Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பாபர் இவ‌ரில் என‌க்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை இவ‌ருக்கு அதிர‌டியாக‌ ஆட‌த் தெரியாது இவ‌ர் 50ஓவ‌ர் போட்டிக்கு த‌குதியான‌ வீர‌ர்............. போன‌ வ‌ருட‌ம் இவ‌ர் ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் போட்டி விளையாடின‌து மிக‌ குறைவு............... பாக்கிஸ்தானில் இவ‌ரை விட‌ அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்............... இந்தியா பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் விளையாட்டு பார்க்க‌ விறுவிறுப்பாக‌ இருக்கும்😁🙏......................
  3. 👆 சும்மாவே சின்னராசுகளை கைல பிடிக்க ஏலாது. இதில் வாயில் லட்டை வேறு கொடுத்தால் சும்மாவா😂 உங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் இருக்கார்…. அவர் ஏதோ பெரிசா கடையிறார்… வந்ததும் திரையிடப்படும் சதி லீலாவதி😂
  4. அந்த நிலையில் முன்னர் நானும் இருந்துள்ளேன், நான் நினைக்கிறேன் புலம் பெயர் தமிழர்கள் நிலமையினை சரியாக உள்வாங்கவில்லை, இதே சமகாலத்தில் ஆச்சே விடுதலை போராட்டத்துடன் ஒப்பிடும் போது சில பல வேறுபாடுகள் இரு தரப்பிற்கும் வெவ்வேறு சாதக பாதகங்களை கொண்டுள்ளது ஆனால் அவர்கள் ஒற்றுமையாக அனைத்து விடயங்களை கடந்து போனார்கள். எமக்கும் எதிர்காலத்தில் அப்படி ஒரு சாதகமான நிலை வரும் போது சாத்தியமான விடயங்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருந்தால் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க இலகுவாக இருக்கும். இந்த உரையாடல்கள் அதற்கான வாய்ப்பினை நிச்சயமாக உருவாக்கும் என நம்புகிறேன்.
  5. 👆இதில் சிந்தியா ரீட் எப்ஸ்டீனுக்கு இமெயில் போட்டுள்ளார். அதில், டாக்டர் ஜேரெக்கி உங்கள் ஆய்வுக்காக (study) தேவைப்படும் அறிஞர்களின் பெயர் பற்றி அறிந்துள்ளார். ஆனால் இந்த பெயர்களை பாதுகாப்பாக/ பரகசியமாக்காமல் வைத்திருக்கவும் என உள்ளது. இது👇 ராஜன், ரன்ட ஜீவன் கூல்கள் பற்றி அனைவரும் அறிந்த தகவலகள் ஒரு அட்டவணையில் போடப்பட்டுள்ளது. வழமை போல் ஈழத்தமிழ் மொக்கை பீசுகள் தும்பை விட்டு வாலை பிடிக்கிறன. இதில் ஹூல்கள் எந்த சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஆதாரமும் இல்லை. அப்படி வந்தால் அப்போ பார்க்கலாம். ஆனால் ஜெப்ரி என்ன ஆய்வை மேற்கொண்டார் அல்லது, மேற்கொள்ள முயன்றார்? அது ஈழதமிழர் பற்றியதா? புலிகளை அழிப்பது பற்றியதா? அல்லது கணிதம், எலேரிக்கல், எலெக்ரோனிகல் சம்பந்தபட்டதா?
  6. வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார். ஹூல்கள் பற்றிய எப்ஸ்டீன் கோப்பில் உள்ள பதிவுகள்.
  7. 2009-2012 இல் இப்போதைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை தரும் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கோரலாம் என கூறியோரை புலம்பெயர் புஸ்வாணங்கள் துரோகி என கூறி திரத்தி அடித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட யாழில் ஒரு திரி ஓடியது. இப்போதும் 1987 இல் நாம் ஒரு அரிய சந்தர்பத்தை இழந்தோம் என எத்தனை ஆட்களை யாழில் ஒத்து கொள்ள வைப்பீர்கள். நானும், ஜஸ்டீன் அண்ணா, ஐலன்டும்தான் கை உயர்த்துவோம்😂. ரசோ அண்ணாவும் சேரக்கூடும். 1990களில் இல் TNL ஒரு விவாவத்தில் SL Gunasekara குமார் பொன்னரிடம் சொன்னார்: வரலாற்றில் எப்போதும் நீங்கள் முடியாததை கேட்டு, முடியுமானதையும் இழக்கும் கூட்டம் என. விகிதாசார பிரதிநிதிதுவம் கேட்க வேண்டிய போது, 50:50 உரிமை கேட்டீர்கள், மாவட்ட சபை கோர வேண்டிய போது, மாகாண சபை கோரினீர்கள், மாகாண சபை கிடைத்த போது தனி நாடே தீர்வென்றீர்கள். இப்படி முட்டாள்தனமாக இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடையாது என. கடைசியில் அந்த இனவாதி கூற்றே நிஜமானது. இப்போ நாமே அனுரவுக்கு காவடி எடுக்கிறோம்.
  8. பாகிஸ்தான் அணி சிறப்பாக உள்ளது போல உள்ளது, பாபர் அசாம் ஒருவர்தான் அதில் கொஞ்சம் தனித்து விடப்பட்டுள்ளது போல இருக்கின்றது, பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் பற்றி குறிப்பிடும் போது, பாபர் பாகிஸ்தான் அணிக்கு உறுதித்தன்மையினை கொடுப்பார் (நிலைத்து நின்றாடுவதன் மூலம்). இந்த பி பி எல்லில் வேகமாக அடிப்பவர்கள் கூட அதிக ஓட்டங்களை பெற காயம் என கூறி வெளியேறினார்கள், ஆனால் பாபர் அவ்வாறு செய்யவில்லை.
  9. அமெரிக்க அணி நியுசிலாந்துடனான பயிற்சி போட்டியில் திறமையாக விளையாடியிருந்தார்கள். நொக்கவுட் போட்டிகள் இலங்கையில் நடந்தால் இந்தியாவினை வெல்வதற்கு ஒரு சமநிலை வாய்ப்பு மற்ற அணிகளுக்கு இருக்கும்.
  10. நான் கூட்டாட்சி பற்றி கூறவில்லை, காணி, காவல், நிதி, நீதி போன்ற அதிக அதிகாரங்கள் கொண்ட 13+ போன்ற தீர்வு சம்பந்தமாகவே, நீங்கள் கூறுவது 2009 பின்னர் கூட்டாட்சி போன்ற தீர்வுகள் சாத்தியமில்லை.
  11. சத்தமில்லால், நந்தன் களத்தில் குதித்துள்ளார். IPLலில் அவர் காட்டின காட்டு அப்பிடி. இங்கேயும், எல்லாரையும் ஓட விடுவாரோ😉
  12. நான் பாக்கிஸ்தான் வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன் அல்லா அக்ப‌ட் ம‌ஸ்ச‌ல்லா😁...............
  13. Today
  14. வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார்.
  15. போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.
  16. இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 23 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் @நந்தன் இறுதியாக வரும் அணிகளுக்கு பதில்கள் தரவில்லை எனினும் அவரின் தரவுகள் கூகுள் ஷீற்றில் இருந்தமையால் அவற்றை பிரதிசெய்துள்ளேன். இந்த முறை 🦀க்கு வெற்றி கிட்டுமா?🤪 முதலாவதாக வந்தாலும் ஆச்சரியமில்லை😄! அநேகமாக எல்லோரும் இந்தியா மீது பந்தயம் கட்டி உள்ளனர். சறுக்கச் சான்ஸ் அதிகம்.😁
  17. என்னது போட்டி தொடங்க முதலே 15ம் பிள்ளையா😂. இனி சின்ராச கைல பிடிக்கேலா😂
  18. இலங்கையிலும் குளவிக்கூடு கொழுத்துவது தண்டனைக்கு உரிய குற்றம் என வாசித்தேன். பாடசாலை நிர்வாகம் ஏற்கெனவே சில காலத்திற்கு முன் கல்வித் திணைக்களத்திற்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து இருந்தும்.. அரச உத்தியோகத்தரின் அசமந்த போக்கினால்… பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
  19. சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது வாங்கி க‌ட்டுவின‌ம் ஆனால் இந்த‌ முறை சின்ன‌ அணிக‌ள் சில‌ பெரிய‌ அணிக‌ளுக்கு அடிக்க‌ வாய்ப்பு இருக்கு...........................
  20. இது கொஞ்சம் ஓவர் 😂. அப்படி ஒரு வாய்ப்பான ஏது நிலையும் இருக்கவில்லை. மாறாக இப்போ இருப்பதை போன்ற உத்திகள், பலம் ஏதுமற்ற ஒரு கையறுநிலையில் தமிழினத்தை நிறுத்திவிட்டுத்தான் 2009 ஆயுத மெளனிப்பு நடந்தது. இப்படி தோசையை பிரட்டி போட்டு, வரலாற்றை மாற்றி எழுதி எம்மை நாமே பேய்க்காட்டுவதால் மேலும் அழிவே மிஞ்சும். தவிரவும் கூட்டமைப்போ வேறு எவருமோ இலங்கையை நம்புகிறோம் என சொல்லவில்லை. ஜெனிவாவில் தமிழர் தரப்பு ஒட்டு மொத்தமாக வெளியக விசாரணை கோரிய போது, நாடுகள் உள்ளக விசாரணைக்கு இலங்கைக்கு காலம் கொடுத்தன. அதை கூட்டமைப்பு ஏற்காமல் விட்டிருக்கலாம். அப்படி செய்தால் கஜன் போல் யாரும் சீண்டாத நாறல் மீன் போல் ஆகி இருக்கும் அவர்கள் நிலையும். புலிகள் இந்தியா, சர்வதேச சமூகத்தை பகைத்தது போல் நாமும் நடக்ககூடாது என கூட்டமைப்பு பதுங்கி நடக்க… ஆனால் அதிலும் சிங்கள இராஜதந்திரமே ஈற்றில் வென்றது. செலென்ஸ்கியை போல் ஒரு இராஜதந்திரி நமக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒருவர் 1948 க்கு பின் இருக்கவும் இல்லை. ஒருவேளை முழுச்சுதந்திரம் கொடுத்திருப்பின் பாலா அண்ணை இப்படி வந்திருக்கலாம்.
  21. எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான நிர்வாண படங்கள் - 'பெரும் பிழை' என சாடும் வழக்கறிஞர்கள் படக்குறிப்பு,எப்ஸ்டீன் கட்டுரை தகவல் பெக்கி டேல் மற்றும் மாட் மர்பி பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தணிக்கை செய்யப்படாத நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன. இந்த கோப்புகளை தணிக்கை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவை இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. இதனால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஈடுசெய்ய முடியாத" தீங்கு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறிய கோப்புகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாக சுமார் 40 புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, வார இறுதியில் முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வெளிப்படையாக பேசியது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் படங்கள் முறையாகத் தணிக்கை செய்யப்படும் வரை அந்த வலைதளத்தை தடை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையை விரைந்து சரிசெய்ய நீதித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக நியூயார்க் நீதிபதி செவ்வாயன்று தெரிவித்தார். "தொழில்நுட்பம் அல்லது மனிதப் பிழையின்" காரணமாக இந்தக் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இதுகுறித்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை நீதித்துறை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இது சார்ந்த புதிய புகார்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் தணிக்கை தேவைப்படும் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து வருவதாகவும் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம், முழுமையாக தணிக்கை செய்யப்படாத கோப்புகளை ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) கூறிய போதிலும் கூட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணத்தக்க படங்கள் புதன்கிழமை அன்றும் இணையத்தில் கிடைப்பதை பிபிசி வெரிஃபை கண்டறிந்தது. இது குறித்து நீதித்துறையை அணுகிய பிபிசி, தணிக்கை செய்யப்படாத கோப்புகளின் பெயர்களையும் வழங்கியதுடன், இது பற்றிய கருத்தை கேட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிராட் எட்வர்ட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஏற்பட்டுள்ள சேதம் ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார். "பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான தருணங்களில் ஒன்றை மீண்டும் பொதுமக்கள் முன் கொண்டுவந்துள்ளது," என்று எப்ஸ்டீனின் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஆஷ்லி ரூப்ரைட் பிபிசியிடம் கூறினார். பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த நான்கு படங்களில், முகம் மற்றும் உடல் தணிக்கை செய்யப்படாத நிலையில் முழுமையாக ஆடை அணியாத இளம்பெண்கள் காணப்பட்டனர். சமூக பிரபலங்கள் பலருடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த ஆதாரங்களுக்காக, வெளியிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோப்புகளில் தேடியபோது இவை கண்டறியப்பட்டன. சிலரது புகைப்படங்கள் ஒரு சில ஆவணங்களில் தணிக்கை செய்யப்பட்டும், வேறு சிலவற்றில் தணிக்கை செய்யப்படாமலும் உள்ளன. ஒரு கோப்பில் ஒரே படத்தின் இரண்டு பதிப்புகள் உள்ளன. அதில் ஒரு பதிப்பில் முகம் கருப்பு நிறக் கட்டத்தால் மறைக்கப்பட்டும், மற்றொன்றில் முகம் முழுமையாகத் தெரியுமாறும் உள்ளது. மற்றொரு வீடியோவில், ஒரு பெண் தன் ஆடையை கழற்றி தனது மார்பகத்தை கேமராவிற்குக் காட்டுவதைப் போல் உள்ளது. கிறிஸ்துமஸ் சமயத்தில் எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, பாலியல் ரீதியான புகைப்படங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்களைத் தணிக்கை செய்யும் பணியை நீதித்துறை (DoJ) அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். அமெரிக்க காங்கிரஸ் விதித்த காலக்கெடுவுக்கு முன்னதாக, பேசிய துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான பணிகளுக்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், கோப்புகள் சரியான நேரத்தில் வெளியிடப்படாது என்று கூறினார். "நாங்கள் வெளியிடப்போகும் ஒவ்வொரு துண்டு காகிதத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர், அவர்களின் பெயர், அடையாளம், அவர்களின் கதை என, பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறோம்," என்று அவர் அப்போது தெரிவித்தார். இதுமட்டுமின்றி, வெளியிடப்பட்ட கோப்புகளில் உள்ள மருத்துவத் தகவல்கள் மற்றும் சட்ட அறிக்கைகள் மூலமாகவும் பலரது அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. கருவின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் தொடர்பான இரண்டு வீடியோக்களில் ஒருவரின் பெயர் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட நேரம், தேதி மற்றும் அது எடுக்கப்பட்ட இடம் எனக் கருதப்படும் விபரங்களுடன், கருவின் வளர்ச்சிக் காலமும் தெளிவாகத் தெரிந்தது. மற்றொரு ஆவணத்தில், எப்ஸ்டீனிடம் விசாரணை நடத்தப்பட்ட வீடியோ பதிவில், ஒரு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுவது இடம்பெற்றுள்ளது. இந்தக் கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைப் போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதற்காக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் ஒருபோதும் பொதுவெளியில் வராதவர்கள், பொதுமக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் இப்போது பொதுப் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன," என்று வழக்கறிஞர்களில் ஒருவரான பிராட் எட்வர்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "இது உண்மையில் மிகப்பெரும் பிழை." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy84vgp0d1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.