Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் திட்டவட்டம் டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள் முழு மையானவை அல்ல. எங்களது பரந்த வியூகத் திறன்கள் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தளங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாக ட்ரம்ப் தப்புக் கணக்கு போட வேண்டாம். எங்களது ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் முறைகளுக்கான கட்டமைப்புகள் என அனைத்தும் எவ்வித பாதிப்புமின்றி முழு அளவில் செயல்பாட்டில் உள்ளன. எனவே, இதுபோன்ற தவறான அனுமானங்கள், நீங்கள் ஏற்கெனவே சிக்கியுள்ள இக்கட்டான நிலையை மேலும் ஆழமாக்கும். எங்களது ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் அமைப்புகளைக் கணக்கிட முயற்சி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்; அதில் தோல்விதான் ஏற்படும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் மீது மிக வலுவான, பரந்த மற்றும் அழிவுகரமான தாக்குதல்கள் தொடரும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா அவமானத்தையும் நிரந்தர சரணாகதியையும் அடையும் வரையில் இந்த போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்
  3. நீங்கள் வந்து வாழ்வதற்காக மேற்கு ஜேர்மனியை சோவியத்திடமிருந்து பாதுகாத்து வைத்திருந்தது கூட "கடுகாக" உங்களுக்குத் தெரியவில்லையா😇?
  4. நல்லது தானே? ஈரானிடம் இராணுவ ரீதியில் தோல்வி அடையும் போது, அந்த தோல்விக்கு தொழில்முறை அமெரிக்க இராணுவம் பொறுப்பல்ல என்ற விம்பம் உருவாகும்!
  5. CSK vs PBKS, 7th Match at Chennai, IPL, Apr 03 2026 - Live Cricket Score Innings break 7th Match (N), Chennai, April 03, 2026, Indian Premier League Chennai Super Kings (20 ov) 209/5 Punjab Kings PBKS chose to field. Current RR: 10.45 • Last 5 ov (RR): 64/1 (12.80) Win Probability CSK 78.57% PBKS 21.43%
  6. நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா புளோரிடா: நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த 4 வீரர்களும் 10 நாள் பயணம் மேற்கொண்டு நிலவை சுற்றி பயணம் செய்வர். ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்கு பதில் நிலவைச் சுற்றி 6 லட்சம் மைல்கள் தூரம் பயணம் செய்து, நிலவின் மேற்பரப்பை படம் பிடிப்பர். மேலும் எதிர்கால திட்டங்களுக்கான முக்கிய தகவல்களை சேகரிப்பர். நிலவை சுற்றி வந்தபின் விண்கலம் பசிபிக் கடலில் வரும் 11-ம் தேதி பாராசூட் மூலம் விழும். அதை அமெரிக்க கடற்படையினர் மீட்பர். நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா
  7. இரான் அதன் தலைமை அழிந்தும் அரசியல் / இராணுவ ஒழுக்கம், ஒருங்கமைவு உள்ளதாக இருக்கிறது. 30 நாளில் அமெரிக்கா படை குழம்புகின்றது, அதியுச்ச மட்டத்தில். இதில் காசும் பங்கு வகித்து இருக்கலாம் - அமெரிக்காவில் இராணுவ உற்பத்தி / வழங்கலை பெரும் நிறுவனத்தின் பங்கு உயரும். ஹெக்சஹுக்கு, மற்றும் பல அரசியல் வாதிகளுக்கு இந்த நிறுனங்களில் (பங்குகளில்) பங்கு இருக்கிறது. குறிப்பிட்ட தளபதியின், விலை குறையாக தொழில்நுற்ப தேர்வும் மறைமுகமாக காரணமாக இருக்கலாம்.
  8. விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ..! நாமல் வெளியிட்ட தகவல் "யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெறும் சூழல் இன்று காணப்படுகின்றது. முறையற்ற விதத்தில் சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்காக முன்னின்று செயற்பட்டவர்கள். அவர்கள் யுத்த காலத்தில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவர்கள். எனவே, தற்போதைய ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு அவர்கள் பணியப்போவதில்லை. புலனாய்வுப் பிரிவினரைப் பழிவாங்கும் படலத்தை அரசு நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் எமது ஆட்சி அமையும் போது, பாதிக்கப்பட்ட அனைத்துப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நாம் நிச்சயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம்." என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள்
  9. அமெரிக்கா / இஸ்ரேல் ஈரானை அழிக்க முயல, அரபு / இஸ்ரேல் ஐ இரான் அழிக்கும், அதாவது அது யதார்த்தமாகும் சாத்திய கூறுகள் கூட ஏனெனில், நீரில் ஈரானை விட இவை செயற்கை நீர் வசதிகளில் தங்கி இருப்பவை. இங்கே சிலர் விடயம் அறியாமல் கதைப்பது.
  10. திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை! அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடனான கடும் மோதலே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாாிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட ஜெனரல் ஜார்ஜ், 2027 வரை பதவியில் இருக்க வேண்டியவர். ஆனால், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அவர் கட்டாய ஓய்வு பெற பணிக்கப்பட்டுள்ளார். கடுமையான மோதல்.. தகுதியான நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு ஜெனரல் பதவி உயர்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் சிறந்த சேவையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஜெனரல் ஜார்ஜ் பிடிவாதமாக இருந்ததே மோதலுக்கு முக்கிய புள்ளியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்ப் மற்றும் ஹெக்செத் ஆகியோரின் இராணுவ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கிச் செயல்படும் ஒருவரை தளபதியாக நியமிக்க பென்டகன் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடந்து வரும் இக்கட்டான சூழலில் இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்திற்குள் பரபரப்பு ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகள் தமது இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் ஜனாாிபதி ட்ரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய போர்ச் சூழலில் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதி நீக்கப்பட்டது இராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் ஜார்ஜ் மட்டுமல்லாது, மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய ஜார்ஜ், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் முக்கிய பங்காற்றியவர். இவரது பதவிக்காலத்தில் இராணுவத்தில் ஆள்சேர்ப்பு நெருக்கடியைச் சீர்செய்ததுடன், உக்ரைன் போரில் முக்கியத்துவம் பெற்ற குறைந்த விலை ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பங்களை அமெரிக்க இராணுவத்தில் உட்படுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், இராணுவத்தில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தால் குறைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உயர்நிலை அதிகாரிகளின் நீக்கம் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி
  11. 'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல் கட்டுரை தகவல் கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை. குடிநீரின் சுமார் 90% சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரிலிருந்தே கிடைக்கிறது. கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டால், வளைகுடா பகுதி விரைவில் வாழ முடியாத இடமாக மாறும் அபாயம் உள்ளது. இதுவே அந்தப் பிராந்தியத் தலைவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. நீண்ட காலமாக, இதுபோன்ற சிறிய நாடுகள் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களில் நேரடியாக ஈடுபடாமல் வளர்ச்சி அடைந்தன. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் ஏப்ரல் 1 அன்று நடந்த தாக்குதல் மறுத்த இரான் குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு முன்பு, இந்த தாக்குதல்களுக்கு இரானே காரணம் என்று குவைத் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு தெரியாது என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஓர் அறிக்கையில் இத்தாக்குதலை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கண்டித்ததுடன், "அமைதியின்மை உருவாக்க, நிலை குலைக்க மற்றும் பிராந்தியத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சி செய்கின்றன" என்றும் மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதே அறிக்கையில், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிடவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்திலும், குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்ததாக இரான் குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,Getty Images அபுதாபியில் என்ன நிலை? வானில் தடுக்கப்பட்ட ஏவுகணை சிதிலங்கள் விழுந்ததால் அபுதாபி எரிவாயு நிலையத்தில் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்ததையடுத்து, அவற்றின் சிதிலங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மீது விழுந்ததாக அபுதாபி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்படும் வரை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew709nrw2jo
  12. Today
  13. வீழ்ந்த விமானத்தின் விமானியை... அமெரிக்க விமானங்கள் தேடிக் கொண்டுள்ளது.
  14. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் Apr 3, 2026 - 08:03 PM பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று (03) நண்பகல் வேளையிலேயே குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கைதிகளைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmnj06ps40007356pcm0wm1ac
  15. https://tamilwin.com/article/fallout-cost-us-army-chief-randy-george-his-job-1775217191?itm_source=article திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
  16. அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது Published By: Vishnu 03 Apr, 2026 | 07:21 PM அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள் இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/242677
  17. தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 2010-ஆம் ஆண்டில் ‘எம்.வி. சன் சீ’ (M.V. Sun Sea) கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் ஒருவரான குமார் துரைசிங்கம் என்பவரின் எதிர்காலம் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்தசங்கரி, “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்கட்டும். கடந்த காலங்களில், ‘சன் சீ’ கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், அங்கு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரிக்க கனடிய நீதிமன்றங்களே சரியான இடம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். குமார் துரைசிங்கத்தின் வழக்கறிஞர் கேஸ் போஸ்கேட் (Kes Posgate) கூறுகையில், குமார் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாக, இதே கப்பலில் வந்த சத்தியபவன் ஆசிர்வாதம் என்பவர் இலங்கைக்குத் திரும்பியபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 2010-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, தாய்லாந்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி. சன் சீ’ சரக்குக் கப்பல் மூலம் 492 தமிழர்கள் கனடாவிற்கு வந்தனர். இவர்களில் 63 சதவீதத்தினரின் ஏதிலி தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், குமார் துரைசிங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவர் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கார்பாரோ பகுதியில் தச்சராகப் பணியாற்றி கனடாவில் வசித்து வந்தார். அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். “நான் 16 ஆண்டுகளாக இங்குள்ளேன், என்னைக் கனடியனாகவே உணர்கிறேன். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு என்ன நடக்கும் என்று நினைத்தால் மிகுந்த அச்சமாக உள்ளது,” என குமார் துரைசிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1470898
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி யாயினி.
  19. மாலை மரியாதை கோர்ட்டு சூட்டு என என்ன ஜாலியா வாழ்ந்த மனிசன்யா அவர்😌 பாவம் குளிக்கும்போதுகூட காதுல இருந்து Earbuds 🎧 ஐ கழட்ட மாட்டாரு🥲 அவரைப்போய்... 😂 🤣 Rajakulasingam Chandrakumar
  20. எந்த நீரினையும் அதன் மருங்கே உள்ள நிலப்படுத்தியில் இருந்த்து தாக்குபவர்களுக்கு வசகியானது நீரினை திறப்பு தாக்குதல் (தோல்வியில்) uk (மேட்ற்கு) முயன்று தோற (இராணுவ) பலப்பாடம் இருகிறதது Gallipoli நீரிணை திறப்பு (1915 ஓட்டோமான் அரசு, இன்றைய துருக்கி ) மிகவும் தோல்வியில் முடிந்தது (இதில் பிரான்சும் பங்குபற்றியது என்றே நினைவு) அத்துடன் சமீப வரலாற்றில் uk க்கு பாக்லண்ட்ஸ் தீவு தரையிறக்க அனுபவம் - ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணைகள் இல்லது இருந்த்தும் அழிவு நடந்தே uk தரையிறக்கம் நடந்தது. (அனால் ஆர்ஜெந்தினா பாக்லாண்ட்ஸ் தீவு கடல் இடைவெளி கிட்தட்ட 300 - 500 மைல்கள்) uk இராணுவம் பின் ஆய்வில், ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணை இருந்த்து இருந்தால் அநேகமாக தோல்வியில் முடிந்த்து இருக்கும் என்ற முடிவுக்கு வந்தது. (ஆர்ஜெந்தினா பிரான்சிடம் ஏவுகணை வாங்குவதை UK தடுத்ததை இங்கு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்) இரானில் - நிலம் நீளம், நீரினை ஒடுங்குவது, ஆழம் குறைவது, ஈரான் பக்கம் மலை பகுதி, அத்துடன் இரான் இடம் உள்ள ஏவுகணை, சிறிய நீர்மூழ்கி, அசையும் / தானியங்கி நீரடி கண்ணிவெடிகள் .. வேறு சில பல வசதி களும். (Gallipoli இல் முக்கியமாக இராணுவ போக்குவரத்துக்கு திறப்பு முயற்சி) ஆனால் , இதில் உள்ள மிகப் பெரும் பிரச்னை, இரான் ஒரு சிறிய தாக்குதலே செய்த்து 1-2 கப்பல்களை சேதம் / தீக்கிரை ஆக்கினாலே போதும் இந்த (மேட்ற்கு / us) திறப்பை முறியடிக்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.