stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவரை ஏன் எதிர்க்கத் தொடங்கினார்கள்? இந்த எதிர்ப்பை காந்தி எப்படி கையாண்டார்? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு கஸ்தூரிபா அந்த மகளை எப்படி ஏற்றுக்கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி குஜராத்தி காந்திய இலக்கியங்களைப் ஆய்வு செய்ததோடு, தத்தெடுக்கப்பட்ட அந்த மகளின் குடும்பத்தில் இன்று உயிருடன் இருக்கும் உறுப்பினர்களிடமும் பேசியது. காந்தியின் வளர்ப்பு மகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள, நாம் வரலாற்றைப் புரட்ட வேண்டும். காந்தி ஜனவரி 9, 1915 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் மும்பையில் கால் பதித்தபோது, ஒரு தேசிய வீரரைப் போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 'டால்ஸ்டாய்' மற்றும் 'பீனிக்ஸ்' போலவே இந்தியாவிலும் ஒரு நிறுவனம் அல்லது ஆசிரமத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மே 25, 1915 அன்று, காந்தி ஆமதாபாத்தில் 'சத்யாகிரக ஆசிரமத்தை' நிறுவினார். இது இன்று 'கோச்ரப் ஆசிரமம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆமதாபாத்தில் காந்தி குடியேற உதவியவர்களில் ஜீவன்லால் பாரிஸ்டரும் ஒருவர். கோச்ரப்பில் உள்ள அவரது வீட்டை ஆசிரமத்திற்காக வாடகைக்கு எடுக்க காந்தி முடிவு செய்தார். தனது சுயசரிதையான 'சத்திய சோதனை'யில் காந்தி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் ஆசிரமத்தில் 13 தமிழர்கள் இருந்ததாக எழுதியுள்ளார். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து தமிழ் குழந்தைகளும் வந்திருந்தனர். சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஆசிரமம் தொடங்கியது. "அனைவரும் ஒரே சமையலறையில் சாப்பிட்டோம், ஒரே குடும்பமாக நடந்து கொள்ள முயற்சித்தோம்" என்று காந்தி எழுதியுள்ளார். இருப்பினும், ஆசிரமம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே காந்திக்கு ஒரு கடுமையான சோதனை காத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தல் கருதப்பட்ட பிரிவினரில் ஒரு குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்தி ஒரு முன்மாதிரியை உருவாக்க காந்தி விரும்பினார். எனவே, ஆசிரமத்தில் வசிக்க விருப்பமுள்ள அத்தகைய குடும்பங்களைத் தேடினார். பட மூலாதாரம்,BHIKHUBHAI DAFDA படக்குறிப்பு,காந்தி துதாபாய் தஃப்டாவின் குடும்பத்துடன். லட்சுமி வலதுபுறத்தில் குடும்பத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்த தலித் மகள் லட்சுமி காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி, பழங்குடி சமூகங்களிடையே கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாடுபட்ட அமிர்தலால் தக்கர் (தக்கர் பாபா) என்பவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர், "ஒரு ஏழ்மையான மற்றும் நேர்மையான அந்தியஜ (தலித்) குடும்பம் உள்ளது. அவர்கள் உங்கள் ஆசிரமத்திற்கு வந்து வாழ விரும்புகிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று எழுதியிருந்தார். காந்தி தனது சுயசரிதையில், "தக்கர் பாபாவின் பரிந்துரையுடன் வரும் அந்தக் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தை என் தோழர்களிடம் வாசித்துக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றனர். அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் விதிகளைப் பின்பற்றத் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று நான் அமிர்தலால் தக்கருக்குத் தகவல் அனுப்பினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். துதாபாய் செப்டம்பர் 6, 1915 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் ஆசிரமத்தில் சேர விரும்புவதாகவும், அதன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக, செப்டம்பர் 11, 1915 அன்று துதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் பெண் குழந்தையான லட்சுமி ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்தனர். பின்னர் செப்டம்பர் 26 அன்று அவர்கள் ஆசிரமத்தில் குடியேறினர். துதாபாய் தற்போதைய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவராஜியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் போடாட் நகரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் அவரது வருகையோடு, ஆசிரமத்தில் சிக்கல் தொடங்கியது. "ஆதரவாக இருந்த நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பங்களா உரிமையாளருக்குப் பங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது." "அந்த நபர் மீது எங்கள் தண்ணீர் தெளித்தால் கோபப்படுவார். அவர் துதாபாயைத் திட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினார். அனைவரிடமும் அந்த வசவுகளைப் பொறுத்துக்கொண்டு, உறுதியுடன் தண்ணீர் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்"என்று காந்தி பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த நபர் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஆசிரமத்தில் மற்றொரு பிரச்னை உருவானது. பட மூலாதாரம்,HITESH DAFDA படக்குறிப்பு,காந்தி தனது வளர்ப்பு மகள் லட்சுமியுடன் ஆசிரமத்திற்கு கிடைத்து வந்த நிதி உதவி நின்றது. "ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு அந்தியஜர்கள் (தலித் மக்கள்) உள்ளே நுழைவதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த அந்தச் சகோதரருக்கு, அவர்கள் ஆசிரமத்திற்குள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. நிதி உதவி நின்றது. சமூகப் புறக்கணிப்பு பற்றிய வதந்திகள் என் காதுகளை எட்டின. புறக்கணிக்கப்பட்டு எந்த ஆதரவும் இல்லாமல் போனாலும், நாங்கள் ஆமதாபாத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று என் தோழர்களிடம் சொன்னேன். நாங்கள் அந்தியஜவாடாவுக்கே (தலித் மக்கள் வசிக்கும் பகுதி) சென்று அவர்களுடனேயே வாழ்வோம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்தோ அல்லது உழைத்தோ பிழைத்துக்கொள்வோம்," என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். நிதி உதவி நின்ற பிறகு, ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் செலவுகளைக் கவனித்து வந்த காந்தியின் மருமகன் மகன்லால் காந்தி, "அடுத்த மாத ஆசிரமச் செலவுகளைச் சமாளிக்க நம்மிடம் பணம் இல்லை"என்று காந்திக்கு ஒரு தகவலைத் தந்தார். மகன்லால் காந்தி, காந்தியின் மாமா ஜீவன் சந்தின் மகனான குஷால் சந்தின் மகன் . காந்தியைப் போலவே அவரும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஆனால் அங்கு தொழில் செய்யாமல், காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார். மகன்லால் காந்தியின் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக , "அப்படியானால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று காந்தி எழுதியுள்ளார். மேலும், "இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கு வருவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும், 'ஷாம்லா' (கடவுள்) கடைசி நிமிடத்தில் உதவியை அனுப்பியிருக்கிறார்" என்று எழுதியுள்ளார். மகன்லால் அந்தத் தகவலைச் சொன்ன உடனேயே, ஒரு நாள் காலை ஒரு குழந்தை ஓடிவந்து காந்தியிடம், "ஆசிரமத்திற்கு வெளியே ஒரு கார் நிற்கிறது. ஒரு வணிகர் உங்களை அழைக்கிறார் என்று கூறியது. இதனைக் குறித்து காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் அந்த நபரை அணுகினேன். அவர் என்னிடம், "நான் ஆசிரமத்திற்கு உதவ விரும்புகிறேன், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் தற்போது நான் பெரும் நெருக்கடியில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். "மறுநாள் சந்திப்பதாக அவர் கூறிச் சென்றார். அடுத்த நாள், அந்த வணிகர் காந்தியிடம் வந்து 13,000 ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்." பட மூலாதாரம்,Getty Images கஸ்தூரிபாவின் எதிர்ப்பு ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பம் தங்குவது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் ஒருவர். லட்சுமியின் சகோதரர் மோகன்பாய் தஃப்டாவின் மகனான பிகுபாய் தஃப்டா, பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கஸ்தூரிபா கோபமாக இருந்தார். எனவே என் தாத்தா துதாபாய், காந்தியிடம் தாங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். ஆனால் காந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அனைத்தையும் மௌனமாக பொறுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்"என்றார். காந்தி தனது 'அக்ஷர்தேக்' நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். "துதாபாய் ஆசிரமத்திற்கு வந்த அன்று, தென்னாப்பிரிக்கா சத்யாகிரகத்தில் பங்கேற்ற சந்தோக் மகன்லால் காந்தி விரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சந்தோக் சாப்பிடாததால் நானும் சாப்பிடவில்லை. கஸ்தூரிபாவிற்கும் இது பிடிக்கவில்லை, அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரமத்தின் மற்ற சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்." காந்தி கஸ்தூரிபாவிடம், "நீ என்னை விட்டு பிரிந்து செல்லலாம், நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்" என்று கூறிவிட்டார். செப்டம்பர் 24 அன்று சந்தோக்கும் மகன்லாலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 3 அன்று மீண்டும் திரும்பினர். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறவில்லை. ஆசிரமவாசிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க காந்தி 'உண்ணா விரதம்' என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி எப்போதும் கஸ்தூரிபாவுக்கு நிலைமையை விளக்குவார், ஆனால் பா (கஸ்தூரிபா) சோர்ந்து போவார். அவர் கண்களில் கண்ணீர் வழியும், ஆனாலும் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில், காந்தியின் மூத்த சகோதரி ரலியத்பென்னும் ஆசிரமத்தில் வசித்து வந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த அவருக்கும், துதாபாயின் குடும்பம் ஆசிரமத்தில் தங்குவது பிடிக்கவில்லை. முதலில், அவர்கள் தனிச் சமையல் வேண்டும் என்று கோரினர், ஆனால் காந்தி அதை நிராகரித்தார். இதனால் அவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அவர் ராஜ்கோட்டிற்குச் சென்றார், அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்து கொடுத்தார். காந்தி கஸ்தூரிபாவிடமும், நீயும் ரலியத்பென் போலவே ராஜ்கோட்டிற்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் கஸ்தூரிபா, "அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை நீங்கள் பிரிக்க நேரிடும். நான் உங்களைப் பிரிந்து செல்ல மாட்டேன்," என்று கூறிவிட்டார். இறுதியாக, காந்தியின் கோரிக்கையை பா ஒப்புக்கொண்டார். பின்நாட்களில், லட்சுமியின் தலைமுடியைச் சீவி, குளிப்பாட்டி அவரை பா தயார் செய்வார். ஆரம்பத்தில் காட்டிய வெறுப்பிற்குப் பதிலாக, லட்சுமியின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் கஸ்தூரிபா. பட மூலாதாரம்,ROLI BOOKS லட்சுமியை தத்தெடுத்த காந்தி இறுதியாக, எதிர்ப்புகளை சமாளிக்க லட்சுமியைத் தத்தெடுக்க காந்தி முடிவு செய்தார். அக்டோபர் 5, 1920 அன்று காந்தி லட்சுமியைத் தத்தெடுத்தார். அப்போது லட்சுமிக்கு சுமார் ஆறு வயது. அடுத்த 14 ஆண்டுகள் லட்சுமி காந்தியுடன் இருந்தார். லட்சுமி திருமண வயதை அடைந்ததும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க காந்தி முடிவு செய்தார். இதற்காக, ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் பிராமணரான மாருதி சர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார். மாருதி சர்மா விழித்திரை தொடர்பான பணிகளைச் செய்யும் ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். "அவர்களது திருமணத்தின் போது காந்தி எரவாடா சிறையில் இருந்தார். எனவே, காந்தி இல்லாத நிலையில், காந்தி ஆசிரமத்திற்கு எதிரே இருந்த சிவப்பு பங்களாவில் திருமணம் நடந்தது. பிரபல இசைக்கலைஞர் நாராயண் கரே லட்சுமிக்குச் சீர் செய்தார்"என்று பிகுபாய் தஃப்தாவின் மகன் ஹிதேஷ்பாய் தஃப்தா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார். முன்னதாக, காந்தி சிறையில் இருந்ததால் லட்சுமியின் திருமணம் தள்ளிப்போனது. காந்தி நேரில் இல்லாமல் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என லட்சுமி மறுத்து வந்தார். ஆனால், இந்த முறை காந்தி இல்லாத போதும் லட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகனுக்கு ஹரிபாய் சர்மா என்றும், மகளுக்கு கல்பனாபென் என்றும் பெயரிடப்பட்டது. ஹரிபாய் சர்மா, ரஸிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிநேக் என்ற மகள் உள்ளார். ஹரிபாய் சர்மா தற்போது உயிருடன் இல்லை. மாருதி சர்மா 1946-ல் காலமானார். லட்சுமிபென் 32 வயதிலேயே கணவரை இழந்தார். ஆனால், காந்தியின் பெயரைச் சொல்லி அவர் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். "அவர் ஒரு மில்லில் வேலை செய்தார், பின்னர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார்," என்று ஹிதேஷ் சர்மா கூறுகிறார். லட்சுமிபென் ஷர்மாவின் மகன் ஹரிபாய் சர்மா இறந்துவிட்டாலும், அவரது மனைவி ரஸிலாபென் சர்மா இன்றும் உயிருடன் இருக்கிறார். பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரஸிலாபென் சர்மா, "அவர் எளிமையை விரும்பினார். காந்தியின் கருத்துகளின்படி வாழ விரும்பினார்," என்று கூறினார். "எனக்கு 1978-ல் திருமணம் நடந்தது, அவர் 1984-ல் இறந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த காலம் மிகக் குறைவு, ஏனெனில் அவர் காந்தி ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார்." காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அவர் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை? இந்தக் கேள்விக்கு ரஸிலாபென் பதிலளிக்கையில், "அவர் அரசியலில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தார். ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. எப்போதும் காதி ஆடைகளையே அணிந்தார், காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்குச் சேவை செய்வதிலும் காந்திய சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்," என்றார். பட மூலாதாரம்,HITESH DAFADA படக்குறிப்பு,காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி 1984ஆம் ஆண்டு காலமானார் தஃப்டா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவரது கணவர் மாருதி சர்மா இறந்த பிறகு, லட்சுமி தனது வாழ்வாதாரத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். ஒரு நாள், அவர் படிக்கட்டில் வழுக்கி விழுந்ததால், கடினமான வேலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். லட்சுமிபென்னின் மகன் ஹரிபாய் சர்மா குஜராத் காதி வாரியத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணியாற்றி வந்தார். காந்திக்கு ஹரிபாய் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஹரிபாய் குழந்தையாக இருந்தபோது காந்தி அவருடன் விளையாடுவார். காந்தி உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியைத் தன்னுடன் வந்து தங்குமாறு (பிறந்த வீட்டிற்கு வருவது போல) அழைப்பார். கஸ்தூரிபாவின் மறைவுக்குப் பிறகும் காந்தி இந்த வழக்கத்தைத் தொடர்ந்தார். லட்சுமிபென்னை எப்போதும் கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொல்வார். காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி லட்சுமியைப் பெரிதும் உலுக்கியது. டெல்லிக்குச் செல்ல அவரிடம் போதிய வசதிகள் இல்லாததால், நான்காவது நாளில் தான் அவர் டெல்லியை அடைந்தார். பின்னர் அவரது அஸ்தியுடன் பிரயாகைக்குச் சென்றார். கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்த்த அவர், ஜனவரி 31, 1984 அன்று காலமானார். அவர் இறக்கும் போது, அவரது கடைசி விருப்பத்தின்படி காந்தி ஆசிரமத்திலேயே வசித்து வந்தார். லட்சுமிபென்னின் இரண்டாவது சகோதரி சந்திரிகாபென்னின் மகன் நரேந்திரபாய் கோஹில், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அவர் இறுதிவரை காந்தி ஆசிரமத்தின் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். பஜனைகள் பாடுவார், ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்வார். காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை"என்றார். "அவர் இறுதிவரை காதி ஆடைகளையே அணிந்தார். அவரது குழந்தைப் பருவமும் ஆசிரமத்தில் கழிந்தது, அவரது இறுதி நாட்களும் ஆசிரமத்திலேயே கழிந்தன." "அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அதை வைத்தே அவர் வாழ்ந்தார். வேறு எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை"என்பதையும் நரேந்திரபாய் கோஹில் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், பொதுவாழ்வில் இருந்து லட்சுமிபென் எப்போதும் ஒதுங்கியே இருந்தார். "காந்தியின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடனான எங்கள் தொடர்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருமுறை காந்தியின் வம்சாவளிப் பட்டியலைத் தயாரித்தபோது, அதில் லட்சுமிபென்னின் பெயர் இருந்தது. ஆனால் அதைத் தவிர மற்ற தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டன. நாங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று பிகுபாய் டஃப்தா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wx0xqnz8wo
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார். பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார். பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237521
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ.......! --- வெண்மேகம் பெண்ணாக ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றல் உறங்கிய போதும் . ........! 😍- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் பாகிஸ்தான் விளையாடுமா இல்லையா என்று சிலர் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்காக இருக்கின்றார்கள்! வெள்ளிக்கிழமை கடைசி நாள்!- யார் முருகன் ? யார் சூரன்? -நிலாந்தன்
யார் முருகன் ? யார் சூரன்? -நிலாந்தன் தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை மறைமுகமாக அது சுட்டுகிறது என்று பொதுவான விளங்கிக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு,தனது முருகன் பாடலுக்குள் உட்பொதிந்துள்ள அரசியலுக்கு ஊடாகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு ரப் பாடகரைக் கொண்ட அதே சமூகத்தில்தான், அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அனுரவை முருகனோடு ஒப்பிட்டு முகநூலில் எழுதியிருந்தார். அனுரவை தோழராக,சகோதரராக, ஏழைகளுக்கு இனியவராக, செல்ஃபி நாயகனாக…இன்னபிறவாக சித்திரித்த அரசியல் விசுவாசம், அதன் அடுத்த கட்டமாக அவரை கடவுளுக்கு நிகராகச் சித்தரிக்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்களில் ஒருவர் அவ்வாறு வர்ணித்துள்ளார். ஒரு சிங்களத் தலைவரை அவருடைய தமிழ் அடியார் ஒருவர் இவ்வாறு தெய்வ நிலைக்கு உயர்த்துவது என்பது இதற்கு முன் காணப்பட்டிராத ஒன்று. சிங்களத் தலைவர்களைப் போற்றும் தமிழ்த் தொண்டர்கள் இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது டிஜிட்டல் புரோமோஷன் என்பது இருக்கவில்லை. தவிர யுத்த காலங்களில் இனமுரண்பாடு கூர்மையாக இருந்தபோது சிங்களத் தலைவர்களைப் பகிரங்கமாகப் போற்ற தமிழர்கள் துணியவில்லை. இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லாத ஓர் அரசியல் சூழலில், அனுர அரைக்காற் சட்டையோடு நடக்கிறார். பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வந்து செல்பி எடுக்கிறார். தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கைகளை நீட்டி அவரை அழைக்கிறார்கள். மூதாட்டிகளும் சிறுவர்களும் நெருங்கிச் சென்று அணைக்கிறார்கள். இந்தக் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக சந்தையில் விற்கிறது. அனுர எங்கே நாயகனாகிறார்? அல்லது நாயகன் ஆக்கப்படுகிறார்? அவருடைய எளிமை,உடல் மொழி போன்றன அவரை விளம்பரப்படுத்த வசதியாக உள்ளன. இதற்கு முன்னிருந்த சிங்களத் தலைவர்கள் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வர முடியாதவர்கள். தமிழ் மக்கள் அவர்களை நெருங்கி அணைக்க முயற்சிக்கவில்லை மட்டுமல்ல, அவ்வாறு அணைக்கவரும் தமிழர் ஒரு மனிதக் குண்டாக இருக்கலாம் என்று அச்சப்படும் அரசியல் சூழல் இரு தசாப்தங்களாக இருந்தது. அனுர அந்தப் பயமின்றி தமிழ் மக்களை நெருங்கக்கூடிய அரசியல் சூழல் இப்பொழுது உண்டு. தவிர அவருடைய கட்சிக்காரர்கள் தமிழ் மக்களை அவரை நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி அதைக் காணொளிகள் ஆக்கி, வைரல் ஆக்குகிறது. இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தெளிவான ஒரு பிரச்சார நிகழ்ச்சி நிரல். பலாலியில் அவர் அரைக்காற் சட்டையோடு நடந்தபோதும்,வடமராட்சியில் ஒரு வயோதிபப் பெண் அவரை அணைத்தபோதும், பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அவரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்கும்போதும், அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணி அதைக் கவர்ச்சியான பிரச்சாரப் பண்டமாக மாற்றுகிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்புவது என்பது திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற ஒரு பிரச்சார உத்தி. அதுதான் உண்மை. ஆனால் அவ்வாறு அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்பும் அளவுக்கு தமிழ்த்தேசியப் பரப்பில் ஒரு வெற்றிடம் நிலவுகிறது என்பதும் அதே அளவு உண்மை. அனுரவைப் போல தமிழ்ப் படப் பாடல்களின் பின்னணியில் நாயக நடை போட தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்கள் அல்லது செயல்பாட்டாளர்கள் இல்லையா? அல்லது இருப்பவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாரில்லையா? இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் ஆளுமைகளில் யாரையுமே அவ்வாறு கொண்டாட முடியாத ஒரு நிலைமை ஏன் தோன்றியது? தமிழ்த்தேசிய அரசியலானது ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கிக் கொண்டிருக்க, துரோகி ஆக்கிக்கொண்டிருக்க,யாருமே கதாநாயகராக கதாநாயகியாக மினுங்க முடியவில்லை. ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளாத, சந்தேகிக்கின்ற, குற்றச்சாட்டுகின்ற, ஓர் அரசியல் சூழலில்,யாரும் யாரையும் அங்கீகரிக்கத் தயாரில்லை. அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமூகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமயத் தலைவர்களாக இருந்தாலும் சரி,யாரும் புகழோடு இருக்க முடியாது. சமூகத்தில் யாரெல்லாம் துருத்திக்கொண்டு,மினுங்கிக்கொண்டு மேலெழுகிறார்களோ, அவர்கள் எல்லோரின் மீதும் விமர்சனங்கள்; அவதூறுகள். கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஓர் உள்ளூர் தலைவரும் சரி, மாவட்ட மட்டத் தலைவரும் சரி,தேசியமட்டத் தலைவரும் சரி தொடர்ச்சியாக ஜனவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏன்? தமிழ்மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள்? யாரை வாழும் முன்னுதாரணமாகப் பார்க்கிறார்கள்? யாருமே வாழும் முன்னுதாரணமாக இல்லாத ஒரு சமூகமா இது? தியாகிகளைப் போற்றும் ஒரு சமூகத்தில் உயிருள்ள வாழும் முன்மாதிரிகள் ஒருவரும் இல்லையா? ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,அல்லது அங்கீகரிக்காத ஒரு நிலைமை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுணர்வை,கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கும். இது கட்சிகளில் தொடங்கி,சமூக நிறுவனங்கள், ஆலய அறக் கட்டளைகள், திருச்சபைகள், பழையமாணவ சங்கங்கள்..என்றிவ்வாறாக முழுச்சமூகத்துக்குமான ஒரு பொது வியாதியாக மாறிவருகிறது. சமூக வலைத்தளங்களுக்கு முற்பட்ட காலத்தில் மொட்டைக் கடிதம் இருந்தது. மல முட்டி இருந்தது. இப்பொழுது இரண்டும் இணைந்து பேக் ஐடிகளாக, முகம் காட்டா முகநூல் கணக்குகளாக மாறிவிட்டன. மல முட்டி என்பது, தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இரு துருவங்களாக இருந்த காலகட்டத்தில் இருந்த ஒரு தோற்றப்பாடு. தமது கட்சி எதிரியைத் தாக்குவதற்கு, அசிங்கப்படுத்துவதற்கு மண்பானையில் மலத்தைச் சேகரித்துக் கொண்டுவந்து அரசியல் எதிரியின் வீட்டின் முற்றத்தில் அல்லது வாசலில் பானையை உடைத்து விடுவார்கள். ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் காணப்பட்ட இந்த மல முட்டி அரசியல் மொட்டைக் கடிதத்தோடு இணைந்து முழுச்சமூகமும் நாறும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஒரே கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் ஒன்று மற்றதன் மீது மலத்தை வாரி வீசும்போது இரண்டுமே நாறுகின்றன. அண்மையில் மட்டக்களப்பில் சுமந்திரன் அவ்வாறான முகங்காட்டா முகநூல் பக்கங்களைக் குறித்துப் பேசியிருக்கிறார். முகங்காட்டா முகநூல் பக்கங்கள்,தொண்டர்களை ஏவி வழக்குத் தொடுக்கும் தலைவர்கள், தனது கட்சிக்காரனை அல்லது தன்னை விமர்சிப்பவரை மடக்குவதற்கு வழக்குப் போடுவேன் என்று மிரட்டும் அரசியல்வாதிகள், தன் கட்சிக்காரனுக்கு எதிராக தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் தமிழ் அரசியல் வாதிகள், சமூகத்தில் யாராவது மினுங்கிக் கொண்டு மேலெழுந்தால் அவர்களைக் காலால் மிதித்துச் சப்பையாக்கிவிடக் காத்திருக்கும் சமூக வலைத்தள நீதிபதிகள்…என்றிவ்வாறாக தமிழ்ச்சமூகம் அதன் மாண்பை இழந்து கொண்டு போகிறது. ஒருகாலம் திட்டமிட்டு வெறுப்பர்களை உற்பத்தி செய்த, வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கைகளில் இப்பொழுது மாற்றம் தெரிகிறது. ஆனால் உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சியோ நாறிக் கொண்டிருக்கிறது. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீயை, சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவைத்தது யார் என்பது எல்லாருக்கும் தெரியும். தனது உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வாறு தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கருவியாகக் கையாள்வது என்பது தமிழ்த்தேசிய அரசியல் எங்கே வந்துநிற்கிறது என்பதைக் காட்டுகிறது. அதேசமயம் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் படைப் பிரதானிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்ற விடயம் அவரைப் பொது வெளியில் அம்பலப்படுத்த, அவமானப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்குள் தீர்க்கப்படாத உட்கட்சி முரண்பாடு இடக்கிடை நாடாளுமன்றத்திலும் அடிக்கடி ஊடக ஒலிவாங்கிகளுக்கு முன்னரும் அசிங்கமான விதங்களில் வெளிப்படுகிறது. கட்சியின் கூட்டுணர்வை,சகோதரத்துவத்தைக் கவனத்தில் எடுத்து உட்கட்சிப் பிரச்சனையை உட்க்கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியாத அளவுக்கு கட்சி பலவீனமாக உள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான யதார்த்தம். சுமந்திரனாலும் கட்சியைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.சிறீதரனாலும் முடியவில்லை. யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தனக்கென்று நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவர் சிறீதரன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்குடா நாட்டுக்குள் தமிழரசுக் கட்சிக்கு ஆசனம் கிடைக்கவில்லை. தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் கிளிநொச்சியில் சிறீதரன் பெற்ற வெற்றியும் இல்லையென்றால் தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் ஆசனமே இல்லை. எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால்,கிளிநொச்சியில் இப்பொழுதும் சிறீதரனுக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. யாழ்குடா நாட்டில் மட்டுமல்ல, தமிழரசு கட்சிக்குள் நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட ஒருவர் அவர். தமிழரசுக் கட்சிக்குள் அவரைத் தோற்கடித்தாலும், கிளிநொச்சியில் அவரைத் தோற்கடிக்கலாமா என்பதனை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும். ஆனால் சிறீதரனை அவமானப்படுத்தி அவருடைய மாவட்டத்துக்குள்ளேயே முடக்க இன்றுவரை சுமந்திரனால் முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கட்சிக்குள் சுமந்திரன் தன்னுடைய நிலையை ஒப்பீட்டளவில் பலப்படுத்தி வந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அவர் பலமாக உள்ளாரா என்பதை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும். இந்த முரண்பாடுகளின் மத்தியிலும் தமிழரசுக் கட்சி பலமாக உள்ளது என்ற ஒரு தோற்றம் வெளியே தெரிகிறது. ஏன் தெரியுமா? அது வெல்லக்கூடிய கட்சி என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் நம்பி அந்தக் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட,வடக்குக் கிழக்காக கீழ்மட்ட வலையமைப்பை கொண்ட ஒரு கட்சி அது. வெல்லக்கூடிய குதிரை என்பதால் அநேகர் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளிலும் அந்தக் கட்சியில் வாக்காளர்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களும் கொழும்பை அனுசரித்துப் போகும் தலைவர்களும் இருந்ததுண்டு. இந்த இரண்டு பண்புகளினதும் கலப்புத்தான் தமிழரசுக் கட்சி. இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை அனுசரித்துப் போனமைதான் கட்சியின் பலம். ஆனால் இப்பொழுது இந்த இரண்டு போக்குகளும் முரண்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இது கட்சியை எங்கே கொண்டு போய்விடும்? தமிழரசுக் கட்சி சிதையுமாக இருந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ்த் தேசியப் பேரவையால் முடியுமா? அது இப்பொழுதுவரை ஒரு பிரதான நீரோட்டக் கட்சிக்குரிய பண்புகளோடு காணப்படவில்லை. மாறாக மாற்று நீரோட்டக் கட்சியாகத்தான் காணப்படுகிறது. இவ்வாறு தமிழ் தேசிய பரப்பில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு இடையிலும் ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கும் மோதல்களால்,தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. அந்த வெற்றிடத்தில் அரச பலத்தோடு, அரச வளங்களைப் பிரயோகித்து அனுர நாயகனாக இறக்கப்படுகிறார். கடந்த வாரம் முருகனாகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். அதாவது தமிழர்கள் ஒருவர் மற்றவரை சூரன்கள் ஆக்கிக் கொண்டிருக்க முருகன்கள் வெளியில் இருந்து குதிக்கிறார்களா? விக்னேஸ்வரனுக்கும் வாகீசனுக்கும் கையில் வேலைக் கொடுத்த ஒரு சமூகம், விரைவில் அனுரவிக்கும் ஒரு வேலைக் கொடுத்து விடுமோ ? https://www.nillanthan.com/8106/- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுத்துமாத்து சுமந்திரன்... மாகாண சபைத் தேர்தலில், தான் வேட்பாளர் என்றவுடன்.... சங்கு கூட்டணியுடன், வட்ட மேசையில் இணைந்து விட்டார். டக்ளஸ் தேவானந்தாவுடன்... பின்கதவு பேச்சுவார்த்தை நடக்கின்றதாம். சங்கு கூட்டணியை ... தொண்டை கிழிய திட்டித் தீர்த்தவர்களும், கை உழைய, கேலிச் சித்திரம் வரைந்த @Kavi arunasalam மும்... தலையை... எங்கே புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் அனாதைகளான... "வெத்து வேட்டுக்கள்" எல்லாம் ஒன்றாக சேர்ந்த தருணம் இது. தேர்தலில் சுமந்திரன் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. வெட்கம் கெட்டதுகள், ரோச நரம்பு அறுந்ததுகள்.... எல்லாம் வட்ட மேசையில் ஒட்டி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்குதுகள் "அலுவோசுகள்". ஆக இவர்கள்... தமது பதவியை பெற, எந்த நரக வேலையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இவர்களுக்கு வெள்ளை அடித்து.. செம்பு தூக்கும் கூட்டத்திற்கு, அறிவு எங்கே போனது.- காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல்
காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல் 01 Feb, 2026 | 03:38 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருபவருமான ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை 2023 ஆம் ஆண்டு முதல் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த யுவதி காலை முதல் இரவு 8.30 மணி வரை, 2025 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளார். அவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அலுவலகத்தில் தனியாக பணியாற்றிக் கொண்டிருந்த யுவதிக்கு, குறித்த சட்டத்தரணி மதிய உணவு பொட்டலமொன்றை வழங்கி உணவுகொள்ளுமாறு கூறியுள்ளார். அதை உணவாக எடுத்த சில நிமிடங்களில் யுவதி மயக்க நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யுவதியின் சம்மதம் இன்றி, சட்டத்தரணி அலுவலகத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர், யுவதி இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கும் எவருக்கும் தெரிவிக்காமல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி யுவதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் பேசிச் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் யுவதி வாந்தி மற்றும் மயக்க நிலை காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 12 வாரங்கள் கொண்ட, மூன்று மாத கர்ப்பிணி என உறுதிப்படுத்தியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவர் யுவதியுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, யுவதி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், பிரதேச செயலக சேவையில் இயங்கும் மகளிர் பிரிவினர் யுவதியை பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சு பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, யுவதியிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிசார் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்றபோது, ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (28) யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிசார் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக பலாத்கார பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டு, அடுத்த வழக்கை 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், குறித்த சட்டத்தரணி வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிராளி சார்பில் சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் தலைமையில் நான்கு சட்டத்தரணிகளும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையில் யோகேஸ்வரன், கமலதாசன், வேணுதாசன், நஜீபா, ரம்சீயா உள்ளிட்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர். இரவு 7.30 மணி வரை நீண்ட விசாரணையின் பின்னர், நீதவான் குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, எதிராளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், இலங்கை சட்டத்தின் படி சம்மதம் இருந்தால் குற்றமாகாது எனவும் தெரிவித்தார். எனினும், முறைப்பாட்டாளர் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக கூறினார். 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் கட்டாய விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனை அவசியம் என்றும், இவ்வழக்கில் 16 வயதுக்கு மேற்பட்டவர் மூன்று மாதங்கள் கழித்து முறைப்பாடு செய்துள்ளதால் மேலதிக விசாரணைகள் அவசியம் என்பதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237555- நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்
நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம் 01 February 2026 ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. வடபகுதியின் முக்கிய விளையாட்டு மையமாகத் திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கான விஜயம், அப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரினை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், இலங்கை முழுவதும் கிரிக்கெட் உணர்வை மேம்படுத்தவும் இந்த கிண்ணச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய விஜயம் இரவு யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் நிறைவடையும். முற்பகல் 07:30 - தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பம் முற்பகல் 08:30 - மிஹிந்தலை முற்பகல் 10:30 - வவுனியா நண்பகல் 12:00 - கிளிநொச்சி பிற்பகல் 03:30 - யாழ்ப்பாணத்தில் வரவேற்பு பிற்பகல் 04:25 - நல்லூர் பிற்பகல் 06:20 -துரையப்பா விளையாட்டு அரங்கம் பிற்பகல் 06:40 -யாழ்ப்பாணக் கோட்டை பிற்பகல் 07:10 -யாழ்ப்பாணம் பொது நூலகம் https://hirunews.lk/tm/sports/443905/from-nallur-to-the-library-the-world-cup-adorns-the-land-of-jaffna- சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார். கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான், கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள். கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள். அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக…. என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை. ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி, சிலையாக்கி, திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார். அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது. ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது. அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல, அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல. அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள். தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை. இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது. ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம், இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539- தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்
தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம் adminFebruary 1, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான காவல்துறையினா் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/228132/- யாழில். மாவைக்கு சிலை திறப்பு
வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை adminFebruary 1, 2026 மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடமாகாண ஆளுநரால் நேற்றைய தினம் சனிக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்: மாவை.சேனாதிராசாவை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் திகழ்ந்தார். நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/228116/- தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு adminFebruary 1, 2026 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் தொடர்பு கொண்டு, கடலில் நடக்கும் அத்துமீறல்களை நேரலையாகக் காண்பித்துள்ளார். தூதரக அதிகாரி படகின் இலக்கத்தைக் கேட்டபோது, இந்திய மீனவர்கள் தமது படகின் இலக்கத்தை வேண்டுமென்றே அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தாக்குதல் மற்றும் அத்துமீறல் தொடர்பான காணொளி ஆதாரங்கள் முறைப்பாடாக இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அரங்கேறும் இவ்வாறான அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வடபகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.”வீடியோ கோல்” மூலம் பெறப்பட்ட நேரடி ஆதாரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில், இந்திய துணைத்தூதரகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளின் பட்டியலை தமிழக கடலோர அதிகாரிகளிடமிருந்து பெற்று, சம்பந்தப்பட்ட படகை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்திய எல்லைகளைத் தாண்டி அத்துமீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைத்தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த கடற்படையினர் அதிவேகப் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். அத்துமீறி நுழையும் படகுகளைக் கண்டறியும்போது அவற்றை விரட்டியடிக்க அல்லது கைது செய்யத் தேவையான உத்தரவுகள் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறும் கடற்படை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து விரைவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/228114/- உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு!
உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! adminFebruary 1, 2026 தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ‘Gold Street’-இல் தங்கம், வைரம் மற்றும் உயர்தர ஆபரணங்களுக்கான சிறப்பு வணிக வளாகங்கள், பாரம்பரியமும் நவீனமும் இணையும் வடிவமைப்புகள், சர்வதேச வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வசதிகள், தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தும் அமைப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உலக தங்க சந்தையில் டுபாயின் பங்கை மேலும் விரிவுபடுத்தும் இந்த முயற்சி, தங்கம்–ஆபரணத் துறையில் புதிய முதலீடுகள், சர்வதேச வர்த்தக வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228133/- திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
முல்லைத்தீவில் பதிவான நிலநடுக்கத்தின் நேரடிக் காட்சி. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1430498755323451 👈- கருத்து படங்கள்
- திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462483- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியும் நாங்கள், பேரம்பேசும் சக்தியும் நாங்களே என்று தெனாவெட்டாக எழுபத்தாறு ஆண்டுகள் வீணானதே. அதுதான் தென்னிலங்கை கட்சிகள் தமிழரிடம் காட்சிகள் அரங்கேற்ற காரணம். மக்களை பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள், மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று வழி காட்டியவர்களும் இவர்களே. அதன்மூலம் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்ததா இவர்களால்? சும்மா மக்களை குற்றம் சொல்வது இவர்களின் வழமை. இவர்களும் தவறானவர்களை தெரிந்தெடுக்க மக்களை தூண்டியிருக்கிறார்களல்லவா? இந்த முறை மட்டுமே மக்கள் இவர்களின் தெரிவுக்கு செவிசாய்க்கவில்லை, மற்றைய தெரிவுகளுக்கு இவர்களும் பொறுப்பே. இவற்றின்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்கு இவர் சாதித்தது என்ன? ஒன்றாக இருந்த கட்சியை சிதைத்ததை தவிர. இருந்த இடத்திலிருந்து, இன்று தையிட்டிவரை முன்னேறியிருக்கிறது இவரின் சட்டத்துறை நிபுணத்துவம் சாதித்தது என்ன?- சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்
செரெண்டிபை அதிரவைத்தது சென் மேரிஸ்; மீண்டும் நியூ ஸ்டார் ஹீரோவானார் பஸால் 01 Feb, 2026 | 07:51 AM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் யாழ். நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. இரண்டு அணிகளும் எதிர்த்தாடுவதிலும் தடுத்தாடுவதிலும் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சென். மேரிஸ் கழக வீரர்கள் முந்தைய போட்டிகளிலும் பார்க்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடினர். அதுவே அவர்களது வெற்றியில் பிரதான பங்காற்றியது. இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னர் 50ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஃப்ரிம்ப்பொங் யாவ் கோல் ஒன்றைப் போட்டு செரெண்டிபை முன்னிலையில் இட்டார். ஆனால், சென் மேரிஸ் வீரர்கள் திறமையாக விளையாடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் நிலையை சமப்படுத்தினர். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வலதுபுற முன்கள மாற்று வீரர் எம். மேரிசன் மிகவும் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்று எம். பிரேம்குமாருக்கு பரிமாறினார். எம். பிரேம்குமார் மிகவும் பலமாக உதைத்து கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார். பஸால் மீண்டும் ஹீரோவானார், மஞ்சள் அட்டைக்கும் இலக்கானார் நியூ ஸ்டார் கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் இடையில் இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் சொலிட் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் எம்.என்.எம். பஸால் உபாதையீடு நேரத்தில் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்து ஹீரோவானார். ஆனால், வெற்றிக்களிப்பில் ஜேர்சியைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. இடைவேளை முடிந்த பின்னர் 48ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷஹிர் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து சொலிட் கழகம் சார்பாக ஹென்றி சிபுயேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார். அதன் பின்னர் போட்டியில் சூடு பிடிக்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. உபாதையீடு நேரத்தின்போது பஸால் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்தார். https://www.virakesari.lk/article/237503- ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி! Feb 1, 2026 - 09:26 AM நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர். அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர். இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது. இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர். எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை. எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cml37lycs04owo29nbuyyy2m5- கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237510- இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி!
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாக கையளிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் யாவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படஉள்ளன. பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்களாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலாக இந்திய ரூபாய் 12,33,604 (பன்னிரண்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூற்று நான்கு) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது இலங்கை ரூபாய் ஏறத்தாழ 42,50,000க்கு (நாற்பத்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) சமமானதாகும். நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே பொலிஸில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர். இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cml2cjlrq04ojo29nj8dugjyv- துடுப்பாடும் ஆனந்தி -இளங்கோ
இது உண்மைக்கதையா?- நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!
நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை! Published By: Digital Desk 1 01 Feb, 2026 | 08:58 AM (நமது நிருபர்) வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237504 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.