Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும். ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம். pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால். இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.
  3. "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/236454
  4. களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு 19 Jan, 2026 | 05:36 PM இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236451
  5. நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூட, இது நமக்குத் திருப்தி உணர்வைத் தருகிறது. ஆனால் புரதத்தைப் பற்றி குறிப்பாக அது தாவரங்களிலிருந்து வரும்போது பல கட்டுக்கதைகள் உள்ளன. புரதத்திற்காக உங்களுக்கு உண்மையில் இறைச்சி தேவையா? தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை. உண்மை என்னவென்றால், அனைத்து தாவர உணவுகளிலும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் ஒன்பது அமினோ அமிலங்கள் உட்பட 20 அமினோ அமிலங்களும் (புரதத்தின் அடிப்படை அலகுகள்) உள்ளன. இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது, எனவே நாம் உணவின் மூலம் அவற்றைப் பெற வேண்டும். தாவரங்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்கள் போதுமான அளவில் இல்லாததால், அவை 'முழுமையான புரதம்' (complete protein) என்று கருதப்படுவதில்லை என்பதே இந்த குழப்பத்திற்குக் காரணம். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது: நாள் முழுவதும் பல்வேறு வகையான தாவர உணவுகளை உட்கொள்வது. சமச்சீரான உணவில் இது இயற்கையாகவே நடக்கும் என்பதால், உங்கள் புரத இலக்குகளை அடைவது எளிது. பட மூலாதாரம்,Getty Images 'முழுமையான' புரதங்களாக இருக்கும் தாவர உணவுகளும் உள்ளன - அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். வாரந்தோறும் சிறிய அளவில் விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது நோய் அபாயத்தை 10% வரை குறைக்கும் என்று நீண்ட கால ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி இல்லாத உணவை உண்பது கூட நன்மை பயக்கும். உங்கள் உணவில் அதிக தாவர உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் மற்றும் கூடுதல் நார்ச்சத்தையும் (fibre) பெறலாம். இது பிரிட்டனில் உள்ள 90% பேருக்குப் போதுமானதாகக் கிடைப்பதில்லை. எனவே இது ஒரே முயற்சியில் மூன்று நன்மைகளை வழங்குகிறது நமக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவை? வலிமைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 1.6 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர் என்றால், ஒரு கிலோவிற்கு 1.1 முதல் 1.2 கிராம் புரதம் போதுமானது. நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே போதுமான புரதத்தை உண்கிறோம், எனவே நாம் உணவில் கூடுதலாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் அதை எங்கிருந்து பெறுகிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலும் இது விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படுவதால், அவற்றுடன் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை சேர்கின்றன. அதிக புரதமுள்ள தாவர உணவுகள் எவை என்பது இங்கே விவரித்து கொடுக்கப்பட்டுள்ளது. 1. சோயா (Soy) பட மூலாதாரம்,Getty Images சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது, கொலஸ்ட்ரால் இல்லை. இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதிக புரதம் கொண்டது. இது பல்துறை சார்ந்தது மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு அடிப்படையாக அமைகிறது. டோஃபுவில் (Tofu) 100 கிராமிற்கு 7-15 கிராம் புரதம் உள்ளது. சில்கன் டோஃபு குறைந்த அளவைக் கொண்டிருந்தாலும் (100 கிராமிற்கு 7 கிராம்), அதை சாஸ்கள் அல்லது சூப்களில் கலந்து கிரீமி அமைப்பைப் பெறலாம் - இது புரதத்தைப் பெறுவதற்கான எளிதான வழி. டெம்பே (Tempeh) முழு சோயா பீன்களையும் பயன்படுத்துகிறது மற்றும் நொதிக்க வைக்கப்படுகிறது, எனவே குடலில் ப்ரீபயாடிக் (prebiotic) விளைவைக் கொண்டுள்ளது. இதில் 100 கிராமிற்கு 20 கிராமுக்கும் அதிகமான புரதம் உள்ளது. எடமேம் (Edamame) என்பது இளம் சோயா பீன்கள், 100 கிராமிற்கு 11 கிராம் புரதம் கொண்டது. மிசோ (Miso) என்பது நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன் பேஸ்ட் - 100 கிராமிற்கு 13 கிராம் புரதத்துடன் ஒரு சிறந்த சுவையை அளிக்கிறது. இனிப்பு சேர்க்கப்படாத சோயா தயிரில் புரதம் அதிகம். சோயா பால் அனைத்து தாவர அடிப்படையிலான பாலை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது (100 மில்லிக்கு 3.5 கிராம்). 2. பயறு வகைகள் (Legumes) பட மூலாதாரம்,Getty Images பீன்ஸ் மற்றும் கொண்டைக் கடலையில் பொதுவாக 100 கிராமிற்கு 6-9 கிராம் புரதம் உள்ளது. இவை பாஸ்தா, சாலட், சூப் மற்றும் கறிகளில் சேர்க்க ஏற்றவை. பருப்புகளில் பொதுவாக 100 கிராமிற்கு 11-24 கிராம் புரதம் உள்ளது. இவற்றை அரிசி அல்லது தானியங்களுடன் சேர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்துக்காகப் பயன்படுத்தலாம். 3. செய்டான் (Seitan) இது கோதுமை குளூட்டனிலிருந்து தயாரிக்கப்படுகிறது, 100 கிராமிற்கு 25 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. சோயா ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. 4. நியூட்ரிஷனல் ஈஸ்ட் (Nutritional yeast) இந்த மசாலாப் பொருள் 50% புரதத்தைக் கொண்டது. ஒவ்வொரு தேக்கரண்டி நியூட்ரிஷனல் ஈஸ்டிலும் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. எனவே இது எந்த உணவிலும் புரதத்தை அதிகரிக்க சுலபமான வழி. இது கொட்டை (nutty) மற்றும் சீஸ் (cheesy) போன்ற சுவையைக் கொண்டுள்ளதுடன், சாஸ்களைக் (sauces) கெட்டியாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. சத்துணவு ஈஸ்ட் மற்றும் பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதால், ஒருமுறை பரிமாறப்படும் அளவில் 16 கிராம் புரதத்தைக் கொண்டுள்ள 'வீகன் மூசாக்காவில்' இதனை முயற்சித்துப் பாருங்கள்." 5. முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் பட மூலாதாரம்,Getty Images தாவரப் புரதங்களைப் பற்றிப் பேசும்போது முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை மறந்துவிடாதீர்கள். "ஒரு வேளை உணவில் ஏராளமான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைச் சேர்ப்பதற்கு 'பவர் பவுல்' (புத்தா பவுல் அல்லது தானியக் கிண்ணம்) ஒரு சிறந்த வழியாகும். வெள்ளை அரிசிக்குப் பதிலாக, 100 கிராமிற்கு சுமார் 7-9 கிராம் புரதம் கொண்டுள்ள குயினோவா மற்றும் பக்வீட் ஆகியவற்றின் கலவையை நான் பயன்படுத்த விரும்புகிறேன்." "நீங்கள் இதன் மேலே கொட்டைகள் மற்றும் விதைகளைச் சேர்த்தால் (ஒரு மேசைக்கரண்டியில் சுமார் 2–4 கிராம் புரதம் இருக்கும்), அவை புரதத்துடன் கூடுதல் மொறுமொறுப்பையும் வழங்குகின்றன. சாலட், சூப் மற்றும் ஸ்டூக்களுக்கு (stews) உடனடி 'டாப்பராக' (மேலே தூவுவதற்கு) பயன்படுத்துவதற்காக, நான் இவற்றை ஓவனில் சிறிது தமாரி (tamari) அல்லது சோயா சாஸ் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து வறுக்க விரும்புகிறேன். இதற்காக 'துக்கா' (Dukkah) எனும் நறுமணப் பொருள் கலவையும் மிகச் சிறந்தது." ஓட்ஸும் ஒரு முழு தானியமாகவும் புரதச் சத்துக்கான ஆதாரமாகவும் (100 கிராமிற்கு 10.9 கிராம்) கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலையில் நீங்கள் முதலில் உட்கொள்ளும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மூலம் உங்கள் புரதத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதனுடன் நார்ச்சத்துக்காகப் பெர்ரி பழங்களையும், மொறுமொறுப்பு மற்றும் கூடுதல் புரதத்திற்காகக் கொட்டைகளையும் அடுக்குகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்." சிறிய அளவு விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது, நீங்கள் ஆரோக்கியமாக வயதாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். தாவரப் புரதங்கள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தவை; குறைந்த நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்துவதோடு குறைந்த கார்பன் வெளியேற்றத்தை உருவாக்குகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0y4eg0y3jo
  6. பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான் பிரதமர் தீர்மானம் Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 04:14 PM ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி, அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு வியூகத்தை வலுப்படுத்தவும், பொருளாதார செலவினங்களை அதிகரிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த அதிரடி தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜன 23) ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபையை (Lower House) கலைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு பெப்ரவ 08 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா தகாய்ச்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களம் இதுவாகும். பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள மொத்தம் 465 இடங்களுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமருக்கு மக்களிடையே நிலவும் பலமான ஆதரவைப் பயன்படுத்தி, ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) செல்வாக்கை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார். பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பொருளாதார ஊக்கத்தொகைகளை வழங்கவும் மேலதிகமாக நிதி தேவைப்படுகிறது. இதற்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், ஜப்பான் மக்கள் தற்போது சந்தித்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு (Cost of Living) இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். அண்மைய கருத்துக்கணிப்பில் 45 சதவீதமான மக்கள் விலைவாசி அதிகரிப்பையே தங்களின் முதன்மையான கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்கு 16 சதவீதம் மக்களே முக்கியத்துவம் அளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236436
  7. திருட்டு, ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் நோக்கம் Jan 19, 2026 - 05:07 PM திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 'பாலதக்ஷ மாவத்தை' மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். "திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றிக்கொண்டு, திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வர்த்தக நிலையங்கள், ஜனாதிபதி செயலகம், பெருமளவான ஹோட்டல்கள் இப்பகுதியை அண்மித்து அமைந்துள்ளதால் இவ்விடம் குறிப்பிடத்தக்க வாகன நெரிசல் நிலவிய ஒரு இடமாகும். அந்த வாகன நெரிசலுக்குத் தீர்வாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க சில வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும். ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது. பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள விஜயத்தின் பயனாக, பொலிஸ் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது. 2,700 மில்லியன் ரூபாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மேம்பாலத்திற்கு, நிர்மாணப் பணிகள் தாமதமானதால் மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிட்டது. இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனாகவும் அமையும். இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அமைச்சர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkl3cn8o044wo29nuv7za74u
  8. கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் Jan 19, 2026 - 04:31 PM திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkl21ty3044to29nb21v87yo
  9. இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் இரண்டாவது வெற்றிகளுடன் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளன 19 Jan, 2026 | 05:52 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தத்தமது இரண்டாவது வெற்றிகளை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்பை அதிகரித்துக்கொண்டுள்ளன. அதேவேளை ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவு கிட்டவில்லை. ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி குழு போட்டியில் ஸிம்பாப்வேயை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சிம்பரஷே மட்ஸெங்கெரெரே (45 ஆ.இ.), துருவ் பட்டேல் (36), கியான் பிலிங்நோட் (33), டெட்டெண்டா சிமுகோரோ (30 ஆகியோர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மெனி லம்ஸ்டென் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. இங்கிலாந்து அதன் முதல் இரண்டு விக்கெட்களை 42 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆனால், அணித் தலைவர் தோமஸ் ரியூ (86 ஆ.இ.), பென் மேயெஸ் (77 ஆ.இ) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர். பந்துவீச்சில் ஷெல்டன் மஸ்விட்டோரேரா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ. ஆப்கானிஸ்தான் வெற்றி விண்ட்ஹோக் ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணியை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 138 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது. காலித் அஹ்மத்ஸாய் (34), ஒஸ்மான் சதாத் ஆகிய இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர. இந் நிலையில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்கள் சரிந்தன. ஆனால், ஒஸ்மான் சதாத் (88), அணித் தலைவர் மஹ்பூப் கான் (86) ஆகிய இருவரும் 77 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். மத்திய வரிசையில் அஸிஸ்உல்லா மியாக்கில் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜக்கீன் பொல்லார்ட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விட்டெல் லோவெஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜுவெல் அண்ட்றூ (57), ஜக்கீம் பொல்லார்ட் (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்சாய் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காதிர் ஸ்டானிக்சய் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மெஹ்பூப் கான் போட்டியில் முடிவில்லை புலாவாயோ, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண டி குழு போட்டியின் இடையில் மழை பெய்ததால் ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது. 22 ஓவர்கள் நிறைவில் ஐக்கிய அமெரிக்கா 6 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், 7ஆம் இலக்க வீரர் நிட்டிஷ் சுதினி அபார சதம் குவித்ததுடன் 8ஆம் இலக்க வீரர் ஆதித் கப்பாவுடன் 7ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். நிட்டிஷ் சுதானி 133 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் கடைசி 28 ஓவர்களில் நான்கு வீரர்களுடன் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆதித் கப்பா 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ளின் மோரி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மேசன் க்ளார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து இளையோர் அணி ஒரு ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் பழை பெய்ததால் அதன் பின்னர் ஆட்டம் தொடரப்டாமல் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/236375
  10. நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு Jan 19, 2026 - 03:08 PM அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜிட்டல் போர்டிங் பாஸ்' நாசாவால் வழங்கப்படும். இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுவினர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள், ஆனால் அதை சுற்றி பறப்பார்கள். விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த 'போர்டிங் பாஸ்' முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம் https://adaderanatamil.lk/news/cmkkz3lfu044mo29nvzwngewu
  11. Today
  12. நீங்கள் இணைத்த காணொளி பார்த்தேன். நல்ல முயற்சி என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். அரூஸ் சொல்வதுபோல அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா எடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது, அதேபோல இம்முறையும் தமிழர்களை தனது நலன்களுக்காக மட்டுமே பாவித்துவிட்டு எறிந்துவிடுமா என்பதிலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மேலும், தனது பலப் பிராந்தியத்திற்குள் இருக்கும் சிறிய நாடுகள் அல்லது இனங்கள் மீது அப்பிராந்திய வல்லரசுகள் கொண்டிருக்கும் செல்வாக்கென்பது உண்மைதான். எம்மாலும் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது. எமக்கெதிராக சோனியா தலைமையிலான காங்கிரஸின் அன்றைய தலைமை செய்த குற்றங்களை விசாரிப்பதன் மூலம் எமக்கான நீதியையும் தீர்வையும் பெற்றுவிடலாம் என்பதே நான் கூற வந்தது. ஆனாலும் அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் எந்நாடும் இதுகுறித்து எமக்காக உதவ முன்வரப்போவதில்லை. நீங்கள் இணைத்த காணொளி பல விடயங்களைச் சொல்லியிருக்கிறது. சிந்தனையினையும் தூண்டியிருக்கிறது. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. எந்த நிலையிலும் நிதானம் இழக்காது கருத்தாடும் உங்களின் பாணி தனியானது. வாழ்த்துக்கள்!
  13. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  14. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன் 19 Jan, 2026 | 01:08 PM இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் திங்கட் கிழமை (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் 'இந்தியா - இலங்கை அறிவுசார் பங்காண்மையின்' ஒரு சான்றாகவும் திகழ்கின்றது. இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன. இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது. எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள். இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன. இந்தக் கண்காட்சியானது 'நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு' அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை. அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர். ஒன்றாக இணைந்து, பாக் நீரிணையை ஒரு 'அறிவுசார் நீரிணையாக' மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும் என்றார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/236416
  15. 'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கட்டுரை தகவல் பிரியங்கா ஜா பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெருங்கடல் என்பது பயணிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இங்கு தான் நடைபெறுகிறது. இந்தியாவில் சுமார் 12 பெரிய மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகள் ஒவ்வொரு நாளும் கையாளப்படுகின்றன. வணிக கப்பல் துறை எதிர்காலத்தில் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வணிக கப்பல் வேலையில் அதிக சம்பளம் மற்றும் உலகைச் சுற்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. மிக இளம் வயதிலே முக்கியமான பொறுப்பு கிடைப்பது இந்த வேலையை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. ஆனால் இதில் சவால்களும் உள்ளன. வணிக கப்பல் துறை என்றால் என்ன? அதில் சேர்வதற்கான வழிகள் என்ன? யாருக்கு இந்த துறை சரியான தேர்வாக இருக்கும் மற்றும் இதில் எழக்கூடிய சவால்கள் என்ன? வணிக கப்பல் துறை என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images இளைஞர்கள் பலரும் இந்திய கடற்படையில் இணையலாமா அல்லது வணிக கப்பல் வேலையில் இணையலாமா என குழப்பத்தில் உள்ளனர். இரண்டு பாதைகளும் கடலை நோக்கித் தான் செல்கின்றன என்றாலும் அதன் இலக்குகள் முற்றிலும் வேறாக உள்ளன. முதலில் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்வோம். கடற்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியின் வேலைவாய்ப்பு இயக்குநராக உள்ள கேப்டன் சந்திரசேகர் இதைப்பற்றி பேசுகையில், "கடலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலைகளை வணிக கப்பல்கள் செய்கின்றன. அதில் லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். ஆனால் கடற்படை என்பது பாதுகாப்புக்கானது. ராணுவம், விமானப் படை போல இந்திய பாதுகாப்பு படைகளின் ஒர் அங்கமாக கடற்படை உள்ளது." என்றார். மெர்சன்ட் நேவி டீகோடட் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் பிரநீத் மெஹ்தா கடலில் முதன்மை பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார். "கடற்படைக்கான பாதை என்பது வித்தியாசமானது. அதற்கென தனி தேர்வு உள்ளது. நீங்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நீங்கள் மூன்று ஆண்டுகள் தீவிரமான பயிற்சி எடுக்க வேண்டும்.வணிக கப்பல் துறை ஒரு தனியார் துறை, கடற்படை என்பது முழுவதும் அரசுத் துறை, இந்த துறை நாட்டிற்கு சேவை செய்கிறது. சம்பளங்களில் கணிசமான வேறுபாடு உள்ளது," என்று தெரிவித்தார். வணிக கப்பல் துறையில் பல்வேறு வேலைகள் உள்ளன. வழிநடத்தல் துறை அல்லது டெக் துறை (Navigation Department or Deck Department): இந்த துறைக்குள் நுழைய கடற்சார் அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பணி கடல்நிலைகளைப் புரிந்து கொண்டு கப்பலை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வது ஆகும். இதில் டெக் கேடட், மூன்றாம் அதிகாரி, இரண்டாம் அதிகாரி மற்றும் கேப்டன் எனப் பல்வேறு நிலைகள் உள்ளன. என்ஜின் துறை (கடற்சார் பொறியியல்): வழிநடத்தல் துறை போலவே கப்பலின் என்ஜின், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு பொறுப்பான துறை ஆகும். இந்தப் பணிக்கு கடற்சார் பொறியியலில் பி.டெக் அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். கடற்சார் பொறியியல் படிப்பிற்கு இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவு தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். கூடுதலாக பட்டதாரி கடற்சார் பொறியியல் என்கிற 1 வருட சிறப்பு பட்டயபடிப்பும் உள்ளது. ஜூனியர் பொறியாளராக இணைந்து அடுத்தடுத்து நான்காம் நிலை பொறியாளர், மூன்றாம் நிலை பொறியாளர், இரண்டாம் நிலை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் வரை உயரலாம். மின்-தொழில்நுட்ப அதிகாரி (இடிஓ): வணிக கப்பலின் என்ஜின் துறையில் வேலை செய்யும் இவர் சென்சார் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளைக் கண்காணிப்பதற்கு பொறுப்பானவர். இதற்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு டிஜி ஷிப்பிங் அங்கீகாரம் பெற்ற இடிஓ படிப்பும் முடித்திருக்க வேண்டும். ஜிபி ரேடிங் (உதவிக் குழு): இதில் அதிகாரி நிலையில் எந்தப் பணியும் கிடையாது. ஆனால் கப்பல் மற்றும் குழுவினரை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இதற்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. வயது 17 முதல் 25-ற்குள் இருக்க வேண்டும். 10வது அல்லது 12வது வகுப்பு முடித்த பிறகு ஆறு மாத ஜிபி ரேடிங் படிப்பு ஒன்றை முடித்தால் போதும். யாருக்கானது? பிரதிக் திவாரி தற்போது ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் மூத்த மேலாளராக உள்ளார். 2006-ஆம் ஆண்டு அவர் 12-ஆம் வகுப்பை முடித்தபோது மற்ற மாணவர்களைப் போல அவருக்கு என்ன படிப்பதென்று தெரியவில்லை. "என் குடும்பத்தினர் நான் ஐடி அல்லது கணிணி அறிவியல் படிக்க வேண்டும் என விரும்பினர். நான் வேறு ஏதாவது வித்தியாசமாக படிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது வணிக கப்பல் பற்றி எனக்குத் தெரியாது. அப்போது வழிகாட்டுதல்களும் இல்லை என்பதால் முடிவு எடுப்பது கடினமாக இருந்தது. நான் கடற்சார் பொறியியல் படிக்க முடிவு செய்தேன். நான்கு ஆண்டு படிப்பு முடித்த பிறகு கடற்சார் பொறியாளராக எனது பயணம் தொடங்கியது," என்கிறார் பிரதிக் திவாரி. இந்தப் பயணம் எளிதானது இல்லை என்றும் அவர் குறிப்பிடும் அவர் இது யாருக்கு உகந்தது என்பதையும் பட்டியலிடுகிறார். பொறியியல், இயந்திரங்கள், நேவிகேஷன் அமைப்புகள் போன்றவற்றில் விருப்பம் கொண்டவர்கள். வீட்டை விட்டு நீண்ட காலம் விலகி இருக்கக்கூடியவர்கள் மிகவும் ஒழுக்கம் நிறைந்த சூழலில் பொறுப்புடன் வேலை பார்க்கக்கூடியவர்கள் உடலளவிலும் மனதளவிலும் உறுதியுடன் இருப்பவர்கள் பயணத்திலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள் வணிக கப்பல் வேலை பல சவால்களைக் கொண்டது என்கிறார் பிரநீத் மெஹ்தா. "உதாரணமாக ஆறு மாதங்கள் கடலில் செலவழிக்க வேண்டும். வீட்டை விட்டும் குடும்பத்தை விட்டும் இவ்வளவு நீண்ட காலம் விலகி இருப்பது தனிமை மற்றும் தீவிர மன அழுத்தத்தை உருவாக்கலாம். எந்த நேரத்திலும் உடலளவிலும் மனதளவிலும் தயாராக இருப்பதும் கடினமான ஒழுக்கத்தை கடைபிடிப்பதும் அவசியமான பணி இது," என்கிறார். மேலும் அவர், "சமீப நாட்களில் வேலைகளும் அரிதாகி வருகிறது. பலரும் அதிகம் போட்டி உள்ள துறைகளுக்கே செல்கின்றனர். மாறாக தொடர்ந்து அதிகரித்து வரும் உலக வர்த்தகம் மற்றும் விநியோகத்தால் வணிக கப்பல் துறை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே கடற்சார் படிப்புகளை தேர்வு செய்வதற்கு உகந்த தருணம் இது. இங்கே போட்டி குறைவு, சம்பளமும் அதிகம்." எனத் தெரிவித்தார். படிப்புகள் என்னென்ன? பட மூலாதாரம்,@IMU_HQ கடற்சார் அறிவியல் பட்டயபடிப்பு (டிஎன்எஸ்) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு டெக் துறையில் சேர்வதற்கான படிப்பு. கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி - டெக் துறையில் சேர்வதற்கான 3 ஆண்டு படிப்பு கடற்சார் பொறியியலில் பி.டெக் - என்ஜின் துறையில் சேர்வதற்கான 4 ஆண்டு படிப்பு பட்டதாரி கடற்சார் பொறியியல்: நீங்கள் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு மெக்கானிக்கல் துறையில் பி.டெக் படித்திருந்தால் இந்த 8-12 மாத படிப்பை முடித்து என்ஜின் துறையில் சேரலாம். மின்-தொழில்நுட்ப அதிகாரி (எடிஒ) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மின்னணுவியல், மின்னது-தொடர்பியல் துறைகளில் பி.டெக் முடித்திருந்தால் நீங்கள் 4 மாத படிப்பு ஒன்றை முடித்து என்ஜின் துறையில் சேரலாம். ஜிபி ரேடிங்: டெக் மற்றும் என்ஜின் துறைகளில் சேர்வதற்கான 6 மாத படிப்பு இது. யார் சேரலாம்? பட மூலாதாரம்,@IMU_HQ நீங்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 60% மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்ணும் பெற்றிருந்தால் வணிக கப்பல் துறையில் எளிதாக நுழையலாம். பார்வை திறன் 6/6 என இருக்க வேண்டும். இந்தியாவில் வணிக கப்பல் துறை படிப்புகளுக்கான ஒரே பல்கலைக்கழகமாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யூ) உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி அல்லது கடற்சார் பொறியியலில் பி.டெக் படிப்புகளில் சேரலாம். இது தொடர்பாக கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதற்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம். 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்றால் ஜிபி ரேடிங் மூலமாகவும் வணிக கப்பல் துறையில் நுழையலாம், ஆனால் அதிகாரி ஆக முடியாது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 17 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் சம்பளம் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,@IMU_HQ வணிக கப்பல் துறையில் இளம் வயதிலே நல்ல சம்பளம் பெற முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதில் போட்டியும் குறைவு, கடந்த ஆண்டு ஐஎம்யூ நுழைவுத் தேர்வில் 40,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள். ஒரு கேடட் (Cadet) ஆக சேர்ந்தால் ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு சுமார் 30,000 ரூபாய் இருக்கும் என்கிறார் கேப்டன் சந்திரசேகர். நான்காண்டு படிப்பு முடித்து ஒருவர் அதிகாரியானால் 45,000 - 90,000 வரை சம்பளம் பெறலாம். வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை அதிகாரியில் இருந்து இரண்டாம் நிலை அதிகாரி ஆக டிஜி ஷிப்பிங் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது திறன் சான்றிதழ் (சிஒசி) என அழைக்கப்படுகிறது. ஆனால் இது பதவி உயர்வை உறுதி செய்யாது. பதிவு உயர்விற்கான ஒரு தகுதி மட்டுமே. முதன்மை பொறியாளர் மற்றும் கேப்டனின் சம்பளம் மாதத்திற்கு 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருக்கலாம் என்கிறார் பிரதிக். எனினும் இது ஒருவரின் அனுபவம் மற்றும் வேலை பார்க்கும் கப்பலைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக மற்ற சரக்கு கப்பல்களைவிடவும், எண்ணெய் கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். எங்கு படிக்கலாம்? பட மூலாதாரம்,IMU கடற்சார் படிப்புகளில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வழங்கப்படுவதில்லை. மாறாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அல்லது டிஜி ஷிப்பிங் அங்கீகரித்த குறிப்பிட்ட கல்வி நிலையங்கள் இதற்காக உள்ளன. இந்தியாவில் சுமார் 200 கடற்சார் கல்வி நிலையங்கள் உள்ளன. மத்திய பல்கலைக்கழகமான ஐஎம்யூவின் தலைமையிடம் கொல்கத்தாவிலும் அதன் வளாகங்கள் சென்னை, மும்பை, விசாகப்பட்டனம் மற்றும் கொச்சியிலும் உள்ளன. இங்கு கடற்சார் பொறியியலில் பி.டெக், கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி, ஜிஎம்இ பட்டயபடிப்பு, இடிஒ படிப்பு மற்றும் கடற்சார் மேலாண்மையில் முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை போக சென்னையில் உள்ள கடற்சார் கல்வி மற்றும் பயிற்சிக்கான அகாடமி மற்றும் புனேவில் உள்ள டொலானி கடற்சார் நிறுவனத்திலும் கடற்சார் படிப்புகளை மேற்கொள்ளலாம். ஜிபி ரேடிங், உதவிக் குழு மற்றும் கடலுக்குச் செல்வதற்கு முந்தைய பயிற்சி போன்றவற்றை பெற வேண்டுமென்றால் அதற்கென சில கல்வி நிலையங்களும் உள்ளன. ஆங்லோ ஈஸ்டர்ன் கடற்சார் அகாடமி (கொச்சி) தென் இந்தியா கடற்சார் அகாடமி (சென்னை) கடற்சார் பொறியியல் மற்றும் பயிற்சிக்கான லயோலா இன்ஸ்டிடியூட் (சென்னை) சர்வதேச கடற்சார் அகாடமி (நொய்டா) அறிவியல் கடற்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (கொல்கத்தா) கட்டணங்களைப் பொருத்தவரை கடற்சார் பொறியியல் மற்றும் கடற்சார் அறிவியல் படிப்புகளுக்கு ஐஎம்யூவில் ஆண்டு ஒன்றுக்கு 2.25 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை ஆகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் இவை வேறுபடலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clywl5z347jo
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு! 19 Jan, 2026 | 03:59 PM கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 3.2 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2018-2019 காலப்பகுதியில் இப்பகுதியில் மூன்று மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இந்த மேம்பாலத்தின் பணிகள் தடைப்பட்டிருந்தன. குறிப்பாக, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பொலிஸ் குடியிருப்புகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக 2022 இல் நிறைவடைய வேண்டிய இப்பணிகள் காலதாமதமானதுடன், இதனால் ஆரம்ப மதிப்பீடான 2,700 மில்லியன் ரூபாயுடன் மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, தற்போது மொத்தம் 3.7 பில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மேம்பாலமானது ஒரு வழிப் பாதையாகச் (One-way) செயற்படுவதுடன், இது கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு நகரை ஒரு சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை, இப்பகுதியில் அகற்றப்பட்ட பொலிஸ் குடியிருப்புகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236414
  18. 'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து படக்குறிப்பு,பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து குறித்து பாலிவுட்டின் ஷான் மற்றும் ஜாவேத் அக்தர் போன்ற பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 18 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி-யுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது நின்றுவிட்டது' என்று கூறியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். "இதில் எந்தவொரு மதவாதப் பிரச்னையும் இருப்பதாக நான் கருதவில்லை" என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறினார். பாடகர் ஷான் கூறுகையில், "கலையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் அம்சம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பாலிவுட் மதவாதமற்ற ஓர் இடம் என்று ஷோபா டே கூறுகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் கூற்று குறித்து நாவலாசிரியர் ஷோபா டே கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான கருத்து.. நான் ஐம்பது ஆண்டுகளாகப் பாலிவுட்டைப் பார்த்து வருகிறேன். மதவாதமில்லாத ஏதேனும் ஓரிடத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றால், அது பாலிவுட் தான். உங்களிடம் திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார். "உங்களிடம் திறமை இல்லை என்றால், உங்கள் மதம் காரணமாகத்தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியே இல்லை. அவர் மிகவும் வெற்றிகரமான மற்றும் முதிர்ச்சியான நபர். அவர் கூறியவற்றை அவர் பேசியிருக்கக் கூடாது. ஒருவேளை அவருக்கு இதற்கான காரணம் இருக்கலாம்.. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்க வேண்டும்," என அவர் மேலும் கூறினார். இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாடகர் சங்கர் மகாதேவன் கூறுகையில், "பாடல் உருவாக்குபவரும், அந்தப் பாடலைக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லையா, அதைச் சந்தைப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவரும் வெவ்வேறு நபர்கள் என்று நான் சொல்வேன். அதைத் தீர்மானிப்பவர்கள் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்றார். ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி-யிடம் என்ன கூறினார்? படக்குறிப்பு,கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகாரச் சமநிலை மாற்றம் நேர்மறையானதாக இல்லை என்று பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். பல பாலிவுட் படங்களுக்கு மறக்கமுடியாத இசையளித்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பிபிசி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில் தனது இசைப் பயணம், மாறிவரும் சினிமா, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் தற்போதைய சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார். இந்த உரையாடலில் திரைத்துறையைப் பற்றி ரஹ்மான் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் அநேகமாக அதிகாரச் சமநிலை மாறியிருக்கலாம் மற்றும் படைப்பாற்றல் இல்லாதவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள். ஒருவேளை இதற்கு மதவாத கோணமும் இருக்கலாம், ஆனால் என் முன்னால் யாரும் அவ்வாறு கூறவில்லை," என்றார். இருப்பினும் தனக்கு இப்போது வேலை வருவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "ஆமாம், சில விஷயங்கள் என் காதுகளுக்கு வந்தன. உதாரணமாக, நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் படத்திற்கு நிதி வழங்கியதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரைக் கொண்டு வந்தனர். நான் சரி என்று சொல்கிறேன், நான் ஓய்வெடுப்பேன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன். நான் வேலையைத் தேடிச் செல்லவில்லை. வேலை என்னைத் தேடி வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உழைப்பும் நேர்மையும் எனக்குப் பலன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார். ரஹ்மான் கூறுகையில், "ஆனால் நான் இதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, ஏனென்றால் இதில் தனிப்பட்ட விஷயம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் விருப்பம் உள்ளது. நமக்கு எவ்வளவு வேலை கிடைக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை," என்றார். ஜாவேத் அக்தரின் பதில் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறிய தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள் என்று ஜாவேத் அக்தர் கூறினார் (கோப்புப் படம்). செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் உடனான உரையாடலில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் தனது எதிர்வினையை அளித்தார். அவர் கூறுகையில், "எனக்கு ஒருபோதும் அப்படித் தோன்றியதில்லை. நான் மும்பையில் உள்ள அனைவரையும் சந்திக்கிறேன். மக்கள் அவருக்கு (ஏ.ஆர். ரஹ்மானுக்கு) மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். ஒருவேளை பலரும் அவர் (ரஹ்மான்) இப்போது மேற்கத்திய நாடுகளில் அதிக வேலையாக இருப்பதாக நினைக்கலாம். அவருடைய நிகழ்ச்சிகள் மிகப்பெரியதாக இருப்பதாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் அவர்கள் அவ்வாறு நினைக்கலாம்," என்றார். ஜாவேத் அக்தர் மேலும் கூறுகையில், "ரஹ்மான் எவ்வளவு பெரிய மனிதர் என்றால், சிறிய தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள். ஆனால், இதில் எந்தவொரு மதவாத அம்சமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை." நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் 'ராமாயணா' படத்தின் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் இப்படத்திற்கு இசையமைப்பது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். கடந்த ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'சாவா' படம் வெளியானது. இந்தப் படம் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகவும் பிரிவினைவாதமாகவும் இருப்பதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். படம் வெளியான நேரத்தில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. "மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தனக்கும் வேலை கிடைப்பதில்லை என்று ஷான் கூறினார். பாடகர் ஷான் திரைத்துறை மற்றும் இசைத் துறையில் எந்தவொரு 'மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதை மறுத்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்-உடனான உரையாடலில் ஷான் கூறுகையில், "வேலை கிடைக்காததைப் பொறுத்தவரை, நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ பாடியிருக்கிறேன், ஆனாலும் எனக்கும் வேலை கிடைப்பதில்லை. இசையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் யாருக்கும் குறைவா என்ன? அவர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார். அனைவரும் நல்ல வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றும் ஷான் கூறினார். அவர் ஏ.ஆர். ரஹ்மானின் பணியைப் பாராட்டவும் செய்தார். ஏ.ஆர். ரஹ்மான் அற்புதமான இசையமைப்பாளர் என்றும், அவருடைய பாணி தனித்துவமானது என்றும் அவர் கூறினார். அரசியல் வட்டாரங்களின் எதிர்வினை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஏ.ஆர். ரஹ்மானின் அறிக்கையைத் துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா தலைவர் ஷைனா என்.சி. கூறினார். ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்குப் பிறகு அரசியல் வட்டாரங்களிலிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஷைனா என்.சி. கூறுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறை மதவாதமாக இருப்பதாகப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைத்துள்ளன, இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமைதான்," என்றார். "ஏதேனும் ஒரு வழி மூடப்பட்டிருந்தால், தகுதியால் எல்லாத் தடைகளையும் நீக்க முடியும் என்பதையும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பதையும் நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதுதான் நமது நாட்டின் பெருமை." அதே சமயம் பஜன் பாடகர் அனூப் ஜலோட்டா கூறுகையில், "அப்படி எதுவுமில்லை. உண்மை என்னவென்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் இருபத்தைந்து ஆண்டுகால வேலையைச் செய்து முடித்துவிட்டார். இப்போது என்ன செய்வது. அவர் நிறைய வேலை செய்துள்ளார், அதுவும் மிகச் சிறந்த வேலைகளைச் செய்துள்ளார். மக்கள் மனதில் அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly3lywrd49o
  19. ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை 19 Jan, 2026 | 11:59 AM (இராஜதுரை ஹஷான்) 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும். எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது.எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி நிதியத்தின் பணிக்குழாமினருக்கான சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் நிதியத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்குரிய 51,128,078 ரூபா செலவை ஜனாதிபதி செயலகவே ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கமைய மீளாய்வு ஆண்டின் இறுதி பகுதிக்குரிய விதிமுறைகள் ஜனாதிபதி நிதிய சபையினால் தயாரிக்கப்படவில்லை.அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236409
  20. இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? படக்குறிப்பு,இரான் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டொனால்ட் டிரம்பைக் குற்றம் சாட்டினார் ஆயதுல்லா அலி காமனெயி கட்டுரை தகவல் ரௌனக் பைரா பிபிசி செய்தியாளர் 19 ஜனவரி 2026, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவது போலத் தெரிந்தது. அமெரிக்கா இரான் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டபோது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது. மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமான அல்-உதெய்த் தளத்திலிருந்து தனது சில படைகளைத் திரும்பப் பெற கத்தார் உத்தரவிட்டது. இரான் போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் வியாழக்கிழமை மாலைக்குள் மரணதண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டதாக இரானிலிருந்து செய்திகள் வந்தன. அதன் பிறகு டிரம்ப், "இரானில் கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை," என்று கூறினார். வியாழக்கிழமை மாலைக்குள், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. புதன்கிழமை எச்சரிக்கையுடன் இருந்த கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை அளவை அமெரிக்கா குறைத்தது. புதன்கிழமை இந்தத் தளத்திலிருந்து அகற்றப்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் இப்போது மெதுவாகத் திரும்பி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு நம்பகமாக செய்தி ஆதாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்தது. ஆனால் 'தி டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. "குறைந்த அளவிலான வாய்ப்புகள் மற்றும் திறன்கள் காரணமாக இரான் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது"என்று பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிகிராப்பை மேற்கோள் காட்டி பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது. அந்த செய்தியின் படி, "ஆட்சிக்கு எதிராக ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது." ஆனால் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முடியாது என்று அதிகாரிகள் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர். ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய ஒரு பெரிய மோதலைத் தூண்டும் என்றும், இரானிடமிருந்து கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். தாக்குதல் நடத்தப்படுமா இல்லையா என்ற குழப்பத்திற்கு மத்தியில், ஜனவரி 11-ஆம் தேதி வெளியான 'டைம் மேகசின்' செய்தியிலும் இது போன்ற அறிகுறிகள் வழங்கப்பட்டன. அலங்கார வார்த்தைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், டிரம்ப் கொடுத்த வாக்குறுதிகளை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையாலும் நிறைவேற்ற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை என்று அந்த செய்தி கூறுகிறது. அமெரிக்கா ஒரு அடையாளப்பூர்வமான தாக்குதலைத் தொடுத்தாலும், அது மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்பதால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. தற்போதைக்கு இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், இரானின் நிலவியல் அமைப்பும் அதன் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒரு 'தடுப்பாக' அமைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, இரான் கடந்த சில மாதங்களில் தனது பாதுகாப்பு அமைப்பிலும் தீவிர மாற்றங்களைச் செய்துள்ளது. இரான் எவ்வளவு வலிமையானது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூன் மாதத் தாக்குதலுக்குப் பிறகு தனது ராணுவ பலத்தை கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாக இரான் கூறுகிறது (கோப்புப் படம்) இரானிய ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி, கடந்த கால மோதல்களுக்குப் பிறகு இரான் எந்த அளவுக்குத் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். "2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் போது இருந்ததை விட, இன்று இரானிய ஆயுதப் படைகள் மிகவும் தயாராக உள்ளன. அந்தப் போர் இரானிய ராணுவத்திற்கு ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது. அது எங்களின் வலிமையை அதிகரித்ததுடன், வீரர்களின் பயிற்சி அளவை மேம்படுத்தியது மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியது"என்று அமீர் ஹடாமி கூறியதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டிஏஏஎஸ் (TASS) தெரிவித்துள்ளது. "சாத்தியமான எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், இரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இரான் தனது ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்தியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணரும், ஐசிடபுள்யூஏவின் மூத்த ஆய்வாளருமான முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இரானின் நிலவியல் அமைப்பு எப்போதும் அதற்கு சாதகமாகவே இருந்து வருகிறது என்பது உண்மைதான். கடந்த காலங்களிலும், இந்த அமைப்பினால் இரான் உத்தி ரீதியாகப் பயனடைந்துள்ளது"என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், நவீன கால போர்களில் தரைவழித் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் வான்வழியே தாக்குதல்களை நடத்தக்கூடிய பல ஆபத்தான ஏவுகணைகள் உள்ளன. ஆனால், ஒரு தரைவழித் தாக்குதலைத் திட்டமிடும் போது இரானின் நிலவியல் அமைப்பை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது"என்றும் குறிப்பிட்டார். இரானை தாக்குவது ஏன் கடினம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிரம்ப் கத்தாரின் அல்-உதெய்த் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்தார் (கோப்பு புகைப்படம்) "வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை 'சிறைபிடித்த' பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து டிரம்ப் உற்சாகமாகப் பேசினார்" என்று ஆங்கில செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது. "ஆனால் அமெரிக்கா உண்மையில் ராணுவ ரீதியாக எந்தத் தயாரிப்புகளையும் செய்யவில்லை. சொல்லப்போனால், இரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில மாதங்களில் குறைக்கப்பட்டன, இது அவர்களின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 2025 அக்டோபருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை." இதன் பொருள், இரானிய அரசாங்க இலக்குகளையோ அல்லது இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மீதோ அமெரிக்காவால் தனித்துத் தாக்குதல் நடத்த முடியாது என்பதாகும். இதைச் செய்ய அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு எதிராக இரான் ஏற்கனவே அந்த நாடுகளை எச்சரித்துள்ளது. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானம் என்ற மற்றொரு வழி உள்ளது, இதனை அமெரிக்கா 2025 ஜூன் மாதம் பயன்படுத்தியது. அதுவும் இரானின் அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று இரான் கூறுகிறது. முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் இதுகுறித்து கூறுகையில், "அமெரிக்கா அக்டோபர் மாதத்தில் தனது விமானம் தாங்கி கப்பல்களைத் திரும்பப் பெற்றது, இரானுக்கு சற்று நிம்மதி அளித்தது. ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் தனது விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்புகிறது. இவை தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சொல்ல முடியாது. இரானின் அண்டை நாடுகளில் தனக்குள்ள ராணுவ தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்புள்ளது"என்றார். இரானின் நிலவியல் இருப்பிடம் அமெரிக்காவுக்கு முன்வைக்கும் சவால் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1980களில், நீண்ட போர் நடந்த போதிலும் இராக்கிய ராணுவத்தால் இரானை தோற்கடிக்க முடியவில்லை (கோப்பு புகைப்படம்) இரானின் நிலவியல் அமைப்பு அதன் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. 'அட்லஸ் ஆஃப் வார்' இதழின் படி, இரான் நாட்டைச் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள வலுவான அரண்கள் எதிரிகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இரான் இயற்கையிலேயே ஒரு பாதுகாப்பான அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கே காஸ்பியன் கடல், தெற்கே பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகியவையும், கிழக்கு மற்றும் மேற்கே பாலைவனங்களும் மலைகளும் சூழ்ந்துள்ளன. மேற்குப் பகுதியில் சாக்ரோஸ் மலைத்தொடரும், வடக்குப் பகுதியில் எல்பர்ஸ் மலைத்தொடரும் அமைந்துள்ளன. இவை எந்தவொரு எதிரி ராணுவத்திற்கும் பெரும் சவாலாக அமைகின்றன. வரலாற்று ரீதியாக, இந்த மலைத்தொடர்கள் படையெடுக்கும் ராணுவங்களை பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளன. 1980-களில் இரான் மற்றும் இராக் போர் நடைபெற்றது. 1980-இல் சதாம் உசேனின் படைகள் இரான் மீது படையெடுத்தன. இருப்பினும், சாக்ரோஸ் மலைத்தொடரின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, இராக் ராணுவத்தால் இரானுக்குள் அதிக தூரம் செல்ல முடியவில்லை. முதலில் அஹ்வாஸ் (ஒரு முக்கியமான எண்ணெய் பகுதி) பகுதியைக் கைப்பற்றி, பின்னர் மலைகளைக் கடந்து இரானின் உட்பகுதிக்குள் நுழைய வேண்டும் என்பதே சதாம் உசேனின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்தது. இயற்கை ஒரு வலிமையான அரணாக இருந்தது. அந்தப் போர் எட்டு ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில், யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போர் முடிவுக்கு வந்தது. அதேபோல், யாராவது கிழக்கிலிருந்து இரானைத் தாக்க விரும்பினால், அவர்கள் 'தஷ்ட்-இ-லுட்' மற்றும் 'தஷ்ட்-இ-கவீர்' போன்ற பரந்த பாலைவனங்களைக் கடக்க வேண்டும். இவை ஒரு பெரிய ராணுவ நடவடிக்கைக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும். பாரசீக வளைகுடாவில் உள்ள 'ஹோர்முஸ் நீரிணை' மிகவும் குறுகியதாக இருந்தாலும், இரான் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த குறுகிய நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே, எந்தவொரு பெரிய மோதலிலும் இது இரானுக்கு ஒரு முக்கியமான ஆயுதமாகத் திகழ்கிறது. ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், இரானால் உலகின் எண்ணெய் விநியோகத்தை முடக்க முடியும். இந்த அச்சத்தின் காரணமாகவே இரானைத் தாக்கும் முன் அதன் எதிரிகள் பலமுறை தயங்குகிறார்கள். அமெரிக்கா - இரான் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை ஆயுதக் கிடங்கை இரான் கொண்டுள்ளது (கோப்புப் படம்) 'குளோபல் ஃபயர்பவர்' அமைப்பின் தரவுகளின்படி, உலகின் முதல் 20 ராணுவ வலிமை கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. 145 நாடுகளில் இரான் 16-வது இடத்தில் உள்ளது. இரானிடம் 6,10,000 வீரர்களும், 3,50,000 ரிசர்வ் படை வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சுமார் 9,60,000 வீரர்கள் உள்ளனர். இரானின் புரட்சிகர காவல்படை (IRGC) என்பது வழக்கத்திற்கு மாறான போர்க்கலைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனிப் பிரிவாகும். இரானிடம் 551 போர் விமானங்களும் உள்ளன. டிரோன் தொழில்நுட்பத்தில் இரான் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடற்படை பலத்தைப் பொறுத்தவரை, இரான் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் உள்ளன. 'இரான் வாட்ச்' அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலேயே இரானின் ஏவுகணை கையிருப்பு தான் மிகப்பெரியது. 2022-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறுகையில், "இரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதில் குரூயிஸ் ஏவுகணைகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை" என்றார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தரவுகளின்படி, 2024-இல் இரானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 7.9 பில்லியன் டாலர் ஆகும். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.0% ஆகும். 2023 ஆம் ஆண்டில் இரானின் இராணுவச் செலவு தோராயமாக 10.3 பில்லியன் டாலராக இருந்தது. ராணுவச் செலவினங்களில் இரான் உலகில் 34வது இடத்தில் உள்ளது. இரான் 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை 200% அதிகரித்து, அதை 16.7 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாகும், மேலும் அதன் பாதுகாப்புச் செலவும் மிகவும் அதிகம். (குறியீட்டு படம்) அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ராணுவ வலிமையில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருக்கிறது. அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது. குளோபல் ஃபயர்பவர் குறியீட்டில் அது முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 13.28 லட்சம் வீரர்களும், 799,000 ரிசர்வ் வீரர்களும் உள்ளனர். மொத்த வீரர்களின் எண்ணிக்கை தோராயமாக 21 லட்சமாகக் கருதப்படுகின்றது. 2005 முதல், உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவரிசையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 997 பில்லியன் டாலர் என்றும் அது மதிப்பிடுகிறது. இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆகும். உலகளாவிய ராணுவ செலவினங்களில் அமெரிக்காவின் பங்கு 37% ஆகும். இரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ பலத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலும், இரானைத் தாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "இரானைத் தாக்காததற்கு ஒரு காரணம், இரானின் எதிரிகள் இரானை கண்டு பயப்படுகிறார்கள் என்பதல்ல. இரானுக்கு எதிரான எந்தவொரு போரும் மிகவும் கடுமையான போராக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதுதான்" என்று கடற்படை முதுகலை பள்ளியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணைப் பேராசிரியர் அஃப்ஷோன் ஓஸ்டோவர் 2024 இல் கூறினார். "அமெரிக்காவை எதிர்த்துப் போராட இரானிடம் உள்ள சிறந்த ஆயுதங்கள் ஏவுகணைகளும் டிரோன்களும் தான். இரானின் போர் விமானங்கள் நீண்ட காலமாகவே செயல்படவில்லை. அதன் கடற்படை சக்தியும் சராசரியாகவே உள்ளது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி குறிப்பிடுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இரான் பதிலடி கொடுத்தால், அது ஏவுகணைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மறுபுறம், அமெரிக்கா கணிசமான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவையும் கொண்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா வகையிலும் இஸ்ரேலால் உதவ முடியும்" என்றும் விவரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0y47dmgxzo
  21. மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம் Published By: Digital Desk 1 19 Jan, 2026 | 12:09 PM (இராஜதுரை ஹஷான்) புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் 'புலதிசி கடுகதி புகையிரதம்' மற்றும் 'உதயதேவி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான 'இரவு தபால் புகையிரத' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் 'யாழ் ராணி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது. https://www.virakesari.lk/article/236399
  22. இன்னொன்று கவனித்தீர்களா இவர் கொழும்பிலோ சிங்கல இடங்களிலோ வாங்கிங் போனதாக ஒரு காணொளி வந்தது இல்லை யாரும் அனுப்பியதும் இல்லை அல்லது சிங்கள மக்கள் அவர் வாங்கிங் போனாலும் அதை கணக்கில் எடுப்பதில்லை. நீங்களும் நிறைய வாங்கிங் போவதாக சொன்னீர்கள் 😂
  23. "Rebuilding Sri Lanka" திட்டத்திற்கு நன்கொடை அளிக்க எளிய வழி! Jan 19, 2026 - 02:16 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "Rebuilding Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோரை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதும், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான செயன்முறையை உருவாக்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். கடந்த 13ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவின் போது www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் நிதி ரீதியாக மட்டுமன்றி பொருட்கள், நிலம் மற்றும் ஏனைய வளங்களையும் இந்த இணையதளத்தின் ஊடாக வழங்க முடியும். நன்கொடையாளர்கள் தாங்கள் வழங்கும் பங்களிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படையான முறையில் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைக்கும் நிதி நன்கொடைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும். அத்துடன் மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள், குறிப்பிட்ட நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பொதுமக்கள் இந்த இணையதளத்தின் வாயிலாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தளம், சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, www.rebuildingsrilanka.gov.lk இணையதளமானது இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://adaderanatamil.lk/news/cmkkx8ou4044jo29niof7y7uf
  24. சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து வந்துள்ளது. சீன மக்கள் தொகை கடந்த ஆண்டிலும் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் 79.2 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. 1.131 கோடி இறப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், 33.9 இலட்சம் பேர் மக்கள் தொகையில் குறைந்துள்ளனர். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிலைமையில் சீனா உள்ளது. எனினும், 2025-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் வருடாந்திர இலக்கான 5 சதவீத வளர்ச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், உள்நாட்டில் குறைவான நுகர்வு என்ற சூழலிலும், ஏற்றுமதியால் சீனா இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இதன்படி, 3 வயதுக்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் தெரிவித்தது. கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. திருமணம், காதல், குடும்பம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றி நேர்மறையான விசயங்களை கற்று தரும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, திருமணம் செய்து கொள்ளுங்கள். கையில் பணம் பெற்று கொள்ளுங்கள் என ஊக்க தொகைகளையும் அறிவித்தது. எனினும், அரசின் பல்வேறு திட்டங்களும் பெரிய அளவில் பலன் பெற்று தரவில்லை. https://www.virakesari.lk/article/236433
  25. அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் பூரணப்படுத்த அரைகுறையாக இருப்பது அவசரம் என்பதால் முன்னுரிமை அளித்தோம். அதேபோல பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளுக்கான மலசலகூடப் புனரமைப்பும் அவசரம் என்றபடியால் செய்கிறோம். இவர்கள் இருவரதும் குடும்பநிலை கருதியே இவ்வுதவி செய்யப்படுகிறது. அடுத்ததாக புதிதாக மலசலகூடம் கட்டிக் கொடுக்கலாம் அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.