Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு. புதுடெல்லி: ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. போரால் பாதிக்கப்பட்ட காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. சபை பயனற்றது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த சூழலில் ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அவர் தொடங்கி உள்ளார். புதிய அமைப்பின் தலைவராக அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்று உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அப்போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ரோவன், இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியேல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய சர்வதேச அமைப்பில் உலக நாடுகள் நிரந்தர உறுப்பினராக சேரலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய அமைப்பு காசாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் ‘‘போர்டு ஆப் பீஸ்’’ அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி டேனியல் போர்டி கூறும்போது, “உலக விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறுக்கு வழி’’ என்று குற்றம் சாட்டினார். https://www.hindutamil.in/news/world/president-trump-launched-new-organization-as-alternative-to-uno
  3. Today
  4. சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன். இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார். வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார். இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும்,குறிப்பாக,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் புலம் பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460578
  5. செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு Jan 19, 2026 - 08:30 PM யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும். மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns
  6. கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை ! ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பரந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை இந்த வரிகள் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை (22) பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது தொடர்பான தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர். https://athavannews.com/2026/1460542
  7. சீனா... தனது நாட்டில், அதிக முஸ்லீம்களை குடியேற்றினால்... குழந்தை பிறப்பு வீதம், சடாரென... ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்.
  8. வணக்கம் கல்யாணசுந்தரம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பெயரைக் கொண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்...........................❤️.
  9. கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் ! 19 Jan, 2026 | 05:55 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/236456
  10. அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஈரானை அழிக்க துதீபத்தின் நோக்கம், இவ்வள பொருளாஹார தடைகளைக்கு மத்தியில், இரானின் பொதுவான விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி நிலை மேட்ற்கு ஐரோப்பாவின் நிலையுடன் ஒப்புடைமை கொன்டு இருக்கிறது. இதை மேட்ற்கு சிந்தனை, ஆய்வு மையங்கள் சொல்கின்றன. ஏனெனில், பாரிய நெருக்கடியிலும், ஈரான் அதன் இணையான, தொழிநுட்ப வளர்ச்சியில், கொடுக்கப்படும் பணத்தை இயலுமானவரை கொடுக்கிறது. அணுத்துறையில் கூட. இரான் அதிக வளர்த்த கொண்டு இருக்கும் அணு செரிவாக்கள், அணுகுண்டு தொழிலநுட்பத்தை ஐடா கடுமெய்யானது. அமெரிக்கா, ,மேட்ற்கு, இஸ்ரேல் கூட்டங்கள் (அவர்களின் விஞ்ஞானிகளும்) சேர்ந்து போட்ட திட்டம் அவ்வப்போது அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் உடற்பதி நிலையங்கள், வசதிகளையோ தகர்ப்பது, அதுக்கும் மேலே சென்று , ஈரானின் இஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்க\லாய் கொள்வதன் மூலம் ஈரானை முடக்கி விடலாம் என்று நப்பாசையில் ஈரான் மண் அள்ளி போடு உள்ளது. அத்துடன், எல்லா மேட்ற்கு இஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இப்பொது ஈராநின் கொலை / இராணுவ இலக்காக மாறி உள்ளனர். அத்துடன் , மேட்ற்கு இஸ்ரேல் எந்த நேரத்திலும் அங்குள்ள எந்த நாட்டிலும் தாக்குதல் இஸ்ரேல் விரும்பியவாறு தாக்குதல் நடத்த கூடிய நிலையில் இருக்க வேண்டும், அந்த நாடுகள் திருப்பி தாக்குதல் நடத்த முடியாத நிலையில் இருக்க வேணும் என்பதும் அமெரிக்கா, மேட்ற்கு இஸ்ரேல் இன் கேந்திர கொள்கை. இதுவே நிலைமை.
  11. நான் எழுதும் கருத்து சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்..வேணாம் எழுதாமல் போவதே மேல்.நன்றி.
  12. 'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்த கூட்டணியில் நீடிக்கிறதா? இந்த தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2019 தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும், இந்த சமுதாயத்தை பட்டியல் பிரிவிலிருந்து (SC) பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் பெயர் மாற்றம் மட்டும் ஏற்கப்பட்டதால் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றது. அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமென்று கூறினோம். அதை அதிமுக ஏற்கவில்லை. அப்போதும் நாங்கள் அதிமுகவுடன் இருந்தோம். ஆனால், அதன்பின் சில மாதங்களிலேயே பாஜவுடன் மீண்டும் சேரும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது.'' கடந்த தேர்தலில் எங்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளிடம் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியாது. ஆனால், எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் இப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் இல்லை. துாரமாகப் போய்விட்டதாகவும் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.'' தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மீதான அதிருப்தியால் (Anti Incumbency) மட்டுமே இரு கட்சிகளிடையே ஆட்சி மாற்றம் நடக்கிறது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கனிம வளக்கொள்ளை நிறுத்தம், வேலைவாய்ப்பு சார்ந்து கொள்கைரீதியான ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்று நினைக்கிறோம். அது மட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப இந்த தேர்தலில் கூட்டணி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற குரல், இந்த தேர்தலில் ஓங்கி ஒலிக்கிறது. கேரளாவைப் போல இங்கேயும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டுமென்று நீங்களும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே கட்சி தவெக என்பதால் அக்கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு, அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரு கட்சிகள்தான் மாறிமாறி ஆளுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த 2006–2011 இடையிலான காலத்தில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி முயன்றும் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை. இப்போதும் இந்த கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகப் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்ததால் அந்த ஆட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நன்றாகத்தான் ஆட்சியும் நடந்தன, நடக்கின்றன. இங்கு மட்டும் அந்த கட்சிகள் அதை பேச மறுப்பது ஏனென்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சி என்பதை திமுக, அதிமுக இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சியைப் போலப் பார்க்கின்றன. சமூகநீதி என்று வாயில் மட்டும் பேசக்கூடாது. சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன். சமீபத்திய ஆண்டுகளில் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் நீங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின... இதற்கு உங்கள் கட்சியில் எதிர்ப்பு எழவில்லையா... உண்மையிலேயே மாநில உரிமைகளில் பாஜக அரசு சரியாக நடந்துகொள்கிறதா? மாநில உரிமைகள் சார்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசு முழுமையாக நியாயமாக நடந்துகொள்கிறது என்றோ, அனைத்திலும் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் திமுக அரசியல் மட்டுமே செய்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. கடந்த 2021 கோவிட் காலத்துக்குப் பின்பு, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றபோது மத்திய அரசை தமிழகத்தில் கண்டித்த ஒரே கட்சி நாங்கள்தான். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை துவங்கும் முன்பே தமிழகத்தில் 8 தொகுதி போய்விடுமென்று திமுக பீதியைக் கிளப்பியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வந்தால் மொத்தமாக வாக்காளர் உரிமை போகுமென்று திமுக சொன்னதும் அரசியல்தான். ஆனால், நாங்கள் அதை ஆதரித்தோம். இப்போது திமுகதான் எஸ்ஐஆரில் அதிகமாக பங்களித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே மத்திய, மாநில அரசுகள் இருந்தாலும் ஒரே நாடு என்ற வகையில் சில முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதில் மாநில சுயாட்சி என்ற பெயரில் தமிழகத்தை தனி நாடு போன்ற உணர்வைக் காட்டி சுயமாக கொள்ளையடிப்பதும், அரசியல் செய்வதும்தான் திமுகவின் முயற்சியாக உள்ளது. அதனால்தான் நாங்கள் சில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரிப்பதில்லை. பட மூலாதாரம்,Krishnasamy கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள், கல்வி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறதே? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்... நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அதைச் செய்ய முடிந்ததா? உங்கள் கடமையை சரியாகச் செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமே இல்லை. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி அனைத்தையும் இந்த அரசு சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை. பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர ஆந்திரா, தெலங்கானா அரசுகள் தனி பட்ஜெட் போடுகின்றன. இங்கே ஏன் அதைச் செய்வதில்லை... பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீர், சாலை, மயான வசதிகள் இல்லை. கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கும் உரியவை கிடைக்கச் செய்துவிட்டு, நிதி போதவில்லை என்று கேட்டால் அதை ஆதரித்து நாங்களும் குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு நல்ல திட்டத்தையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை என்கிறீர்களா? நல்ல திட்டம் என்பது வேறு. கவர்ச்சித் திட்டம், இலவசத்திட்டம் என்பது வேறு. திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆனால் திமுக கூட்டணிதான் தற்போது பலமாக இருக்கிறது என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே... அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. தவறு செய்பவர் ஒருவரின் தலைமையில் 10, 15 நல்லவர்கள் சேர்ந்தாலும், தலைமையில் இருப்பவர் தவறானவராக இருந்தால் மற்றவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். முதல் எண் பூஜ்யம் என்றால் அதன்பின் வரும் எல்லாமே பூஜ்யம்தான். ஆட்சியின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி திமுக அரசு செய்யத் தவறிய பல விஷயங்களால் மக்களுக்கு கோபம் இருக்கிறது. தமிழக அரசியலில் விஜய் வருகை, அவரது கட்சியின் கொள்கை, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்... விஜய் கட்சியின் வளர்ச்சி, எந்தக் கட்சியின் வாக்குவங்கிக்கு ஆபத்தாக மாறுமென்று நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையான கொள்கை என்று எதுவும் கிடையாது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் பேசும் கொள்கை வேறு, நடந்து கொள்ளும் விதம் வேறு. விஜய் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்று நினைக்கிறார். அவருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்குமென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால், அவர் அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் தனி நபராக, ஒரு புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் அவை எல்லாமே அவருக்கு சாதகமாக மாறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அதனால் அவர் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பார் என்று மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவரே ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது. பட மூலாதாரம்,TVK விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் எம்.பி., எம்எல்ஏக்கள் என்று வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சிக் கட்டமைப்பும் வாக்குவங்கியும் ஒரு கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது ஏன்? கட்சி துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், ஒரு கட்சியின் செயல்பாட்டையும், மதிப்பையும், மக்களிடமுள்ள மரியாதையையும் அப்படிப் பார்க்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு கட்சியின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது. கடந்த 1995 ஆம் ஆண்டில் கொடியங்குளம் கொடுமையை உலகறியச் செய்ததில் துவங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, எத்தனையோ சாதனைகளை புதிய தமிழகம் செய்திருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வெறும் 65 ரூபாய் சம்பளத்திலிருந்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு வந்தது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுதான். தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 40 ஆயிரம் கிராமங்களில் டீக்கடைகளில் பட்டியலின மக்கள் சமமாக நடத்தப்படாமல் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழித்ததும் புதிய தமிழகம்தான். கண்டதேவி உட்பட கிராமக்கோவில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியாத நிலையை மாற்றியதும், கிராமங்களில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை உருவாக்கியதும் நாங்கள்தான். அரசியலில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தவறு என்றால் தவறு என்று சுட்டிக்காட்டுவதால்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்து, ஐந்தாண்டுகளுக்கு புகழ்வதாக இருந்திருந்தால் நாங்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அது தேவையில்லை. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தமிழகம் சட்டமன்றத்தில் இடம்பெறும். பட மூலாதாரம்,Krishnasamy தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்காத அளவுக்கு, பாஜகவை நீங்கள் அதிதீவிரமாக ஆதரித்தும் உங்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? சமீபத்தில் கூட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதும், உறுதி என்பதை அகற்றியதையும் நான் கண்டித்தேன். அதனால் மத்திய அரசை எங்கே எப்போது கண்டிக்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜவை கண்மூடித்தனமாக என்றைக்குமே நான் ஆதரித்ததில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறினேன். ஏனெனில், திருப்பரங்குன்றம், பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எழுதி வைக்கப்பட்டதில்லை. அந்த விவகாரத்தில் திமுகதான் உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தது. இறுதியில் நாங்கள் சொன்னதையே நீதிமன்றமும் சொன்னது. தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த விஷயத்தை நாங்கள் அணுகினோம். அதற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸுடனும், தமிழ் மொழிக்கான போராட்டத்தை திமுகவுடனும் பொருத்திப் பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வழிபாட்டு உரிமைகளை குறிப்பிட்ட கட்சியுடன் பொருத்திப் பார்ப்பதும் தவறு. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பின்பு அதுதொடர்பான உங்களின் முயற்சி முடிவடைந்துவிட்டதா? மீண்டும் மீண்டும் மத்திய அரசை அணுகுவதில் பயனில்லை. அதனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் நிலை வரும்போது, 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஓபிசி பட்டியலில் இணைக்கப்படுகிறது' என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.'' மற்ற மாநிலங்களில் தலித் முதலமைச்சர் அல்லது தலித் துணை முதலமைச்சர் என்கிற கனவு சாத்தியப்படும்போது, தமிழகத்தில் மட்டும் அது கானல் நீராக இருப்பது ஏன்? தமிழக அரசியலில் பொய் முகங்கள்தான் அதிகம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது வெளிப்படை. வெளியே தெரியாத விஷயம், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் இருக்கும் பட்டியலினத்தவரும் அப்படியே நடக்கின்றனர். உத்தரப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இவர்கள் சொல்லும் சமத்துவம் பேசப்படுவதில்லை. ஆனால், அங்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவரால் முதலமைச்சர், துணை முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முடிகிறது. மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடிகிறது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பட்டியலின முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் என்ற நிலை இங்கே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சியினர் சமத்துவம் பேசுகின்றனரே தவிர, அதைச் செயல்படுத்த முன்வருவதில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே மத்திய, மாநில அமைச்சர்களாக முக்கியப் பொறுப்புகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே... அதனால் பட்டியலின மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது... அவர்கள் அந்த கட்சிகளின் கொள்கை சார்ந்துதான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். மாஞ்சோலை விவகாரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, வேங்கை வயல் என்று பட்டியலின மக்களின் பிரச்னைகளைப் பேசுவதில்லை. முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் நிலைக்கு இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதுதான், உண்மையாகவே இந்த சமுதாயத்தால் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு, வரும் தேர்தலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்படி யாரால் சாத்தியமாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1kx931k2o
  13. துணைவியாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மோகன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏
  14. முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து. வெற்றியோடு தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ வில்லியம்சன், சான்ட்னர், ஹென்றி, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? மிடில் ஓவர்களில் இந்தியா vs நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம், 2 சதங்கள் என இந்தத் தொடரின் நாயகனாக விளங்கினார் டேரில் மிட்செல். 176 என்ற சராசரியில் 352 ரன்கள் எடுத்தார் அவர். அதையும் 110.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்தார். ராஜ்கோட், இந்தூர் ஆகிய இரு இடங்களிலும் சதமடித்து இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார் மிட்செல். நான்காவது வீரராக ஆடிய மிட்செல், மிடில் ஓவர்களாக கருதப்படும் 11 முதல் 40வது ஓவர் வரை நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தர மிடில் ஓவர்களில் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும் இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா? 'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து End of அதிகம் படிக்கப்பட்டது "மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதுதான் இந்தியா இந்தத் தொடரை தோற்றதற்கான காரணம்" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானி. இரண்டாவது போட்டியின் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த 30 ஓவர்களில் அவர்களுடைய சராசரி ரன்ரேட் 6.43. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த கட்டத்தில் எடுத்த ஸ்கோர் 142 மட்டுமே. 4.73 என்ற ரன்ரேட்டில் ஆடியிருந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதுவே இந்தூரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் 6.37 என்ற ரன்ரேட்டில் 191 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இந்த முறை அவர்கள் இழந்தது ஒரு விக்கெட் மட்டுமே. மிட்செலோடு சேர்ந்து கிளென் ஃபிலிப்ஸும் சதம் அடித்தார். ஆனால், சேஸ் செய்த இந்திய அணி மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களே எடுத்தது. ரன்ரேட் 5.47. இந்த வித்தியாசம் இந்தியா மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலுமே பின்தங்கியதைக் காட்டுகிறது. படக்குறிப்பு,இந்தத் தொடரில் மிடில் ஓவர்களில் முன்னிலை பெற்ற அணிகளே அந்தப் போட்டியையும் வென்றிருக்கின்றன. வதோதராவில் இந்தியாவும், மற்ற இரு போட்டிகளில் நியூசிலாந்தும் மிடில் ஓவர்களில் முந்தி, போட்டிகளிலும் வெற்றி பெற்றன. மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சு பின்தங்கியது ஏன்? கடைசி இரண்டு போட்டிகளின் மிடில் ஓவர்களில், மொத்தம் 60 ஓவர்களில் இந்தியா வீழ்த்தியது 3 விக்கெட்டுகள் தான். இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் சும்பன் கில், "எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. சர்க்கிளுக்கு உள்ளே ஐந்து வீரர்கள் இருக்கும்போது விக்கெட் வீழ்த்த முடியவில்லையெனில் அதன்பிறகு அது மிகவும் கடினம். புதிய பந்தில் நன்றாகத்தான் வீசினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாகப் பந்துவீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "விக்கெட் எடுக்கவேண்டிய முக்கியமான இந்தக் கட்டத்தில் இந்திய அணி அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று சொல்லும் நானி, கேப்டன் சுப்மன் கில் கூட இரு தவறுகளை செய்ததாக கூறுகிறார். "குல்தீப் யாதவ் பந்தை நன்கு தூக்கிப் போடுபவர், விக்கெட் எடுப்பவர். ஆனால், மிட்செல் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவர் மிகவும் 'flat'-ஆகவே பந்துவீசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது அவருடைய விக்கெட் எடுக்கும் தன்மையே போய்விடும். ஒரு பௌலர் அப்படி சற்று யோசிக்கும்போது, கேப்டனோ, வேறு யாராவதோ சென்று அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவே இல்லை. அவர் ராஜ்கோட் போட்டியில் 82 ரன்கள் கொடுக்கக் காரணமே அதுதான்.'' என்கிறார் நானி. இந்தியாவின் முக்கிய 'விக்கெட் டேக்கிங் பௌலர்' என்று கருதப்படுபவர்களுள் ஒருவரான குல்தீப், இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து பேட்டர்கள் அவருக்கு எதிராக யோசிக்காமல் அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் அவர்களது ரன்ரேட் மிடில் ஓவர்களில் மிகவும் சீராகச் சென்றது. ஜடேஜா மீது விமர்சனம் அதேபோல், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் குறித்தும் நானி தன் விமர்சனத்தை முன்வைத்தார். "ஒரு ஸ்பின்னரை எப்போது பந்துவீச்சுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். மூன்றாவது போட்டியில் ஜடேஜாவை 30-வது ஓவரில்தான் கில் பயன்படுத்தவே தொடங்கினார். என்னதான், பௌலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், ஒரு முன்னணி ஸ்பின்னர் இருக்கும்போது அவர் மீது நம்பிக்கை வைக்கவே வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம், ஜடேஜாவின் செயல்பாடு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவின் செயல்பாடு சமீபமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் அவரது எகானமியும் 6.13 என அதிகமாகவே இருக்கிறது. கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரேயொரு விக்கெட் தான் வீழ்த்தியிருக்கிறார். கிரிக்பஸ் வலைதளத்தில் உரையாடிய ஜாஹிர் கான் மற்றும் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா - அக்‌ஷர் பட்டேல் இடையிலான போட்டி பற்றிப் பேசியிருந்தார்கள். அக்‌ஷர் பட்டேல் நிச்சயம் ஜடேஜாவுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பார் என்று கூறிய ஜாஹிர் கான், "இந்த ஃபார்மட் மாறிவருகிறது. மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பௌலராக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கவேண்டும். அதை ஜடேஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். ரஹானேவோ, "ஒருநாள் போட்டிகளுக்கு நிறைய வேரியேஷன்கள் தேவை. ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும் அவர் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதை பேட்டர்கள் கணித்துவிடுவார்கள். அதேசமயம் அக்‌ஷர் படேலிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன" என்று கூறினார். வழக்கமாக ரன்களைக் கட்டுப்படுத்தும் ஜடேஜா ஒருபக்கம் அதிக ரன்களைக் கொடுத்ததுமே, குல்தீப் மீதும் அது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இந்த இடத்தில் தான் இந்திய அணி வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய பௌலரைத் தவறவிட்டதாகச் சொல்கிறார் நானி. சாம்பியன்ஸ் டிராபியில் நன்கு செயல்பட்ட அவரை, இப்போது ஒதுக்கி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வருண் இருந்தால் இந்த மிடில் ஆர்டர் விக்கெட் பிரச்னை நிச்சயம் தீர்ந்துவிடும் என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் டேரில் மிட்செல் மிடில் ஓவர் & மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை நியூசிலாந்து அணி மிடில் ஓவர்களில் நன்றாக ரன் சேர்க்க வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் போன்றவர்கள் மிட்செலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததும் ஒரு காரணம். இந்த ஒத்துழைப்பு விராட் கோலிக்கோ, இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுலுக்கோ கிடைக்கவில்லை. இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் (நான்காவது முதல் ஏழாவது வரிசை வரை களமிறங்கும்) பேட்டர்களின் சராசரி 34.7. இதுவே நியூசிலாந்தின் சராசரி 80.86. அதில் பெரும்பகுதி ரன்களை எடுத்த மிட்செலின் பங்களிப்பை நீக்கினாலும் கூட அந்த சராசரி 42.8 ஆக இருக்கும். இந்த வித்தியாசத்துக்குக் காரணம் இந்தியா இங்கு நிறைய விக்கெட்டுகளை இழந்தது. "இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வருவதில்லை. அதுதான் இதற்கான மிகப் பெரிய பிரச்னை" என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார் நானி. "இது கொஞ்சம் கடுமையாகக் கூடத் தெரியலாம். ஆனால், அதுவே உண்மை. இந்திய பேட்டர்கள் ஸ்பின்னுக்கு எதிராக முன் வந்து விளையாடவே அஞ்சுகிறார்கள். காலை நகர்த்தவே அவர்கள் மறந்துவிட்டார்கள். முதல் போட்டியின் ஒருகட்டத்தில் ஷ்ரேயாஸ், ஆதித்யா அஷோக் ஓவரில் சிறப்பாக ஆடினார். அதன்பிறகு இந்திய அணி ஸ்பின்னை சரியாகவே கையாளவில்லை" என்றும் அவர் கூறினார். கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயராலும் அப்படியான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களிடம் விரைவாக வீழ்ந்துவிட்டார். அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரலும் சுழலை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால், கோலி, ராகுல் ஆகியோரும் ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது. இந்திய பேட்டர்களின் பயத்தால், லெனக்ஸ் போன்ற ஒரு புதிய வீரர் கூட ஆதிக்கம் செலுத்துவதுபோல் தெரிந்ததாகக் கூறினார் நானி. "நாளை சான்ட்னர், சோதி போன்றவர்கள் வந்துவிட்டால் இந்த வீரர்கள் பிளேயிங் லெவனிலேயெ இருக்கமாட்டார்கள். ராஜ்கோட் போட்டியில் பந்துவீசியபோது பிரேஸ்வெல் தன் முதல் 8 ஓவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக இந்திய பேட்டர்கள் கடைபிடித்தது சரியான அணுகுமுறையே அல்ல." என்றும் அவர் கூறினார். மறுபுறம் நியூசிலாந்து அணியோ இந்தியா போல் அல்லாமல், ஸ்பின்னர்களை தைரியமாகக் கையாண்டதுதான் அவர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது. குறிப்பாக குல்தீப் யாதவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்கள். குல்தீப் இந்தத் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் கான்வே. டேரில் மிட்செல் பல தருணங்களில் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். குல்தீப் ஒரு ஆபத்தான பௌலராகக் கருதப்பட்டாலும், நியூசிலாந்து பேட்டர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. குல்தீப்புக்கு எதிராக அப்படி ஆடியது பற்றி இரண்டாவது போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல், "எங்கள் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக ஆடினார்கள். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார். அதேசமயம், மிடில் ஆர்டர் பிரச்னை என்பது இன்றோ நேற்றோ தோன்றிய பிரச்னை அல்ல என்றும், இந்தியாவுக்குக் காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்னை என்று குறிப்பிட்டார் நானி. "இந்தியாவுக்கு இந்த மிடில் ஆர்டர் பிரச்னை எப்போதுமோ இருந்து வந்திருக்கிறது. என்ன பெரும்பாலும் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார். அவ்வப்போது மொத்தமாக வெளிப்பட்டுவிடும். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல." என்றார் நானி. தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா தோற்ற போதும் கூட சுழலுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை பெருமளவு விவாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் தவிர்த்து, மற்ற போட்டிகளில் இந்திய மிடில் ஆர்டர் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் நானி ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது தான் பிரச்னையா? இந்தியாவின் இந்தத் பேட்டிங் தடுமாற்றத்துக்கு அதிக ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்திருப்பது ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர்களைப் பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இது காரணமா என்று கேட்டால், இல்லை என்று மறுக்கிறார் நானி. "இந்தியாவின் 'டெயில்' அதாவது பின்வரிசை பேட்டிங் மிகவும் பெரியது. பும்ரா, சிராஜ், குல்தீப், வருண், அர்ஷ்தீப் ஆகியோரில் மூவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள் எனும்போது ஆல்ரவுண்டர்கள் தேவை. ஜடேஜாவின் இடத்தில் அக்‌ஷரும், நித்திஷ் இடத்தில் ஹர்திக்கும் வந்துவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும்" என்று சொல்கிறார் அவர். 2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் நித்திஷ் ரெட்டியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார். இந்த பேட்டிங் பிரச்னைக்குக் காரணம் என்ன? ஒரு நிலைத்தன்மை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் நானி. இதுபற்றிப் பேசிய அவர், "வீரர்கள் யாருக்கும் தங்கள் இடம், ரோல் பற்றிய தெளிவு இல்லை. சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆட இடம் கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் ஒரு அரைசதம் அடித்து இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக தைரியமாக ரிஸ்க் எடுத்து ஆடவேண்டிய சூழ்நிலையில் அவர்கள் அப்படிச் செய்யாததன் காரணம் இந்த நிலையற்ற தன்மைதான். தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்றார். அணியில் செய்யும் மாற்றங்கள், அணியின் வரிசையில் செய்யும் மாற்றங்கள் அனைத்துமே வீரர்களைப் பாதிக்கின்றன என்கிறார் அவர். இந்த விஷயத்திலும் கூட இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. முதலிரு போட்டிகளில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், கடைசிப் போட்டியில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்தார். மற்றபடி டாப் 7 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால், இந்திய அணியில் அப்படி இருக்கவில்லை. டாப் 4 ஒரே மாதிரி இருந்தாலும், 5 முதல் 7 வரை பல மாற்றங்கள் நடந்தன. இது இந்தத் தொடரில் இந்தியாவின் 5 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசை: முதல் ஒருநாள் போட்டி: ஜடேஜா, ராகுல், ஹர்ஷித் ராணா 2வது ஒருநாள் போட்டி: ராகுல், ஜடேஜா, நித்திஷ் ரெட்டி 3வது ஒருநாள் போட்டி: ராகுல், நித்திஷ் ரெட்டி, ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு நிலையான இடமும், தெளிவான ரோலும் இருக்கவேண்டும் என்கிறார் நானி. இந்த இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கு அது இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த மிடில் ஓவர் சுழல் பிரச்னைகள் இருந்தாலும், 2027 உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடப்பது ஒரு வகையில் நம்பிக்கையான விஷயம் என்று சொல்கிறார் நானி. இருந்தாலும், அதற்காக ஒரு 20 வீரர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுத்து, அதிலிருந்து உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அதேசமயம், அந்த வீரர்களுக்கும் நிலையான இடமும், தெளிவான ரோலும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yvll0nn3wo
  15. பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும். ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம். pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால். இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.
  16. "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/236454
  17. களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு 19 Jan, 2026 | 05:36 PM இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236451
  18. நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூட, இது நமக்குத் திருப்தி உணர்வைத் தருகிறது. ஆனால் புரதத்தைப் பற்றி குறிப்பாக அது தாவரங்களிலிருந்து வரும்போது பல கட்டுக்கதைகள் உள்ளன. புரதத்திற்காக உங்களுக்கு உண்மையில் இறைச்சி தேவையா? தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை. உண்மை என்னவென்றால், அனைத்து தாவர உணவுகளிலும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் ஒன்பது அமினோ அமிலங்கள் உட்பட 20 அமினோ அமிலங்களும் (புரதத்தின் அடிப்படை அலகுகள்) உள்ளன. இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது, எனவே நாம் உணவின் மூலம் அவற்றைப் பெற வேண்டும். தாவரங்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்கள் போதுமான அளவில் இல்லாததால், அவை 'முழுமையான புரதம்' (complete protein) என்று கருதப்படுவதில்லை என்பதே இந்த குழப்பத்திற்குக் காரணம். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது: நாள் முழுவதும் பல்வேறு வகையான தாவர உணவுகளை உட்கொள்வது. சமச்சீரான உணவில் இது இயற்கையாகவே நடக்கும் என்பதால், உங்கள் புரத இலக்குகளை அடைவது எளிது. பட மூலாதாரம்,Getty Images 'முழுமையான' புரதங்களாக இருக்கும் தாவர உணவுகளும் உள்ளன - அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். வாரந்தோறும் சிறிய அளவில் விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது நோய் அபாயத்தை 10% வரை குறைக்கும் என்று நீண்ட கால ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி இல்லாத உணவை உண்பது கூட நன்மை பயக்கும். உங்கள் உணவில் அதிக தாவர உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் மற்றும் கூடுதல் நார்ச்சத்தையும் (fibre) பெறலாம். இது பிரிட்டனில் உள்ள 90% பேருக்குப் போதுமானதாகக் கிடைப்பதில்லை. எனவே இது ஒரே முயற்சியில் மூன்று நன்மைகளை வழங்குகிறது நமக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவை? வலிமைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 1.6 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர் என்றால், ஒரு கிலோவிற்கு 1.1 முதல் 1.2 கிராம் புரதம் போதுமானது. நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே போதுமான புரதத்தை உண்கிறோம், எனவே நாம் உணவில் கூடுதலாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் அதை எங்கிருந்து பெறுகிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலும் இது விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படுவதால், அவற்றுடன் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை சேர்கின்றன. அதிக புரதமுள்ள தாவர உணவுகள் எவை என்பது இங்கே விவரித்து கொடுக்கப்பட்டுள்ளது. 1. சோயா (Soy) பட மூலாதாரம்,Getty Images சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது, கொலஸ்ட்ரால் இல்லை. இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதிக புரதம் கொண்டது. இது பல்துறை சார்ந்தது மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு அடிப்படையாக அமைகிறது. டோஃபுவில் (Tofu) 100 கிராமிற்கு 7-15 கிராம் புரதம் உள்ளது. சில்கன் டோஃபு குறைந்த அளவைக் கொண்டிருந்தாலும் (100 கிராமிற்கு 7 கிராம்), அதை சாஸ்கள் அல்லது சூப்களில் கலந்து கிரீமி அமைப்பைப் பெறலாம் - இது புரதத்தைப் பெறுவதற்கான எளிதான வழி. டெம்பே (Tempeh) முழு சோயா பீன்களையும் பயன்படுத்துகிறது மற்றும் நொதிக்க வைக்கப்படுகிறது, எனவே குடலில் ப்ரீபயாடிக் (prebiotic) விளைவைக் கொண்டுள்ளது. இதில் 100 கிராமிற்கு 20 கிராமுக்கும் அதிகமான புரதம் உள்ளது. எடமேம் (Edamame) என்பது இளம் சோயா பீன்கள், 100 கிராமிற்கு 11 கிராம் புரதம் கொண்டது. மிசோ (Miso) என்பது நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன் பேஸ்ட் - 100 கிராமிற்கு 13 கிராம் புரதத்துடன் ஒரு சிறந்த சுவையை அளிக்கிறது. இனிப்பு சேர்க்கப்படாத சோயா தயிரில் புரதம் அதிகம். சோயா பால் அனைத்து தாவர அடிப்படையிலான பாலை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது (100 மில்லிக்கு 3.5 கிராம்). 2. பயறு வகைகள் (Legumes) பட மூலாதாரம்,Getty Images பீன்ஸ் மற்றும் கொண்டைக் கடலையில் பொதுவாக 100 கிராமிற்கு 6-9 கிராம் புரதம் உள்ளது. இவை பாஸ்தா, சாலட், சூப் மற்றும் கறிகளில் சேர்க்க ஏற்றவை. பருப்புகளில் பொதுவாக 100 கிராமிற்கு 11-24 கிராம் புரதம் உள்ளது. இவற்றை அரிசி அல்லது தானியங்களுடன் சேர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்துக்காகப் பயன்படுத்தலாம். 3. செய்டான் (Seitan) இது கோதுமை குளூட்டனிலிருந்து தயாரிக்கப்படுகிறது, 100 கிராமிற்கு 25 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. சோயா ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. 4. நியூட்ரிஷனல் ஈஸ்ட் (Nutritional yeast) இந்த மசாலாப் பொருள் 50% புரதத்தைக் கொண்டது. ஒவ்வொரு தேக்கரண்டி நியூட்ரிஷனல் ஈஸ்டிலும் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. எனவே இது எந்த உணவிலும் புரதத்தை அதிகரிக்க சுலபமான வழி. இது கொட்டை (nutty) மற்றும் சீஸ் (cheesy) போன்ற சுவையைக் கொண்டுள்ளதுடன், சாஸ்களைக் (sauces) கெட்டியாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. சத்துணவு ஈஸ்ட் மற்றும் பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதால், ஒருமுறை பரிமாறப்படும் அளவில் 16 கிராம் புரதத்தைக் கொண்டுள்ள 'வீகன் மூசாக்காவில்' இதனை முயற்சித்துப் பாருங்கள்." 5. முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் பட மூலாதாரம்,Getty Images தாவரப் புரதங்களைப் பற்றிப் பேசும்போது முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை மறந்துவிடாதீர்கள். "ஒரு வேளை உணவில் ஏராளமான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைச் சேர்ப்பதற்கு 'பவர் பவுல்' (புத்தா பவுல் அல்லது தானியக் கிண்ணம்) ஒரு சிறந்த வழியாகும். வெள்ளை அரிசிக்குப் பதிலாக, 100 கிராமிற்கு சுமார் 7-9 கிராம் புரதம் கொண்டுள்ள குயினோவா மற்றும் பக்வீட் ஆகியவற்றின் கலவையை நான் பயன்படுத்த விரும்புகிறேன்." "நீங்கள் இதன் மேலே கொட்டைகள் மற்றும் விதைகளைச் சேர்த்தால் (ஒரு மேசைக்கரண்டியில் சுமார் 2–4 கிராம் புரதம் இருக்கும்), அவை புரதத்துடன் கூடுதல் மொறுமொறுப்பையும் வழங்குகின்றன. சாலட், சூப் மற்றும் ஸ்டூக்களுக்கு (stews) உடனடி 'டாப்பராக' (மேலே தூவுவதற்கு) பயன்படுத்துவதற்காக, நான் இவற்றை ஓவனில் சிறிது தமாரி (tamari) அல்லது சோயா சாஸ் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து வறுக்க விரும்புகிறேன். இதற்காக 'துக்கா' (Dukkah) எனும் நறுமணப் பொருள் கலவையும் மிகச் சிறந்தது." ஓட்ஸும் ஒரு முழு தானியமாகவும் புரதச் சத்துக்கான ஆதாரமாகவும் (100 கிராமிற்கு 10.9 கிராம்) கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலையில் நீங்கள் முதலில் உட்கொள்ளும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மூலம் உங்கள் புரதத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதனுடன் நார்ச்சத்துக்காகப் பெர்ரி பழங்களையும், மொறுமொறுப்பு மற்றும் கூடுதல் புரதத்திற்காகக் கொட்டைகளையும் அடுக்குகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்." சிறிய அளவு விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது, நீங்கள் ஆரோக்கியமாக வயதாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். தாவரப் புரதங்கள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தவை; குறைந்த நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்துவதோடு குறைந்த கார்பன் வெளியேற்றத்தை உருவாக்குகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0y4eg0y3jo
  19. பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான் பிரதமர் தீர்மானம் Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 04:14 PM ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி, அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு வியூகத்தை வலுப்படுத்தவும், பொருளாதார செலவினங்களை அதிகரிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த அதிரடி தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜன 23) ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபையை (Lower House) கலைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு பெப்ரவ 08 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா தகாய்ச்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களம் இதுவாகும். பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள மொத்தம் 465 இடங்களுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமருக்கு மக்களிடையே நிலவும் பலமான ஆதரவைப் பயன்படுத்தி, ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) செல்வாக்கை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார். பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பொருளாதார ஊக்கத்தொகைகளை வழங்கவும் மேலதிகமாக நிதி தேவைப்படுகிறது. இதற்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், ஜப்பான் மக்கள் தற்போது சந்தித்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு (Cost of Living) இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். அண்மைய கருத்துக்கணிப்பில் 45 சதவீதமான மக்கள் விலைவாசி அதிகரிப்பையே தங்களின் முதன்மையான கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்கு 16 சதவீதம் மக்களே முக்கியத்துவம் அளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236436
  20. திருட்டு, ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் நோக்கம் Jan 19, 2026 - 05:07 PM திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 'பாலதக்ஷ மாவத்தை' மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். "திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றிக்கொண்டு, திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வர்த்தக நிலையங்கள், ஜனாதிபதி செயலகம், பெருமளவான ஹோட்டல்கள் இப்பகுதியை அண்மித்து அமைந்துள்ளதால் இவ்விடம் குறிப்பிடத்தக்க வாகன நெரிசல் நிலவிய ஒரு இடமாகும். அந்த வாகன நெரிசலுக்குத் தீர்வாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க சில வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும். ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது. பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள விஜயத்தின் பயனாக, பொலிஸ் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது. 2,700 மில்லியன் ரூபாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மேம்பாலத்திற்கு, நிர்மாணப் பணிகள் தாமதமானதால் மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிட்டது. இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனாகவும் அமையும். இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அமைச்சர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkl3cn8o044wo29nuv7za74u
  21. கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் Jan 19, 2026 - 04:31 PM திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkl21ty3044to29nb21v87yo
  22. இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் இரண்டாவது வெற்றிகளுடன் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளன 19 Jan, 2026 | 05:52 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தத்தமது இரண்டாவது வெற்றிகளை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்பை அதிகரித்துக்கொண்டுள்ளன. அதேவேளை ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவு கிட்டவில்லை. ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி குழு போட்டியில் ஸிம்பாப்வேயை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சிம்பரஷே மட்ஸெங்கெரெரே (45 ஆ.இ.), துருவ் பட்டேல் (36), கியான் பிலிங்நோட் (33), டெட்டெண்டா சிமுகோரோ (30 ஆகியோர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மெனி லம்ஸ்டென் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. இங்கிலாந்து அதன் முதல் இரண்டு விக்கெட்களை 42 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆனால், அணித் தலைவர் தோமஸ் ரியூ (86 ஆ.இ.), பென் மேயெஸ் (77 ஆ.இ) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர். பந்துவீச்சில் ஷெல்டன் மஸ்விட்டோரேரா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ. ஆப்கானிஸ்தான் வெற்றி விண்ட்ஹோக் ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணியை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 138 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது. காலித் அஹ்மத்ஸாய் (34), ஒஸ்மான் சதாத் ஆகிய இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர. இந் நிலையில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்கள் சரிந்தன. ஆனால், ஒஸ்மான் சதாத் (88), அணித் தலைவர் மஹ்பூப் கான் (86) ஆகிய இருவரும் 77 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். மத்திய வரிசையில் அஸிஸ்உல்லா மியாக்கில் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜக்கீன் பொல்லார்ட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விட்டெல் லோவெஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜுவெல் அண்ட்றூ (57), ஜக்கீம் பொல்லார்ட் (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்சாய் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காதிர் ஸ்டானிக்சய் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மெஹ்பூப் கான் போட்டியில் முடிவில்லை புலாவாயோ, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண டி குழு போட்டியின் இடையில் மழை பெய்ததால் ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது. 22 ஓவர்கள் நிறைவில் ஐக்கிய அமெரிக்கா 6 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், 7ஆம் இலக்க வீரர் நிட்டிஷ் சுதினி அபார சதம் குவித்ததுடன் 8ஆம் இலக்க வீரர் ஆதித் கப்பாவுடன் 7ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். நிட்டிஷ் சுதானி 133 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் கடைசி 28 ஓவர்களில் நான்கு வீரர்களுடன் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆதித் கப்பா 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ளின் மோரி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மேசன் க்ளார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து இளையோர் அணி ஒரு ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் பழை பெய்ததால் அதன் பின்னர் ஆட்டம் தொடரப்டாமல் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/236375
  23. நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு Jan 19, 2026 - 03:08 PM அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜிட்டல் போர்டிங் பாஸ்' நாசாவால் வழங்கப்படும். இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுவினர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள், ஆனால் அதை சுற்றி பறப்பார்கள். விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த 'போர்டிங் பாஸ்' முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம் https://adaderanatamil.lk/news/cmkkz3lfu044mo29nvzwngewu
  24. நீங்கள் இணைத்த காணொளி பார்த்தேன். நல்ல முயற்சி என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். அரூஸ் சொல்வதுபோல அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா எடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது, அதேபோல இம்முறையும் தமிழர்களை தனது நலன்களுக்காக மட்டுமே பாவித்துவிட்டு எறிந்துவிடுமா என்பதிலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மேலும், தனது பலப் பிராந்தியத்திற்குள் இருக்கும் சிறிய நாடுகள் அல்லது இனங்கள் மீது அப்பிராந்திய வல்லரசுகள் கொண்டிருக்கும் செல்வாக்கென்பது உண்மைதான். எம்மாலும் இந்தியாவை மீறிச் செயற்பட முடியாது. எமக்கெதிராக சோனியா தலைமையிலான காங்கிரஸின் அன்றைய தலைமை செய்த குற்றங்களை விசாரிப்பதன் மூலம் எமக்கான நீதியையும் தீர்வையும் பெற்றுவிடலாம் என்பதே நான் கூற வந்தது. ஆனாலும் அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் எந்நாடும் இதுகுறித்து எமக்காக உதவ முன்வரப்போவதில்லை. நீங்கள் இணைத்த காணொளி பல விடயங்களைச் சொல்லியிருக்கிறது. சிந்தனையினையும் தூண்டியிருக்கிறது. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. எந்த நிலையிலும் நிதானம் இழக்காது கருத்தாடும் உங்களின் பாணி தனியானது. வாழ்த்துக்கள்!
  25. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.