All Activity
- Past hour
-
நகைச்சுவைக் காட்சிகள்
பொங்கல் பயண பரிதாபங்கள்
-
பொங்கல் சிரிப்புகள்.
பொங்கல் பரிதாபங்கள்..
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேசிய பூங்கா - அல்பெர்டா - கனடா
-
கொஞ்சம் ரசிக்க
- Today
- யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்
ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?- வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம்
நல்லதொரு முயற்சி. இந்த முனைப்பு வெற்றியளிக்க வேண்டும்.- சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
யுத்தம் விட்டு வைத்தவர் எம்மவர்களை விபத்துகள் கொண்டு சொல்கின்றன...- தமிழனின் சிற்பக் கலை.
ஈன்ற குழந்தையுடன் பெண் ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்- சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலி Jan 12, 2026 - 06:43 PM கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலிஏராளன் started following இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு , சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி , சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு and 2 others- சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு
சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு Jan 12, 2026 - 06:34 PM ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு பங்காளித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதுமே இந்தச் சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நல்லுறவு மற்றும் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட நீண்டகால நட்பு மற்றும் காலத்திற்கேற்ற ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு அமைச்சர்களும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை விரைவாக மீட்சியடையும் எனத் தான் நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு- “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி 12 Jan, 2026 | 03:50 PM “காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) தெரிவித்துள்ளார். “இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கியூபா ஜனாதிபதி மேற்கண்டவாறு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை கூறுபவர்கள் நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது. கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயும்
அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 28, 2025 1 Minute வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும். 1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை? சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும். நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) – நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும். 2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன? அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும். 3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள் இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர். 4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்? இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும். இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் • இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள். • விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் • சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள். • குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள் • கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள். • கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள். • இந்நோயானது பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும். • பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். • ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும். • இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்? 1. ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல் மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன. அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம் குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆ) உணவுச்சங்கிலி மூலம் நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும். 2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல் சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும். குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது. 3. களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால் புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது. 4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water) உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன. • கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை • உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை • அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை. 7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? 1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது. 2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள். 3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும். 4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும். 5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம். 6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும். 7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும். உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டுள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன. 1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல். 2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல். 3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல். 4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல். 5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். 6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல். 9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்? உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும். 10. ஆறுதல் தரும் விடயம் 2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம். நன்றி அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்- Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!
இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பெங்களூரு; இசைநிகழ்ச்சி மூலம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய இளையராஜா | Ilaiyaraja Raises Funds for a Charity Foundation Through a Music Concert- புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர்
11 Jan, 2026 | 05:27 PM (இராஜதுரை ஹஷான்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முறைமை மாற்றத்தை நோக்கிச் செல்வது ஒன்றும் இலகுவானதல்ல, கடும் எதிர்ப்புகள் எழும்.இதுவரை காலமும் இந்த கட்டமைப்பில் சலுகைப் பெற்றவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றுக் கொண்ட சலுகை நீங்கும் போது அதனை எதிர்ப்பார்கள். ஒரு நாளில், ஒரு இரவில் கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த முடியாது. இதனால் தான் புதிய கல்வி கொள்கையில் தொழிற்றுறை கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை நாட்டுக்கு அவசியமானது. பிள்ளைகள் மற்றும் கல்வி தொடர்பில் அக்கறை இல்லாதவர்களே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர் | Virakesari.lk- யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்
12 Jan, 2026 | 10:55 AM வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமை (10) வீட்டினை முற்றுகையிட்டு, வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில் | Virakesari.lk- இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. இவ்வளவும் எமது அவசர/வேகமாக சமையல் செய்யவேண்டும் என்பதால் ஏற்படுகிறது.- அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 11:19 AM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என “நாட்டை பாதுகாப்போம்” தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட மனு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், பிரதமரின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ள தன்னிச்சையான கல்வி சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு, அதன் மக்கள் மற்றும் புத்த சாசனம் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமைந்துள்ளது. மக்கள் மற்றும் நாட்டின் மீது அக்கறை இல்லாத ஒரு அறியாமை அரசாங்கத்தின் நேரடி விளைவுகள் இறுதியில் தேசத்திற்கும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்புக்களை விளைவிக்கும். கல்வி சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏனெனில் பௌத்த பிக்குகள், பிற மதங்களின் மதகுருமார்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களிடமிருந்து எந்த கருத்துகளும் கோரப்படவில்லை. அதன்படி, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த எடுக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் குறைபாடுடையது. எனவே செல்லுபடியாகாது. ஒரு பௌத்த தேரர் என்ற வகையில் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் எல்லே குணவன்ச தேரர், ஜனாதிபதி திசாநாயக்க, நாட்டையும், அதன் மக்களையும், புத்த சாசனத்தையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk- வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம்
12 Jan, 2026 | 05:58 PM வட மாகாண முதலீட்டு மாநாடு (NIS) 2026 யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார மையத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் போர் பிந்தைய பொருளாதார மாற்றப் பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வடிவமைப்பாளர்கள், அபிவிருத்தி கூட்டாளிகள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்து, வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக NIS 2026 அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக வட மாகாணம் பயன்படுத்தப்படாத பெரும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சிதறிய நிர்வாக அமைப்புகள், முடிவெடுப்பாளர்களை அணுக முடியாத நிலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையை உறுதியாக மாற்றுவதே NIS 2026இன் நோக்கம். வட மாகாணத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் முதன்முறையாக, முழுமையான முதலீட்டாளர் மையப்படுத்தப்பட்ட மாநாடாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்வத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆர்வத்தை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் ஓர் உயர் தாக்கம் கொண்ட மேடை நிலையான பிராந்திய வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த உண்மையை மையமாகக் கொண்டு NIS 2026 அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மாகாண தலைமைத்துவம், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத் தரப்பினருடன் ஒரே கூரையின் கீழ் நேரடியாக கலந்துரையாடுவதற்கான அபூர்வ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் உள்ளிட்ட தொழில்முனைவோர், உண்மையான முதலீட்டு வாய்ப்புகள், கொள்கை விளக்கங்கள், நிதி வழித்தடங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். அனுமதிகள், கூட்டாண்மைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை தீர்மானிக்கும் முடிவெடுப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பலருக்கு இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாடு எதிர்காலத்தை நோக்கி அமைக்கப்பட்ட ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இது நம்பிக்கையை உருவாக்குகிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் வட மாகாணம் தீவிரமான முதலீடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் அலுவலகத்தில் ஒரே மைய செயலகம் NIS 2026இன் முக்கியமான பெறுபேறுகளில் ஒன்றாக, முதலீட்டாளர்கள் மற்றும் திட்ட முன்மொழிவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட செயலகம் ஆளுநர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளது. இந்த செயலகம், வட மாகாணத்தில் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே மைய ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படும். இந்த முயற்சி முன்னுதாரணமற்றது. முதலீட்டாளர்கள் முதன்முறையாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், திட்ட முன்னேற்றங்களை கண்காணிக்கவும், ஒழுங்குமுறை தேவைகளை தெளிவுபடுத்தவும், நிர்வாக தடைகளை தீர்க்கவும் ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பைப் பெறுகின்றனர். மாநாட்டின் இரண்டு நாட்களுடன் இந்த முயற்சி முடிவடையாது. NIS 2026 உருவாக்கும் வேகமும் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க இந்த செயலகம் ஒரு நிரந்தர பாரம்பரியமாக அமையும். ஒரு நிகழ்வைத் தாண்டிய கட்டமைப்பு மாற்றம் NIS 2026 ஒரு சின்ன நிகழ்வாகவோ அல்லது ஒருமுறை நடைபெறும் விளம்பர முயற்சியாகவோ அல்ல. இது பிராந்திய வளர்ச்சியை அணுகும் முறையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றமாகும். கொள்கை, நிர்வாகம், முதலீடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒரே சூழலில் ஒருங்கிணைப்பதன் மூலம், வட மாகாணத்தை போட்டித்திறன் கொண்ட, நம்பகமான முதலீட்டு இலக்காக உருவாக்குவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்த மாநாடு அமைகிறது. பங்கேற்கும் அழைப்பு NIS 2026 என்பது யோசனைகள் நிறுவனங்களுடன் சந்திக்கும் இடம். கனவுகள் வாய்ப்புகளுடன் இணையும் தருணம். வட மாகாணத்தின் எதிர்காலம் உறுதியான வடிவம் பெறத் தொடங்கும் மேடை என்றும் கூறப்படுகிறது. வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம் | Virakesari.lk- இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு
12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில் , அலுமினியம் பாரம் இல்லாததால் இலகுவில் கையாளக்கூடியதாக உள்ளது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் பூசப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய சமையலையும் அவ்வாறே அவசரகதியில் முடிக்க எண்ணி உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். மண்பாத்திரங்களுக்கு உடனடியாகத் திரும்;புவது கடினமாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வு மேம்படவும்; உதவும் என்றார். இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு | Virakesari.lk- மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ; ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள்
12 Jan, 2026 | 06:15 PM மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக சீரின்றி காணப்பட்டது. எனினும் அவ்வீதியில் முழுமையாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விடயம் தொடர்பாக அவ்வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் அவ்வீதியினூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மன்னார் நகரில் இது முக்கியமான பிரதான வீதியாக உள்ளபோதிலும் அதனை சீரமைக்க யாரும் அக்கறை கொள்ளவில்லை. இந்த நிலையில் மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தரவுள்ளார். வீதியை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திணைக்களத்தினர் ஜனாதிபதியின் வருகையின் காரணமாகவே தற்போது அந்த வீதியை செப்பனிடும் பணியை ஆரம்பித்துள்ளமை நோக்கத்தக்க விடயமாகும். மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ; ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள் | Virakesari.lk- இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம் 12 Jan, 2026 | 07:24 PM (நெவில் அன்தனி) மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்கக்காரவை முந்திச்சென்ற விராத் கோஹ்லி, அந்த பட்டியலில் டெண்டுகல்கருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிராக வரோதரா, கோட்டம்பி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியல் அரைச் சதம் குவித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்து சாதனை ஏடுகளில் தனது பெயரை பதித்துக்கொண்டார். டெஸ்ட், சர்வதேச ஒருநாள், சர்வதேச ரி20 ஆகிய மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 100 சதங்கள், 164 அரைச் சதங்களுடன் 34357 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரைவிட 127 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள விராத் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார். 557 போட்டிகளில் 624 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள விராத் கோஹ்லி 84 சதங்கள், 146 அரைச் சதங்களுடன் 28068 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 தடவைகள் துடுப்பெடுத்தாடி 63 சதங்கள், 153 அரைச் சதங்களுடன் 28016 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் விராத் கோஹ்லி 93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்தப் போட்டியின்போது சிரேஷ்ட வீரர்களான விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் கௌரவிக்கப்பட்டனர். இந்தியா சார்பாக விராத் கோஹ்லி 18 வருடங்களாகவும் ரோஹித் ஷர்மா 19 வருடங்களாகவும் விளையாடி வருகின்றனர். மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 20074 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் ஷுப்மான் கில்லுடன் 118 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயருடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஷுப்மான் கில் 56 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானா 29 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கைல் ஜெமிசன் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கல்ஸ் 62 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்சித் ராணா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம்- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
முதல் நாள் இன்னும் முடியவில்லை. இது... ஐந்தாவது மணித்தியாலத்தில் எடுத்த படம். 😂 அதிகமாக உணவு உண்ட களைப்பாகவும் இருக்கலாம். 🤣- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
ஆஆஆ முதல்நாளே படுத்திட்டாரோ?- சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில் மோதி கார் விபத்து ; 4 பேர் பலி 12 Jan, 2026 | 07:17 PM கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பஸ் ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.