All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்? கட்டுரை தகவல் ஜெர்மி போவென் சர்வதேச ஆசிரியர் 15 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் ஒரு புதிய போரில் குதிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ள முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் அபாயகரமான தருணத்தை உருவாக்கியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேல் "தற்காப்பு" (pre-emptive) என்ற சொல்லைப் பயன்படுத்தியது. "தற்காப்பு நடவடிக்கை" என்ற சொல் குறிப்பது போல, இது ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அளிக்கப்பட்ட பதில் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, இது ஒரு "விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர்". இரானின் இஸ்லாமிய ஆட்சி பலவீனமாக உள்ளதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்துள்ளன; அதாவது அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆண்டின் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறையின் விளைவுகள் மற்றும் கடந்த கோடை காலப் போரினால் மோசமாக சேதமடைந்துள்ள பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகக் கருதுகின்றன. இது நழுவவிடக்கூடாத ஒரு வாய்ப்பு என்பதே அவர்களின் முடிவாகத் தெரிகிறது. இது தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட அமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு அடியாகும். தங்களது அறிக்கைகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இரான் தங்கள் நாடுகளுக்கு ஆபத்தானது என்று கூறினர். டிரம்ப் இதுவொரு உலகளாவிய ஆபத்து என்றும் குறிப்பிட்டார். இஸ்லாமிய ஆட்சி நிச்சயமாக அவர்களின் பரம எதிரிதான். ஆனால், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், மறுபுறம் இரானுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அதிகார ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொள்ளும் போது, தற்காப்பு என்பதற்கான சட்டரீதியான நியாயம் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பார்ப்பது கடினம். அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்பார்ப்பு இரானில் ஈடேறுமா? தாக்குதல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. ஆயுத மோதல் தொடங்கிவிட்டால், அதை கட்டுப்படுத்துவது இயல்பாகவே மிகவும் கடினமானது. தலைவர்களுக்கு தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும். பெஞ்சமின் நெதன்யாகு பல தசாப்தங்களாக இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். டெஹ்ரானில் உள்ள ஆட்சிக்கும், இரானின் ராணுவத் திறனுக்கும் தங்களால் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நெதன்யாகு தனது நாட்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஹமாஸுடனான இரண்டு ஆண்டுகாலப் போர் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இஸ்ரேல் போரில் இருக்கும் போது தனது அரசியல் நிலை வலுப்பெறுவதாக அவர் நம்புகிறார். தன் இயல்பிற்கேற்ப, டொனால்ட் டிரம்பின் குறிக்கோள்கள் அவ்வப்போது மாறி வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம், இரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி விரைவில் வரும் என்று அவர் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க கடற்படையின் பெரும்பகுதி வெனிசுவேலா தலைவரை பதவியிலிருந்து அகற்றும் பணியில் தீவிரமாக இருந்ததால், அவரிடம் ராணுவ ரீதியான தெரிவுகள் குறைவாகவே இருந்தன. அமெரிக்கா அந்தப் பிராந்தியத்திற்கு இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்களையும், கணிசமான தரைவழித் தாக்குதல் படைகளையும் அனுப்பி வைத்திருந்த நிலையில், இரானின் அணுசக்தி லட்சியங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து டிரம்ப் அதிகம் பேசினார். இருப்பினும், கடந்த கோடை காலப் போருக்குப் பிறகு, இரானின் அணுசக்தித் திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரான் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை எப்போதும் மறுத்து வந்துள்ளது. ஆனால் அணுசக்தித் திட்டத்தில் சிவில் பயன்பாட்டிற்கான தேவையைக் காட்டிலும் அதிகமாக யுரேனியத்தை அது செறிவூட்டியுள்ளது. குறைந்தபட்சம், ஒரு அணுகுண்டை உருவாக்குவதற்கான வாய்ப்பையாவது அது தன்வசம் வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதுவரை அது நிகழப்போகிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளியிடவில்லை. தனது வீடியோவில், இரான் மக்களுக்கு "சுதந்திரத்திற்கான நேரம்" நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார். நெதன்யாகுவும் இதேபோன்ற செய்தியையே அளித்தார். அதாவது இந்தப் போர் இரானிய மக்களுக்கு அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார். ஆனால் அது நடக்குமா என்பது முற்றிலும் நிச்சயமற்றது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விமானப்படை தாக்குதல் போதுமா? விமானத் தாக்குதல்களால் மட்டுமே ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. 2003-ஆம் ஆண்டில் இராக்கின் சதாம் உசேன், அமெரிக்கா தலைமையிலான பிரமாண்டமான படையால் பதவியிறக்கப்பட்டார். 2011-இல் லிபியாவின் மும்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் சில அரபு நாடுகளால் வான்வழி பாதுகாப்பு வழங்கப்பட்ட கிளர்ச்சிப் படைகளால் வீழ்த்தப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே அதன் முடிவு அரசு இயந்திரத்தின் வீழ்ச்சி, உள்நாட்டுப் போர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கொலைகளாகவே அமைந்தது. லிபியா இப்போதும் ஒரு சிதைந்த நாடாகவே உள்ளது. இராக் இன்னும் அந்த ஊடுருவலின் விளைவுகளையும், அதைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியையும் எதிர்கொண்டு வருகிறது. ஒருவேளை, வான்வழித் தாக்குதலால் மட்டுமே ஓர் ஆட்சி வீழ்ந்த முதல் நிகழ்வாக இது அமைந்தாலும் கூட, இந்த இஸ்லாமிய ஆட்சிக்குப் பதிலாக மனித உரிமைகளைப் போற்றும் ஒரு தாராளவாத ஜனநாயகம் அங்கே அமைந்துவிடாது. தற்காலிகமாகப் பொறுப்பேற்கக் கூடிய நம்பகமான மாற்று அரசாங்கம் எதுவும் காத்திருக்கவில்லை. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, இரான் அரசு ஒரு சிக்கலான அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளது; இது சித்தாந்தம், ஊழல் மற்றும் தேவைப்படும் போது இரக்கமற்ற முறையில் பலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றின் கலவையால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில், போராட்டக்காரர்களைக் கொல்ல தான் தயாராக இருப்பதை டெஹ்ரான் அரசு தனது நடவடிக்கைகளால் நிரூபித்தது. வீதியில் இறங்கி இந்த முறைமைக்கு சவால் விடுத்த ஆயிரக்கணக்கான சக குடிமக்களை, சுட்டுக் கொல்லுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் பாதுகாப்புப் படைகளை அது கொண்டுள்ளது. ஒருவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயியை கொல்ல முயற்சிக்கலாம். படுகொலைகளை ஒரு முக்கிய உத்தியாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களையும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா தலைவர்களையும், அவர்களின் கீழ் இருந்த பல தளபதிகளையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயமாகும். இது ஒரு ஆயுதமேந்திய அமைப்பை அல்ல, மாறாக ஒரு முழுமையான அரசை வழிநடத்துகிறது. இது ஒரு தனி மனிதனின் அதிகாரம் மட்டும் அல்ல. ஒருவேளை உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்படுவார்; பெரும்பாலும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) ஆதரவு பெற்ற மற்றொரு மதகுருவே அந்த இடத்திற்கு வருவார். இந்தப் புரட்சிகர காவல்படை, நாட்டின் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அதைப் பாதுகாப்பதையே தனது முதன்மையான பணியாகக் கொண்டுள்ளது. தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், இல்லையெனில் நிச்சயம் மரணம் நேரிடும் என்றும் டிரம்ப் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார். ஆனால் டிரம்பின் இந்த சலுகையால் ஐஆர்ஜிசி ஈர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இஸ்லாமியக் குடியரசின் சித்தாந்தத்திலும் ஷியா இஸ்லாம் பிரிவின் கொள்கைகளிலும் "தியாக மரணம்" என்பது ஒரு மாறாத மற்றும் முதன்மையான அங்கமாகும். இரானைப் பொருத்தவரை டிரம்பின் நம்பிக்கை சரியாகுமா? அரசியலிலும் வாழ்க்கையிலும் முதன்மையான உந்துசக்தி கொடுக்கல்-வாங்கல் (transactional) சார்ந்தது என்று டிரம்ப் நம்புகிறார். அவருடைய புத்தகம் குறிப்பிடுவது போல, அது "தி ஆர்ட் ஆஃப் தி டீல்" (ஒப்பந்தத்தின் கலை). ஆனால் இரானைக் கையாளும்போது சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையின் வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். அதை அளவிடுவது மிகவும் கடினம். ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த நெருக்கடி அதிகரித்ததாலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல் படைகளைத் திரட்டியதாலும், போர் தவிர்க்க முடியாதது என்று டெஹ்ரான் தலைமை கருதுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த கோடை காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதை உணர்ந்தே இரானும் இம்முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இரான் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலியர்களையோ நம்பவில்லை. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்திய ஜே.சி.பி.ஓ.ஏ (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இது ஒபாமா நிர்வாகத்தின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சாதனையாகக் கருதப்பட்டது. 'மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையும் மோசமாகும்' இரான் குறைந்தது அவகாசம் பெறுவதற்காகவாவது, ஜே.சி.பி.ஓ.ஏ-வின் இரண்டாவது கட்ட ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவை எதிர்க்கும் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இரான் அளிக்கும் ஆதரவு ஆகியவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிகிறது. இது இரானியத் தலைமைக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் இது முற்றிலும் சரணடைவதற்குச் சமமானது. ஏவுகணைகளையும் நட்பு நாடுகளையும் விட்டுக்கொடுப்பது, தற்போது எதிர்கொண்டுள்ள தாக்குதலை விட, ஆட்சி மாற்றத்திற்குத் தங்களை இன்னும் எளிதாகப் பலியாக்கிவிடும் என்ற எண்ணம் அந்நாட்டுத் தலைமையின் மனதில் இருந்திருக்கலாம். இரானியத் தலைவர்கள் இப்போது இந்தப் போரை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு உயிர் பிழைப்பது மற்றும் அதன் விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்துக் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்றைய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையையும் அதன் சாத்தியமான விளைவுகளையும் கண்டு சௌதி அரேபியா தலைமையிலான அண்டை நாடுகள் திகைப்படைந்து போயிருக்கும். மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குப் பிரச்னைகளை ஏற்றுமதி செய்யும் திறன் அதிகம் என்பதால், மீண்டும் வெடித்துள்ள தீவிரமான இந்தப் போர் ஏற்கனவே கொந்தளிப்பாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கும் இப்பிராந்தியத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மேலும் மோசமாக்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அப்படி ஆராய்சியாளர்கள் பெரிதாக தம் நிலைப்பாட்டை மாற்றவில்லை. 2020, 2026 இடையே இதில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவே இல்லை. உலக விஞ்ஞான அமைப்புகளும், விஞ்ஞானிகளும் அன்று சொன்னதைதான் இன்றும் சொல்கிறார்கள். மாறியது அரசியல் அணுகுமுறையே. அத்தோடு உங்கள் போன்றோரின் நிலைப்பாடும். விஞ்னானம் அன்று சொன்னதை தான் இன்றும் சொல்கிறது. உலக வெப்பமாதல் ஒரு பிரச்சனைதான். ஆனால் உலகுக்கல்ல, மனிதனுக்கு. மனிதன் அழிந்த பின்னும் உலகம் இருக்கும்.
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம் 28 Feb, 2026 | 06:33 PM தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 40 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 24 மாணவிகள் உயிரிழந்ததாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மினாப் நகர ஆளுநர், ஈரானிய செய்தி நிறுவனம் Mehr-க்கு வழங்கிய தகவலில், மினாப் நகரில் இன்று இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு ஆரம்பப் பாடசாலை இலக்கு வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ‘ஷஜாரே தய்யிபே (Shajare Tayyebe)’ எனப்படும் பாடசாலை வளாகம் மீண்டும் தாக்கப்பட்டதாகவும், அந்தப் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவமனை, தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு முதலுதவி வழங்கும் மையமாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பாடசாலையில், காலை நேர அமர்வில் மொத்தம் 170 மாணவிகள் கல்வி பயின்று வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற போது வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் மற்றும் காயமடைந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்குப் பின்னர் உருவான கோரக் காட்சிகளை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாகக் கூறி வரும் நிலையில், ஒரு ஆரம்பப் பாடசாலை சேதமடைந்துள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மனித உரிமை அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளன. தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
-
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
முன்னைய மன்னர் ஆட்சியின் ஆட்சி மோதல்களில், பூமியில் உயிர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி அழிந்தன அழிக்கப்பட்டன. பூமி பாதிப்பின்றிச் சுற்றியது. தற்போது மக்கள் ஆட்சியில் மக்கள் அறிவும் அதிகரித்த ஆட்சி மோதல்களில், உயிர்களோடு பூமியும் பாதிப்புக்கு உள்ளாகி அழிந்துவிடும்போல் தெரிகிறது. மக்களாட்சியை விடவும் மன்னராட்சி பூமிக்கு மேலானதுபோல் தோன்றுகிறது.
-
Paanch started following இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் தெரிவாகிவிட்டது என்றே நினைகிறேன். ஜி, உங்கினிக்கயும் 2 மிசை விழுந்ததாமே? பத்திரமா இருங்கோ.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குறைந்தது 64 ஓட்டவித்தியாசங்களுக்குல் இலங்கையை பாகிஸ்தான் அணியை வென்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகிவிடும்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜை-திரிஷா திருமணத்துக்கு அப்பாலான உறவின் டைம்லைன் இதுதானாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
150-0 எவ்வளவு அடிப்பினம். ஒரு 230 அடிப்பினமா. இன்னும் 36 பந்து இருக்கு..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் விக்கட் இழப்பின்றி 120 தாண்டிட்டினம். பெரிய ஓட்டம் அடிக்கப் போகினம் போல. ஒரு தாக்குதலோடதான் வந்திருக்கினம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் போட்ட படத்தில் வகுப்பில் தனுசும், எஸ்கே யும் இருக்கிறார்கள். ஆனால் எஸ்கே டிவோர்ஸ் ஆகவில்லை. இமானின் டிவோசை ஆக்கிவைத்தார் என்பதே இமானின் குற்றச்சாட்டு. பிகு தனுசும், சிவாவும் கூட தெலுங்கர் என்கிறனர் மூ.பரிசோதனை தம்பிகள். எதற்கும் வடிவா விசாரிக்கவும்😂 பிள்ளைகள் 18 வயதுக்கு மேல் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை செலவை வழங்க தேவையில்லை. ஆனால் மனைவிக்கான ஜீவனாம்சம் என்பது பிள்ளைகளின் தற்போதைய வயதை விட, திருமண உறவின் காலம், இருவரின் பங்கு, தியாகம், விட்டு கொடுப்பு என்பது சம்பாஅனது. யூனிவசிட்டீ ஓப் இலண்டன் கல்லூரி ஒன்றின் பயோமெடிக்கல் பட்டதாரி, 27 வருடமாக ஏன் வேலை ஏதும் இல்லாமல் சென்னையில் வாழ்ந்தார் என்ற கேள்விக்கான பதில் முதன்மையானது. சங்கீதா இந்த டிவோர்சை இலண்டனில் போட்டிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
91/0 பாகிஸ்தான் நல்ல ஆரம்பம், ஃபரான் ஆட்டம் சிறப்பு
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி. தான். ஆனால். பிள்ளைகளுக்கு. 18. வயதுக்கு. மேலேயும். மனைவி. உழைக்க. குடியவராகவும். இருந்தால். பணம். கொடுக்கத். தேவையில்லை. என்ற. தீர்ப்பை. வாசித்த. நினைவு. உண்டு. இந்தியா. நீதிமன்றமா. தெரியவில்லை. வாங்க. வாங்க. இந்த. திரியை. பத்து. பக்கத்துக்கு. மேல். ஒட. விட. வேண்டும். கோஷசானை. கேட்கிறேன். கேள்விகள். அவர். சுடச் சுடப பதில். தருவர். நீங்குளும் வந்தது. நன்றாக் உள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
பெற்றோல் தட்டுப்பாட்டால்... மிகவும் சிரமப் பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தில் தான் உள்ளார்கள். 🙂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆகா... என்ன வளர்ப்பு. இப்படி ஒரு ரசிகையா...?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னை கூப்பிட்டீர்களா சார்?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
செய்யலாம்தான் தான் தோழர். ஆனால்... ஊரில் உள்ளவர்களிடம் சொல்லப் போனால், பிய்ந்த செருப்பால் அடிப்பார்கள். 😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தனுசும்... இந்த வகுப்பில் இல்லை. 😃 டிவோஸ் எடுத்த தமிழர்களின் பெயரை, இதில் சேர்க்கவில்லைப் போலுள்ளது. 😂 இந்த வகுப்பு... அயல் மாநிலத்தவர்களுக்கானது. 🤣 நீங்கள்... மேலே உள்ளதை, சீரியஸாக வாசித்துள்ளீர்கள் போலுள்ளது. 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன பகிடி விடுகிறீர்கள். நீங்கள்தான் வெல்லப் போகிறீர்கள்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
கொடி படம் பார்த்தீர்களா 😄
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ! 28 Feb, 2026 | 02:09 PM இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது எதிர்த் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் தஞ்சமடையுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய ஹைபா பகுதியில் விழுந்து வெடித்துள்ளதாகவும் ஈரான் மீது அமெரிக்க மற்றுமொரு சுற்று தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 13 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை, இந்திய பக்தர்கள் பங்கேற்பு 28 Feb, 2026 | 03:11 PM வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுமார் 13,000 பக்தர்கள் கலந்து கொண்டு தீவினை நிரப்பினர். இவர்களில் சுமார் 4,000 பக்தர்கள் இந்தியாவிலிருந்தும், ஏறத்தாழ 9,000 பக்தர்கள் இலங்கையிலிருந்தும் வருகை தந்தனர். முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளாரால் ஆலயக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை (28) காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 13 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை, இந்திய பக்தர்கள் பங்கேற்பு
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள பின்னணியில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவே இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில் குறித்த கருத்து இஸ்ரேல் தரப்பிடம் இருந்து வெளியாகியுள்ளது. அணுசக்தி திட்டம் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காக இப்பகுதியில் ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி ஈரான் தலைநகரில் நடந்த இந்த தொடர் தாக்குதல் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, சைரன்கள் ஒலித்தவுடன், இஸ்ரேலிய இராணுவம், "இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக ஒரு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை" வெளியிட்டதாகக் கூறியது. மேலும், இஸ்ரேலின் விமான நிலைய ஆணையம் அனைத்து பொது விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அறிவித்து. இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து பணியாளர்களுக்கும் தங்குமிடம் வசதியை செயல்படுத்தியுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை அதன் அனைத்து குடிமக்களும் இதைச் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை
-
பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!
பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்! Published By: Digital Desk 1 28 Feb, 2026 | 10:33 AM பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட 02 வேன்களை பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு கையளிக்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவு 2010.12.02ஆம் திகதியன்று நிறுவப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் அதன் கடமைகளுக்காக கெமராக்கள் பொருத்தப்பட்ட 02 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களின் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக, 'பிரிமா' நிறுவனத்தின் பங்களிப்புடன் ஒரு வேன் நவீன தொழில்நுட்ப கெமராக்களுடன் மேம்படுத்தப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களுக்காக சுமார் 9,794,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை அவதானித்து வழக்கு தொடர்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கடமைகள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வில் பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார கம்லத், பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் பெரேரா, குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.என்.எல்.பீ. ஏநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!
-
-
சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்
சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர் படக்குறிப்பு,ஆசிரியர் கோகில பாண்டியன் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 28 பிப்ரவரி 2026, 08:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் ஆசிரியர், மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்வது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று' என, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. முன்விரோதம் காரணமாக தன் மீது சக ஆசிரியைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில், இரு ஆசிரியைகள் உள்பட 5 கல்வி அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தண்டனைக்கு ஆளான அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தேனியில் உள்ள ஓர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த கோகில பாண்டியன் மீது 2016-ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. "பாலியல்ரீதியாக தொல்லை தரும் வகையில் செயல்பட்டதாக சக ஆசிரியைகள் மற்றும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இடையூறு செய்வதாக பள்ளியின் சத்துணவு அமைப்பாளரும் புகார் அளித்ததாக செய்திகள் வெளிவந்தன" என பிபிசி தமிழிடம் கோகில பாண்டியன் தெரிவித்தார். புகார்களின் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோகில பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் 'போலி கடிதம் தயாரித்த ஆசிரியைகள்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சத்துணவு பெண் அமைப்பாளரின் பெயரில் சக ஆசிரியைகள் போலியான கடிதத்தை தயார் செய்தது தெரியவந்ததாக கோகில பாண்டியன் தெரிவித்தார். "கடிதத்தை தான் எழுதவில்லை என மாவட்ட ஆட்சியரிடமும் சத்துணவு அமைப்பாளர் புகார் அளித்திருந்தார்'' என்கிறார், கோகில பாண்டியன். தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களை அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். "குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களைத் தருவதற்கு தொடக்கக் கல்வி அலுவலர் தொடர்ந்து மறுத்து வந்ததால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அவர். "ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளிடம் இருந்து மனுக்களைப் பெற முடியவில்லை. 'ஆவணங்களைக் கேட்டு இடையூறு செய்வதால் தர முடியாது' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என கோகில பாண்டியன் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடந்து கொள்வதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார். "இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி முன்பாக ஆஜரான சத்துணவு பெண் அமைப்பாளர், 'நான் புகார் கடிதமே தரவில்லை' எனக் கூறிவிட்டார்" என்கிறார், கோகில பாண்டியன். பாலியல் புகார் சுமத்தியது ஏன்? "உங்கள் மீது பாலியல் புகார் சுமத்த வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?" என, அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "என் மனைவியின் சொந்த ஊர் தேனி என்பதால் 2012 ஆம் ஆண்டு அங்குள்ள பள்ளியில் பணியில் சேர்ந்தேன்" எனக் கூறும் அவர், பள்ளியில் அங்கு சக ஆசிரியை ஒருவர், மாணவிகளிடம் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறுகிறார். "இதனை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்து ஆசிரியைக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தார். இதற்கு நான் சாட்சிக் கையெழுத்து போட்டதால் என் மீது அவர் கோபத்தில் இருந்தார்" என்கிறார். ''2015- ஆம் ஆண்டு வேறு பள்ளிக்கு அந்த ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருடன் நட்பில் இருந்த அறிவியல் ஆசிரியை ஒருவர் நான் பணியாற்றிய பள்ளிக்கு பணிமாறுதல் பெற்று வந்தார்'' "பணிமாறுதல் பெற்று வந்த ஆசிரியை, கழிவறைக்குச் செல்லும்போது நான்கு மாணவிகளை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியை விசாரித்தபோது, கழிவறையில் தண்ணீர் ஊற்றுவதற்காக அழைத்துச் செல்வது தெரியவந்தது" என்கிறார் கோகில பாண்டியன். 'இவ்வாறு செல்லக் கூடாது' என மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை அறிவுறுத்தியதாகக் கூறும் அவர், "இந்த விவகாரம் தொடர்பாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமுருகன் விசாரணை நடத்தினார். இதனை ஏற்காமல் அதிகாரியுடன் அந்த ஆசிரியை வாக்குவாதம் செய்தார்" எனக் கூறுகிறார். இதுதொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கல்வித்துறை நடத்திய விசாரணையில் ஆசிரியை தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். காவல்துறை நடத்திய விசாரணை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் தன்னை ஆசிரியர் கோகில பாண்டியன் உள்பட ஐந்து பேர் அவமதித்துவிட்டதாக காவல்நிலையத்தில் ஆசிரியை தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. "நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் பொய்ப் புகார் எனக் காவல்துறை அறிக்கை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார்" என்கிறார் கோகில பாண்டியன். "இவரும் இதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை ஆகியோர் இணைந்து தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர். இதற்காக சத்துணவு பெண் அமைப்பாளர் எழுதியதாக போலி கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு உடந்தையாக மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "சத்துணவு அமைப்பாளர் என் மீது புகாரே கூறாத நிலையில் ஐந்தரை மாதங்களாக பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளானேன்" எனக் கூறும் கோகில பாண்டியன், " வேறு பள்ளிக்கு என்னை இடமாறுதல் செய்தனர்" என்கிறார். பணியிடை நீக்கத்தை ரத்து செய்வதற்கு அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்காலிக பணியிடை நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, தன் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு கூறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். 'கற்பனை செய்ய முடியாதது' - நீதிபதி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஃபாசில் முகமது, ஆவணங்களை உருவாக்குதல், பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், குற்றவியல் சதி ஆகியவை சான்றுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு ஆசிரியைகளும் தன்னை தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிக்க வைப்பதற்கான நோக்கத்தை மனுதாரர் தெளிவாக நிறுவியுள்ளதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், 'தவறான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நற்பெயர், சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார் ஊடகங்களில் வெளியானதை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, "தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே நடத்தப்படும் ஊடக விசாரணைகள் பெரும்பாலும் குற்றம் சுமத்தப்பட்ட நபரை குற்றவாளியாக சித்தரிக்கின்றன" என்கிறார். 'வழக்கின் மனுதாரர் பள்ளி ஆசிரியராக இருப்பதால் தவறான பாலியல் குற்றச்சாட்டுகளின் நிழலின்கீழ் மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இது பரிதாபகரமானது மட்டுமல்ல, கற்பனை செய்ய முடியாதது' எனத் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். 'தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் மனைவியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகும் ஒருவர், தனது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரால் இதையெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா?' எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தனி நபரின் கண்ணியம், குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக அந்தஸ்தையே பாதிப்பதாகக் கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்படும் நபருக்கு ஆழ்ந்த மனவேதனையும் சரிசெய்ய முடியாத தீங்கும் ஏற்படுவதாகக் கூறியுள்ளது. 6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 'இதனை வெறும் நிர்வாகக் குறைபாடாக மட்டும் கருத முடியாது' எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, 'மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது' என்கிறார். "இந்த வழக்கில் 134 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். வழக்கின் முடிவில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது" எனக் கூறுகிறார் கோகில பாண்டியன். கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சட்டத்துக்குக் கீழ்படியாமல் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது என தண்டனைக்குரிய செயல்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளதாக, நீதிபதி தெரிவித்துள்ளார். இதில், ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 'அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'மொத்த அபராதத் தொகையான 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயில் மனுதாரருக்கு ஏற்பட்ட வேதனைக்காக 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தர வேண்டும்' எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். "வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொரு பிரிவுக்கும் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் பிணை பெற்றுவிட்டனர். சிலர் அபராதமும் செலுத்திவிட்டனர்" எனக் கூறுகிறார் ஆசிரியர் கோகில பாண்டியன். 'பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்' "என் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டபோது நான் வசிக்கும் கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 'பள்ளியில் ஆசிரியருக்கு இது தான் வேலை' என்றெல்லாம் கேலி பேசினர். சக ஆசிரியர்கள் என்னை பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்" என்கிறார் அவர். "உறவினர்கள் வீட்டு நிகழ்வுக்கு சென்றால் பாலியல் புகாரைக் கூறி விசாரிப்பார்கள். அவர்களிடம், 'உண்மை என்றால் வருத்தப்படலாம்' என்று மட்டும் பதில் அளிப்பேன்" என கோகில பாண்டியன் தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளாக போராடியதாகக் கூறும் அவர், "ஆசிரியைகளுக்கு உடந்தையாக இருந்த ஒரு கல்வி அலுவலர் ஓய்வுபெற்றுவிட்டார்." எனக் கூறினார். "சட்டப் போராட்டம் நடத்தி வந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் என்னைப் பழிவாங்கியிருப்பார்கள். அனைத்தையும் எதிர்கொண்டு தான் வழக்கை நடத்தினேன்" எனவும் அவர் குறிப்பிட்டார். தண்டனை பெற்ற கல்வி அதிகாரி கூறுவது என்ன? வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களில் தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த பி.என்.கணேஷ் தற்போது திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" எனக் கூறினார். நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறும் பி.என்.கணேஷ், "ஆவணங்கள் போலியானவை என தற்போது தான் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் இருந்து துறைரீதியாக எனக்கு எந்தவித தண்டனையும் வரவில்லை" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய நன்னடத்தையைப் பார்த்து மாவட்ட கல்வி அலுவலராக இருந்த என்னை திருநெல்வேலிக்கு முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்தனர்" எனக் கூறுகிறார். கோகில பாண்டியன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, "அதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடக்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியபோது, "தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார். "சுமார் 100 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு வெளிவந்துள்ளதாக அறிகிறேன். அதனை முழுமையாக படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல் புதிய இணைப்பு துபாய் மற்றும் அபுதாபியில் வெடிப்புகள் நடப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பின்வரும் நாடுகளின் விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதவை ஆரம்பித்துள்ளது. கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம் குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம் பஹ்ரைனில் ஐந்தாவது அமெரிக்கத் தளம் மேலும், சவுதி அரேபியாவின் ரியாத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்ததாக AFP செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது. "இந்த அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் முழு உரிமையும் அதற்கு உள்ளது" என்று கூறுகிறது. முதலாம் இணைப்பு ஈரானிய ஏவுகணை ஒன்று கட்டாரின் வான்பரப்புக்குள் பாய்ந்த நிலையில் அதை தடுத்து வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி , குறித்த ஈரானிய ஏவுகணை Patriot வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தடுக்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் வெடிப்புகள் அத்தோடு குவைத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக தற்போது சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன. அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் சேவை மையம் "ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. இது அரசு நடத்தும் பஹ்ரைன் செய்தி நிறுவனம் (BNA) மேற்கோள் காட்டிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய 5வது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Advertisement இந்தலையில் வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளன. இதன்படி கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்