர்த்தங்களின் போது விரைவாக மீண்டெழவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் முக்கிய திட்டமாக REVIVE (Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் முதலீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் இத்திட்டம் யாழ்ப்பாணம், பாசிக்குடா, திருகோணமலை மற்றும் அருகம்பே ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டது. இத்திட்டம் 2031 ஆம் ஆண்டளவில் 3,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் பணியாற்றி வருவதுடன், தற்போது கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 13 செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhl4ftv000d356pdjisor27
  26. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் - விஜய் பிரச்சாரம் 02 Apr, 2026 | 03:36 PM ''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் திகதி அன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சியின் தலைவரான விஜய் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் திகதியான இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், '' தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வேறு. நான் வேறல்ல. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அத்துடன் பிரச்சாரத்தில் திரண்டு இருந்த மக்களை பார்த்து, கேஸ் புக் செய்தால் புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டிற்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?.. மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால்.. இதனை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால்.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார்கள். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் .. உடனடியாக புதுடெல்லிக்கு செல்வார். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான். அதன் பிறகு, திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு இதெல்லாம் சொன்னீர்களே....! செய்தீர்களா..? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இது சாதாரண தேர்தல் அல்ல. ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். நான் பல வலிகளை தாங்கிக் கொண்டு தான் உங்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன்.'' என்றார். முன்னதாக திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.‌ https://www.virakesari.lk/article/242569
  27. 50 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு பயணம் ; நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது Published By: Digital Desk 3 02 Apr, 2026 | 09:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை (ஏப் 02) அதிகாலை 4:05 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன் , விக்டர் குளோவர் ,கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பயணித்துள்ளனர். இந்த பயணம் 10 நாட்கள் நீடிக்கும். நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதே இதன் நோக்கமாகும். மனிதர்கள் இதுவரை விண்வெளியில் பயணம் செய்யாத தூரமான 406,000 கிலோ மீற்றர் வரை இந்த விண்கலம் செல்லவுள்ளது. 1970-இல் அப்பல்லோ 13 விண்கலம் சென்ற 399,117 கிலோ மீற்றர் என்ற சாதனையை முறியடித்து, விண்வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்த மனிதர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர். 1972-க்குப் பின்னர் மீண்டும் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நோக்கில் இந்த 'ஆர்டெமிஸ்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டில் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. சீனா 2030-ஆம் ஆண்டளவில் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா இச்சாதனையைப் படைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. நாசாவின் மிக சக்திவாய்ந்த ஸ்பேஸ் லொன்ச் சிஸ்டம் (Space Launch System) ரொக்கெட் மூலம் 'ஓரியன்' (Orion) விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தைத் தாமாகவே இயக்கி அதன் கட்டுப்பாட்டுத் திறனைச் சோதிக்கவுள்ளனர். படங்கள் ; Artemis II by NASA HQ PHOTO https://www.virakesari.lk/article/242528
  28. ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு Apr 2, 2026 - 07:27 PM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhjerop000b356pcxy07uve

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.