All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Live 2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup India 253/7 England (13.6/20 ov, T:254) 172/5 England need 82 runs in 36 balls. Current RR: 12.28 • Required RR: 13.66 • Last 5 ov (RR): 60/1 (12.00) Win Probability ENG 8.53% IND 91.47%
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்தும் தாங்கள் சழைத்தவர்கள் இல்லை என்று காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 40 பந்தில் 88 ஓட்டங்கள் எடுக்க வேணும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்தும் ஒரு பிடி பிடிக்குதே அண்ணை! சின்ன மைதானம் என நினைக்கிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
https://www.facebook.com/reel/1417236283055099
-
இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன?
'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபாரன் தகிசாதே பிபிசி பாரசீக சேவை 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது. தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர். இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன. "கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது நாங்கள் அனுபவித்ததை விட இப்போது நடப்பவை மிகவும் மோசமானவை" என்று கூறிய சலார், "வெடிப்புகளின் எண்ணிக்கை, அழிவு, இப்போது என்ன நடக்கிறது என்பது எல்லாமே நம்ப முடியாததாக இருக்கிறது" என்கிறார். சலார் தெஹ்ரானில் வசிக்கிறார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் முதல் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இரானியத் தலைநகரம் பல்வேறு கட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,EPA சமீபத்திய வான்வழித் தாக்குதல் ஒன்றை விவரித்த சலார், "வெடிப்பு அதிர்வுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை உலுக்கின. கண்ணாடி உடைந்து சிதறாமல் இருக்க நான் ஜன்னல்களைத் திறந்து வைத்தேன். வீடு முழுவதும் அதிர்ந்தது..." என்றார். மேலும், "ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போலத் தோன்றுகிறது. தாக்குதல்களின் அளவு மிக அதிகமாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். தெஹ்ரானில் வசிக்கும் பாபக் என்பவர், தாக்குதல்கள் தொடங்கியபோது மக்கள் உணவைச் சேமித்து வைக்க வெளியே செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார். கடந்த 12 நாள் போரை விட இப்போதைய தாக்குதல்கள் மிகவும் தீவிரமானவை என்றும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்குதல்கள் நடப்பதாக அவரும் உணர்ந்தார். "கடந்த முறை, வான் பாதுகாப்பு அமைப்பின் பதில் தாக்குதல் சத்தம் கேட்டபோது, தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிந்தோம். இப்போது வித்தியாசமாக உள்ளது. திடீரென்று எங்கோ ஒரு வெடிப்பு அதிர்வும் அழிவும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது" என்கிறார் பாபக். தெஹ்ரானுக்கு வடமேற்கே சுமார் 275 கிமீ தொலைவில் உள்ள ஜஞ்சானில் காவே வசிக்கிறார். "முதல் மூன்று நாட்களில், எங்கள் நகரம் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்பட்டது. போர் விமானங்கள் இடைவிடாது கடந்து செல்லும் ஒரு பகுதியில் நாங்கள் வசிக்கிறோம்," என்று காவே கூறினார். மேலும், வான்வழித் தாக்குதல்கள் நடந்த இடங்களிலிருந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புகைப் படலங்கள் எழுவதால், போரின் முதல் நாளுக்குப் பிறகு வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் காவே தெரிவித்தார். "ஒரே நேரத்தில் அழகாகவும் பயங்கரமாகவும் இருக்கும் ஒரு காட்சி இது" என்கிறார் காவே. பட மூலாதாரம்,Majid Saeedi / Getty Images படக்குறிப்பு,ஒரு வெடிப்பு ஏற்பட்ட பிறகு புகை மூட்டம் எழும்பும் காட்சியை, மலைச்சரிவிலிருந்து பார்க்கும் ஆண்கள் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் சலார் தனது நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைப் பற்றி, குறிப்பாகத் தனது தாய் மற்றும் தந்தையைப் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார். "நான் எனது பெற்றோரை வடக்குத் திசைக்கு அனுப்பி வைத்தேன்," என்று அவர் கூறினார். இருப்பினும் அங்கிருக்கும் ஆபத்தின் அளவு குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. "ஆனால் தெஹ்ரானில் உள்ள அவர்களது வீட்டை விட அது பாதுகாப்பானது" என்கிறார் சலார். அவரது பெற்றோரின் வீடு வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் பல ராணுவத் தளங்கள் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ளது. "எனது அம்மா மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவர் மிகவும் பயந்திருந்தார்," என்று கூறிய அவர், 1980-களில் நடந்த எட்டு ஆண்டுகால இரான்- இராக் போரின் போது அவர் அனுபவித்த எதையும் விட தற்போதைய தாக்குதல்கள் மோசமானவை என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், அதிகமான மக்கள் தெஹ்ரானை விட்டு வெளியேறுவதை சலார் காண்கிறார், இருப்பினும் இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. "எனது நண்பரின் பாட்டி நோய்வாய்ப்பட்டுள்ளார், அவர்களால் அவரை இடமாற்றம் செய்ய முடியாது." காவே தானும் தனது நண்பர்களும் தங்களது வீடுகளுக்கும் இடையே மாறி மாறிப் பயணம் செய்து வருவதாகக் கூறினார். "ஒரு நண்பரின் வீட்டிலிருந்து வெளிப்பகுதியை அதிகம் பார்க்க முடியாது என்பதால், அது ஒருவித மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வையும் தகவல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வையும் உருவாக்குகிறது. உயிர்பிழைக்கப் போராடுவதோடு சேர்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது பேணுவதும், நம்பகமான செய்திகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதுமே எங்களது மிகப்பெரிய கவலையாக உள்ளது" என்று அவர் கூறினார். போரின் முதல் நாளில் அவரது இணையத் தொடர்பு நண்பகலில் துண்டிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிடைத்தது. "என்னால் எப்போதெல்லாம் இணையத்தில் இணைய முடிகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாத இரானுக்கு வெளியே இருக்கும் நண்பர்களுக்கு, தகவல்களை அனுப்ப முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். காவே மற்றும் சலார் இருவரும் விபிஎன்-களை பயன்படுத்துகின்றனர். இவை இரானிய அரசாங்கத்தால் முடக்கப்பட்ட இணையதளங்களை அணுக அவர்களுக்கு உதவும் சேவைகள். ஆனால், அதுவும் எளிதாக இல்லை. "இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. விபிஎன் மூலம் என்னால் எப்போதாவதுதான் இணைய முடிகிறது. அதுவும் பொதுவாக நண்பகல் வேளையில்தான்" என்று சலார் கூறினார். பட மூலாதாரம்,BBC / Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தாக்குதல் நடந்த பிறகு, மீட்பு பணியாளர்கள் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்கின்றனர் குறுஞ்செய்தி மூலம் வரும் எச்சரிக்கைகள் "ஒவ்வொரு நாளும் அவர்கள் (இரானியப் பாதுகாப்புப் படைகள்) குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்புகிறார்கள், நாங்கள் வெளியே சென்றால் எங்களை மிகக் கடுமையாகக் கையாளுவோம் என்று எச்சரிக்கிறார்கள்" என்று சலார் கூறினார். "உங்களில் யாராவது வெளியே வந்து போராட்டம் நடத்தினால், 'உங்களை இஸ்ரேலியக் கூட்டாளிகளாகக் கருதுவோம்' என்று ஒரு செய்தி வந்தது" என அவர் குறிப்பிட்டார். கீழ்ப்படியாத எவரும் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதை அந்தச் செய்தியின் தொனி உணர்த்துவதாக அவர் கருதுகிறார். மக்கள் பொருளாதாரா ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர். "ஜனவரி மாதம் ஏற்கனவே கடினமாக இருந்தது" என்கிறார் பாபக். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அதிகாரிகளால் இணையம் முடக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஆண்டின் தொடக்கத்தில் பணிக்குச் செல்வது நிறைய பேருக்கு கடினமாக இருந்தது. "அரசு ஊழியர்கள் போன்ற மாதச் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர, பலரால் குளிர்காலத்தில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இது பல குடும்பங்களைப் பாதித்துள்ளது." பட மூலாதாரம்,supplied அதி உயர் தலைவரின் மரணம் அன்றாட ஆபத்துகள் மற்றும் பிரச்னைகளுக்கு மேலாக, இந்தப் போர் தங்களது நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தத்தை குறிக்கும் என்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சனிக்கிழமையன்று நடந்த வான்வழித் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அவர்கள் அதுகுறித்து சிந்தித்து வருகின்றனர். "நாங்கள் முதலில் அதை நம்பவில்லை" என்று கூறிய காவே, "அந்தத் தருணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் எப்போதும் கற்பனை செய்திருந்தேன், ஆனால் அப்படி இருக்கவில்லை," என்றும் கூறினார். இதுகுறித்துப் பேசிய சலார், "ஒரு தனி நபரின் மாயையாலும் பைத்தியக்காரத்தனத்தாலும், எனது வாழ்நாளின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளும், என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். ஆனால் அவர் மட்டும் ஒரே நொடியில் அகற்றப்பட்டுவிட்டார் என்ற எண்ணம் எனக்கு உண்மையான கோபத்தை ஏற்படுத்தியது." "அவரது மரணச் செய்தி இரவு 10:30-11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் உற்சாகக் குரல்களுடன் கூடிய ஆரவாரத்தைக் கேட்க முடிந்தது," என்று தெரிவித்தார். மேலும், "நான் அத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் சூழல் மிகவும் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து நடந்து வரும் போர் மற்றும் இரானில் நிலவும் கடுமையான பாதுகாப்புச் சூழல் காரணமாக, காமனெயி மரணம் குறித்த பரவலான எதிர்வினையை கணிப்பது சாத்தியமில்லை. சில மக்கள் கொண்டாடுவதற்காகத் தெருக்களில் இறங்கினர், மற்றவர்கள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட பொது துக்க ஊர்வலங்களில் இணைந்தனர். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் மையப்பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பின் அழிக்கப்பட்ட கட்டடங்களை பார்வையிடும் காவல்துறையினர் எதிர்காலம் குறித்த பார்வை இந்தப் போர் அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது நாட்டிற்கோ எத்தகைய அர்த்தத்தைத் தரும் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. "எங்களால் முன்பு போல இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்ற சலார், "பலர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்" எனக் குறிப்பிட்டார். மேலும், இரானின் முன்னாள் அரச குடும்பத்துடைய மகனின் ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு, "வெளிநாடுகளில் இருப்பவர்கள், குறிப்பாக முடியாட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள், உண்மையில் நாங்கள் எதை அனுபவிக்கிறோம் என்பதை அறியவில்லை" என்று கூறிய அவர், "தாக்குதல்களை இன்னும் சரியாகத் தொடங்கவில்லை என்று டிரம்ப் கூறி வருகிறார். வேறு எதை அல்லது எப்படி தாக்க போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார். "நான் அடிக்கடி வெளியே செல்கிறேன். பக்கத்துக்கு வீட்டாருடனும் கடைக்காரர்களுடனும் பேசுகிறேன்," என்று கூறிய அவர், "எல்லாவற்றிற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் நம்புகிறார்கள். போர் நீண்டதாகவோ அல்லது ஆபத்தானதாகவோ மாறும் என்று அவர்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்கவில்லை" என்கிறார். அதேபோல், "நாங்கள் நினைத்தது போல இந்தப் போர் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது என்று நான் உணர்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். "ஆனாலும், எனது நம்பிக்கை குறையவில்லை, சொல்லப்போனால், அது ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது" என்ற அவர், "ஒரு கடினமான அறுவை சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் வலியை முழுமையாக உணர்ந்து, அதைச் செய்து கொள்ளத் தீர்மானித்த ஒரு முதியவரைப் போல நான் உணர்கிறேன்" மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், "இந்த 'அறுவை சிகிச்சைக்குப்' பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் இதைச் செய்யாவிட்டால், நிச்சயமாக இதைவிட மோசமான ஒன்று நடந்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." "குறைந்தபட்சம் இந்த வழியில், வாழ்வதற்கும் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பிபிசி பாரசீக சேவை என்பது பிபிசி நியூஸின் பாரசீக மொழிச் சேவையாகும். இது இரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டாலும் அல்லது தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் - உலகம் முழுவதுமுள்ள 24 மில்லியன் மக்களால் பெரும்பான்மையாக இரானில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன?
-
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
புதிய பார்வை. பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் இங்கே இனம் மதம் சார்ந்து தூவும் விசம் கண்டிக்கத்தக்கது 😡
-
ஏறாவூரில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்
கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம் 05 Mar, 2026 | 06:42 PM மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர். இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது. வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர். அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
(இது பொதுவான பதிவு) தனிப்பட்ட அடிப்படையில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீங்கள் கவனிக்கவில்லை போலும். என்னுடைய எல்லா பதிவுகளிலும் ஒரு பக்கம் பார்ப்பது இல்லை. மற்ற பக்கத்தையும் பார்த்தே. மற்றது, உணர்ச்சிகள் அற்ற ஆய்வின் / தரவின் அடிப்படையிலேயே எனது பதிவுகள். அந்த தலைவரை பற்றி சொல்வதற்கு இங்கே எவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அது சரி, ஹாமெனி கிருமி என்றால், உங்களக்கு ஏதாவது தீங்கு செய்தாரா? ( மேற்கு சொல்லும் எள் என்பதற்கு எண்ணையாக ஹாமெனி மாறி இருந்தால், ஹாமெனியின் வழியாக அல்லா இரான் மக்களுக்கு தேனும், பாலும் கொடுத்து , காணாது என்று அல்லா அமிர்தம் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று மேட்ற்குபிரச்சாரம் செய்து இருப்பார்கள். (அனால், அதையும் கூட நான் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்)) எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்களு க்கு அவர் உயரானவர். உ.ம். இரானின் இறந்த ஹாமெனி நீங்கள் சொல்லும், மேற்கு பிரச்சாரம் சொல்லும் கிருமி என்றால், எப்படி குண்டு வீச்சுக்கு மத்தியிலும் 1000 கணக்கில், பல்வேறு நகரங்களில் கூடுகிறது அஞ்சலி, இறுதி மரியாதைக்காக? அனால், படத்தை பார்த்தால் அது 50, 000 கணக்கில். இதுவே தகுதி அவர் தலைவர் என்பதற்கு. உங்களின் பதிவு, மேற்கு பிரச்சாரத்தை பொதுவாக ஏற்றுக்கொள்ளும், அல்லது அதனை கேள்விக்கு உள்ளாக்காதது நீங்கள் சொல்வதின் படி, மேற்றகில் உள்ள, வேறு நாடுகளுக்கு'பிடிக்காத தலைவர்களை போட்டு தள்ளலாம் என்ற கருத்தும் உருவாக இடம் இருக்கிறது. விவிலிய பிரளய கிருமி என்பது கூட ஆய்வு / தரவின் அடிபடையில் அமைந்தது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இன்று காரைநகர் ஊரி, கொட்டப்புலம் திரு அப்புத்துரை செல்லத்தம்பி அவர்களின் வீட்டிற்கு எமது யாழிணைய உறவு @வாத்தியார் அண்ணை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். சிறிய தற்காலிக குடிசை போன்ற வீட்டில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என்று திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் கூறினார். தற்போது 2009 முன் திருமணம் முடித்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் பின்பு திருமணம் முடித்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் கிடைக்கும். 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டத்தை அந்தப்பணத்தில் வீட்டுத்திட்டத்தை முடிக்கமுடியாது என்பதால் பலரும் வேண்டாம் என மறுக்கிறார்களாம். வாத்தியார் அண்ணை கிராமசேவகரிடம் மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர் கதைப்பதாக கூறினார்.- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இன்று வெல்லும் 😀 ஆனால் இறுதிப் போட்டியில் சறுக்கும்🤪- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
India vs England, 2nd Semi-Final at Mumbai, T20WC, Mar 05 2026 - Live Scorecard Innings break 2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup PrevNext India (20 ov) 253/7 England England chose to field.Stats view Current RR: 12.65 • Last 5 ov (RR): 76/4 (15.20)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த மைதானத்தில் இங்கிலாந்து 229 ஓட்டங்களை கலைச்சுப் பிடிச்சிருக்காம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் 30 பந்து இருக்கு. 240 அடிப்பார்களா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாஞ்ஜு ஆடிவிட்டுப் போட்டார். என்ன ஒரு ஆட்டம். அடி பொலி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தேவதைகள் இறக்கைகளோடேயே நம் மத்தியில் இருக்கிறார்கள். சில வேளை நமக்குத்தான் அந்த இறக்கைகள் தெரிவதில்லை.- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
Necrophilia- இதைப் பற்றி நிழலி பல வருடங்கள் முன்னர் ஒரு திரியில் குறிப்பிட்ட தகவல் நினைவுக்கு வருகிறது. இலங்கையில் இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தான் பிண அறைகள் நோயாளிகள் விடுதிகளை விட பாதுகாப்பாகப் பேணப் படுகின்றன. உரிய அனுமதியில்லாத எவரும் உள் நுழைய முடியாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
111-1 சாஞ்ஜு ஆடிக்கொண்டிருக்கிறார். ஆடியேகொண்டிருக்கிறார்.- சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்! 05 Mar, 2026 | 05:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. நாங்கள் எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இது எமது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த 6 நாட்களாக தேடப்பட்டனர். இந்நிலையில் இந்திய கரையோர பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த பல நாட்களாக இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த மீனவர்களின் தற்போதைய நிலைமை என்ன? ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்? என்ற விடயங்கள் தெரியவந்த பின்னர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்போம் என்றார். மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!- "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு
பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர 05 Mar, 2026 | 01:52 PM அபிலாஷனி லெட்சுமன் நரம்பியல் துறை பற்றிய உலகளாவிய குறிப்புகள் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய 'எட்வர்ட் ஸ்மித் பாபிரஸில்' (Edward Smith Papyrus) காணப்பட்டாலும், இலங்கையர்கள் பண்டைய காலத்திலிருந்தே இது குறித்த ஆழமான அறிவைக் கொண்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர தெரிவித்தார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19-வது வருடாந்த மாநாட்டில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர இலங்கையின் நரம்பியல் துறை கடந்து வந்த வியக்கத்தக்க வரலாற்றுப் பாதை குறித்து விசேட உரை நிகழ்த்திய போதே இதனை தெரிவித்தார். மனித மூளையை "சிக்கல்களின் பேராலயம்" (Cathedral of Complexities) என வர்ணித்துத் தொடங்கிய அவரது உரை, இலங்கையர்களின் பண்டைய வைத்திய அறிவை உலகிற்குப் பறைசாற்றியது. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வைத்தியரான மன்னர் புத்ததாச, 'சாரார்த்த சங்கிரஹ' எனும் விரிவான மருத்துவ நூலைத் தொகுத்தார். 6-ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆவணமான மகாவம்சத்தில், மன்னர் புத்ததாசவினால் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மூளை அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் நூற்றாண்டில் மிகிந்தலையில் (Meen Kale) அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் இடிபாடுகள், அங்கு பக்கவாதம் (Paralysis) போன்ற நோய்களுக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. அங்கு கண்டறியப்பட்ட மருந்துத் தோணிகள் (Medicinal Troughs) இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் நவீன நரம்பியல் துறைக்கான உத்தியோகபூர்வமான ஆரம்பம் 1951-ம் ஆண்டு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 1951-ம் ஆண்டு இலங்கையின் முதல் நரம்பியல் நிபுணராக வைத்தியர் ஜோர்ஜ் செல்வராஜன் அட்னவெல் (Dr. George Selvarajan Atnavel) நியமிக்கப்பட்டார். கொழும்பு பொது வைத்தியசாலையின் 44-வது வார்டில் அவர் தனது பணிகளைத் தொடங்கினார். அக்காலத்தில் நரம்பியல் சோதனைகளுக்காக 'நீ ஹேமர்' (Knee hammer) மற்றும் 'ஒப்தல்மோஸ்கோப்' (Ophthalmoscope) போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அவர் கையாண்ட தனித்துவமான கை சமிக்ஞைகள் பற்றித் தாதியர்கள் இன்றும் நினைவு கூர்வதாக பேராசிரியர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வைத்தியர் அட்னவெல் 1972-ல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, வைத்தியர் ஜகத் பி. ஜே. செகல் (Dr. Jagat P. J. Sehgal) நரம்பியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அவர் வார்டுகளைப் புனரமைத்து, நரம்பியல் துறைக்கான பிரத்தியேக கட்டமைப்பை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து வைத்தியர் பி. டி. டி. செகல் உள்ளிட்ட பல நிபுணர்கள் இத்துறையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றனர். பண்டைய மன்னர்களின் மருத்துவச் சாதனைகள் முதல் நவீன நிபுணர்களின் அர்ப்பணிப்பு வரை, இலங்கையின் நரம்பியல் துறை உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக வளர்ந்துள்ளதை பேராசிரியர் சராஜி விஜேசேகர தனது உரையில் உறுதிப்படுத்தினார். பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் ; யுவதிக்கு நீதிக்கோரி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 05:16 PM டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி இரண்டாவது நாளாகவும் நீதிக்கோரி இன்று வியாழக்கிழமை (05) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எபோட்ஸ்லி,புலோரன்ஸ்,மாஸ்க்,மொன்டிபெயார்,லெதண்டி மற்றும்பன்முர் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 500கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். டிக்கோயா நகரில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், டிக்கோயா நகரிலிருந்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலை வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. பதாதைகள் ஏந்தியவாறு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டதால் வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. அட்டன் ஏபோட்ஸ்லீ தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் திகதி 23 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, அவரது சடலம் அதே நாளில் மாலை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டது. பின்னர், பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்தின் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று சிற்றூழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்றையதினம் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கையால் தங்களது சேவைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலையின் வழமையான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஸ்ஸங்க கொடமுன தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார். மேலும், மக்களின் ஆர்ப்பாட்டத்தை கருத்தில் கொண்டு அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களிடையே பரவியுள்ள தவறான தகவல்களால் இந்த நிலைமை உருவாகியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்பவம் தொடர்பான சாட்சிகள் கிடைத்தால் சட்டத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதன் பின்னர் வைத்தியசாலை வளாகத்தைச் சூழ்ந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் ; யுவதிக்கு நீதிக்கோரி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்- காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்! சர்வதேச ‘அரசியல்’ பின்புலம் பாரதி ஆனந்த் Updated on: 04 Mar 2026, 6:54 pm 3 min read “ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில், மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதாகும்.” - இது காமேனி படுகொலை தொடர்பாக இந்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுப்பிய கேள்வி. இந்தியாவின் இந்த மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அவற்றை சற்று தெளிவாகப் பார்ப்போம். 1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2017-ல் இஸ்ரேலுக்கு மோடி சென்றார். அதேபோல், 2018-ல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை மோடி இந்தியாவுக்கு வரவேற்று உபசரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, “இஸ்ரேலுடன் இந்தியா எப்போதும் உறுதிபட நிற்கும்.” என்று பேசினார். அந்த அடிப்படையில் பார்த்தால், பிராந்திய ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் வழக்கத்திலிருந்து விடுபட்டு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது எனலாம். இஸ்ரேல் தாக்குதல், ஈரானின் பதில் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்களிடம் பேசிய மோடி, ஈரான் தலைவர்களிடம் பேசவில்லை. மேலும், “இந்த இக்கட்டான சூழலில் இஸ்ரேல், யூதர்களுக்கு ஆதரவாக மோடி இருப்பதற்கு நன்றி” என்று மோடி தொலைபேசி உரையாடலுக்கு ரியாக்ட் செய்திருந்தார் நெதன்யாகு. 2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவு மங்கி வருவதும், இந்தியாவின் மவுனத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்க பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் 2018 முதலே இந்தியா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிட்டது. 2018-ல் இந்தியா - ஈரான் இடையேயான வர்த்த மதிப்பு 17 பில்லியன் டாலர் என்றளவில் இருந்து 2025-ல் இது வெறும் 1.68 பில்லியன் என்றளவுக்கு சரிந்துள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் முதலீடு செய்வதையும் இந்தியா கைவிட்டுவிட்டது. சபாஹர் துறைமுகம் மேலும், ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகப் பணிகளை இந்தியா மேற்கொள்ள அமெரிக்க அளித்த தற்காலிக தடை நீக்கமானது ஏப்ரலுடன் முடிவடைகிறது. அதனால் அங்குள்ள ஷாஹித் பெஹெஸ்தி முனையத்தை கையாள்வதை இந்தியாவும் அத்துடன் முடித்துக் கொள்ளும். இப்போது ஏற்பட்டுள்ள மோதலில், சபாஹர் துறைமுகத்தின் கோனார்க் விமான நிலையத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் பதம்பார்த்துள்ளன. இத்தகைய சூழலில், ஈரானுடனான கடைசி பிணைப்பைக் கூட இந்தியா துறக்கும் நிலையில்தான் இருக்கிறது. 3. மூன்றாவது, இந்தியா - ஈரான் இடையேயான அரசியல் பிணக்குகளைக் காரணமாக சுட்டிக் காட்டலாம். 1994-ல், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் காஷ்மீர் பற்றி இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை பாகிஸ்தான், அரபு நாடுகளுடன் சேர்ந்து ஈரானும் புறக்கணித்தது. 2017-ல் மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையைப் பற்றி காமேனியின் விமர்சனம் அரசு விரும்பத்தக்கதாக அமையவில்லை. அதேபோல், 2019-ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்தான பின்னர் டெல்லியில் 2020-ல் நடந்த கலவரத்தை, ‘இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலைகளுக்கான சாட்சி’ என்று காமேனி விமர்சித்திருந்ததும் ஒரு கசப்பனுபவம். 4. காமேனி படுகொலை மீது இந்தியாவின் மவுனத்துக்கு, வளைகுடா உறவில் இந்தியா சமரசம் செய்து கொள்ள விரும்பாததையும் பட்டியலிடலாம். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள எண்ணெய் வளங்கள் சார்ந்த கட்டுமானங்களை குறிவைத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் குறுகிய பயணமாக டெல்லி வந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தச் சூழலில் ஈரானை ஆதரிப்பது என்பது வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் சுமார் 1 கோடி இந்தியர்கள் பாதுகாப்பை இழக்க முடியாது. ஈரானில் வெறும் 5000 இந்தியர்களும், இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்களுமே உள்ளனர். இந்த ஒப்பீட்டை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததால், இந்தியா கடந்த சில மாதங்களாக வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது ஈரானை ஆதரிப்பது எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 5. கடைசியாக, நடுவில் கொஞ்சம் வாடிப்போய் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள இந்திய - அமெரிக்க உறவு. இந்தியாவுக்கு விதித்த இறக்குமதி வரிகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் இந்தியாவைச் சேர்த்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளுக்காக அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளது. இருப்பினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் பல வாரங்களுக்கு தொடரக்கூடும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகளை ஈரானுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ஈரானுக்கு ஆதரவாக இந்தியா பேசுவதில் அதை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், உலகளாவிய தெற்கு கொள்கையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு புதுடெல்லி பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இதில் ஈரானும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த இரு நாடுகளும் எதிரெதிராக உள்ளன. இந்தச் சூழலில் யார் பக்கம் பேசுவது என்பது இந்தியாவுக்கு நெருக்கடி. ஆகவே, இஸ்ரேலுடனான நெருக்கம், ஈரானுடனான மங்கிப்போன உறவு, அமெரிக்காவின் அழுத்தங்கள், காமேனியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் உடன் இந்தியா வலுப்படுத்தி வரும் உறவு ஆகியனவற்றை காமேனி படுகொலையில் இந்தியா காட்டும் மவுனத்தின் காரணிகளாக புரிந்துகொள்ளலாம். உறுதுணைக் கட்டுரை: ‘தி இந்து’ ஆங்கிலம் காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!- "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு
"இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் 05 Mar, 2026 | 01:44 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட உலக பக்கவாத அமைப்பின் (WSO) தலைவர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், இலங்கைக்கும் தனக்குமான உறவு மற்றும் பக்கவாத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைக்கு வரும்போதெல்லாம் எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. என்னிடம் பலர் இதுதான் உங்களது முதல் வருகையா எனக் கேட்கிறார்கள். ஆனால், எத்தனை முறை இங்கு வந்துள்ளேன் என்பதை எண்ணுவதே எனக்குக் கடினமாக உள்ளது. அவுஸ்திரேலியாவை எனது இரண்டாவது வீடாகக் கருதினேன், ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நான் அங்குச் சென்றதை விட அதிகமுறை இலங்கைக்கு வந்துள்ளேன். இப்போது அவுஸ்திரேலியாவை விட இலங்கையே எனது இல்லமாகத் தோன்றுகிறது மாநாட்டின் கருப்பொருளான "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) குறித்துப் பேசினால், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விதிமுறைகளைத் தாண்டி, நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானமும் அனுதாபமுமே (Empathy) மிக முக்கியமானது. நரம்பியல் துறையானது தற்போது டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் துல்லியமான மருத்துவம் (Precision Medicine) ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது. உலகளவில் பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் ஊனங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நிகழ்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிக இளம் வயதிலேயே மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இது குடும்பங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக அமைகிறது. இலங்கை நரம்பியல் நிபுணர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சில முக்கிய திட்டங்களாக ஆறு நாடுகளில் முன்னெடுக்கப்படும் பக்கவாத சிகிச்சை திட்டங்களுக்கு உலக பக்கவாத அமைப்பு நிதியுதவி வழங்கி வருகிறது. நரம்பியல் துறையில் அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், சுமார் 100 நிபுணர்களுக்கு இரண்டு ஆண்டுகால தீவிரப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு, அவசர சிகிச்சை மற்றும் நீண்டகாலப் புனர்வாழ்வு (Rehabilitation) ஆகிய மூன்று நிலைகளிலும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கம். உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சேவைகளை இலங்கையில் வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கு (ASN) தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். "இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் - ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.