stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 04:13 PM (எம்.மனோசித்ரா) சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வசதியளிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படுத்தியுள்ள 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்மூலம், அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 40 இலட்சம் மாணவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி வகுதிகளின் கீழ் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் திருத்தங்களை உட்சேர்த்து, 'சுரக்ஷா', மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை 2025ஃ26 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கமைய, ஏற்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. 2025/26 ஆண்டுக்குரிய 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் 2026.08.31 வரை நடைமுறைப்படுத்தல், பெற்றார் உயிரிழப்பின் போது வழங்கப்படும் அனுகூலங்களை வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் குறைந்த வருமானம் கொண்ட வகுதியின் ஆண்டுக்கான வருமானம் 180,000ஃ- ரூபா தொடக்கம் 240,000 ரூபாவாக திருத்தம் செய்தல், விகாரமடைந்த முதுகெலும்பை நேர்த்தி செய்வதற்கு அணிகின்ற கருவி மற்றும் செவிப்புலக் கருவிக்கு 75,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீவிர நோய் வகுதிக்குட்பட்ட நோய்களுக்காகவும், மேலும் அடையாளங் காணப்பட்ட 07 நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சைகளைப் பெற்று வரும் மாணவர்களுக்கு 20,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்கல், தீவிர நோய் வகுதிகளுக்கான Pneumothorax, Encephalitis, Thalassemia, Hereditary spherocytosis kw;Wk; Sickle cell anemia போன்ற நோய்களை புதிதாககச் சேரத்துக் கொள்ளல், 2025.09.01 ஆம் திகதி தொடக்கம் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை விண்ணப்பங்கள் ; ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் இன் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தின் மூலம் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/234209
-
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 03:41 PM இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (2025 டிசம்பர் 23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர். 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது, உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இச்சந்திப்பில் இந்தியத் தூதுவர் திரு.Santosh Jha , இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் (IOR) திரு.Puneet Agrawal, இணைச் செயலாளர் திரு.Sandeep Kumar Bayyapu, பிரதித் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேSatyanjal Pandey ஆகியோரும், இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) திரு. சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234196
-
வெற்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி
வெற்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி Dec 23, 2025 - 04:22 PM லிட்ரோ எரிவாயு கம்பனியால் 2025 – 2027 காலப்பகுதிக்காக வால்வு இல்லாத வெறுமை LPG சிலிண்டர் வகைகள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக 04 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் லிட்ரோ எரிவாயு கம்பனிக்கு கிலோகிராம் 2.3 சிலிண்டர் 120,000 உம், கிலோகிராம் 5.0 சிலிண்டர் 185,000 உம், கிலோகிராம் 12.5 சிலிண்டர் 450,000 உம், கிலோகிராம் 37.5 சிலிண்டர் 7,000 உம் விநியோகிப்பதற்கான பெறுகை கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Sahamitr Metal Pressure Containers Public Co.Ltd இற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjiguaxf031jo29ntxjfzt18
-
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
பிரச்சனை கொஞ்சம் சிக்கல் போலத்தான் இருக்குமோ.
-
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் ! 23 Dec, 2025 | 01:15 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் ( Wang Junzheng ) தலைமையிலான குழுவே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை 09.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த குழு இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை பார்வையிடவுள்ளதுடன் இலங்கை அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளை சந்தித்து அனர்த்த்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் (Qi Zhenhong) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க உள்ளிட்ட பலர்கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவை வரவேற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/234190
-
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் Dec 23, 2025 - 10:55 AM இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார். தற்போது இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmji55eeq030yo29nacm6ad4j
-
இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ ; நடு வீதியில் ஒளிர்ந்த கார்கள்!
இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ ; நடு வீதியில் ஒளிர்ந்த கார்கள்! 22 Dec, 2025 | 04:59 PM அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கார வடிவமைப்புகள் களைகட்டி வருகிறது. வணிக வளாகங்கள், கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (20) பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின் இணைப்புச் சாதனங்கள் தீயில் எரிந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 1 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் அந்நகரின் வடக்குப் பகுதி முழுதும் இருளில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234127
-
இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா!
இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணத்தை அறிவித்த இந்தியா Dec 23, 2025 - 11:07 AM டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார். இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிப்புக்குள்ளான வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் புனரமைத்தல், முழுமையாக அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளின் மறுசீரமைப்பு என்பன அதில் அடங்குகின்றன. அத்துடன் பேரிடரை எதிர்கொள்ளுதல் மற்றும் அதற்கான தயார்நிலைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmji5krm9030zo29nb6l9zboy
-
இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்
இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா Published By: Digital Desk 1 22 Dec, 2025 | 07:29 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர். துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தபத்து 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். விஷ்மி குணரட்ன உட்பட மூன்று வீராங்கனைகள் அநாவசியமாக இல்லாத ஓட்டங்களை எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார்கள். பந்துவீச்சில் க்ரான்தி கௌட், தீப்தி ஷர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஷபாலி வர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிககப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர். ஜெமிமா ரொட்றிக்ஸ் 10 பவுண்டறிகள் உட்பட 69 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ். இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/234053
- Today
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்கள் கருத்தில் நான் தவறேதும் சொல்லவில்லை. நீங்கள் உட்பட சுமன் பற்றிய பலரின் பார்வைதான் எனதும். ஆங்கிலத்தில் “கழுவிய தண்ணீரோடு, குழந்தையையும் எறிய கூடாது” என்பார்கள். என் நிலைப்பாடும் அதுவே. ஒத்தை சீட்டு ஒப்பிலாமணி தாக்கப்பட்டார்😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
அது…வந்து….அதாகப்பட்டது…நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்….
-
கருத்து படங்கள்
- ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1457050- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Ex Commodity Floating Developed Float CODE US Dollar USD Euro EUR Japanese Yen JPY British Pound GBP Swiss Franc CHF Swedish Krona SEK (E)urop, (M)iddle(E)ast, (A)sia EMEA Float CODE Czech Koruna CZK Hungarian Forint HUF Israeli Shekel ILS Polish Zloty PLN Romanian Leu RON Ukranian Hryvnia UAH AsiaPac Float CODE Korean Won KRW Philippine Peso PHP New Taiwan Dollar TWD Thai Baht BHT Vietnamese Dong VND Ex-Commodity Pegged Developed (ExCom) PEG CODE Danish Krone EUR/DKK Asia (Ex-Comm) PEG CODE Hong Kong Dollar USD/HKD Singapore Dollar SGD/? Commodity Floating Developed Commodity Float CODE Australian Dollar AUD New Zealand Dollar NZD Canadian Dollar CAD Norwegian Kroner NOK EMEA Commodity Float CODE Egyptian Pound EGP Icelandic Krona ISK Russian Rouble RUB (M) South African Rand ZAR Turkish Lira TRY Asia Commodity Float CODE Indian Rupee INR Indonesian Rupiah IDR Kazakhstan Tenge KZT Malaysian Ringgit MYR இலத்தீன் அமெரிக்க நாடுகள் LATAM Commodity Float CODE Argentine Peso ARS Brazilian Real BRL Chilean Peso CLP Colombian Peso COP Mexican Peso MXN Peruvian New Sol PEN EMEA Commodity PEG CODE Kuwaiti Dinar KWD/? Saudi Arabian Riyal USD/ SAR UAE Dirham USD/AED Bahrainian Dinar USD/BHD Omani Rial USD/OMR Qatar Riyal USD/QAR Asia Commodity PEG CODE Chinese Yuan CNH/Not known- கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 / In English & Tamil சாமுவேல் யாழ்ப்பாண போதனை மருத்துவ மனையிலும் சாரா வேம்படி மகளீர் கல்லூரியிலும் கடமையாற்றுவதால், திருமணமான பின், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கள் வாழ்வை தற்காலிகமாக அமைத்தார்கள். சாரா, திருமண தம்பதிகளாக, தங்களது முதல் கிறிஸ்துமஸ்ஸை பிரத்தியேகமாக கொண்டாட, வீட்டை கவனமாக அலங்கரித்தாள். ஜன்னல் அருகே ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் நின்றது. மெழுகுவர்த்திகள் மெதுவாக மின்னின. அவள் வீட்டு வேலைகள் செய்யும் போதும் கூட கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாள். ஆனால் சாமுவேல், இவைகளில் ஒன்றிலும் தனிக்கவனம் செலுத்தாமல், தானும் தன்பாடாக இருந்தான். அதைக்கவனித்த சாரா, "கிறிஸ்துமஸ் நெருங்குகிறது, 2026 பிறக்கப்போகுது, ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய்," என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். "உன் ஆர்வத்தை, மகிழ்வை, செயலை பார்த்து, நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்," என்று அவன் பதிலளித்தான். "இது உலகை இரட்சிக்க பிறந்த இயேசுவின் பிறந்தநாள்," என்று அவள் இயல்பாகச் சொன்னாள். சாமுவேல் தயங்கி, பின்னர் மெதுவாகக் கேட்டான், "அவர் எப்போது பிறந்தார் என்று எப்படி உனக்குத் தெரியும்?" சாரா சிரித்தாள். "டிசம்பர் 25. அது அனைவருக்கும் தெரியும். ஏன் குட்டி பிள்ளைக்கு கூட , வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்க" என்றாள். ஆனால், அப்பொழுது சாமுவேல் வாக்குவாதம் செய்யவில்லை. அவன் அமைதியாக சிரித்தான், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க உதவினான். அன்பு, பொறுமையுடன் தொடங்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். மற்றது, இது, திருமணத்தின் பின், அவளின், முதல் கிறிஸ்மஸ். வாரங்கள் கழித்து, ஒரு சாதாரண மாலையில், உப்பரிகையில் [பால்கனியில்] அமர்ந்து இருவரும் நிலா ஒளியில் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று மூன்றாம் பிறை வானில் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சாமுவேலுக்கு அப்பொழுது பாரதிதாசனின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. துருக்கச் சிறுவன் ... "மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ ! கத்தோலிக்கச் சிறுவன்... "கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே கத்தோலிக்கச் சொத்து நீதான்! இந்துச் சிறுவன்... எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ ! அவன் அந்த பாடல் வரிகளை பாடிக் காட்டிவிட்டு, சாராவிடம் கேட்டான்: மூன்று பேரும் மொழியைக் கேட்டால், யாருக்கு சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்? சாரா, எந்த சிந்தனையும் செய்யாமல், எடுத்த உடனேயே, அது கத்தோலிக்கருக்கே என்றாள். சாமுவேல், அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, ... பாரதிதாசனின் அடுத்தவரியை பாடினான். சுயமரியாதைச் சிறுவன்... யாவரும் மனிதர் என்பது தெரிந்தால், நிலவும் பொதுவே என்பது தெரியும், அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே! அவள் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள். சாமுவேலும் மௌனமாக ஒரு வரலாற்றுப் புத்தகத்தைத் திறந்தான். “சாரா,” அவன் மெதுவாகக் கூறினான், கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாகத் தெரியவில்லை என்றான். அவள் மேலே பார்த்தாள், பின் சாரா முகம் சுளித்தாள். “அப்படியானால் அதை ஏன் மாற்ற வேண்டும்?” அவள் சட்டென்று கேட்டாள். அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது என்றவன், "கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால் - “சாட்டர்னேலியா. யூல். பேகன் [Saturnalia. Yule. Pagan] கொண்டாட்டங்கள் - அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை." சுருக்கமாக, “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மாற்ற, கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே உள்ள பண்டிகைகளை கிறிஸ்துவின் கதையுடன் இணைத்தனர்.” என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அதை கவனித்த சாமுவேல், " சாரா நான் ஒன்றையும் பழிக்கவில்லை, இன்றைய இந்து சமயம் கூட, தென் இந்தியரை, தங்களுக்குள் உள்வாங்க, தங்களின் வேத சமயத்துக்குள், பண்டைய தமிழரின் சைவ சமயத்தை உள்வாங்கியது ஒரு வரலாறு. அதற்காக முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால் → விஷ்ணு ஆனான்! சிவன் → ருத்திரன் ஆனான்! கொற்றவை →பார்வதி / துர்க்கை ஆனாள்! அதற்குத் தக்க புராணங்களும் இயற்றப்பட்டன." என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அவளின் வாயும் மனமும் உலக நாடுகளின் அன்பு இரட்சகரை துதித்துக்கொண்டு இருந்தது. "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!" "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!" "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!" Brief of 'When the Candle Met the Question' / Part: 02 The First Christmas It was their first Christmas as a married couple, still living near Jaffna. Sarah decorated the house carefully. A small Christmas tree stood near the window. Candles flickered softly. She sang hymns as she worked. Samuel watched. “You’re quiet,” she said, smiling. “I’m thinking,” he replied. “It’s Jesus’ birthday,” she said naturally. Samuel hesitated, then asked gently, “Do you know when he was born?” Sarah laughed. “December 25. Everyone knows that.” Samuel did not argue that night. He only smiled and helped her light the candles. Love, he knew, must begin with patience. The Question Enters the House Weeks later, on an ordinary evening, Samuel opened a history book. “Sarah,” he said softly, “did you know that Christmas was officially fixed on December 25 only 340 years after Jesus’ death?” She looked up. “Pope Julius I made that declaration,” he continued. “Before that, Christians remembered Jesus’ birth on March 29, January 6, and even a date in June.” Sarah frowned. “Why change it then?” “Because Europe already had midwinter festivals,” Samuel said. “Saturnalia. Yule. Pagan celebrations.” “To convert non-Christians, Christian leaders merged existing festivals with Christ’s story.” The room fell silent. Sarah was not angry. But something inside her shifted. Her mouth and mind were filled with praise for the beloved Savior of the world. "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift" நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 03 தொடரும் / Will follow துளி/DROP: 1951 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/32961478550167367/?- உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார். “நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல். திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார். இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது. இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது. கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1457017- முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கலாச்சாரம், மீளுருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவை உறுப்பினராக பதவி வகித்தார். அண்மையில் அவர் ஆலோசனை நிறுவனமான பிரசெடோவில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் யங் தவிர மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் இன்று ஸ்விண்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வில்ட்ஷயர் பொலிஸார் மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1457042- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது திங்கட்கிழமை (22) 4,400 அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மென்மையான பணவியல் கொள்கை ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய உந்துதல்களாக அமைந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்பாட் தங்கம் திங்கள் மதியம் 1:54 மணிக்கு (18.54 GMT) அவுன்ஸ் ஒன்றுக்கு 2.2% உயர்ந்து $4,434.26 ஆக இருந்தது. இதற்கு முன்பு அது $4,441.92 என்ற உச்சத்தை எட்டியது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 1.9% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,469.40 ஆக விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறுகிய கால இடைவேளையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாக செழித்து வளர்கிறது. வலுவான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல், பாதுகாப்பான புகலிட ஓட்டங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட 1979க்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வருடாந்திர உயர்வில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு 69 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், 69.44 டொலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்பாட் வெள்ளி 1.9% உயர்ந்து $68.40 ஆக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை அதன் விலைகள் 136% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் அதிகரித்து வரும் வெள்யின் தொடர்ச்சியான விநியோக-தேவை பற்றாக்குறை மற்றும் இறக்குமதி தேவை என்பன வெள்ளியின் அண்மைய விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. இதேவேளை, பிளாட்டினத்தின் விலை 5.4% உயர்ந்து $2,079 ஆக இருந்தது – 17 ஆண்டுகளுக்குப் பின் மேலான அதிகபட்சத்தை எட்டியது. அதே நேரத்தில் பல்லேடியம் 2.1% உயர்ந்து $1,748.84 ஆக உயர்ந்து – கிட்டத்தட்ட மூன்று ஆண்டு உயர்வை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 352,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 325,600 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1457032- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வளர்ந்த நாடுகளில் மற்ற G10 நாடுகளான Australia - AUD Canada - CAD New Zealand - NZD Norway - NOK இந்த நாலு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியினை அந்த நாடுகளின் commodity export தாக்கம் செலுத்துவததால் இந்த நாலு நாடுகளையும் Commodity float என கூறப்படுகிறது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எந்தவித Commodity செல்வாக்கு செலுத்தாத மிதக்கவிடப்பட்ட நாணயங்கள் வளர்ந்த நாடுகள் USA - USD EURO - EUR Japan - JPY England - GBP Swiss - CHF Swedish - SEK- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1992 காலப்பகுதியில் முகாமைத்துவமையப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கைகளை(Managed float) நாடுகள் பின்பற்றினாலும் அந்த நாண்யங்களின் பெறுமதி ERM இனால் கட்டுபடுத்தப்பட்டு ஒரு pegged currencies போல ஜேர்மன் நாணயத்திற்கெதிராக செயற்பட்டது, அதனாலேயே பிரித்தானியா ERM இன் விதியினை பின்பற்றுவதற்காக தனது வெளிநாட்டு இருப்புக்களை தொடர்ந்து விற்றது (வெளிநாட்டு இருப்பினை விற்று பவுண்ட்ஸினை வாங்குவதன் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்று விகிதத்தினை உயர்த்த முயன்றது, அதே நேரம் குறித்த நாளிலேயே இரண்டு வட்டி விகித அதிகரிப்பினை 12%, 15% என அதிகரித்து அன்னிய செலாவணி வர்த்தகர்களை short squeeze செய்யமுயன்று தோற்றுப்போனது. 90 களின் இறுதியில் தோற்றம் பெற்ற யுரோ நாணயம் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டியது ஒரு நாணயம் இருந்ததால் அதற்கென ஒரு மத்திய வங்கியும் உருவானது.- தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 23 Dec, 2025 | 10:07 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிஸார் பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம். இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிஸாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234165- இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா!
இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா! டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார். இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கைக்கான-மீள்-கட்டமைப/- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சறத்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவனுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.- புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள்; பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது. அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர். அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது. அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234149 - ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.