Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு 3 Apr 2026, 1:59 PM தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. https://minnambalam.com/bjp-candidate-list-released/
  3. பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் April 2, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது. சிங்களவர்கள் ஏற்காமல் சமஸ்டி சாத்தியமில்லை சமஸ்டிக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக பார்க்கிற சிங்கள இனம் சமஸ்டியை ஏற்காதே? சிங்கள பௌத்த பேரினவாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்ற சிங்கள மக்கள் தமிழர்களின் கோரிக்கையை எப்படி ஏற்பார்கள்? பெரும்பான்மையான சிங்களவர்கள் அதனை ஏற்கும் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டுமா? சமஸ்டி அமைப்பு முறையை சிங்களவர்கள் ஏற்பதென்பது இன்னும் பல தலைமுறைகளுக்குக் கூட நடக்கக் கூடிய காரியமில்லையே? இப்படி பல கேள்விகளை தொடராக கேட்டு அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியாக கேள்விகளை எத்தனை விதமாகத்தான் கேட்டுப் பார்ததாலும், யதார்த்தத்தில் சிங்கள மக்களிற் பெரும்பான்மையானவர்கள் விரும்பி அதனை ஏற்றுக் கொள்ளாதவரை சமஸ்டி முறையை இலங்கையில் சட்டபூர்வமாக ஏற்படுத்த முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகளை மிரட்டி, சிங்கள மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இலங்கையில் சமஸ்டி ஆட்சிமுறையை எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் திணித்து விட முடியாது. 1983ம் ஆண்டுக்கும் 1989ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட செயற்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு இனியும் இந்தியாவோ அல்லது வேறு எந்தவொரு வெளிநாட்டு சக்தியுமோ செயற்படும் என எதிர்பாரத்து தமிழர் எவரும் தமது அரசியலை மேற்கொண்டால் அது படு முட்டாள்த்தனமாகும். இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டுமானால், இலங்கையின் பாராளுமன்றம் ஓர் அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலமாகவோ அல்லது ஒரு புதியதொரு அரசியல் யாப்பு பிரேரணையில் அதனை உள்ளடக்கிய விதமாகமோ கொண்டு வருவதன் மூலமாகவேதான் ஆக்க முடியம் – பாராளுமன்றத்தில் அந்த பிரேரணையை (நகல் வரைவை அல்லது மசோதாவை) பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்க வேண்டும், மேலும், அதனை நாட்டு மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதனால், நாடு முழுவதற்குமாக நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பில் வாக்களிபபவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும். இதுவே இலங்கையின் சட்டம். இதனை இலங்கையின் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் அரசியல் யாப்பு அறிவுடைய அனைவரும் அறிந்திருக்கக் கூடிய – மனதில் கொள்ள வேண்டிய முதலாம் பாடம். 2000மாம் ஆண்டே சந்திரிகாவின் பிரேரணை எரிந்து சாம்பலாகி காற்றில் கலந்து விட்டது இன்று ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட தென்னிலங்கையின் கட்சியினர் எவரும் சமஸ்டிக்கான அரசியல் யாப்பு திருத்தக் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெரிந்த விடயமே. சமஸ்டியே இல்லாமல் வெறுமனே ‘பிராந்தியங்களின் ஒன்றியம் என பெயரை மட்டுமே வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்த புதிய அரசியல் யாப்பு பிரேரணை பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் எரிக்கப்பட்டதை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகும். அதே சந்திரிகா பண்டாரநாயக்கா கூட அதே வகைப்பட்ட ஒரு பிரேரணைக்கு இன்றைய சூழ்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு கேட்கத் தயாராக இல்லை என்பதை அவரே அண்மையில் கூறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா எந்தவொரு அரசியற் தீர்வும் ஒற்றையாட்சிக்கு உள்ளேதான் என்று கூறி விட்டார். யுத்தம் நடந்து கொண்டிருந்த போது 13 பிளஸ் என்று கூறிய ராஜபக்சாக்கள் பின்னர் 13ஐயும் இல்லாமற் செய்யவே முயற்சித்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியினரின் வரலாறு சொல்லவே வேண்டியதில்லை. இவ்வாறான நிலைமைதான் சிங்கள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் இருக்கிறதென்றால், இப்படிப்பட்ட சிங்களவர்களோடு எப்படி தமிழர்கள் ஒற்றையாட்சி அமைப்பில் ஒன்றிணைந்து வாழ முடியும் என்று எந்தத் தமிழரும் முக்கி முறுகுவதில் எந்தவித பிரயோசனமுமில்லை. முதலில் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையையும், இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார உறவுகளையும்; புரிந்து கொண்டே தமிழர்கள் தங்களுடைய அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில், ஒற்றையாட்சி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்ற பந்தியில் ஒரு எழுத்தை மாற்றுவதாக இருந்தாலென்ன அல்லது அரசியல் யாப்பில் வேறொரு உறுப்புரையில் ஒற்றையாட்சிக்கு வேறோரு விளக்க வரைவிலக்கணத்தை கமுக்கமாக அமுக்கி புகுத்தி விடலாம் என முயன்றாலென்ன, அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு தொகையினரின் ஆதரவையும் சர்வசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளையும் பெற்றேயாக வேண்டும். அதை விடுத்து ‘ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம்’, ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட முடியாது’ என தமிழர்கள் மத்தியில் எத்தனை விதமாக உரத்த குரலில் பேசினாலென்ன அல்லது தமிழ் ஊடகங்களில் எத்தனை விதமாக அறிக்கைகள் விட்டாலென்ன அவை சபைக்குதவமாட்டா என்பதனை சாதாரணமாக அரசியல் அறிவுடைய எவராலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் உணர்ச்சி வசப்படுவதற்கு எதுவுமேயில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி சமஸ்டியை கோரவில்லை இந்தியா சமஸ்டியை பேச தயாராக இல்லை 1983ம் ஆண்டு ஜூலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி தமிழர்களுக்கெதிராக நடத்திய படுகொலைகளயும் பேரழிவுகளையும் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகளின் காரணமாக திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் இருந்த இந்திய அரசாங்கம் இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் ஓர் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன் முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி இந்தியப் பிரதமர் தமது விசேட பிரதிநிதியாக திரு. ஜி பார்த்தசாரதி அவர்களை இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கென அனுப்பி வைத்தார். அவர் முதலாவது தடவையாக 1984 ம் ஆண்டு ஆகஸ்டில் இலங்கை வந்த போது, இலங்கையில் இந்தியாவில் அமைந்திருப்தைப் போல ஓர் அரை சமஸ்டி – அதாவது ஒற்றையாட்சியும் இல்லாமல் சமஸ்டியும் இல்லாமல் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில ஆட்சி அமைப்பையும் அதிகாரப் பகிர்வையும் ஏற்படுத்துவதற்கான குறிப்புகளோடுதான் வந்திறங்கினார். ஆனால் அது தொடர்பாக கொழும்பில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் ஒற்றையாட்சி முறைக்குள்ளேதான் அரசியல் தீரவு சாத்தியம் என்பதை கண்டு கொண்டார். ஆனபடியாற்தான், 1983ம் ஆண்டு டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஜே. ஆர். சென்ற போது ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியற் தீர்வைக் காண்பது பற்றியே இந்திய அரசாங்கம் ஜே.ஆருடன் பேசியது. ஒற்றையாட்சிக்குள் மாகாண ஆட்சி பற்றி ஜே.ஆர். அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சுமார் ஓராண்டு நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு கிழக்கு இணைப்பை கோரிய போதிலும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையிலான அதிகாரப் பகிர்வுகள் பற்றியே தமிழர் விடுதலைக் கூட்டணி பேசியது. சமஸ்டி பற்றி எந்த விவாதமும் இடம் பெறவில்லை. பின்னர் 1986 ஜனவரி தொடக்கம் 1986 டிசம்பர் வரையான காலகட்டத்தில் இலங்கை அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றியிருக்கிறது. ஆனால் அது சமஸ்டிக் கோரிக்கையை எந்த சந்தர்ப்பத்திலும் முன் வைக்கவில்லை. திம்புப் பேச்சுவார்த்தையிலும் சமஷ்டி கோரப்படவில்லை 1985ல் பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் ஆயுதம் தாங்கிப் போராடிய தமிழர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போதும் கூட, இலங்கை அரசின் தீரவுப் பிரேரணைகளை விமர்சித்ததுவும், போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுவும் நடந்தனவே தவிர தமிழர் தரப்பில் இருந்து எவரும் சமஸ்டி முறையின் அடிப்படையில் அரசியற் தீர்வு முன் வைக்கப்பட வேண்டுமென்று திட்டவட்டமாக கோரவில்லை. மேலும், இன்றைக்கு தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது பேசப்படுகிற திம்புப் பிரகடனம் என்று சொல்லப்படுகிற நான்கு பந்திகளில், தமிழர்கள் தேசிய இனம், தமிழர் தாயகம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடர்கள் உள்ளனவே தவிர திட்டவட்டமாக அந்த பிரகடனத்திற் கூட சமஸ்டி அரசாட்சி முறையில்தான் அரசியற் தீர்வு அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறப்படவில்லை. அந்த மூன்று சொற் தொடர்களும் சமஸ்டியையே பூடகமாக குறிக்கிறது என்று யாராவது சொல்ல முற்பட்டால் அது சரியல்ல. ஏனெனில், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட எந்த தமிழ் அமைப்பிடமும் சமஸ்டி அமைப்பு முறை பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 1926 – 27ல் சிங்களவர் சமஸ்டி கோரியபோது அதனை கிண்டலடித்ததே தமிழர்களின் அரசியல் இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை ஏற்படுவதற்கான அரசியலை மிக வலுவாக நகர்த்துவதற்கான சந்தர்ப்பம் தமிழர்களுக்கு 1920 களில் கிடைத்தது. அப்போது அதனை தீரமானகரமாக கோரியது கண்டிய தேசியப் பேரவையே. திரு. S.W.R.D. பண்டாரநாயக்கா அதனைத் தாங்கிய படி தமிழர்களின் ஆதரவைக் கேட்டு யாழ்ப்பாண அரசியல் சமூக பிரமுகர்களை தேடித்தேடி சந்தித்தார் – சமஸ்டிக்கு ஆதரவு கேட்டார். அப்போது அதனை தமிழர்களின் அனைத்து பிரிவினரும் தத்தமக்குரிய வெவ்வேறு நியாயங்களைக் கூறி நிராகரித்தார்கள். 1930களின் இறுதிப் பகுதியில் இருந்து 1945 வரை இலங்கையில் நிலவிய அரசியற் சூழ்நிலையில் தமிழர்கள் சமஸ்டி ஆட்சி முறையைப் பெறுவதற்கு வேண்டிய அரசியலை நகர்த்துவதற்கான வாய்ப்பு நன்றாகவே நிலவியது, அப்போது தமிழர் சமூகத்தின் அனைத்து பிரமுகர் கூட்டமும் திரு ஜி.ஜி. பொன்னம்பலத்தை தலைவராக நிறுத்தி ‘பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம்பது ஆசனங்கள்’ எனும் கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர சமஸ்டி ஆட்சி முறையை கேட்கவே இல்லை. ‘ஐரோப்பியர் இலங்கையை கைப்பற்றுவற்கு முதலில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் ராஜ்ஜியமாக இருந்தது’ என்றோ, எனவே ‘அந்த தமிழ் ராஜ்ஜியத்தை தனி ராஜ்ஜியமாக ஆக்கி சுதந்திரம் தர வேண்டும்’ என்றோ அல்லது அதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தும்படியோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தத் தமிழ்த் தலைவரும், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பிரிட்டிஸாரிடம் பேசியதே இல்லை. அப்போது பாட்டன்மார் கசக்கி நாசமாக்கியதை இப்போது ஆக்கித்தா என பேரன்மார் கேட்கினம் 1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார். தமிழரசார் வீட்டு சமஸ்டி பூனை எலி பிடிக்க எழும்பியதே இல்லை 1949ம் ஆண்டு தொடங்கிய தமிழரசுக் கட்சி தனது கட்சியின் அறிக்கையில் இலட்சியமாக சமஸ்டி ஆட்சி முறையைக் குறிப்பிட்ட போதிலும், எந்தக் கட்டத்திலும் சிங்களத் தலைவர்களிடம் சமஸ்டியை வலியுறுத்தும் அரசியற் கோரிக்கையை முன் வைத்ததில்லை. ● வடக்குக்கும் கிழக்குக்கும் தனித்தனியான பிரதேச சுயாட்சி ஏற்பாட்டுக்கே 1957ல் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்காவுடன் தமிழரசார் உடன்பாடு கண்டனர். ● 1960ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்ட போது தமிழரசுக் கட்சியினர் திரு. பண்டார நாயக்காவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்றே கேட்டார்கள். ● 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியோடு கூட்டுச் சேரும்படி டட்லி சேனநாயக்கா கேட்டபோது, அவரோடு வெறுமனே மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சபைகளை அமைப்பதையே, தமிழரசுக் கட்சியினர் கனவான் ஒப்பந்தம் என செய்து கொண்டார்கள். சமஸ்டி என்பதனை கட்சியின் கொள்கை அறிக்கையில் இலட்சியமாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதனை சட்டபூர்வமான முறைகள் மூலம் அடைய இலங்கையில் வாய்ப்புகள் இல்லை என்பதுதான் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் அரசியற் புரிதலாக இருந்ததென்று உறுதியாகவே கூறலாம். கைக்கு எட்டியதை வாய்க்கு எட்ட விடாமல் தட்டி விட்ட தமிழீழ தேசியப் புலி இலங்கை அரச படைகளுக்கு எதிரான யுத்த வல்லமையை புலிகள் கொண்டிருந்த 2001 – 2003ம் ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்கா, யப்பான் மற்றும் பிரதானமான ஐரோப்பிய நாடுகள் கூட்டாக நோர்வேயை முன்னுக்கு விட்டு நேரடியாக இலங்கையின் அரசியலில் தலையிட்டு, இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்டு வர முற்பட்டன. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அதற்கு விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டினார். அப்போது சிங்கள மக்களிற் பெரும்பான்மையினர் தங்களது அரச படையினர் யுத்தத்தில் வெல்லுவார்கள் என்று நம்பவில்லை. அதனால் நாட்டைப் பிரிக்காமல் வேறு எதைக் கொடுத்தாயினும் சமாதானத்தை அடைய விரும்பியிருந்தனர். இந்தியாவும் அந்த முயற்சிக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அப்போது அவரிருந்த நிலையில் அதனை மௌனமாக ஏற்றவராகவே இருந்தார். அப்போது பிரபாகரன் சமஸ்டியை ஏற்கத் தயாராக இருந்திருந்தால் கிளிநொச்சியில் இருந்தபடியே ஒருங்கிணைந்த வடக்கு கிழக்குக்கு சமஸ்டி அமைப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் தமிழீழக் கனவில் மிதந்து கொண்டிருந்த பிரபாகரன் அதனை நிராகரித்ததால் அந்த வாய்ப்பு தமிழர்களால் தமிழர்களுக்கு இனிமேல் இல்லை என்றாகியது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் சமஸ்டிக்கான எந்தச் சூழலும் இல்லை. ● அவ்வப்போது, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா சொல்லும். ● ஆண்டுக்கொருமுறை, மேலைத் தேச நாடுகள் ஜெனீவாத் தீர்மானத்தில் ‘இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தின் படி மாகாண ஆட்சி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என ஒரு பந்தியை சேர்த்துக் கொள்வார்கள். ● இலங்கையின் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையில் சட்டபூர்வமாக ஆக்கப்படக்கூடிய உச்சபட்ச அரசியற் தீர்வொன்றை அடைவதற்கு இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியற் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முழு மூச்சாக செயற்பட்டு, தமிழக அரசியலை சாதகமாக செயற்பட வைத்தால் இந்திய அரசை காத்திரமாக செயற்பட வைக்கலாம். அப்போதும் கூட இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மென்மையாகவேதான் – ராஜதந்திர வரையறைகளுக்கு உட்பட்டேதான் பேசும் என்பது தெளிவான ஒரு விடயம். ● இந்தியாவை மீறி வேறெந்தவொரு நாடும் இலங்கையில் சமஸ்டி என்ற ஒன்று பற்றி பேச மாட்டார்கள் என்பதும் மிகத் தெளிவானது. ● இலங்கையில் சமஸ்டி அமைப்பு என்றாலே சிங்கள மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது மிகவும் வெளிப்டையான ஒன்று. ● முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளோ அல்லது மலையக தமிழ் மக்களது பிரதிநிதிகளோ சமஸ்டியைப் பற்றி இப்போது பேசுவதே முட்டாள்த்தனமானது என்ற அபிப்பிராயத்தை உறுதியாகவே கொண்டிருக்கிறார்கள். ● தமிழர்களிடையே கூட, அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தப்படியான அதிகாரங்களையே முழுமையாக பெற முடியாமல் இருக்கின்ற நிலைமையில் சமஸ்டியைப் பற்றி பேசுவது மடமைத்தனமானது என்பதே அறிவார்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்தயில் நிலவுகின்ற அபிப்பிராயம். பல்லாயிரம் தியாகங்களால் கிடைத்த தோண்டியை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்து விடாதீர்கள்! இப்படியாக நிலவும் யதார்த்தங்கள் மத்தியிலும், சமஸ்டிதான் சரியானது – அதுதான் நிரந்தரமானதொரு அரசியற் தீரவைத் தரும் – அந்த சுலோகத்தை தாங்கிய அரசியலை மட்டும்தான் தங்களால் மேற்கொள்ள முடியும் என்று இன்னமும் பிடிவாதமாகக் கருதுவோர் செய்ய வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மையான சிங்கள மக்களை, சமஸ்டி அமைப்பு முறையை விரும்பி ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான – சமஸ்டி ஏற்பாட்டிற்கு சிங்களவர்களின் ஆதரவையும் புரிந்துணர்வையும் பெருக்குவதற்கான வேலைத் திட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்வதுதான். அதற்கு மாறாக குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல தமிழர்கள் மத்தியிலிருந்து சமஸ்டிக்கான ஆதரவைத் திரட்ட முயற்சிப்பது – சமஸ்டிக்கான பட்டி மன்றங்களை நடத்துவது ஆக்கபூர்வமான நல்ல பயனெதனையும் தராது. மாறாக தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும் பிளவுகளையுமே அதிகரிக்கும். இது இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தி மாகாண ஆட்சி முறையை காத்திரமாக செயற்பட வைப்பதற்கான தமிழ்ப் பேசும் மக்களின் இயக்கத்தை – அபிலாசையை – ஒற்றுமையை பலயீனப்படுத்துவதாகவே அமையும். இதனையே சிங்கள பௌத்த பேரின மேலாதிக்கவாதிகள் விரும்புகிறார்கள். இது இலங்கைவாழ் தமிழ்ப் பேசும் மக்கள், எந்தவொரு வடிவிலும்; எந்தவொரு அளவிலும் பல தேசிய இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டிற்கு அவசியமான குறைந்தபட்ச அரசியற் கட்டமைப்பொன்றினையாவது கொண்டிருப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் இல்லாதொழித்து விடும். முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும். https://arangamnews.com/?p=12798
  4. இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி வெள்ளி, 03 ஏப்ரல் 2026 05:06 AM இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. 'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர் குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://jaffnazone.com/news/56017
  5. ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 12:28 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் மீதான போர் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கைச் செய்தி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என்பதை உணர்த்தும் வகையில் ட்ரம்ப், "அழிவு இன்னும் ஆரம்பிக்கவில்லை": ஈரானில் எஞ்சியுள்ள பகுதிகளை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என அவர் பதிவிட்டுள்ளார். வியாழக்கிழமை தெஹ்ரானையும் காரஜையும் இணைக்கும் முக்கிய B1 பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மேலும் பல பாலங்களை அழிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் இலக்கு வைக்கப் போவதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவின் இறுதியில், "புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனை அவர்கள் மிக விரைவாக செய்ய வேண்டும்!" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/242634
  6. சுயநலவாதிகள் இப்படி மாற்றி மாற்றி பேசுவதும் புகழ்வதும் இயல்பு.
  7. தங்கள் தாளத்திற்கு ஆடாத அதிகாரிகளை பதவி நீக்கம், பதவியிறக்கம், இடமாற்றம் செய்வது சர்வாதிகாரிகளின் இயல்பு. சானி அபயசேகரவை பதவி இறக்கியதும், இப்போ அவரை கண்டு நடுங்குவதும் அதே காரணத்தாற்தான்.
  8. குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் குவைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (Kuwait Petroleum Corporation) இயக்கப்படும் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி முகமை அதன் 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் "பல செயல்பாட்டுப் பிரிவுகளில்" (Operational Units) தீ விபத்து ஏற்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புப் படையினரும், தீயணைப்புப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, குவைத் மீது "பகைமை நாடுகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்" நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 'X' தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/குவைத்-எண்ணெய்-சுத்திகரிப்பு-நிலையம்-மீது-ட்ரோன்-தாக்குதல்/50-375033
  9. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்... இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣 நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
  10. Today
  11. சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றம் - நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு adminApril 3, 2026 சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் முன் முற்படுத்தியவேளை பிக்குவை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் நீதிமன்று நீடித்துள்ளது. https://globaltamilnews.net/2026/231394/
  12. காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண் adminApril 3, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது. கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2026/231397/
  13. யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை adminApril 3, 2026 படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் குடும்பத்தினரின் நலன்சார்ந்து மன்றில் தோன்றி தனது சமர்ப்பனங்களை முன் வைக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் நான் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் தான் முன்னிலையானேன். அது தொடர்பில் நீதிமன்ற வழக்கேடுகளில் கூட தெளிவாக உள்ளது. ஆனால் நான் சந்தேகநபர் சார்பில் முன்னிலையானதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ஊடகங்களுக்கு நீதிமன்று பொதுவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் , சிலவற்றையும் அவர் இறுதி வரையில் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சில தடய பொருட்களை நீதிமன்றத்தின் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளோம். அத்துடன் முதலாம் சந்தேக நபருக்கு எதிராக விரிவுரையாளர் மேற்கொண்ட காவலதுறை முறைப்பாடுகள் தொடர்பிலும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பிலும் ,நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தனது சமர்ப்பனத்தில் குறிப்பிட்டார். விரிவுரையாளரின் படுகொலை வழக்கில் அவரது மகள் இரண்டாவது சந்தேகநபராகவும் , மகளின் கணவன் முதலாவது சந்தேக நபராகவும் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து , படுகொலையான விரிவுரையாளர் சார்பில் முன்னிலையான எம்.ஏ சுமந்திரனை 2ஆம் சந்தேக நபரான கொலையான விரிவுரையாளரின் மகள் சார்பில் முன்னிலையானர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231401/
  14. புலிகள் 150 முஸ்லீம்களை... படு கொலை செய்து, குருக்கள்மடம் பகுதியில்.. புதைத்த மாதிரி கனவு கண்டோம். - காட்டான்குடி பாய்ஸ்.-
  15. எல்லாரும் ஐபிஎல் மட்சுக்களைப் பார்த்து Home work செய்வதில் பிஸி போலிருக்கு! போட்டியில் பங்குகொள்ள இறுதிநாள் ஞாயிறு 12 ஏப்ரல்!
  16. பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794
  17. doSnpotesr6mif00l5073967lg1i75f43i05101ah7um3m iigfm1cfc6c47 · ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந் திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கி றீங்களா ? என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம் ?' விவசாயி கேட்டார். ஒண்ணு மில்லை. நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று... ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை. சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங் களை எடுத்துக் கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லா வற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு, எங்கடா பழனி.. இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி. குதிரை துளிகூட நகரவே இல்லை. டேய் முருகா... வேகமா இழு ! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை. என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடமே, கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க் காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ? அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு ! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டிய தில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப் பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணித வியலாளரும், தத்துவ வியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார். வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது. அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது,.. கடுஞ் சொற்களை ஏன் பேச வேண்டும். இதையே கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவரும்... Voir la traduction.....!
  18. எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு! ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது. https://athavannews.com/2026/1470852
  19. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி......! 🙂
  20. போட்டி என்றால் ஓடி வரும் @வீரப் பையன்26 @செம்பாட்டான் ஆகியோரை காணவில்லை? என்னை T20 போட்டியிலும் அழைக்கவில்லை
  21. மனித புதைகுழி என சந்தேகம்: அகழ்வில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை Published By: Vishnu 03 Apr, 2026 | 04:33 AM தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 150-இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட அந்தக் காணியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. மனித புதைகுழி ஒன்றைத் தேடும் நோக்கில் தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாமல் நீதிமன்ற மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமொன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றி மூடிவிட நேர்ந்த இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பில் அமைந்துள்ள குருக்கள்மடமாகும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமயத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை வேளையில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் தெரிவித்தார். “இன்றைய தினம் இரண்டு மீற்றர் ஆழத்துக்கு அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் குழி நீரினால் நிரம்பியதால், அகழ்வுப்பணியைத் தொடர்வதில் பயனில்லை என்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் தீர்மானத்துக்கு இணங்க, அகழ்வுப் பணிகள் இன்று நிறைவு செய்யப்பட்டன.” அகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 9 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார். “இப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வேறொரு பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஏப்ரல் மாதம் புத்தாண்டின் பின்னர் சந்தேகத்துக்குரிய பகுதியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மனித எச்சங்களோ அல்லது வேறு எச்சங்களோ கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டன.” இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். இதற்கு முன்னர் வடக்கிலும், கொழும்பிலும், சம்பூரிலும், மாத்தளையிலும் தற்செயலாக மனித எலும்புகள் தென்பட்ட பின்னரே இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிய புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/242605
  22. நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு, குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட் 2 ஏப்ரல் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ளது. இந்த மோதல் பிராந்திய அளவில் இருந்து முழுமையான உலகப் போராக மாறக்கூடுமா என்று இப்போது பலர் யோசித்து வருகிறார்கள். ஒரு போர் எப்போது உலகப் போராக மாறுகிறது? "போர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்படுகின்றன என்றும், போருக்குச் செல்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசியின் 'குளோபல் ஸ்டோரி' பாட்காஸ்ட்டில் பேசிய பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார். "உண்மையில், கடந்த காலப் போர்களைப் பற்றி நீங்கள் பார்த்தால், முதல் உலகப் போர் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவற்றில் தற்செயலான சம்பவங்கள், எதிரியை தவறாக மதிப்பிட்டது போன்றவை இருந்தன. சில நேரங்களில் இதை ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் சண்டையைப் போல புரிந்துகொள்ளலாம்'' ''ஆஸ்திரிய - ஹங்கேரி பேரரசர் பிரான்ஸ் ஜோசப்பின் உறவினர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே, 1914-ல் முதல் உலகப் போரைத் தூண்டிய தொடர் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார் மேக்மில்லன். சில வாரங்களுக்குள், பல கூட்டணிகள் ஐரோப்பாவை மோதலுக்குள் இழுத்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி செர்பியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆதரித்தது, ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாகத் திரண்டது, பிரான்ஸ் ரஷ்யாவை ஆதரித்தது மற்றும் பிரிட்டன் ''மரியாதை மற்றும் உத்தி'' ஆகிய இரண்டின் பெயரால் போரில் இறங்கியது. அதன்பின் நடந்தது ஓர் உலகளாவிய பேரழிவாக மாறியது என்கிறார் மார்கரெட் மேக்மில்லன். பட மூலாதாரம்,Stringer/Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களையும், இரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களையும் குறிவைத்துள்ளன. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் ஜோ மயோலோ, உலகப் போரை அனைத்துப் பெரும் சக்திகளும் ஈடுபடும் ஒரு முழுமையான போர் என்று வரையறுக்கிறார். "முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய பேரரசு சக்திகள். இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருந்தன," என்று அவர் பிபிசியிடம் விவரித்தார். மத்திய கிழக்கின் இன்றைய பதற்றங்களை பலர் பெரும்பாலும் பிராந்திய அளவிலான ஒன்றாகவே விவரிக்கிறார்கள். ஆனால் ஒரு விரிவான மோதல் அதிகரிப்பதற்கான சூழல்கள் நிலவுகின்றனவா? பிப்ரவரி மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டதாக நம்புவதாகவும், ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு தீவிர ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே ஒரே தீர்வு என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், லெபனானில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆபத்து என்ன? அப்படியென்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான தற்போதைய ஆபத்து என்ன? "இந்த மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய நாடு அநேகமாக இரான் அல்லது ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற இரானின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என மேக்மில்லன் கூறுகிறார். கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைப்பது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது போன்ற இரானின் சாத்தியமான நடவடிக்கைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதோடு வல்லரசு நாடுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்காவின் தலையீடும் இதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது. மற்ற நாடுகள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், பொருளாதார ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மற்ற இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பது அவரது கூற்று. உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தைவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதலாம் அல்லது உலகின் கவனம் வேறு எங்கோ இருக்கும்போது ரஷ்யா யுக்ரேனில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்கிறார் அவர். "ஒரு பிராந்தியத்திற்கு வெளியே மோதல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன. ஏனெனில் தங்களைத் தடுக்கக்கூடியவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவதைப் பார்த்து, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மற்றவர்கள் இதில் தங்களுக்குரிய வாய்ப்புகளைக் காண்பார்கள்" என்கிறார் மேக்மில்லன். எந்தெந்த நாடுகள் இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளது? பேராசிரியர் மயோலோ இந்த மோதல் பிராந்திய அளவிலேயே இருக்கும் என்றும், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை இது உள்ளே இழுக்கும் என்றும் நம்புகிறார். ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இந்தப் போருக்குள் இழுக்கப்படும் என்று அவர் கருதவில்லை. "உலகில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்காகச் சீனா உடனடியாகத் தைவானை தாக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது. ஆனால் நாம் உலகப் போரைப் பற்றி, அதாவது மூன்றாம் உலகப் போரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இதில் நேரடியாக ஈடுபட எந்த விருப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பாவிற்கு அதற்கான நாட்டம் இன்னும் குறைவாகவே இருக்கும்" என்றும் பேராசிரியர் மயோலோ குறிப்பிட்டார். சீனாவிடம் வேறு திட்டங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார். "உங்கள் எதிரி ஒரு மிகப்பெரிய உத்தி தவறைச் செய்யும்போது, அவர்களைத் தடுக்காமல் அப்படியே அதைத் தொடர விடுவீர்கள்" என்கிறார் அவர். எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், சீனாவுக்கு அது சிறிய இழப்பு மட்டுமே என்று கூறிய மயோலோ, "அமெரிக்கா மத்திய கிழக்கில் மூழ்கிக் கிடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய நலன்களை வழங்கக்கூடும்'' என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா இரானுடனான தனது கூட்டாண்மை பற்றிப் பெருமையாகப் பேசினாலும், இரானுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவிற்கு இல்லை. தலைவர்களின் பங்கு பெருமை, கௌரவ உணர்வு அல்லது எதிரிகள் மீதான பயம் ஆகியவற்றால் போர்கள் தூண்டப்படுவதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது என்று மேக்மில்லன் கூறுகிறார். தலைவர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதையும் வரலாறு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸ் பிரதமர் (ஜார்ஜஸ்) க்ளெமென்சோ, போர் தொடுப்பதை விட அமைதியை ஏற்படுத்துவது கடினமானது" என்று கூறினார். மேக்மில்லனின் கூற்றுப்படி, மக்களால் பெரிய இழப்புகளோ அல்லது தியாகங்களோ செய்யப்படும்போது, தலைவர்கள் "போரை நிறுத்தாமல் தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும்" என்று முடிவு செய்கிறார்கள் என்ற வாதம் பெரும்பாலும் முன்வைக்கப்படுகிறது. தலைவர்களுக்குப் பெருமை என்பது ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறும் அவர், புதினை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். "யுக்ரேனை ஆக்கிரமிக்க முயன்றதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார். பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்யா ஒட்டுமொத்தமாக 12.5 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறைவான மதிப்பீடாகவே கருதப்படுகிறது. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது பின்வாங்க மறுக்கும் தலைவர்கள் மோதல்களை நீடிக்கச் செய்யவும் ஆழப்படுத்தவும் முயல்வார்கள் என்று மேக்மில்லன் கூறுகிறார். கடந்த காலத்தில், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வி தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் கூட, சித்தாந்தம், பெருமை அல்லது மாயையினால் தூண்டப்பட்டுத் தொடர்ந்து போரிட்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய முடிவுகள் சிறிய அளவிலான மோதல்களைப் பேரழிவை ஏற்படுத்தும் போர்களாக விரிவுபடுத்தக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் பதற்றத்தைக் குறைக்க ராஜீய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மேக்மில்லன் கூறுகிறார். "நீங்கள் எதிர்த் தரப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்... மேலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். "இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் போர் மூலமாக தாங்கள் எட்டக்கூடிய இலக்குகளை அடைந்துவிட்டதை உணர வேண்டும்.'' என்கிறார் மயோலோ மேலும் போர் தொடர்வது என்பது, யாருக்கும் அவர்கள் "விரும்பிய பலனைத் தராது" என்று அவர் விளக்குகிறார். "தடைகளை நீக்குவது, பாதுகாப்பு ஒப்பந்தம், உலக அரசியலில் இரானின் இடம் குறித்த புரிதல்கள் போன்றவற்றில் சில உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்'' மத்தியஸ்தம் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட சக்திகள் போரை நிறுத்தி பின்னர் அதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்ற முடியும் என்று மயோலோ கூறுகிறார். இந்த செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் பாட்காஸ்ட்டான 'தி குளோபல் ஸ்டோரி'-யின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. தொகுப்பு: அலெக்ஸாண்ட்ரா ஃபுஷே - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy3r9j9z1jo
  23. கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; பந்தவீச்சிலும் களத்தடுப்பிலும் ஏஷான் மாலிங்க அபாரம் Published By: Vishnu 03 Apr, 2026 | 02:56 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ஜெய்தேவ் உனத்காட், ஏஷான் மாலிங்க ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகள், நிட்டிஷ் குமார் ரெட்டியின் சகலதுறை ஆட்டம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அத்துடன் மிகவும் முக்கிய வேளைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கெமரன் க்றீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனதும் சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவியது. இந்த இரண்டு ரன் அவுட்களிலும் இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.இலங்கை செய்திகள் கெமரன் க்றீனை நேரடியாக ரன் அவுட் செய்த மாலிங்க, ரகுவன்ஷியின் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். அத்துடன அஜின்கியா ரஹானேயின் சற்று சிரமமான பிடியையும் மாலிங்க எடுத்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். நான்கு வீரர்கள் 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெறும் 34 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ட்ரவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களையும் விளாசினர். அணித் தலைவர் இஷான் கிஷான் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அனிக்கெட் வர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 4 விக்.) இந் நிலையில் ஹென்றிக் க்ளாசன், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஹென்றிச் க்ளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாரபானி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைபவ் அரோரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பின் அலன் 7 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கெமரன் க்றீன் (2), அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கண்டது. ஆங்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரகுவன்ஷி ஆட்டம் இழந்தார். ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் சுனில் நரேன் 4 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 12 ஓட்டங்களைப் பெற்றார். அவரது விக்கெட்டை ஏஷான் மாலிங்க வீழ்த்தினார். பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: நிட்டிஷ் குமார் ரெட்டி https://www.virakesari.lk/article/242604
  24. அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 11:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும். இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை. ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்: இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. https://www.virakesari.lk/article/242629
  25. யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு Apr 3, 2026 - 09:56 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnieh1hv0009356pjbggkdzx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.