stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினராக ஹஸ்லினா அப்துல் ஹலிம் இருக்கின்றார் புர்க்கா இல்லை தமிழ் ஆங்கிலம் மலாய் சீன மொழிகளில் பேசுவார் இலங்கை இந்தியாவில் தான் தலை கீழ் பேசுவது தான் தமிழ் Tamil Murasuநான்கு மொழிகளிலும் பேசி அசத்திய ஹஸ்லினா, சிங்கப்பூர் செய...
-
d5a3e2857311cdf393e03d5e4239a533a0e650b598074fb445f1ef4ad083d88f.webp
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
சுமன் நல்ல சட்டத்தரணியும் இல்லை, நல்ல அரசியல்வாதியும் இல்லை, மனிதரை மனிதராக மதித்து நடத்த கூடிய நல்ல மனிதர் கூட இல்லை. பண்பு கிலோ என்னவிலை எனக்கேட்கும் சுண்ணாம்பு படிந்த மூளைதான் அவருக்கும். இதனால் மட்டும் அவர் சொல்லும் கருத்துகளை பிழை என பொய்யாக நாண்டு கொண்டு நிண்டு வாதிட வேண்டியதில்லை.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
திட்டம் சரியானது என சொல்லவும் முடியவில்லை…. சுமனை குறை சொல்லவும் வேண்டும்… #டெலிகேட் பொசிசன்😂 பிகு ஒழுங்கா சட்டதுறையில் வேலை செய்ய தெரிந்த சட்டதரணிகள் அரசியலுக்கு வருவதில்லை 😉. இது சுமனுக்கும் பொருந்தும். நன்றி. நானும் உடன்படுகிறேன். கிழிஞ்சுது லம்பாடி லுங்கி😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பார் சிறி விழுந்து போனார் எண்டு யாழ்களத்தின் 1ம், 2ம் குடி-மகன்கள் கவலைபடுகிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்😂 நடிகர் செந்தாமரை தொட்டு பல விடயங்களில் பொய் என தெரிந்தும் அதை மீள மீள பகிர்ந்து நிர்வாகத்திடம் குட்டு வாங்கிய “பொய்யர் திலகம்” தான் எங்கள் தமிழ் சிறி அண்ணா 😂. எனவே பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது. புராண காலே இந்தாங், தையிட்டி கம சிங்கள மாத்ரு பூமியக் ஹட்டியட்ட வார்த்தா வெலா தியன்னே…. தெமலயா பழயாங்ளா இந்தியாவட்ட… ஒயவாகே முஸ்லீம் லா பழயாங்களா அரேபியாவட்ட…
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பழைய பூங்கா ஒரு பசுமைத் திட்டத்தின் கீழே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி . அதில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கை வைக்கவில்லை ....... ஆனால் இப்போது சுமந்திரனின் வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது அரசாங்கத்திற்கு ஆதரவாக முடிந்துவிட்டது மக்களுக்கு சுமந்திரனால் நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கு....... இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
எண்ணி 17 பேர் 😂. மாபெரும் கண்ட. ஆர்பாட்டமாம்😂.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பொதுவாக முகாமைத்துவப்படுத்தப்பட்ட நாணய கொள்கை கொண்ட நாணயங்கள் வர்த்தகத்திற்கு தேவையான தளம்பல்களை வழங்காதமையால் அவை வர்த்தக நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படுவது குறைவாக காணப்படும், வர்த்தக நடவடிக்கை என்பது அன்னியசெலாவணி சந்தை வர்த்தகத்தினை மட்டும் குறிப்பதாகும் (retail currency trades). 1992 இல் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது ஐரோப்பிய ஒன்றிய நாணயங்கள் ஜேர்மன் நாணயத்தினை மையமாக வைத்து ஒரு நாணய பட்டியினை (Currency Band) தக்கவைத்தனர் (ஐரோப்பிய ஒன்றிய ERM விதியின் படி). அந்த பட்டியிற்குள் நாணய மாற்றினை பேண தமது வெளிநாட்டு சேமிப்பினை விற்று தமது பவுண்ட்ஸினை வாங்கினார்கள் எப்போதெல்லாம் தமது நாணயத்தின் பெறுமதி பட்டியின் கீழ் பகுதியினை அடையும் போது, அதற்கு மறுவளமாக தமது நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் போது வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பனமுறிகள் (Bond) போன்றவற்றினை வாங்குவதன் மூலம். இது ஒரு முகாமைத்துவப்படுத்தப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கை, இங்கிலாந்து நாணயம் மிகைப்படுத்தப்பட்ட விலையில் இருந்தத நிலையில் இங்கிலாந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த நிலையில் பொருளாதார தூண்டல் தேவையான நிலையில் இருந்தது.
- Today
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
ஓம்…brown belt, green belt என சொல்வார்கள். ஏலவே கட்டிடம் அல்லது கார்பார்க் இருந்தால் அது பிரவுன் பெல்ட். பிரவுன் பெல்டில் புதிய கட்டிடங்களை கட்ட அனுமதி கிடைப்பது இலகு. ஆனால் கிரீன் பெல்டில் கட்ட அனுமதி எடுப்பது மிக கடினம். கிரேட்டர் இலண்டனின் புறநகரில் கூட இந்த கிரீன்பெல்ட் அதிகம் உண்டு. போக்குவரத்துக்காக இலண்டன் 1-6 வலயங்களாக பிரிக்கப்பட்டுளது. 1,2,3 இல் கிரீன்பெல்ட் குறைவு ஆனால் சாலையோர மரங்கள், பாரிய நிலப்பரப்பை கொண்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்கா என்பதை விட meadow எனப்படும் பற்றைகள் போலவே இருக்கும். வலயம் 4 இல் கணிசமாக ஆரம்பிக்கும் கிரீன் பெல்ட்டின் அளவு,5,6 என கூடி அதற்கு அப்பால் கிரீன் பெல்ட்த்தான் அதிகம் இருக்கும். அடுத்த நகரை அல்லது ஊரை அடையும் வரை. போன அரசும், இந்த அரசும் கிரீன்பெல்டில் கட்டுவதை கொஞ்சம் இலகுவாக்க முயல்கிறார்கள் ஆனால் பலத்த எதிர்ப்பு உள்ளது.
-
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
சுவிஸின் சட்டம்கள் கடுமையானவை முடிந்தால் புர்கா அணிந்து அரசியல் செய்யட்டும் பார்க்கலாம் .
-
ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?
"நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்" - ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி? படக்குறிப்பு,16 வயதான அலிசா டேப்லி எனும் இவர் தான் இந்த முறையில் சிகிச்சை பெற்ற முதல் நபர். கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஒன்று, சில நோயாளிகளில் மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தச் சிகிச்சை, வெள்ளை ரத்த அணுக்களில் உள்ள டிஎன்ஏவை துல்லியமாக மாற்றி, அவற்றை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "உயிருள்ள மருந்தாக" மாற்றுகிறது. இதற்கு முன்பு இந்த சிகிச்சை பெற்ற முதல் சிறுமியைக் குறித்து 2022-இல் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டது. நோயில் இருந்து விடுபட்டுள்ள அவர், இப்போது புற்றுநோய் குறித்த விஞ்ஞானியாக மாறும் கனவுடன் உள்ளார். தற்போது இதே சிகிச்சை மூலம், டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 64% பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். டி-செல்கள் சாதாரணமாக உடலைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டு, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தேடி அழித்துவிடுகின்றன. ஆனால் லுகேமியாவின் வடிவில், அதே டி - செல்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக அளவு பெருகுகின்றன. கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்திருந்தன. எனவே பாதிப்பில் இருந்தவர்களுக்கு, பரிசோதனை மருந்தை தவிர எஞ்சிய ஒரே வழி, அவர்களுடைய மரணத்தை சற்று வசதியானதாக மாற்றுவதாக மட்டுமே இருந்தது. "நான் உண்மையிலேயே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். வளர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் செய்யத் தகுதியான அத்தனை விஷயங்களையும் என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என நினைத்தேன்" என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த 16 வயது அலிசா டாப்லி. கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உலகிலேயே இந்தச் சிகிச்சை பெற்ற முதல் நபர் இவர் தான். இப்போது அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார். படக்குறிப்பு,அலிசா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில், அவரது பழைய நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் அகற்றி, புதிய ஒன்றை உருவாக்கும் முறை இடம்பெற்றது. அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். தொற்று ஏற்படக்கூடும் என்பதால், அந்த சமயத்தில் அவரது சகோதரனைக் கூட அவரால் சந்திக்க முடியவில்லை. ஆனால் இன்று, அவரது புற்றுநோய் முற்றிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலிசா தற்போது தனது ஏ -லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா. "நான் உயிரி மருத்துவ அறிவியலில் பயிற்சி செய்வது குறித்து யோசித்து வருகிறேன். ஒருநாள் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்," என்கிறார் அலிசா. படக்குறிப்பு,அலிசா தற்போது தனது ஏ-லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழு பேஸ் எடிட்டிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. பேஸ்கள் (bases) தான் உயிரின் அடிப்படை. அடினைன் (A), சைட்டோசின் (C), குவானைன் (G), தைமின் (T) எனும் நான்கு பேஸ்களே நமது மரபணு குறியீட்டின் கட்டுமானத் தொகுதிகள். எப்படி எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றனவோ, அதுபோல நமது டிஎன்ஏவில் உள்ள பில்லியன் கணக்கான பேஸ்கள், நமது உடல் இயங்க வேண்டிய வழிமுறைகளை எழுதுகின்றன. பேஸ் எடிட்டிங் என்பது மரபணு குறியீட்டின் குறிப்பிட்ட இடத்துக்கு நேராகச் சென்று, ஒரு அடிப்படையின் மூலக்கூறு அமைப்பை மாற்றி, அதை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்ற உதவும் முறையாகும். இதனால் மரபணு கையேட்டையே புதிதாக எழுத முடியும். ஆரோக்கியமான டி-செல்களிடம் இயற்கையாக உள்ள சக்தியைப் பயன்படுத்தி, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்கவும், அந்த சக்தியை டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். ஆனால் இது மிகவும் சிக்கலான செயல்முறை. இந்த சிகிச்சை முறை தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க நல்ல டி -செல்களை மாற்றி வடிவமைக்க வேண்டியிருந்தது. அதற்காக முதலில் ஒரு நன்கொடையாளரிடமிருந்து ஆரோக்கியமான டி -செல்களைப் பெற்று, அவற்றை மாற்றியமைக்கத் தொடங்கினர். முதல் பேஸ் எடிட்டிங் மூலம், டி -செல்களின் 'இலக்கு பொறிமுறை' (targeting) செயல்பாடு முடக்கப்பட்டது. இதனால் அந்த செல்கள் நோயாளியின் உடலைத் தாக்காது. இரண்டாவது திருத்தம், அனைத்து டி -செல்களிலும் காணப்படும் சிடி7 என்றழைக்கப்படும் ஒரு வேதியியல் குறியை நீக்கியது. ஏனென்றால், அந்த சிகிச்சை தன்னை தானே சிதைத்துக் கொள்ளும் அபாயத்தைத் தடுப்பதற்கு இந்தக் குறியை நீக்குவது அவசியம். மூன்றாவது திருத்தம், செல்களைச் சூழ்ந்த "கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு மேலங்கியைப்" போன்றது. இது கீமோதெரபி மருந்துகள் அந்த செல்களை அழிப்பதைத் தடுக்கிறது. மரபணு மாற்றத்தின் இறுதி கட்டத்தில், சிடி7 (CD7) குறியுடன் இருக்கும் செல்களை தேடி அழிக்க டி-செல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் மாற்றியமைக்கப்பட்ட டி -செல்கள், புற்றுநோய் செல்லாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருந்தாலும், தங்கள் முன் வரும் மற்ற எல்லா டி-செல்களை அழித்து விடும். ஆனால் அவை ஒன்றையொன்று தாக்காது. அதன் பிறகு இந்த சிகிச்சை நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நான்கு வாரங்கள் கழித்து புற்றுநோய் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்திருந்தால், நோயாளிக்கு புதிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. "சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அறிவியல் புனைகதையாக இருந்திருக்கும்" என்கிறார் யூசிஎல் மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த பேராசிரியர் வசீம் காசிம். தொடர்ந்து பேசிய அவர், "நாம் முற்றிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தையே அகற்ற வேண்டும். இது ஆழமான, தீவிரமான, நோயாளிகளுக்கு மிகவும் கடினமான சிகிச்சை. ஆனால் இது வேலை செய்தால், மிகச் சிறப்பாகச் செய்கிறது," என்றார். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதல் 11 நோயாளிகளின் முடிவுகளைப் பற்றி கூறுகிறது. அவர்களில் ஒன்பது பேர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆழ்ந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளனர். சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏழு பேர் முழுமையாக நோயின்றி உள்ளனர். நோயெதிர்ப்பு மண்டலம் அகற்றப்படும் காலத்தில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் தான், இந்த சிகிச்சையின் பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரண்டு நோயாளிகளில், புற்றுநோய் தனது சிடி7 அடையாளத்தை இழந்தது. இதனால் அது இந்த சிகிச்சையிலிருந்து தப்பித்து உடலில் மீண்டும் வளரத் தொடங்கியது. "இந்த வகை லுகேமியா எவ்வளவு தீவிரமானது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பானவையாக உள்ளன. நம்பிக்கையிழந்த நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க முடிந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுத் துறையின் மருத்துவர் ராபர்ட் சீசா கூறினார். "குணப்படுத்த முடியாததாகத் தோன்றிய லுகேமியாவை அகற்றுவதில் கூட நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது மிகவும் சக்திவாய்ந்த சிகிச்சை முறை" என்று கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணரும் மருத்துவருமான டெபோரா யல்லோப் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் ஸ்டெம் செல் தொண்டு நிறுவனமான அந்தோணி நோலனின் மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவர் டானியா டெக்ஸ்டர், "சோதனைக்கு முன்னர் இந்த நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள், இது போன்ற சிகிச்சைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, நோயாளிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20gzdgqgrpo
-
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு Published By: Vishnu 22 Dec, 2025 | 10:10 PM கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) தோல்வியடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும், சிறிய குழுக்களின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அமைத்தது. எனினும், கூட்டு எதிர்க்கட்சி எதிராக வாக்களித்ததையடுத்து சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. 60 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் 57 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234145
-
யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம்
காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை ரயில் சேவைகள் 24 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்! 22 Dec, 2025 | 03:52 PM வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (24) முதல் மீண்டும் ஆரம்பமாகும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; https://www.virakesari.lk/article/234116
-
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2ஆவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் தெரிவு Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 05:23 PM இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2ஆவது துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று கொழும்பில் பிறந்த இவர், தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்து, தாதியர் சேவையில் பட்டமும் பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு (Solothurn) மாநில கண்டோனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார். தனது புதிய பதவி குறித்து பரா ரூமி, ”எனது புதிய பதவியில் தேசிய கவுன்சிலின் துணைத் தலைவராக நான் ஒவ்வொரு நாளும் புதிய அறிவுகளைப் பெறுகிறேன். ஜனாதிபதி இல்லாத நிலையில் 2 முறை கவுன்சிலை வழிநடத்த எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு கடினமான மற்றும் பொறுப்பான பணி. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234131
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு பிளவுபட்டுள்ளதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது ; பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும் - மணிவண்ணன் 22 Dec, 2025 | 05:13 PM தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின்போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர். மதகுருவான வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி, அவரை காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர். அத்துடன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர். இந்த பொலிஸாரின் அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது. பொலிஸாரின் இந்த செயற்பாடானது நாடு இரண்டாக பிளவுபட்டு உள்ளமையையே காட்டி நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பிலான பிரச்சினையின்போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். ஆனால், வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமிகள் ஒரு பௌத்த பிக்குவாக இல்லாமைதான் இதற்கு காரணம். வேலன் சுவாமிகளிடம் நடந்துகொண்டதைப் போன்று, ஒரு பௌத்த பிக்குவிடம் பொலிஸாரினால் நடந்துகொள்ள முடியுமா? வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் அவ்வாறு பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர விரும்பின், சட்டத்தரணி என்ற ரீதியில் நாமும் எமது கட்சியும் பக்கபலமாக அவர்களுக்காக நிற்போம் என இவ்விடத்தில் உறுதியாகக் கூறுகிறேன். அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபையிடமும் அன்பான கோரிக்கை ஒன்றினை விடுக்கிறேன். உங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சாதாரண குடிமகன் ஒரு கட்டடத்தை அமைக்கும்போது, பிரதேச சபையின் அனுமதி பெறாவிடின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அதேபோன்று தையிட்டி விகாரையில் இடம்பெறும் சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/234130
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ் 22 Dec, 2025 | 04:01 PM இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும். ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் 20.12.2025 அன்று எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில் சந்தித்திருந்தார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவுபடுத்தினார்கள். இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப் பார்க்கும்போது வேதனைக்குரியதாக உள்ளது. இந்நிலை இலங்கையில் தொடர்வதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாததே காரணமாகும். 1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒட்டி இதுவரை அதிகாரங்களை மாகாணங்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை. ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை. 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஒன்றிய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ளபோதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும் வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை போக்க தற்போது இலங்கையில் தொடரும் அரசியல் கட்டமைப்பை மாற்றவேண்டும். இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும். தமிழர்களுக்கு தீர்வு வழங்குகின்றோம் என்ற போர்வையில் கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றாட்சி அரசியல் விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) தற்போது பதவியில் உள்ள அனுரகுமார அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு விதியை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது. அந்த அரசியல் அமைப்பு விதி வரைபானது கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போன்ற சிங்கள பௌத்த பெரும்பான்மையினரது கைகளில் அதிகாரத்தை வழங்கும் ஒருமித்த அரசியல் அமைப்பு விதி. எனவே அத்தகைய ஓர் அரசியல் சட்டம் கொண்டு நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட மேலே குறிப்பிட்டது போன்று கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும். இதுவே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகவும் உள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234110
-
‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை
டித்வா தாக்கம் - இலங்கையின் சேதம் தொடர்பில் உலக வங்கி அறிக்கை Dec 22, 2025 - 07:50 PM கடந்த நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இந்தப் புயலினால் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 மில்லியன் மக்களும் 5 இலட்சம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானதுடன் அங்கு கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள் மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் என உட்கட்டமைப்புக்கு மட்டும் 1.735 பில்லியன் டொலர் (மொத்த சேதத்தில் 42%) இழப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு சுமார் 985 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல், மரக்கறி பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துறைக்கு 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களுக்கு 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. வறுமை மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இந்த அனர்த்தத்தினால் மீண்டெழுவதில் அதிக சவால்களை எதிர்கொள்வதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீளமைக்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இருந்து 120 மில்லியன் டொலர்களை உலக வங்கி அவசரமாக ஒதுக்கியுள்ளது. நிவாரணப் பணிகளைத் தாண்டி, எதிர்காலக் கட்டுமானங்களில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான வடிவமைப்புகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தலைமைத்துவத்தை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், திறைசேரி, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் வறுமை கோட்டில் உள்ளவர்களையும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பெரும்பாலும் பாதிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அணுகுமுறையானது, அனர்த்தங்களுக்குப் பின்னர் முடிவெடுப்பதற்குத் தேவையான ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் 54 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், GRADE உலகளவில் 71 அனர்த்தத்திற்குப் பிந்தைய மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளது. தரையில் நேரடியாக மேற்கொள்ளப்படும் விரிவான மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, இவை சுமார் 90 சதவீத துல்லியமான தரவுகளுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன. இலங்கைக்கான GRADE அறிக்கையானது, உலக வங்கியின் ஒத்துழைப்புடன், வளர்முக நாடுகளில் அனர்த்த முகாமைத்துவத்தை பிரதானப்படுத்தும் உலக வங்கியின் திட்டத்தின் ஊடாக, அனர்த்தக் குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதி (GFDRR) மற்றும் ஜப்பானின் நிதி அமைச்சு ஆகியவற்றின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjh8tghp030eo29nbwlnko1j
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இந்தியாவுக்கு எதிராக 172 ரன்கள்: பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் சமீர் மின்ஹாஸின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,PCB 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்தவர் சமீர் மின்ஹாஸ். இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, பாகிஸ்தான் அண்டர்-19 கிரிக்கெட் அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டர் சமீர் மின்ஹாஸ் வெறும் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்தார். ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடிய இந்த அதிரடி ஆட்டம், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரத்தைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸை பேசு பொருளாக மாற்றியுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடன், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிபரும் பாரம்பரிய போட்டியாளரான இந்தியாவை வீழ்த்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியபோது, இறுதியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி மோதல்களின் கடந்த கால சாதனைகள் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, துபையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது, ஆனால் இந்த முடிவு பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியா வெற்றி பெற 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது. சமீர் மின்ஹாஸின் அதிரடி ஆட்டம் பட மூலாதாரம்,PCB படக்குறிப்பு,இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அண்டர்-19 அணிக்கு வரவேற்பு. பாகிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 113 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். சமீர் மின்ஹாஸ் தனது சதத்தை வெறும் 71 பந்துகளில் பூர்த்தி செய்தார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான சமீர் மின்ஹாஸ், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார். பாகிஸ்தான் தரப்பில் சமீரைத் தவிர, அகமது ஹுசைன் 72 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கான் 35 ரன்களும், கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 19 ரன்களும், ஹம்சா ஜுஹூர் 18 ரன்களும் எடுத்தனர். முகமது சியாம் 13 ரன்களுடனும், நகாப் ஷஃபிக் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் முதல் விக்கெட் 31 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது ஓவரில் விழுந்தது, தொடக்க ஆட்டக்காரர் ஹம்சா ஜுஹூர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு சமீர் மின்ஹாஸுடன் இணைந்த உஸ்மான் கான் 17-வது ஓவர் வரை ஒரு முனையைத் தக்கவைத்துக் கொண்டார், மற்றொரு முனையில் சமீர் மின்ஹாஸ் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 17-வது ஓவரில் உஸ்மான் கானை கிலன் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மூன்று விக்கெட்டுகளையும், கிலன் படேல் மற்றும் ஹெனில் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சமீர் மின்ஹாஸ் யார்? பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தானின் மலை போன்ற ஸ்கோருக்கு காரணமாக இருந்த அந்த இளம் வீரருக்கு நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதில் தனி ஆர்வம் உண்டு. தெற்கு பஞ்சாபின் முல்தான் நகரைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸ் பெரிய இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிப்பது இது முதல் முறையல்ல. இதே தொடரின் இரண்டாவது போட்டியில் (பாகிஸ்தானின் முதல் ஆட்டம்), மலேசியாவிற்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் எடுத்திருந்தார். மலேசியாவிற்கு எதிரான அந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசினார். வெறும் 19 வயது மற்றும் 19 நாட்களில் இரண்டு பெரிய இன்னிங்ஸ்களை விளையாடிய சமீர் மின்ஹாஸ், டிசம்பர் 2, 2006 அன்று முல்தானில் பிறந்தார். வலது கை தொடக்க ஆட்டக்காரரான சமீர் மின்ஹாஸ், ஏற்கனவே ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானுக்காக நான்கு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அராஃபத் மின்ஹாஸின் தம்பி ஆவார். அராஃபத் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்தார். பாத்வே அமைப்பிலிருந்து உருவான வீரர் பட மூலாதாரம்,ACC பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பிலிருந்து வெளிவந்த இளம் வீரர்களில் சமீர் மின்ஹாஸும் ஒருவர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு, அவர் முல்தான் மண்டல அண்டர்-13, தெற்கு பஞ்சாப் அண்டர்-16, முல்தான் அண்டர்-19 மற்றும் முல்தான் மண்டல அண்டர்-19 அணிகளில் இடம்பெற்றிருந்தார். கடந்த மாதம் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அசார் அலி, சமீர் மின்ஹாஸை எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் உமைர் அல்வியிடம் பேசிய அசார் அலி, இந்த ஆண்டு முதன்முறையாக கராச்சியில் நடந்த பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸைப் பார்த்தபோதே தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அசார் அலியின் கூற்றுப்படி, "அவரது பேட்டிங் நுட்பம் மற்றும் ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் இன்னும் உழைத்தால், அவர் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல வீரராகத் திகழ்வார்." அசார் அலியின் கருத்துப்படி, சமீர் மின்ஹாஸின் வெற்றிக்கு பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பு உள்ளது, அதன் மூலமே அவர் முன்னுக்கு வந்தார். அவர் ஒவ்வொரு வயதுப் பிரிவு மட்டத்திலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார், அதன் காரணமாகவே உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் அவர் சேர்க்கப்பட்டார். "நான்கு மாதங்களுக்கு முன்பு பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸ் கடுமையாக உழைத்தார், அதன் பலன் இன்று அனைவர் முன்னிலையிலும் உள்ளது. அவர் ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்டர் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட." என அசார் அலி தெரிவித்தார். ஆசியக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் மின்ஹாஸ், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்நாட்டு தொடரிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்றும், அங்கு இரண்டு சதங்கள் அடித்துத் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றும் அசார் அலி கூறினார். அவரது கருத்துப்படி, மலேசியா அண்டர்-19 அணிக்கு எதிரான சமீரின் சதத்தை மறக்க முடியாது, மேலும் இந்தியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அவரது அதிரடியான அதேசமயம் பொறுப்பான பேட்டிங் அவரது திறமைக்கான வெளிப்படையான சான்றாகும். சமூக ஊடகங்களில் சமீர் மின்ஹாஸ் பற்றிய விவாதம் சமூக ஊடகங்களிலும் சமீர் மின்ஹாஸ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சமீர் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "சமீர் மின்ஹாஸ், என்ன ஒரு அற்புதமான வீரர்" என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் கூறுகையில், "சமீர் மின்ஹாஸ் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் 471 ரன்கள் குவித்துள்ளார். என்ன ஒரு சிறப்பான ஆட்டம்," என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு எக்ஸ் பயனர், "இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் சமீரின் அபாரமான ஆட்டம். என்ன ஒரு அற்புதமான இளம் வீரர்" என்று எழுதியுள்ளார். ஷாகிர் அப்பாசி என்ற பயனர், "கவனமாகப் பாருங்கள்... சமீர் மின்ஹாஸின் கிளாஸ். என்ன ஒரு வீரர். என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். இறுதிப் போட்டியில் 172 ரன்கள், அதுவும் இந்தியாவிற்கு எதிராக - இதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்" என்று பதிவிட்டுள்ளார். ஹாரூன் என்ற பயனர், "சமீர் மின்ஹாஸ் ஒரு உண்மையான பேட்டர். அவர் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். அவரிடம் வலுவான தடுப்பு ஆட்டம் உள்ளது மற்றும் பெரிய ஷாட்களையும் விளையாட முடியும். அவர் தனது செயல்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்" என எழுதியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwk9xnwv9do
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை இயக்க உள்ளது. நீகாட்டா மக்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தை போலவே இம்முறை ஏற்படாது என்பதில் கவனம் செலுத்தப்படும் என டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மசகத்சு தகதா தெரிவித்துள்ளார். அனுமதி கிடைத்தால், இந்த நிலையத்தில் உள்ள ஏழு அணு உலைகளில் முதலாவதைக் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் இயக்க டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் பரிசீலணை செய்து வருவதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது. ஆனால் செயல்படுத்தும் திகதி தொடர்பில் எந்த தகவலையும் தகதா தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/234079
-
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு! Dec 22, 2025 - 07:20 PM அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்: https://www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அருகில் உள்ள தகவல் தொடர்பு மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh7rdwo030do29nldmf1510
-
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம்
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம் Dec 22, 2025 - 06:44 PM 2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இலக்கை அடைவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் பதிவான அதிகூடிய வரி வருமானம் இதுவாகும். அத்துடன் எதிர்வரும் சில நாட்களில் இதனை மேலும் அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் வழங்கிய பங்களிப்பிற்கு, அரசாங்கம் மற்றும் திணைக்களத்தின் சார்பில் குறித்த அறிவிப்பின் ஊடாக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh6h979030bo29ndqhq9c91
-
நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
நாட்டை வந்தடைந்தார் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dec 22, 2025 - 06:19 PM இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjh5kbcm030ao29ne1271jm9
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம். அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.
-
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
அனர்த்த நிவாரணம் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வௌியீடு Dec 22, 2025 - 05:18 PM அனர்த்த நிவாரணங்களுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025-12-05 ஆம் திகதியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இனால் முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை, மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய உட்சேர்ப்புகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சுற்றுநிருபம் கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh3dvrg0308o29n94wqktfg