Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இந்த செய்தியில் இருந்து ....நீதி மறுப்பு தமிழனுக்கு மட்டும்தான் என்று தெரிகிறது ....தற்கொலை குண்டுதாரிகள் ...அவர்கள் என்னவழியில் சொத்து சேர்த்தார்கள் என்பது கேள்விக்குறியே ...ஆனால் இலங்கையின் நீதிதுறை சொத்தை உயிருடன் உள்ள சகோதரனிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது ...அனுர ஆட்சியா ..இல்லை வளமைபோல் பெரும்பான்மை இன ஆட்சியா...
  3. வெள்ளவத்தை இப்ப வெளிச்சவத்தையாய் இருபதைக் கண்டு கண்ணீர் தாரையாக ஓட விடுதில் நானும் ஒருவன் அய்யா....
  4. வணக்கம் வாருங்கள் ... இப்பவும் இப்படி தமிழ்விளக்கம் கொடுக்கும் யாழ் தமிழரை காண்பதில் அதி சந்தோசம்
  5. 🤣............. இன்று நடந்த இலங்கை - நியூசிலாந்து போட்டியில் நான் ஆப்கானை தெரிவு செய்ததால் நாளைய போட்டியில் ஆப்கானை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது, அண்ணா................... ஆப்கான் நல்ல அணி தான்.......... அதற்காக அவர்கள் தினமும் விளையாட முடியுமா......................🤣. சகுனியின் நாடு தான் இன்றைய ஆப்கான், அன்றைய காந்தாரம்............. நான் இந்த வழியில் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று இப்ப தோன்றுகின்றது.................🤣.
  6. கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் இது வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ....எனினும் கிடைக்கும் இடைவெளியில்... அந்த சிலுசிலுப்பான நேரங்கள் ...சொற்கம்தானே சுவியர் ...இதிலை கவித்திறனைவிட ...உங்கள் ஆத்மார்ந்த அனுபவிப்பு ...கவிதையை உயிரோட்டமாக்குகிறது
  7. இங்கே ஜேர்மனியில் 20,30 வருடங்களுக்கு முந்திய செய்திகளை திகதிகளுக்கேற்ப தினசரி மறு ஒளிபரப்பு செய்வார்கள்.அப்போது அன்றைய வானிலை அறிவுப்பும் இருக்கும். அதை பார்த்த அளவில் பாரிய மாற்றம் ஏதுமில்லை. இயற்கை அழிவுகள் என்றும் எங்கும் உண்டு. உதாரணத்திற்கு 70களில் கிழக்கு மாகாணத்தில் வந்த சூறாவளி அனர்த்தங்கள் வந்த போது யாரும் உலக வெப்பமாவதலை பற்றி பேசவில்லை. ஒரு காலத்தில் பங்களாதேசில் அடிக்கடி சூறாவளிகள் வந்து அழித்தொழிக்கும். இன்று அது அங்கில்லை? ஏன்?
  8. பணம் வாங்காமல் உதவி செய்தாலே ஏளனங்கள் தான் வரும். சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டும் மாப்பிளை போல்....🤣 இளையராஜா எந்தவொரு தயாரிப்பாளரையோ நடிகர்களையோ நடுத்தெருவில் விட்டது கிடையாது.😎 அதிக திரைப்படங்களுக்கு உயிரூட்டியதே இளையராஜா இசை மட்டுமே. கமல்,ரஜனி படங்கள் உட்பட......
  9. Yesterday
  10. நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட் Nantha Kumar RUpdated: Thursday, February 26, 2026, 0:43 [IST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த சமுதாய மக்களுக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டு உள்ளது? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்படி விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதேவேளையில் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். 234 வேட்பாளர்கள் அறிவிப்பு மேலும் கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சீமான் தனது வேட்பாளர்களை அறிவித்தார். Also Read தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். இதில் சீமான் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த ஜாதியினருக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. பறையர் - தேவேந்திர குல வேளாளர் அதன்படி தமிழகம் முழுவதும் பறையர் சமுதாயத்தினருக்கு 27 இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பொதுத்தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 15 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Recommended For You கவுண்டர் - நாடார் மேலும் கவுண்டர் 24, கள்ளர் 11, குயவர் ஒருவர், கோணார் 8, சாலியர் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார் ஒன்று, சவுராஷ்டிரா சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடார் 11, நாயக்கர் 3, நாயுடு 3, படுகர் 2, பண்டாரம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், பழங்குடியினருக்கு 3 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பொதுத்தொகுதியில் போட்டியிடுகிறார். வன்னியர் - பிராமணர்கள் அதேபோல் வன்னியர் 34, பிள்ளைமார் 8, மருத்துவர் 1, மறவர் 10, மீனவர் 5, முதலியார் 8, முத்தரயைர் 8, மூப்பனார் ஒன்று, ரெட்டியார் 2 இடங்களில், வண்ணார் ஒன்று, பிராமணர்களுக்கு 6 தொகுதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமுடையார் சமுதாயத்தினர் 9 பேர், உடையார் 7 பேர், அருந்ததியர் 3 பேர், ஆசாரி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், தமிழ் குறவர் ஒருவர், ஊராளி கவுண்டர் ஒருவர், ஒக்கலிக்க கவுடா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. You May Also Like இஸ்லாமியர்களுக்கு எத்தனை? இஸ்லாமியருக்கு 10 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் விவரத்தை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/seemans-naam-tamilar-party-candidates-and-their-castes-for-tamil-nadu-assembly-election-776727.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel நாம் சாதியஒ ஒழிக்க புறப்பட்ட எளிய பிள்ளைகள். புஹா ஹா ஹா…😂
  11. உலக வெப்பமயமாதல் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பொய்யா? மெய்யா?
  12. இதை வைத்து ஒரு கதை இருக்கிறது…எழுதலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.
  13. இணைந்து பயணிப்பது என்பதன் வரைவிலக்கணம்தான் என்ன? வெட்கம் கெட்டு ஒரு ராஜ்ஜசபா சீட்டுக்கு கமல் மையத்தை திமுக கூட்டணியில் அடக்கம் செய்தால் - அவரை திமுக கைகூலி என்றுதானே அழைத்தோம்? அதை நானும் ஏற்றேன். அதேபோல் பிஜேபி பரிந்துரையில் ராஜ்ஜசபா எம்பி ஆனவர் இளையராஜா. அவர் திமுக கைக்கூலி. இவர் பிஜேபி கைக்கூலி. அவர் நல்லா நடிப்பார். இவர் நல்ல பாட்டு போடுவார். ஆனால் இருவரும் “வெள்ளந்தி” என்ற பட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத மனிதர்கள். எனக்கு அவரின் நடிப்பும், இவரின் இசையும் மிக, மிக, மிக பிடிக்கும். ஆனால் அதனால் மட்டும் அவர்களுக்கு வெள்ளேந்தி, அல்லது “இணைந்து பயணிப்பவர்” என்ற வெள்ளை அடிப்புகளை நான் செய்வதில்லை. எனக்கு பிடித்த படைப்பாளி என்பதால் மட்டும் ஒருவர் ஏனைய விதங்களில் சொக்கதங்கம் என்றில்லை. உங்களிடத்திலும், இந்த திரியில் ஏனைய சில கருத்தாளரிடமும் நான் காண்பது கட் அவுட்டுக்கு பால் வார்க்கும் ரசிக குஞ்சு மனோநிலையின் அடுத்த கட்டத்தையே. அதேபோல் வட்டிக்கு கடன் எடுத்து சினிமாவில் முதலிட்டு படம் பப்படமானல் ராஜா கூலியை வாங்கி கொண்டு எஸ் ஆகி விடுவார். நடுத்தெருவில் நிற்பது தயாரிப்பாளர்தான். போட்டு கொண்ட ஒப்பந்தபடி யாருக்கு உரிமை உண்டோ அவர் எடுத்து கொள்ளலாம். இது படத்துக்கு படம் வேறுபடும். அத்தனையும் எனக்கே என்பது பேராசை மட்டும் அல்ல, உரிமை-திருட்டு. சினிமா நட்சத்திர பிம்பம் கண்ணை மறைத்தான் இப்படியானவை தெரியாது.
  14. இவையெல்லாம் இயற்கை அனர்த்தங்கள் அல்ல. சாதாரண இயற்கை நிகழ்வுகள் மட்டுமே. இன்றைய குடிசை கைத்தொழில் செய்திகளின் பிரமாண்டங்களுக்காக செய்திகளை வெளியிடுவார்கள். சென்ற 50 ஆண்டுகால காலநிலைகளை அவதானித்தால் இன்றைய சில கால நிலைகள் சர்வதாசாரணமாகவே தெரிகின்றது. எதற்கெடுத்தாலும் ஒரு சிறிய விடயத்தையும் பெரிதாக்குவது இன்றைய நடைமுறையாகி விட்டது என்பது கவலைக்குரிய விடயம்.
  15. வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம் பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம். கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை. அப்படி என்ன தான் பார்த்திருப்பேன். ஊரில் இருந்து வந்த புதிதில் கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள் வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது. கடைசிவரை சலிக்கவே இல்லை.
  16. சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள்,கருத்துக்கள் இருக்கும். என்னைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என நினைத்தால் அதுவும் ஒரு வித மனநோய் தான். உழைப்பவனுக்கு தான் தெரியும் உழைப்பின் வேதனை. இங்கே எப்படி பிஜேபி வந்தது? எப்படி விஜய் வந்தார் என தெரியவில்லை?
  17. இவர் ஏன் ஆப்கானைத் தெரிவு செய்யவில்லை என்று ஒரே குழப்பமாக உள்ளது.
  18. பிரமிளுக்கு வேற வேலை இல்லை. இப்பிடியா போட்டுக் கலாய்க்கிறது. இவங்களிட்ட மாட்டுப் பட்டு அந்தாள் (சிவனார்) படும் பாடு. சிவராத்திரியில் போட்ட குத்தாட்டம் காணுமே.
  19. 🤣............... 👍.............. சனங்களுக்கு சாமியும் வேண்டும், பூசாரிகளும் வேண்டும்.....................🤣. சாமி - பையன் சார் பூசாரிகள் - வசீ, கோஷான், செம்பாட்டான் 'சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும், பூசாரிகள் விட மாட்டார்கள்............' என்று நேற்று இதையே குறிப்பிட்டிருந்தேன்................🤣. பிரமிளின் தாக்கம். இந்த வரியை நேற்று எழுதும் போது பிரமிளின் 'மேல் நோக்கிய பயணம்' கவிதை மனதில் வந்து அடக்க முடியாத சிரிப்பு: ......... ஜடையில் கங்கையின் இமயப் பனிமூச்சு அனலாய் அடிக்கிறது நதிநாக்கு வரண்டு அவள் நீர்கேட்டுத் தவிக்கிறாள். அர்த்த நாரிஇவள் பாரிச வாதத்தில் பின்னே இழுக்கிறாள். ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து விவேகப் பித்தம் கோஷப் புயலில் கலைந்து புத்தி தெளிந்து பிழைக்கும் வழிதேட இடிஒலி எழுப்பிய உடுக்கை பொத்தல் விழுந்து 'பொத் பொத்' என்றொலிக்க திரிசூலம் துருப்பிடித்து கையைக் கடிக்க மறுகையில் மானின் கால் எலும்பும் இன்னொரு கைநெருப்பு அணைந்து புகைந்து அரனார் இருமவும் பின்தொடர்வோர் கல்லடியில் படம் ஒடுங்கி பாதிசெத்த பாம்புமாலை புழுவாகிப் புரள ஊழித்தீ தீவரண்டு நெற்றிக்கண் குழிவிழுந்து திருதிரு எனவிழிக்க அறந்து பறக்கும் பூணூலை பொடிமட்டையில் சுருட்டி பொத்திப் பிடித்தபடி அரனார் ஓடுகிறார்............ ...................
  20. அப்ப எனக்கு வயது <12 அண்ணா. எனது தகப்பானரை பொறுத்தவரை டிவி என்பது ஒரு சாத்தானின் பெட்டி. எனக்கு பதின்ம வயது முடிய சில வருடங்கள் இருக்கும் போதுதான் வீட்டில் டிவி யை அனுமதித்தார். ஆனால் சித்தி வீட்டில் போய் கிரிகெட் பார்க்க அனுமதி இருந்தது. இன்ன படம் என சொன்னால் நம்பி மினிசினிமாவுக்கு அனுப்பும் அளவுக்கு நம்பிக்கையும் இருந்தது. கெஞ்சி கூத்தாடுவது மினிசினிமா நடத்தும் அண்ணையிடம்😂. உள்ளே போனால் ஓமம் வளர்தது போல் ஒரே புகையாய் இருக்கும்😂 பின்னாளில் சவோய்யில் தொப்பியை போட்டு வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து பார்த்த படங்களுக்கு யாரிடமும் அனுமதி கோரவில்லை😂
  21. அவர் நான் போட்ட பதிவுக்கு வந்து சிரித்துவிட்டுப் போனார். தான் இல்லாமல் பயபுள்ளைங்க என்ன பாடுபடுறாங்கள் என்று பாக்கிறாரோ.
  22. @suvy அவர்கள் எப்போதும் 18+ வாசகர்களைக் குறி வைத்துத் தான் எழுதுவார் போல! யாழ் களத்தின் புஷ்பா தங்கதுரை😂!
  23. தாவூத் இப்ராகிம் விடயம் றோவுக்கும் தெரிய வந்துட்டோ😂 பிரியன் அண்ணையிடம் மாராப்பு ஏது? ராம்ராஜ் பெனியந்தான் இருக்கும்😂
  24. இதுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடி மினி சினிமா போயிருக்கிறீங்கள் என்பதை அறியும் போது..எனக்கு இரத்தக் கண்ணீர் வருகிறது😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.