Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வளர்ந்த நாடுகளில் மற்ற G10 நாடுகளான Australia - AUD Canada - CAD New Zealand - NZD Norway - NOK இந்த நாலு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியினை அந்த நாடுகளின் commodity export தாக்கம் செலுத்துவததால் இந்த நாலு நாடுகளையும் Commodity float என கூறப்படுகிறது.
  3. எந்தவித Commodity செல்வாக்கு செலுத்தாத மிதக்கவிடப்பட்ட நாணயங்கள் வளர்ந்த நாடுகள் USA - USD EURO - EUR Japan - JPY England - GBP Swiss - CHF Swedish - SEK
  4. 1992 காலப்பகுதியில் முகாமைத்துவமையப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கைகளை(Managed float) நாடுகள் பின்பற்றினாலும் அந்த நாண்யங்களின் பெறுமதி ERM இனால் கட்டுபடுத்தப்பட்டு ஒரு pegged currencies போல ஜேர்மன் நாணயத்திற்கெதிராக செயற்பட்டது, அதனாலேயே பிரித்தானியா ERM இன் விதியினை பின்பற்றுவதற்காக தனது வெளிநாட்டு இருப்புக்களை தொடர்ந்து விற்றது (வெளிநாட்டு இருப்பினை விற்று பவுண்ட்ஸினை வாங்குவதன் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்று விகிதத்தினை உயர்த்த முயன்றது, அதே நேரம் குறித்த நாளிலேயே இரண்டு வட்டி விகித அதிகரிப்பினை 12%, 15% என அதிகரித்து அன்னிய செலாவணி வர்த்தகர்களை short squeeze செய்யமுயன்று தோற்றுப்போனது. 90 களின் இறுதியில் தோற்றம் பெற்ற யுரோ நாணயம் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டியது ஒரு நாணயம் இருந்ததால் அதற்கென ஒரு மத்திய வங்கியும் உருவானது.
  5. Today
  6. தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 23 Dec, 2025 | 10:07 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிஸார் பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம். இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிஸாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234165
  7. இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா! டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார். இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கைக்கான-மீள்-கட்டமைப/
  8. மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சற‌த்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உற‌ங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவ‌னுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.
  9. இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது. அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர். அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது. அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234149
  10. இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவுக்கெதிராக செயற்பட வாய்ப்புண்டா?
  11. அன்று திருகோணமலையில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்புக்காக போலீசார் எடுத்துச்சென்றதாக அரசாங்கம் ஒரு கதையை சொல்லி தப்பியது. அதையே இன்று திஸ்ஸ விகாரை விகாராதிபதி பிடித்து கொண்டு, திஸ்ஸ விகாரைக்கு பாதுகாப்பு தரும்படி தொங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை தப்புக்கு துணைபோனால், தொடர்ந்து துணைபோகவேண்டியது கட்டாயம். எது வந்தாலும் தலைகுனியாமல் சரியான வழியில் நடந்திருந்தால், தொடர்ந்து நீதியாக செல்ல முடியும். சந்தர்பத்திற்கேற்ப, நிர்பந்தத்திற்கேற்ப சொல்லவும் செய்யவும் முயன்றால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்.
  12. முஸ்லீம் மாணவன் அன்று எதற்காக அங்கு கொண்டுவரப்பட்டான் என்கிற காரணத்தை விளக்கிவிட்டு இப்பதிவினைத் தொடர்கிறேன். சிங்கள மாணவர்களின் இனவாதமும் காட்டிக்கொடுப்பும் தலைவிரித்தாடிய அன்றைய நாளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் ஆனையிறவு இராணுவ முகாமை புலிகள் வெற்றிகொண்டிருந்தார்கள். இக்காலத்தில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் ஆனையிறவிற்கான வெற்றிவிழா என்கிற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பல்கலைக்கழக மாணவர்களும் பெரும்பாலான சிங்கள விரிவுரையாளர்களும் பார்த்து வந்தார்கள். விரிவுரையாளர்களில் பி ஏ டி சில்வா எனப்படும் எந்திரவியல்த்துறைப் பேராசிரியர் குறிப்பிடும்படியானவர். புகழ்பெற்ற சிங்கள இனவாதியாக கருதப்பட்ட இவரது வகுப்புகளில் ஆனையிறவு தளத் தோல்வியைப் பற்றி இவர் அதிகம் பேசுவார். பொறியியல்த் துறையில் படிக்கும் தமிழ் மாணவர்களே பிரபாகரனுக்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாகவே சில வகுப்புகளில் கூறியிருந்தார். இவ்வாறு ஆனையிறவுப் படைத்தளத் தோல்வியின் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கெதிரான சிங்களவர்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டதுடன் எமது அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களால் நோக்கப்பட்டன. இதனால் கூட்டமாக அமர்ந்து பேசுவதையோ, பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாடுவதையோ, பேரூந்துகளில் பயணிக்கும்போது தமிழில் உரையாடுவதையோ தவிர்க்கத் தொடங்கினோம். எம்மில் எவரது பிறந்த நாளின்போதும் மலிபன் சொக்கலேட் கிறீம் பிஸ்கெட்டும், ஐஸ் கீறீமும் கொண்டு பிறந்தநாளைச் சிறப்பிப்பது என்பது எமது வழக்கங்களில் ஒன்று. இவ்வாறான பிறந்தநாள் நிகழ்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழக மைதானத்தில் இரவுவேளைகளில் நடக்கும். சிலவேளை பியர்ப் போத்தல்களும் அங்கு பரிமாறப்படும். ஆனால் அவ்வாறான கொண்டாட்டங்கள் கூட அக்காலத்தில் முற்றாக நிறுத்தப்பட்டுப் போனது. ஆனால், ஆனையிறவு போர் முடிந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிங்களவர்கள் ஓரளவிற்கு ஆறுதலடைந்திருப்பார்கள், மனதைத் தேற்றிக்கொண்டிருப்பார்கள் என்கிற நப்பாசையில் அந்த முஸ்லீம் மாணவனும் இன்னும் சிலரும் அன்றிரவு பல்கலைக்கழக மைதானத்தில் தமது நண்பர்களில் ஒருவனின் பிறந்தநாளுக்காக‌ மதுபான கேளிக்கை ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். வழமைபோல தான் கொண்டுவந்திருந்த போதைப்பொருளை அம்மாணவன் அருந்தியிருக்கிறான். போதை தலைக்கேற, சத்தமாக தமிழில் சினிமாப் பாடல் ஒன்றினை அவனும் கூடவிருந்த சிலரும் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் பாடிய சத்தம் அப்பகுதியில் நின்றிருந்த சிங்கள மாணவர்களுக்குக் கேட்கவே, தமிழ் மாணவர்கள் ஆனையிறவு வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள். கூடவே அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடி அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது மதிப்பிற்குரிய பிரபல இனவாதி சி வி குணரத்ண இறந்த துயரமும் சேர்ந்துவிட, கும்பலாகச் சேர்ந்து மைதானம் நோக்கி வெறியுடன் ஓடி வந்திருக்கிறது சிங்கள மாணவர் கூட்டம். பாரிய கூட்டமொன்று தம்மை நோக்கி கத்தியபடி, கைகளில் பொல்லுகளுடன் ஓடிவருவதைக் கண்ட முஸ்லீம் மாணவனும் ஏனைய தமிழ் மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியிருக்கிறார்கள். தம்மைக் கண்டு ஓடுவது தமிழ் மாணவர்கள்தான் என்றும், அவர்கள் அங்கு ஈடுபட்டது ஆனையிறவு வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில்த்தான் என்றும் நம்பிய துரத்திவந்த சிங்கள மாணவர் கூட்டம், அவர்களை மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தாக்கியபடியே, "உங்களின் பல்கலைக்கழக அடையாள அட்டைகளைக் காட்டுங்கள்" என்று கேட்கவும், முஸ்லீம் மாணவனிடம் அதற்கான பதிவுகள் இருக்கவில்லை. ஏனென்றால் அவன் இரகசியமாகவே பல்கலைக் கழக விடுதியில் தரித்திருந்து படித்துவந்தான். சுமார் இரு வருடங்களுக்கு முன்னரே அவனது பல்கலைக்கழக அடையாள அட்டை முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று கருதிய சிங்கள மாணவர் கூட்டம், "நீ யார், ஏன் இங்கு வந்தாய்? எதற்காக களியாட்டம் நடத்துகிறாய்? சி வி குணரத்ணவைக் கொன்றது நீதானே?" என்று கேட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அடியின் அகோரம் தாங்காது கதறிய முஸ்லீம் மாணவன், தப்பித்துக்கொள்வதற்காக, தாம் ஆனையிறவு வெற்றிக் கொண்டாட்டத்தையே நடத்தினோம் என்றும், சி வி குணரத்ணவைக் கொன்றது தாங்கள்தான் என்றும் கூறியிருக்கிறான். இதனையடுத்து உடனடியாக மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சிங்கள மாணவர் கூட்டம், அமைச்சர் சி வி குணரதணவைக் கொலை செய்த புலிகளை, பல்கலைக்கழகத்தில் ஒளித்திருந்தவேளை பிடித்துவைத்திருக்கிறோம், உடனேயே வாருங்கள் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பின்னர் நடந்தவையே நான் மேலே விபரித்தது.
  13. உக்ரைனில் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா Dec 23, 2025 - 07:50 AM உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பிராந்தியத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைனிய துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா தெரிவித்துள்ளார். கடல்சார் தளவாடங்களுக்கான உக்ரைனின் அணுகலைத் தடுப்பதற்கான ரஷ்யாவின் முயற்சியே இந்தத் தொடர் தாக்குதல்கள் என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை எண்ணெய் கொள்கலன்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், உக்ரைனின் கடல் வழிகளைத் துண்டிப்பதாக டிசம்பர் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தியிருந்தார். "நிழல் கடற்படை" என்பது 2022 ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான எண்ணெய் கொள்கலன்களை குறிக்கும் சொல்லாகும்.ை இந்நிலையில், ஓடெசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிவில் கப்பல் ஒன்றும் சேதமடைந்துள்ளது. நடத்தப்பட்ட தாக்குதல்களால் 120,000 மக்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு முக்கிய துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmjhyjseu030mo29n7kmtc7w0
  14. நெதர்லாந்தில் பொது மக்கள் மீது மோதியது கார்; 9 பேர் காயம் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 09:17 AM நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்டியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா?, பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து பொலிஸார் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/234163
  15. குறைந்தது 60 தமிழ் மாணவர்கள் வரையில் அந்த முஸ்லீம் மாணவனால் அடையாளம் காணப்பட்டோம். வெகு சில தமிழ் மாணவர்களே அந்த அடையாள அணிவகுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அடையாளம் காணப்பட்ட எம்மை கட்டுப்பாட்டு அறையினுள்ளிருந்து வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றுவதற்காக பொலீஸார் இழுத்து வந்தபொழுது அங்கு சுற்றியிருந்த சிங்கள மாணவர்களும் பொதுமக்களும் வெற்றிக்களிப்பில் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். கட்டுப்பாட்டு அறையினுள் நடந்தது நாம் புலிகளா இல்லையா என்கிற விசாரணை என்றும், எம்மை பொலீஸார் வாகனங்களில் ஏற்றியதன் மூலம் நாம் புலிகள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் எம் முன்னாலேயே பேசினார்கள். அறுபது புலிகளைக் கைதுசெய்துவிட்ட மகிழ்ச்சியும் , "இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் இத்தனை புலிகளும் இங்கு கல்விபயின்று வந்திருக்கிறார்களே?" என்கிற எரிச்சலும் ஒன்றுசேர அவர்கள் ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டார்கள். நாம் மெதுமெதுவாக பொலீஸ் வாகனங்களில் ஏறத் தொடங்கினோம். பல்கலைக்கழகத்தில் இருந்து மொறட்டுவைப் பொலீஸ் நிலையம் செல்லும் வழியில் எனக்கருகில் இருந்த சக தமிழ் மாணவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி, எங்கே வைத்து, யார் உங்களைப் பிடித்து வந்தார்கள் என்கிற கேள்விகளும், விடைகளும் எமக்கிடையே பரிமாறப்பட்டன. கூடவே முஸ்லீம் மாணவன் எப்படி இதற்குள் சிக்கினான், அவனுக்கு என்ன நடந்தது? அவன் எதற்காக அடையாளம் காட்டும்படி வற்புறுத்தப்பட்டான்? என்கிற எனது கேள்விகளுக்கும் அந்தச் சிறிய பயணத்தில் விடை கிடைத்தது.
  16. காவலர்களின் கட்டுப்பாட்டு அறையினுள், மொறட்டுவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, சில பொலீஸார், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பல சிங்கள மாணவர்கள், குற்றவாளிகளைப்போல் இழுத்துவரப்பட்ட பல தமிழ் மாணவர்கள் மற்றும் ஒற்றை முஸ்லீம் மாணவன் ஆகியோர் அப்போது நின்றிருந்தோம். அந்த முஸ்லீம் மாணவன் பற்றிக் கூறவேண்டும். எமக்கு ஓரிரு வயது அதிகமாக இருக்கலாம். புத்தளத்தைச் சேர்ந்தவன். சுரங்கப் பொறியியல்த் துறையில் படித்துக்கொண்டிருப்பவன். இறுதியாண்டுப் பரீட்சைகளில் கடந்த‌ இரு வருடங்களில் தேறாது போனதால் பல்கலைக் கழகத்தில் சில தமிழ் மாணவர்களுடன் கூடத் தங்கிப் படித்துக்கொண்டிருப்பவன். ஆனால் நான் அவனுடன் ஒருமுறையேனும் பேசியது கிடையாது, தேவையும் இருக்கவில்லை. போதைப்பாவனைக்கு அடிமையானவன் என்று அறியப்பட்ட அவனிடம் இருந்து ஒருசில தமிழ் மாணவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் மாணவர்கள் விலகியே இருந்தார்கள். அந்த முஸ்லீம் மாணவன், பொறுப்பதிகாரி பீரிஸின் முன்னால் அச்சத்துடன் நடுங்கியபடி நின்றிருந்தான். அவன் எதற்காக அங்கு வந்தான், ஏன் விசாரிக்கப்படுகிறான் என்கிற தெளிவு எமக்கு அப்போது இருக்கவில்லை. அவனது முகம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. மேற்சட்டை முற்றாக கிழிக்கப்பட்டு உடலில் இரத்தக் காயங்கள். அவன் அழுதுகொண்டிருந்தது அந்த அறைமுழுதும் எதிரொலித்தது. அவன் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அவன் எதற்காக இழுத்துவரப்பட்டிருக்கிறான் என்பதை எமக்குப் புரியவைத்தது. கும்பல் கும்பலாக அங்கு இழுத்துவரப்பட்ட தமிழ் மாணவர்களை ஒவ்வொருவராக அந்த முஸ்லீம் மாணவனின் முன்னால் வரச் செய்து, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று விசாரிக்கத் தொடங்கினான் பீரிஸ். முதலில் பலரைத் தெரியாது என்று அவன் கூறவே பீரிஸ் அவனைக் கடுமையாக அறையத் தொடங்கினான். அதன்பின்னர் அவன் தனக்கு முன்னால் நிறுத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் தனக்குத் தெரியும் என்று கூறித் தலையாட்ட ஆரம்பித்தான். எனது முறை வந்தது. என்னைத் தெரியாது என்றே சொல்வான் என்று நான் எதிர்பார்த்திருக்க, எனது முகத்தை நேரே பார்த்துவிட்டு, "இவனையும் எனக்குத் தெரியும்" என்று சிங்களத்தில் பீரிஸைப் பார்த்து அவன் கூறவும், "என்னை உனக்கு எப்படித் தெரியும், நான் உன்னுடன் பேசியதுகூடக் கிடையாதே?" என்று அவனைப் பார்த்துக் கேட்டேன். இதனைக் கேட்டதும் பீரிஸ் என்னை நோக்கி அடிக்க வந்ததுடன் சிங்களத்தில் "கட்ட வாபங் கரியா (வாயை மூடுடா....)" என்று கத்திக்கொண்டே ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தமிழ் மாணவர்கள் நின்ற பகுதி நோக்கித் தள்ளிவிட்டான். ஒருபுறம் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்கிற கோபம் வந்தபோதிலும்கூட‌, மறுபுறம், நான் மட்டுமல்ல, இன்னும் பல‌ தமிழ் மாணவர்களும் என்னுடன் அகப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிம்மதி எனக்கு ஏற்பட்டது, ஆகவே மெளனமாக அங்கு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டேன்.
  17. பல்கலைக்கழக வாயிலை நாம் அடைந்தபோது எம்மை அச்சம் பற்றிக்கொண்டது. வாயிலின் உள்ளே அமைந்திருந்த வீதியில் பொலீஸாரின் இரு வாகனங்கள் நின்றிருந்தன. அப்பகுதியெங்கும் சிங்கள மாணவர்களும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி அமைந்திருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சூழ்ந்திருந்தார்கள். குறைந்தது 200 அல்லது 300 பேராவது இருக்கலாம். எம்மைக் கண்டவுடன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். சிங்களத்தில் வைய்யத் தொடங்கினார்கள். "பறத் தமிழர்கள்", "புலிப் பயங்கரவாதிகள்" என்று சிங்கள தூசண அடைமொழிகளுடன் அவர்களின் சொற்கள் வந்து வீழ்ந்தன. அவர்களை நோக்கிப் பார்க்கும் திராணி எமக்கு இருக்கவில்லை. பார்த்தால் ஏதாவது செய்வார்கள் என்கிற அச்சம். ஆகவே எம்மை இழுத்துச் சென்ற சிங்கள மாணவர்களின் பின்னால், தலைகுனிந்தபடி அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். எம்மை இழுத்துச் சென்றவர்கள் பல்கலைக்கழக வாயிலில் அமைந்திருந்த காவலாளர்களின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார்கள். அறையினுள்ளே இன்னும் பல தமிழ் மாணவர்கள். பலர் வெறும் சறம் மாத்திரம் அணிந்திருந்தார்கள். தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி இழுத்து வந்திருக்கிறார்கள். இறுதியாண்டு, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என்று பல தரங்களில் படித்துக்கொண்டிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். எல்லோரது முகத்திலும் "இனி என்ன நடக்கப்போகிறதோ" என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையின் மத்தியில் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தின் பிரதான பொலீஸ் பொறுப்பதிகாரி (ஓ. ஐ.சி), பீரிஸ் கோபம் கொப்பளிக்க, சிவந்த கண்களுடன் நின்றுகொண்டு சிங்களத்தில் கத்திக்கொண்டிருந்தான். ஏற்கனவே அச்சத்தின் உறைந்துபோன எங்களுக்கு அவன் கூறுவதில் முழுவதையும் கிரகித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. எங்களை சிங்கள மாணவர்கள் உள்ளே இழுத்து வருவதைக் கண்டதும், அந்தச் சிங்கள மாணவர்களிடம், "முங் கெளத? (இவர்கள் யார்?)" என்று கேட்டான். "முங் தெமள, கம்பஸ்ஸெக்கே பிட்டிப்பஸ்ஸே இந்தலா அள்ளங் ஆவா (இவர்கள் தமிழர்கள், பல்கலைக்கழகத்தின் பின்னாலிருந்து பிடித்து வந்தோம்)" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.
  18. நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு செல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
  19. பாரபட்சமற்ற இனவாதம் நாடு : சிறிலங்கா காலம் : ஆனி, 2000 ப‌ல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள். பல்கலைக்கழக விடுதியில் இருந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய, பல்கலைக்கழக குடிசார் (சிவில்) பீடத்தின் மண்டபங்களின் விறாந்தைகளில் தமிழ் மாணவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ இருந்து படித்துக்கொண்டிருந்தோம். சிங்கள மாணவர்கள் அவ்வேளைகளில் அப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு, காரணம் எமக்குத் தெரியாது. இரவு பத்து மணியை கடந்திருந்தது. அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், சந்திரிக்கா அம்மையாரின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவ‌ரும், பிரபல இனவாதியுமான சி வி குணரத்ண கொல்லப்பட்டிருந்தது எமக்குத் தெரியும். வெள்ளவத்தைப் பகுதிக்கு இரவு உணவு வாங்கிவரச் சென்றிருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் இரவு நெடுநேரமாகியும் விடுதி திரும்பாதது எமக்கு சற்றுக் கவலையைத் தந்திருந்தது. ஆகவே இவைபற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு பழையபடி எமது பாடங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டோம். மிகவும் நிசப்தமான அந்த இரவு வேளையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சத்தம் கேட்கத் தொடங்கியது. அது பலர் ஒன்றாக ஆத்திரப்பட்டுக் கத்திப் பேசும் சத்தம். அச்சத்தம் நேரம் ஆக ஆக, நாமிருந்த மண்டப‌ விறாந்தை நோக்கி நகர்ந்து வருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எம்மில் சிலருக்கு ஆச்சரியம், இன்னும் சிலருக்கு அச்சம். என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட நாம் அமர்ந்திருந்த இருக்கைகளை விட்டெழுந்து மண்டப வாயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.
  20. இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
  21. பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது. புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம். ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து; அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு; திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம். இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.