Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER)பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், மேலதிக தகவல்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காஸ் குக்கரின் விலை எனக் கூறப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட நபர் அவர்கள் வழங்கிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டு, அதற்கான தகவலை வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு அறிவித்துள்ளார். பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக கூறிய அந்த நபர்கள், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு காரணங்களை கூறி அவரை ஏமாற்றியுள்ளனர். அதன் பின்னர், பொருளை அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், காஸ் குக்கர் (GAS COOKER)அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அவர்கள் பயன்படுத்தியிருந்த வாட்ஸ்அப் இலக்கத்தை உடனடியாக அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அந்த முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்த முகப்பு புகைப்படத்தை ஆராய்ந்துள்ளார். அப்போது அந்த புகைப்படம் ஒரு புகைப்படக்காரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த தம்பதியினரின் படம் என்பதும், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் பின்னரே தாம் மோசடிக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1467461
  3. பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக் கோப்பு நிறைவு - அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு! 06 Mar, 2026 | 03:08 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பதவிய வடக்கு காட்டுப்பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் 2014.04.11 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது மூவர் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்கள். படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 2014.04.11 ஆம் திகதியன்று அதிகாலை பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 05 ஆம் இலக்க புங்கல கிராம சேவகர் பிரிவு கம்பிலிவெல வடக்கு காட்டுப் பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக எதிர்தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். இதன்போது மூவர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே பதவிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த உடைகள், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் அவர்களின் இரத்த மாதிரிகள் வழக்கு பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அநுராதபுரம் நீதிமன்ற சட்ட வைத்தியர் ஊடாக உடற்கூறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என்றார். பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக் கோப்பு நிறைவு - அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
  4. ஆம், கிருமி தன்மை வழமையானது - ஒப்பீட்டளவில் அதிகாரம் கூட இருக்கும் போது எந்த சக்தியும் அப்படியான தன்மையை எடுக்கும் என்பதும் - சோழர் கூட அப்படியே பார்க்கப்பட்டனர் என்பதும். ஆனால், இரானில், விவிலிய பிரளையத்தை நம்பி - ஆக குறைந்தது cognitive dissonance ஆக. கவனமாக தான் சொல்லின் பிரயோகம் - முழு மேற்கையும், us, இஸ்ரேல் ஐ (இதுவரையில்) குறிக்கவில்லை. இதன் ஆபத்து தன்மை ஒருவருக்கும் புரியவில்லை. வெனிசுவேலாவில் நடந்தது நலன்கள் / வளங்களை / மேற்கு கோளத்தில் ஏகபோகம் போன்றவற்றுக்காக கைப்பற்றுவது (வழமையான கிருமி தன்மை) ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கையை அதனுடன் சேர்த்து. இரான் சரி வந்தால், மத்திய கிழக்கை கட்டுடப்படுத்தும் சக்தி உலகை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையயையும், அனுபவமும் இருப்பதால், அதை தந்தது விவிலிய பிரளய நம்பிக்கையில் இரானை கைப்பற்றியது என்ற யதார்ததமே என்பது செய்தவர்களுக்கு மீளுறுதிப்படுத்தப்படும். அதே விவிலிய பிரளய நம்பிக்கையோடு மிகுதி உலகத்துக்கும் இப்படி செய்யலாம் , செய்வது சாத்தியமாகும் என்ற அதீத நம்பிக்கை பிறக்கும். அண்மையில் அமெரிக்கா ராஜாங்க செயலாளர் (Munich security conference) காலனித்துவதை மீண்டும் நாடவேண்டி இருப்பதாக சொல்லியது. அதில் அவர் பிரயோகித்த மொழி, கிட்டத்தட்ட ஹிட்லர் / நாசிகள் (கேபெல்ஸ்) பாவித்த மொழி (எமது நாகரிகம். கலாசாரம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத உன்னதமானது .... we are the defenders of western civilisation ...) இதுக்கு, ஐரோப்பிய நாடுகள் (பிரதிநிதிகள்) செய்தது, கைதட்டி வரவேற்றது (standing ovation). ஈரான் (அழிந்தாலும்), சமாளித்தால் , உலகமே நன்மை அடையும் (மற்ற திரியில் இரான் அதிகாரி சொல்லி இருப்பது, இதை முன்பே நான் இங்கு சொல்லி இருக்கிறேன்). வேடிக்கை, இங்கே (சட்டம், ஒழுங்கில் இயங்கும்) இரானை பற்றி தெரியாமல், அல்லது தெரிந்து, குறிப்பிட்ட சிலரின் குறிப்பிட்ட நாட்டுக்கான வாஞ்சையில். கரிச்சு கொட்டப்படும் இரானின் ஆட்சி, கரிச்சு கொட்டுபவர்களின் சந்ததி நன்மைக்கு (மறைமுகமாக) போராடுகிறது. அவர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் (விவிலிய பிரளயக் கிருமிகள் இயக்கும்) அரசாங்கங்கள் , அவர்களின் சந்ததியை புதைக்க பாரிய சண்டை செய்கிறது ஈரானுடன் . ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கை: 1) அமெரிக்கா இஸ்ரேல் தூதுவர் - அகன்ற இஸ்ரேல், முழு மத்திய கிழக்கும் இஸ்ரேல் விவிலியத்த்தின் அடிப்படையில் உரிமை உள்ளது. - tucker carlson உடனான பேட்டியை பார்க்கவும். 2) டிரம்ப் ஓ, ராஜாங்க செயலாளரோ எந்த கண்டிப்பும் இல்லை , இரண்டு கட்சிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை 3) இரான் மீது யுத்தம் முழு பொய்யின் அடிப்படையில் ( அதன் காரணத்தை ... இரானின் முழு சமூகத்தை அழிப்பது ... என்ற விளக்கத்தை பல இடங்களில் சொல்ல்லிவிட்டேன்). அதுக்கு முன்னுதாரணம் இருக்கிறது, 4) ஓமான் வசதிப்படுத்தனர் / மத்தியஸ்தர், steve விட்கொப் , jarred ஐ நம்பாது (இதுக்கு வேறு முக்கிய நிகழ்வும் இருக்கிறது), தொலைக்காட்சியில் பகிரங்காக இணக்கம் எட்டப்பட்டு விட்டது என்று அறிவித்து, அதை ஒப்பந்த வடிவில் ஆக்குவதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கேட்டு இருந்தார். 5) steve witkoff அவரின் வாயாலேயே சொன்னது, இவ்வளவு இராணுவ பலத்தை காட்டி கட்டி எழுப்பியும், ஏன் இரான் காலில் விழவில்லை என்பது டிரம்ப் க்கு புதிராக இருப்பதாக. பேரம் என்றுபேச்சுவார்த்தை தொடங்கி இரான் காலில் விழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இரான் காலி விழுவதே நான் சொல்லிய சமூகத்தை அழித்து ... என்ற அதே விளைவு , இரானுவ பலத்தை பாவிக்காது பெறுவது. 6) ஆனால், அதை விட பெரியது, டிரம்ப் எந்த காரணமும் சொல்ல முடியாது இருப்பது. 7) அமெரிக்கா படை துறை தலைமை மத்தியில் விவிலிய பிரளய நம்பிக்கை, படைகளை உசுபேற்றுவதில், கட்டளை பிறப்பிப்பு சங்கிலியில் 8) இஸ்ரேல் சொல்வது அடுத்த இலக்கு, துருக்கி, பாகிஸ்தான், அதுவும் ஈரானை போன்றே என்றும். அதன் அர்த்தம் என்ன ? அமரிக்காவும் இஸ்ரேல் உடன் சேரும். 9) Lindsey Graham (இங்குள்ள குறிப்பிட்ட ஒருவர் அதை நீட்டி , அகட்டி விளக்கம் கொடுத்தாலும்) வெளிப்படையாக சொல்லி இருப்பது, புனித யுத்தம் 10) இதை நான் மட்டும் நம்பவில்லை https://www.thenation.com/article/politics/trump-iran-religious-war-crusades/
  5. இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்! 06 Mar, 2026 | 03:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதில்லை. ஆனால் அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த விடயங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சபையில் இருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவுக்கு எதிராக கதைக்கமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. கடற்படை பயிற்சி முகாம் எமது நாட்டில் நடத்தவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி இந்திய விசாலாப்பட்டினத்திலே இடம்பெற்றது. ஆனால் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விடயத்தில் இந்தியா லாவகமாக எமது நாட்டுக்கு அதனை திசை திருப்பி இருக்கிறது. இந்தியாவுடன் உங்களது ஜனாதிபதிக்கு தோல்மேல் கை போட்டுக்கொண்டு இருக்கக் சொல்லுங்கள். ஆனால் முதுகில் குத்தும்வரை தெரியாமல் இருக்கும். ஈரானின் இரண்டாவது கப்பலை இந்தியா எடுப்பதாக நீங்கள் இந்த சபையில் தெரிவித்து வந்தீர்கள். ஆனால் இரண்டாவது கப்பலையும் இந்தியா எமக்கு தள்ளிவிட்டார்கள். கடற்படையின் பயிற்சி எமது நாட்டிலா இடம்பெற்றது என கேட்கிறேன். இந்தியாவில் தானே இடம்பெற்றது. இந்தியா லாவகமாக இரண்டு கப்பல்களையும் எமது பக்கம் தள்ளிவிட்டார்கள். ஈரான் தூதரகத்துக்கு நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) சென்றோம். அப்போது தூதுவர் எங்களிடம் தெரித்த விடயம்தான், கடற்படை தளபதி இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சியில் இருந்துள்ளார். அப்போது, இலங்கைக்கு வருமாறு ஈரான் கடற்படைக்கு வாய்ப்பேச்சாக தெரிவித்திருக்கிறார்.,இதுதொடர்பாக கடற்படை தளபதி பொறுப்புடனா தெரிவித்தார் என்பது தொடர்பில் விசாரித்து, பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியா என்பது எம்மை போன்று சிறிய நாடு அல்ல. உலகில் இருக்கும் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்று. அப்படியான நாடு, இந்த விடயத்தில் மெளனம் காத்து, பந்தை எமது பக்கம் எறிந்துவிட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.என்றாலும் ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என பலர் தெரிவிக்கப்பட்டனர். முன்னாள் சட்டமா அதிபர் தப்புலலிவேராவின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்து தருமாறு கோட்டாபய ராஜபக்ஷ்விடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனை கோட்டாபய ராஜபக்ஷ் நிராகரித்ததாலே, தப்புலலிவேரா ஓய்வு பெற்றுச்செல்லும்போது, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்தார். ஆனால் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு தெரிவித்தபோது, அவர் செல்லாமல் மறைந்திருந்தார் என்றார். இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!
  6. டி20 உலகக்கோப்பை 2026: இறுதிப் போட்டி மைதானத்தின் அவலம் By ஆர். அபிலாஷ் March 05, 2026 இறுதிப் போட்டியையும் மும்பை வான்கேடில் நடத்தினால் செமையாக இருந்திருக்கும். ஆனால் குஜராத்தின் அழுது வடியும் ஆடுதளத்தில்தான் ஆடப்போகிறார்கள். பாஜக ஆள்வதால் எல்லா இறுதிப் போட்டிகளையும் அங்குதான் நடத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அந்த மைதானத்தின் ஆடுதளம், அங்குள்ள விளக்குகளின் அமைப்பு, தொலைவான எல்லைக்கோடுகள் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு ஏற்றவை அல்ல. பந்து மட்டையாளருக்கு வராது, விளாசினாலும் சிக்ஸர் வராது, விளக்குகளின் அமைப்பினால் களத்தடுப்பின்போது கேட்ச் பிடிப்பது சிரமம். கோழிக்கோடு கெட்டி அல்வாவில் ஈ சிக்கிக் கொண்டதைப் போலத்தான் அங்கு பந்தும். அது மைதானத்தை விட்டு வெளியே சுலபத்தில் போகாது. எல்லாம் தலையெழுத்து! டி20 உலகக்கோப்பை 2026: இறுதிப் போட்டி மைதானத்தின் அவலம்
  7. பையன் வருகை இன்மையால் நொந்து போயிருக்கும் இந்த விளையாட்டு திரிக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் முயற்சியாக நடுவரின் தீர்ப்பே இறுதியானது என உங்கள் உயரதிகாரத்தினை பயன்படுத்தி போட்டி தொடங்கும் வரை சுவாரசியமாக கொண்டு செல்ல ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம், எப்படியும் போட்டி முடிவுகளில் மாற்றம் இல்லைதானே!(இந்தியா வெல்வது உறுதி என கூறுகிறார்கள்)🤣
  8. உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்! Mar 1, 2026 - 08:24 AM மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது. அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது. டிப்பர் வாகனம் தனது இயந்திரத்தின் மீது ஏறுவதைக் கண்ட உழவு இயந்திர சாரதி, சாமர்த்தியமாக கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். இதனால் அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களை இழுத்துச் செல்லும்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்!
  9. அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர 06 Mar, 2026 | 06:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அவசரகால சட்டத்தின் அமுலாக்க காலத்தை நீட்டிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தமானிக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை பற்றி கேட்பதற்காகவே காலையில் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டேன்.ஆனால் நாங்கள் பேசினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளிவருமோ என்ற அச்சத்தில் சபாநாயகர் எமக்கு பேசுவதற்கு இடமளிப்பதில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்தியா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயற்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் வழமைக்கு மாறாக துரிதமாக செயற்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.ஆகவே ஆணைக்குழு குமார ஜயகொடிக்கு ஒரு வகையிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிறிதொரு வகையிலும் செயற்படுகிறது. அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டமும் மீறப்பட்டுள்ளது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பார்க்க வருபவர்கள் பொலிஸ் அறிக்கை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுடன் சட்டத்தரணி உரையாடும் போது அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளார்கள்.இதுவொரு புதுமையான சட்டம். ஈரான் கப்பலை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்தார், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டார் என்று குறிப்பிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை கடற்பரப்பில் மார்ச் 02 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த உளவு தகவல்களுக்கு அமைவாகவே ஈரான் கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துகிறார்கள் என்றார். அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
  10. போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪
  11. சிகப்பு + கறுப்பு 75:25 விகிதத்தில் உள்ளதாக கூறுகிறார்கள் (தெளிவாக தெரியவில்லை 3 ஆம் இலக்க ஆடுகளம் மூடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்), மும்பை ஆடுக்ளம் போலவே உள்ளதாக கூறுகிறார்கள். இரண்டு அரையிறுதி போட்டிகளும் முழுமையாக பார்க்கமுடியவில்லை, இந்தியாவுடனான இங்கிலாந்து போட்டியில் மிக குறுகிய இங்கிலாந்து பந்து வீச்சு பார்க்க முடிந்தது. சுழலலுக்கு பந்து பெரிதாக திரும்பவில்லை போலவே இருந்தது ஆனால் பந்து தரையில் இருந்து எதிர்பார்த்ததினை விட அதிகமாக எழுந்தது என நினைக்கிறேன், ரசீட்டின் ஓவரில் இசான் கிசனுக்கு ஒரு பாக் ஸ்பின் (ஸ்லைடர்) போட்டு அவுட்டாக்கினார், பந்து தரையில் படும்போது நின்று தாழ்வாக உள்ளே வரும், கிசானுக்கு ஓப் ஸ்டம்பிற்கு வெளியே போட்ட பந்து பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பிடி கொடுத்து அவுட்டாகினார், பிட்சில் பந்து நன்றாக நின்று வந்ததா (கிசான் டைமிங்கில் பிழை விட்டாரா) அல்லது எதிர்பார்த்தனனை விட பிட்சில் பவுன்ஸ் அதிகமா என சரியான காரணம் தெரியவில்லை ஆனால் இவ்வாறான ஆடுகளத்தில் ஓவர் ஸ்பின் பொதுவாகவே சரியான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக சிகப்பு மண் அதிகம் இருந்தால் பந்து திரும்பும் (Bounce & Turn), ஏன் திரும்பவில்லை என தெரியவில்லை. பந்து திரும்பவில்லை எனில் விக்கெட்டு விக்கெட்டாக பந்து வீசும் வருணின் நிலை கடினமாகிவிடும், நியுசிலாந்து அதிரடி துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள் என்பதால் அக்சரினை ஆரம்ப ஓவரினை அஸ்ரிப் சிங்குடன் தொடங்க விடுவது நல்ல தெரிவாக இருக்கும்என நினைக்கிறேன்(டீப் போர்வேர்ட் ஸ்குயார் லெக் + டீப் மிட்விக்கெட்). இந்த மைதானம் மும்பாயினை விட பெரிய மைதானம், 240 ஓட்டங்களுக்கு மேல் செல்லாது என நினைக்கிறேன், இந்தியாவின் பந்து வீச்சிற்கு 200 ஓட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நியுசிலாந்து வெல்வதற்கு வாய்ப்பில்லை என பெரிதும் கூறுகிறார்கள், ஆனால் நியுசிலாந்து திட்டமிடலில் சிறப்பான அணி! இந்தியாவினை 200 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களுக்கு தடுத்து நிறுத்துவது பற்றிய திட்டத்துடன் வருவார்கள், கடந்த போட்டியிலும் நீசம் அதிகளவான ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார், இந்த சிகப்பு மண்ணில் உயரமான கைல் ஜெமிசனை நீசத்திற்கு பதிலாக எடுத்துவர கூடும். சுழல் பந்து வீச்சாளர்கள் ஒவர் ஸ்பின்னில் ஆட்டக்காரர்களின் உடலின் கோட்டில் பந்து வீசுவார்கள் வீரர்கள் விக்கெட்டிலிருந்து விலகினால் வைடான கோட்டில் வீசுவார்கள், ஆனால் நெருக்கடி மட்டும் விக்கெட்டினை கொடுக்காது விக்கெட்டினை எடுப்பதே இந்தியாவினை கட்டுப்படுத்தும். இந்தியாவிற்கு இலகுவான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள், ஆனால் நியுசிலாந்து அவ்வாறில்லாமல் ஒரு சிறந்த போட்டியினை வழங்கும் என விரும்புகிறேன் (உலக கிண்ணத்திற்கு முன்னதாக நடைபெற்ற இரு நாடுகளும் பங்கு பற்றிய ரி20 போட்டியில் இந்தியா நியுசிலாந்தினை போட்டு மிதி மிதி என மிதித்திருந்தது). இந்தியா நியுசிலாந்து அணிகள் இந்த உலக கிண்ணத்திற்கு முன்னர் மோதிய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட டரல் மிச்சல் நியுசிலாந்து அணிக்கு நல்ல ஒரு முடிவினை வழங்குவாரா? நியுசிலாந்து வெற்றியோ தோல்வியோ நிச்சயமாக அவர்கள் பெருமைப்பட கூடிய வகையில் விளையாடி உள்ளார்கள் (மோசமாக தோற்றாலும் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை)
  12. இது என்ன வம்பாய் போச்சுது. அமெரிக்காவின் சொல்லை கேட்கிறதா, இல்லை… ஈரானின் சொல்லை கேட்கிறதா. எப்படியும் ஆரோ ஒருத்தன் கோவிக்கப் போகிறான் என்பது நிச்சயம். இலங்கையின் உள் விவகாரத்தில்… அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று…. விமல் வீரவன்சவையும், அஸ்கிரிய தேரரையும், காத்தான்குடி போராளிகளையும் திரட்டி ஒரு போராட்டம் பண்ண வேண்டியதுதான். 😂
  13. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர்களை தாண்டியுள்ளது Published By: Vishnu 07 Mar, 2026 | 05:59 AM உலக சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை அக்டோபர் 2022க்குப் பிறகு முதல் முறையாக US$90 (£67) ஐத் தாண்டியுள்ளதாக பிபிசி செய்தி சேவை கூறுகிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைப் போலவே, மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை உலகப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி, பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக எரிசக்தி ஏற்றுமதி நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை $150 ஆக உயரக்கூடும் என்று முன்னர் எச்சரித்திருந்தார். இது "உலகப் பொருளாதாரங்களின் சரிவுக்கு" வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். உலகின் எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கையும் அதன் இயற்கை எரிவாயுவில் 17% ஐயும் வழங்கும் வளைகுடாப் பகுதி, தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் சுமார் 300 டேங்கர்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் ஈரான் அதன் வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பல்களையும் தடுக்க அச்சுறுத்துகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர்களை தாண்டியுள்ளது
  14. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம் Published By: Vishnu 07 Mar, 2026 | 05:54 AM ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான 'IRIS Lavan' இந்திய அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கப்பலில் உள்ள 183 பணியாளர்களுக்கு கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த அவசர அனுமதியைக் கோரியது, மார்ச் 1 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்
  15. Today
  16. புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம் ஜொங் உன் : கடற்படையில் அணு ஆயுத விரிவாக்கத்தை வேகப்படுத்த உறுதி 06 Mar, 2026 | 10:41 AM வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது நாட்டின் புதிய டெஸ்ட்ராயர் போர்க்கப்பலை இரு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, அந்தக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனைகளையும் பார்வையிட்டதாக வடகொரிய அரசின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, வடகொரிய கடற்படையின் அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகளை வேகப்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி, கிம் ஜொங் உன் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மேற்குக் கடற்கரை நகரமான நம்போ கப்பல் கட்டும் தளத்திற்கு விஜயம் செய்து, 5,000 தொன் கொள்ளளவு கொண்ட “சோ ஹ்யோன்” (Choe Hyon) என்ற புதிய டெஸ்ட்ராயர் கப்பலை ஆய்வு செய்துள்ளார். இந்த போர்க்கப்பல் முதன்முதலில் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. மேலும், அதே வகையைச் சேர்ந்த மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிம் ஜொங் உன், “சோ ஹ்யோன்” கப்பலின் உருவாக்கம் தனது இராணுவத்தின் செயல்பாட்டு பரப்பையும் முன்கூட்டிய தாக்குதல் திறனையும் (Pre-emptive Strike Capability) அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக கூறியுள்ளார். வடகொரிய அரச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த போர்க்கப்பல் பல்வேறு ஆயுத அமைப்புகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான ஆயுதங்கள், கடற்படை எதிர்ப்பு ஆயுதங்கள், அணு ஆயுதங்களை தாங்கக்கூடிய பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் போன்றவை இடம்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்கொரிய இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் இந்த கப்பல் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், இந்த கப்பல் முழுமையாக செயலில் ஈடுபடத் தயாராக உள்ளதா என்பது குறித்து சில நிபுணர்கள் சந்தேகங்களை முன்வைத்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற சோதனையில், “சோ ஹ்யோன்” போர்க்கப்பலில் இருந்து பல க்ரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கிம் ஜொங் உன் நேரில் பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் “தந்திரோபாய” (Strategic) ஆயுதங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக இந்த சொல் அணு ஆயுதங்களை தாங்கக்கூடிய ஏவுகணைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. போர்க்கப்பலின் கடல் சோதனைகளை பார்வையிட்ட கிம் ஜொங் உன், இந்த கப்பல் அனைத்து செயல்பாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு புதிய போர்க்கப்பல்களை இதே அல்லது அதற்கு மேம்பட்ட வகையில் கட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா பெரும்பாலும் பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது கிம் ஜொங் உன் கடற்படை திறனை வலுப்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம்போ கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல், வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவல் தினமான அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்படை அணு ஆயுத விரிவாக்க முயற்சிகள் “நமது கடல் அதிகாரத்தை பாதுகாப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என கிம் ஜொங் உன் கூறியுள்ளார். சில அரசியல் ஆய்வாளர்கள், வடகொரியா விரைவில் புதிய கடல் எல்லையை அறிவிக்கத் தயாராக இருக்கலாம் என்றும் அது தென்கொரிய கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். கொரிய போரின் பின்னர் அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் வரையப்பட்ட Northern Limit Line கடல் எல்லையை வடகொரியா ஏற்க மறுத்து வருகிறது. இந்த கடல் எல்லைப் பகுதி கடந்த ஆண்டுகளில் பல கடற்படை மோதல்களுக்கு காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத களஞ்சியத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களை கிம் ஜொங் உன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனவும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது. புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம் ஜொங் உன் : கடற்படையில் அணு ஆயுத விரிவாக்கத்தை வேகப்படுத்த உறுதி
  17. ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்! 07 Mar, 2026 | 11:09 AM இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது. அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவர்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மார்ச் 06 ஆம் திகதியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டுத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகள் விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
  18. ஜலசந்தியில் என்று எண்ணுகிறேன். மூன்று கப்பல் விவகாரத்தின் பின்பே எரிய விட்டிருக்கிறார்கள். பலர் இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு ரசியாவிடம் எண்ணெய் எடுத்துக்கோ என்று ரம் இந்தியாவுக்கு கட்டளை இடுகிறார்.
  19. இந்தியக் கப்பல் எங்கே பற்றி எரிகிறது. நான்…அந்தச் செய்தியை வாசிக்கவில்லை ஈழப்பிரியன்.
  20. அண்ணா, கால ஓட்டத்தில் மேலும் மேலும் நாகரிகமானவர்களாக மாற வேண்டும் என்பது தான் இங்கு ஆறு அறிவுகள் உள்ள ஒரேயொரு உயிரினமாக இருக்கும் மனிதர்களின் சரியான பாதை. மனிதர்கள் தொடர்ந்தும் பாமரர்களாக இருக்க, அவர்கள் வேறு சிலரால் அந்த சில மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் தவறு; சக மனிதர்களை கொன்றழிப்பதும் தப்பு. இவை இரண்டுமே மனிதர்களின் தெரிவாக இருக்கக்கூடாது. பெண்ணடிமை வாதமும் மிகப் பெரிய கொடுமை அல்லவா.................. நூறு வருடங்களின் முன் எங்கள் சமூகம் இருந்த நிலையில் இருந்து நாங்கள் எங்கேயோ வந்துவிட்டோம். எங்கள் சமூகங்களில் ஐம்பது வருடங்களின் முன் இருந்த நிலை கூட பாகுபாடுகளும், போலி நம்பிக்கைகளும் நிறைந்தவையே. உலகில் எல்லா சமூகங்களும் முன்னோக்கியே போக வேண்டும், ஏனென்றால் காலம் ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் வலிந்து உருவாக்கப்பட்டவையும், திணிக்கப்பட்டவையும், சிலரின் சுயநலன்களுக்காக. உலகிலேயே மிகப் பெரிய உரிமை தனிமனித சுதந்திரம். அங்கிருந்தே எல்லாம் உருவாகின்றது. தனிமனித சுதந்திரத்தில் இருந்தே சமூகம், நாடு, தேசம், உலகம் என்று சுதந்திரம் விரிகின்றது. இந்த சுதந்திரம் கிடைக்காத மனிதன் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு பூனைக் குட்டி போலவே. பூனைக் குட்டி கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது என்று நினைப்பதை விட, அதன் வாழ்வையே அது இழந்து விட்டது என்று நினைப்பதே இங்கு சரியான பார்வையாக இருக்கும். நாகரீக மனிதர்களில்/நாடுகளில் எத்தனை நாடுகள் இன்று போரில் ஈடுபடுகின்றார்கள் என்று பார்த்தால், மிகச் சில நாடுகளே அதைச் செய்கின்றன. அமெரிக்காவும், இஸ்ரேலும் முதலாவது. அதன் பின்னர் ரஷ்யா. இன்னும் சில நாடுகள். முடிந்த வரை எல்லோரும் போர்களையும், முரண்பாடுகளையும் தவிர்க்கவே விரும்புகின்றார்கள். சீனா நல்ல ஒரு உதாரணம். இன்றைய அமெரிக்க அரசை ஒரு உதாரணமான அரசாக நாங்கள் எடுக்க முடியாது. மிகவும் தவறான அடிப்படையில் அமைந்த அரசு அது. இந்த அரசை தேர்ந்தெடுத்த ஆதரவாளர்களும் ஒரு வகையில் பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் கொண்டவர்களே. அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து இத்தகைய தலைவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு நிராகரிக்கவேண்டும்.
  21. வரவேற்று விட்டு முதுகில் குத்தியதா இலங்கை? டெனா கப்பலை இந்தியாவில் நடந்த கண்காட்சியின் போது இலங்கையில் தரித்து செல்லுமாறு அழைப்பினை வழங்கியதாம் இலங்கை நேவி. இதன்படி விசாகபட்டனத்தில் இருந்து கப்பல் இலங்கை நோக்கி நகர ஆரம்பித்து இலங்கையை நெருங்கும் போது, இலங்கை அழைப்பை விலத்தி, தமது எல்லைக்குள் வரவேண்டாம் என சொன்னதாம். என்ன செய்வது என தெரியாமல் 11 மணி நேரமாக காத்திருந்த டெனா, தாக்குதலில் சிக்கியதாம். https://www.jaffnamonitor.com/featured/invited-then-turned-away-the-11-hour-wait-that-preceded-iris-denas-sinking/ பிகு எம்மை அழிக்க ஆதரவு நல்கிய முல்லாக்களை இலங்கையே நம்ப வச்சு கழுதறுத்துள்ளது. இதே போல் மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பவே கூடாது என இலங்கையை அமரிக்கா நெருக்கி உள்ளதாம். சர்வதேச சட்டத்தின் படியும், நடுநிலைமையை இலங்கை பேண விரும்பின் அனுப்ப கூடாது. மீறி அனுப்பினால் அது ஈரானுக்கு போருதவி என கருதப்படலாம்.
  22. அரசியலில் எவரும், எப்போதும் எதிரியின் பலவீனத்தை தாக்குவதே வழமை. அது சீமான், விஜை, திராவிட கட்சி தலைவர்கள் எல்லாரிடமும் முயற்சிக்கப்படும், பட்டிருக்கும்.
  23. குமாரசாமி, கோசான் சொன்னது சரிதான். சம்பிராதய முறைப்படியான திருமணம் சிறீலங்காவில் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு, எனது தந்தை இறந்தது 1962இல். அப்பொழுது பென்ஷனுக்கு விண்ணப்பித்த பொழுது, திருமணம் சம்பிராதய முறைப்படி நடந்தது என்றே குறிப்பிட்டார்கள். ஐயரின் ஒப்புதலும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது (50-60 ஆண்டுகளுக்கு முன்னார்) பிறப்புப் பதிவில் பெற்றோர்கள் திருமணமானவர்களா? பதிவுத் திருமணமா? சம்பிராதயத் திருமணமா? என்ற கேள்வி இருந்தது. இப்பொழுதும் விண்ணப்பப்படிவத்தில் அப்படியான கேள்வி இருக்கிறதா தெரியவில்லை. சம்பிராதயத் திருமணமானாலும் பதிவுத் திருமணத்தில் எப்பொழுதும் சிக்கலில்லை.
  24. இறுதிப் போட்டிக்கான, ஆடுதளமும் ஓட்டம் அடிக்கக் கூடிய தளமாம். சிவப்பும் கறுப்பும் கலந்து செய்த தளம். 200க்கு மேல அடிக்க வேணும் போல. அங்கால பிஃன் அலனும் இங்கால சஞ்சு சாம்சனும். யார் சாதிக்கப் போகினம்.
  25. ரம்பை நெத்தன்யாகு வழி நடத்துகிறார். மோடியை ரம் வழி நடத்துகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.