Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அந்தக் கால காதல் கடிதங்களில் இந்த பாட்டு கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
  3. அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.
  4. Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga தமிழர்கள் இல்லாத இலங்கை அணி. ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?
  5. வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......! --- கண்ணாளனே ---
  6. கொழும்பு மைதான‌த்தை த‌விற‌ ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள் இல‌ங்கை மைதான‌ங்க‌ள்...................
  7. அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍
  8. பாக்கிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு இப்போது ந‌ல்ல‌ நிலையில் இருக்கு..............சிறந்த‌ வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தெரிவு செய்து இருக்கின‌ம்................
  9. ஈவிரக்கமற்ற ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வேறெந்தப் போராட்டமும் இன்றைய உலகில் வெற்றி தராது.
  10. இது என்ன‌ கொடுமை லொள் நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன்........... இந்த‌ முறை ஜ‌க்க‌ம்மாவை கைவிட்டு அல்லா அக்ப‌ட் சொல்ல‌ வேண்டிய‌து தான் ஹா ஹா😁........................
  11. அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂
  12. இத்தாலி அணியில் தென் ஆபிரிக்கா வீர‌ர் ஒருவ‌ர் விளையாடுகிறார இங்லாந் நாட்டை சேர்ந்த‌ வீர‌ரும் இத்தாலி அணியில் விளையாடுகிறார்................ இத்தாலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌க் கூடும்...................
  13. அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁
  14. Today
  15. அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
  16. இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
  17. யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇 (சு)மந்திரம் இது.. (சு)மந்திரம் தினம் தோறும்.. மனம் மோதும்ம்ம்ம்.. (பா)ஆவி நீ எமில்.. துரோகி நீ இதை... கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்.. (சு)மந்திரம் இது (சு)மந்திரம் தினம் தோறும்... மனம் மோதும்.. மந்திரம் இது.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பிகு எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.
  18. உலகக் கிண்ணம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் நிலைமைதான் திரிசங்கு நிலை. "புறக்கணிப்பது எங்கள் முடிவு அல்ல. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அணித்தலைவர் சால்மன் ஆக்கா பேட்டியில் சொல்லியுள்ளார். கேட்கும் போது கவலையாக உள்ளது. இன்று முதல் பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.
  19. கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 02 Feb, 2026 | 07:02 PM கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து நேற்றைய தினம் (01) இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம், மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்கவேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளிப் பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாசார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். Politics மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின்படி, “கிவுல் ஓயா" நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்நீர்த்தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்பூவரசங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. மேலும், 1921ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் "ஒதுக்குக் காடாக" அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரினுள் மூழ்கப்போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலமே தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்புக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் இந்நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதை "தொல்லியல் பாதுகாப்பு" என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்படவேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1.990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது. இப்பிரதேசங்களின் இனப்பரம்பல் அமைப்பையும் சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாகவே பார்க்கப்படுகிறது. எனவே. அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலமே சாத்தியமாகும் என்பதை அரசுக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237645
  20. தனிமையும் துணிச்சலும் January 31, 2026 துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்." இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள். மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை. ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது. இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை. தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை. அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம். https://www.writerabilash.in/2026/01/blog-post_31.html
  21. "மூன்று கவிதைகள் / 22" மின்னலாய் ஒரு பின்னல் [சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி] சாந்தம் நிறைந்த விழிகள் எனோ கோபம் கொண்டு பார்க்குதே பொறுமை தொலைத்து ஏங்குதே மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................. 'காதல் கோட்டைகள்' காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது காதலன் காதலி சேர்ந்து அமைத்தது காலம் முழுவதும் நினைவில் நிற்குதே! ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை ஆரவாரம் இல்லா உறவின் கனவு ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ புகைப்படக் கவிதை பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட, மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட, அலை அலையாக இன்பம் பொங்க, சோலைவனம் மனதில் துளிர் விட்டது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22" https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?
  22. அவர் Enter The Dragon படத்தில புருஸ்லி வந்த மாதிரி வருமாக்கும் என்று நினைத்திருப்பாரோ😁
  23. 'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன? பட மூலாதாரம்,@TVKHQITWingOffl கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா? தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் பேச்சின் துவக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆரை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார். "தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் நீங்கள்தான். 1977 ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆர். வானொலியில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசும்போது 'பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில், இப்படிப் பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டது எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அ.தி.மு.க.' என்று சொன்னார். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்" என்றார். பட மூலாதாரம்,@TVKHQITWingOffl தேர்தல் களம் பற்றி என்ன சொன்னார்? தொடர்ந்து, "எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் வெற்றிபெற்ற பிறகுகூட, சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறது என கேலியும் கிண்டலும் செய்தார்கள். அதைப்போலத்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும், இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு என்ன அனுபவம் இருந்தது தெரியுமா? 1952லிருந்து 72வரை தி.மு.கவில் இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு அதே வாயால், எம்.ஜி.ஆரைப் பார்த்து அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது, கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவருடைய தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கேலி செய்தார்கள். மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்களுக்கு கோட்டை என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. இப்போது அதே பழைய ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்" என்றார் விஜய். மேலும், "மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். நாம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தி.மு.க. கூட்டணி , இன்னொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.கவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஒவ்வொரு வீட்டிலும் டி.வி.கே. இருக்கிறது. தீயசக்தியை வீழ்த்த தூயசக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம் மக்கள் விசிலை ஊதுவதில் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@TVKHQITWingOffl 'தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்' அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சின் சாரமும் "எம்.,ஜி.ஆர் Vs தி.மு.க., எம்.ஜி.ஆரைக் கேள்வி கேட்டதைப் போல தன்னையும் கேள்வி கேட்கிறார்கள், தி.மு.கவால் எம்.ஜி.ஆரைக் கடைசிவரை வெல்ல முடியவில்லை, தி.மு.கவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி த.வெகதான்" என்பதாகவே இருந்தது. எம்.ஜி.ஆரைப் பார்த்து விஜய் காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை. "அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டு அதை எப்படி வழிநடத்துவது, இந்த அரசியல் கட்சியை மக்கள் அங்கீகரிக்கிற வகையில் எப்படிப்பட்ட கொள்கைகளை வகுப்பது என்ற அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரைப் பார்த்து காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.'' ''சினிமாவில் வேண்டுமானால் 'டூப்' போடுவது சரியாக இருக்கும். ஆனால் அரசியலில் 'டூப்' எடுபடாது. ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிற ஓர் அரசியல் தலைவர் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் செம்மலை. மேலும், பா.ஜ.கவை மகிழ்விப்பதற்காகவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் செம்மலை. "பா.ஜ.க. தலைவர்களே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில்தான் எங்கள் கூட்டணி என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருக்கிறபோது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என விஜய் சொல்லத் தயங்குகிறார்? ஒரு மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு கட்சியை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அந்த கட்சியினிடத்தை தான் பிடிக்கலாம் என்று ஒரு தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவின் பெயரை இவர் சொல்லவில்லையென்றாலும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முன்னணியிலே இருக்கிற எங்கள் கட்சியை இவர் சேதப்படுத்த முடியாது. மக்கள் மத்தியிலே எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைக் கூட சோதிக்காத கட்சியாக இருக்கிற த.வெ.க., தான்தான் களத்திலே ஹீரோ என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியதாக இருக்கிறது" என்கிறார் செம்மலை. பட மூலாதாரம்,@EPSTamilNadu முன்பே துவங்கிய விஜய் எம்.ஜி.ஆரை தன் பக்கமும் தி.மு.கவை எதிராகவும் விஜய் நிறுத்துவது இது முதல் முறையல்ல. மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டிலேயே இதைத் துவங்கிவிட்டார் விஜய். அந்த மாநாட்டில் பேசும்போது, "அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியானது" என்றார் விஜய். அதேபோல, ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், ''எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.கவை தீய சக்தி என்றார்கள். அதையே நானும் கூறுகிறேன். தி.மு.க தீய சக்தி, த.வெ.க. தூய சக்தி. தூய சக்தி த.வெ.கவுக்கும், தீய சக்தி தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. மக்கள் சக்தியான த.வெ.கவால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும்" என்றார். கிட்டத்தட்ட அதே தொனியில்தான் திங்கட்கிழமையும் பேசினார் விஜய். வெற்றியாக எதிரொலிக்குமா? திடீரென ஒருவர் தன்னை எம்.ஜி.ஆராக முன்னிறுத்தினால், அது தேர்தல் களத்தில் வெற்றியாக எதிரொலிப்பது சந்தேகம்தான் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை. "இயக்குநர் கே. பாக்யராஜில் துவங்கி விஜயகாந்த்வரை இப்படிச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இருந்த புறச் சூழல் அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவின் உருவகமாக இருந்தார். அவருடைய ரசிகர் மன்றங்கள் கட்சியின் ஒரு பகுதியாகவே இருந்தன. அதனால்தான் அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறியபோது கட்சி செங்குத்தாகப் பிளந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள் புதிய கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக மாறின. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாராலும் அந்த இடத்திற்குப் போக முடியாததற்கு அதுதான் காரணம்" என்கிறார் ராஜன் குறை. பட மூலாதாரம்,@TVKHQITWingOffl திமுக கூறுவது என்ன? தி.மு.க. விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. விஜய்யின் பேச்சு எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக் என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான டி.கே.எஸ். இளங்கோவன். "த.வெ.க. VS தி.மு.க. என முன்னிறுத்துவது எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக். அவர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்கிய பிறகு, அவர் தி.மு.கவை விமர்சித்தார், தி.மு.கவும் பதிலுக்கு அவரை விமர்சித்தது. இதிலென்ன இருக்கிறது? இதையெல்லாம் ஒரு வாதமாக முன்வைக்கிறார் அவர். மக்கள் பிரச்னைகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? எங்கள் கூட்டணிக் கட்சிகள்கூட மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். எதுவும் செய்யாமல் முதலமைச்சராகிவிட வேண்டுமென நினைக்கிறார் விஜய்" என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clymkkmy2pro
  24. நன்றிகள் , சிறு இடைவெளியின் பின் மீண்டும் இணைக்கிறேன்
  25. ‘Rebuilding Sri Lanka' நிதியத்துக்கு அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி 02 Feb, 2026 | 06:20 PM 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த சுவர்ணதிலக, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (2) கையளித்தார். இந்நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) கசுன் ஜயசூரிய மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) சாணக்க தொடங்கொடகே ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237644

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.