Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Today
  2. ஜப்பானில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய தீ விபத்து ; ஒருவர் பலி ; 26 பேர் காயம்! 27 Dec, 2025 | 04:21 PM ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் புத்தாண்டு விடுமுறைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் டோக்கியோவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 26 பேரில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தினால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/234544
  3. உலக பொருளாதார நிபுணர்களின் கருத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும் Dec 27, 2025 - 02:54 PM 'டித்வா' புயலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் நேரடியான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. புயல் அனர்த்தத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 'டித்வா' புயலின் அழிவுகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz) உட்பட உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் அண்மையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய அவசரத் தேவைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கனவே மேலதிகக் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் அதிகக் கடன்களைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக, இலங்கையின் வெளிநாட்டு இறையாண்மைக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்தி, புதிய சூழ்நிலைகளின் கீழ் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு கடன் நிலைத்தன்மையை (Debt Sustainability) மீள நிலைநிறுத்துமாறு அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, அரசாங்கம் இந்த அறிக்கையை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். "இன்று உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் இலங்கை தொடர்பாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், எதிர்வரும் காலத்தில் இலங்கையினால் கடன் செலுத்த முடியாமல் போகும் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, கடன் செலுத்துவதை நிறுத்தி வைக்குமாறு (Debt Moratorium) அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிந்துள்ளனர். நாட்டுக்குள் இருந்து கொண்டு நாம் கூறும் விடயங்களை அரசாங்கத்தால் ஏற்க முடியாவிட்டால், உலகின் பலம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதையாவது பரிசீலிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmjo3fzll036ko29n9c8p0bi3
  4. 2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் Dec 27, 2025 - 12:15 PM 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட 'A' மற்றும் 'Aa' பட்டியல்களைப் (Lists) புதுப்பிப்பது தொடர்பான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு கூறுகிறது. பெப்ரல் அமைப்பின்படி, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையை அவதானிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன், தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா இல்லையா என்பது குறித்த உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளையும் அவர்கள் கண்காணிக்க முடியும். ஏதேனும் முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், பிரதிநிதிகள் அது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும், அத்தகைய அறிவிப்பின் பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றும் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmjnxslof036eo29nm7a76nq4
  5. அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் ; ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து 27 Dec, 2025 | 10:56 AM அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ‘டெவின்’ (Devin) குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (26) அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்கா வழியாக இயக்கப்பட வேண்டிய 1,581 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,883 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனிடையே, அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் காரணமாக “ பயண நிலைமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கலிபோர்னியாவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் புயல் அபாயம் நிலவுவதுடன், 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகும் அதிகபட்ச பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234518
  6. இங்குதான் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவை நாகரிகம் தெரியாமல் ஒருவருக்கொருவர் மரியாதை பாடம் எடுத்தார்கள். ஒருவரையும் பேசவிடுவதில்லை, நேரத்தை வீணடித்து, கலகம் செய்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் அடிபடவே நேரம் காணாது இதற்குள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்? ஒருவரை சஜித் தேர்தலில் கொழும்புத் தொகுதியில் போட்டியிட அழைத்துள்ளாராம். ம்... அவருக்குரிய வைத்தியசாலை அருகில் இருப்பதால் சுலபமாக அனுப்பிவிடலாமென நினைத்து அழைத்தாரோ என்னவோ? ஒரு நாள் பாத்தால் நாமலை புகழ்வார், மறுநாள் சஜித், இன்னொருநாள் அனுரா. நாளும் பொழுதும் ஒவ்வொரு வம்பில மாட்டுப்படுவதும், அநாகரிக வார்த்தை பிரயோகம், ரவுடிசம். இதில மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார். அவர் தொழிலிலும் கரை சேரவில்லை, பாராளுமன்ற உறுப்பினராகவும் எதுவும் சாதிக்கவில்லை. நேரம் ஒரு கதை, எல்லோரையும் கிண்டல். ஆனால் அந்த மக்களின் வாக்கினாலேயே பாராளுமன்றம் போனார் அவர். கல்வித்திறமையினாலோ, தொழிற்திறமையினாலோ அல்ல. நன்கு கற்று தேர்ந்தவர் மற்றவரை ஏளனம் செய்ய மாட்டார்.
  7. காணொளி: 👉 https://www.facebook.com/100061934684688/videos/pcb.1185497690191376/2678679292485326 👈 சுமந்திரனின் தமிழரசு கட்சி பிரதேச சபை தவிசாளர் சோமபானத்தால் அசந்து வீதியில்… விழுந்து கிடக்கும் கண்கொள்ளா காட்சி. Vathsangan Pirabakaran சுத்துமாத்து சுமந்திரனின் அரசியல் வாரிசுக்கு.... சாராயத்தை ஊத்திக் கொடுத்து, காரியத்தை கச்சிதமாக ஆளும் கட்சி முடித்து விட்டது. 😂 இன்னும்... களை எடுக்க வேண்டிய, "அல்லக்கைகள்" நிறைய உள்ளது. எல்லாம் எடுத்து முடிய... தமிழரசு கட்சியின் கூடாரம் காலியாக விடும். 🤣
  8. தனது சாதி கட்சி உறுப்பினர் படை அணியுடன் இலங்கைக்கு கப்பலில் வந்து போராட போகின்றாரா அல்லது இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி சிக்கலில் மாட்டிவிடும் திட்டமா
  9. தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. - கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதனால், வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வாக்கெடுப்பின் போது குறித்த பாதீடு தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையில் தயாரிக்கப்பட்டது என விமர்சனங்கள் வலுத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. Athavan Newsதமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட...கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கட
  10. அரிய காட்சியை நாளை காணத் தவறாதீர்கள்: வருட முடிவில்.... செலென்ஸ்கிக்கு, அமெரிக்காவில் வைத்து... "விசேட சாத்துப்படி" நடக்க இருக்கின்றது. @குமாரசாமி 😂
  11. ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் ––அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.- இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத் திட்டமிட்டு வருவதாகவும் அது, சிங்கள பெரும்பான்மைவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் என அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரண்டு தேசிய இனங்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை என்று அவர் கூறியுள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்துள்ள அன்புமணி, இந்த ஒப்பந்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இலங்கை இதைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருவதாகவும் 13வது அரசியலமைப்பு திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும், தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மூல காரணங்கள் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இலங்கையில் சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் ஈழத் தமிழர்களிடையே அடக்கப்பட்ட விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டிவிட்டு இலங்கையின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். https://athavannews.com/2025/1457334
  12. டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் நாளை சந்திப்பு! உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்துள்ளார். அதன்படி, 28 ஆம் திகதி (நாளை) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ட்ரம்பை சந்திக்கிறேன் எனவும் 20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனவும் இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குர்தா பேச்சுவார்த்தையில் டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் , மேலும் பிற பிரச்சினைகளையும் நிச்சயமாக விவாதிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1457395
  13. தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு DilukshaDecember 27, 2025 12:34 pm 0 தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தம் 72 மணி நேரம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் எல்லைப் பகுதிகளில் அனைத்து துருப்புகளின் நகர்வுகளும் நிறுத்தப்படும். இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இதேவேளை, இந்த எல்லை மோதல்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். போர்நிறுத்தம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டால், தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்த விடுதலை, கோலாலம்பூர் பிரகடனத்தின் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பொதுமக்கள் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் படை முன்னேற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/thailand-and-cambodia-agree-ceasefire-after-weeks-of-deadly-clashes/
  14. சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 07 அத்தியாயம் 7 - வடக்கு நோக்கித் திரும்புதல் கிழக்கு கடற்கரையை, திருகோணமலையில் இருந்து அம்பாறை வரை சென்று பார்த்த பிறகு, கதிர்காமம் மற்றும் மலை நாடு ஏறி இறங்கியபின், ஆரனும் அனலியும் ஆழ்ந்த தமிழர் வரலாற்று அறிவுடனும் மற்றும் தங்களுக்கு இடையினான நல்ல புரிதலுடனும் காடுகள் மற்றும் தடாகங்கள் வழியாக வடக்கு நோக்கி அவர்கள் திரும்பினார்கள். முதலில் அவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் தூண்டிய நகரம் அது. இந்த முறை, நகரம் ஒரு இலக்காக மட்டுமல்லாமல், ஒரு வீடு திரும்பும் இடமாகவும் இருந்தது. என்றாலும் அவர்கள், மன்னாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மடுமாதா தேவாலயம் மற்றும் இலங்கையில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகவும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதுமான திருக்கேதீஸ்வரம் ஆலயம், முல்லைத்தீவில் உள்ள ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் போய், அதன் பின் யாழ்ப்பாணம் போகத் தீர்மானித்தனர். அதன்படி, அவர்கள் முதலில் முல்லைத்தீவு சென்று ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் இரண்டையும் பார்த்தனர். முள்ளிவாய்க்காலின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது என்றாலும், மே, 2009-இல் அங்கு பாய்ந்த இரத்தத்தின் சிவப்பு நிறம் தான் ஆரனின் கண்களில் தெரிந்தது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமல் ஒழுகியது. அனலி உடனடியாக அவனை அணைத்து, கண்ணீரைத் துடைத்தாள். அப்பொழுது கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்று காற்றில் தவழ்ந்தது, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது. நீண்ட காலம் தனியாக தவித்த அனலி ஒரு கணம், தன்னையே இழந்துவிட்டாள்! அந்த உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தனக்குள்ளே தானே சிரித்துக்கொண்டாள். அப்பொழுது அவளின் முழுமையாக வெளிவராத புன்னகையும் மற்றும் அவள் அணிந்திருக்கும் கண்ணாடியையும் தாண்டி வெளிப்படும் அவளின் கண்களின் அழகும் ஆரனை ஒருகணம் வாயடைக்க வைத்தது. பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? முன்பு அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ இப்ப அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “ஹலோ” என்று அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! அப்பொழுது, வானொலியில் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” இசைஞானியின் பாடல் ஒலித்தது. அதன் பின் அவர்கள் தங்கள் உணர்வுகள், கற்பனைகளில் இருந்து விடுபட்டு, ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவர்கள் மன்னார் சென்றனர். மன்னார் நகரில், ஆரனும் அனலியும் தங்கள் காலை உணவை ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில், யாரோ ஒருவர் “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….” என்ற உரையாடல், அவர்களின் கவனத்தை, வெகுவாக ஈர்த்தது. அப்பொழுது அனலி, ஆரானிடம் மெதுவாக "ஆமாம், போர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன. அன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன" என்று வேதனையுடன் கூறினாள். ஆரன், அனலியை கூர்ந்து பார்த்தான். " அனலி உனக்கு ஒன்று தெரியுமா?, பண்டாரநாயக்க, தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது. ஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார். அது தான் தமிழ் மக்களின் பெருமை! அதை உடைக்கத்தான் இப்போது இந்த சதிகள்!!" என்றான். "இதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் கரும் புள்ளிகளே, வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் கோவில் ஆக்கிரமிப்பு ஆகும். ‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்." என்றான் ஆரன். "ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்!" என்று முடித்தாள் அனலி. திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டு நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது அதன் பெருமையைக் கூறுகிறது. அனலி சுந்தரரின் ஈழத்து தேவாரத்தை பாடிக் காட்டினாள். மூவர் என இருவர் என முக் கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன் னகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் தேவன் எனை ஆள்வான் திருக் கேதீச்சரத் தானே! ஆரன் உடனடியாக ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரின் ஈழத்து தேவாரத்தை ஒருவாறு எழுத்துக்கூட்டி வாசித்துக் காட்டி, இதன் கருத்து உனக்குத் தெரியுமா என்று அனலியைக் கேட்டான் புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே! "ஆமாம், முதல் வரியில், 'புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள்' என்று கூறப்படுவதில் இருந்து, இன்றும் இன்னும் சைவ மத ஆலயங்களுக்கு எதிராக அல்லது வலிந்து கட்டப்படும் புத்த ஆலயங்கள், அவர்களின், அந்த சிலரின் செயலுக்கு எடுத்துக்காட்டாகிறது." என்றாள். மேலும் இந்நாட்டுப் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் ஆகும் . அந்த பெருமை மிக்க ஆலயத்தைக் கண்டுகளித்த பின் அவர்கள் மடுமாதா தேவாலயம் சென்று பார்த்தனர். அதன் பின் யாழ்ப்பாணம் சென்றனர். பொதுவாகவே எல்லா பசங்களுக்கும் அவங்க காதலன் காதலியுடன் ஒரு நீண்ட தொலைதூர பயணம் செய்ய விருப்பம் இருக்கும், அதுவும் காதலியுடன் பிரத்தியேக வாகனத்தில் தொலைதூர பயணம் என்றால் அதன் இன்பத்தை சொல்லவா வேண்டும்? ஆரன், அனலி அதற்க்கு விதிவிலக்கு அல்ல. என்றாலும் அனலியின் அப்பாவின் அந்த எச்சரிக்கைகளை அல்லது வேண்டுகோளை ஆரன் என்றும் மறக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும் துளி/DROP: 1957 [கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [A Journey to the homeland through Love, Faith, and Roots] / பகுதி 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/33015708298077725/?
  15. காங்கேசன்துறை சிமெண்டிலை.... பலமாக பாலம் காட்டினாலும், புத்த பிக்குகள்.... பொறுத்த நேரத்தில், அத்திவாரத்தையே பேத்து விட்டு போயிடுவாங்கள்.
  16. கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதூஷிடம்' நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னணியிலேயே முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmjo1n493036io29nzjpxlliq
  17. தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம் adminDecember 27, 2025 தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையில் மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விசேட பரிமாற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் (பாலையடி புதுக்குளம்). டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றது கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகை தந்த 20 இளைஞர், யுவதிகள் மற்றும் மாந்தை மேற்குப் பகுதி இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில் அருட்தந்தை செல்வநாயகம் பீரிஸ், உதவி பிரதேச செயலாளர் டிலக்ஸன், மாவட்ட இணைப்பாளர் அசோக்க முனசிங்க மற்றும் அரசு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனா் இந்த 4 நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தின் மூலம், இரு வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மொழித் திறன்களைப் பகிர்ந்து கொள்வதோடு, கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. https://globaltamilnews.net/2025/225059/
  18. ஒட்டுக்குழு தலைவன்... டக்ளஸ் தேவானந்தா, நாளைக்கு திங்கள்கிழமை மத்தியானம், தனது வீட்டில்... சோறும், ஆட்டு இறைச்சிக் கறியும் சாப்பிடுவார் என்று ஊர்க்கிழவி சொல்லுது. 😂 இலங்கை நீதித்தித்துறையின் "டிசைன்" அப்பிடியாம் என்கிறது கிழவி. 🤣 அவர் நாளை வெளியில் வராவிட்டால்.... தன்ரை "கூந்தலை", இனி முடியிறது இல்லை எண்டு சத்தியம் பண்ணி சொல்லுற படியால், நாங்கள் பொறுமையாக இருந்து பாப்பம். அது மட்டும்.... கொழுத்த வேண்டிய வெடிகளை, கொளுத்தி கொண்டாடுங்கோ.
  19. 🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! adminDecember 27, 2025 யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்றும், மழையில் நனைந்தாவது கொடியை ஏற்றியிருக்க வேண்டும் அல்லது குடையை மற்றவர்கள் பிடித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசியக் கொடி ஏற்றப்படும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மீறப்பட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/225069/
  20. 2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் adminDecember 27, 2025 அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 1. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 2. கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 3. மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன், பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை (Sterilization) மேற்கொள்ளும் விசேட பொறிமுறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/225074/
  21. கூகிள் ஷீற்றில் formula எல்லாம் கவனமாகப் பாவித்து சுப்பர் 8 , அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு தெரிவுகளின்படி சரியாக அணிகள் வருமாறு செய்திருந்தேன்! சிலவற்றுக்கு copilot உதவி தேவைப்பட்டது! எனவே, போட்டியாளர்கள் ஷீற்றில் அணிகளைத் தெரிவு செய்யவேண்டியதும், மஞ்சள் நிறப் பெட்டிக்குள் விருப்பமான அணிகளை சுருக்கிய வடிவில் தருவதும்தான் வேலை. ஆனாலும் @ஏராளன் , @vasee X, Y என்று பதிந்துள்ளனர்! இந்த X, Y களை நான் பார்த்துப் போடவேண்டும்! எனது வேலையை இலகுவாக்க கூகிள் ஷீற்றில் மஞ்சள் பெட்டிக்குள் விருப்பமான அணிகளை சுருக்கிய வடிவத்தில் (உதாரணம் AFG ஆப்கானிஸ்தான் எனில்) தந்தால் நல்லது.🙏🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.