Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. மக்கள்தான் அரசை தேர்கிறார்கள் இல்லையா? 2010 களில் இங்கே பூர்வாக செயில் வாயு அகழ்வு கூட நடந்தது. Fracking என்பார்கள். ஆனால் மக்கள் பெருமெடுப்பில் எதிர்க்க, அரசியல் கட்சிகளுக் எதிர்க - வழக்கு, வம்பு என ஆகி. அப்படியே திட்டம் கைவிடப்பட்டது. யூகேயில் இது ஒரு பிரச்சபை எதுக்கு கோர்ட்டுக்கு போவார்கள். ஹீத்துறோவில் 3 வதாக ஒரு ரன் வே கட்ட 35 வருடமாக அரசு முக்குது, அதை சுத்தி உள்ள சில பத்தாயிரம் மக்கள் சேர்ந்து தடுக்கிறார்கள்.
  3. கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய். ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.
  4. இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.
  5. இப்போதைக்கு எவருக்கும் export ban போடும் தேவையில்லை. ஆனால் ஒரு விடயத்தை கவனிக்கவும். அவுஸ் தன் நாட்டின் அவசரகால எண்ணை இருப்பில் கொஞ்சத்தை நேற்று வெளிவிட்டது. உள்ளூர் மார்கெட்டுக்கு. இலங்கை ஒருநாள் லீவு விடுகிறது. ஆனால் நோர்வே? யூகே? விலை கூடுகிறது ஆனால் பற்றாகுஐ இல்லை. ஏன் என்றால் ஐரோப்பாவின் எண்ணையை சந்தை விலை ஒன்றே என்றாலும் கூட யாரும் அவுசுக்கு காவ மாட்டார்கள். அதுவும் ராட்சத டாங்கர்கள் மத்திய தரைகடல், சுயஸ் கால்வாயை தாண்ட முடியாது. ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுத்தி வரவேண்டும். ஐரோப்பா அமெரிக்காவில் விலை கூடினாலும் கையிருப்பு பிரச்ச்னை வராமைக்கும், ஆசியா, அவுசில் கையிருப்பு பிரச்சனை வரவும் இதுவே காரணம்.
  6. நாம், நம் கனவுகள்! jeyamohanMarch 18, 2026 வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை. இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை. இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன. இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள். இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட. எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே. தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம். அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம். https://www.jeyamohan.in/230261/
  7. மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும். இங்கிலாந்து செய்யலாம் ஆனால் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் செய்யும் அளவிற்கு தைரியமானவர்கள் அல்ல.
  8. தேசியமயமாகல் என்றால் தனியார் நிறுவனத்தை அரசு எடுப்பது. இது அது அல்ல. தனியாருக்கு சந்தை விலையை கொடுத்தபடி வழங்கலை உள்நாட்டில் மட்டும் செய்ய உத்தரவிடுவது. நீங்கள் export ban என கேள்விபட்டதில்லையா?
  9. மசகு எண்ணெயினை குறிப்பிடவில்லை, எரிவாயுவை கூட உள்நாட்டு தேவைக்கேற்ப விற்பார்களா என்பது சந்தேகமே. தேசிய வளங்கலை தேசிய மயப்படுத்துவது ஒரு கடுமையான பிரச்சினை 70 களில் விட்லமின் ஆட்சியினை MI6 மற்றும் CIA முடிவிற்கு கொண்டுவந்தார்கள், 2007 இல் ஆட்சிக்கு வந்த ராட்டின் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சுரங்க நிறுவனங்களின் மீதான அதிகரித்த வரி காரணமாக இருந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் இங்கிலாந்து தனது நலனிற்காக தேசிய வளங்கலில் கட்டுப்பாடினை செலுத்த முடியுமா என தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் யாரும் இந்த பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது.
  10. அந்த நாடுகள் பதில் சொல்லமுதல் ஆளை 72 கன்னிகளிடம் அனுப்பி விட்டோம் என்கிறது இஸ்ரேல். ஏன்னா நீங்க பாகிஸ்தானே காறி துப்பும் அளவுக்கு மோசமான ஆட்கள் 😂. தாக்குதலை கண்டித்த துருக்கிக்கும், முதல்நாள் காமேனி படத்துக்கு ஜனாதிபதி தூதரகம் போய் அஞ்சலி செலுத்த அடுத்த நாள் அசர்பைஜானுக்கும் மிசைல் அனுப்பும் போதே… அரபுநாடுகளுக்கு தெரியும் … அமெரிக்கா இல்லை எண்டால் தம்மை எல்லாம் ஈரான் விழுங்கி ஏப்பம் விடும் என்பது.
  11. என்ன இப்படி கேட்டுட்டேள் நியாயம்வாழ். இலக்கியம்னா அது ஒரு நூல் லோ இல்லியோ😂. பிகு பவுடர் டப்பா அவரின் காமாந்திர சுரண்டல் காரணமாக எந்த விருதுக்குமான தகமையை இழக்கிறார். ஆனால்…இந்த நூலிபான்கள் கிடந்து புலம்புவது ஒரு நான்-நூலுக்கு விருது கிடைத்ததை பொறுக்க முடியாமலே. தாம் எழுதுவதும் அதை போல எழுதுவதுமே மட்டுமே இலக்கியம் என எண்ணும் இந்த சுந்தர ரா, ஜெய கா, பு மோ க்களை விட நெருப்பு போல எளிய பாடல்களில் இலக்கியம் படைத்தவன் பட்டுகோட்டை. ஆனால் இந்த நூலிபான்களுக்கு தம்மை தவிர வேறு எவர் எழுதினாலும் அது இலக்கியம் அல்ல.
  12. அது கந்தையா அண்ணை சொன்ன பிச்சை எடுக்க வைப்போம் என்ற நிலை வந்தால் என்னாகும் என்பதற்கான பதில். ஹோர்மூஸ்சை திறக்க வைக்க, அமெரிக்கா கார்க் தீவை முடக்கினாலே (ஈரானின் எண்ணை ஏற்றுமதியில் 90%) போதும். இது சீனாவை பலமாக தாக்கும். ஆனால் சீனா உடனே போர்கப்பலை அனுப்பாது. சீனா தலையிட்டு, உனக்கு பாதி, எனக்கு பாதி என ஒரு ஒப்பந்தம் போட்டு நீரிணை மீள திறக்கப்ப்டலாம். ஆனால் இதை ஏன அமெரிக்கா கையில் எடுக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை. ஆட்சி விழும், முழுவதுமாக நாமே எடுக்கலாம் என்ற ஐடியாவா? அல்லது புட்டின் ஆடர் படி எஅடக்கிறாதா? தெரியவில்லை.
  13. பிகு யூகேயின் எரி சக்தி விலை அதிகம் என்பது தொடர்பாக குறித்த ஆலை அதிபர் கொடுத்த பேட்டியை இன்று ரேடியோவில் கேட்டேன். நியாயமான பயம்தான். 50 - 100 ஆண்டுக்கு தேவைக்கும் ஷேய்ல் எரிவாயு வடக்கு இங்கிலாந்தில் உள்ளது. ஆனால் வாயுவை அகழ தடை. அவுஸ் நிலக்கரியை இன்னும் அகழ்ந்து சீனாவுக்கு விற்கிறது. மக்களும் அதற்கு ஓக்கே. ஆனால் இங்கே இதை மககள் கடுமையாக எதிர்கிறனர். அணு உலைக்கும் எதிர்ப்பு. இத்தான் அந்த நபர் குறிப்பிட்டார். அவுஸ், பிரித்தானிய மக்கள் முற்போக்கு, பிற்போக்குதனம் வேறுபாடானது. ஒரு உதாரணம் உலக வெப்ப மயமாதல். பிரித்தானியாவில் காபன், அணு எரிப்புக்கு பலத்த எதிர்ப்பு. அவுசில் நாங்கள் எரிக்கமாட்டோம் ஆனல் 91 பில்லியன் யூ எஸ் டொலருக்கு ஏனைய நாடுகளுக்கு விற்போம் என்ற நிலைப்பாடு. அதே போல் குடிவரவு. அவுஸ் ஒரு இலங்கை போராளிகள், குடும்பம் தப்பி வந்த படகை நடுக்கடலில் மறித்து இலங்கையிடமே கையளித்தது. கிறிஸ்மஸ் தீவில் இன்னும் தடுத்து வைக்கிறது. யூகே, வேறு எந்த ஐரோப்பிய நாடும் இப்படி செய்ய முடியாது. கப்பலை அனுப்பி யூகே மீட்டு உள்ளே கொண்டு வருகிறது நாளுக்கு 1000 பேரை. இவற்றில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் ஒரே இனகுழுவாக இருப்பினும் மிக வேறுபட்ட values ஒரு நாடுகளிலும்.
  14. Today
  15. அவுசின் எரிசக்தி ஏற்றுமதி சீனாவுக்கான நிலக்கரியே. மசகு எண்ணை உற்பத்தி மிக குறைவு. அப்படி எடுக்கும் மசகு எண்ணையும் கிரேட் குறைவானது. மசகு பொருட்களில் அவுஸ் மிகை இறக்குமதியாளர். நீங்கள் சந்தை விலையையும் கையிருப்பையும் குழப்பி கொள்கிறீர்கள். பிரித்தானியா ஒரு எமர்ஜென்சி சட்டம் மூலம், சந்தை விலையை தருகிறோம் ஆனால் முதலில் எமக்குத்தான் விநியோகம் செய்ய வேண்டும் என இங்கே எண்ணை அள்ளும் நிறுவனங்களை கட்டுப்படுத்தலாம். இன்னும் அதற்காகன தேவை வரவில்லை. ஆனால் நாட்டின் எரிசக்திக்கு ஆபத்து என்றால் இதை ஒரு மணத்தியாலத்தில் செய்யலாம். எமர்ஜென்சி எனும் போது anti competition சட்டங்களும் பெரிய தாக்கத்தை கொடாது. இதே வகையில் சீனா உரம் ஏற்றுமதி செய்வதை ஆகஸ்டு மாதம் வரை மட்டுப்படுத்தி உள்ளது.
  16. அமெரிக்கா தரைப்படையினை அனுப்புவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும், ஏனெனில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்க திட்டத்தில் எந்த வித சாதகமான சூழ் நிலை மாற்றமும் ஏற்பட்வில்லை, ஒரு ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு ஒரு தரை வழி தாக்குதல் அவசியமாகிறது. ஆனால் அது அமெரிக்கா விரும்பும் முடிவு எட்ட உதவுமா என்றால் அதுவும் சந்தேகமே. உண்மை! ஒரு தடவை நெல்சன் மண்டேலா கூறியிருந்தார், உலகத்திலேயே சொல்லமுடியாதவளவு அட்டூழியங்கள் செய்த நாடென்றால் அது அமெரிக்காதான் என. ஈரான் அமெரிக்கா செய்வதற்கு பதிலுக்கு பதிலாக செய்வதால் பொறுமையாக உள்ளது என கூறமுடியாது, உலக எரிபொருளில் ஏற்படுத்தும் சிறிய தடங்கலும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும், அது உள்ளூர் அமெரிக்கர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கும், தற்போதய உலகில் யார் எரிபொருளில் கட்டுப்பாட்டினை பேணுகிறார்களோ அவர்களே உலகை கட்டுப்படுத்த முடியும், காசா போல ஒரு சூழ் நிலையினை உருவாக்க முயன்றால் அமெரிக்க பெற்றோடொலருக்கான முடிவுரையாக இருக்கலாம் என கருதுகிறேன். மத்திய கிழக்கு நாடுகள் தமது பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்த போரிற்கு பின்னரான காலத்தில் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என கருத்துக்கள் வெளியாகும் நிலையில் அவ்வாறான ஒரு சிக்கலை தானாகவே உருவாக்க விரும்பாது என கருதுகிறேன்.
  17. நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று சொல்லியிருந்தார், நேட்டோ நாடுகளின் மீது மிக கடுமையான வரிகளை விதித்திருந்தார், நேட்டோநாட்டின் கிரீன்லாந்தை அபகரிக்கும் முயற்சியிலிறங்கி ஏறக்குறைய நேட்டோ அமெரிக்கா நேரடி ராணுவ மோதல் நிலையை உருவாக்கினார், உக்ரேனுக்கு இனி அமெரிக்கா உதவாது வீண் செலவு என்றிருந்தார், கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக்கப்படும் என்றார், கடுமையான வரிகளை கனடாமீது விதித்து சீனா இந்தியா பக்கம் அவர்களை ஓட வைக்கும் அளவிற்கு செயல்பட்டார், சீனா ரஷ்யாமீது ஏற்றுமதிவரி கச்சாய் எண்ணெய் விற்க தடை என்று பொருளாதார ரீதியாக மிக கடுமையான அழுத்தம் கொடுத்தார், ஈரான்மீதான போரில் எந்த நாடுகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக போர் தொடுத்தார், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் , ஈரானின் கப்பற்படை விமானப்படை, ஏவுகணை தளங்கள் 90% அழிந்துவிட்டன, போரின் முடிவை அமெரிக்கா தீர்மானிக்கும் என்றார். இப்போ எல்லோரும் வாங்கோ அமெரிக்காவை காப்பாத்துங்கோ என்ற நிலையை நேரே சொல்லாமல் ஹோர்முஸ் நீரிணையைக்கு பின்னால் ஒழிந்து நின்றுகொண்டு அழுகிறார். இப்படி பல ...றார்............என்றுபோய் ...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற நிலமை ஆச்சு. நேட்டோ நாடுகள் இந்த போரில் அமெரிக்கா சறுக்கினால் டிரம்பின்மீது அமெரிக்க மக்களின் கோபம் திரும்பி கோட்டபாய ஓடினமாதிரி ட்ரம்பும் ஓடும் நிலை கண்டிப்பாக வரும் என்ற கணிப்பில் இந்த போரில் டிரம்பின் தோல்விக்காக காத்திருப்பதை போலவே நடந்து கொள்கின்றன, ஈராக் ஆப்கான் உட்பட பல போர்களில் அமெரிக்காவுடன் ஆரத்தழுவி போருக்கு போன நேட்டோநாடுகள் இப்போ தூர நின்று வேடிக்கை பார்ப்பது அமெரிக்காமீதுள்ள கோபத்திலோ அமெரிக்க வீழ்ச்சியை ரசிக்கும் போக்கிலோ அல்ல மாறாக டிரம்பின் வீழ்ச்சி செய்திக்காக காத்திருப்பதாகவே உலகின் பார்வையில் தெரிகிறது. ட்ரம்ப் அடிக்கடி எல்லோரையும் முட்டாள்கள் என்று திட்டுவார் இப்போ அவர் தேடிய முட்டாள் அவர் வசமே உள்ளதை முற்றுமுழுதாக உணர்ந்துவிட்டார் வெக்கத்தில் வெளியே சொல்லாமல் மீண்டும் வாய் வீரத்தில் டாக்டர் பட்டம் எடுத்தே ஆவேன் என்று நிக்கிறார். வெறும் பணபலமும் படை பலமும் இருந்துவிட்டால் எங்கும் எதையும் வென்றுவிடலாம் என்று நினைக்கும் உலகிற்கு , அது சாத்தியமில்லை அதனையும் மீறிய புத்திசாலித்தனம் எனும் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது என்று ஞாபகபடுத்த உலகிற்கு இறைவன் அனுப்பிய நினைவு பரிசு அண்ணன் ட்ரம்ப் சோணமுத்தன்.
  18. கோர்முஸ் மூடப்பட்டதால், ஆசிய நாடுகளுக்கு அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் சாதாரண வாடிக்கைக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது என நினைக்கிறேன், சந்தை பொருளாதாரத்தில் அது ஒட்டு மொத்த உலகத்திலும் உள்ள சாதாரண வாடிக்கைக்கும் ஒரே அளவில் பாதிக்கிறது என நினைக்கிறேன், எரிபொருள் விலை மசகு எண்ணெய் ஒரு பரலுக்கு $100 எனில் அது அவுஸ்ரேலியாவிலும் அதே விலை ஏற்றம், இங்கிலாந்திலும் அதே விலை ஏற்றம் இருக்கும்(கேள்வி நிரம்பலடிப்படையில்). ஐரோப்பிய நாடுகள் மார்ச் 1, 2026 தீர்மானத்தினடைப்படையில் 2027 இல் முற்று முழுதாக இரஸ்ஸிய எரிபொருள் விலகல் முடிவினை எடுத்துள்ளார்கள். இரஸ்சிய போரின் பின்னர் எரிவாயு விலை 78 பென்ஸாக அதிகரித்திருந்த நிலையில் தற்போதய ஈரான் போரினால் 171 பென்ஸ் அதிகரித்துள்ளது என கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள உற்பத்திதுறை நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்க எரிபொருள் விலையினை விட இரண்டு மடங்காக உள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கட்டுரையில் கடந்த 10 நாளில் 3 பில்லியன் இழப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய மக்கள் தமது வரிப்பணத்தில் இழக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஒரு உருக்கு ஆலை நிர்வாகிக்கு வழங்கப்பட்ட ஆலொசனையின் பிரகாரம் தற்போதுள்ள விலையில் 2027 இற்கான எரிவாயுவினை வாங்கினால் 2027 தற்போதய விலை அரைவாசியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது (அடுத்த ஆண்டில் விலை இரட்டிப்பாகும்) இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய உற்பத்தித்துறை குறைவான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்ரேலியா 3 ஆவது பெரிய எரிசக்தி ஏற்றுமதி நாடாகவிருந்தாலும் உள்நாட்டு உற்பத்தித்துறைக்கு அது எந்தளவிலும் உதவி செய்யவில்லை என்றே கருதுகிறேன், இதே நிலையே இங்கிலாந்திலும் என கருதுகிறேன். இந்த யுத்தங்கள் நிறுத்தப்படாவிட்டால் நிலமை கடினமாக மாறிவிடும்.
  19. எனக்கும் கிளீநொச்சிவரை போய்வந்த அனுபவம் இருக்கு.....சந்தோசமான கஸ்ட காலம்..நினைவில்
  20. epntrsoSdo 9L0f69r7m4:fm0ce065 021 3u3a4às5c311t 2l1a56t3567 · ஒரு எலியின் சுவாரஸ்யமான சம்பவம் 👌" சற்று நிதானமாக படியுங்கள் 🙏" இன்று காலை வழமை போல எனது அம்மன் கோவில் ஆலய பூஜைக்கு நான் சென்றேன் கதவை திறந்து உள்ளே போனதும் ஒரு ஆச்சரியம் என்ன என்று பார்த்தால் இரண்டு செம்புகள் தட்டில் இருந்து கீழே உருண்டு கிடந்தன அதை எடுக்க சென்றால் அதன் பின்னே இருந்து ஓர் பெரிய எலி ஓடி வந்தது நான் பயந்துவிட்டேன் காரணம் ஆலயத்தின் உள்ளே எலிகள் இல்லை சரி என்று அதை கலைத்தேன் அது அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது அதை அடித்து கொல்ல பல அவகாசம் கிடைத்த போதும் என் மனம் அப்படியான காரியத்தை செய்யாது ஏனென்றால் அந்த ஜீவன்கள் உணவு தண்ணீர் இவற்றுக்காக மட்டும் தான் தேடி வரும் , பல இடங்களில் இதை உணவு வைத்து ஏமாற்றி கொல்கிறார்கள் பிடித்து வைத்து நீரில் அமிழ்த்தி மூச்சு திணறி சாகடிக்கிறார்கள் பாவம் அவைகள் சரி கதைக்கு வருவோம் ஒரு வழியாக தண்ணீர் வெளியேற்ற குழாய் வழியாக ஓடி சென்று விட்டது நான் வெளியே சென்று பார்த்தேன் அது ஓடி போய் அருகில் இருந்த மதில் சுவற்றில் ஏறி இருந்து பின் காலை ஊன்றி முன் கால் இரண்டையும் கூப்பி என்னை கும்பிட்ட மாதிரி செய்தது நான் அதை பெரிதாக எடுக்காமல் எனது பூஜை அலுவல்களை கவனிக்க சென்று விட்டேன் எல்லா பூஜைகளும் பண்ணி இறுதியாக சண்டிகேஸ்வரர் பூஜை பண்ண வரும் போது பார்த்தால் அந்த எலி அதே மதில் சுவற்றில் நிற்கிறது ஏனென்றால் அதை கலைத்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது அவ்வளவு நேரம் ஒரு எலி அதே இடத்தில் இருக்குமா?? என்று எனக்கு சந்தேகம் ??என்னை கண்டதும் முதல் செய்த போல இரு கைகளையும் கூப்பி ஏதோ செய்தது நான் என்னடா இது என்று யோசித்து கொண்டு பூஜையை முடித்தேன் பிறகு அடியவர்களிற்கு விபூதி பிரசாதம் கொடுத்து விட்டு வந்து எட்டி பார்த்தேன் ஒரு இஞ்ச் கூட நகராமல் அதே போல் இருந்து செய்தது நான் மிகவும் திகைத்து விட்டேன் என் வாழ்நாளில் இப்படி ஓர் எலியின் செய்கையை பார்க்கவில்லை என் வீட்டில் அதிகமாக பூனைகள் இருப்பதால் எலி இல்லை சரி என்று ஒரு 10 நிமிடத்தில் ஆலய ஒலிபெருக்கி பாடல்கள் நிறுத்தியதும் நான் உள்ளே பூக்கள் எடுத்தி வைக்கும் போது செம்புகள் இருந்த தட்டில் இருந்து சிறிய கீச்சொலி கேட்டது அவ்வளவு நேரம் ஆலய ஒலிபெருக்கியின் சத்தத்தில் அந்த சிறிய ஒலி எனக்கு கேட்கவில்லை என்ன சத்தம் என்று பார்த்தால் அந்த இடத்தில் எலுமிச்சை பழம் அளவில் ஓர் சிறிய ஆனால் அழகான குண்டு எலிக்குஞ்சு ஒன்று நடுங்கிக்கொண்டு இருந்தார் எனக்கு விளங்கிவிட்டது உடனே ஓடிச்சென்று வெளியே பார்த்தேன்....... அதே இடத்தில் மதில் சுவற்றில் அதே எலி என்னை கண்டதும் கைகளை குவித்தது அந்த நொடி என் இதயம் உடைந்து கண்கள் கலங்கி நின்றேன் இப்படியும் ஓர் எலியா என்று ??? சற்றும் தாமதிக்காமல் அந்த குட்டி எலியை ஓர் தடிமனான துணியால் பிடித்து ஓர் வாழைப்பழத்தையும் எடுத்து கொண்டு மதில் சுவற்றில் வைத்து விட்டு தள்ளி வந்து நின்று விட்டேன் உடனே தாய் எலி ஓடி வந்து தன் பிள்ளை முகர்ந்து பார்த்து ஏதேதோ செய்தது பழத்தை உண்ணவில்லை தன் பிள்ளையை மட்டும் கூட்டிச்சென்றது போகும் முன் என்னை ஒரு முறை நின்று திரும்பி பார்த்தது அந்த ஒரு பார்வை என்னை ஓர் மனிதன் என்ற உணர்வை உணர வைத்தது என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்தை நான் உணர்ந்தேன் பிள்ளையார் முதல் வைரவர் வரை எத்தனையோ தெய்வங்களுக்கு எவ்வளவோ மந்திரங்கள் சொல்லி தீபம் காட்டி செய்திருந்தாலும் இந்த எலிக்கு நான் செய்த அந்த ஒரு செயலுக்கு முன் இந்த பூஜைகள் அனைத்தும் அந்த பாசமான தாய் எலியின் கால் தூசுக்கு முன் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன் அந்த ஒரு மணி நேரம் அந்த தாயின் மனது எவ்வளவு போராட்டம் கண்டிருக்கும் தன்பிள்ளைக்கு என்னநடந்திருக்குமோ என இதை எழுதும் போது கூட கண்களில் நீர் வந்தது அனைத்து உயிர்களுக்கும் பாசம் இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம் அன்புடன்.... #இராவண_தேசத்தின்விஷ்வாமித்ரன் #விஷ்ணுசர்மா.....
  21. வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.
  22. வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 17 மார்ச் 2026, 09:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீதான மீடூ' குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்கிய நபர்களுள் ஒருவரான பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது குறித்து இலக்கிய உலகிலும் சர்ச்சை எழுந்துள்ளது. தனக்கு விருது வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்த வைரமுத்துவின் கருத்தை அறிய அவரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. எனினும், அவருடைய கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய கருத்து பெறப்பட்டவுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும். பாரதிய ஞானபீடம் (jnanpith) எனும் சுயாதீன அமைப்பால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழி இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 11 லட்சம் பணமும், வெண்கல சரஸ்வதி சிலையும் விருது பெறும் நபருக்கு குடியரசு தலைவரின் கைகளால் வழங்கப்படும். தமிழ் மொழியில் இதுவரை 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலனுக்கும் 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த விருதை பெறுபவராக ஆகியிருக்கிறார் வைரமுத்து. வைரமுத்துவுக்கு பாராட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் வைரமுத்துவை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ஞானபீட விருது பெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைரமுத்து, "கால் நூற்றாண்டுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக தமிழுக்கு இந்த விருது வந்திருக்கிறது. என்னை நானே வியந்துகொள்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." என தெரிவித்தார். செய்தியாளர்களிடம் கேள்வி கேட்கலாம் என தெரிவித்த வைரமுத்து, அவை ஞானபீட விருது மற்றும் தமிழ் தொடர்பானதாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அதுபோன்றே, செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. 1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல் மூலம் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட புதினங்கள், பல கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வைரமுத்து பெற்றுள்ளார். தற்போது வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது தொடர்பான வாழ்த்துகளுக்கு மத்தியில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. பின்னணி பாடகி சின்மயி விமர்சனம் பட மூலாதாரம்,Chinmayi Sripada படக்குறிப்பு,சின்மயி குறிப்பாக, வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகாரை முன்வைத்த சின்மயி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய சின்மயி, "வைரமுத்து மீது புகார் கொடுத்ததால் நான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து தடை செய்யப்பட்டேன். சினிமாவில் உள்ள பலதுறை சங்கங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் மீது சமூக வலைதளங்களில் இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. 17 பேர் வைரமுத்துவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். மூன்று பேர் வீடியோ முன்பாக வந்து கூறினர். எங்களின் போராட்டம் தனி, சினிமா வாழ்க்கை தனி என பார்க்கின்றனர்" என்றார். வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஒரு கலைஞரை அவருடைய கலை ரீதியாக மட்டும் அணுக வேண்டுமா அல்லது அவர் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள், செயல்பாடுகளுடன் சேர்த்தே அணுக வேண்டுமா என்ற விவாதத்தையும் தூண்டியுள்ளது. இதுகுறித்து பதிலளித்த சின்மயி, "கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது." என தெரிவித்தார். "என்னுடைய 32 வயதில் இந்த புகாரை கூறினேன். இப்போது எட்டு ஆண்டுகளாகிவிட்டன. 40 வயதாகிறது. என்னுடைய 30 வயதுகளை நான் எப்படி கழிக்க வேண்டுமென நினைத்தேனோ, அப்படி என்னால் கழிக்க முடியவில்லை. என்னுடைய பாடல்கள் பலவும் மிகப்பெரிய ஹிட். ஆனால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எனக்கு வாய்ப்புகளே இல்லை." என்கிறார் சின்மயி. "நான் டப்பிங் பேசுகிறேன் என்றால், அந்த படத்தில் யாரும் டப்பிங் பேச மாட்டார்கள் எனும் அளவுக்கு என்னை ஒதுக்கினர்." பிரபலம் அடையவும் பணத்துக்காகவும் தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை சொல்வதாக இன்று வரை தன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக சின்மயி தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க 2018-ஆம் ஆண்டில் 'மீ டூ' இயக்கம் பரவலாக கவனம் பெற்றது. அப்போது வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டினார். வைரமுத்து மீதான சின்மயி குற்றச்சாட்டு என்ன? 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சின்மயி தனது சமூக ஊடக பதிவில், அந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழ மாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியிருந்தார். விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருந்தார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். ஆனால், இதுகுறித்து வைரமுத்து அச்சமயத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று பதிவிட்டார். சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்து மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 2023-ஆம் ஆண்டு புவனா சேஷன் எனும் பாடகியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். வைரமுத்து உடனான தொலைபேசி உரையாடல்கள் ஒருகட்டத்தில் அசௌகரியமாக உணர வைத்ததாக அச்சமயத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,chinmayi/Instagram படக்குறிப்பு,சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி 2019-ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். திரைத்துறையில் உள்ள சங்கங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கான உள் புகார்கள் குழு (ஐசிசி புகார் குழு) அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை என சின்மயி கூறுகிறார். வழக்கறிஞர் கருத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேஷன், "சினிமாவின் பல்வேறு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க சட்டப்படி குழுக்கள் அமைக்க வேண்டும், அதை விசாரிக்க வேண்டும். சினிமா ஓர் அமைப்பாக இல்லை. அங்கு இத்தகைய குழுக்கள் அமைப்பது சவாலாக உள்ளது. கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ் சினிமாவில் அப்படி அமைக்கப்படவில்லை. இந்த மாதிரியான புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை." என தெரிவித்தார். மலையாள திரை உலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் 2024-ம் ஆண்டு பொது வெளிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'சட்ட ரீதியான இடைவெளிகள்' பட மூலாதாரம்,Tara Krishnaswamy/Facebook படக்குறிப்பு,தாரா கிருஷ்ணசுவாமி எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி கூறுகையில், "தனியார் அறக்கட்டளை வழங்கும் விருதாக இருந்தாலும் இதை வழங்குவது குடியரசு தலைவர். எனவே, அந்த வகையில் அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது." என்றார். தாரா கிருஷ்ணசுவாமி, பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் 'பொலிட்டிக்கல் ஷக்தி' (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார். பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதில் சட்ட ரீதியாக பல இடைவெளிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். "பெண்ணுக்கு எதிரான பல குற்றங்கள், குற்றமாகவே அங்கீகரிக்கப்படவில்லை. திருமண உறவில் பாலியல் துன்புறுத்தல் அதற்கு ஓர் உதாரணம். அமைப்புசாரா தொழிலில் பெண்களுக்கு நேரும் பாலியல் குற்றங்களில் தகுந்த ஆதாரங்களை சேகரிப்பது சவாலாக இருக்கிறது. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான விவாதமே இங்கு நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடிய சமூகமாக, கலாசாரமாகத்தான் இந்திய சமூகம் பெரும்பாலும் இருக்கிறது" என்றார் தாரா கிருஷ்ணசுவாமி. இலக்கிய உலகில் சர்ச்சை பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், இலக்கிய உலகிலும் வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜெயமோகன், பவா செல்லதுரை போன்ற எழுத்தாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். "ஞானபீடப் பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டுள்ளது." என்று எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார். அதேவேளையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா தன் பேஸ்புக் பக்கத்தில், "இந்திய அளவிலான கவிஞர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு பொதுவாக விருதுகள் குறித்து பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. நான் பெரிய இலக்கிய அறிவு பெற்றவளுமில்லை. எனவே கருத்துரைக்க வேண்டாமென்றே ஒதுங்க எண்ணினேன். ஆனால் முகநூலைத் திறந்ததும் திரண்டு வந்து நின்ற படையைப் பார்த்து அசந்து போனேன். ஏதோ புனிதர்களும் தேவதூதர்களுமான இந்த படைப்பாளிகள் உலகத்தில் ஒரேயொரு ஒற்றைக் கறுப்பு மனிதனாக வைரமுத்துவை இவர்கள் சித்தரிப்பதைப் பார்த்த பின் இதுபோன்று ஒரு ரவுடியிசக் கலாசாரத்தை ஆதரிக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு விருதை தாஜா செய்தும் பணம் கொடுத்தும் வாங்குவது எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலம் இது போன்று ஒருவருக்கு விருதளிக்கப்பட்ட பின் இவ்வளவு பேர் சேர்ந்து சேற்றை வாரியிறைப்பது. இன்றுவரை நேரம் ஒதுக்கி தமிழ்க் கவிதைகளில் வைரமுத்துவின் இடம் குறித்து படிக்கவில்லை. (எத்தனையோ பாடல்கள் இதயம் தொட்டதுண்டு. அதேபோல் முகம் சுளிக்க வைத்ததும் உண்டு) இப்போதைய எனது நேர நெருக்கடிகளில் உடனடியாக அதனைச் செய்யும் திட்டமுமில்லை. நிச்சயமாக தமிழ் எழுத்து வரிசை குறித்து இன்னும் தீவிர வாசிப்புக்குள் போகும் போது கண்டிப்பாகக் கவிஞர் வைரமுத்துவின் எழுத்தும் என்னுடைய கவனத்தில் இடம் பெறும்." என பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24ermz1kyo அதற்கு கூட தமிழில் பெயர் வைக்கமாட்டீர்களா?! உலக தமிழ் இலக்கியத்திற்கான வாழும் விருது என்று எழுதினால் குடியா முழுகிவிடும்! நேரடி கூகிள் பெயர்ப்பு கீழுள்ளவாறு வருகிறது! உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது .
  23. டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி Mar 17, 2026 - 08:35 PM அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை நாளை (18) முதல் அமலுக்கு வரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அங்கு ஜனாதிபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள் வருமாறு: "எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இரு நீண்டகால டெண்டர்களின் கீழ் தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு கப்பல்கள் உரிய காலத்திற்கு கிடைக்கவில்லை. அத்துடன் தனியார் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து வர வேண்டிய ஒரு கப்பலும் தாமதமாகியுள்ளது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பையும் பாதிக்கிறது. இதனைச் சமாளிக்க இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள அவசர டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேலும், டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு விநியோகத்தைத் தடுத்ததால் நாம் மார்ச் மாதத்திற்கு மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்தோம். அவை அனைத்தும் தற்போது கிடைத்துள்ளன. மற்றுமொரு கப்பல் நாளை அல்லது மறுதினம் வரும் என்பதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது." "QR முறைமையில் சிக்கல்கள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தே ஞாயிற்றுக்கிழமை அதனை ஆரம்பித்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் கையிருப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. QR ஒதுக்கீடு போதாத அத்தியாவசியத் துறைகளுக்கு அதனை அதிகரித்து வழங்க அமைச்சுக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விநியோகச் சங்கிலி ஆராயப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குத் தேவையான உணவுகளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இருப்பதால் அத்தியாவசிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது." "ஒவ்வொரு அமைச்சும் தமது எரிபொருள் பயன்பாட்டை ஆகக்குறைந்தது 25% ஆல் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரச சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தற்போது பின்பற்றப்படும் வேலை நேர ஒழுங்குமுறை (இரண்டு நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை) வெற்றிகரமாக உள்ளது." "எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ய அவசர டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவும் எரிபொருள் 'கார்டெல்களை' நாம் உடைத்து வருகிறோம். ஊழல் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை கொண்டுள்ளேன். எந்தவொரு அமைச்சராவது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார். அமைச்சர் ஜெயக்கொடி மீதான குற்றச்சாட்டு 2014 இல் அவர் ஒரு அரச அதிகாரியாக இருந்தபோது ஏற்பட்ட கொள்முதல் சிக்கலாகும். அவர் அமைச்சராக இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டால் நாளைக்கே அவரை நீக்குவேன்." "தற்போதைய திட்டங்களின்படி மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை எழவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைப் பொறுத்தே எதிர்கால தீர்மானங்கள் அமையும்" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmuqti260013356pw7kqyqbo
  24. "எங்களுக்கு நேட்டோவின் உதவி தேவையில்லை" – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி Mar 17, 2026 - 10:49 PM ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார். தமது Truth Social தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா இனி நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்க்கவில்லை என்றும், உண்மையில் தங்களுக்கு அவர்களின் உதவி தேவையே இல்லை என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் உடனான போரில் நேட்டோ நாடுகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் இதில் தலையிட விரும்பவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என அவர் கூறியுள்ளார். "நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி 'தேவையில்லை' அல்லது நாங்கள் அதை விரும்பவில்லை – உண்மையில் எங்களுக்கு அவர்களின் உதவி எப்போதும் தேவைப்பட்டதில்லை " என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பிற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழிப்பதாகவும், ஆனால் அவசரக் காலங்களில் அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ முன்வருவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை ஒரு "ஒருதலைப்பட்சமான வீதி" என்று அவர் விமர்சித்துள்ளார். நேட்டோ மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் அவர் பெயரிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த நாடு என்றும், தங்களுக்கு யாருடைய உதவியும் அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பெப்ரவரி இறுதியில் தொடங்கின. ஹார்முஸ் நீரிணை யை (Strait of Hormuz) மீண்டும் திறக்க மற்றும் எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க நட்பு நாடுகளின் கடற்படை உதவியை ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் இதில் நேரடி இராணுவப் பங்களிப்பை வழங்க மறுத்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmuvglr9001a356pcehqfi5h
  25. அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி 17 Mar, 2026 | 12:28 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆறு அம்சங்களை சுட்டிக்காட்டி, அலி லாரிஜானி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஈரான் ஒரு வஞ்சனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது, நாட்டை நிலைகுலையச் செய்து, துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதலாக இருக்கிறது என கடிதத்தில் அலி லாரிஜானி குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் தளபதிகள், ஈரான் உயர் தலைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததாகவும் அதற்குத் தாம் பதிலடி கொடுத்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுக்கு பெரும்பாலான இஸ்லாமிய அரசாங்கங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என்றும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் ஆதரவுடன் சில நாடுகளே ஈரானுக்கு உதவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஈரானை தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்க தளங்களை தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் என்றும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி அக்கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241180
  26. மின்சார வாகனங்களை பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் Mar 17, 2026 - 08:44 PM மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் நிலவும் அதிக மின்சாரத் தேவையைக் குறைக்கும் பொருட்டு, மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmur4ahi0016356pbysgcvad

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.