Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் Published By: Vishnu 30 Jan, 2026 | 07:51 PM பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள். தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப் படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு. இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும். கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கை யாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை. இங்கு ஜனாதிபதி வருகின்றபோது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் npp உடைய தலைமை கட்சியான jvpயிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிவது காணப்படுகிறது. தமிழ் தேசிய சக்திகள் இதன்னுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை. எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலமையை நாங்கள் பார்க்கின்றோம். அகவே இது ஒரு அபாயமான விடயம். ஏனெனில் அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகின்றது. உண்மையில் கிராமகளில் அடிமட்டமாக இருக்கின்ற அந்த அடிமட்ட மக்களை பலவீனப்படுத்துகின்ற ஒரு அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முனைக்கிறது. இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு நிலமை. இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தமல் தேச நிர்மான அரசியலிலும் கவனம் செலுத்துகின்றபோது இந்த விடயங்களை வெற்றிகொள்ளk கூடிய நிலமை உருவாகும். இது தொடர்பான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இருக்கின்றது என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237433
  3. ammavassi agiya naan joined the community
  4. அமெரிக்கா வசிப்பதற்கு நல்ல நாடு தான். ஆனால், 2016 இலும், பின்னர் 2024 இலும் கிடைத்த பாடங்களின் படி அமெரிக்காவின் கட்டமைப்பில் ஒரு பாரிய "ஓட்டை (vulnerability)" இருப்பது தெளிவாகி விட்டது: ட்ரம்ப் போன்ற உள்ளூரில் பிறந்த எந்த ஒரு பன்னாடையும் கொஞ்சம் காசைச் சேகரித்தால் அமெரிக்காவில் அதிபராகலாம் என்பது தான் அந்த ஓட்டை. இது போன்ற ஒரு ஓட்டையை 1780 களில் அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய மூத்தோர் குழு எதிர்பார்க்கவில்லை. இனி இந்த ஓட்டையை அடைக்கவும் முடியாது. எனவே, படிப்படியாக அமெரிக்க டொலர், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்க தொழில் நுட்பம் என்பவற்றில் இருந்து நாடுகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும். கனடாவே இனி அமெரிக்காவுடன் பழைய நிலை உறவை நிலைநாட்டப் போவதில்லை எனும் போது, வேறு நாடுகள் விலகி ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
  5. சீனா ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இவ்வளவு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்? பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு,மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானோருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது கட்டுரை தகவல் ஜோனாதன் ஹெட் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது. ஊழல் குற்றங்களுக்காக அதிகாரிகளுக்கு அடிக்கடி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட மிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அதைவிட மிகவும் தீவிரமானவை. ஷான், மியான்மரில் வறுமையிலுள்ள ஒரு மாகாணம். அங்கு, தொலைதூர எல்லையில் அமைந்துள்ள லௌக்கைங் நகரத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல், மிங், பௌ, வெய், லியு ஆகிய வம்சாவளிகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. நான்கு குடும்பங்கள் கடந்த 1980களில் இருந்து பல ஆண்டுகளுக்கு, எம்.என்.டி.ஏ.ஏ என்றழைக்கப்படும் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் லௌக்கைங் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் இருந்தன. மியான்மரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான ராணுவத் தாக்குதலின் மூலம், எம்.என்.டி.ஏ.ஏ என்ற ஆயுதமேந்திய இனக்குழு அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த குடும்பங்கள் செல்வாக்கு பெறத் தொடங்கின. 'நான்கு குடும்பங்கள்' என்று அறியப்பட்ட மிங், பௌ, வெய், லியு குடும்பத்தினர் அப்பகுதியைக் கைப்பற்றி, அங்கு நிலவிய, அபின், மெத்தம்பெட்டமைன் உற்பத்தியைச் சார்ந்திருந்த பழைய நிலையை மாற்றி சூதாட்ட விடுதிகள், இணையவழி மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கினர். அவர்கள் மியான்மர் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். டிசம்பர் 2021இல் தனது ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, மின் ஆங் ஹ்லைங் தலைநகர் நேபிடாவில் லியு குடும்பத்தின் தலைவரான லியு ஜெங்சியாங்கிற்கு விருந்தளித்து, "அரசின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்புக்காக" ஒரு கௌரவ பட்டத்தையும் வழங்கினார். பட மூலாதாரம்,Chinese Ministry of Public Security படக்குறிப்பு,சீன காவல்துறையின் காவலில் மிங் ஷென்ஜென் மற்றும் மிங் குவோபிங் 'சீனாவை சேர்ந்த பலர் கொலை' அவரது 'ஃபுல்லி லைட்' நிறுவனம் மியான்மர் முழுவதும் லாபகரமான தொழில்களைக் கொண்டிருந்தது. அந்த நான்கு குடும்பங்களின் பிற உறுப்பினர்கள் ராணுவ ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.பி கட்சியின் வேட்பாளர்களாக இருந்தனர். லௌக்கைங்கில் அவர்கள் நடத்திய மோசடி மையங்கள் கொடூரமானவையாக இருந்தன. ஆசியாவின் பிற பகுதிகளிலுள்ள மோசடி மையங்களைவிட இவை மிகவும் மோசமானவை. அங்கு சித்திரவதை என்பது ஒரு வழக்கமான செயலாக இருந்தது. அதிக சம்பளம் தரும் வேலைகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்கள் உண்மையில் பெரிய கட்டடங்களில் பூட்டி வைக்கப்பட்டு, இணைய ஊடகங்களின் வழியாக ஒருவரின் நம்பிக்கையை மெதுவாகப் பெற்று, பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகையைத் திருடும் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு சிக்கியவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களும், அங்கு சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் தங்கள் புகார்களையும் உதவி கோரல்களையும் பதிவிடத் தொடங்கினர். லௌக்கைங்கில் மிகவும் நன்கு அறியப்பட்ட இத்தகைய ஒரு மோசடி மையம்தான் 'க்ரூச்சிங் டைகர் வில்லா'. இது மிங் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அக்டோபர் 2023இல் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியென நம்பப்படும் சம்பவம் ஒன்றின்போது, காவலர்கள் சீனாவை சேர்ந்த பலரைக் கொலை செய்தனர். இதனால் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத சூதாட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷே ஷிஜியாங், கடந்த ஆண்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார் தற்போதைய உள்நாட்டுப் போரில் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக எம்.என்.டி.ஏ.ஏ குழு மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிப்படையான ஆதரவுடன், லௌக்கைங்கை தாக்கி மீண்டும் கைப்பற்றினர். அங்கு நடக்கும் மோசடி தொழில்களை முற்றிலுமாக ஒழிப்பதாக எம்.என்.டி.ஏ.ஏ. உறுதி பூண்டது. அவர்கள் அந்த நான்கு குடும்பங்களின் தலைவர்களையும் கைது செய்ததோடு, அவர்களது உறவினர்கள், கூட்டாளிகள் என 60க்கும் மேற்பட்டோரை சீன காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குடும்பத் தலைவரான மிங் சூசாங், பிடிபட்ட பிறகு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீன காவல்துறையின் விசாரணைகளின்போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், தனது பலத்தைக் காட்டுவதற்காகவே கூட்டத்தில் ஒருவரைத் தேர்வு செய்து பிறர் முன்னிலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குடும்பங்களின் மீது மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே இந்த விவரங்களை சீனா வெளியிட்டுள்ளது. மேலும், பௌ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கின்றனர். அதோடு, வெய் மற்றும் லியு குடும்பங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நான்கு குடும்பங்களும் இனரீதியாக சீனர்கள். மேலும், யுனான் மாகாணத்தில் எல்லையின் சீன பகுதியிலுள்ள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மேலும், லௌக்காங்கில் உள்ள இந்த மோசடி தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீர்க்கமானதாக இருந்துள்ளது. இதோடு, பெரிய மோசடி நடவடிக்கைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீன வணிக பிரமுகர்களை திருப்பி அனுப்ப தாய்லாந்து மற்றும் கம்போடியாவை சீனா சம்மதிக்க வைத்துள்ளது. அவர்களில் மியான்மரின் போரால் பாதிக்கப்பட்ட கரேன் மாகாணத்தில் ஒரு முழு நகரத்தையே கட்டியெழுப்பிய ஷே ஷிஜியாங்கும் ஒருவர். மற்றொருவர், கம்போடியாவில் தனது பிரின்ஸ் குரூப் நிறுவனத்தின் மூலம் செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்த சென் ஷி. அத்துடன், மோசடி மையங்களில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான சீனர்களையும், விசாரணைகளுக்காக சீனா மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது. இருப்பினும், இந்த மோசடி வணிகம் தம்மைத் தகவமைத்துக் கொண்டு, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முற்றிலுமாக முடக்குமாறு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கம்போடிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதிலும், இதுவே இன்னமும் அந்நாட்டில் மிகப்பெரிய தொழிலாகக் கருதப்படுகிறது. மேலும், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கேகே பார்க், ஷுவே கோக்கோ போன்ற முக்கிய மோசடி மையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான போதிலும், இந்தத் தொழில் மியான்மரில் புதிய பகுதிகளுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp87e1kvjydo
  6. சீவகன் அவர்களின் "அரங்கம்" தளத்தில் எழுதுவோரில், கருணாகரன் சுமந்திரன் சார்பாகவும், அழகு குணசீலன் சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பாகவும் எழுதுவர்.ஆனால், இருவரும் இந்த வாரம் எழுதியிருக்கும் ஆக்கங்களில், சுமந்திரனைத் தவிர நிர்வாக ஆளுமையும், தொடர்பாடல் இயலுமையும் உடைய இன்னொருவர் கட்சிக்குள் இல்லையென்ற அவதானிப்பைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்த தகுதிகளுக்காக சுமந்திரன் செய்யும் எல்லாவற்றையும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் சுமந்திரனை ஒரேயடியாக தமிழ் அரசியலில் இருந்து அகற்றும் எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2020 தேர்தல் காலத்தில், சுமந்திரனுக்கு எதிராக புலம் பெயர் முகநூல் "போராளிகளும்", யோதிலிங்கம் போன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களும் முன்னெடுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போதே இதைச் சிலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த ஆண்டில் மகிந்த கட்சியின் அங்கஜன் யாழ்ப்பாணத்தில் பாரிய வெற்றி பெற்றார். இப்படியான நிலை 2024 இலும் தொடர்ந்தது. சிங்களக் கட்சியின் சார்பில் இன்று பல தமிழ் பா.உக்கள் உருவாகி விட்டார்கள்! "நமக்குத் தலை போனாலும் பரவாயில்லை, நாம் எதிர்க்கும் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தீவிர தேசியம் பேசாதோருக்கு மூக்குப் போக வேண்டுமென்ற" மன நிலை இருக்கும் வரை, சிங்களக் கட்சியிடம் மாகாணசபை கூடப் போகலாம்!
  7. செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது? முன்னணி நாடாக மாறுமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ப்ரீத்தி குப்தா தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அர்னாப் ராய், தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவரைப் பொறுத்தவரை, நம்பகமான கணினி சிப்கள் விநியோகிக்கப்படுவது அவசியமானது. இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள அவரது நிறுவனம், மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் செயல்படத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கிறது. "அடிப்படையில், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் முழுவதும் இணைய தொடர்புகளைக் கொண்டு செல்லத் தேவையான மின்னணு சாதனங்களை நாங்கள் விநியோகிக்கிறோம்," என்கிறார் அவர். அதற்கு தொலைத்தொடர்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சிப்கள் தேவை. "டெலிகாம் சிப்கள் அடிப்படையில், ஸ்மார்ட்போன் சிப்களில் இருந்து வேறுபட்டவை. அவை லட்சக்கணக்கான பயனர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் வரும் மிகப்பெரிய அளவிலான தரவுகளைக் கையாள்கின்றன. இந்த நெட்வொர்க்குகளின் இயக்கம் தடைபடக்கூடாது. நம்பகத்தன்மை, பிரச்னைக்குரிய நேரத்தில் சமாளிப்பதற்கான பாதுகாப்பு அம்சம் போன்றவை மிகவும் அவசியம். சிப் கட்டமைப்பு அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்," என்று கூறுகிறார் அர்னாப் ராய். 'செமிகண்டக்டர் உற்பத்தி இல்லை' கணினி சிப்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. அந்த கணினி சிப்களில் (செமிகண்டக்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) பலவற்றை தேஜஸ் நிறுவனம் வடிவமைக்கிறது. உலகின் செமிகண்டக்டர் பொறியாளர்களில் 20% பேர் இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. "கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய உலகளாவிய சிப் நிறுவனமும், அதிநவீன தயாரிப்புகளில் பணியாற்றும் தனது மிகப்பெரிய அல்லது இரண்டாவது-பெரிய சிப் வடிவமைப்பு மையத்தை இந்தியாவில் கொண்டுள்ளது," என்று இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா கூறுகிறார். ஆனால், செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. இதனால், தேஜஸ் நெட்வொர்க்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சிப்களை இந்தியாவில் வடிவமைத்து, அவற்றை வெளிநாடுகளில் உற்பத்தி செய்கின்றன. பட மூலாதாரம்,Tejas Networks படக்குறிப்பு,தேஜஸ் நெட்வொர்க்ஸ் மொபைல் போன் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான சாதனங்களை விநியோகிக்கிறது கோவிட் பேரிடரின்போது, இந்த அமைப்பின் பலவீனம் வெளிப்பட்டது. அப்போது சிப்களின் விநியோகம் தடைபட்டதால், அனைத்து தொழில் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருந்தது. "குறைக்கடத்தி என்று அழைக்கப்படும் இந்த செமிகண்டக்டர்களின் உற்பத்தியை உலகளவில் பார்த்தால், ஒரு சில இடங்களிலேயே அதிகமாகக் குவிந்துள்ளது. இத்தகைய சூழல் கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளதை பெருந்தொற்றுப் பேரிடர் தெளிவுபடுத்தியது," என்று தெரிவித்தார் அர்னாப் ராய். இந்த நிலைமை, இந்தியாவை அதன் சொந்த செமிகண்டக்டர் தொழில்துறையை உருவாக்கத் தூண்டியது. "உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் எவ்வளவு பலவீனமானவை என்பதை கோவிட் பேரிடர் நமக்குக் காட்டியது. உலகின் ஒரு பகுதி மூடப்பட்டால், அனைத்து இடங்களிலும் மின்னணுவியல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது" என்கிறார் சின்ஹா. மேலும் அவர், "அதனால்தான் அத்தகைய அபாயத்தைக் குறைக்கவும், மீள்திறனை அதிகரிக்கவும் இந்தியா தனது சொந்த செமிகண்டக்டர் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது," என்றார். செமிகண்டக்டர் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு அமிதேஷ் குமார் சின்ஹா தலைமை தாங்குகிறார். இதில், உற்பத்திச் செயல்முறையின் எந்தெந்தப் பகுதிகளில் இந்தியாவால் பிற நாடுகளுடன் போட்டியிட முடியும் என்பதைக் கண்டறிவதும் அடங்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கணினி சிப்கள் சிலிகான் தகடுகளின் மீது மின்சுற்றுகளைப் பொறிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன இந்தியாவின் கவனம் எங்கே? கணினி சிப் தயாரிப்பதில் பல கட்டங்கள் உள்ளன. அதில் முதலாவதாக இருக்கும் சிப் வடிவமைப்பில் இந்தியா ஏற்கெனவே வலுவாக உள்ளது. இரண்டாவது கட்டம், வேஃபர் தயாரிப்பு. இதில், மிகவும் மெல்லிய சிலிகான் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்பு இயந்திரங்கள் இந்தத் தகடுகளின் மீது மிகச் சிறிய மின்னணு சுற்றுகளை வரைகின்றன. இந்த இயந்திரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் எனப்படும் பிரமாண்ட தொழிற்சாலைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது கட்டத்தில், குறிப்பாக மிகவும் அதிநவீனமான சிப்களின் உற்பத்தியைப் பொறுத்தவரை, தைவானில் உள்ள நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீனா அதை முந்துவதற்கு முயல்கிறது. மூன்றாவது கட்டத்தில், அந்தப் பெரிய சிலிகான் வேஃபர்கள் தனித் தனி சிப்களாக வெட்டப்பட்டு, பாதுகாப்பு உறைகளில் அடைக்கப்பட்டு, இணைப்பிகளுடன் இணைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. அவுட்சோர்ஸ்ட் செமிகண்டக்டர் அசெம்ப்ளி மற்றும் சோதனை (OSAT) என்றழைக்கப்படும் இந்த மூன்றாவது கட்டத்தைத்தான், இந்தியா தனது உற்பத்திச் செயல்முறையின் இலக்காகக் கொண்டுள்ளது. "சிப் உற்பத்திச் செயல்முறையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்குவதைவிட அசெம்ப்ளி, சோதனை, பேக்கேஜிங் ஆகியவற்றைத் தொடங்குவது எளிது. அதில்தான் இந்தியா முதலில் கவனம் செலுத்துகிறது" என்கிறார் இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தின் தலைவர் அசோக் சந்தக். இதுபோன்ற பல தொழிற்சாலைகள், இந்த ஆண்டில் "பெரியளவிலான உற்பத்தியைத் தொடங்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீனா தனது செமிகண்டக்டர் தொழிலை மேம்படுத்தி வருகிறது கடந்த 2023இல் நிறுவப்பட்ட கேன்ஸ் செமிகான், இந்திய அரசின் ஆதரவுடன் ஒரு செமிகண்டக்டர் ஆலையை நிறுவி, அதை வெற்றிகரமாக இயக்கி வரும் முதல் நிறுவனமாகும். கேன்ஸ் செமிகான், குஜராத்தில் கணினி சிப்களை ஒருங்கிணைத்து சோதனை செய்வதற்கான ஒரு தொழிற்சாலையில் 260 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிப்பை தொடங்கியது. கேன்ஸ் செமிகானின் தலைமை செயல் அதிகாரி ரகு பணிக்கர் அதுகுறித்துப் பேசியபோது, "பேக்கேஜிங் என்பது ஒரு சிப்பை ஒரு பெட்டியில் வைப்பது மட்டுமல்ல. இது 10 முதல் 12 கட்டங்களைக் கொண்ட ஓர் உற்பத்திச் செயல்முறை" என்றார். "அதனால்தான், பேக்கேஜிங் மற்றும் சோதனையைச் செய்வது, சிப்களை உருவாக்குவதைப் போலவே மிகவும் முக்கியமானது. இது இல்லையென்றால், வேஃபர் பயனற்றதாகிவிடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய மொபைல் போன்களில் காணப்படும் அல்லது செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட கணினி சிப்களை இவரது ஆலை தயாரிக்காது. "ஆரம்பக் கட்டத்திலேயே இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான தரவு மையம் அல்லது செயற்கை நுண்ணறிவு சிப்கள் தேவையில்லை. அங்கு நமது தேவை இல்லை என்பதோடு, அங்கு நாம் பலமாகவும் இல்லை" என்கிறார் ரகு பணிக்கர். பட மூலாதாரம்,Getty Images அதற்குப் பதிலாக, அவர்கள் கார், தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சிப் வகைகளைத் தயாரிப்பார்கள். "இவை கவர்ச்சிகரமான சிப்கள் இல்லை. ஆனால், அவை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் முக்கியமானவை. முதலில் நமது சொந்த சந்தைக்குச் சேவையாற்றுவதன் மூலம் ஒரு தொழில்துறையை உருவாக்க வேண்டும். அதன் சிக்கலான தன்மை அதற்கடுத்து வரக்கூடும்" என்று ரகு பணிக்கர் தெரிவித்தார். கேன்ஸ் செமிகான் நிறுவனத்திற்கு இதுவொரு கடினமான கற்றல் அனுபவமாக இருந்துள்ளது. "நாம் இதற்கு முன்பு இந்தியாவில் செமிகண்டக்டர் தூய்மை அறைகளை உருவாக்கியதில்லை. நாம் இதற்கு முன்பு இந்த உபகரணங்களை நிறுவியதில்லை. நாம் இதற்கு முன்பு இதற்காக யாருக்கும் பயிற்சி அளித்ததில்லை," என்கிறார் பணிக்கர். அவரைப் பொறுத்தவரை, "செமிகண்டக்டர் சிப்களுக்கு, பாரம்பரிய உற்பத்தி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் ஒழுங்கு, ஆவணப்படுத்தல் மற்றும் செயல்முறைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அந்த கலாசார மாற்றம் தொழில்நுட்ப மாற்றத்தைப் போலவே முக்கியமானது." ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ரகு பணிக்கரின் கூற்றுப்படி, "பயிற்சிக்கு நேரம் எடுக்கும். ஐந்து வருட அனுபவத்தை ஆறு மாதங்களில் சுருக்கிவிட முடியாது. அதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது." பெங்களூருவில் உள்ள தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில், அர்னாப் ராய் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிகமான தொழில்நுட்பப் பொருட்களை வாங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். "அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க செமிகண்டக்டர் உற்பத்தி தளம் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக உதவும்," என்கிறார் அர்னாப் ராய். அவரது கூற்றுப்படி, இதுவொரு நீண்ட பயணத்திற்கான தொடக்கம். "இந்திய நிறுவனங்கள் இறுதியில் முழுமையான தொலைத்தொடர்பு சிப்செட்களை வடிவமைத்து தயாரிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முதலீடும் நேரமும் தேவைப்படும். ஆழ்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுக்கும். அதோடு இந்தியா இப்போதுதான் அத்தகைய முதலீட்டை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7yp0eljk0o
  8. Today
  9. ஈரான் மீது ட்ரம்ப் விதித்துள்ள 02 முக்கிய நிபந்தனைகள் Published By: Digital Desk 3 30 Jan, 2026 | 03:19 PM வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் குவித்து வரும் நிலையில், ஈரான் உடனான மோதலைத் தவிர்க்க அந்த நாடு இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் தனது மனைவி மெலனியா குறித்த ஆவணப்படத்தின் (Documentary) வெளியீட்டு விழாவில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு விடுத்துள்ள நிபந்தனைகள்: ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட்டு, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கொல்வதை அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். "அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று வருகிறார்கள்" என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானை நோக்கி மிக சக்திவாய்ந்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், "அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என எச்சரிக்கும் தொனியில் பேசினார். ஏற்கனவே ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' போன்ற தாக்குதல்களை முன்னெடுத்த டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அடுத்த தாக்குதல் "மிக மோசமானதாக இருக்கும்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் பதிலடி கொடுத்துள்ளார். ஈரானிய ராணுவம் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் "விரல்கள் தூண்டுதலில் (Trigger) இருப்பதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி நிலைப்பாடு: ஈரான் எப்போதும் அமைதியான முறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவதையே விரும்புவதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சமமான மற்றும் மரியாதையான பேச்சுவார்த்தைக்கே ஈரான் தயாராக உள்ளதே தவிர, மிரட்டல்களுக்குப் பணியாது எனவும் அரக்சி கூறியுள்ளார். ஈரானிய நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. https://www.virakesari.lk/article/237407
  10. கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல் Published By: Digital Desk 3 30 Jan, 2026 | 09:11 AM கம்யூனிச நாடான கியூபாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) மிரட்டல் விடுத்துள்ளார். இதன் மூலம் கியூபா மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அவர் உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். கியூபா அரசாங்கத்தை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு "அச்சுறுத்தல்" என குறிப்பிட்ட ட்ரம்ப், தேசிய அவசரநிலை பிரகடனத்தின் கீழ் இந்த நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். கியூபாவுக்கு மசகு எண்ணெய் அல்லது பெற்றோலியப் பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் மேலதிக வரிகளை விதிக்க இந்த ஆணை வழிவகை செய்கிறது. இந்த உத்தரவில் குறிப்பிட்ட வரி விகிதங்களோ அல்லது நாடுகளின் பெயர்களோ இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், மெக்சிகோ மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதன் மூலம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 03 ஆம் திகதி அமெரிக்க இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டார். வெனிசுவேலா தான் கியூபாவுக்கு நீண்டகாலமாக எண்ணெய் வழங்கி வந்தது. தற்போது மதுரோவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கியூபாவுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுபோயுள்ளது. "கியூபா விரைவில் வீழ்ச்சியடையும். வெனிசுவேலாவிலிருந்து இனி ஒரு சொட்டு எண்ணெய்யோ அல்லது ஒரு டொலர் பணமோ கியூபாவுக்குப் போகாது" என ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/237382
  11. இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு 30 Jan, 2026 | 12:19 PM டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பிற அரச நிறுவனங்களைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மொன்டானா தேசிய காவல் படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்றை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாரம் வரவேற்றது. பேரனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சியினை நீண்டகால மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறனுடன் இணைத்து, மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்காவின் பங்காண்மை அடிப்படையிலான அணுகலை இவ்விஜயம் பிதிபலிக்கிறது. அமெரிக்காவில் இயற்கை பேரனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் தமக்கிருக்கும் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மீட்புத் திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காகவும் எதிர்கால அமெரிக்க மனிதாபிமான உதவி முடிவுகளைத் தெரிவிப்பதற்காகவும் கொழும்பு, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மொன்டானா தேசிய காவல் படை கள விஜயங்களை மேற்கொண்டது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியும், சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலருமான லெஃப்டினன் கேணல் மெத்திவ் ஹவ்ஸ், “பங்காண்மைகள் மிக முக்கியமானதாக அமையும் களத்தில் அமெரிக்க-இலங்கை பங்காண்மை எவ்வாறுள்ளதென்பதை இவ்விஜயம் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார். “இலங்கை எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், தமது நாட்டில் இடம்பெற்ற மெய்யான பேரனர்த்தங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களைக் கொண்ட மொன்டானா தேசிய காவல்படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைப் பயன்படுத்துவதன் மூலமும், நாங்கள் தற்போதய மீட்சிக்கு உதவி செய்வதுடன், எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் ஒத்துழைப்பினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், மொன்டானா தேசிய காவல் படைக்கும், இலங்கை பாதுகாப்பமைச்சிற்கும் இடையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்படுகிறது. மொன்டானாவில், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் முதல் கடுமையான குளிர்கால புயல்கள் வரை இயற்கைப் பேரனர்த்தங்களின் போது மாநிலத்தின் முதன்மை பதிலளிப்பாளராக தேசிய காவல்படை செயற்படுவதனால் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுடனான அதன் பங்காண்மையானது வலுவான மற்றும் நடைமுறையில் பொருத்தமான ஒன்றாக அமைகிறது. “சமூகங்களுக்கு மிகவும் அவசியமாக உதவி தேவைப்படும்போது பொதுமக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, எமது மாநிலத்தில் ஏற்படும் இயற்கையனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதில் மொன்டானா தேசிய காவல் படை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.” என மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்ட் கிப்சன் தெரிவித்தார். “இலங்கையுடனான இப்பங்காண்மையினை நாங்கள் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை அவ்வனுபவம் வடிவமைக்கிறது. நாங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய பண்புகளில் வேரூன்றிய உறவுகளையும் கட்டியெழுப்புகிறோம். பங்காளர்களாக மட்டுமன்றி, நண்பர்களாகவும் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். அதுவே மொன்டானா பாணியாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார். இச்செயற்பணியானது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நீடித்த உறவுகளை பேணி வளர்ப்பதற்காகவும் மொன்டானா தேசிய காவல் படையினை இலங்கையுடன் இணைக்கும் State Partnership Program (SPP) நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இடம்பெறும் பல வருட கால ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் ஒன்றிணைந்து அருகருகே பணியாற்றியதை ATLAS ANGEL 2024 மற்றும் PACIFIC ANGEL 2025 போன்ற சமீபத்திய ஈடுபாடுகள் வெளிப்படுத்தின. டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து பதிலளிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு இந்த உறவுகள் முக்கியமானவை என்பதை அவை நிரூபித்தன. இவ்வொத்துழைப்பினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். “நிஜ உலக பேரனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பதிலளிப்பு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க அனுபவங்களை இப்பங்காண்மை எடுத்து வருகிறது” என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கூறினார். “மொன்டானா தேசிய காவல்படை வழங்கிய அறிவு நுட்பமான கருத்துக்களும் தொழிநுட்ப நிபுணத்துவமும் எமது மீட்பு முயற்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன், எதிர்கால அவசரநிலைகளை முகாமை செய்வதற்கான எமது தேசிய திறனையும் அவை பலப்படுத்தின. இவ்வொத்துழைப்பானது ஒரு முறையான மதிப்பீட்டை விட அதிகமானதாகும்; இது எமது நாடுகளுக்கிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மைக்கான ஒரு சான்றாகும்.” என அவர் மேலும் கூறினார். 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்க மனிதாபிமான உதவிகள், பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு மற்றும் அவசர விமானப் போக்குவரத்துத் திறன் ஆகியவற்றை பலப்படுத்துவதற்காக U.S. Excess Defense Articles நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து Bell 206 (TH-57) ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப் படைக்கு வழங்கியமை, முக்கியமான உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் மேற்கொண்ட நிவாரண வான் போக்குவரத்து உதவி உள்ளிட்ட டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து வழங்கப்படும் விரிவான அமெரிக்க உதவிகளின் தொடராக மொன்டானா தேசிய காவல்படையின் இவ்விஜயம் அமைகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் பங்காண்மை மற்றும் பகிரப்பட்ட திறன்கள் ஊடாக இலங்கையின் மீட்சிக்கும் நீண்டகால மீண்டெழும் தன்மைக்கும் உதவி செய்வதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. மொன்டானா தேசிய காவல் படையினைப் பற்றி: மொன்டானா மாநிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டதாகும். சமஷ்டி அரசின் செயற்பணிகளுக்கான தயார்நிலையைப் பேணும் அதேவேளை, மொன்டானா மாநிலத்தினுள் நிகழும் இயற்கையனர்த்தங்களுக்கான முதன்மை பதிலளிப்பாளராக, சமூகங்களை பாதுகாப்பதில் இக்காவற்படை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நிலைபேறான, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பினூடாக பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறன்களை பலப்படுத்துவதற்காக 2021ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவல்படை இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. https://www.virakesari.lk/article/237398
  12. அத தெரண கருத்துப்படங்கள்.
  13. இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை! Jan 30, 2026 - 05:40 PM சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம். சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள். மேலும் இன்றைய கூட்டம் சமூகமாக நடைபெற்றது. சென்ற கூட்டமானது நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். நாங்கள் அவற்றை சாதகமாக பரிசீலிக்கின்றோம். இங்கே தீர்வு காணப்படக்கூடிய விடயங்களுக்கு இங்கே தீர்வை கண்டு, மேலதிகமாக ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cml0udcrw04mho29n6c8je0tg
  14. மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை 29 Jan, 2026 | 04:50 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி தொகையைக் கொண்டு பயன்பாட்டுக்கு தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியை பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் தற்போது தமது ஆட்சியில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதிலேயே அவதானம் செலுத்தி வருகிறது. இலங்கை நிலக்கரி சங்கத்தால் நாட்டுக்கு தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம். நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலில் ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அதாவது மோசடியை இலக்காக வைத்து தான் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலுக்கு 48 நாட்கள் கால அவகாசம் வழங்குவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் அதனை 21 நாட்களுக்கு குறைத்து தான் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் வலுசக்தி அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் நிலக்கரி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் மார்ச்சில் நிச்சயம் மின்துண்டிப்பு ஏற்படும். தரத்தில் குறைந்த இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மார்ச்சில் மின் துண்டிப்பு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. இது மத்திய வங்கி மோசடியை விட பாரிய மோசடியாகும். கடந்த ஆட்சி காலங்களில் கொள்ளையர்கள் மோசடி செய்தனர். ஆனால் தற்போது அரசாங்கமே நேரடியாக மோசடிகளில் ஈடுபடுகிறது என்றார். https://www.virakesari.lk/article/237352
  15. விருந்தோம்பல் என்றாலே... ஸ்ரீலங்கா தமிழர்கள்தான். -அனுராதா ஸ்ரீராம்.- காணொளி: 👉 https://www.facebook.com/reel/828034240196477 👈 இன்று மாலை 7 மணிக்கு இடம்பெறவிருக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ் வந்திறங்கிய உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்.
  16. பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல Jan 30, 2026 - 01:00 PM பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் பொலிஸ் துறையில் 32000 பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த வருடத்தில் 2500 பேரும், அடுத்த வருடத்தில் 2700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது. இந்நிலையில் பொலிஸ் துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml0kd9ri04lto29nk5lo24vj
  17. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர் Published By: Vishnu 30 Jan, 2026 | 04:29 AM இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார். கடந்த மக்கள் எழுச்சியின் முக்கிய கோசம் ஊழல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வரும் நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதாகவும், மக்கள் எழுச்சி ஒரு முறையான செயல்முறையின் இறுதி விளைவாகும் என்றும் குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மக்களின் எழுச்சியை அற்பமானதாக கருத முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அரச ஊழியர்களாக, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காகத்தான் நாம் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவியுள்ளோம். அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரச துறையில் ஊழல் கலாசாரத்தை மாற்ற முடியும். அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாகவும், அரச அதிகாரிகளின் நேர்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு தளமாகவும் உள்ளக விவகாரப் பிரிவுகளைக் கருதலாம்'' என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தரிந்து தனஞ்சய வீரசிங்க ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர். https://www.virakesari.lk/article/237370
  18. 'மிகுந்த ஏமாற்றம்': இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images 29 ஜனவரி 2026 இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது. இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று அழைக்கின்றன. ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது," என்று கூறினார். "யுக்ரேன் - ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா முதலில் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் கிடைத்ததால் வாங்கத் தொடங்கியது. பின்னர், ஐரோப்பா அதே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இந்தியாவிடமிருந்து வாங்கத் தொடங்கியது. இதன் பொருள் அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கிறார்கள் என்பதுதான்," என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டார். இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார். "ஐரோப்பியர்கள் எப்போதும் யுக்ரேன் மக்களின் நலனைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், அவர்கள் யுக்ரேன் மக்களை விட வர்த்தகத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டியுள்ளனர்'' என்று கூறினார். பெசென்ட் இதற்கு முன்பும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தார். ஜனவரி 26 அன்று ஏபிசி நியூஸிடம் பேசிய அவர், "யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பாவை விட அமெரிக்கா அதிக தியாகம் செய்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது நாங்கள் 25 சதவீத வரி விதித்தோம். ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறது," என்று கூறினார். பட மூலாதாரம்,Chris J. Ratcliffe/Bloomberg via Getty Images படக்குறிப்பு,ஜேமிசன் கிரீர் 'இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம்' முன்னதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திடம் பேசுகையில், இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவை விட இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார். "இதுவரை இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்துள்ளேன். தெளிவாகச் சொல்லப்போனால், இதன் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெறுவது போல் தெரிகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்," என்றார். இந்தியா ரஷ்ய எண்ணெயை இன்னும் வாங்குகிறதா என்ற கேள்விக்கு கிரீர் பதிலளிக்கையில், "அவர்கள் இந்த திசையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய் பிடித்துள்ளது. எனவே அதை விட்டுக்கொடுப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது," என்று கூறினார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பட மூலாதாரம்,Prakash Singh/Bloomberg via Getty Images ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி, ''இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு" என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வர்த்தகத்தை ஒரு ராஜீய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இதுவே இந்த ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,Harun Ozalp/Anadolu via Getty Images படக்குறிப்பு,ஸ்காட் பெசென்ட் அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்தன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்ததால், அவர்கள் மீது வரி விதிக்கப்படும் என ஆரம்பத்தில் மிரட்டினார், ஆனால் பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கினார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. ஒட்டுமொத்தமாக, டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்காத வரிச் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது. உதாரணமாக, கார்கள் மீதான வரி படிப்படியாக 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்படும், அதே நேரத்தில் கார் பாகங்கள் மீதான வரி ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்கப்படும். மேலும், இந்த ஒப்பந்தம் சிறிய ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். இயந்திரங்கள் மீது 44% வரையிலும், ரசாயனங்கள் மீது 22% வரையிலும் மற்றும் மருந்துகள் மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும். 2024–25 நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருட்கள் வர்த்தகம் சுமார் ரூபாய் 11.5 லட்சம் கோடியாகவும், சேவை வர்த்தகம் ரூபாய் 7.2 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் முதல் நாளிலிருந்தே ஜவுளி, ஆயத்த ஆடைகள் மற்றும் உடைகள் மீதான வரி பூஜ்ஜியமாக இருக்கும் என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவிக்கிறது. ''இந்தச் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜவுளிச் சந்தைக்கான வாய்ப்பைத் திறந்துவிடும். இது கைவினைஞர்கள், பெண்கள், நெசவாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் தொகுப்புகளுக்குப் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.'' பிரதமர் நரேந்திர மோதி, இது உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் (ஐரோப்பா) மற்றும் 4-வது பெரிய பொருளாதாரம் (இந்தியா) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐரோப்பாவிற்கு 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ''இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்லும் சுமார் 99 சதவீத ஏற்றுமதிகள் இனி பூஜ்ஜிய வரி வரம்பிற்குள் வரும். அதேபோல், இந்தியா தனது 99 சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதிக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடி மற்றும் எளிதான அணுகலைப் பெறும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பயனடைவார்கள். ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படும். அதோடு, ஐரோப்பாவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு தங்குவதற்கான 9 மாத கால விசா கட்டமைப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளப்படுள்ளது.'' என தெரிவிக்கப்படுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20zy1x308wo
  19. தாத்தாக்களை… அடுத்த முறை எழுத்துபிழை இல்லாமல் எழுதவும்😂
  20. காரைநகர் வேலைக்குரிய தகவல்களை ஏராளன் திரட்டி கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன். கொடையாளியை நாளை நேரில் சந்திக்கிறேன்.
  21. புதிய மலசலகூடம் இனி கட்டுவது காரைநகரில் தான் அண்ணா.
  22. சரி அண்ணை. நன்றி அண்ணை, படிப்படியாக தொடருவோம்.
  23. கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு. எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது. கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது. மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும். மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும். ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும். வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும். வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”. புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும். Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள். பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான். சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும். ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது. மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும். என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  24. 30 Jan, 2026 | 11:52 AM யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு! | Virakesari.lk
  25. 30 Jan, 2026 | 04:46 PM யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk
  26. 30 Jan, 2026 | 05:03 PM (செ.சுபதர்ஷனி) வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள் நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது. இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர். அத்தோடு வாட்ஸ்அப் செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர். ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.