All Activity
- Past hour
-
11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
போதனா சிவாநந்தனுக்கு வாழ்த்துகள்.
-
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இரான் தொழிநுடட்பம் / தந்திரோபாயத்தை சோதனை செய்வது போன்றே தோற்றம் இருக்கிறது. இரான் செய்வது என்று சில ஆய்வாளர் சொல்லுவது, வானில் சில தானியங்கி ஏவுகணை / வெடிபொட்களால் (இவை வானில் உலாவித்ததிரியும்) உருவாக்கப்படும் கொலைச் சங்கிலியும் (kill chain), அதனால் உருவாகும் பொறியும்.
-
ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
மத்திய கிழக்கில் இருந்த ஆகப் பெரிய பாலத்தை அமெரிக்க குண்டு வீசி தகர்த்த காணொளியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட நேற்று பகிர்ந்திருந்தார். ஈரானிய அப்பாவி மக்களுக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்ற ஏக்கத்துடனும், அதே நேரத்தில் எதுவும் செய்ய முடியாத வருத்தத்துடனுமே இரவு போனது. விடியும் போது அமெரிக்காவின் ஒரு விமானம் வீழ்ந்து விட்டது என்று செய்தியில் இருந்தது. இப்பொழுதாவது அமெரிக்கா இந்த தேவையற்ற தாக்குதல்களை நிற்பாட்டிக் கொள்ளலாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை, எது வந்தாலும் வரட்டும் என்று ஒரு ஓர்மத்துடன் நிற்கும் மக்கள் முன் இந்த வல்லரசுகள் ஒன்றுமேயில்லை. அந்த மக்களை இந்த வல்லரசுகள் கற்காலத்துக்கு அனுப்பலாம், ஆனால் அப்பொழுது கூட அவர்கள் அங்கிருக்கும் கற்களின் துணயுடன் போரடியே அழிவார்கள். அந்த மக்களும், எதிர்த்து நிற்கும் அவர்களின் அரச நிர்வாகமும், அது எத்தகைய மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இங்கு வல்லவன் வகுத்தது மட்டுமே பாதை இல்லை என்னும் ஒரு நம்பிக்கையை இந்த உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே உக்ரேன் மக்களும், உக்ரேன் அரசும் கூட இதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான் அமெரிக்காவின் F-35 போர் விமானம் | கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 03 Apr 2026, 3:05 pm 1 min read தெஹ்ரான்: அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 ரக போர் விமானம், ஈரான் விமானப் படையின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு விமானம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது ஏற்பட்ட பெரு வெடிப்பைக் கருத்தில் கொண்டால், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அது குறித்த எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள்தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. இதனை உறுதி செய்த குவைத் அரசுக்குச் சொந்தமான குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்த தாக்குதலால் அங்கு பலத்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும். தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்
-
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் திட்டவட்டம்
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் திட்டவட்டம் டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள் முழு மையானவை அல்ல. எங்களது பரந்த வியூகத் திறன்கள் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தளங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக ட்ரம்ப் தப்புக் கணக்கு போட வேண்டாம். எங்களது ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் முறைகளுக்கான கட்டமைப்புகள் என அனைத்தும் எவ்வித பாதிப்புமின்றி முழு அளவில் செயல்பாட்டில் உள்ளன. எனவே, இதுபோன்ற தவறான அனுமானங்கள், நீங்கள் ஏற்கெனவே சிக்கியுள்ள இக்கட்டான நிலையை மேலும் ஆழமாக்கும். எங்களது ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் அமைப்புகளைக் கணக்கிட முயற்சி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்; அதில் தோல்விதான் ஏற்படும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் மீது மிக வலுவான, பரந்த மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் தொடரும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா அவமானத்தையும் நிரந்தர சரணாகதியையும் அடையும் வரையில் இந்த போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்
-
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
நீங்கள் வந்து வாழ்வதற்காக மேற்கு ஜேர்மனியை சோவியத்திடமிருந்து பாதுகாத்து வைத்திருந்தது கூட "கடுகாக" உங்களுக்குத் தெரியவில்லையா😇?
-
ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
நல்லது தானே? ஈரானிடம் இராணுவ ரீதியில் தோல்வி அடையும் போது, அந்த தோல்விக்கு தொழில்முறை அமெரிக்க இராணுவம் பொறுப்பல்ல என்ற விம்பம் உருவாகும்!
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
CSK vs PBKS, 7th Match at Chennai, IPL, Apr 03 2026 - Live Cricket Score Innings break 7th Match (N), Chennai, April 03, 2026, Indian Premier League Chennai Super Kings (20 ov) 209/5 Punjab Kings PBKS chose to field. Current RR: 10.45 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability CSK 78.57% PBKS 21.43%
-
11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
பாராட்டுகள் .......! 👍
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா புளோரிடா: நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த 4 வீரர்களும் 10 நாள் பயணம் மேற்கொண்டு நிலவை சுற்றி பயணம் செய்வர். ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்கு பதில் நிலவைச் சுற்றி 6 லட்சம் மைல்கள் தூரம் பயணம் செய்து, நிலவின் மேற்பரப்பை படம் பிடிப்பர். மேலும் எதிர்கால திட்டங்களுக்கான முக்கிய தகவல்களை சேகரிப்பர். நிலவை சுற்றி வந்தபின் விண்கலம் பசிபிக் கடலில் வரும் 11-ம் தேதி பாராசூட் மூலம் விழும். அதை அமெரிக்க கடற்படையினர் மீட்பர். நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
இரான் அதன் தலைமை அழிந்தும் அரசியல் / இராணுவ ஒழுக்கம், ஒருங்கமைவு உள்ளதாக இருக்கிறது. 30 நாளில் அமெரிக்கா படை குழம்புகின்றது, அதியுச்ச மட்டத்தில். இதில் காசும் பங்கு வகித்து இருக்கலாம் - அமெரிக்காவில் இராணுவ உற்பத்தி / வழங்கலை பெரும் நிறுவனத்தின் பங்கு உயரும். ஹெக்சஹுக்கு, மற்றும் பல அரசியல் வாதிகளுக்கு இந்த நிறுனங்களில் (பங்குகளில்) பங்கு இருக்கிறது. குறிப்பிட்ட தளபதியின், விலை குறையாக தொழில்நுற்ப தேர்வும் மறைமுகமாக காரணமாக இருக்கலாம்.
-
விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல்
விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல் "யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெறும் சூழல் இன்று காணப்படுகின்றது. முறையற்ற விதத்தில் சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்காக முன்னின்று செயற்பட்டவர்கள். அவர்கள் யுத்த காலத்தில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவர்கள். எனவே, தற்போதைய ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு அவர்கள் பணியப்போவதில்லை. புலனாய்வுப் பிரிவினரைப் பழிவாங்கும் படலத்தை அரசு நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் எமது ஆட்சி அமையும் போது, பாதிக்கப்பட்ட அனைத்துப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நாம் நிச்சயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம்." என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள்
-
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து
அமெரிக்கா / இஸ்ரேல் ஈரானை அழிக்க முயல, அரபு / இஸ்ரேல் ஐ இரான் அழிக்கும், அதாவது அது யதார்த்தமாகும் சாத்திய கூறுகள் கூட ஏனெனில், நீரில் ஈரானை விட இவை செயற்கை நீர் வசதிகளில் தங்கி இருப்பவை. இங்கே சிலர் விடயம் அறியாமல் கதைப்பது.
- Today
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை! அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடனான கடும் மோதலே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாாிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட ஜெனரல் ஜார்ஜ், 2027 வரை பதவியில் இருக்க வேண்டியவர். ஆனால், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அவர் கட்டாய ஓய்வு பெற பணிக்கப்பட்டுள்ளார். கடுமையான மோதல்.. தகுதியான நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு ஜெனரல் பதவி உயர்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் சிறந்த சேவையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஜெனரல் ஜார்ஜ் பிடிவாதமாக இருந்ததே மோதலுக்கு முக்கிய புள்ளியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்ப் மற்றும் ஹெக்செத் ஆகியோரின் இராணுவ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கிச் செயல்படும் ஒருவரை தளபதியாக நியமிக்க பென்டகன் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடந்து வரும் இக்கட்டான சூழலில் இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்திற்குள் பரபரப்பு ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகள் தமது இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் ஜனாாிபதி ட்ரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய போர்ச் சூழலில் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதி நீக்கப்பட்டது இராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் ஜார்ஜ் மட்டுமல்லாது, மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய ஜார்ஜ், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்காற்றியவர். இவரது பதவிக்காலத்தில் இராணுவத்தில் ஆள்சேர்ப்பு நெருக்கடியைச் சீர்செய்ததுடன், உக்ரைன் போரில் முக்கியத்துவம் பெற்ற குறைந்த விலை ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களை அமெரிக்க இராணுவத்தில் உட்படுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், இராணுவத்தில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தால் குறைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உயர்நிலை அதிகாரிகளின் நீக்கம் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி
-
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து
'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல் கட்டுரை தகவல் கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை. குடிநீரின் சுமார் 90% சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரிலிருந்தே கிடைக்கிறது. கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டால், வளைகுடா பகுதி விரைவில் வாழ முடியாத இடமாக மாறும் அபாயம் உள்ளது. இதுவே அந்தப் பிராந்தியத் தலைவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. நீண்ட காலமாக, இதுபோன்ற சிறிய நாடுகள் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களில் நேரடியாக ஈடுபடாமல் வளர்ச்சி அடைந்தன. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் ஏப்ரல் 1 அன்று நடந்த தாக்குதல் மறுத்த இரான் குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு முன்பு, இந்த தாக்குதல்களுக்கு இரானே காரணம் என்று குவைத் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு தெரியாது என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஓர் அறிக்கையில் இத்தாக்குதலை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கண்டித்ததுடன், "அமைதியின்மை உருவாக்க, நிலை குலைக்க மற்றும் பிராந்தியத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சி செய்கின்றன" என்றும் மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதே அறிக்கையில், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிடவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்திலும், குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்ததாக இரான் குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,Getty Images அபுதாபியில் என்ன நிலை? வானில் தடுக்கப்பட்ட ஏவுகணை சிதிலங்கள் விழுந்ததால் அபுதாபி எரிவாயு நிலையத்தில் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்ததையடுத்து, அவற்றின் சிதிலங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மீது விழுந்ததாக அபுதாபி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்படும் வரை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew709nrw2jo
-
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
- கருத்து படங்கள்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
வீழ்ந்த விமானத்தின் விமானியை... அமெரிக்க விமானங்கள் தேடிக் கொண்டுள்ளது.- கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் Apr 3, 2026 - 08:03 PM பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று (03) நண்பகல் வேளையிலேயே குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கைதிகளைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmnj06ps40007356pcm0wm1ac- ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
https://tamilwin.com/article/fallout-cost-us-army-chief-randy-george-his-job-1775217191?itm_source=article திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!- ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது Published By: Vishnu 03 Apr, 2026 | 07:21 PM அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள் இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/242677- 11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
wow congrats. - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.