stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
சிங்களவன் எங்கேயோ போயிட்டான் என்று ஊளையிடும் அடிமைகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ வைச்ச நாட்டுக்கு நன்றி விஸ்வாசம் இல்லாத மனிதர் ஜயா நீங்கள் லொள்😁😛.......................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ரசோதரன் நீங்கள் தெரிவு செய்த நேபால் அணி கடசி கட்டத்தில் எப்படி அடிச்சு ஆடினார்கள் என்று பாருங்கோ...............எனக்கு இங்லாந் அணியையும் அதிகம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீரர்களின் பந்து வீச்சு மற்றும் மட்டையடி இரண்டு அருமை..................என்ன இங்லாந்தை போல் 50க்கு மேல் பட்ட கிரிக்கேட் மைதானம் நேபாளத்தில் இல்லை இருக்கிற ஒன்று இரண்டு மைதானத்தில் விளையாடி சர்வதேசப் போட்டியில் சாதிக்கினம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்குப் புள்ளீ வரும் ..எந்தெரிவு சவுத் அப்ரிக்க..
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன. 1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம். இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு. 2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு. 3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது. வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை. 4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு. 5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன் அப்கானிஸ்தான் அடிச்ச 182ரன்ஸ் நல்ல ரன்ஸ் என நினைத்தேன் எப்படியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் மடக்கி போடுவினம் என நினைத்தேன்..............சென்னை மைதானத்துக்கு 182பெரிய ஸ்கோர்............நியுசிலாந் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 17ஓவரோட விளையாட்டை முடித்து விட்டினம்.............................
-
களைத்த மனசு களிப்புற ......!
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் விளையாடியதனை நான் பார்க்கவில்லை, குலாப்டினின் பேட்டியினை பார்த்தேன், ஆடுகளம் இரட்டைத்தன்மையாக உள்ளதாக கூறினார். வழமையாக சென்னை ஆடுகளம் (பிட்ச்) சிகப்பு மண்ணில் இருப்பதாக நினைவுள்ளது, இந்த போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளம் கறுப்பு/சிகப்பு கலவை கொண்டதாக இருந்தது, ஆடுகளம் 170 - 175 ஓட்டங்கள் வெற்றிக்கான ஓட்டமாக இருக்கும் என கணித்திருந்தேன், ஆனால் ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது, அவர்களது பந்து வீச்சிற்கு இது ஒரு நிச்சயமான வெற்றி மாதிரியாகவே தோன்றியது. கறுப்பு மண் களிமண் ஈரலிப்பினை தன்னுள்ளே தக்கவைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு வேகமாக காயாது அதனால் வேகமாக ஆடுகளம் மாற்றம் ஏற்படாது, கறுப்பு மண்ணில் பந்து படும்போது பந்து வழுக்கிகொண்டு வரும் சிகப்பு மண் வேகமாக காயும் பந்து உயர்ந்து வரும் அதே போல திரும்பும். சூரிய வெளிச்சத்திற்கு மேல் மண் காயும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சிப்பாகும் ஆனால் சீம் மூமென்ட் குறையும் அதோடு பந்தின் லெதர் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தினால் வேகமாக பழசாகும் ரிவேர்ஸ் சுயிங் ஏற்படும். சுழல் பந்து வீச்சாளருக்கு மேலதிக கிறிப் கிடைப்பதால் பந்து திரும்பும் அதனால் முதலில் துடுப்பாடுவது என்ற ஆப்கானிஸ்தானின் முடிவு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன், அத்துடன் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இதனை ஒரு சர்ச்சையாகவே பார்க்கிறார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடாவுக்கு நாளைக்கு தென் ஆபிரிக்கா சாத்தப் போகுது😁😛.................- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை இத்தாலி எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும்................எனது தெரிவு ஸ்கொட்லாந்😁😛......................- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
பாம்பின் கால் பாம்பறியும் 🙃- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வளமையை விட ..அபாரம்- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சூப்பர்! 👏- அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது. கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்). கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கமில் மிசாரவின் களத்தடுப்பு அபாரம். ஒரு பத்து ஓட்டங்கள் மட்டில் சேமித்திருப்பான். மைதான எல்லையில் சிங்கன் ஒரு புலி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படி இல்லையே............... சும்மா பொதுவாக எழுதினேன்..........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அயர்லாந்து அசத்தலான ரீம் ...களத்தடுப்பும் ...பிடிகளிலும் கவனம் செலுத்துயிருந்தால் ..2 விக்கட் இழப்புடன் போட்டியை வென்று இருப்பினம் இலங்கையின் இன்றைய களத்தடுப்பு பிரமாதம்.....எப்படியும் எனக்கு வெற்றி புள்ளிகள் வந்திருக்கும் திரியை சிரிப்பாக்க...நீங்கள் என்னவென்றால் ..மததுவேசம் கொண்டுவாறியள்.. இதுக்கு சிரிப்பதா ..அழுவதா..- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்று சுழல் பந்தோட அணிய தெரிவு செய்தது நல்லதாய் போச்சு.............இல்லையே வேக பந்துக்கு அடி விழுந்து இருக்கும்................இன்றையான் பரிட்சையில் மீண்டும் நான் பாஸ் ஆகி விட்டேன் லொள்😁😛...............- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பயந்த மாதிரியே இலங்கை வெல்கிறது. இனி அனைவரும் உறங்கச் செல்லலாம். 😁- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓவருக்கு 10ரன்ஸ் படி அடிக்கனும் அயர்லாந் வீரர்கள் ஒரு ஓவரை பதம் பாத்தால் இலங்கை தோல்வி அடையக் கூடும்..............................- அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. HR Tamil News- கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை
கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:44 PM தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இத்தீ விபத்தில் மாணவியின் உடைமைகள், பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. சம்பவ நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வீட்டில் தீ பரவுவதற்கான வேறு எந்தவித தடயங்களும் காணப்படாத நிலையில், தொலைபேசி சார்ஜ் செய்யப்பட்டிருந்த மின் இணைப்புப் பகுதியில் இருந்து தீ ஏற்பட்டுப் பரவியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238164- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது அவேன்ட நம்பிக்கை பிக்குகளிடம் ஆசிர் வேண்டி விட்டு வெளி நாடு சென்று விளையாடுவது விளையாடும் வீரர்கள் சுதப்பும் போது அவர்களின் கடவுளை குறை சொல்லுவதில் எனக்கு உடன் பாடு இல்லை......................- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது இங்கிலாந்து 08 Feb, 2026 | 07:56 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சி குழு முதல் சுற்று போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இணை உறுப்பு நாடான நேபாளம் இந்தப் போட்டியில் ஓர் அனுபவம் மிக்க அணி போல் விளையாடி பூரண அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு சவால் விடுக்க முடியும் என்பதை னது ஆட்டத் திறனால் நிரூபித்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடிக்கு பெயர் பெற்ற முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (1), டொம் பென்டன் (2), ஜொஸ் பட்லர் (26) ஆகிய மூவரும் பிரகாசிக்கத் தவறினர். (57 - 3 விக்.) இந் நிலையில் ஜேக்கப் பெத்தெல், அணித் தலைவர் ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு உரமூட்டினர். ஜேக்கப் பெத்தெல் 35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சாம் கரன் (2) ஓட்டங்களுடன் வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 157 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் களம் விட்டகன்றார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார். வில் ஜெக்ஸ் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினார். பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மிகச் சிறப்பாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்த நேபாளம் 23 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆரம்ப வீரர் ஆசிப் ஷெய்க் (7) ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது குஷால் புர்த்தெல் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். (42 - 2 விக்.) தொடர்ந்து அணித் தலைவர் ரோஹித் பௌடெல், சிரேஷ்ட வீரர் திப்பெந்த்ரா சிங் அய்ரீ ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். திப்பேந்த்ரா சிங் அய்ரீ 29 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். அய்ரீயைத் தொடர்ந்து ரொஹித் பௌடெல் 39 ஓட்டங்களுடனும் ஆரிவ் ஷெய்க் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். லோக்கேஷ் பாம் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி நேபாளத்தின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், கடைசி ஓவரை சாம் கரன் கட்டுப்பாட்டுடன் வீசி இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தார். லோக்கேஷ் பாம் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லியாம் டோசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் https://www.virakesari.lk/article/238172 - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.