Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பெத்தல் இந்தியாவை பேர்த்துட்டான் ...இந்திய தப்பினது தம்பிரான் புண்ணியம் சஞ் சுவுக்கு...சுக்கிரதசை ஆரம்பம்
  3. Today
  4. நியூஸிலாந்து கப் தூக்கினால் ஒருத்தருக்கும் புள்ளி இல்லை😂
  5. சின்னச் சின்ன நிகழ்வுகள்தான் போட்டியின் திசையை மாற்றியது. அக்ஸரின் இரண்டு பிடிகள். பாண்டியாவின் கடைசிப் பந்துப் பரிமாற்றம். பாண்டியாவின் எறி. பெத்தலை ஓட்டமிழக்க வைத்தது. இங்கிலாந்து தவற விட்ட சாஞ்சுவின் பிடி.
  6. திருமண விழாவிற்கு சோடியாக வந்த விஜய், திரிஷா. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1406221364085514 👈 சோடிப் பொருத்தம் எப்படி உள்ளது... ப்ரோ. 😂
  7. சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்! 05 Mar, 2026 | 05:19 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் முன்வைக்கப்படும் இந்த கேள்விகளுக்கு பதிலை ஆராய்வது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இலங்கை இராணுவத்தால் தேடப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் 2000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இதில் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே இது தொடர்பான புகைப்படத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றனர் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற இந்த மூவரும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பியோட முயற்சித்த நிலையில் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. எனவே இந்த சம்பவத்தையும் மீண்டும் விசாரணை செய்தால் தற்போதைய விசாரணைகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இவர்கள் வைத்த ஆயுதங்களை இவர்களே தற்போது மீள வழங்குகிறார்கள். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். அது தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒருபகுதி பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது. ஆகவே விரிவான பதிலை நாளை (இன்று வெள்ளிக்கிழமை ) முன்வைக்கிறேன் என்றார். சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்!
  8. பெத்தல். அருமையான ஆட்டம். இந்தியாவுக்குப் பீதியக் குடுத்துவிட்டான். மிக இலகுவாக சுழல் பந்தாளர்களை எதிர் கொண்டார்.
  9. இந்தியா வெற்றி. இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு
  10. ஆறே பந்துகள். 30 ஓட்டங்கள். பாண்டியாவின் அந்தப் பரிமாற்றம். Excellent.
  11. 200 தாண்டியாச்சு. 18 பந்தில் 45. யார் அந்த வெற்றியாளர்
  12. இன்றைக்கு வருணுக்கு நல்ல அடி. 64 ஓட்டங்கள் குடுத்தார்.
  13. வடக்கின் போர் ஆரம்பம் 05 Mar, 2026 | 03:18 PM வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 119 வது ஆண்டாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. படங்கள் - ஐ. சிவசாந்தன் வடக்கின் போர் ஆரம்பம்
  14. அப்பாடா. ஜாக்ஸத் தூக்கிட்டாங்கள். அக்ஸர் மீண்டும் ஒரு அருமையான பிடி. 36 பந்தில் 82 ஓட்டங்கள்
  15. Live 2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup India 253/7 England (13.6/20 ov, T:254) 172/5 England need 82 runs in 36 balls. Current RR: 12.28 • Required RR: 13.66 • Last 5 ov (RR): 60/1 (12.00) Win Probability ENG 8.53% IND 91.47%
  16. இங்கிலாந்தும் தாங்கள் சழைத்தவர்கள் இல்லை என்று காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 40 பந்தில் 88 ஓட்டங்கள் எடுக்க வேணும்
  17. இங்கிலாந்தும் ஒரு பிடி பிடிக்குதே அண்ணை! சின்ன மைதானம் என நினைக்கிறேன்.
  18. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபாரன் தகிசாதே பிபிசி பாரசீக சேவை 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது. தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர். இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன. "கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது நாங்கள் அனுபவித்ததை விட இப்போது நடப்பவை மிகவும் மோசமானவை" என்று கூறிய சலார், "வெடிப்புகளின் எண்ணிக்கை, அழிவு, இப்போது என்ன நடக்கிறது என்பது எல்லாமே நம்ப முடியாததாக இருக்கிறது" என்கிறார். சலார் தெஹ்ரானில் வசிக்கிறார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் முதல் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இரானியத் தலைநகரம் பல்வேறு கட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,EPA சமீபத்திய வான்வழித் தாக்குதல் ஒன்றை விவரித்த சலார், "வெடிப்பு அதிர்வுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை உலுக்கின. கண்ணாடி உடைந்து சிதறாமல் இருக்க நான் ஜன்னல்களைத் திறந்து வைத்தேன். வீடு முழுவதும் அதிர்ந்தது..." என்றார். மேலும், "ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போலத் தோன்றுகிறது. தாக்குதல்களின் அளவு மிக அதிகமாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். தெஹ்ரானில் வசிக்கும் பாபக் என்பவர், தாக்குதல்கள் தொடங்கியபோது மக்கள் உணவைச் சேமித்து வைக்க வெளியே செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார். கடந்த 12 நாள் போரை விட இப்போதைய தாக்குதல்கள் மிகவும் தீவிரமானவை என்றும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்குதல்கள் நடப்பதாக அவரும் உணர்ந்தார். "கடந்த முறை, வான் பாதுகாப்பு அமைப்பின் பதில் தாக்குதல் சத்தம் கேட்டபோது, தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிந்தோம். இப்போது வித்தியாசமாக உள்ளது. திடீரென்று எங்கோ ஒரு வெடிப்பு அதிர்வும் அழிவும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது" என்கிறார் பாபக். தெஹ்ரானுக்கு வடமேற்கே சுமார் 275 கிமீ தொலைவில் உள்ள ஜஞ்சானில் காவே வசிக்கிறார். "முதல் மூன்று நாட்களில், எங்கள் நகரம் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்பட்டது. போர் விமானங்கள் இடைவிடாது கடந்து செல்லும் ஒரு பகுதியில் நாங்கள் வசிக்கிறோம்," என்று காவே கூறினார். மேலும், வான்வழித் தாக்குதல்கள் நடந்த இடங்களிலிருந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புகைப் படலங்கள் எழுவதால், போரின் முதல் நாளுக்குப் பிறகு வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் காவே தெரிவித்தார். "ஒரே நேரத்தில் அழகாகவும் பயங்கரமாகவும் இருக்கும் ஒரு காட்சி இது" என்கிறார் காவே. பட மூலாதாரம்,Majid Saeedi / Getty Images படக்குறிப்பு,ஒரு வெடிப்பு ஏற்பட்ட பிறகு புகை மூட்டம் எழும்பும் காட்சியை, மலைச்சரிவிலிருந்து பார்க்கும் ஆண்கள் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் சலார் தனது நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைப் பற்றி, குறிப்பாகத் தனது தாய் மற்றும் தந்தையைப் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார். "நான் எனது பெற்றோரை வடக்குத் திசைக்கு அனுப்பி வைத்தேன்," என்று அவர் கூறினார். இருப்பினும் அங்கிருக்கும் ஆபத்தின் அளவு குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. "ஆனால் தெஹ்ரானில் உள்ள அவர்களது வீட்டை விட அது பாதுகாப்பானது" என்கிறார் சலார். அவரது பெற்றோரின் வீடு வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் பல ராணுவத் தளங்கள் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ளது. "எனது அம்மா மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவர் மிகவும் பயந்திருந்தார்," என்று கூறிய அவர், 1980-களில் நடந்த எட்டு ஆண்டுகால இரான்- இராக் போரின் போது அவர் அனுபவித்த எதையும் விட தற்போதைய தாக்குதல்கள் மோசமானவை என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், அதிகமான மக்கள் தெஹ்ரானை விட்டு வெளியேறுவதை சலார் காண்கிறார், இருப்பினும் இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. "எனது நண்பரின் பாட்டி நோய்வாய்ப்பட்டுள்ளார், அவர்களால் அவரை இடமாற்றம் செய்ய முடியாது." காவே தானும் தனது நண்பர்களும் தங்களது வீடுகளுக்கும் இடையே மாறி மாறிப் பயணம் செய்து வருவதாகக் கூறினார். "ஒரு நண்பரின் வீட்டிலிருந்து வெளிப்பகுதியை அதிகம் பார்க்க முடியாது என்பதால், அது ஒருவித மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வையும் தகவல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வையும் உருவாக்குகிறது. உயிர்பிழைக்கப் போராடுவதோடு சேர்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது பேணுவதும், நம்பகமான செய்திகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதுமே எங்களது மிகப்பெரிய கவலையாக உள்ளது" என்று அவர் கூறினார். போரின் முதல் நாளில் அவரது இணையத் தொடர்பு நண்பகலில் துண்டிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிடைத்தது. "என்னால் எப்போதெல்லாம் இணையத்தில் இணைய முடிகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாத இரானுக்கு வெளியே இருக்கும் நண்பர்களுக்கு, தகவல்களை அனுப்ப முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். காவே மற்றும் சலார் இருவரும் விபிஎன்-களை பயன்படுத்துகின்றனர். இவை இரானிய அரசாங்கத்தால் முடக்கப்பட்ட இணையதளங்களை அணுக அவர்களுக்கு உதவும் சேவைகள். ஆனால், அதுவும் எளிதாக இல்லை. "இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. விபிஎன் மூலம் என்னால் எப்போதாவதுதான் இணைய முடிகிறது. அதுவும் பொதுவாக நண்பகல் வேளையில்தான்" என்று சலார் கூறினார். பட மூலாதாரம்,BBC / Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தாக்குதல் நடந்த பிறகு, மீட்பு பணியாளர்கள் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்கின்றனர் குறுஞ்செய்தி மூலம் வரும் எச்சரிக்கைகள் "ஒவ்வொரு நாளும் அவர்கள் (இரானியப் பாதுகாப்புப் படைகள்) குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்புகிறார்கள், நாங்கள் வெளியே சென்றால் எங்களை மிகக் கடுமையாகக் கையாளுவோம் என்று எச்சரிக்கிறார்கள்" என்று சலார் கூறினார். "உங்களில் யாராவது வெளியே வந்து போராட்டம் நடத்தினால், 'உங்களை இஸ்ரேலியக் கூட்டாளிகளாகக் கருதுவோம்' என்று ஒரு செய்தி வந்தது" என அவர் குறிப்பிட்டார். கீழ்ப்படியாத எவரும் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதை அந்தச் செய்தியின் தொனி உணர்த்துவதாக அவர் கருதுகிறார். மக்கள் பொருளாதாரா ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர். "ஜனவரி மாதம் ஏற்கனவே கடினமாக இருந்தது" என்கிறார் பாபக். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அதிகாரிகளால் இணையம் முடக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஆண்டின் தொடக்கத்தில் பணிக்குச் செல்வது நிறைய பேருக்கு கடினமாக இருந்தது. "அரசு ஊழியர்கள் போன்ற மாதச் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர, பலரால் குளிர்காலத்தில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இது பல குடும்பங்களைப் பாதித்துள்ளது." பட மூலாதாரம்,supplied அதி உயர் தலைவரின் மரணம் அன்றாட ஆபத்துகள் மற்றும் பிரச்னைகளுக்கு மேலாக, இந்தப் போர் தங்களது நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தத்தை குறிக்கும் என்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சனிக்கிழமையன்று நடந்த வான்வழித் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அவர்கள் அதுகுறித்து சிந்தித்து வருகின்றனர். "நாங்கள் முதலில் அதை நம்பவில்லை" என்று கூறிய காவே, "அந்தத் தருணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் எப்போதும் கற்பனை செய்திருந்தேன், ஆனால் அப்படி இருக்கவில்லை," என்றும் கூறினார். இதுகுறித்துப் பேசிய சலார், "ஒரு தனி நபரின் மாயையாலும் பைத்தியக்காரத்தனத்தாலும், எனது வாழ்நாளின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளும், என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். ஆனால் அவர் மட்டும் ஒரே நொடியில் அகற்றப்பட்டுவிட்டார் என்ற எண்ணம் எனக்கு உண்மையான கோபத்தை ஏற்படுத்தியது." "அவரது மரணச் செய்தி இரவு 10:30-11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் உற்சாகக் குரல்களுடன் கூடிய ஆரவாரத்தைக் கேட்க முடிந்தது," என்று தெரிவித்தார். மேலும், "நான் அத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் சூழல் மிகவும் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து நடந்து வரும் போர் மற்றும் இரானில் நிலவும் கடுமையான பாதுகாப்புச் சூழல் காரணமாக, காமனெயி மரணம் குறித்த பரவலான எதிர்வினையை கணிப்பது சாத்தியமில்லை. சில மக்கள் கொண்டாடுவதற்காகத் தெருக்களில் இறங்கினர், மற்றவர்கள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட பொது துக்க ஊர்வலங்களில் இணைந்தனர். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் மையப்பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பின் அழிக்கப்பட்ட கட்டடங்களை பார்வையிடும் காவல்துறையினர் எதிர்காலம் குறித்த பார்வை இந்தப் போர் அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது நாட்டிற்கோ எத்தகைய அர்த்தத்தைத் தரும் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. "எங்களால் முன்பு போல இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்ற சலார், "பலர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்" எனக் குறிப்பிட்டார். மேலும், இரானின் முன்னாள் அரச குடும்பத்துடைய மகனின் ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு, "வெளிநாடுகளில் இருப்பவர்கள், குறிப்பாக முடியாட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள், உண்மையில் நாங்கள் எதை அனுபவிக்கிறோம் என்பதை அறியவில்லை" என்று கூறிய அவர், "தாக்குதல்களை இன்னும் சரியாகத் தொடங்கவில்லை என்று டிரம்ப் கூறி வருகிறார். வேறு எதை அல்லது எப்படி தாக்க போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார். "நான் அடிக்கடி வெளியே செல்கிறேன். பக்கத்துக்கு வீட்டாருடனும் கடைக்காரர்களுடனும் பேசுகிறேன்," என்று கூறிய அவர், "எல்லாவற்றிற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் நம்புகிறார்கள். போர் நீண்டதாகவோ அல்லது ஆபத்தானதாகவோ மாறும் என்று அவர்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்கவில்லை" என்கிறார். அதேபோல், "நாங்கள் நினைத்தது போல இந்தப் போர் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது என்று நான் உணர்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். "ஆனாலும், எனது நம்பிக்கை குறையவில்லை, சொல்லப்போனால், அது ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது" என்ற அவர், "ஒரு கடினமான அறுவை சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் வலியை முழுமையாக உணர்ந்து, அதைச் செய்து கொள்ளத் தீர்மானித்த ஒரு முதியவரைப் போல நான் உணர்கிறேன்" மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், "இந்த 'அறுவை சிகிச்சைக்குப்' பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் இதைச் செய்யாவிட்டால், நிச்சயமாக இதைவிட மோசமான ஒன்று நடந்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." "குறைந்தபட்சம் இந்த வழியில், வாழ்வதற்கும் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பிபிசி பாரசீக சேவை என்பது பிபிசி நியூஸின் பாரசீக மொழிச் சேவையாகும். இது இரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டாலும் அல்லது தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் - உலகம் முழுவதுமுள்ள 24 மில்லியன் மக்களால் பெரும்பான்மையாக இரானில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன?
  19. புதிய பார்வை. பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
  20. ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.
  21. நீங்கள் இங்கே இனம் மதம் சார்ந்து தூவும் விசம் கண்டிக்கத்தக்கது 😡
  22. கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம் 05 Mar, 2026 | 06:42 PM மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர். இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது. வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர். அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.