All Activity
- Today
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சென்ற ஜனாதிபதி தேர்தலில்….. சங்கு கூட்டணி தமிழன் அரியநேந்திரனுக்கு வாக்கு சேகரித்த போது, சுத்துமாத்து சுமந்திரன்…. சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த ஆள். இப்போ…. வர இருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு, தனக்கு வாக்குப் பிச்சை கேட்டு… சங்குடன் ஐக்கியமாகியுள்ளது சுத்துமாத்து சுமந்திரன். பச்சோந்தி ஓணான் கூட… இவ்வளவு விரைவாக தனது தோலின் நிறத்தை மாற்றாது. இவர்களின் பதவி வெறி பிடித்த அரசியல்… இனி தமிழ் மக்களிடம் எடுபடாது. சுத்துமாத்து சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால்…. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும், அனுர கட்சிக்கு விழுந்து, தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை… இலகுவாக வெல்லப் போகின்றது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளிக் கண்ணன் நிலையில்… சுத்துமாத்து சுமந்திரன் உள்ளார். அடுத்த செருப்படி தோல்விக்கு… இப்பவே ஆள் ரெடியாகி உள்ளார்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
ஐரோப்பிய நாடுகள் அலட்டிகொள்ளாமல் ஒரே ஒரு செக் மேட் மூவ் அவ்வளவுதான் ட்ரம் பல்டி அடிக்க காரணம் என்கிறார்கள் . அமெரிக்க கருவூல பத்திரங்களின் 12 டிரில்லியன் மதிப்பு மிக்கவை ஐரோப்பிய நாடுகளிடம் உள்ளன வெளியில் சந்தையில் இறக்கினால் டொலர் பெறுமதி ஆதால பாதாளத்துக்கு பாய்ந்து விடும் கடைசியில் Nauru island நிலைமைதான் அமெரிக்காவுக்கு மற்றைய நாடுகளின் கடனில் வாழும் அமெரிக்காவுக்கு இது ஓவர்தான் .
-
சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன்
https://www.facebook.com/reel/898422819799568 StreamableWatch AQNNIg0l_g47wc8oNDh2OLKnxUgGNuqgpnMldVsAgY-mLngy6PX...
- Yesterday
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
அமெரிக்காவின் பங்களிப்பை மறுக்க முடியாது… ஆனால் பேர்ள் ஹாபர் தாக்குதல் வரைக்கும்… அத்தனை வருடமாக தன்னம்தனியாக (சோவியத் ரஸ்யாவோடு ஒப்பந்தம்) நாஜிகளை பிரிதானியா எதிர் கொண்டது…, இல்லை எண்டால் அமெரிக்கா போரில் குதிக்க முதலே எல்லாம் முடிஞ்சிருக்கும்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
தம்பர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள்(அமெரிக்கா)இல்லாவிடால் எல்லோரும் ஜேர்மன் மொழியையும் ஒரளவு யப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில்பாதி உண்மை. ஐரோப்பா ஹிட்டலருக்கு கோழிக்குஞ்சு யானையைச் சாப்பிட்டால்தான் பசியாறும் என்று சம நேரத்தில் ரஸ்யாவுக்குள் போய் எல்லாப் பக்கமும்அடிவாங்கியது மாதிரி ட்ரம்ப் அடிவாங்கி விட்டார்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
நான் அப்பவே சொன்னேன் தம்பர் தனிமைப்படப் போறார் என்று இவ்வளவு சீக்கிரம் குத்துக்கரணம் அடிப்பார் என்று நினைக்க வில்லை.ஈயு>நேட்டோ நாடுகள் போட்டதுக்கே இப்படி என்றால் ரஸ்யா >சீனா எல்லாம் பின்னால் வெயிற்றிங்.அமெரிக்காவின் அதிபர் வாயில் இருந்து வரும்வார்ததைகள் எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். தமிழன் அப்பவே சொல்லி விட்டான். என்ன செய்வது மக்கள் தத்திகளைத் தெரிவு செய்து விட்டு அதன்பலன்களை அனுபவிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறார்கள்.
-
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
இவர்தானே ட்ரம்பை அப்பா என அழைத்தவர்????🤣
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
வீடு-சங்கு தேர்தல் கூட்டணியும் ஏமாற்று அரசியலும் முதலமைச்சர் பதவி ரெடி.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
கிந்தியும், சிங்களமும் ஒவ்வாமை உண்டு, மொழி தெரியாததனால் மட்டும் இல்லை, அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என நினைப்பார்கள் ( அந்த மொழிக்காரர்கள் இருதரப்பும், மோசமான கடந்த கால அனுபவங்கள்) எம்மவர்களே கூட எம்மவர்களுக்கிடையே பேசும் போது சிங்களத்தில் பேசுவார்கள் இன்னொரு மொழி தெரிந்திருப்பது நல்லதுதான் ஆனால் குறித்த இரண்டு பேர் மட்டும் சிங்களத்தில் பேசுவதனை பெருமையாக நினைப்பார்கள் (அதாவது அந்த மொழி தெரியாதவரை அந்த இடத்தை விட்டு போ என சொல்லாமல் சொல்வது போல ஒரு சபை நாகரிமற்ற செயல்). இரண்டாவது தூண்டல் காரணி உங்களது சித்தி பெரியாம்மா நகைசுவை கூட என்னை தூண்டியிருக்கலாம். நியாயம் மன்னிக்கவும், உங்கல் மேல் எந்த காழ்ப்புணர்வும் இல்லை.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
யாழ் என்று தனியாக வரும்போது அது யாழ் மாவட்டத்தைக் குறிக்கும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம் அதனால் கோஷான் கூறுவது போல முன்னோடி தனியாகவும் யாழ் இணைய உறவுகள் அல்லது உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் அடிப்படை சுகாதார வசதித் திட்டம் என்று கீழே உப தலைப்பாகவும் போடலாம் மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம் யாழ் இணைய நிர்வாகம் இதை ஏற்றுக் கொல்கின்றதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
-
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
தமிழன் என்பதை பெருமையாய் பறைசாற்றும் ரஹ்மான்… உலக தமிழர் மனதில் எப்போதும் வைரம்தான்… இவனுகள் எல்லாம் வருட கணக்கா முக்கிகிட்டு கிடக்க, அசால்டா ரெண்டு ஆஸ்கார கொண்டந்த சிங்கம் அவர். #ஹிந்தி தெரியாது போடா
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்லா இருக்கு. இரு ஆலோசனை கருத்துகள். யாழ் என்பது தேவைதானா? முன்னோடி என்ற பெயரே போதும் என நினைக்கிறேன். யாழ்.கொம் உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என்பதை subtitle ஆக போடலாம்? இதில் இந்த திரிக்கான இணையசுட்டியையும் சேர்க்கலாம்? ஏனையோர் கருத்துக்களையும் பார்ப்போம்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பனர் சரியா? ஏதும் திருத்தம் செய்யவேண்டுமா? @goshan_cheஅண்ணை, @valavanஅண்ணை, @வாத்தியார் அண்ணை மற்றும் உறவுகள் உங்கள் கருத்தைச் சொல்லுங்க.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
வீடு - சங்கு சந்திப்பு! 😂 🤣 எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வாம்! 😅 எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் ஆகியோர் சந்தித்தனர். அருவி செய்திகள்
-
பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள் ‘அதிக ஆபத்து’ பட்டியலில் - புதிய ஆய்வு எச்சரிக்கை
பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள் ‘அதிக ஆபத்து’ பட்டியலில் - புதிய ஆய்வு எச்சரிக்கை Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 01:18 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பீஜிங், டெல்லி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் “அதிக ஆபத்து” பட்டியலில் காணப்படுவதாகவும், உலகின் 100 மிகப் பெரிய நகரங்களில் பல கடுமையான நீர் நெருக்கடி (Water Stress) கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் 39 நகரங்கள் மிகவும் அதிக நீர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நெருக்கடி என்பது, குடிநீர் விநியோகம் மற்றும் தொழில்துறைகளுக்காக பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் அங்கு கிடைக்கக்கூடிய நீர் வளங்களை மீறிச் செல்லும் நிலையை குறிக்கிறது. காலநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை இதற்கான பிரதான காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். Watershed Investigations மற்றும் The Guardian இணைந்து மேற்கொண்ட வரைபட ஆய்வின் படி, பீஜிங், டெல்லி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், ரியோ டி ஜெனீரோ போன்ற நகரங்கள் மிகக் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதேபோல் லண்டன், பாங்கொக், ஜகார்த்தா ஆகிய நகரங்கள் “அதிக நீர் நெருக்கடி” கொண்ட நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. University College London (UCL) விஞ்ஞானிகள் நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த 20 ஆண்டுகளில் சில நகரங்கள் வறண்டு வருவதாகவும், சில நகரங்களில் அதிக ஈரப்பதம் உருவாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை, தெஹ்ரான், செங்சோ போன்ற நகரங்களில் கடும் வறட்சிப் போக்கு காணப்படுகின்றது. டோக்கியோ, லாகோஸ், கம்பாலா ஆகிய நகரங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. நீண்டகால வறட்சி நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பெருநகரங்களில் சுமார் 1.1 பில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு மாறாக, ஈரப்பதம் அதிகரிக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் தொகை சுமார் 96 மில்லியன் மட்டுமே உள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக வறட்சியை எதிர்கொண்டு வருவதுடன், குடிமக்களுக்கு நீர் வழங்க முடியாத “டே ஸீரோ” நிலைக்கு நெருங்கி வருவதாக எச்சரிக்கப்படுகிறது. வறட்சி தொடர்ந்தால் நகரம் முழுமையாக வெறுமையாகலாம் என ஈரான் அரசு கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது. இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மற்றும் இந்தியாவின் சென்னை நகரங்களும் இதே அபாய நிலையை எதிர்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், உலகம் தற்போது ‘நீர் திவாலாக்க நிலை’ (Water Bankruptcy) யில் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஐ.நா. நீர்சூழல் நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் கவெ மடானி, “காலநிலை மாற்றம் மட்டுமல்ல; மோசமான நீர் முகாமைத்துவமே இந்த நெருக்கடியின் பிரதான காரணம்” என்று தெரிவித்துள்ளார். உலக வங்கி குழுவின் தரவுகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் நீர் வளம் ஆண்டுக்கு 324 பில்லியன் கன மீற்றர் வீதம் குறைந்து வருகிறது. இது இந்தோனேசியாவின் மக்கள் தொகைக்கு தேவையான நீருக்கு சமமான அளவு எனக் குறிப்பிடப்படுகிறது. 2055 ஆம் ஆண்டுக்குள், இங்கிலாந்தில் பொதுக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினமும் கூடுதலாக 5 பில்லியன் லீற்றர் நீர் தேவைப்படும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் முகாமை எச்சரித்துள்ளது. பேராசிரியர் முகம்மது ஷம்சுத்துஹா, “நிலத்தடி நீர் ஒரு மறைந்துள்ள, காலநிலை மாற்றத்துக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட வளம். ஆனால் சரியான கண்காணிப்பு இல்லாமல் அதை பயன்படுத்துவது ஆபத்தானது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/236692
-
-
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள்
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள் Jan 22, 2026 - 07:44 PM இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் விலை சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் எனத் தூதுவர் மேலும் தெரிவித்தார். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை இன்று (22) சந்தித்து ஆசி பெற்ற போதே சீனத் தூதுவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkpj95lp04a4o29n9ggapu5a
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
நியூசிலாந்து டி20: வெற்றியோடு தொடரைத் தொடங்கியது இந்தியா பட மூலாதாரம்,Getty Images நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கியிருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணிக் கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் 3 ஓவர்களுக்குள்ளாகவே சஞ்சு சாம்சன், இஷன் கிஷன் இருவரும் அவுட் ஆகிவிட்டாலும், அபிஷேக் ஷர்மா தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 22 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி, முதலிரு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. முதல் ஓவரில் கான்வேவை அர்ஷ்தீப் வெளியேற்ற, அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்கச் செய்தார் ஹர்திக் பாண்டியா. நான்காவது வீரராகக் களமிறங்கிய கிளென் ஃபிலிப்ஸ், 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும், நியூசிலாந்து மறுபடியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3Ae70e39be-5a4b-418a-abda-209692567624#asset:e70e39be-5a4b-418a-abda-209692567624
-
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
'இந்தியாவின் வைரமாக போற்றப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் இன்று துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்' – ஒரு பார்வை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் முகமது ஹனீஃப் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் 22 ஜனவரி 2026, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியதற்காக இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொள்வோம் என்று ஏ.ஆர். ரஹ்மான் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஒரு காலத்தில் அவர் இந்தியாவின் வைரமாக போற்றப்பட்டார். உலகம் முழுவதும் அவரைப் பற்றி பேசப்பட்டது. பிலிம்பேர், தேசிய விருதுகள், கோல்டன் குளோப், ஆஸ்கார் என நீங்கள் எந்த விருதைப் பற்றிக் கூறினாலும், அவை எல்லாம் அவரைத் தேடி வந்த காலம் இருந்தது. இந்தியாவின் அடையாளமாக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்ந்தார். உலகம் முழுவதும் தனது இசையை ஒலிக்கச் செய்து, மக்களை நடனமாட வைத்தார். பின்னர் 'தாய் மண்ணே வணக்கம்' பாடி உலகெங்கும் இந்தியாவின் கொடியை ஏற்றினார். அந்த நேர்காணலில், பாலிவுட்டின் அதிகாரப் போக்கு மாறிவிட்டதாகவும், தற்போது தன்னிடம் வரும் பணிகள் குறைந்துவிட்டதாகவும் ரஹ்மான் கூறினார். இதற்குக் காரணம் மதவாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இப்போது அனைவரும் அவரைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர். 'வளர்த்துவிட்ட கையை கடிக்கிறீர்கள்' எனக் கூறுகிறார்கள். அவருக்கு 'துரோகி' என்ற முத்திரையும் குத்தப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் விளக்கமும் அளித்துவிட்டார். இருந்தும் 'இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்று சொல்லும் குரல்கள் அடங்கவில்லை. காணொளிக் குறிப்பு,"வேலையைத் தேடி நான் போக மாட்டேன்" - பிபிசியிடம் மனம்விட்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் 'பலர் கவனிக்கவில்லை' ஆனால் அந்த நேர்காணலில் அவர் கூறிய இன்னொரு விஷயத்தை பலர் கவனிக்கவோ நினைவில் வைத்துக்கொள்ளவோ இல்லை. ரஹ்மான் மும்பைக்கு வந்த காலத்தைப் பற்றி அதில் பேசியிருந்தார். மும்பைக்கு முதன்முறையாக வந்தபோது தனக்கு ஹிந்தி தெரியாது என்றும், தமிழர்களுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வது கடினம் என்றும் அவர் கூறினார். ஆனால் சுபாஷ் காய் சாஹிப் அவரிடம், 'இங்கு வேலை செய்ய விரும்பினால், இந்தி கற்க வேண்டும்' என்று விளக்கியுள்ளார். ரஹ்மான், தான் இந்தி கற்றது மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று உருது மொழியையும் கற்றேன் என கூறுகிறார். அதன்பிறகு, உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கானின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததால் பஞ்சாபி மொழியையும் கற்றதாகக் கூறுகிறார். இதைக் கேட்டபோது, இதுதான் ஒரு உண்மையான கலைஞனின் பண்பு என்று எனக்குத் தோன்றியது. நாடுகளை ஒன்றிணைக்க இதுவே சரியான வழி என்று எனக்குத் தோன்றியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு மனநிலைக்கும், ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும், ஒவ்வொரு துக்கத்திற்கும், ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும், ஒவ்வொரு இரங்கலுக்கும், ஒவ்வொரு சோகத்திற்கும் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் பாடல் இருக்கிறது. அது எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. மேலும், முன்பெல்லாம் கலைத் திறமை மிக்கவர்களால் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன, ஆனால் இப்போது எந்தத் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவுகள் பெரும் செல்வந்தர்களின் அலுவலக அறைகளிலும், கணக்காளர்களாலும் எடுக்கப்படுகின்றன என்று பாலிவுட் இயக்குநர்களான அனுராக் காஷ்யப், சுபாஷ் காய் மற்றும் ராம் கோபால் வர்மா போன்றவர்கள் கூறிய ஒரு கருத்தையும் ரஹ்மான் குறிப்பிட்டார். பாலிவுட்டில் ஒருவேளை மதவாதம் நுழைந்திருக்கலாம் என்றும், அரசியல், சமூகம் மற்றும் சொத்துச் சந்தை ஆகியவற்றில் அது நுழைந்திருக்கும்போது, பாலிவுட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் ரஹ்மான் கூறினார். அவரை நன்றிகெட்டவர் என்றும் துரோகி என்றும் அழைப்பவர்கள், "உங்கள் பெயர் அல்லா ரக்கா ரஹ்மான் என்பது எங்களுக்குத் தெரியும். 'வந்தே மாதரம்' பாட அனுமதித்ததற்கே நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இசையமைப்பதோடு வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். இவற்றைப் பற்றி பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?" என்று சொல்ல நினைக்கிறார்கள். மறுபுறம், ஏ.ஆர். ரஹ்மான் முன்பிருந்தது போல இப்போது இல்லை, அவரது இசை சலிப்பைத் தருகிறது, அவரது பாடல்கள் ஹிட் ஆவதில்லை என்று சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். ஆனால் ரஹ்மானின் உழைப்பு குறையவில்லை. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் மிகப்பெரிய திரைப்படத்திற்கும், பல சர்வதேசத் திரைப்படங்களுக்கும் அவர்தான் இசையமைக்கிறார். 'சம்கிலா' திரைப்படம் வெளியாகி அதிக காலம் ஆகவில்லை, அதற்கு ரஹ்மான்தான் இசையமைத்தார். அப்போது பஞ்சாபில் இருந்த ஒவ்வொருவரும் "மேன் ஹூன் பஞ்சாப், மேன் ஹூன் பஞ்சாப்" என்றுதான் பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் யாரும், "நீங்கள் ஒரு தமிழர் தானே, ஏன் பஞ்சாபி படத்திற்கு இசையமைக்கிறீர்கள்?" என்று கேட்கவில்லை. உங்களுக்கு "துரோகி, துரோகி" என்று கூச்சலிட வேண்டுமென்றால், தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் முதலில் ஒரு ஐந்து நிமிடம் அமைதி காத்து, ஏ.ஆர். ரஹ்மானின் ஏதோ ஒரு பாடலைக் கேளுங்கள். ஒவ்வொருவருக்கும் அவரது பாடல்களில் குறைந்தது ஒன்றாவது பிடித்திருக்கும். உங்களுக்கு அவரது ஒரு பாடல் கூடப் பிடிக்கவில்லை என்றால், பிறகு தாராளமாக உங்கள் வசைச்சொற்களை வீசுங்கள். இறைவன், ஏ.ஆர். ரஹ்மானையும் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rmme12pjpo
-
பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல
பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல Jan 22, 2026 - 05:41 PM தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற 'World Woman Davos Agenda 2026' நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அது பாலின அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதிகாரப் படிநிலைகளின் விளைவாகும். பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, நிறுவன மற்றும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkpevljx049uo29n2el9oqpt
-
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு; மூன்று பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 03:52 PM அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண்களும் ஆணொருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கார்கெல்லிகோ வாவி அமைந்துள்ள நகரில் இன்று வியாழக்கிழமை (22) அந்நாட்டு நேரப்படி சுமார் 4:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் எனவும், உள்ளூர்வாசிகள் உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குடும்ப வன்முறையால் இடம்பெற்றிருக்கலாம் இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உள்ளூர் கவுன்சிலுக்குச் சொந்தமான வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக செவன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள கார்கெல்லிகோ வாவி நகரத்தில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். கடந்த மாதம் சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/236716
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
கருத்து... கந்தசாமிகளை, இந்தப் பக்கம் காணோம். 😂 ஓ... எந்த முகத்துடன் இந்தப் பக்கம் வருவது என்ற கூச்சம் இருக்கத்தானே செய்யும். கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 22 Jan, 2026 | 07:41 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை COLOMBO STOCK EXCHANGE (GL 12) தலைவர் திமுது அபேசேகர, பிரதான நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மற்றும் சிரேஷ்ட உப தலைவர் குசல் நிசங்க ஆகியோர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/236731 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் நிதி நன்கொடை Published By: Vishnu 22 Jan, 2026 | 07:58 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, CORZENT EDGE (PVT) LTD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர குணசிங்க மற்றும் Cato Eliassen (Managing Director, Contracting Works) ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/236732
-
சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம்
சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சாலைகளில் தற்போது பகல் வேளையிலும் பலர் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அதேபோன்று, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் புல்வெளிகளில் பனி போர்த்தியது போன்று உறைபனியை காண முடிகிறது. ஜனவரி மாதம் முடிய இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. ஜனவரி 18ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ். இது கடந்த சில தினங்களில் சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை. அதே பகுதியில் ஜனவரி 20 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸ். இப்படி, கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், சில மாறுபாடுகள் இருந்தாலும் சராசரியாக 19-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியே உள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னை கூவம் ஆறு '20 டிகிரி அல்லது அதற்கும் கீழே' சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பரவலாகவே இத்தகைய குளிரான வானிலை நிலவிவருகிறது. ஜனவரி 20ம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை வேலூரில் 15.8, தருமபுரியில் 16.5, கோயம்புத்தூர் 18.8, திருச்சி 19, சேலத்தில் 18.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஊட்டியில் 6.8, கொடைக்கானலில் 6, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாகப்பட்டினத்தில் 19, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 19.4, சென்னை மீனம்பாக்கத்தில் 19.3 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த எண்களை உற்றுநோக்கினால், மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி அல்லது அதற்கும் கீழே இருப்பதைக் காணலாம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த டிசம்பர் மாத இறுதியில் சென்னை புறநகர் பகுதியில் எடுக்கப்பட்ட படம். ஜனவரி 20 அன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 24 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பின்படி, சமவெளி பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸ். மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டி20 உலகக் கோப்பை - 'இந்தியாவில் விளையாடப்போவதில்லை' என வங்கதேசம் அறிவிப்பு எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு கூட்டுக்கு பதிலடியாக இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்று சேர்கிறதா? End of அதிகம் படிக்கப்பட்டது தமிழகத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் ஜனவரி மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை என்னவாக இருந்தது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளை வைத்து ஒப்பிட்டோம். உதாரணமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த பத்தாண்டு கால குறைந்தபட்ச வெப்பநிலை எப்படி இருந்தது என்பதை கீழே உள்ள படத்தில் அளித்துள்ளோம். என்ன காரணம்? சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குளிர்ந்த வானிலை தொடர்வது ஏன் என, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டோம். "மேகமூட்டம் குறைவாக இருக்கும்போது தரையின் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் குளிர் அசாதாரணமானது அல்ல, பொதுவான ஒன்றே. ஆனால், கடந்த 5 ஆண்டு கால தரவுகளை பார்த்தால், இப்போது குளிர் அதிகமாக இருக்கிறது. அதற்கு முன்பு சென்னை உட்பட பல மாவட்டங்களில் இதைவிட குளிர் இருந்திருக்கிறது. வேலூர், தருமபுரியில் கடந்த சில ஆண்டுகளைவிட குளிர் அதிகமாக இருக்கிறது." என தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஊட்டி இது இயல்புக்கு மாறான குளிர் என கூற முடியாது என்ற பிரதீப் ஜானின் கருத்தையே மற்றொரு தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்தும் கூறுகிறார். "இதை இயல்புக்கு மாறான குறைந்த வெப்பநிலை என சொல்ல முடியாது. ஆனால், இரவு நேர வெப்பநிலை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இது புதிதல்ல. தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தான் எப்போதும் குளிர் அதிகரிக்க ஆரம்பிக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு திசையிலிருந்து காற்று வரும். கிழக்கு திசை காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். அப்போது மேகமூட்டமான சூழல் நிலவும் என்பதால், இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்காது. இப்போது வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட விடைபெற்றுவிட்டது. ஆனால் மேகமூட்டம் இல்லாததால் இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்கிறது." என்றார் இதே நிலை தொடருமா? ஜனவரி 22ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த சமயத்தில் லேசான மழை அல்லது மேகமூட்டம் ஏற்படும்போது, இயல்புநிலையிலோ அல்லது அதற்கு சற்று அதிகமான வெப்பநிலையோ நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த வார வியாழக்கிழமை டெல்லியில் குறைந்தபட்சமாக 2.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. வீடற்றவர்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். "மழை முடிந்த பிறகு வடதிசையிலிருந்து காற்று வீசும் என்பதால் இரவு நேர வெப்பநிலை மீண்டும் குறைய ஆரம்பிக்கும். இதன் போக்கு இப்படித்தான் இருக்கும்." என்கிறார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த். இதையே பிரதீப் ஜானும் கூறுகிறார். "ஜனவரி 25ம் தேதி வாக்கில் தமிழ்நாட்டில் பரவலாக ஓரிரு தினங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்த பிரதீப் ஜான், "அப்போது, இரவு நேர வெப்பநிலை அதிகரித்து பின்னர் மீண்டும் குறையக்கூடும்" என கூறியுள்ளார். என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இப்படியே வெப்பநிலை குறைந்துகொண்டே போகும் என சொல்ல முடியாது எனக்கூறுகிறார் அவர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய பாலச்சந்திரன் பிபிசியிடம் பேசுகையில், "வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் காரணமாக குளிர் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்றால், வடதிசை காற்றுடன் சேர்ந்து அது 10 டிகிரி செல்சியஸாக இருக்கும்." என்றார். தமிழகத்தில் குளிர் அலைகளின் தாக்கமா? பொதுவாக, குளிர் அலைகள் வட இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும். குளிர் அலை என்றால் என்ன என்பதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு வரையறையை வைத்துள்ளது. அதன்படி, மனித உடல் தாங்க முடியாத அளவிலான மிகக் குறைந்த வெப்பநிலையே குளிர் அலைகள் எனப்படுகிறது. அதன்படி, சமவெளி பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் நிலவும்போது அவை குளிர் அலைகள் என வரையறுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், தமிழகத்தில் தற்போது நிலவுவது குளிர் அலைகள் அல்ல. தமிழகத்தில் குளிரான வானிலை தற்போதுவரை தொடர்வதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா என பாலச்சந்திரனிடம் கேட்டோம். "காலநிலை மாற்றம் காரணமாக பல விஷயங்கள் நடக்கின்றன. 40-45 ஆண்டுகளில் இருந்த சூழல் இப்போது இல்லை. எனவே, வானிலை மாற்றத்தில் அதன் தாக்கம் இருக்கலாம். எனினும், பல ஆண்டுகளாக நிலையாக வானிலை மாறிவரும்போதுதான் அதை அறுதியிட்டு கூற முடியும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rm3k7nmvxo
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன் Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 04:06 PM பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக் காலத்திலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், தற்போது இது பிரித்தானிய அரசியல் நாட்காட்டியில் ஒரு வருடாந்த நிகழ்வாக நிலைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வில் பிரித்தானிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள், சமூக தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், அரச பணியாளர்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தலைமுறை தாண்டி பல துறைகளில் பிரித்தானிய சமூக வளர்ச்சிக்கு தமிழர்கள் வழங்கி வரும் பங்களிப்பை இந்த நிகழ்வு பிரதிபலித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது உரையில், இந்த நிகழ்வு அங்கீகாரத்தையும் புதுப்பிப்பையும் குறிக்கும் ஒன்றாகும் என தெரிவித்தார். “பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் திடநம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார். தனது பெற்றோர் இலங்கையில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியாவில் கடினமாக உழைத்ததாகவும், அந்தக் கதையே லண்டன் முழுவதும் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்குப் பொதுவான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தைப்பொங்கல் அறுவடையையும் நம்பிக்கையையும் குறிக்கும் திருநாளாகும் என அவர் குறிப்பிட்டதுடன், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழ் பழமொழி புதிய ஆண்டிற்கான புதுமையும் முன்னேற்றத்தையும் குறிக்கிறது என்றார். மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகை மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது அரசின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, போர் குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விதித்துள்ள தண்டனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236721