Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பாதுகாப்பு படையினரும் பாடசாலை மாணவ மாணவியருடன் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
  3. கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
  4. 04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
  5. 04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk
  6. கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 04 Feb, 2026 | 03:28 PM இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! | Virakesari.lk
  7. சாதாரண தமிழ் பொதுமக்கள் மட்டுமல்ல தேசிய தூண்களாக காட்டிக்கொண்ட பலரும் மகிழ்சசியாக வடகிழக்குகு மட்டுமல்ல தென்னிலங்கை சுற்றுலாவுக்கும் சென்று வந்ததை நானே பார்த்துள்ளேன் . ஏதோ சம்பந்தர் மட்டுமே மகிழ்சசியடைந்ததாக றீல் விடுகிறார்கள். 😂
  8. 04 Feb, 2026 | 03:44 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk
  9. 04 Feb, 2026 | 04:47 PM பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (3) சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது. அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்தைக் குட்டி அருகில் இருந்த மரத்தில் ஏறியதாகவும் குட்டிக்கு காவலாக தாய் சிறுத்தையும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், நாய்கள் அங்கிருந்து சென்றதும் சிறுத்தைக் குட்டி பாதுகாப்பாக மரத்தில் இருந்து கீழே இறங்கி, தேயிலைத் தோட்டத்தின் வழியாக தாயுடன் நடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக மரத்தில் ஏறிய சிறுத்தைக் குட்டி! | Virakesari.lk
  10. வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 05:42 PM இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்றி வைத்தார். இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசை முழக்கம், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மேலைத்தேய வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இதன்போது நடைபெற்றது. ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது. மேலும், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும் லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம், வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகா வித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பல வண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
  11. 04 Feb, 2026 | 05:55 PM “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு | Virakesari.lk
  12. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 11:12 AM இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய புதன்கிழமை (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/237785
  13. மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! Feb 4, 2026 - 05:44 PM மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது. எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cml7zo5a00007356n66zcofgo
  14. Today
  15. sonretodSp2753197 mai5tgm0m6tht76g49hcfm5191al559fm6t5hhm249 · அன்பான மனைவி ! அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்! மனைவி - பாத்திரம் கழுவ சொன்னனே? கழுவி விட்டீர்களா! கணவன் - இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே? மனைவி - சரி காய் வெட்டி விட்டீர்களா? கணவன் - அதுக்குள்ளதான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே ! மனைவி - சரி வெங்காயம் பூண்டு கட் பண்ணியாச்சா? கணவன் - அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே. மனைவி - சரி அரிசியாவது ஊற வைத்தாயா ! கணவன் - நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஸிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே! மனைவி - சரி அதையாவது செஞ்சிங்களா? கணவன் - டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக சொன்ன சொன்னாயே! மனைவி - சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா ! கணவன் - இ..ல்..ல.. மனைவி - சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க. கணவன் - காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான் எனக்கு டீ போட்டுட்டு இருக்கேன். மனைவி - ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!
  16. உலகம் எங்கும்... இன்னும் நிறைய சிப்பிகள் மூடியபடி உள்ளது. அவற்றிலும் நிறைய முத்துக்கள் இருக்கலாம். ஆனால்... அந்த முத்தை எடுக்க, அவர்கள் விடுகிறார்கள் இல்லை.
  17. சிப்பிக்குள் மூடியிருந்த முத்து ஒன்று வெளிப்பட்டுவந்து பரிசும் பெற்றது. வாழ்த்துக்கள்!!🙌
  18. இவர் அண்மையில் சொல்லி இருந்தார் , நேட்டோ இராணுவ நாவைகையின் போது லிபிய அரசின் தங்க காணாமல் போய்விட்டதாக. நேரடியாக மேற்கு நாடுகளை சுட்டவில்லை. அனல் , நர்\மறைமுகமாக சாடி இருந்த்தார் மேற்கு நாடுகள் பங்கு இருக்கிறது என்று. அதன் பின் இந்த கொலை.
  19. தமிழினத்தின் துன்பங்களுக்கு தீர்வுவரும், விடிவுவரும். அடுத்த பொங்கல், வருடபிறப்பு, தீபாவளி என்று ஆறுதல் சொல்லச் சம்பந்தரும் இல்லையே!😭
  20. தற்போதுள்ள சிறுவர்களின் அறிவும், திறனும் முதியோர்களிடம் இல்லை. ஆதாரம் இன்றுள்ள தமிழினத் தலைவர்கள். இது தெரிந்துதான் தலைவர் சிறுவர்களை நீதிபதிகளாக நியமித்தார்.
  21. @ரசோதரன் குரு தூக்க‌த்தில் இருந்தால் யாராவ‌து த‌ட்டி எழுப்பி விடுங்கோ😁...........இன்னும் இர‌ண்டு நாள் தான் இருக்கு....................
  22. எங்க‌டையல் டான்ஸ் ப‌ழ‌குவ‌திலும் சோச‌ல் மிடியாக்க‌ளில் பொழுதை க‌ழிப்ப‌தையே விரும்புகின‌ம் அண்ணா................ நீச்ச‌ல் ப‌ழ‌கி இருப்ப‌து எவ‌ள‌வு ந‌ல்லம் என்று ப‌ல‌ருக்கு தெரியாது.............. இந்த‌ சிறுவ‌வை பாராட்டியே ஆக‌னும்........................
  23. யாழ் மாவட்டத்தில் கழுதைகள் கூடாரம். சுதந்திரம் என்றால் என்னனவென்று புரியாது. கற்பூர வாசனையும் தெரியாது.
  24. "இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்!" - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! 04 Feb, 2026 | 02:09 PM காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் (4) அவர்கள் தமது போராட்ட பந்தலில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமலாக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள். அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். இன்று, வவுனியா நகரில், இந்த வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. இந்த அநீதியின் வேர்கள், சொல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது. காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை. சொல்லப்படாத உண்மை, பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்த தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்த பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகிறோம். எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/237803
  25. பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி Feb 4, 2026 - 09:00 AM நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாற்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது அதற்காக "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml7gzaqi04swo29nlnfz4jvf
  26. சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் Feb 4, 2026 - 01:20 PM நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cml7q97j404t3o29nppugd9gi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.