Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பெங்களூரு; இசைநிகழ்ச்சி மூலம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய இளையராஜா | Ilaiyaraja Raises Funds for a Charity Foundation Through a Music Concert
  3. 11 Jan, 2026 | 05:27 PM (இராஜதுரை ஹஷான்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முறைமை மாற்றத்தை நோக்கிச் செல்வது ஒன்றும் இலகுவானதல்ல, கடும் எதிர்ப்புகள் எழும்.இதுவரை காலமும் இந்த கட்டமைப்பில் சலுகைப் பெற்றவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றுக் கொண்ட சலுகை நீங்கும் போது அதனை எதிர்ப்பார்கள். ஒரு நாளில், ஒரு இரவில் கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த முடியாது. இதனால் தான் புதிய கல்வி கொள்கையில் தொழிற்றுறை கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை நாட்டுக்கு அவசியமானது. பிள்ளைகள் மற்றும் கல்வி தொடர்பில் அக்கறை இல்லாதவர்களே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர் | Virakesari.lk
  4. 12 Jan, 2026 | 10:55 AM வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமை (10) வீட்டினை முற்றுகையிட்டு, வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில் | Virakesari.lk
  5. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. இவ்வளவும் எமது அவசர/வேகமாக சமையல் செய்யவேண்டும் என்பதால் ஏற்படுகிறது.
  6. Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 11:19 AM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என “நாட்டை பாதுகாப்போம்” தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது. மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்புக்களை விளைவிக்கும். கல்வி சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏனெனில் பௌத்த பிக்குகள், பிற மதங்களின் மதகுருமார்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களிடமிருந்து எந்த கருத்துகளும் கோரப்படவில்லை. அதன்படி, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் குறைபாடுடையது. எனவே செல்லுபடியாகாது. ஒரு பௌத்த தேரர் என்ற வகையில் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் எல்லே குணவன்ச தேரர், ஜனாதிபதி திசாநாயக்க, நாட்டையும், அதன் மக்களையும், புத்த சாசனத்தையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
  7. 12 Jan, 2026 | 05:58 PM வட மாகாண முதலீட்டு மாநாடு (NIS) 2026 யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார மையத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் போர் பிந்தைய பொருளாதார மாற்றப் பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தி கூட்டாளிகள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்து, வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக NIS 2026 அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக வட மாகாணம் பயன்படுத்தப்படாத பெரும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சிதறிய நிர்வாக அமைப்புகள், முடிவெடுப்பாளர்களை அணுக முடியாத நிலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையை உறுதியாக மாற்றுவதே NIS 2026இன் நோக்கம். வட மாகாணத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் முதன்முறையாக, முழுமையான முதலீட்டாளர் மையப்படுத்தப்பட்ட மாநாடாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்வத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆர்வத்தை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் ஓர் உயர் தாக்கம் கொண்ட மேடை நிலையான பிராந்திய வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த உண்மையை மையமாகக் கொண்டு NIS 2026 அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மாகாண தலைமைத்துவம், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத் தரப்பினருடன் ஒரே கூரையின் கீழ் நேரடியாக கலந்துரையாடுவதற்கான அபூர்வ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் உள்ளிட்ட தொழில்முனைவோர், உண்மையான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை விளக்கங்கள், நிதி வழித்தடங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். அனுமதிகள், கூட்டாண்மைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை தீர்மானிக்கும் முடிவெடுப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பலருக்கு இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாடு எதிர்காலத்தை நோக்கி அமைக்கப்பட்ட ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இது நம்பிக்கையை உருவாக்குகிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் வட மாகாணம் தீவிரமான முதலீடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் அலுவலகத்தில் ஒரே மைய செயலகம் NIS 2026இன் முக்கியமான பெறுபேறுகளில் ஒன்றாக, முதலீட்டாளர்கள் மற்றும் திட்ட முன்மொழிவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட செயலகம் ஆளுநர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளது. இந்த செயலகம், வட மாகாணத்தில் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே மைய ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படும். இந்த முயற்சி முன்னுதாரணமற்றது. முதலீட்டாளர்கள் முதன்முறையாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், திட்ட முன்னேற்றங்களை கண்காணிக்கவும், ஒழுங்குமுறை தேவைகளை தெளிவுபடுத்தவும், நிர்வாக தடைகளை தீர்க்கவும் ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பைப் பெறுகின்றனர். மாநாட்டின் இரண்டு நாட்களுடன் இந்த முயற்சி முடிவடையாது. NIS 2026 உருவாக்கும் வேகமும் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க இந்த செயலகம் ஒரு நிரந்தர பாரம்பரியமாக அமையும். ஒரு நிகழ்வைத் தாண்டிய கட்டமைப்பு மாற்றம் NIS 2026 ஒரு சின்ன நிகழ்வாகவோ அல்லது ஒருமுறை நடைபெறும் விளம்பர முயற்சியாகவோ அல்ல. இது பிராந்திய வளர்ச்சியை அணுகும் முறையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றமாகும். கொள்கை, நிர்வாகம், முதலீடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒரே சூழலில் ஒருங்கிணைப்பதன் மூலம், வட மாகாணத்தை போட்டித்திறன் கொண்ட, நம்பகமான முதலீட்டு இலக்காக உருவாக்குவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்த மாநாடு அமைகிறது. பங்கேற்கும் அழைப்பு NIS 2026 என்பது யோசனைகள் நிறுவனங்களுடன் சந்திக்கும் இடம். கனவுகள் வாய்ப்புகளுடன் இணையும் தருணம். வட மாகாணத்தின் எதிர்காலம் உறுதியான வடிவம் பெறத் தொடங்கும் மேடை என்றும் கூறப்படுகிறது. வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம் | Virakesari.lk
  8. 12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில் , அலுமினியம் பாரம் இல்லாததால் இலகுவில் கையாளக்கூடியதாக உள்ளது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் பூசப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய சமையலையும் அவ்வாறே அவசரகதியில் முடிக்க எண்ணி உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். மண்பாத்திரங்களுக்கு உடனடியாகத் திரும்;புவது கடினமாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வு மேம்படவும்; உதவும் என்றார். இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு | Virakesari.lk
  9. 12 Jan, 2026 | 06:15 PM மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக சீரின்றி காணப்பட்டது. எனினும் அவ்வீதியில் முழுமையாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விடயம் தொடர்பாக அவ்வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் அவ்வீதியினூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மன்னார் நகரில் இது முக்கியமான பிரதான வீதியாக உள்ளபோதிலும் அதனை சீரமைக்க யாரும் அக்கறை கொள்ளவில்லை. இந்த நிலையில் மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தரவுள்ளார். வீதியை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திணைக்களத்தினர் ஜனாதிபதியின் வருகையின் காரணமாகவே தற்போது அந்த வீதியை செப்பனிடும் பணியை ஆரம்பித்துள்ளமை நோக்கத்தக்க விடயமாகும். மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ; ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள் | Virakesari.lk
  10. மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம் 12 Jan, 2026 | 07:24 PM (நெவில் அன்தனி) மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்கக்காரவை முந்திச்சென்ற விராத் கோஹ்லி, அந்த பட்டியலில் டெண்டுகல்கருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிராக வரோதரா, கோட்டம்பி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியல் அரைச் சதம் குவித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்து சாதனை ஏடுகளில் தனது பெயரை பதித்துக்கொண்டார். டெஸ்ட், சர்வதேச ஒருநாள், சர்வதேச ரி20 ஆகிய மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 100 சதங்கள், 164 அரைச் சதங்களுடன் 34357 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரைவிட 127 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள விராத் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார். 557 போட்டிகளில் 624 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள விராத் கோஹ்லி 84 சதங்கள், 146 அரைச் சதங்களுடன் 28068 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 தடவைகள் துடுப்பெடுத்தாடி 63 சதங்கள், 153 அரைச் சதங்களுடன் 28016 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் விராத் கோஹ்லி 93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்தப் போட்டியின்போது சிரேஷ்ட வீரர்களான விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் கௌரவிக்கப்பட்டனர். இந்தியா சார்பாக விராத் கோஹ்லி 18 வருடங்களாகவும் ரோஹித் ஷர்மா 19 வருடங்களாகவும் விளையாடி வருகின்றனர். மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 20074 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் ஷுப்மான் கில்லுடன் 118 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயருடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஷுப்மான் கில் 56 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானா 29 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கைல் ஜெமிசன் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கல்ஸ் 62 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்சித் ராணா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம்
  11. முதல் நாள் இன்னும் முடியவில்லை. இது... ஐந்தாவது மணித்தியாலத்தில் எடுத்த படம். 😂 அதிகமாக உணவு உண்ட களைப்பாகவும் இருக்கலாம். 🤣
  12. கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில் மோதி கார் விபத்து ; 4 பேர் பலி 12 Jan, 2026 | 07:17 PM கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பஸ் ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  13. அடுத்தது ஈரான் ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்ய உள்ளார். அடுத்தடுத்து பலநாட்டு ஜனாதிபதியாக சத்தியமாணம் செய்ய உள்ளார்.
  14. விமலின் சத்தியாக்கிரக போராட்டம்: நீதிமன்றின் உத்தரவு Jan 12, 2026 - 03:54 PM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறித்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkb0n6j503tco29nt0my6oly
  15. கரூர் சம்பவம் குறித்த டெல்லியில் விஜயிடம் சிபிஐ விசாரணை - என்ன நிலவரம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னையில் இருந்து விஜய் கிளம்பியபோது 36 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். விசாரணைக்காக விஜய் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவரிடம் காலை சுமார் 11.30 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியம் 3 மணியைத் தாண்டி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images தவெக நிர்வாகிகளிடம் ஏற்கெனவே விசாரணை இந்த வழக்கில் ஏற்கனவே அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களான ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் டெல்லியில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. கரூரில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, கரூருக்கு வரவழைத்து ஆய்வும் நடத்தப்பட்டது. அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. இருந்தபோதும் அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவுசெய்தது. அதன்படி ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பட மூலாதாரம்,ANI மேல்முறையீடு கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? பட மூலாதாரம்,Getty Images மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். கரூரில் நடந்தது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்தது. இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cwy13pl0d91o
  16. சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை Published By: Vishnu 12 Jan, 2026 | 02:33 AM (ரங்கிரி தம்புள்ளை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க நிலைநாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது வனிந்து ஹசரங்க இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். தனது 92ஆவது போட்டியில் 90ஆவது இன்னிங்ஸிலேயே 150 விக்கெட்களை அவர் பூர்த்தி செய்தார். இதன் மூலம் மிக வேகமாக அதாவது குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிலைநாட்டியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தானின் அறிமுக வீரர் கவாஜா நவேயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமே சர்வதேச ரி20 போட்டிகளில் வனிந்து ஹசரங்க 150ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். பாகிஸ்தானுடனான கடைசி ரி20 போட்டியில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க, இதுவரை 90 இன்னிங்ஸ்களில் 151 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235789
  17. Today
  18. மத்தியான சாப்பிட்டுக்கு ஒருக்கால்... மறக்காமல் எழுப்பி விடுங்கோ. 😂
  19. சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி. 🙏
  20. யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்கள ஆதரவு! 12 Jan, 2026 | 04:21 PM யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார். வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்துத் தெரிவித்த ஆளுநர்: வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது. இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார். இதனை எவ்வளவு விரைவாகச் சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆரம்பிப்போம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/235849
  21. இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான் இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். குறித்த நிகழ்வானது தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கொவிட் பெருந் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டித்வா புயலின் போது இந்திய அரசு இலங்கைக்கு பெரும் உதவிகளை வழங்கியுள்ளமையை சுட்டிக்காட்டினார். அதற்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkaw905h03t4o29nipl2b1tq
  22. சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி புதிய இணைப்பு விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். செய்தி - தேவந்தன் முதலாம் இணைப்பு சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி - சுடரோன் https://tamilwin.com/article/accident-in-kilinochchi-murasumottai-2-death-1768217588
  23. வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்! வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்தப் பதிவில், “வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி, பதவியில் இருக்கும் ஜனவரி 2026” என்ற பதவியுடன் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த தலைப்பையும் வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவில் அமெரிக்கா “பெரிய அளவிலான” இராணுவத் தாக்குதலை நடத்தி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் பிடித்து நியூயார்க்கிற்கு அழைத்து வந்த சில வாரங்களுக்குப் பின்னர் டொனால்ட் டிரம்பின் இந்த கூற்று வெளிப்பட்டது. https://athavannews.com/2026/1459597
  24. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  25. ஓம். ஆனால் மஹோ-ஓமந்தை 2024 இல்தான் மீளமைத்தது. ஓமந்தை-யாழ் 2009 க்கு பின் போட்டது. ஆகவே மெயின் லைன் போல இல்லாமல் இது ஓரளவு திருத்தி விட்டு நாளுக்கு 2 ரெயில் ஓட்டுகிறார்கள். முழுதாக திருத்திய பின் 4 ரெயில் ஓடும் என நினைக்கிறேன். பஸ் மாபியா விட்டால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.