Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. திராவிட தொப்புள் கொடி பந்தம் இல்லாமலா அனுரா அம்மான் யாழ்பாணத்தில் றோட்டால் சும்மா வாங்கிங் போனாலே ராஐ நடை வீர நடை கம்பீர நடை என்கின்றார்கள்.
  3. பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு Mar 23, 2026 - 03:01 PM இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2zkaor0002356p2io3ha2b
  4. அல்லாகு அக்பர் சொல்லி தாக்குபவர்களை அவர்களின் ஆதரவாளர்களை கட்டிபிடிப்பவர் இடதுசாரி ஓம் நமச்சிவாய சொல்பவர் வலதுசாரி நடிகர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போன்று அந்தோனி அல்பானீஸ் அய்யாவும் ரம்ஜான் விழாவிற்கு சென்று தான் ஒரு இடதுசாரி என்பதை நிருபித்துள்ளார். அவர் முகம் மகிழ்ச்சியில் காணபட்டது
  5. முதல் ஆட்டம் எங்கே, எப்போது? ஐபிஎல் போட்டி அட்டவணை, அணி வீரர்கள் விவரம் பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP via Getty Images படக்குறிப்பு,நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது 22 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் என்பதால் அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த புதிய சீசன் பற்றிய சில முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்தப் பதிவில்... ஐபிஎல் 2026 எந்தெந்த நகரங்களில் நடைபெறுகிறது? 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. டெல்லி (டெல்லி கேபிட்டல்ஸ்), கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), லக்னௌ (லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஆமதாபாத் (குஜராத் டைட்டன்ஸ்), ஹைதராபாத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 ஹோம் ஆட்டங்களும் (லீக் சுற்று) நடைபெகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் (4 போட்டிகள்) மற்றும் கௌஹாத்தி (3 போட்டிகள்) என இரு இடங்களில் தங்கள் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது. நியூ சண்டிகர் (4 போட்டிகள்) மற்றும் தரம்சாலா (3 போட்டிகள்) ஆகிய ஊர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் ஆட்டங்கள் நடைபெறும். தங்களின் 5 ஹோம் ஆட்டங்களை பெங்களூருவில் விளையாடும் ஆர்சிபி, 2 ஹோம் ஆட்டங்களை ராய்ப்பூரில் விளையாடுகிறது. மொத்தம் எத்தனை போட்டிகள் நடைபெறும்? இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள். ஐபிஎல் 2026 சீசன் அட்டவணை 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்கள் நடப்பதால் இந்த ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படவில்லை. தேர்தல் நடக்கும் தமிழ்நாடு (சென்னை சூப்பர் கிங்ஸ்), மேற்கு வங்கம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), அசாம் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் வெளியான அட்டவணை முதல் 20 போட்டிகளுக்கு மட்டுமானதாகவே இருந்தது. முழு அட்டவணையை பிசிசிஐ இனிமேல் தான் வெளியிடும். முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை: போட்டி எண் - தேதி - நேரம் - அணிகள் - இடம் மார்ச் 28 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு மார்ச் 29 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி மார்ச் 31 - இரவு 7.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - நியூ சண்டிகர் ஏப்ரல் 1 - இரவு 7.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னௌ ஏப்ரல் 2 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை ஏப்ரல் 4 - மாலை 3.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி ஏப்ரல் 4 - இரவு 7.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆமதாபாத் ஏப்ரல் 5 - மாலை 3.30 மணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - ஹைதராபாத் ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ஏப்ரல் 6 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா ஏப்ரல் 7 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கவுஹாத்தி ஏப்ரல் 8 - இரவு 7.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி ஏப்ரல் 9 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - கொல்கத்தா ஏப்ரல் 10 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கவுஹாத்தி ஏப்ரல் 11 - மாலை 3.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - நியூ சண்டிகர் ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை ஏப்ரல் 12 - இரவு 3.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - லக்னௌ ஏப்ரல் 12 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை பட மூலாதாரம்,Getty Images சென்னையில் நடக்கும் போட்டிகள் எவை? இந்த முதல் கட்ட அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஹோம் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அவை ஏப்ரல் 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள் எவை? மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கௌஹாத்தி ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் யார்? (இது மார்ச் 18 வரையிலான அதிகாரப்பூர்வ நிலவரப்படியான அணிகளின் விவரம்) சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மஹேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, கார்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் பட்டேல், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், ஜேக் ஃபோக்ஸ், ஷிவம் துபே, கலீல் அஹமது, நூர் அஹமது, முகேஷ் சௌத்ரி, நேதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, ராகுல் சஹர். டெல்லி கேபிட்டல்ஸ்: கேஎல் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், பென் டக்கெட், பதும் நிசன்கா, சஹில் பராக், பிரித்வி ஷா, அபிஷேக் பொரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரணா விஜய், மாதவ் திவாரி, ஆகிப் தார், நித்திஷ் ராணா, மிட்செல் ஸ்டார், தங்கராசு நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, லுங்கிசானி எங்கிடி, கைல் ஜேமீசன், குல்தீப் யாதவ். குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷர் கான், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டன், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சூதர், குர்னூர் சிங் பிரார், இஷாந்த் ஷர்மா, அஷோக் ஷர்மா, பிரித்வி ராஜ் யார்ரா, லூக் வுட், ராகுல் தெவேதியா, ரஷீத் கான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, டிம் செய்ஃபர்ட், ரோவ்மன் பவெல், அனுகுல் ராய், சர்தக் ரஞ்சன், தக்‌ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ரமன்தீப் சிங், பிளெஸிங் முசர்பானி, வைபவ் அரோரா, மதீஷா பதிரானா, கார்த்திக் தியாகி, பிரஷாந்த் சோலன்கி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, உம்ரான் மாலிக், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி. லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்: ரிஷப் பன்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி, முகுல் சௌத்ரி, அக்‌ஷர் ரகுவன்ஷி, ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா, ஆயுஷ் பதோனி, மொஹம்மது ஷமி, ஆவேஷ் கான், சித்தார்த் மணிமாறன், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், ஆன்ரிக் நார்கியா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மோசின் கான். பட மூலாதாரம்,Debarchan Chatterjee/NurPhoto via Getty Images) படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரயன் ரிக்கில்டன், குவின்டன் டி காக், டேனிஷ் மலேவார், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சேன்ட்னர், ராஜ் அங்கத் பவா, அதர்வா அன்கொலேகர், மயாங் ராவத், கார்பின் பாஷ், வில் ஜேக்ஸ், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், மயாங்க் மார்கண்டே, தீபக் சஹர், அஷ்வனி குமார், ராகுல் ஷர்மா, மொஹம்மது இஸார், அல்லா கசன்ஃபார், ஜஸ்ப்ரித் பும்ரா. பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், பிரியான்ஷ் ஆர்யா, முஷீர் கான், சூர்யான்ஷ் செட்கே, மிட்ச் ஓவன், கூப்பர் கானலி, பென் துவார்ஷுய்ஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், வைஷாக் விஜயகுமார், யஷ் தாக்கூர், ஜேவியர் பார்ட்லெட், பிரவின் துபே, விஷால் நிஷாத், லாக்கி ஃபெர்குசன். ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக் (கேப்டன்), ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டானவன் ஃபெரீரா, லுவான்-ட்ரே பிரிடோரியஸ், ரவி சிங், அமன் ராவ் பெராலா, ஷிம்ரன் ஹிட்மெயர், யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், யுத்விர் சிங் சராக், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டீ, க்வேனா மஃபாகா, ரவி பிஷ்னாய், சுஷாந்த் மிஷ்ரா, யஷ் ராஜ் புஞ்ஜா, விக்னேஷ் புத்தூர், பிரிஜேஷ் ஷர்மா, ஆடம் மில்ன், குல்தீப் சென், சந்தீப் ஷர்மா, நாந்த்ரே பர்கர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் பட்டிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஃபில் சால்ட், ஜித்தேஷ் ஷர்மா, ஜோர்டன் காக்ஸ், குருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜேக்கப் பெதெல், வெங்கடேஷ் ஐயர், சர்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ் சௌஹான், ஜாஷ் ஹேசில்வுட், ராசிக் தார், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துசாரா, அபினந்தன் சிங், ஜேக்கப் டஃபி, யஷ் தயால். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இஷான் கிஷன், அனிகேஷ் வெர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஹெய்ன்ரிக் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேல், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷ் துபே, பிரைடன் கார்ஸ், ஷிவாங் குமார், கிரெய்ன்ஸ் ஃபுலேட்ரா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ், அபிஷேக் ஷர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், ஓன்கர் டார்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங், ஷிவம் மாவி. * காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்திருக்கிறது. அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள் யார்? கேமரூன் கிரீன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 25.2 கோடி மதீஷா பதிரனா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 18 கோடி கார்த்திக் சர்மா - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி பிரஷாந்த் வீர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி லியாம் லிவிங்ஸ்டன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 13 கோடி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் எவை? பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP via Getty Image படக்குறிப்பு,இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்: 2010, 2011, 2018, 2021, 2023 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ் 2009 - டெக்கான் சார்ஜர்ஸ் 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2013 - மும்பை இந்தியன்ஸ் 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2015 - மும்பை இந்தியன்ஸ் 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2017 - மும்பை இந்தியன்ஸ் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 - மும்பை இந்தியன்ஸ் 2020 - மும்பை இந்தியன்ஸ் 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2022 - குஜராத் டைட்டன்ஸ் 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7071glrn1o
  6. சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25 இல் பரிசீலனை! Mar 23, 2026 - 01:01 PM அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmn2v87h2000k356pe5a761p4
  7. லண்டன் வரை இரான் ஏவுகணைகள் தாக்குமா? டியாகோ கார்சியா 'தாக்குதல்' எழுப்பும் கேள்விகள் பட மூலாதாரம்,Photo by Eyad Baba / AFP via Getty Images படக்குறிப்பு,மத்திய காஸா பகுதியில் உள்ள பாலத்தீன அகதிகளுக்கான புரைஜ் முகாமில் இருந்து பார்க்கும்போது, இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று வானில் தென்படுகிறது. கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன் -அமெரிக்கக் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருப்பது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் வெளிப்படையான தீவிரத்தைக் காட்டுகிறது. குறிவைக்கப்பட்ட இலக்கு தாக்கப்படவில்லை, ஆனால் போர் தொடங்கிய பிறகு இவ்வளவு நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎப்ஃ) தெரிவித்துள்ளது. ஏவுகணைகளை ஏவியதை இரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, இரானிய ஊடகங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டியே இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தோல்வியுற்ற தாக்குதலின் விளைவுகள் மற்றும் இது எதிர்காலத்தில் மற்ற சாத்தியமான இலக்குகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். உதாரணமாக, பெர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைநகரங்கள் எதிர்காலத்தில் குறிவைக்கப்படலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், லண்டனை அடையும் திறன் கொண்ட நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் இரானிடம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ள கூற்றை "உறுதிப்படுத்துவதற்கான எந்த மதிப்பீடும் இல்லை" என்று பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரான் தனது ஏவுகணைகள் பாயும் தூரத்திற்கு தானாகவே ஒரு வரம்பை நிர்ணயித்திருந்தது, ஆனால் அது இப்போது மாறிவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். "இரானின் ஏவுகணைத் திட்டம் நீண்ட காலமாகச் சர்வதேசக் கண்காணிப்பின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது" என்று கூறும் பிபிசி நியூஸ் பெர்ஷியனின் கோன்சே ஹபிபியாசாத்,"தனது ஏவுகணை மேம்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மற்றும் தேசியத் தடுப்பு உத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று இரான் கூறினாலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் பிராந்தியப் பாதுகாப்புச் சூழலை மாற்றக்கூடும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்"என்றும் குறிப்பிட்டார். இரானின் அணுசக்தி லட்சியங்கள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் தாக்குதலைத் தொடங்கிய போது மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. டியாகோ கார்சியா அமைந்துள்ள சாகோஸ் தீவுகள், இரானில் இருந்து சுமார் 3,800 கி.மீ தொலைவில் உள்ளன. பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிஎன்என் போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் எந்த ஆயுதமும் அதன் இலக்கை அடையவில்லை என்று அவை தெரிவித்தன. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானில் தோல்வியடைந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பலால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் துல்லியமானவை என்று பிபிசி கருதுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நகரங்கள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும், இரான் இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததைக் கடந்த ஆண்டே வெளிப்படுத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர், சாகோஸ் தீவுகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்ட பிறகு, ஒரு சமூக ஊடக வீடியோவில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இரான் 4,000 கி.மீ தூரம் செல்லக்கூடிய இரண்டு நிலைகளைக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக ஏவப்படவில்லை" என்று அவர் கூறினார். மேலும், "அவற்றின் தாக்குதல் வரம்பு ஐரோப்பாவின் தலைநகரங்களை அடையும். பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய அனைத்தும் நேரடி அச்சுறுத்தல் எல்லைக்குள் உள்ளன"என்றும் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு நிபுணரும், பிரிட்டன் கூட்டுப் படைக் கட்டளையகத்தின் முன்னாள் தலைவருமான ஜெனரல் சர் ரிச்சர்ட் பரோன்ஸ் உட்பட மற்றவர்கள் பிபிசியிடம் கூறுகையில், இவை அனைத்தும் இரானின் ஏவுகணை இருப்பு மற்றும் அவை எட்டும் தூரம் குறித்து மறு மதிப்பீடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளன என்று தெரிவித்தார். "இதற்கு முன்பு இரானின் ஏவுகணைகள் 2,000 கி.மீ தூரம் பாயும் திறன் கொண்டவை என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் டியாகோ கார்சியா 3,800 கி.மீ தொலைவில் உள்ளது." பட மூலாதாரம்,US National Archives இரான் இதுவரை தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்குத் தானே ஒரு வரம்பை விதித்துக்கொண்டதாகவும், அவற்றின் வரம்பை 1,240 மைல்களாக (2,000 கி.மீ.) மட்டுப்படுத்தியதாகவும் கூறிவந்தது. இதன் பொருள், இஸ்ரேல் இரானுடைய ஏவுகணைகளின் தாக்குதல் எல்லைக்குள் இருந்தது, ஆனால் ஐரோப்பா இல்லை என்பதாகும். இது ஒரு அரசியல் ரீதியான தேர்வு என்றும், ஏவுகணைகளைத் தயாரிப்பதில் உள்ள தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் அல்ல என்றும் ராணுவத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் மறைந்த ஆயதுல்லா அலி காமெனயி 2021-ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தொடர விரும்பினார். ஆனால் இரானின் இலக்கில் இல்லாத ஐரோப்பாவை அச்சமடையச் செய்ய விரும்பவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில் கூறுகையில், ஐ.ஆர்.ஜி.சி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த ஏவுகணையின் தூரம் குறித்த விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. ஏவுகணை வரம்பு திறன்கள் பட மூலாதாரம்,Shomos Uddin via Getty Images படக்குறிப்பு,லண்டன் போன்ற நகரங்களை இரானிய ஏவுகணைகள் சென்றடைய முடியுமா என்பது குறித்து நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தியின்படி, இரானின் விண்வெளித் திட்டம் என்பது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை அது ஏற்கனவே உருவாக்கியிருக்கலாம் என்பதையே குறிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தேவைப்படும் போது இந்தத் தொழில்நுட்பத்தை இரான் பயன்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். சில ஆய்வாளர்களும் இதனை ஒப்புக்கொள்கிறார்கள். லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் முனைவர் கரின் வான் ஹிப்பல் பிபிசி செய்தியிடம் கூறுகையில், "ஏவுகணைகள் டியாகோ கார்சியாவை அடைந்தன என்று வைத்துக்கொண்டால்... இரானியர்கள் 10,000 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகின்றனர், இருப்பினும் அவற்றை நாம் இன்னும் செயல்பாட்டில் காணவில்லை," என்றார். இதன் பொருள் இரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியைச் சென்றடையும் சாத்தியம் உள்ளது என்பதாகும். இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி, இரானின் ஏவுகணை வரம்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Atta Kenare / AFP via Getty Images படக்குறிப்பு,இரான் தனது நோக்கங்கள் குறித்த ஒரு செய்தியை அனுப்பவே முயற்சிப்பதாகவும், அதன் தற்போதைய ஏவுகணை வரம்பிற்கு அப்பாற்பட்ட இலக்குகளைத் தாக்குவதை இப்போதைக்கு அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த ஏவுகணைகள் இடையில் தடுத்து நிறுத்தப்படாமல் இருந்திருந்தாலும் கூட, அவை தங்களது இலக்கை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே என்று சிலர் கூறுகின்றனர். பிரிட்டனின் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் பிபிசியிடம் கூறுகையில், "இரானியர்கள் பிரிட்டனைக் குறிவைக்கிறார்கள் என்றோ அல்லது அவர்கள் நினைத்தாலும் அவ்வாறு செய்ய முடியும் என்பதற்கோ எந்தவொரு குறிப்பிட்ட மதிப்பீடும் இல்லை," என்றார். இவ்வளவு நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம், அதாவது ஏவுகணைகளை அவ்வளவு தூரத்தில் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் திறன் இரானிடம் கைவசம் உள்ளதா என்பதே இப்போதைய முக்கியக் கேள்வியாகும். மேலும் இதில் ஒரு வெளிப்படையான உளவியல் அம்சமும் உள்ளது. இரான் இந்த இலக்குகளைத் தாக்குவதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாகத் தனது நோக்கம் மற்றும் தடுப்பு ஆற்றல் குறித்த தெளிவான எச்சரிக்கைச் செய்தியை அனுப்பவே இரான் இவ்வாறு செய்ததாகவும் சிலர் கருதுகிறார்கள். முன்னாள் இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை அதிகாரியும், தற்போது டெல் அவிவ் நகரைத் தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டேனி சிட்ரினோவிச் லண்டனின் 'தி இன்டிபென்டன்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நாளை அவர்கள் லண்டன் அல்லது பாரிஸைத் தாக்குவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை இது அவர்களின் தற்காப்பைக் கட்டமைக்க உதவும் மற்றொரு அம்சம் என நான் நினைக்கிறேன்" என்றார். இந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் நடந்த நிகழ்வுகளுக்கு இஸ்ரேலின் எதிர்வினை ஒரு ஆதரவு திரட்டும் முழக்கமாகவும் கருதப்படலாம். ஐரோப்பாவிற்கான முன்னாள் நேட்டோ துணைத் தளபதி ஜெனரல் சர் ரிச்சர்ட் ஷெரிஃப், பிபிசியிடம் கூறுகையில், "நிச்சயமாக இஸ்ரேல் இதைத்தான் சொல்லப்போகிறது, ஏனெனில் போரை விரிவுபடுத்துவதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து மற்ற நாடுகளை உள்ளே கொண்டு வருவதும் அவர்களின் விருப்பமாகும்" என்றார். அவர் மேலும் கூறுகையில், "நாம் அதை எதிர்க்க வேண்டும். இது தெளிவான முடிவு அல்லது உத்தி இல்லாத டிரம்பின் போர், இது ஒரு சிக்கலான புதைகுழியாக மாறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே அணுசக்தித் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக எங்களிடம் கூறப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் எதையும் நாம் நம்ப முடியாது"என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdx3jzvlyo
  8. இஸ்தான்புல்லில் விபத்து : சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் பலி Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:08 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், சுவிற்சர்லாந்து நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) மற்றும் சிவாஸ்கரன் சுகந்தி (47) ஆகியோர் அடங்குகின்றனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் டாக்ஸி வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241739
  9. Today
  10. சரியான முடிவாகவே படுகிறது. பிரித்தானிய பணமுறிகளில் முதலீடு அதிகரிக்க காரணம் அமெரிக்க முறிகளில் இருந்து பல முதலீட்டாளர் வெளியேறுவது என ஒருவர் சொன்னார். டுபாயை மையமாக கொண்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்க பணமுறிகளில் இருந்து வெளியே வருமாறு இல்லை என்றால் உங்கள் நிறுவனங்களும் எமது இலக்கே என ஈரான் மிரட்டல் அனுப்பியதாக சொல்கிறார் ஒருவர். உண்மையா தெரியவில்லை. வழமைக்கு மாறாக யுத்தம், ரிசெர்சன் ஆபத்து இருந்தும் தங்கம் விலை விழுகிறது. அரபுநாடுகள் செலவுக்காக தங்கத்தை விற்பதாலாம். மத்தள போன்ற இடத்துக்கு செயல்பாட்டை மாற்றினாலே ஒழிய அரபு நாட்டு விமானசேவைகள் பல வங்குரோத்தாகும் நிலை வரக்கூடும். மத்தளவுக்கு மாற்றினாலும், எரிபொருள் கிடைப்பது சுலபம் அல்ல. விமான எரிபொருட் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிமிடம் சண்டை நின்றாலும் கூட உலக எண்ணை, எரிவாயு விலையும், உஅலகன்பொருளாதாரமும் மீள 6 மாதமாவது செல்லும். உலக நாடுகள் அனைத்திலும் recession உறுதி என எண்ணுகிறேன். இப்போதை நிலை இன்னும் 1 மாதம் நீடித்தால் - depression கூட வரலாம்.
  11. இதுதான் கடைசிப் பயனாக கதை.😀 இது டூ மச் .... வருகைக்கு நன்றி கமராவில பார்துப் பார்த்து தொட்டதுக்கும் போன் செய்தபடிதான் 😂 பின்ன இருக்காதா என்ன. நானும்தான் HAPPY.😃
  12. இருவரும் அரச பயங்கரவாதிகள் , இருவரும் அடிப்படைவாதிகள் இருவரும் கட்டிப்பிடித்து உறவு கொள்வீர்கள் என்பது தெரிந்த விடயம்... அமெரிக்காவுக்கும் உதவுவார்கள்.பின்கதவால்
  13. அமெரிக்காவின் காலக்கெடு - ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்த அதிர்ச்சி! Mar 23, 2026 - 12:33 PM அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn2u7r5e000j356pog6c5n9d
  14. இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! Mar 23, 2026 - 12:15 PM இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmn2tmsff000i356p2p8o596a
  15. அணு தளங்கள் மீது தாக்குதல் : சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக சுகாதார அமைப்பு 23 Mar, 2026 | 09:24 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் மோதல் மேலும் தீவிரமடைந்து, முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச கவலை அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் அமைந்துள்ள நடான்ஸ் அணு செறிவு வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, இஸ்ரேல் நாட்டின் திமோனா அணுசக்தி தளம் அமைந்த நகரம் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களின் பின்னணியில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி தளங்களுக்கு அருகில் இடம்பெறும் தாக்குதல்கள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரத்தில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதல்களால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார தாக்கங்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. ஹோர்மூஸ் நீரிணை மீது ஈரான் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ள நிலையில், நட்பு நாடுகள் தவிர்த்து பிற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும், ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியம் குறித்த அச்சமும் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு தளங்களைச் சுற்றியுள்ள தாக்குதல்கள் கதிர்வீச்சு அபாயங்களை உருவாக்கி, நீண்டகால சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அணு தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகின்றன. மேலும், அணு சம்பவங்கள் ஏற்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, 13 நாடுகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. பணியாளர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அனைத்து தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமெனவும், அணு சம்பவங்களைத் தூண்டும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். அமைதியே சிறந்த மருந்து, உலகத் தலைவர்கள் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்ற நிலை உலகளாவிய பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான சவாலாக மாறியுள்ள நிலையில், சர்வதேச சமூகம் உடனடி தலையீடு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. https://www.virakesari.lk/article/241690
  16. ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் Mar 23, 2026 - 09:22 AM ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களில் 214 சிறுவர்களும் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2nczqq0009356puapjk599
  17. இரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி? அவசர விசாரணை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அராட் நகரில் இரான் ஏவுகணை நேரடியாகத் தாக்கிய இடத்தைப் பார்வையிடும் தீவிர மரபுவழி யூத குடியிருப்பாளர்கள் கட்டுரை தகவல் செபாஸ்டியன் அஷர், அராட், ஜரோஸ்லாவ் லுகிவ், மற்றும் பேட்ரிக் ஜேக்சன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இஸ்ரேலிய அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரு நகரங்களில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 180 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (மார்ச் 21) மாலை இரு நகரங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அராட் நகரில் 116 பேரும், டிமோனா நகரில் 64 பேரும் காயமடைந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிமோனா நகருக்கு வெளியே சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை, டெல் அவிவ் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தெஹ்ரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 92% ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது. அராட் நகரில், சனிக்கிழமை கேட்ட வெடிப்புச் சத்தங்கள் மிகவும் திகிலூட்டுவதாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஏவுகணைத் தாக்குதலால் பல கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. தரையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடத்திற்குள் பொருட்கள் விழுந்து நசுக்கியதில், "தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த பல குழந்தைகளை" தான் பார்த்ததாக அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் நரம் சையத் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார். "உடைந்த கண்ணாடிகளால் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், தலையில் காயமடைந்த 10 வயது சிறுமியை நான் தேற்ற முயன்றேன்," என்று அவர் கூறினார். "அவளுடைய பெற்றோர் கட்டடத்திற்குள்ளேயே சிக்கி இருந்ததால், அவள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்துவிட்டாள். இடிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவளது பெற்றோர் மீட்கப்படும் வரை நாங்கள் காத்திருந்து, பின்னர் அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்." தாக்குதலின் வேகத்தில் இரண்டு குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்கள் பெயர்ந்து போயிருந்தன. நெகேவ் பாலைவனத்தில் உள்ள இந்தத் தீவிர மரபுவழி யூதர்கள் வாழும் நகரில், கருப்பு நிற உடை அணிந்த ஆண்கள் கூட்டமாக நின்று அந்தச் சேதங்களை உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,தெற்கு இஸ்ரேலின் அராட் நகரில் இரான் வீசிய ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்புகளைத் தகர்த்தது டிமோனா நகரிலும் இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு காயமடைந்த பலரில் 10 வயது சிறுவனும் ஒருவன். அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். "டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு நகரங்களிலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கைத் தவறவிட்டன. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்ட இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கின" என்று இஸ்ரேலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். அஹ்மதியல் பென் யெஹுதா, டிமோனாவில் ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து இரண்டு நிமிட நடைப்பயணத் தொலைவில் வசிக்கிறார். தாக்குதல் நடந்தபோது, தான் பாதுகாப்பு அறைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்ததாக அவர் கூறுகிறார். "எனது வீடு உட்பட பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன, ஜன்னல்கள் உடைந்து சிதறின." என்றார் அவர். ஏவுகணை விழுந்த வீதியைப் பார்வையிடச் சென்ற பென் யெஹுதா, "ஒரு மழலையர் பள்ளி உட்பட அந்தப் பகுதியே உருக்குலைந்து போயுள்ளது" என்றார். பலருடைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக அழிந்துவிட்டதை அவர் நேரில் பார்த்தார். "நான் பயங்கரமான அச்சத்தை உணர்ந்தேன். ஒரு ஏவுகணை கான்கிரீட் கட்டடங்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழிவைப் பார்ப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது." இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகு அராட் நகரில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுகிறார் இரான் இஸ்ரேலுக்குள் தொடர்ந்து இத்தகைய சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பது, இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை நினைவூட்டுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணைகள் எவ்வாறு ஊடுருவின என்பதைக் கண்டறிய அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள 'ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம்' பொதுவாக "டிமோனா அணு உலை" என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு இருப்பதாக நம்பப்படும் ஒரு இடமாக அது உள்ளது. பட மூலாதாரம்,Maxar படக்குறிப்பு,2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக, இந்தத் தளம் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஆறு தசாப்தங்களாக இஸ்ரேல் இங்கு அணு குண்டை உருவாக்கியது என்பது வெளிப்படையான ரகசியமாகும். இருப்பினும், அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களும் இது குறித்து தெளிவற்ற நிலையையே பராமரித்து வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடாக இஸ்ரேல் உள்ளது. எனவே, இந்த தளம் இலக்கு வைக்கப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இஸ்ரேலால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இரான் அணு குண்டை தயாரிப்பதற்கான எந்தவொரு சாத்தியமான திறனையும் அழிப்பதையே இந்தப் போரின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளன. நடான்ஸ் மீதான தாக்குதலை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இரானின் அணுசக்தி அமைப்பு வர்ணித்துள்ளது. இருப்பினும், "கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை" என்றும், "சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்றும் அது கூறியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் முதல் நாட்களிலும், கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், அமெரிக்க - இஸ்ரேல் படைகளால் நடான்ஸ் குறிவைக்கப்பட்டது. சனிக்கிழமை நடான்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டபோது, அந்தப் பகுதியில் இத்தகைய தாக்குதல் நடந்ததாகத் தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. கூடுதல் தகவல்கள்: டாம் பென்னட் மற்றும் கேப்ரியலா பொமரோய். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdxx1jnpgo
  18. பாடசாலை விளையாட்டு விழாக்களுக்கான விசேட வழிகாட்டல் 23 Mar, 2026 | 11:35 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை முடிந்தவரை அதிகாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ, நண்பகல் வேளையிலேயே சூரிய வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதால், இவ்வாறான வெளிப்புற நிகழ்வுகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் ஏற்பாடு செய்வது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கடும் வெயில் நிலவும் மதிய நேரங்களில் மாணவர்களை நீண்ட நேரம் மைதானங்களில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும், பயிற்சிகளைத் திட்டமிடும்போது காலநிலையைக் கருத்திற்கொண்டு செயல்படுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இவ்வாறான உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241705
  19. உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை Mar 23, 2026 - 06:45 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் குறிப்பாக மத்திய கிழக்கிலும் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்கத் திணைக்களம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அமெரிக்கர்களும் தமக்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான எல்லைகள் அவ்வப்போது மூடப்படலாம் என்பதுடன், மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திர வசதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் ஆதரவு குழுக்களினால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் காரணங்களினால் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு இந்த விசேட எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2hrbkf0001356pm7ytlnff
  20. மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை அமெரிக்க மரைன் வீரர்களை (Marine soldiers) ஏற்றிச்செல்லும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டிரிபோலி, தற்போது மத்திய தரைக்கடலில் இரகசியமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன யுஎஸ்எஸ் டிரிபோலி தற்போது எங்கு நங்கூரமிட்டுள்ளது என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தரைவழி போருக்கான எச்சரிக்கை யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பலில் 2,200-க்கும் மேற்பட்ட மரைன் வீரர்கள் இருப்பதாகவும், மேலும் அக்கப்பலில் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் வார்ஹாக் போர் விமானங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது. அமெரிக்க இராணுவத்தின் ஐந்தாவது மற்றும் ஏழாவது கடற்படைகளும் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ளன, மேலும் இந்த படைகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 என்று கூறப்படுகின்றது. இருப்பினும், அமெரிக்கப் போர் துறை இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. தரைவழிப் போருக்காக அமெரிக்கப் படைகளை ஈரானுக்குச் செல்லுமாறு ட்ரம்ப் உத்தரவிட்டால், அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலைகளால் சூழப்பட்ட ஈரானின் அமைவிடம், அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் பாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். https://tamilwin.com/article/us-warships-secretly-entered-the-mediterranean-1774244471
  21. அதிகரிக்கும் வெப்பநிலை ; சிறுவர்கள் அதிகளவில் நீரை பருகுவது அவசியம் - விசேட வைத்திய நிபுணர் Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 10:02 AM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப பக்கவாதத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெப்பமான காலநிலையில் சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறையக்கூடும். எனவே, அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (இளநீர், பழச்சாறு) அடிக்கடி வழங்க வேண்டும். சிறுவர்களிடம் உடற்சோர்வு, பசியின்மை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும். தற்போது பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போதியளவு நீர் அருந்தாமல் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் வெப்ப வாதத்துக்குள்ளாகக்கூடும். வெப்பத்தாக்கத்தினால் இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். இது வலிப்பு, மயக்கம் மற்றும் தீவிர சந்தர்ப்பங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் வெப்பத்தினால் சிறுவர்களுக்கு வியர்க்குரு, தோல் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிறுவர்களை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும். அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நீரில் விளையாட அல்லது இருக்க அனுமதிப்பது உடல் வெப்பத்தைத் தணிக்கவும் தோல் நோய்களைத் தவிர்க்கவும் உதவும். வெப்பம் உச்சமாக இருக்கும் நேரங்களில் சிறுவர்களை நேரடியாகச் சூரிய ஒளியில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும், விளையாட்டுப் போட்டிகளின் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவர்கள் நீர் பருகுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241692
  22. யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்! Published By: Vishnu 22 Mar, 2026 | 07:02 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டன. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/241677
  23. இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு! நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலின்படி, நாட்டின் எல்லைக் கடல் பகுதி மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல கடலடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் இலங்கையின் கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இது இலங்கையின் கடல்சார் வளங்களின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தியுள்ளது. எனினும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் ஆய்வு உரிமங்களை வழங்கும் செயல்முறை ஆரம்ப கட்டத்தில் இன்னும் இருப்பதால் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இன்போதைக்கு சாத்தியில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இலங்கை கடல்சார் ஆய்வில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 2021 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் சட்டம் உள்ளிட்ட ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. “இலங்கையை ஆராயுங்கள்” திட்டத்தின் கீழ், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகள் பாரம்பரிய ஏலச் சுற்றுகளிலிருந்து திறந்த உரிம முறைக்கு மாறி, கடலோரப் பகுதிகளைச் சிறிய தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடலோர வளங்களை ஆராய்வதில் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469607
  24. தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து! மோசமான வானிலை காரணமாக, திங்களன்று (23) அதிகாலை லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின் விமானப் பயண கண்காணிப்புத் தரவுகள் மற்றும் உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் CRJ-900 விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனம் மீது மோதியதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது. இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பயணிகள் விமானத்தின் மூக்குப் பகுதியிலும் முன்பகுதியிலும் ஏற்பட்ட சேதம் காணப்பட்டது. விபத்தின் போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை மதிப்பிடப்பட்டு வருவதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2026/1469633

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.