All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை தென்னாபிரிக்கா வெல்லும் என கணித்த 5 பேரும் கிரிகெட் மேதைகள் என்பதை நாளைய போட்டி முடிவு உறுதி செய்யுமா 😂. நாளை இந்தியா வென்றால் எனக்கு இங்கும், பின் அரையிறுதி கணிப்பிலும் புள்ளிகள் வரும். ஆனால் இந்தியா தோற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தோற்பதற்கான தியாகமா என் புள்ளிகள் போகட்டும் 😂.
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உதட்டோர மச்சம் அதிஸ்டத்தின் அடையாளம் என்கிறது சாமுத்ரிகா இலட்சணம். திரிசாவுக்கு முகத்தில் கீழ் உதடு நாடிக்கிடைப்பட்ட பகுதியில் சின்னதாக ஒரு மச்சம் உள்ளது. (எவ்வளவு இன்னெசெண்ட் நான் என்பதை இந்த பதிலை பார்த்து புரிந்து கொள்ளலாம்😂).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 01 மார்ச் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, ஸிம்பாப்வே (X2) எதிர் தென்னாபிரிக்கா (X4) ZIM எதிர் SA ஐந்து பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனினும் ஒருவரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 17 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் @vasee இப்போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ NZ புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் AUS வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் AUS வீரப் பையன்26 AUS சுவி AUS கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் AUS எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா AUS நிலாமதி AUS நந்தன் AUS இப்போட்டியில் தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா? 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், இந்தியா (X1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3) IND எதிர் WI அனைவரும் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! அத்தோடு இப்போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் IND வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் IND அல்வாயன் IND ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜயை.... "தற்குறி" என்று, போனவன் வந்தவன் எல்லாரும் பேசிக் கொண்ட நிலையில், அதையும் தாங்கிக் கொண்டு கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்க.. திடீரென்று "சீனுக்கு வந்த திரிஷாவுக்கு" அடித்தது யோகம். 😂 இதனை திரிஷா கூட... எதிர் பார்த்திருக்க மாட்டார். 🤣 திரிஷாவுக்கு... எங்கோ நல்ல இடத்தில், மச்சம் உள்ளது. 🙂
-
"மூன்று கவிதைகள் / 27"
"மூன்று கவிதைகள் / 27" 'முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ?' முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ விழிநீரைத் துடைத்து பேரின்பம் பொழியாயோ தனிமையின் துயரம் போக்கிட வாராயோ கனவினில் ஏனோ கவலைகள் தந்தாயோ பிரிவினில் வாடும் நெஞ்சினைப் பாராயோ அருகினில் வந்து ஆறுதல் சொல்லாயோ இதயத்தின் கதவைத் திறந்து காட்டாயோ காதலின் மொழியை கனிவுடன் சொல்லாயோ வாழ்நாள் முழுதும் என்னுடன் வாழாயோ நிழலெனத் தொடர்ந்து துணையாய் இருப்பாயோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................................. 'புகைப்படக் கவிதை' கீழடி சொல்லுதடி தமிழரின் இருப்பை கேளடி வரலாற்றின் ஆழத்தின் தொன்மையை மீட்டிடு பழம்பெருமை மண்ணின் மாண்பினை போற்றிடு உலகிற்கு எமது மேன்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'காத்து நிற்பதிலும் ஒருசுகம் உண்டு' காத்து நிற்பதிலும் ஒருசுகம் உண்டு காணப் பழகுவதிலும் ஒருமகிழ்வு உளது பூத்துக் குலுங்கும் மலரினைப் போலே காலம் முழுவதிலும் அன்பினைத் தாராய்! கண்ணின் இமைபோல் உன்னைக் காத்திடுவேன் மண்ணின் மணம்போல் மணந்து நிற்பேன் வாழும் காலம் உன்னுடன் நடப்பேன் ஆளும் அன்பில் இணைந்து வாழ்வேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2063 ["மூன்று கவிதைகள் / 27" https://www.facebook.com/groups/978753388866632/posts/34051119214536623/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 118 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 118 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகம், 1877-இல் வெளியாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1879 ஆம் ஆண்டில் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை மொழிபெயர்த்தார் என்பதைக் கவனத்தில் கொள்வது பொருத்தமானது. இந்த 'Ancient coins and measures of Ceylon by T W Rhys Davids'. [On the Ancient Coins and Measures of Ceylon: With a Discussion of the Ceylon Date of the Buddha's Death [Thomas W. R. Davids] புத்தகத்தின் ஐந்தாம் பகுதியின் 38 முதல் 56 வரையிலான பக்கங்களில் கௌதமர் இறந்த தேதியை தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] குறிப்பிடுகிறார், மேலும் கௌதம புத்தர் இறந்த ஆண்டுக்கான பல பொருத்தமான ஆண்டுகளை அவர் கண்டறிந்துள்ளார். இந்த வரம்பு கிமு 400 முதல் கிமு 423 வரை செல்லுகிறது, அதாவது சராசரி ஆண்டு கிமு 412 ஆகும். ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஏற்கனவே 1837 ஆம் ஆண்டில் மகாவம்சத்தை மொழிபெயர்த்திருந்தாலும், சிறந்த மொழிபெயர்ப்பின் தேவை அன்று உணரப்பட்டது. எனவே, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் 1908 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை அரசாங்கத்தால் மகாவம்சத்தின் மொழிபெயர்ப்புக்கான ஐரோப்பாவிற்கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதன் படி, மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் [Wilhelm Geiger] அவர் பரிந்துரைத்தார், மேலும் இந்த மொழிபெயர்ப்பு 1912 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர், புத்தர் இறந்த ஆண்டை கிமு 483 என ஏற்றுக்கொண்டார். இது தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [Rhys Davids] பெறப்பட்ட சாத்தியமான ஆண்டோடு ஒத்துப்போகவில்லை; அவர் மொழிபெயர்ப்பின் பொறுப்பாளராக இங்கு கடமை புரிந்தாலும், அவர் தனது ஆண்டான கிமு 412 ஐ விளம்பரப்படுத்த அல்லது புகுத்த இங்கு முயற்சிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆராய்ச்சியாளர்கள் யோஹன்னஸ் பிரொன்கோர்ஸ்ட், ரிச்சர்ட் கோம்ப்ரிச், அலெக்சாண்டர் வின்னே [Johannes Bronkhorst, Richard Gombrich, Alexander Wynne] மற்றும் பலர் கி.மு 400 கொஞ்சம் கூட அல்லது குறைய ஆண்டை , அதாவது அண்ணளவாக கி.மு 400 ஆண்டை, விரும்புகிறார்கள், இது மேலும் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸை , அவரின் கருத்தை நியாயப்படுத்துகிறது. அவர் இலங்கையில் ஒரு இளம் அரசு ஊழியராக இருந்தார். மேலும் அவர் மிகவும் பலவீனமான அல்லது நியாயமற்ற காரணங்களுக்காக தனது வேலை அல்லது பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி சில ஆண்டுகளில் பாளி உரை சங்கத்தை [Pali Text Society] உருவாக்கினார், இது பாளி மொழிக்கும் மற்றும் புத்த மதத்திற்கும் மகத்தான சேவைகளைச் செய்தது. ஒரு காரியத்தைச் செய்து / செய்ய முயன்று தோல்விகண்ட அல்லது கசப்பான அனுபத்தைப்பெற்ற ஒருவர், மீண்டும் அதே காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கும் போது மிகமிக எச்சரிக்கையாகவும், பயத்துடனும் இருப்பார். அப்படி அனுபவப்பட்டு கூச்ச சுபாவமுள்ளவராக இருந்த அவர், கி.மு 400 முதல் கி.மு 423 வரையிலான ஆண்டுகளுக்கான தனது வாதத்தை என்றும் வலியுறுத்தவில்லை. புத்தரின் இறந்த தேதிகள் பல்வேறு காலவரிசைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன என்றாலும், அவை அனைத்தும் சித்தார்த்த கௌதமர் 80 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை அங்கீகரிக்கின்றன. இலங்கையின் நீண்ட காலவரிசையின் படி [Ceylonese Long Chronology] புத்தரின் வாழ்க்கை சுமார் கி.மு 624 தொடக்கம் - சுமார் கி.மு 544 வரை ஆகும். அப்படியே, சரிசெய்யப்பட்ட நீண்ட காலவரிசையின் படி [Corrected Long Chronology]: சுமார் கி.மு 567 தொடக்கம் - சுமார் கி.மு 487 வரையும் இந்திய சுருக்க காலவரிசையின் படி [Indian Short Chronology]: சுமார் கி.மு 448 / 449 தொடக்கம் - சுமார் கி.மு 368 / 369 வரையும் நவீன காலவரிசையின் படி [Modern Chronology]: சுமார் கி.மு 563 தொடக்கம் - சுமார் கி.மு 483 வரையும் ஆகும். கி.பி. 1906 முதல் புத்தரின் பிறப்பு, இறப்பு தேதிகளுக்கான நவீன அறிஞர்களின் ஒருமித்த கருத்து, சுமார் கி.மு 563 - சுமார் கி.மு 483 ஆகும். இது சைனம் நூல்கள், அசோகரின் ஆட்சி, வானியல் கணக்கீடுகள் மற்றும் புத்த சிந்தனைப் பள்ளிகள் [probable dates for the founding of Buddhist schools of thought] நிறுவப்பட்டதற்கான சாத்தியமான தேதிகள் போன்ற வெளிப்புற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இருப்பினும், இந்த தேதிகள் தோராயமானவை, மேலும் துல்லியமான தேதி குறித்த நவீன உணர்வுகளுக்கு அவை மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்றாலும், அவையை உறுதியாக கூறமுடியாது. புத்தரின் பிறப்பு, வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது இறப்புக்கான தேதிகள் ஒருபோதும் உறுதியாக இருக்காது, ஏனெனில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை முதலில் எழுதிய எழுத்தாளர்கள், தேதியிடுவதில் கவனம்செலுத்தவில்லை; அவர்கள் கதையைச் சொல்வதில் மட்டுமே தான் கூடுதலான அக்கறை கொண்டிருந்தனர். மேலும், புத்தர் தானாக ஒன்றையும் எழுதவில்லை. அது மட்டும் அல்ல, அவரது மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த எந்தப் படைப்புகளும் வெளிவரவில்லை. மேலும், அவர் வாழ்ந்தார் என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொண்டாலும், அவரைப்பற்றி சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை நிகழ்வுகள் வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கின்றனவா என்பதை அறிய எந்த வழியும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். Part: 118 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" Ancient Coins and Measures of Ceylon was later published in 1877, Reference 'Ancient coins and measures of Ceylon by T W Rhys Davids'. [On the Ancient Coins and Measures of Ceylon: With a Discussion of the Ceylon Date of the Buddha's Death [Thomas W. R. Davids] It is appropriate to note that the Dipavamsa was translated by Hermann Oldenberg in 1879, two years after the above publication. T. W. Rhys Davids deals with date of Gautama’s death in the pages 38 to 56 of the Part V of this book, and arrived at a range of years for the probable year of death Gautama Buddha. The range is from 400 B. C. to 423 B. C., and the median year is 412 B. C. with plus/minus allowances. Though George Turnour already translated the Mahavamsa in 1837, a need for a better translation was felt and T. W. Rhys Davids was appointed by the then Government of Ceylon in 1908 as the Editor for Europe for the translation of the Mahavamsa. He recommended Professor Wilhelm Geiger for the translation, and the translation was published by the Government of Ceylon in the year 1912. Geiger adopted the year of death as 483 B. C. This is not in accordance with the probable year derived by Rhys Davids; he did not try promoting his year, 412 B. C. though he was in charge of the translation. The researchers Johannes Bronkhorst, Richard Gombrich, Alexander Wynne and others prefer 400 B. C. plus/minus some allowance, vindicating T. W. Rhys Davids. He was a young civil servant in Ceylon, and his services were terminated on some flimsy grounds. He returned to England and in the course some years he formed Pali Text Society, which did yeoman services to the Pali language and Buddhism. Once bitten twice shy, he didn’t insist on his argument for the range of years of 400 B. C. to 423 B. C. The dates of the Buddha have been derived from various chronologies which all recognize that Siddhartha Gautama lived for 80 years but disagree on the dates those 80 years encompass as explained above / shown below Ceylonese Long Chronology: c. 624 - c. 544 BCE Corrected Long Chronology: c. 567 - c. 487 BCE Indian Short Chronology: c. 448 / 449 - c. 368 / 369 BCE Modern Chronology: c. 563 - c. 483 BCE The modern scholarly consensus for the dates of the Buddha, since c. 1906 CE, has been c. 563 - c. 483 BCE based on external evidence such as Jain texts, Ashoka's reign, and astronomical calculations as well as probable dates for the founding of Buddhist schools of thought. These dates, however, are also approximations and, even though they are more acceptable to the modern-day sensibilities concerning precise dating, are far from certain. No dates for the Buddha's birth, life events, or death will ever be certain because the first writers to set down the events of his life, as noted, did not care about precision in dating; they cared about telling a memorable story. Further, Buddha himself wrote nothing and no works concerning the events of his life appear until many years following his death. Also, Scholars agree that he existed but also agree that there is no way of knowing whether the events of his life as depicted reflect historical truth. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 119 தொடரும் / Will follow துளி/DROP: 2064 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 118 https://www.facebook.com/groups/978753388866632/posts/34051575947824283/?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எல்லா புகழும் திரிஷா ஒருவருக்கே😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்னையா ..நீங்கதனே இப்ப உதவி கமிசனர் ...கிருபன் ஜீ உடன் கதையுங்க
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் புயல் வேக செஞ்சுரியான 100 (60 பந்துகள்) ஓட்டங்களுடனும், பக்கர் ஸமனின் மின்னல் வேக 84 (42 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தும், பவன் ரத்தநாயக்கவின் அதிரடியான 58 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் விளாசலான ஆட்டமிழக்காமல் எடுத்த 76 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் வேறு இலக்கை அண்மித்தும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. எனினும் நியூசிலாந்தை ஓட்ட விகிதத்தில் முந்துவதற்கு இலங்கையை 147 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெல்ல வேண்டியிருந்த நிலையில், சிறிலங்கா அணி 207 ஓட்டங்களை எடுத்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கும் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை தோத்தாலும் பாகிஸ்தான கலைச்சு விட்டதால, இலங்கை வென்ற மாதிரித்தானே. இலங்கையைத் தெரிவு செய்தாக்களுக்கும் இரண்டு புள்ளிகள் குடுக்கலாமே. 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன கடைசியா இப்பிடி முடிந்துதே. சானகா கடைசியில் ஒரு காட்டுக் காட்டி விட்டார்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இந்தத் தலைப்பு... ஒரு நாளில் 45 கருத்துக்களுடன், 2300 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 😂 அண்மையில் முக்கியமான செய்திகளுடன் வந்த தலைப்புகள்... ஈ... ஒட்டிக் கொண்டு இருக்க, இது சக்கை போட்டிருக்கு. திரிஷா அடுத்த.. முதலமைசசர் என்பதற்கு, இதுவே சான்று. 😜
-
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: திருமணம்
அட... நம்ம விஜய் என நினைத்து வந்தால், இது வேறை விஜய்...
-
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: திருமணம்
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா? பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கட்டுரை தகவல் அமரேந்திர யார்லகடா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் இரண்டு பிரபலங்களுக்கு இடையிலான திருமணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அந்தத் திருமணத்தின் பின்னணியில் உள்ள பாரம்பரியத்தைப் பற்றியதும் கூட. அதுதான் 'கொடவா' பாரம்பரியம். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ளது ராஷ்மிகடி மாவட்டம். கொடவா பாரம்பரிய திருமணம் முறை பற்றிய செய்திகள் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. குடகு என்பது கூர்க் என்றும் அழைக்கப்படுகிறது. ராஷ்மிகா கூர்க்கில் கல்வி பயின்றார். அவர்களது திருமணச் சடங்கு வழக்கமான இந்து முறைப்படி மட்டுமல்லாமல், கொடவா பாரம்பரியத்தின் படியும் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், தங்களது திருமணம் எந்த பாரம்பரியத்தின்படி நடந்தது என்பதை விஜய்யோ அல்லது ராஷ்மிகாவோ வெளிப்படுத்தவில்லை. கர்நாடகாவின் குடகு (கூர்க்) பிராந்தியத்தில் பொதுவாக திருமணங்கள் குடகு பாரம்பரிய பாணியில் நடத்தப்படுகின்றன. குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடவாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராஷ்மிகா கர்நாடகாவின் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் பாரம்பரியப்படி திருமணம் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கொடவா பாரம்பரியத்தில் நடைபெறும் திருமணத்தில் அர்ச்சகர்கள் கிடையாது. மருமகள் முறை திருமணம் என்றால் என்ன? வழக்கமான இந்து மரபுகளிலிருந்து கொடவா திருமணம் மாறுபட்டது. இந்து திருமணங்களில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க பூஜை, தாலி கட்டுதல் மற்றும் அட்சதை தூவுதல் போன்றவை இடம்பெறும். ஆனால் , கொடவா பாரம்பரியத்தில் அர்ச்சகர்களே கிடையாது. குடும்பத்தின் பெரியவர்களே திருமணச் சடங்கை நடத்துகிறார்கள். திருமண மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டு முன்னோர் வழிபாடு நடைபெறுகிறது. பாரம்பரிய கொடவா திருமணத்திற்கும், பாரம்பரிய இந்து திருமணத்திற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாக மைசூரைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். பாரம்பரிய கொடவா திருமணங்களில் மிகக் குறைவான பண்டிதர்கள் தான் கலந்து கொள்கிறார்கள் என்று ரகு சர்மா கூறினார். தானும் இதுபோன்ற நான்கு அல்லது ஐந்து பாரம்பரிய கொடவா திருமணங்களை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கொடவா திருமண விழாவில் பன்றி இறைச்சி பரிமாறுவது வழக்கம். இரண்டு நாள் திருமண விழா கொடவா பாரம்பரியத்தில், ஒரு திருமணம் 2 நாட்கள் நடைபெறும் என்று கொடவாக்லான்.காம் (Kodavaclan.com) கூறுகிறது. கொடவாக்லான் (Kodavaklan) இணையதளத்தில் சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு : திருமணத்தின் முதல் நாளில், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு வருகிறார்கள். ஒரு திருமணப் பந்தல் அமைக்கப்படுகிறது. இது மா இலைகள், வாழை இலைகள் மற்றும் பலா மரக் கிளைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. "இது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரியம். திருமணப் பந்தல் கூட பால் சிந்தும் மரங்களின் குச்சிகளால் செய்யப்படுகிறது. அதுவும் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது" என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். பன்றி மற்றும் காய்கறிகளும் வெட்டப்படுகின்றன. இந்த முழு சடங்கிலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த சடங்கு 'ஊர் கொடுவோ' அல்லது 'பந்தலா கங்கி' அல்லது 'தேரனேபெப்போ' என்று அழைக்கப்படுகிறது. கொடவா பாரம்பரியத்தில் திருமணச் சடங்குகளில் பன்றி இறைச்சி பரிமாறுவது வழக்கம். "திருமணத்தில் கண்டிப்பாக அசைவம் இருக்கும். பன்றி இறைச்சி நிச்சயம் பரிமாறப்படும். இது அவர்களின் திருமணத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படும்" என்று ரகு சர்மா கூறினார். மாலையில், அனைவரும் ஒன்றாகக் கூடி கொண்டாடுகிறார்கள். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,பாரம்பரிய கொடவா திருமண விழாக்கள் இரண்டு நாட்கள் நடைபெறும். இரண்டாவது நாளில் என்ன நடக்கும்? இரண்டாம் நாள் 'மங்களா' என்று அழைக்கப்படுகிறது. காலையில், மணமகனின் முகத்தில் பால் தடவப்பட்டு சவரம் செய்யப்படுகிறது. பின்னர், மங்களாஸ்நானம் செய்யப்படுகிறது. இதில் மணமகனின் தாயார் மற்றும் திருமணமான இரண்டு பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் பாரம்பரிய 'குப்யா' உடையும், இடுப்பில் ஒரு வாளையும் அணிவார்கள். இருப்பினும், விஜய்-ராஷ்மிகா திருமணச் சடங்கின் போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், விஜய் இந்த வகை கொடவா உடையில் காணப்படவில்லை. விஜய் கீழே வெள்ளை உடுப்பும், இடுப்பில் தங்க பெல்ட்டும், மேலே சிவப்பு நிற மேலாடையும் அணிந்திருந்தார். மணமகள் தனது மங்களாஸ்நானத்தை முடித்த பிறகு, அவர் வளையல் அணியும் சடங்கு நடத்தப்படுகிறது. திருமணத்திற்காக, மணமகள் சிவப்பு நிற, தங்கக் கரை கொண்ட புடவையில் அலங்கரிக்கப்படுகிறார். 'பலே பிருது' என்பது திருமணச் சடங்கின் ஒரு முக்கிய அம்சமாகும். அதன்படி, திருமண மண்டபத்திற்கு செல்லும் பாதையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாழை மரத் தண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். மணமகள் அல்லது மணமகனின் மாமா, ஒரு பெரிய கத்தியின் உதவியால் இந்த வாழைத் தண்டுகளை ஒரே வீச்சில் வெட்ட வேண்டும். "வாழைத் தண்டுகளை வெட்டும் கலாசாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது" என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். "சில இடங்களில் மணமகனும் வாழைத் தண்டுகளை வெட்டுகிறார். மற்ற இடங்களில் மாமா அதைச் செய்கிறார்," என்று அவர் கூறினார். மணமகள் மீதான உரிமைகளைக் குறிக்கும் 12 கற்கள் அவர்கள் வாழைத் தண்டை மூன்று முறை சுற்றி வந்து, பூக்களைத் தொட்டு, பின்னர் வீரத்தின் அடையாளமாக அந்த வாழைத் தண்டை வெட்டுகிறார்கள். பின்னர் திருமண மேடையை மூன்று முறை வலம் வந்து கிழக்கு நோக்கி அமர்கிறார்கள். அதன்பின் ஆசிர்வாதம் நடைபெறுகிறது. முதலில் தாய், பிறகு தந்தை, அதன்பின் மற்ற பெரியவர்கள் ஆசி வழங்குகிறார்கள். பின்னர் மணமகள் அங்கு வந்து பால், பரிசுகள் மற்றும் தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் அடங்கிய பையை மணமகனிடம் வழங்குகிறார். மல்லிகை மாலைகள் பரிமாறப்படுகின்றன. பின்னர், பெரியவர்கள் புனித விளக்கின் முன் நின்று, மணமகளின் பொறுப்பை மணமகனிடம் ஒப்படைப்பதாகக் கூறுகிறார்கள். மணமகள் வீட்டின் பெரியவர்கள், மணமகளின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்குவதாகக் கூறி, மணமகன் வீட்டுப் பெரியவர்களிடம் 12 கூழாங்கற்களைக் கொடுக்கிறார்கள். மணமகன் வீட்டுப் பெரியவர்கள் 11 கற்களை எடுத்துக் கொண்டு ஒன்றை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மணமகள் மீது அவர்களுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்க இது செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் மணமகளை அழைத்துச் செல்வதோடு சடங்கு முடிகிறது. இந்தத் திருமணம் மிகக் குறுகிய நேரத்தில் நடத்தப்படும் என்று ரகு சர்மா கூறினார். இரவு விருந்தில் பெண்களுக்கு முதலில் உணவு பரிமாறப்படுவது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. மாலையில், மணமகள் கங்கா பூஜை செய்கிறார். பின்னர் பாதங்களில் சந்தனம் பூசப்படுகிறது. அவர்கள் கிணற்றுக்குச் சென்று வெற்றிலை, கிழங்கு, அட்சதை மற்றும் தேங்காய் ஆகியவற்றை நீரில் கலக்கிறார்கள். பின்னர் மணமகளுடன் நீரைச் சேகரித்து பானையில் ஊற்றுகிறார்கள். ஒரு பானை தண்ணீர் கொண்டு வரப்பட்டு புனித விளக்கின் முன் வைக்கப்படுகிறது. அங்கிருந்து புகுந்த வீட்டில் மணமகளின் பொறுப்பு தொடங்குவதாக நம்பப்படுகிறது. திருமணச் சடங்கு 'கொம்பரேக் கொடுவோ' உடன் முடிவடைகிறது. இதன் ஒரு பகுதியாக, மணமகன் மணமகளைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது முகத்தில் இருக்கும் திரையை அகற்றுகிறார். அதன் பிறகு, அவர் அவருக்கு ஒரு தங்க திருமண மோதிரத்தைப் பரிசளிக்கிறார். இத்துடன், திருமண விழா நிறைவடைகிறது. பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்தனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திரையுலகப் பயணம் ராஷ்மிகா மந்தனா 2016-ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2018-இல் 'சலோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் தேவரகொண்டா, 2011-ஆம் ஆண்டு 'நுவ்விலா' திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். சில படங்களில் குணச்சித்திர நடிகராகத் தோன்றினார். 2016-ஆம் ஆண்டு 'பெல்லி சூப்புலு' திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து 'ரணபலி' படத்தில் நடித்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?
-
-
எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு Published By: Vishnu 28 Feb, 2026 | 10:17 PM மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி சனிக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 4 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் ரூ. 6 உயர்ந்து ரூ. 329 ஆக விற்பனை செய்யப்படும். மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 293 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், 95 ஒக்டேன் பெற்றோல் (ரூ. 340) மற்றும் மண்ணெண்ணெய் (ரூ. 182) விலைகளில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239835
-
வசந்தம் வருகிறது
காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😂 நாளைக்கி இந்தியாவும் வென்றால் 4 செமி பைனல் அணியை சரியாக கணித்தேன் என என்னை நானே ஆறுதல் படுத்த முடியும் என்பதால் ஒரு சின்ன சந்தோசம்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இனி வயசுக்கு வந்தென்ன..
- வசந்தம் வருகிறது
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய உச்ச தலைவர் காமனெயியின் வளாகத்தை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. 28 பிப்ரவரி 2026, 16:58 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் "முக்கிய போர் நடவடிக்கைகள்" குறித்து விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அரசுப் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, இரான் மீது இஸ்ரேல் "தற்காப்புத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல வாரங்களாக நீடித்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இரானில் என்ன நடந்தது? இரான் நேரப்படி காலை 09:30 மணிக்குச் சற்று முன்னதாக (06:00 GMT), தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்தன. பிபிசி பார்த்த புகைப்படங்கள் நகரத்தின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்திற்கு மேல் புகை மூட்டம் இருப்பதைக் காட்டுகின்றன. இஸ்பஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்தவர்கள் பீதியில் ஓடுவதைக் காட்டுகின்றன. அலறல் சத்தங்களும் அழுகை சத்தங்களும் பின்னணியில் கேட்கின்றன. உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை. உள்ளூர் அதிகாரி ஒருவர் அரசு ஊடகத்திடம் கூறுகையில், இரானின் தெற்கு மாகாணமான மினாப்பில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை பிபிசியால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை. தாக்குதல்களுக்குப் பிறகு இரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இந்த நடவடிக்கை 'மிகப்பெரியது மற்றும் தொடர்ச்சியானது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான" நடவடிக்கை என்று இதனை டிரம்ப் விவரித்துள்ளார். பல சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் டெஹ்ரான் முழுவதும் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன. இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. கட்டடம் நேரடியாகத் தாக்குதலுககு இலக்கானதா என்பது வீடியோ கோணத்தில் தெளிவாகத் தெரியவில்லை. இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சரிபார்க்கப்பட்ட புகைப்படம், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் சிறிய மளிகைக் கடைகளுக்கு மேலே அடர்த்தியான, இருண்ட புகை மண்டலம் எழுவதைக் காட்டுகிறது. நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூட்டுத் தாக்குதல்களை "முற்றிலும் தூண்டப்படாத, சட்டவிரோதமான தாக்குதல்" என்று விவரித்தார். முன்னதாக, இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள "தனது அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவத் திறன்களையும் சட்டப்பூர்வமான சுய பாதுகாப்பு உரிமையின் கீழ்" பயன்படுத்தும் என்று அவர் கூறினார். அருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் தொலைபேசி அழைப்புகளில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் "அந்த நாடுகளின் வசதிகள் மற்றும் நிலப்பரப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறுப்பு உண்டு" என்பதை நினைவூட்டினார் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன? அமெரிக்காவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்றை டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டார். "சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரான் மீது பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது" என்று அவர் கூறினார். "இரானிய ஆட்சியிடமிருந்து வரவிருக்கும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்" என்று கூறிய அவர், "இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை உறுதி செய்வதே" அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். மேலும், இரானிய மக்கள் தங்குமிடங்களிலேயே இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். "நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்," என்று கூறிய அவர், "அதைப் பெற்றுக்கொள்வது உங்கள் கையில் இருக்கும். தலைமுறை தலைமுறையாக உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்"என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அனைத்து இரானிய மக்களும் "அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான மற்றும் அமைதியான இரானைக் கொண்டு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், இரான் " மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். "எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்." மேலும், இஸ்ரேலிய குடிமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார். முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் "சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை" அறிவித்தார். இரான் எவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது? இரான் சார்பில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது, மேலும் "தேவைப்படும் இடங்களில் அச்சுறுத்தல்களை இடைமறித்து தாக்க" தாங்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது. இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மற்றும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன, ஆனால் அவை ஏவுகணைகள் விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டதா என்பது குறித்துத் தற்போது தெளிவாகத் தெரியவில்லை. பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் சேவை மையம் "ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக" பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவசரகால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி இஸ்ரேலியர்கள் கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல் திங்கள்கிழமை இரவு 20:00 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இஸ்ரேலின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gqpgkwwlko
-
எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள்
எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள் 28 Feb, 2026 | 04:48 PM காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் சனிக்கிழமை (28), பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களை நீக்காமல் இந்த சட்டத்திற்குள்ளே எங்களை அடிமையாக வைத்துக்கொண்டு இன்னொரு சட்டமான ஆறாம் திருத்த சட்டத்தின் ஊடாக கருத்து சுதந்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு பேச வாருங்கள் என்றால், சட்டங்களாலே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரமாக பேச முடியும்? ஆகவே இதற்காக தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய சர்வதேச நாடுகளாக இருக்கலாம் இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக தான் இந்த சட்டங்களை நீக்கவும், எமக்கு உதவி செய்யவும் முடியும். ஆகவே பேதங்கள் கடந்து எமது மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்தது மகிழ்ச்சிக்குரியது. ஆகவே எமது இலக்கு அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என்றார். https://www.virakesari.lk/article/239812
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கீவீஸ் உள்ளே பாக்கீஸ் வெளியே 😂. எனக்கு புள்ளிகள் கன்பர்மெடு😂
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி : மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் – பல நாடுகள் வான்வெளி மூடல் 28 Feb, 2026 | 06:41 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரானின் பதிலடி ஆகியவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக, மத்திய கிழக்கின் பெரும்பாலான வான்வெளிகள் மூடப்பட்டு, உலகெங்கிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. சனிக்கிழமை (28) மோதல் வெடித்ததை அடுத்து ஈரான், இஸ்ரேல், ஈராக், ஜோர்தான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட குறைந்தது எட்டு நாடுகள் தங்களது வான்வெளிகளை மூடுவதாக அறிவித்தன. சிரியாவும் அதன் தெற்குப் பகுதியில் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியில் 12 மணிநேரத்திற்கு வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் மற்றும் கடற்படையை அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இந்தத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல் நடக்கும் வரை அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த ஈரான், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக உறுதியளித்தது. அதன்படி இஸ்ரேல் மீதும், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியது. "மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்களும் நலன்களும் நியாயமான இலக்குகளாக மாறிவிட்டன. இந்த ஆக்கிரமிப்பிற்குப் பிறகு எங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் (Red lines) இல்லை, எதையும் செய்யத் துணிவோம்," என்று மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே அந்த நாட்டு வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையிலான முக்கியப் பாதையாக இருக்கும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக, உலகளாவிய விமான நிறுவனங்கள் பல தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன அல்லது வேறு பாதையில் திருப்பிவிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மத்திய கிழக்கு வான்வெளியை முழுமையாகத் தவிர்க்கப்போவதாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், லுஃப்தான்சா (Lufthansa), ஏர் பிரான்ஸ், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ (Indigo) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தப் பிராந்தியத்திற்கான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், அதற்குப் பல வளைகுடா நாடுகளைப் பாதிக்கும் வகையிலான ஈரானின் பதிலடியும் இரண்டு 'இணையான' (Parallel) மோதல்களை உருவாக்கியுள்ளன. இது இந்தப் பிராந்தியத்தில் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான மற்றும் ஆழமான ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும். https://www.virakesari.lk/article/239825
-
தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்
தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல் 28 Feb, 2026 | 04:32 PM யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் வெள்ளிக்கிழமை (27), பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. ம.திருவரங்கன், மூத்த சட்டத்தரணி கலாநிதி. கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா.சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்
-
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்! 28 Feb, 2026 | 04:55 PM பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அந்த சட்டமானது மிகவும் மோசமானது என தெரிவித்து, புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், மத குருக்கள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!