Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. எங்களுடைய சனத்துக்கு... தாங்கள் மேதாவிகள் என்ற நினைப்பு. தெரிந்தவன் நல்லதுக்கு சொல்வதையும்... கேலி செய்வது, தமிழரில் ஒரு கெட்ட குணம்.
  3. சீனாவின் உயர்மட்ட ராணுவ தளபதி நீக்கம்: போர் தயார்நிலை கேள்விக்குள்ளாகிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,75 வயதான ஜாங் யூக்ஸியா, மத்திய ராணுவ ஆணையத்தின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார் கட்டுரை தகவல் ஸ்டீபன் மெக்டொனெல் சீனா செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) உயர்மட்டத் தலைமை நிலைகுலைந்துள்ளது. சீனாவின் உயர்மட்டத் தளபதி ஜாங் யூக்ஸியா மற்றும் மற்றொரு மூத்த ராணுவ அதிகாரி ஜெனரல் லியு ஜென்லி ஆகியோர் வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சீனாவில் அரங்கேறி வரும் இதுபோன்ற உயர்மட்ட அதிகாரப் போராட்டங்களைத் தூண்டியது எது என்பது குறித்தும், இது சீனாவின் போரிடும் திறனுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் – குறிப்பாக தைவானை பலவந்தமாகக் கைப்பற்றும் லட்சியம் அல்லது மற்றொரு பெரிய பிராந்திய மோதலில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் – கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 75 வயதான ஜாங், மத்திய ராணுவ ஆணையம் அல்லது சிஎம்சியின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார். நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக் குழு, ஆயுதப் படைகளை கட்டுப்படுத்துகிறது. பொதுவாக ஏழு நபர்களைக் கொண்ட சிஎம்சி, இப்போது வெறும் இரண்டு உறுப்பினர்களாக (ஷி மற்றும் ஜெனரல் ஜாங் ஷெங்மின்) குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் முந்தைய தடுப்புக் காலங்களைத் தொடர்ந்து "ஊழல் எதிர்ப்பு" ஒடுக்குமுறையில் வீழ்த்தப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான ராணுவ பணியாளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு சிஎம்சி-க்கு உள்ளது. இந்த அமைப்பு (மத்திய ராணுவ ஆணையம்) எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், டெங் சியோ பிங் சீனாவின் முழுமையான ஆட்சியாளராக இருந்தபோது அவர் வகித்த ஒரே பதவி இதனுடைய தலைவர் பதவிதான். ஷி மற்றும் ஒரு சிஎம்சி ஜெனரல் மட்டுமே எஞ்சியிருப்பது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு என்று ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த லில் மோரிஸ் கூறுகிறார். "மக்கள் விடுதலை ராணுவம் குழப்பத்தில் உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார், சீனாவின் ராணுவம் இப்போது "பெரிய தலைமை வெற்றிடத்தை" கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வளவு மூத்த ஜெனரல்களை அகற்றுவதற்கு உண்மையில் என்ன காரணம் என்று கேட்டபோது, "நிறைய வதந்திகள் சுற்றி வருகின்றன. இந்த நேரத்தில், எது உண்மை மற்றும் எது பொய் என்பது எங்களுக்குத் தெரியவில்லை... ஆனால் இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கும், பிஎல்ஏ மீதான அவரது தலைமை மற்றும் கட்டுப்பாட்டுக்கும் மோசமானது", என்று அவர் கூறினார். சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் சோங் ஜா இயான், ஜெனரல் ஜாங்கின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அதைப் பற்றி நிறைய ஊகங்கள் இருப்பதாகவும் கூறினார். "அமெரிக்காவுக்கு அணு ரகசியங்களை கசியவிடுவது முதல் சதி திட்டமிடுவது மற்றும் பிரிவு சண்டைகள் வரை . பெய்ஜிங்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூட வதந்திகள் உள்ளன," என்றார். "ஆனால், ஜாங் மற்றும் லியூவின் வீழ்ச்சியும், இந்தத் தீவிர ஊகங்களும் இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டுகின்றன: ஒன்று, ஷி இன்னமும் அசைக்க முடியாதவராக இருக்கிறார்; மற்றொன்று, பெய்ஜிங்கில் தகவல்களுக்கு குறிப்பிடத்தக்க வரம்புகள் உள்ளன, இது நிச்சயமற்ற தன்மையைத் தூண்டி, இந்த ஊகங்களுக்கு வழிவகுக்கிறது." ஜெனரல்கள் ஜாங் மற்றும் லியு ஆகியோர் 'விசாரணையில்' இருப்பதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவர்கள் 'ஒழுக்கம் மற்றும் சட்டத்தை கடுமையாக மீறியதாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது; இது ஊழலைக் குறிப்பதற்கான ஒரு நயமான சொல்லாடலாகும். பின்னர் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA Daily) அதிகாரப்பூர்வ நாளிதழ் இதனை ஒரு தலையங்கத்தில் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியது. அதில், இந்த நடவடிக்கை ஊழலைத் தண்டிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 'சற்றும் சகிப்புத்தன்மையற்ற' அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும், 'யாராக இருந்தாலும் அல்லது எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்' அவர்களுக்குத் தண்டனை உறுதி என்றும் எழுதப்பட்டிருந்தது." இந்தத் தளபதிகள் அனைவருக்கும் எதிராகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை, ஒருவேளை ஒருபோதும் வெளியிடப்படாமலும் போகலாம். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகப் பெயரிடப்பட்டிருப்பது, குறைந்தபட்சம் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதையே ஏறக்குறைய உறுதியாகக் குறிக்கிறது. பிஎல்ஏ டெய்லி பத்திரிகையின் தலையங்கம் ஏற்கெனவே ஜாங் யூக்ஸியா மற்றும் லியு ஜென்லி ஆகியோரை குற்றவாளிகளைப் போலவே சித்தரித்துப் பேசியது. அவர்கள் "கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் கடுமையாகத் துரோகம் செய்துவிட்டனர்" என்றும், "மத்திய ராணுவ ஆணையத்தை மிதித்து அதன் அதிகாரத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்திவிட்டனர்" என்றும் அது குறிப்பிட்டிருந்தது. ஜெனரல்களை குறிவைக்கப்படுவது ஊழல் பற்றியதாக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சுத்திகரிப்புகள் நடந்த விதத்தைப் பார்க்கும்போது, இது அதிகார அரசியல் பற்றியதாகவும் இருக்கலாம். ஷி ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபோது சீனாவில் நிச்சயமாக ஊழல் பிரச்னை இருந்தது, ஆனால் அந்த நாட்டின் அதிபர், தனது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தி, கட்சியின் அஞ்சப்படும் ஒழுங்கு ஆய்வுக் குழுக்களைப் பயன்படுத்தி, தனக்கு அரசியல் போட்டியாளர்களாக வரக்கூடியவர்களையும், அல்லது அரசாங்கப் பதவிகளில் இருந்துகொண்டு தன்னிடம் முழு விசுவாசத்தைக் காட்டாதவர்களையும் ஒழித்துக்கட்டுகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பொதுச் செயலாளர் ஷி-க்கு, தலைவர் மாவோ காலத்திலிருந்து காணப்படாத ஒரு நிகரற்ற கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த வகை தலைமை எதிர்விளைவாகவும் இருக்கலாம். உதாரணமாக, ராணுவத்தில், சந்தேகத்தின் சூழல் எச்சரிக்கையான, பலவீனமான முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும். ஜாங் யூசியாவின் தந்தை, ஷி ஜின்பிங்கின் தந்தையின் ஒரு புரட்சிகரத் தோழராக இருந்தார். அந்தத் தளபதிக்கு ஷியுடன் நீண்டகாலப் பழக்கம் உண்டு. சமீபத்திய குழப்பங்களுக்கு முன்பு அவர்கள் நெருங்கிய கூட்டாளிகளாகக் கருதப்பட்டனர். யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற நம்பிக்கை, இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கலாம். சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் போர்க்கள அனுபவம் கொண்ட ஒரு சில மூத்த அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்பதால், அவரது இழப்பு ராணுவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு அவரது நீக்கம் ஷி ஜின்பிங்குக்கு நீண்ட காலப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது என்று மோரிஸ் கூறுகிறார். ஷி ஜின்பிங் மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கலாம், ஆனால் இந்த குழப்பம் தொடர்ச்சியான உராய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். "இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கு ஒரு மோசமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும், வரும் ஆண்டுகளில் ஷி ஜின்பிங்குக்கும் அவரது தலைவர்களுக்கும் – குறிப்பாக மக்கள் விடுதலை ராணுவத்தில் – குறிப்பிடத்தக்க கொந்தளிப்பு ஏற்படப் போகிறது என்று நான் நினைக்கிறேன்." மிக மூத்த தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் மீதும் கவனத்தை திருப்புகிறது. அடுத்தது யார் என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கலாம். தங்களுக்கு மேலிருந்தவர்களின் கதியைக் கருத்தில் கொண்டு, ஷி ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்புப் பார்வை எந்த நேரத்திலும் தங்கள் மீது பாயக்கூடிய அந்த அபாயகரமான பகுதிக்கு பதவி உயர்வு பெறுவதையும் அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். மேலும், இந்தச் சம்பவங்கள் அனைத்தும், தைவான் மீது பெய்ஜிங் அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு நேரத்தில் நிகழ்ந்துள்ளன. ஒரு முழுமையான தாக்குதல் மூலம் அந்த தன்னாட்சித் தீவை கைப்பற்றுவோம் என்று சீனா அச்சுறுத்தி வருகிறது. இந்த நீக்கங்கள் அத்தகைய சாத்தியத்தை எவ்வளவு தடுத்தன என்பதை ஆய்வாளர்கள் எடைபோடுவார்கள். "இந்த சுத்திகரிப்பு, தைவானை கட்டுப்படுத்தும் சீனாவின் லட்சியங்களைப் பாதிக்காது. அது ஒட்டுமொத்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குறிப்பாக ஷி-க்கும் பொருந்தும்," என்கிறார் பேராசிரியர் சோங். கூடுதல் தகவல் சேகரிப்பு பிபிசி-யின் இவெட் டான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdex0kn6nwgo
  4. இதையும் யாழ் புரபசர்சொன்னவராம் ....சன்ம் பைத்தித்யக்கார...பட்டம் சூட்டினவையாம்..
  5. அப்படியே ..இலங்கை அணியையும் அழைத்து ...கடைசி...சந்தோசத்தை கொண்டாடுங்கப்பா...இதுவும் அனுராவின் தஆட்சியில் ...வழங்கப்பட்ட சலுகை ...கொண்டாடுங்க..
  6. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1239508898275962 👈 உங்களை நோக்கி அவன் சுடுவதற்காக துப்பாக்கியை நீட்டுவதில் என்ன தவறு? இந்த லட்சணத்திலதான் கச்சதீவை கேட்கிறீர்கள்... கடல் வளத்தை வகைதொகையின்றி அழித்துவரும் இந்திய இழுவை மடிப் படகுகள், யாழ்ப்பாணம் நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையேயான கடற்பகுதியில் ஆத்துமிறிய மீன்டியில் தினமும் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்றிரவு யாழ் மீனவர்களிடம் ஒரு படகு பிடிபட்டுள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்பை மீறி எவ்வாறு இந்திய இழுவை மடிப்படகுகள் தீவகத்துக்குள் நுழைகின்றதன? இலங்கை வடபிராந்திய கடற்படை என்ன நித்திரை கொள்கிறதா? நேற்றிரவு நயினாதீவு கடலில் உள்நுளைந்த இந்திய இழுவை மடிப்படகுகளை நேரடியாக வீடியோ கோல் மூலம் யாழ்ப்பாண இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நயினாதீவு மீனவர்களால் காண்பிக்கப்பட்டது. (முகநூலில் இருந்து.)
  7. ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....
  8. பாகிஸ்தான் லிளையாடுவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
  9. Today
  10. சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான்,கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள்.கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக….என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை.ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி,சிலையாக்கி,திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில்,நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார்.அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது.ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது.அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல,அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல.அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள்.தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை.இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது.ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம்,இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539
  11. இவருக்கு சொல்லிப் போட்டுத் தான் மோடி போயிருப்பாரோ? அல்லது இவரும் சேர்ந்து போனாரோ?
  12. அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு! யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர். https://athavannews.com/2026/1462549
  13. சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்! சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1462572
  14. இந்தப் படத்தைப் பார்த்ததும் அனுராவுக்கு இன்னும் பக்தைகள் வரப் போகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் அனுராவுக்கே சந்தோசமாக இருக்கும்.
  15. இதுவரையில் போட்டியில் இணைந்தவர்கள் எத்தனை பேர்?கிரிக்கட்டை நுனி விரலில் லவத்திருக்கும் @பையன் இணைந்து விட்டாரா?
  16. 2012 டிச 07 அன்று பாராளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், அவர்கள் மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போனார்கள் என்றும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் எக்காரணம் கொண்டும் வெளியேறவேண்டும் என்ற கொள்கை தமது கட்சிக்கு என்றைக்கும் இல்லையென்று, எந்த கூச்சமுமில்லாமல் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தமிழ் அரசியல் அரங்கில் ஞாபகசக்தி கம்மியானவர்களுக்கு பழைய செய்தியே, இருந்தும் தாக்கம் தமிழினத்துக்கு மிக மோசமானது என்ற உணர்வின் பிரதிபலிப்பே இந்த பதிவு. BBC News தமிழ்'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்'...நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளை கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சம்பந்தன்.'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள் 18 டிசம்பர் 2019 இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை. அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது. "மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்கள் எதிர்பார்ப்பும் ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ஷசவும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வெளி விவகார அமைச்சர் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில் இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் End of அதிகம் படிக்கப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.அந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம் அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன? முல்லைத்தீவில் வெடித்தது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா? இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஜப்பான், போன்ற நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதிகார பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என்று. அந்த நாடுகளும் தங்களுடைய கருத்தகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது.உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். பட மூலாதாரம்,Str ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்ன விதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வெண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்தவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாகக் கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
  17. காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவரை ஏன் எதிர்க்கத் தொடங்கினார்கள்? இந்த எதிர்ப்பை காந்தி எப்படி கையாண்டார்? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு கஸ்தூரிபா அந்த மகளை எப்படி ஏற்றுக்கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி குஜராத்தி காந்திய இலக்கியங்களைப் ஆய்வு செய்ததோடு, தத்தெடுக்கப்பட்ட அந்த மகளின் குடும்பத்தில் இன்று உயிருடன் இருக்கும் உறுப்பினர்களிடமும் பேசியது. காந்தியின் வளர்ப்பு மகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள, நாம் வரலாற்றைப் புரட்ட வேண்டும். காந்தி ஜனவரி 9, 1915 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் மும்பையில் கால் பதித்தபோது, ஒரு தேசிய வீரரைப் போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 'டால்ஸ்டாய்' மற்றும் 'பீனிக்ஸ்' போலவே இந்தியாவிலும் ஒரு நிறுவனம் அல்லது ஆசிரமத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மே 25, 1915 அன்று, காந்தி ஆமதாபாத்தில் 'சத்யாகிரக ஆசிரமத்தை' நிறுவினார். இது இன்று 'கோச்ரப் ஆசிரமம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆமதாபாத்தில் காந்தி குடியேற உதவியவர்களில் ஜீவன்லால் பாரிஸ்டரும் ஒருவர். கோச்ரப்பில் உள்ள அவரது வீட்டை ஆசிரமத்திற்காக வாடகைக்கு எடுக்க காந்தி முடிவு செய்தார். தனது சுயசரிதையான 'சத்திய சோதனை'யில் காந்தி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் ஆசிரமத்தில் 13 தமிழர்கள் இருந்ததாக எழுதியுள்ளார். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து தமிழ் குழந்தைகளும் வந்திருந்தனர். சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஆசிரமம் தொடங்கியது. "அனைவரும் ஒரே சமையலறையில் சாப்பிட்டோம், ஒரே குடும்பமாக நடந்து கொள்ள முயற்சித்தோம்" என்று காந்தி எழுதியுள்ளார். இருப்பினும், ஆசிரமம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே காந்திக்கு ஒரு கடுமையான சோதனை காத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தல் கருதப்பட்ட பிரிவினரில் ஒரு குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்தி ஒரு முன்மாதிரியை உருவாக்க காந்தி விரும்பினார். எனவே, ஆசிரமத்தில் வசிக்க விருப்பமுள்ள அத்தகைய குடும்பங்களைத் தேடினார். பட மூலாதாரம்,BHIKHUBHAI DAFDA படக்குறிப்பு,காந்தி துதாபாய் தஃப்டாவின் குடும்பத்துடன். லட்சுமி வலதுபுறத்தில் குடும்பத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்த தலித் மகள் லட்சுமி காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி, பழங்குடி சமூகங்களிடையே கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாடுபட்ட அமிர்தலால் தக்கர் (தக்கர் பாபா) என்பவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர், "ஒரு ஏழ்மையான மற்றும் நேர்மையான அந்தியஜ (தலித்) குடும்பம் உள்ளது. அவர்கள் உங்கள் ஆசிரமத்திற்கு வந்து வாழ விரும்புகிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று எழுதியிருந்தார். காந்தி தனது சுயசரிதையில், "தக்கர் பாபாவின் பரிந்துரையுடன் வரும் அந்தக் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தை என் தோழர்களிடம் வாசித்துக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றனர். அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் விதிகளைப் பின்பற்றத் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று நான் அமிர்தலால் தக்கருக்குத் தகவல் அனுப்பினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். துதாபாய் செப்டம்பர் 6, 1915 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் ஆசிரமத்தில் சேர விரும்புவதாகவும், அதன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக, செப்டம்பர் 11, 1915 அன்று துதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் பெண் குழந்தையான லட்சுமி ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்தனர். பின்னர் செப்டம்பர் 26 அன்று அவர்கள் ஆசிரமத்தில் குடியேறினர். துதாபாய் தற்போதைய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவராஜியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் போடாட் நகரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் அவரது வருகையோடு, ஆசிரமத்தில் சிக்கல் தொடங்கியது. "ஆதரவாக இருந்த நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பங்களா உரிமையாளருக்குப் பங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது." "அந்த நபர் மீது எங்கள் தண்ணீர் தெளித்தால் கோபப்படுவார். அவர் துதாபாயைத் திட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினார். அனைவரிடமும் அந்த வசவுகளைப் பொறுத்துக்கொண்டு, உறுதியுடன் தண்ணீர் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்"என்று காந்தி பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த நபர் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஆசிரமத்தில் மற்றொரு பிரச்னை உருவானது. பட மூலாதாரம்,HITESH DAFDA படக்குறிப்பு,காந்தி தனது வளர்ப்பு மகள் லட்சுமியுடன் ஆசிரமத்திற்கு கிடைத்து வந்த நிதி உதவி நின்றது. "ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு அந்தியஜர்கள் (தலித் மக்கள்) உள்ளே நுழைவதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த அந்தச் சகோதரருக்கு, அவர்கள் ஆசிரமத்திற்குள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. நிதி உதவி நின்றது. சமூகப் புறக்கணிப்பு பற்றிய வதந்திகள் என் காதுகளை எட்டின. புறக்கணிக்கப்பட்டு எந்த ஆதரவும் இல்லாமல் போனாலும், நாங்கள் ஆமதாபாத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று என் தோழர்களிடம் சொன்னேன். நாங்கள் அந்தியஜவாடாவுக்கே (தலித் மக்கள் வசிக்கும் பகுதி) சென்று அவர்களுடனேயே வாழ்வோம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்தோ அல்லது உழைத்தோ பிழைத்துக்கொள்வோம்," என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். நிதி உதவி நின்ற பிறகு, ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் செலவுகளைக் கவனித்து வந்த காந்தியின் மருமகன் மகன்லால் காந்தி, "அடுத்த மாத ஆசிரமச் செலவுகளைச் சமாளிக்க நம்மிடம் பணம் இல்லை"என்று காந்திக்கு ஒரு தகவலைத் தந்தார். மகன்லால் காந்தி, காந்தியின் மாமா ஜீவன் சந்தின் மகனான குஷால் சந்தின் மகன் . காந்தியைப் போலவே அவரும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஆனால் அங்கு தொழில் செய்யாமல், காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார். மகன்லால் காந்தியின் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக , "அப்படியானால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று காந்தி எழுதியுள்ளார். மேலும், "இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கு வருவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும், 'ஷாம்லா' (கடவுள்) கடைசி நிமிடத்தில் உதவியை அனுப்பியிருக்கிறார்" என்று எழுதியுள்ளார். மகன்லால் அந்தத் தகவலைச் சொன்ன உடனேயே, ஒரு நாள் காலை ஒரு குழந்தை ஓடிவந்து காந்தியிடம், "ஆசிரமத்திற்கு வெளியே ஒரு கார் நிற்கிறது. ஒரு வணிகர் உங்களை அழைக்கிறார் என்று கூறியது. இதனைக் குறித்து காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் அந்த நபரை அணுகினேன். அவர் என்னிடம், "நான் ஆசிரமத்திற்கு உதவ விரும்புகிறேன், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் தற்போது நான் பெரும் நெருக்கடியில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். "மறுநாள் சந்திப்பதாக அவர் கூறிச் சென்றார். அடுத்த நாள், அந்த வணிகர் காந்தியிடம் வந்து 13,000 ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்." பட மூலாதாரம்,Getty Images கஸ்தூரிபாவின் எதிர்ப்பு ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பம் தங்குவது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் ஒருவர். லட்சுமியின் சகோதரர் மோகன்பாய் தஃப்டாவின் மகனான பிகுபாய் தஃப்டா, பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கஸ்தூரிபா கோபமாக இருந்தார். எனவே என் தாத்தா துதாபாய், காந்தியிடம் தாங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். ஆனால் காந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அனைத்தையும் மௌனமாக பொறுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்"என்றார். காந்தி தனது 'அக்ஷர்தேக்' நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். "துதாபாய் ஆசிரமத்திற்கு வந்த அன்று, தென்னாப்பிரிக்கா சத்யாகிரகத்தில் பங்கேற்ற சந்தோக் மகன்லால் காந்தி விரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சந்தோக் சாப்பிடாததால் நானும் சாப்பிடவில்லை. கஸ்தூரிபாவிற்கும் இது பிடிக்கவில்லை, அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரமத்தின் மற்ற சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்." காந்தி கஸ்தூரிபாவிடம், "நீ என்னை விட்டு பிரிந்து செல்லலாம், நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்" என்று கூறிவிட்டார். செப்டம்பர் 24 அன்று சந்தோக்கும் மகன்லாலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 3 அன்று மீண்டும் திரும்பினர். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறவில்லை. ஆசிரமவாசிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க காந்தி 'உண்ணா விரதம்' என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி எப்போதும் கஸ்தூரிபாவுக்கு நிலைமையை விளக்குவார், ஆனால் பா (கஸ்தூரிபா) சோர்ந்து போவார். அவர் கண்களில் கண்ணீர் வழியும், ஆனாலும் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில், காந்தியின் மூத்த சகோதரி ரலியத்பென்னும் ஆசிரமத்தில் வசித்து வந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த அவருக்கும், துதாபாயின் குடும்பம் ஆசிரமத்தில் தங்குவது பிடிக்கவில்லை. முதலில், அவர்கள் தனிச் சமையல் வேண்டும் என்று கோரினர், ஆனால் காந்தி அதை நிராகரித்தார். இதனால் அவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அவர் ராஜ்கோட்டிற்குச் சென்றார், அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்து கொடுத்தார். காந்தி கஸ்தூரிபாவிடமும், நீயும் ரலியத்பென் போலவே ராஜ்கோட்டிற்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் கஸ்தூரிபா, "அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை நீங்கள் பிரிக்க நேரிடும். நான் உங்களைப் பிரிந்து செல்ல மாட்டேன்," என்று கூறிவிட்டார். இறுதியாக, காந்தியின் கோரிக்கையை பா ஒப்புக்கொண்டார். பின்நாட்களில், லட்சுமியின் தலைமுடியைச் சீவி, குளிப்பாட்டி அவரை பா தயார் செய்வார். ஆரம்பத்தில் காட்டிய வெறுப்பிற்குப் பதிலாக, லட்சுமியின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் கஸ்தூரிபா. பட மூலாதாரம்,ROLI BOOKS லட்சுமியை தத்தெடுத்த காந்தி இறுதியாக, எதிர்ப்புகளை சமாளிக்க லட்சுமியைத் தத்தெடுக்க காந்தி முடிவு செய்தார். அக்டோபர் 5, 1920 அன்று காந்தி லட்சுமியைத் தத்தெடுத்தார். அப்போது லட்சுமிக்கு சுமார் ஆறு வயது. அடுத்த 14 ஆண்டுகள் லட்சுமி காந்தியுடன் இருந்தார். லட்சுமி திருமண வயதை அடைந்ததும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க காந்தி முடிவு செய்தார். இதற்காக, ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் பிராமணரான மாருதி சர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார். மாருதி சர்மா விழித்திரை தொடர்பான பணிகளைச் செய்யும் ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். "அவர்களது திருமணத்தின் போது காந்தி எரவாடா சிறையில் இருந்தார். எனவே, காந்தி இல்லாத நிலையில், காந்தி ஆசிரமத்திற்கு எதிரே இருந்த சிவப்பு பங்களாவில் திருமணம் நடந்தது. பிரபல இசைக்கலைஞர் நாராயண் கரே லட்சுமிக்குச் சீர் செய்தார்"என்று பிகுபாய் தஃப்தாவின் மகன் ஹிதேஷ்பாய் தஃப்தா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார். முன்னதாக, காந்தி சிறையில் இருந்ததால் லட்சுமியின் திருமணம் தள்ளிப்போனது. காந்தி நேரில் இல்லாமல் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என லட்சுமி மறுத்து வந்தார். ஆனால், இந்த முறை காந்தி இல்லாத போதும் லட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகனுக்கு ஹரிபாய் சர்மா என்றும், மகளுக்கு கல்பனாபென் என்றும் பெயரிடப்பட்டது. ஹரிபாய் சர்மா, ரஸிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிநேக் என்ற மகள் உள்ளார். ஹரிபாய் சர்மா தற்போது உயிருடன் இல்லை. மாருதி சர்மா 1946-ல் காலமானார். லட்சுமிபென் 32 வயதிலேயே கணவரை இழந்தார். ஆனால், காந்தியின் பெயரைச் சொல்லி அவர் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். "அவர் ஒரு மில்லில் வேலை செய்தார், பின்னர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார்," என்று ஹிதேஷ் சர்மா கூறுகிறார். லட்சுமிபென் ஷர்மாவின் மகன் ஹரிபாய் சர்மா இறந்துவிட்டாலும், அவரது மனைவி ரஸிலாபென் சர்மா இன்றும் உயிருடன் இருக்கிறார். பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரஸிலாபென் சர்மா, "அவர் எளிமையை விரும்பினார். காந்தியின் கருத்துகளின்படி வாழ விரும்பினார்," என்று கூறினார். "எனக்கு 1978-ல் திருமணம் நடந்தது, அவர் 1984-ல் இறந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த காலம் மிகக் குறைவு, ஏனெனில் அவர் காந்தி ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார்." காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அவர் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை? இந்தக் கேள்விக்கு ரஸிலாபென் பதிலளிக்கையில், "அவர் அரசியலில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தார். ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. எப்போதும் காதி ஆடைகளையே அணிந்தார், காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்குச் சேவை செய்வதிலும் காந்திய சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்," என்றார். பட மூலாதாரம்,HITESH DAFADA படக்குறிப்பு,காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி 1984ஆம் ஆண்டு காலமானார் தஃப்டா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவரது கணவர் மாருதி சர்மா இறந்த பிறகு, லட்சுமி தனது வாழ்வாதாரத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். ஒரு நாள், அவர் படிக்கட்டில் வழுக்கி விழுந்ததால், கடினமான வேலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். லட்சுமிபென்னின் மகன் ஹரிபாய் சர்மா குஜராத் காதி வாரியத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணியாற்றி வந்தார். காந்திக்கு ஹரிபாய் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஹரிபாய் குழந்தையாக இருந்தபோது காந்தி அவருடன் விளையாடுவார். காந்தி உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியைத் தன்னுடன் வந்து தங்குமாறு (பிறந்த வீட்டிற்கு வருவது போல) அழைப்பார். கஸ்தூரிபாவின் மறைவுக்குப் பிறகும் காந்தி இந்த வழக்கத்தைத் தொடர்ந்தார். லட்சுமிபென்னை எப்போதும் கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொல்வார். காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி லட்சுமியைப் பெரிதும் உலுக்கியது. டெல்லிக்குச் செல்ல அவரிடம் போதிய வசதிகள் இல்லாததால், நான்காவது நாளில் தான் அவர் டெல்லியை அடைந்தார். பின்னர் அவரது அஸ்தியுடன் பிரயாகைக்குச் சென்றார். கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்த்த அவர், ஜனவரி 31, 1984 அன்று காலமானார். அவர் இறக்கும் போது, அவரது கடைசி விருப்பத்தின்படி காந்தி ஆசிரமத்திலேயே வசித்து வந்தார். லட்சுமிபென்னின் இரண்டாவது சகோதரி சந்திரிகாபென்னின் மகன் நரேந்திரபாய் கோஹில், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அவர் இறுதிவரை காந்தி ஆசிரமத்தின் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். பஜனைகள் பாடுவார், ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்வார். காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை"என்றார். "அவர் இறுதிவரை காதி ஆடைகளையே அணிந்தார். அவரது குழந்தைப் பருவமும் ஆசிரமத்தில் கழிந்தது, அவரது இறுதி நாட்களும் ஆசிரமத்திலேயே கழிந்தன." "அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அதை வைத்தே அவர் வாழ்ந்தார். வேறு எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை"என்பதையும் நரேந்திரபாய் கோஹில் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், பொதுவாழ்வில் இருந்து லட்சுமிபென் எப்போதும் ஒதுங்கியே இருந்தார். "காந்தியின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடனான எங்கள் தொடர்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருமுறை காந்தியின் வம்சாவளிப் பட்டியலைத் தயாரித்தபோது, அதில் லட்சுமிபென்னின் பெயர் இருந்தது. ஆனால் அதைத் தவிர மற்ற தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டன. நாங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று பிகுபாய் டஃப்தா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wx0xqnz8wo
  18. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார். பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார். பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237521
  19. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீ­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ.......! --- வெண்மேகம் பெண்ணாக ---
  20. தென்றல் உறங்கிய போதும் . ........! 😍
  21. இன்னும் பாகிஸ்தான் விளையாடுமா இல்லையா என்று சிலர் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்காக இருக்கின்றார்கள்! வெள்ளிக்கிழமை கடைசி நாள்!
  22. யார் முருகன் ? யார் சூரன்? -நிலாந்தன் தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை மறைமுகமாக அது சுட்டுகிறது என்று பொதுவான விளங்கிக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு,தனது முருகன் பாடலுக்குள் உட்பொதிந்துள்ள அரசியலுக்கு ஊடாகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு ரப் பாடகரைக் கொண்ட அதே சமூகத்தில்தான், அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அனுரவை முருகனோடு ஒப்பிட்டு முகநூலில் எழுதியிருந்தார். அனுரவை தோழராக,சகோதரராக, ஏழைகளுக்கு இனியவராக, செல்ஃபி நாயகனாக…இன்னபிறவாக சித்திரித்த அரசியல் விசுவாசம், அதன் அடுத்த கட்டமாக அவரை கடவுளுக்கு நிகராகச் சித்தரிக்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்களில் ஒருவர் அவ்வாறு வர்ணித்துள்ளார். ஒரு சிங்களத் தலைவரை அவருடைய தமிழ் அடியார் ஒருவர் இவ்வாறு தெய்வ நிலைக்கு உயர்த்துவது என்பது இதற்கு முன் காணப்பட்டிராத ஒன்று. சிங்களத் தலைவர்களைப் போற்றும் தமிழ்த் தொண்டர்கள் இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது டிஜிட்டல் புரோமோஷன் என்பது இருக்கவில்லை. தவிர யுத்த காலங்களில் இனமுரண்பாடு கூர்மையாக இருந்தபோது சிங்களத் தலைவர்களைப் பகிரங்கமாகப் போற்ற தமிழர்கள் துணியவில்லை. இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லாத ஓர் அரசியல் சூழலில், அனுர அரைக்காற் சட்டையோடு நடக்கிறார். பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வந்து செல்பி எடுக்கிறார். தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கைகளை நீட்டி அவரை அழைக்கிறார்கள். மூதாட்டிகளும் சிறுவர்களும் நெருங்கிச் சென்று அணைக்கிறார்கள். இந்தக் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக சந்தையில் விற்கிறது. அனுர எங்கே நாயகனாகிறார்? அல்லது நாயகன் ஆக்கப்படுகிறார்? அவருடைய எளிமை,உடல் மொழி போன்றன அவரை விளம்பரப்படுத்த வசதியாக உள்ளன. இதற்கு முன்னிருந்த சிங்களத் தலைவர்கள் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வர முடியாதவர்கள். தமிழ் மக்கள் அவர்களை நெருங்கி அணைக்க முயற்சிக்கவில்லை மட்டுமல்ல, அவ்வாறு அணைக்கவரும் தமிழர் ஒரு மனிதக் குண்டாக இருக்கலாம் என்று அச்சப்படும் அரசியல் சூழல் இரு தசாப்தங்களாக இருந்தது. அனுர அந்தப் பயமின்றி தமிழ் மக்களை நெருங்கக்கூடிய அரசியல் சூழல் இப்பொழுது உண்டு. தவிர அவருடைய கட்சிக்காரர்கள் தமிழ் மக்களை அவரை நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி அதைக் காணொளிகள் ஆக்கி, வைரல் ஆக்குகிறது. இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தெளிவான ஒரு பிரச்சார நிகழ்ச்சி நிரல். பலாலியில் அவர் அரைக்காற் சட்டையோடு நடந்தபோதும்,வடமராட்சியில் ஒரு வயோதிபப் பெண் அவரை அணைத்தபோதும், பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அவரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்கும்போதும், அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணி அதைக் கவர்ச்சியான பிரச்சாரப் பண்டமாக மாற்றுகிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்புவது என்பது திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற ஒரு பிரச்சார உத்தி. அதுதான் உண்மை. ஆனால் அவ்வாறு அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்பும் அளவுக்கு தமிழ்த்தேசியப் பரப்பில் ஒரு வெற்றிடம் நிலவுகிறது என்பதும் அதே அளவு உண்மை. அனுரவைப் போல தமிழ்ப் படப் பாடல்களின் பின்னணியில் நாயக நடை போட தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்கள் அல்லது செயல்பாட்டாளர்கள் இல்லையா? அல்லது இருப்பவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாரில்லையா? இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் ஆளுமைகளில் யாரையுமே அவ்வாறு கொண்டாட முடியாத ஒரு நிலைமை ஏன் தோன்றியது? தமிழ்த்தேசிய அரசியலானது ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கிக் கொண்டிருக்க, துரோகி ஆக்கிக்கொண்டிருக்க,யாருமே கதாநாயகராக கதாநாயகியாக மினுங்க முடியவில்லை. ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளாத, சந்தேகிக்கின்ற, குற்றச்சாட்டுகின்ற, ஓர் அரசியல் சூழலில்,யாரும் யாரையும் அங்கீகரிக்கத் தயாரில்லை. அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமூகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமயத் தலைவர்களாக இருந்தாலும் சரி,யாரும் புகழோடு இருக்க முடியாது. சமூகத்தில் யாரெல்லாம் துருத்திக்கொண்டு,மினுங்கிக்கொண்டு மேலெழுகிறார்களோ, அவர்கள் எல்லோரின் மீதும் விமர்சனங்கள்; அவதூறுகள். கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஓர் உள்ளூர் தலைவரும் சரி, மாவட்ட மட்டத் தலைவரும் சரி,தேசியமட்டத் தலைவரும் சரி தொடர்ச்சியாக ஜனவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏன்? தமிழ்மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள்? யாரை வாழும் முன்னுதாரணமாகப் பார்க்கிறார்கள்? யாருமே வாழும் முன்னுதாரணமாக இல்லாத ஒரு சமூகமா இது? தியாகிகளைப் போற்றும் ஒரு சமூகத்தில் உயிருள்ள வாழும் முன்மாதிரிகள் ஒருவரும் இல்லையா? ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,அல்லது அங்கீகரிக்காத ஒரு நிலைமை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுணர்வை,கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கும். இது கட்சிகளில் தொடங்கி,சமூக நிறுவனங்கள், ஆலய அறக் கட்டளைகள், திருச்சபைகள், பழையமாணவ சங்கங்கள்..என்றிவ்வாறாக முழுச்சமூகத்துக்குமான ஒரு பொது வியாதியாக மாறிவருகிறது. சமூக வலைத்தளங்களுக்கு முற்பட்ட காலத்தில் மொட்டைக் கடிதம் இருந்தது. மல முட்டி இருந்தது. இப்பொழுது இரண்டும் இணைந்து பேக் ஐடிகளாக, முகம் காட்டா முகநூல் கணக்குகளாக மாறிவிட்டன. மல முட்டி என்பது, தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இரு துருவங்களாக இருந்த காலகட்டத்தில் இருந்த ஒரு தோற்றப்பாடு. தமது கட்சி எதிரியைத் தாக்குவதற்கு, அசிங்கப்படுத்துவதற்கு மண்பானையில் மலத்தைச் சேகரித்துக் கொண்டுவந்து அரசியல் எதிரியின் வீட்டின் முற்றத்தில் அல்லது வாசலில் பானையை உடைத்து விடுவார்கள். ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் காணப்பட்ட இந்த மல முட்டி அரசியல் மொட்டைக் கடிதத்தோடு இணைந்து முழுச்சமூகமும் நாறும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஒரே கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் ஒன்று மற்றதன் மீது மலத்தை வாரி வீசும்போது இரண்டுமே நாறுகின்றன. அண்மையில் மட்டக்களப்பில் சுமந்திரன் அவ்வாறான முகங்காட்டா முகநூல் பக்கங்களைக் குறித்துப் பேசியிருக்கிறார். முகங்காட்டா முகநூல் பக்கங்கள்,தொண்டர்களை ஏவி வழக்குத் தொடுக்கும் தலைவர்கள், தனது கட்சிக்காரனை அல்லது தன்னை விமர்சிப்பவரை மடக்குவதற்கு வழக்குப் போடுவேன் என்று மிரட்டும் அரசியல்வாதிகள், தன் கட்சிக்காரனுக்கு எதிராக தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் தமிழ் அரசியல் வாதிகள், சமூகத்தில் யாராவது மினுங்கிக் கொண்டு மேலெழுந்தால் அவர்களைக் காலால் மிதித்துச் சப்பையாக்கிவிடக் காத்திருக்கும் சமூக வலைத்தள நீதிபதிகள்…என்றிவ்வாறாக தமிழ்ச்சமூகம் அதன் மாண்பை இழந்து கொண்டு போகிறது. ஒருகாலம் திட்டமிட்டு வெறுப்பர்களை உற்பத்தி செய்த, வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கைகளில் இப்பொழுது மாற்றம் தெரிகிறது. ஆனால் உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சியோ நாறிக் கொண்டிருக்கிறது. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீயை, சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவைத்தது யார் என்பது எல்லாருக்கும் தெரியும். தனது உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வாறு தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கருவியாகக் கையாள்வது என்பது தமிழ்த்தேசிய அரசியல் எங்கே வந்துநிற்கிறது என்பதைக் காட்டுகிறது. அதேசமயம் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் படைப் பிரதானிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்ற விடயம் அவரைப் பொது வெளியில் அம்பலப்படுத்த, அவமானப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்குள் தீர்க்கப்படாத உட்கட்சி முரண்பாடு இடக்கிடை நாடாளுமன்றத்திலும் அடிக்கடி ஊடக ஒலிவாங்கிகளுக்கு முன்னரும் அசிங்கமான விதங்களில் வெளிப்படுகிறது. கட்சியின் கூட்டுணர்வை,சகோதரத்துவத்தைக் கவனத்தில் எடுத்து உட்கட்சிப் பிரச்சனையை உட்க்கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியாத அளவுக்கு கட்சி பலவீனமாக உள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான யதார்த்தம். சுமந்திரனாலும் கட்சியைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.சிறீதரனாலும் முடியவில்லை. யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தனக்கென்று நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவர் சிறீதரன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்குடா நாட்டுக்குள் தமிழரசுக் கட்சிக்கு ஆசனம் கிடைக்கவில்லை. தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் கிளிநொச்சியில் சிறீதரன் பெற்ற வெற்றியும் இல்லையென்றால் தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் ஆசனமே இல்லை. எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால்,கிளிநொச்சியில் இப்பொழுதும் சிறீதரனுக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. யாழ்குடா நாட்டில் மட்டுமல்ல, தமிழரசு கட்சிக்குள் நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட ஒருவர் அவர். தமிழரசுக் கட்சிக்குள் அவரைத் தோற்கடித்தாலும், கிளிநொச்சியில் அவரைத் தோற்கடிக்கலாமா என்பதனை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும். ஆனால் சிறீதரனை அவமானப்படுத்தி அவருடைய மாவட்டத்துக்குள்ளேயே முடக்க இன்றுவரை சுமந்திரனால் முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கட்சிக்குள் சுமந்திரன் தன்னுடைய நிலையை ஒப்பீட்டளவில் பலப்படுத்தி வந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அவர் பலமாக உள்ளாரா என்பதை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும். இந்த முரண்பாடுகளின் மத்தியிலும் தமிழரசுக் கட்சி பலமாக உள்ளது என்ற ஒரு தோற்றம் வெளியே தெரிகிறது. ஏன் தெரியுமா? அது வெல்லக்கூடிய கட்சி என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் நம்பி அந்தக் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட,வடக்குக் கிழக்காக கீழ்மட்ட வலையமைப்பை கொண்ட ஒரு கட்சி அது. வெல்லக்கூடிய குதிரை என்பதால் அநேகர் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளிலும் அந்தக் கட்சியில் வாக்காளர்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களும் கொழும்பை அனுசரித்துப் போகும் தலைவர்களும் இருந்ததுண்டு. இந்த இரண்டு பண்புகளினதும் கலப்புத்தான் தமிழரசுக் கட்சி. இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை அனுசரித்துப் போனமைதான் கட்சியின் பலம். ஆனால் இப்பொழுது இந்த இரண்டு போக்குகளும் முரண்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இது கட்சியை எங்கே கொண்டு போய்விடும்? தமிழரசுக் கட்சி சிதையுமாக இருந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ்த் தேசியப் பேரவையால் முடியுமா? அது இப்பொழுதுவரை ஒரு பிரதான நீரோட்டக் கட்சிக்குரிய பண்புகளோடு காணப்படவில்லை. மாறாக மாற்று நீரோட்டக் கட்சியாகத்தான் காணப்படுகிறது. இவ்வாறு தமிழ் தேசிய பரப்பில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு இடையிலும் ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கும் மோதல்களால்,தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. அந்த வெற்றிடத்தில் அரச பலத்தோடு, அரச வளங்களைப் பிரயோகித்து அனுர நாயகனாக இறக்கப்படுகிறார். கடந்த வாரம் முருகனாகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். அதாவது தமிழர்கள் ஒருவர் மற்றவரை சூரன்கள் ஆக்கிக் கொண்டிருக்க முருகன்கள் வெளியில் இருந்து குதிக்கிறார்களா? விக்னேஸ்வரனுக்கும் வாகீசனுக்கும் கையில் வேலைக் கொடுத்த ஒரு சமூகம், விரைவில் அனுரவிக்கும் ஒரு வேலைக் கொடுத்து விடுமோ ? https://www.nillanthan.com/8106/
  23. சுத்துமாத்து சுமந்திரன்... மாகாண சபைத் தேர்தலில், தான் வேட்பாளர் என்றவுடன்.... சங்கு கூட்டணியுடன், வட்ட மேசையில் இணைந்து விட்டார். டக்ளஸ் தேவானந்தாவுடன்... பின்கதவு பேச்சுவார்த்தை நடக்கின்றதாம். சங்கு கூட்டணியை ... தொண்டை கிழிய திட்டித் தீர்த்தவர்களும், கை உழைய, கேலிச் சித்திரம் வரைந்த @Kavi arunasalam மும்... தலையை... எங்கே புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் அனாதைகளான... "வெத்து வேட்டுக்கள்" எல்லாம் ஒன்றாக சேர்ந்த தருணம் இது. தேர்தலில் சுமந்திரன் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. வெட்கம் கெட்டதுகள், ரோச நரம்பு அறுந்ததுகள்.... எல்லாம் வட்ட மேசையில் ஒட்டி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்குதுகள் "அலுவோசுகள்". ஆக இவர்கள்... தமது பதவியை பெற, எந்த நரக வேலையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இவர்களுக்கு வெள்ளை அடித்து.. செம்பு தூக்கும் கூட்டத்திற்கு, அறிவு எங்கே போனது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.