Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஆமென்! sudumanalMarch 4, 2026 மத்திய கிழக்கு போர்க் குறிப்பு கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப்ஸ்ரைன் வக்கிரமாளிகைக்குள் நடத்தப்பட்டது வரையான கொடூரமான செயல்களெல்லாம் மேற்குலக ஜனநாயகத்தின் பண்பை தோலுரித்துக் காட்டுபவை. அவர்களின் ஜனநாயகக் கட்டமைப்புக் கூட காலனிய நவகாலனிய சுரண்டல்களால் பெறப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார அடித்தளத்தைக் கொண்டவை. சலுகைபெற்ற மக்களாக (நாம் உட்பட) மேற்குலக நாடுகளில் வாழ இதுவே காரணம். இதை இந்த மக்கள் இழக்கத் தயாராக இல்லை. எத்தனையோ மனிதாபிமானப் போராட்டங்களையும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் கண்ட மேற்குலக வீதிகள் காலனிய/நவ காலனிய வளச் சுரண்டலுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தைத் தன்னும் கண்டதாக வரலாறு இல்லை. மேற்குலகம் வலியுறுத்தும் இந்த ஜனநாயக அளவுகோலை சர்வ உலகத்துக்குமான பொதுமையாக பிரதியெடுத்து சிந்திக்கும் அறிவுநிலையில் எம்மை நிலைநிறுத்தினால், மனிதஜீவியின் மேற்சொன்ன அடங்க மறுக்கும் இயல்பை விளங்கிக்கொள்ள முடியாது. அதுவே நூற்றாண்டு கால பல்வகைப் பண்பாட்டுத் தொடர்ச்சிகொண்ட மனித இன நாகரிகங்களின் பன்முக வளர்ச்சிப் பாதைகளை தேர்வு செய்கின்றது. நாகரிகம் என்பது மேற்குலகப் பண்பாட்டை அச்சும் அசலுமாக பிரதிபலிப்பதல்ல. அது ஒற்றைப் படித்தானதுமல்ல. அதை மற்றவர்கள் மீது மேற்குலகம் திணிப்பது வெள்ளை மேலாதிக்கம் கொண்ட காலனிய மனநிலையிலிருந்து பிறந்தது. அது ஐரோப்பிய மையவாத தன்மை கொண்டது. அவர்கள் வலியுறுத்துகிற இந்த கருத்தமைவை அப்படியே ஏற்றுக் கொள்வதானது காலனிய சிந்தனைமுறைக்குள் அகப்பட்டு வெளியேற முடியாத நிலையின் வெளிப்பாடு ஆகும். எனவே நூற்றாண்டு கால இஸ்லாமியப் பண்பாட்டை நீக்கம் செய்து ஈரானை புரிந்துகொள்ள முடியாது. ஈரானில் மதத் தலைவர் இருக்கிற அதே நேரம் ஈரானில் பாராளுமன்ற (ஜனநாயகக் கட்டமைப்பு) முறைமையும் செயல்வடிவத்தில் உள்ளது. இஸ்லாமியப் பண்பாட்டை வைத்து இப்போதும் மன்னராட்சி செய்கிற நிலையோடு ஒப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக ஈரானை பார்க்க முடியும். அதன் ஜனநாயகப் பண்பானது மதப் பண்பாட்டிலிருந்து உருவானதாக இருக்கிறது. இந்தப் பாரம்பரிய பண்பாட்டை மறுதலிப்பதோ ஏற்றுக்கொள்வதோ ஈரான் மக்களினது தேர்வுக்கு உரியது. காலம்-வெளி உடனான உலக இயங்குநிலையில் இத் தேர்வு மாற்றமடையவும் கூடும். (என்னளவில் அரசை மத நீக்கம் செய்ய வேண்டும் என்பது ஈரானுக்கும் பொருந்தும் என நம்புகிறபோதும், ஈரான் மக்களது தேர்வை நான் புரிந்துகொள்ளவே செய்கிறேன்). ஈரானின் அரசுக் கட்டமைப்பினுள் வைத்தே அதன் ஜனநாயக மறுப்புக்கு எதிராக வீதியில் மக்கள் இறங்கினார்கள். (அதற்குள் மொசாட் புகுந்துவிளையாடி சேறாடியது வேறு கதை). அவர்கள் மதப் பண்பாட்டை புறக்கணித்துவிட்டு, அரசுக்கு எதிராக இறங்கவில்லை. அதனாலேயே மதத் தலைவர் கமெய்னியின் கொலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்னும் சொல்வதானால் ஈரானிய மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிவாங்க வேண்டும் என அவர்கள் -அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சுக்கு நடுவிலும்- வீதியில் இறங்கி ஊர்வலம் போனார்கள். மற்றைய நாடுகள் மீது கமெய்னி பயங்கரவாதச் செயல்களை செய்தார் என்பதற்கும், ஈரான் செய்தது என்பதற்கும் என்ன ஆதாரங்களை அமெரிக்கா முன்வைக்கிறது. உலகம் முழுவதும் பல ஆயிரம் பேரைக் கொன்றார்கள் என சொல்கிறது. அது எங்கு நிகழ்ந்தது என அவர்களால் முன்வைக்க துப்பில்லை. (ஈரான்-ஈராக் இடையிலான போரை எட்டு வருடங்களாக நிகழ்த்தியதில் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பங்குதான் இருக்கிறது). வியட்நாமிலிருந்து வெனிசுவேலா வரை மில்லியன் கணக்கான மக்களை கொன்ற அமெரிக்காவும், பலஸ்தீன மக்களை நக்பா படுகொலையிலிருந்து காஸா படுகொலை வரையான தொடரும் இரத்தக்கறை வரலாற்றையும் கொண்ட இஸ்ரேலும் இதைச் சொல்வது வேடிக்கையானது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் மேற்கொள்வதற்கான காரணம் இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஆகும். இதில் கொல்லப்படும் பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் குறித்து இஸ்ரேலிய அரசுக்கு எந்தக் கவலையுமில்லை. அமெரிக்கா என்ற ஏகாதிபத்தியம் தனது உளவுப்படை மூலம் தான் விரும்பாத ஆட்சிகளை திரைமறைவில் நின்று கவிழ்த்திய அல்லது அத் தலைவர்களைக் கொல்கிற வேலையை நீண்ட காலமாகவே செய்துவந்தது. கம்யூனிச எதிர்ப்பை வைத்து வியட்நாமுடன், நிக்கரகுவாவுடன் போர் புரிந்தது. சோவியத் ஆதரவு ஆப்பானிஸ்தானுடன் போரிட அல்கைடா என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதனூடாக போரிட்டது. பின் அதே அல்கைடா அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியது இன்னொரு கதை. சோவியத் இன் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மறைமுகமாக அன்றி, நேரடியாகவே நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியது. தனது நலனுக்கு குறுக்கே நின்ற அரசுகளை அச்சுறுத்தியது. இதன் தொடர்ச்சி இன்று ஈரான் வரை வந்து நிற்கின்றது. இதற்குமுன்னர் வெனிசுவேலாவுக்குள் புகுந்து அதன் அதிபர் மடுரோ அவர்களை கடத்தியது அமெரிக்கா. உலகம் மௌனமாக செயலற்று பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவகை உலக சட்டவிதிகளுக்கோ, தார்மீக அறத்துக்கோ உட்படாத இந்தச் செயலை அமெரிக்கா செய்து காட்டியபோதும், ஐநா கூட செயலற்றே இருந்தது. இதே வகைப்பட்ட அணுகுமுறையை ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும். ஈரானின் இன்றைய அரசை விரும்பாத ஈரானிய மக்கள்கூட மீண்டும் ஒரு முடியாட்சியை விரும்பப் போவதில்லை. ஈரானிய அரசோடு தீர்த்துக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இந்த மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதற்காக வீதிக்கு இறங்கிப் போராடவும் செய்தார்கள். அதற்குள் ஊடுருவி மொசாட் ரெஹ்ரான் கிளர்ச்சியை (2014 உக்ரைன்) மைடான் கிளர்ச்சி போன்று மாற்ற எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அதில் ஈரான் அரசு நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம். அந்தக் கணக்கை ஈரானிய மக்களே அரசுடன் சுயமாகத் தீர்த்துக் கொள்வார்கள். அல்லது ஒரு சுயபரிசீலனையினூடாக அரசு தன்னை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் பணியை அமெரிக்காவோ இஸ்ரேலோ மேற்குலகோ காலனிய மனப்பான்மையுடன் அணுகி தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தவகை தலையீடுகளான ஆட்சி மாற்ற சதிகள், தலைவர்களை கடத்துவது, கொலைசெய்வது என்ற சர்வாதிகார செயல்களை அடையாளம் கண்டு முதன்மையில் வைத்து எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்குப் பலியாகும் நாடுகளை குற்றப்படுத்துவது அல்லது பலியாக்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. (அது ஒடுக்கும் எந்த அரசையும் நியாயப்படுத்துவது என பொருள் கொள்வதாகாது). அத்தோடு அமெரிக்கத் தலையீட்டைக்; கோருவது அல்லது அதை நியாயப்படுத்துவது ஒரு தேர்ந்த அரசியல் பார்வையும் அல்ல. உண்மையில் அது ஆபத்தானது. அதிகாரமற்ற மெலிந்த நாடுகளின்; கதவுகளையும் இந்தப் பிசாசு எதிர்காலத்தில் தட்டவும் கூடும். அதற்கு பலியாவது உங்கள் நாடாகவும்கூட இருக்க முடியும் என்ற புரிதலாவது தேவை. இப்படியாக அமெரிக்கா கதவுகளை உடைத்துத் திறந்து ஜனநாயகத்தை மலரச் செய்துகாட்டிய ஒரு நாட்டையாவது உதாரணமாகக் காட்ட முடியாது. 1979 இல் ஏற்பட்ட ஈரானியப் புரட்சியின் பின் தமக்கு ஒவ்வாத அரசு என்ற ஒரேயொரு காரணத்துக்காக மேற்குலகு பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்தப் புற அழுத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்து அதன்மூலம் மக்களின் வாழ்நிலையை நெருக்கடிக்கு உள்ளாக்கி, மக்கள்; அரசுக்கு எதிராக கிளர்ந்து எழப் பண்ணுகிற கேடுகெட்ட உத்தி; அது. இந்த அணுகுமுறை வெனிசுவேலாவுக்கு எதிராகவும் செயற்படுத்தப்பட்டது. உச்சபட்சமாக, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிசத்துக்கு எதிரான வெறித்தனத்தோடு கியூபாவுக்கு எதிராக இன்றுவரை செயற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடு கியூபா. இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையேயும் மத்தியகிழக்கில் அதிகளவு கல்வியறிவு படைத்தவர்களாகவும், விஞ்ஞானம் உட்பட பல துறைகளில் முன்னேறியவர்களாகவும், பாராளுமன்றத்தில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறான ஓர் ஆட்சிமுறைமையை சர்வாதிகாரம் என்ற எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்வது சாத்தியமா?. அதன் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசுவது என்பதற்குப் பதிலாக, சர்வாதிகாரம் என்ற ஒற்றைச் சொல்லால் போகிற போக்கில் உச்சரித்துவிட்டு கடந்து செல்வது ஒரு அரசியல் பார்வையே அல்ல. ஈரான் மீதான போர் என்பது இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது அமெரிக்காவின் நலன்களோடும் சம்பந்தப்பட்டது. வளங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டது. ஜி-7 இனை மேவியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின்; பொருளாதார வளர்ச்சியை அடித்து வீழ்த்துவதோடு சம்பந்தப்பட்டது. ஒற்றைத் துருவ அதிகாரத்தை தக்கவைப்பதோடு சம்பந்தப்பட்டது. பெட்ரோ டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டது. மத்திய கிழக்கை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது. இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் பலஸ்தீனத்தை மறுத்து (அதாவது இரு அரசுத் தீர்வை மறுத்து), அதை சிதைத்து இஸ்ரேல் என்ற ஓர் அரசுத் தீர்வை நிலைநாட்டுவது. அத்தோடு அகண்ட இஸ்ரேலை -அயல் நாடுகளுக்குள் எல்லைகளை அரக்கி- உருவாக்குவது. அதற்குத் தடையாக அல்லது சவாலாக இருக்கும் ஈரானை பலமிழக்கச் செய்வது அல்லது ஈரானில் எடுபிடி அரசை நிறுவுவது. ஈரானின் உதவியோடு பலஸ்தீன மக்களுக்காக நிற்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை பலமிழக்கச் செய்வது. மத்திய கிழக்கில் ஈரான் இஸ்ரேலைவிட மிதப்பான அதிகார சக்தியாக நிற்பதை தடுப்பது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நிகழ்த்தப்பட்டதுதான் ஈராக் மீதான அமெரிக்காவின் போரும்கூட. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிக்க முடியாத சக்திகளாக பிணைந்து உள்ளன என்பது உலகறிந்த விடயம். சதாம் குசைனை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என அப்போ நேரடியாகவே நெத்தன்யாகு பேசியிருந்தார். இப்போ ஈரானை அதன் தலைமையை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகிலேயே அமைதி நிலவும் என கூறுகிறார். இதையெல்லாம் சாத்தியப்படுத்தவும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் பலதையும் தனது தொங்குதசையாக மாற்றியது. அந்த நாடுகளின் பாதுகாப்பை தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து படைத்தளங்களை நிறுவியது. அது இன்று அந்த நாடுகளுக்கே அழிவை தேடிக் கொடுத்துள்ளது. அந்த நாடுகளின் மன்னராட்சி முறைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் ஒருபோதுமே ஜனநாயகம் மசிர் மட்டை என அளவுகோல்களை நீட்டியது கிடையாது. பெண்விடுதலை என குமுறியது கிடையாது. ஆப்கானில் பயங்கரவாதத்தை எதிர்த்த போராக பிரகடனம் செய்தது. பின் பெண்விடுதலையை எடுத்துக் கொடுக்கப் போகிறோம் என உப பிரகடனத்தையும் செய்து கிழிச்சுக் காட்டிய அமெரிக்கா இந்த தொங்குதசை நாடுகளின் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலை உயர்த்தியதே இல்லை. ஆக மத்திய கிழக்கை தனது இழுவைப் படகு அரசாக வைத்திருக்கிற அமெரிக்காவுக்கு ஈரான் ஒரு தலையிடி. பலஸ்தீன மக்களை கொன்று குவித்து நிலத்தை அபகரித்து அதை மீண்டும் மீண்டுமாய் அகண்ட இஸ்ரேலாக மாற்றும் சியோனிஸ்டுகளுக்கு ஈரான் ஒரு தலையிடி. இரண்டுபேரும் இந்தப் புள்ளியில் இணைகிறார்கள். அமெரிக்காவின் சியோனிஸ லொபியும், பெரும் மூலதனமும், அதுக்கு வெளியே செயற்பட முடியாத அமெரிக்க அரசியலும், அரசியல் தலைவர்களும்,; காங்கிரசும், உளவுப்படையும் என அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கிற பிணைப்பு வலுவானது. பலஸ்தீன போராட்டத்தையும் மண்ணையும் நேசிப்பதோடு, அவர்கள் மீதான படுகொலைகளையும் ஒடுக்குமுறையையும் சகித்துக் கொள்ளாத ஒரு நாடு ஈரான். இதன்விளைவாக உருவாகிய ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் உதவியும் செய்தது. இவர்களை பயங்கரவாத அமைப்பு என சுட்ட இஸ்லாமிய எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்கிறது. அவர்களது தாக்குதல்கள் பலஸ்தீன மக்கள் சார்ந்து இஸ்ரேலுக்கு வெளியில் நிகழ்ந்ததில்லை. இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதல்கள் குறித்த அரசியல் விமர்சனங்கள் என்பது அவர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்க போதுமானதல்ல. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ், பொக்கோகராம் போன்ற அமைப்புகள் உலகு தழுவிய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியவை. அமெரிக்க நலனுக்கு ஏற்ப இப்போதும் அவர்கள் நண்பர்களாகவும் எதிரிகளாகவும்தான் மாறி மாறி பாத்திரம் வகிக்கிறார்கள். அசல் உதாரணம் இன்றைய சிரிய அதிபர். அல்கைடா, ஐஎஸ் என களமாடிய அவர் பெரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இப்போ ட்றம்ப்புக்கு அவர் ஒரு ஸ்மார்ட் மனிதர். வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்யக் கூடிய சிரிய அரசுத் தலைவர். ஆப்கானின் புரட்சியாளராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பின்லாடன், பின்னர் உலகப் பயங்கரவாதி என அதே அமெரிக்காவால் வரையறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். மத்திய கிழக்கில் அணுகுண்டை வைத்திருக்கிற ஒரே நாடான இஸ்ரேலை பாதுகாக்கும் கள்ள நோக்கில் அமெரிக்கா மூன்று கோரிக்கைகளை மேசையில் வைத்த அதேநேரம், ஈரானிய மக்களின் விடுதலைக்கான போரை தொடங்கியுள்ளதாக குரலெடுத்து ட்றம்ப் மீட்பராகவும் மாறினார். “எனது அன்புக்குரிய ஈரானிய மக்களே உங்களுக்கு உதவிசெய்ய இதோ விரைந்து வருகிறேன். உங்கள் விடுதலையை நீங்கள் பெறும் காலம் வந்துவிட்டது. ஆயத்தமாக இருங்கள். இதோ வருகிறேன்” என ட்றம்ப்பு அழைப்பு விடுக்கிறார். ஆமென்! ravindran pa 03032026 https://sudumanal.com/2026/03/04/ஆமென்/
  3. Snsdproeto598ica767g20émviff6g6e ru706f,457m01f20:1h1r8 9u36 · ‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’........!
  4. FactCheck: IRISDena - சர்வதேச கடற்பரப்பிலா மூழ்கடிக்கப்பட்டது? பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது. கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசம் சர்வதேச கடல் எல்லை என்று பலராலும் கூறப்படுவது உண்மையா? இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஈரானிய கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் கடல் வழி காட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக் கரையில் இருந்து 12 கடல் மைகள் தூரம் வரை இலங்கைக்கான பிராந்திய கடல் வலையமாகும் (Territorial sea) . இது இலங்கைக்கான நிலம் போன்ற அதிகாரங்கள் உள்ள பிரதேசமாகும். அதன் தொடர்ச்சியாக 12-24 கடல் மைல் பிரதேசம் Contiguous zone என்னும் தொடர்வலய பிரதேசமாகும். இதுவும் இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் கொண்ட பகுதியாகும். இலங்கை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்கள் பிரதேசம் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone (EEZ) என்றழைக்கப்படும். இவ்வலயத்தில் மீன்பிடி, கனியவளம், காற்று சக்தி போன்றவை இலங்கைக்கு சொந்தமாகும். (இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் சிறிதாகையால் அதன் நடுப்புள்ளி எடுக்கப்படும்.) இதற்கு அப்பால் உள்ள பிரதேசமே உண்மையில் சர்வதேச கடல் பிரதேசமாகும். இப்பொழுது சொல்லுங்கள், காலியில் இருந்து 40 கடல் மைல்கள் தூரம் சர்வதேச கடலா? Kumar Ganesh
  5. நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை. நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள். இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும். நாட்காட்டியின்படி சனிக்கிழமை பெருநாள் வந்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக அமைந்து நன்மையளிக்கும். இலங்கையின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக இம்ரான் மகரூப் எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1467253
  6. Today
  7. காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்! யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கபட்டுள்ளது. https://athavannews.com/2026/1467250
  8. இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்! ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வொஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள், வான்வழித் தாக்குதலை நிறுத்துவதையும், இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மோதல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், போரை இயக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாக உள்ளது. அமெரிக்க செனட் 53க்கு 47 என்ற வாக்குகளில் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று வாக்களித்தது, பெரும்பாலும் கட்சி அடிப்படையில், ஒரு குடியரசுக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் நடைமுறை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் அதை ஆதரித்தனர். புதன்கிழமை இலங்கைக்கு அருகில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததன் மூலமும், அமெரிக்க-ஈரான் போர் கூர்மையாக விரிவடைந்துள்ளது. ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் சக்திவாய்ந்த மகன் அவருக்குப் பின் வருவதற்கான முன்னணிப் போட்டியாளராக வெளிப்பட்டதால் இந்த மோதல் ஆழமானது. இது, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று உலக சந்தைகளை உலுக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் அழுத்தத்திற்கு தெஹ்ரான் அடிபணியப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியது. இந்த ஏவுகணை சம்பவம், ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி மோதலில் ஈடுபடுவது இதுவே முதல். வியாழக்கிழமையும் போர் தொடர்ந்ததால், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது, மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டம் தடைபட்டது. வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த கப்பல்களுக்கு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச் ச‍ேவையின் மதிப்பீடுகளின்படி, குறைந்தது 200 கப்பல்கள் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. போரில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர பல நாடுகளின் அரசாங்கங்கள் விரைந்ததால், புதன்கிழமை மத்திய கிழக்கிலிருந்து திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டன. சர்வதேச பயணிகளுக்கு உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் உள்ளிட்ட முக்கிய வளைகுடா மையங்கள் பாதிக்கப்பட்டதால், பிராந்தியத்தின் பெரும்பகுதியில் வணிக விமானப் போக்குவரத்து பெரும்பாலும் இரத்து செய்யப்பட்டிருந்தன. கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு சனிக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 86 வயதான ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் குறித்த திட்டங்கள் சந்தேகத்தில் இருந்தன. ஒரு நாட்டின் உயர்மட்ட ஆட்சியாளர் வான்வழித் தாக்குதலில் முதன்முறையாக படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை முதல் தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய மசூதியில் உடல் அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும், இறுதிச் சடங்கு திகதி அறிவிக்கப்படவில்லை என்றும் ஈரான் அறிவித்தது. பெயர் வெளியிட விரும்பாத இரண்டு ஈரானிய வட்டாரங்கள், ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் மகன் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை கொல்லப்பட்டபோது தெஹ்ரானில் இல்லை என்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் சபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும், 1979 இல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக அவ்வாறு செய்யும் என்றும் ஈரான் கூறியது. சட்டமன்ற உறுப்பினர் அயதுல்லா அகமட் கட்டாமி அரசு தொலைக்காட்சிக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். உயர் தலைவருக்கான பிற வேட்பாளர்களில் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் பேரனும் அண்மைய தசாப்தங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட சீர்திருத்தவாத பிரிவின் ஆதரவாளருமான ஹசன் கோமேனியும் அடங்குவர். https://athavannews.com/2026/1467208
  9. கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின் சுரங்க அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகரில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெய்த கனமழைக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஜனவரி மாத இறுதியில் இதே சுரங்கத்தில் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது. ரூபாயா சுரங்கம் உலகின் தாதுக்கில் சுமார் 15 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி உபகரணங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் உற்பத்தி உட்பட பல தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். https://athavannews.com/2026/1467243
  10. ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார். https://athavannews.com/2026/1467254
  11. இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம். இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
  12. இஸ்ரேல் & இரான் யுத்தத்தின் போக்கு பற்றி ரகசிய மாநாடு .......! 😂
  13. இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்தின் உப பக்கங்களின் தலைப்பு விபரங்கள் அடங்கிய பட்டியலுள்ள forum3 என்று குறியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்திற்கே செல்கிறது.
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  15. மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 11:36 AM மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கன்பெராவில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். கடந்த வாரம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்த பிரதமர் கார்னி, தற்போது அவுஸ்திரேலியாவில் தனது கருத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார். "எந்தவொரு சூழ்நிலையிலும் போரில் பங்கேற்பதை நாம் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. இது ஒரு கருதுகோள் சார்ந்த கேள்வி என்றாலும், தேவைப்படும்போது நாம் எமது நட்பு நாடுகளுடன் உறுதியாக நிற்போம்" என அவர் குறிப்பிட்டார். ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 'சர்வதேச சட்டங்களுக்கு முரணானது' எனத் தெரிவித்த அவர், இது சர்வதேச ஒழுங்குமுறை தோல்வியடைந்துள்ளதையே காட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். மார்க் கார்னியின் இந்த ஆசிய-பசிபிக் விஜயம் (இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்) அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற 'நடுத்தர சக்திகள்' ஒன்றிணைந்து புதிய உலக விதிகளை எழுதவேண்டும் என அழைப்பு விடுத்தார். அரிய வகை கனிம வளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அவுஸ்திரேலியாவுடன் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், மார்க் கார்னியின் இந்த வெளிநாட்டுப் பயணம் சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி
  16. தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து Published By: Vishnu 05 Mar, 2026 | 11:32 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஃபின் அலன் குவித்த அற்புதமான சாதனைமிகு ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2021 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடி இருந்தது. அப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியனாகியது. இந்த உலகக் கிண்ணத்தில் அரை இறுதிவரை தோல்வி அடையாமல் இருந்த 2024 உப சம்பியன் தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தொல்வி அடைந்து ஏமாற்றத்துடனும் கவலையுடனும் வெளியேறியது. 170 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து எதிரணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 12.5 ஓவரக்ளில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறதிப் போட்டிக்குள் நுழைந்தது. தென் ஆபிரிக்கா பந்தவீச்சாளர்கள் மீது கொஞ்சமேனும் இறக்கம் காட்டாத ஃபின் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டறி கள், 8 சிக்ஸ்களை விளாசி ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது ரி20 உலகக் கிண்ணத்தில் அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. 19 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த வருட உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிவேக அரைச் சதத்தை சமப்படுத்தினார். அவருக்கு இரண்டாவது 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய 14 பந்துகளே தெவைப்பட்டது. தனது ஆரம்ப ஜோடி டிம் சீஃபேர்ட்டுடன் 55 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ஃபின் அலன் மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தார். டிம் சீஃபேர்ட் 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். ரச்சின் ரவிந்த்ரா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்களால் சுதந்திரமாக ஓட்டங்களைப் பெற முடியவில்லை. இரண்டாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 12 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் (10), ரெயான் ரிக்ல்டன் (0) ஆகிய இருவரும் கோல் மெக்கொன்ச்சியின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டிவோல்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், ஏய்டன் மார்க்ராம் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் (6), டிவோல்ட் ப்ரெவிஸ் (34) ஆகிய இருவரும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்கா நெருக்கடியில் வீழ்ந்தது. இதனை அடுத்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (29), மார்க்கோ ஜென்சன் ஆகிய இருவரும் முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கோ ஜென்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோல் மெக்கொன்ச்சி ஒரு ஓவர் மாத்திரம் வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட ரச்சின் ரவிந்த்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது. ஆட்டநாயகன்: ஃபின் அலன் தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து
  17. இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள் Mar 5, 2026 - 06:18 AM யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த இந்த மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட இந்திய மீனவர்கள், நடுக்கடலில் தவித்த ஈழத்து மீனவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளனர். அத்துடன், அவர்களின் படகினைப் பாதுகாப்பாக இழுத்து வந்து இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த முழுமையான நிகழ்வையும் இந்திய மீனவர்கள் காணொளியாகப் பதிவு செய்து உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர். இந்திய மீனவர்களால் உணவு வழங்கி எல்லைக்குள் விடப்பட்ட காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பவம் நடைபெற்று ஆறு நாட்கள் கடந்தும் இலங்கை கடற்படையினரால் குறித்த இரண்டு மீனவர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஆதாரத்தின் அடிப்படையிலாவது கடற்படையினர் தமது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்
  18. அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வந்துவிடுமோ என நெதன்யாகு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பைத் தொடர்புகொண்டு, போரை நிறுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmd1mxla0004356picrn04zb
  19. சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி எம்.எஸ்.எம். ஐயூப் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை குறைகூறவும் முடியாது. ஆனால் அதற்காக நடப்பவை எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு நியாயப்படுத்தவோ எதிர்க்கவோ முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவாளர்களே இந்தக் கைதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் சலே கோட்டாபயவின் நெருங்கிய நன்பராவார். அதேவேளை இந்த கைது கோட்டாவுக்கும் ஆபத்தானதாகுமென பலர் கருதுகின்றனர். புலிகளுக்கு எதிரான போரின் போது உளவுத்துறை அதிகாரியாக சலே பெரும் பணியாற்றியுள்ளார் என்றும் புலிகளின் பேச்சாளராக இருந்த தமிழ்செல்வனை விமானப் படையினர் சலேயின் வழிகாட்டலிலேயே கொன்றனர் என்றும் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை 2009 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரும் திட்டத்தையும் சலேயே வகுத்தார் என்றும் எனவே அவரை கைது செய்தமை அநீதியாகும் என்றும் கோட்டாபயவின் சட்டத்தரணியும் அவரது அரசாங்கத்தின் அமைச்சருமான அலி சப்ரி கூறியிருந்தார். புலம் பெயர் தமிழர்களின் (தமிழ் டயஸ்போராவின்) தூண்டுதலிலேயே அரசாங்கம் சலேயை கைது செய்துள்ளதாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முன்னாள் ராஜபக்ஷ அதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்காக கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களை குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இந்த கைதை குறை கூறி வந்தாலும் அவர்கள் அதற்காக வேறு வாதங்களையே முன்வைக்கின்றனர். நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்துக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நாடகம் இடம்பெற்றுள்ளதாக ஐமச தலைவர்கள் கூறுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதியே இடம்பெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஏப்ரல் 21 அம் திகதியும் தாக்குதலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்துமாறு கத்தோலிக்க திருச் சபையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வற்புறுத்தி வருகின்றனர். எனவே இவ்வருடம் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த கைதின் மூலம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்ற முயல்கிறது என்பது அவர்களின் மற்றொரு வாதமாகும். ராஜபக்ஷ அதரவாளர்களும் இந்த வாதங்களை முன்வைக்கின்றனர். கடந்த வருடமும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவதாக அதற்கு அண்மித்த ஒரு நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேNயு ஜனாதிபதி எங்கும் எப்போதும் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவுதாக கூறியதில்லை. ஆனால் ஏபரல் 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய புதிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கடந்த வருடம் மார்ச் 30 ஆம் திகதி மாத்தறை தெய்யந்தரவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார். அதைத் தான் எதிர்க் கட்சியினர் திரிபுபடுத்தி கூறுகின்றனர். இந்த வாதங்களில் சில ஒன்றோடு ஒன்று மோதுவதாகவம் தெரிகிறது. புலம் பெயர் தமிழர்களின் தூண்டதலைப் பற்றியும் நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதைப் பற்றியும் ஒரே நபர் கூறும் போது அது பொருத்தமற்றதாகவே தெரிகிறது. அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலிலா அரசாங்கம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றப் போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் இந்த வாதங்களை மறுத்துள்ளார். தமிழ்செல்வன் கொல்லப்பட்ட காலத்திலோ அல்லது கே.பி கைது செய்யப்பட்ட காலத்திலோ சலே இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளரராக இருக்கவில்லை என்றும் எனவே இந்த சம்பவங்களை பாவித்து சலேயை ஊதிப் பெருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை கே.பியை கைது செய்தமை பெரிய விடயமாக காட்;ட முயலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் இலங்கைக்கு கொண்டவரப்பட்ட கேபிக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிடுவதில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அப்போதிருந்த தேசிய பாதுகாப்பு தொடர்டபான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன ஹ_லுகல்ல கூறினார். கேபிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 2015 ஆம் ஆண்டு அதாவது மைத்திரி-ரனில் அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததை அடுத்து 2017 அம் ஆண்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கேபியைப் பற்றிக் குறிப்பிட்டு சலேவுக்கு பெரும்பான்மை மக்களின் மத்தியில் பெருமை தேடிக்கொடுக்க முற்படும் பொதுஜன முன்னணி கேபியை எவ்வாறு நடத்தியது என்பது இதன் மூலம் தெரிகிறது. அது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்தவிடயத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் மேலே குறிப்பிடப்பட்டதைப் போல் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுர குமார கடந்த வருடம் கூறியிருந்தார். பின்னர் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை இரகசிய பொலிசார் கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி கைது செய்தனர். நேரடியாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்படாக விடயம் ஒன்றுக்காக அவர் கைது செய்யப்பட்ட போதிலும்; அத்தாக்குதலைப் பற்றி முன்னரே அவர் அறிந்திருந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். ஒக்டொபர் மாதம் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜேபால பிளளையானுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். அமைச்சர் விஜேபாலவுக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிள்ளையானின் முன்னாள் இணைப்புச் செயலாளர் ஹன்சீர் ஆசாத் மௌலானா இது போன்றதோர் தொடர்பைப் பற்றி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தார். ஜோசப் பரரஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் சைனியும் 2017 ஆம் ஆண்டு வன்முறை சம்பவவம் ஒன்று தொடர்பாக அதே சிறையில் அடைக்கப்டடதாகவும் அப்போது பிள்ளையானுக்கும் சைனிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாகவும் மௌலானா அந்நிகழ்ச்சியல் கூறினார். இந்தத் தொடர்பை அடுத்து பிள்ளையானின் ஆலோசனைப் படி தாம் சலேக்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்றை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் கரடிப்பூவலில் ஏற்பாடு செய்ததாகவும் அச்சந்திப்பை முடித்துக்கொண்ட சலே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு நாட்டில் பதற்ற நிலைமை உருவாக வேண்டும் என்று தம்மிடம் கூறியதாகவும் அவர் அந்நகழ்ச்சியல் மேலும் கூறினார். மௌலானாவின் கூற்றுக்களைப் பற்றி விசாரிக்க 2023 ஆம் ஆண்டு ரனில் விக்ரமசிங்க நியமித்த இமாம் குழு அக்கூற்றுக்களை நிராகரித்தது. இந்தப் பின்னணியில் தான் அநுர குமார 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அவர் உடனடியாக அரம்பித்த விசாரணைகளின் படி அதே ஆண்டு பிள்ளையான் விசாரிக்கப்பட்டடார். பின்னர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். அவர் பேராசிரயர் ரவீந்திரனாத் விவகாரத்துக்காக கைது செய்யப்பட்ட போதும் தெற்கில் சில அரசியல்வாதிகள் அப்போது பதற்றமடைந்தனர். ரனில் அவரோடு பேச அனுமதி கேட்;டார். கம்மன்பில தாமாகவே முன்வந்து அவரது சட்டத்தரணியானார். இவற்றையெல்லாம் பார்க்கும் மௌலானா கூறியதைப் போல் ஏதும் நடந்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுரேஷ்-சலேயின்-கைதின்-பின்னணி/91-373396
  20. இது நாங்களே எங்களுக்கு ஏற்படுத்தி உள்ள முட்டாள்தனமான தட்டுப்பாடு. செற்றில 10-15 பேருக்கு மேல கூடவிடாமல் பொலிஸ் கலைத்தாலே பதட்டம் பரபரப்பு குறைந்துவிடும்.
  21. மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது. ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/மற்றுமொரு-ஈரானிய-கப்பலால்-சலசலப்பு/175-373430
  22. யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை adminMarch 4, 2026 யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , இன்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லிட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளாா் Global Tamil Newsயாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்க...யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5…
  23. சைப்ரஸிலுள்ள இராணுவ விமானப்படை தளத்தைத் தாக்கிய ட்ரோன் ஈரான் இலிருந்து ஏவப்படவில்லை – பிரித்தானியா தெரிவிப்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 10:09 AM சைப்ரஸிலுள்ள பிரித்தானியாவின் ஆக்ரோட்டிரி விமானப்படை தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நேரடிப் பொறுப்பல்ல என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானிய தயாரிப்பான 'ஷாஹெட்' ரக வடிவமைப்பை ஒத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு இருப்பை பலப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது. நவீன ஏவுகணைகளுடன் கூடிய ரோயல் கடற்படையின் 'வைல்ட்கேட்' உலங்குவானூர்திகள் இன்னும் சில தினங்களில் சைப்ரஸிற்கு அனுப்பப்படவுள்ளன. செவ்வாயன்று இரவு 'போயிங் சி-17ஏ குளோப்மாஸ்டர் III' ரக பாரிய இராணுவ விமானம் சைப்ரஸை வந்தடைந்தது. இது பிரித்தானிய படைகளின் வலுவூட்டல் நடவடிக்கையின் புதிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது. வான் பாதுகாப்புத் திறன் கொண்ட எச்.எம்.எஸ். ட்ராகன் போர்க்கப்பலும் இப்பிராந்தியத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த மோதல் சூழலில், சைப்ரஸிலுள்ள பிரித்தானிய தளங்கள் அமெரிக்கப் படைகளால் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், ஈரானிய ஆதரவுப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆக்ரோட்டிரி தளம் தற்போது அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. சைப்ரஸிலுள்ள இராணுவ விமானப்படை தளத்தைத் தாக்கிய ட்ரோன் ஈரான் இலிருந்து ஏவப்படவில்லை – பிரித்தானியா தெரிவிப்பு
  24. ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கியபோது அதிலிருந்த சிலரை காப்பாற்றிய ஶ்ரீ லங்காவையும் நன்றியுணர்வுடன் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படி ஈரானின் புதிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.