Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது
  3. ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்து... முத்தீட்டுது.
  4. செம்பவள வழித்தோன்றல் என் தலைவன். ஒரு தமிழன். எனவே அவர் பிழை விட மட்டார். வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், தமிழன் தப்பு செய்யமாட்டான் என்பதை செவ்வாய் கிரக அறிஞர் கூட ஏற்கிறார்கள்.
  5. Today
  6. தான் போக வழியைக் காணேல்லையாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிக்கொண்டு வெளிக்கிடிச்சுதாம்!🤣
  7. ஓம், இதை நானும் கேள்விப் பட்டேன். சுவிசில் வாழ்ந்த எம் தலைவன் கிம் அந்த நாட்டுச் சொக்கலேற்றினால் அதிகம் கவரப் பட்டு, வட கொரியா வந்த பின்னரும் கூட விசேட வழிகளில் சுவிஸ் சொக்கலேற்றை வரவழைத்து அனுபவிப்பதாக அறிந்தேன்! கோவிட் காலத்தில் நாட்டை முற்றாகப் பூட்டிய வேளையில் கொரிய மக்கள் பட்டினியை எதிர் கொண்டதாக அறிந்த தலைவன் கிம் "No bread? why can't they eat chocolate?" என்று வினவியதாகவும் அறிந்தேன்😎!
  8. Ssonprtode7if7àeL2a 11ul4m1a:6ctfm59 g6u u905ii8999 8771sr50 · இந்த left ல இருக்க மனுஷன நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்ல ஒரு சின்ன கதை சொல்றேன் இவர பத்தி 💯" இவரு newzeland ஓப்பனர் ஒரு காலத்துல, அப்பறம் நம்ம MI க்கு talent scout பண்ண இவர appoint பண்ணாங்க. 2012-13 ல ஏதோ ஒரு உள்ளூர் மேட்ச்ல ஒரு பையன் வித்தியாசமான action ஓட பௌலிங் போட்டுட்டு இருந்தான். அந்த பையன் ரஞ்சி ஆடல எந்த வித ஸ்டேட் level matches உம் விளையாடல அப்போ. இவரு கண்ணுக்கு அவன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குனு தெரிஞ்சுச்சு ⌛" MI squad ல 10 lakhs க்கு தூக்கி போட்டாரு, ஒரு மேட்ச் வாய்ப்பும் கிடைச்சது. ஏப்ரல் 4 RCB கூட மேட்ச் வந்தான் பையன் போட்றான் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. அவனோட career ல முதல் விக்கெட் அப்போ உச்சத்துல இருந்த விராட் கோஹ்லி 🥵" அன்னைக்கு ஆரம்பிச்ச ஆட்டம் MI க்கு மட்டும் இல்லாம நம்ம நாட்டுக்கும் எத்தனையோ கஷ்டமான மேட்ச்கள அவனோட skill அ வச்சு முடிச்சு குடுத்தான் 💯" இப்போ உலகத்துலயே தவிர்க்க முடியாத ஒரு தலைசிறந்த பௌலரா வந்து நிக்கிற நம்ம பும்ரா தான் அந்த பையன் 💥" நமக்கு பும்ராவ குடுத்த தங்கமான மனுஷன் தான் இந்த John wright ❤️" #ipl #bumrah #JohnWright ✍️" Voir la traduction.....!
  9. optrsenSdoi06fmgmi0461lc7l8 mu619lum6g19016mm83t8aa2a1h5m528 · "நாங்க கிரவுண்டுலயே அழுதோம் , Hotel போயும் அழுதோம்.." 😭" 2016 உலகக்கோப்பை போட்டீல இந்தியா 146 அடிச்சாங்க. ஆனா Bangladesh ஜெயிக்கறமாரி இருந்தாங்க. முன்னாடி ஒவ்வொரு பாலும் ஜெயிச்சுட்டமேன்னு celebrate பண்ணவும் செஞ்சாங்க. 6 பாலுக்கு 11 வேணும். அப்றம் 4 பாலுக்கு 6. 3 பாலுக்கு 2. அங்கதான் விதி விளையாண்டது. 2 பால்ல 2 விக்கெட் காலி. கடைசி ball தலைவன் Gloveஐ கழட்டீட்டு அவங்க planஐ தெரிஞ்சுட்டு நின்னான்‌. Ball byes ஆனாலும் ஓடலாம்னு ரெடியா இருந்தாங்க அவங்க. ஏத்தமாரியே Non striker வேகமா ஓடிவந்தான். தோணி அவனைவிட வேகமா ஓடி ஸ்டம்பை அடிச்சு செதறவிட்டுட்டார்.‌ அப்றம் நைட்டு பூரா ஒரே அழுகை. 😑" இதைத்தான் முதல் பத்தீல அழுதோம்னு சொல்லீருந்தார் அந்த டீம் Muhmadulla. விடுங்கடா.. விடுங்கடா.. விளையாட்டுல தோக்கறவன் ஜெயிக்கறதும், நீங்க எப்பவுமே தோக்கறதும் சகஜம்தானே. இதுக்கெல்லாம் கண்ண கசக்கீட்டு. 🥹" Voir la traduction.......!
  10. 10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம் மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை. பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்! மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ். 2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம். 'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி. படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்! இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம் பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?! சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது. யூத் விமர்சனம்: கென் கருணாஸ் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான யூத் படம் எப்படி இருக்கு? | Youth Review: How is Youth movie starring Ken Karunas and featuring music by G.V. Prakash Kumar?
  11. முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு உடல் நிலை பாதிக்கப் பட்ட மாதிரி, தம்பருக்கும்... மனநிலை பாதிப்பு சம்பந்தமாக ஏதாவது வியாதி இருக்குமோ. ஏனென்றால்... அண்மையில், பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பல இடங்களில் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
  12. இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis). இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia). அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள். இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம். 1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது. 2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு. இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.
  13. முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்... களத்தைக் குழப்ப வெளியானதா கருத்துக் கணிப்பு? பாஜக கூட்டணியில் தவெக இணையப் போவதாகச் செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், அப்போதெல்லாம் அமைதி காத்த தவெக தரப்பு, “என்டிஏ கூட்டணி மற்றும் ராமதாஸ், சசிகலா தரப்பினருடன் தவெக கூட்டணி சேரப் போவதாகச் சொல்லப்படுவதில் துளியும் உண்மை இல்லை. யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. வாக்காளர்களை குழப்ப திமுக தரப்பில் இருந்தே இது மாதிரியான வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என இப்போது மறுப்புத் தெரிவித்திருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தவெக மாவட்டச் செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் காணொலி வழியே அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ”தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா?” என அவர் கருத்துக் கேட்டதாகவும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள், கலவையான கருத்துகளைச் சொன்னதாகவும் முடிவில், “தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என உறுதி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. டெல்லிக்கு விஜய் விசாரணைக்குப் போகவிருக்கும் சமயத்தில் திடீரென இப்படி தவெக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்ட விஷயம் குறித்து பலவாறாக தகவல்கள் வெளியாகின. விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்கக் காத்துக் கொண்டிருக்கும் பாஜக, டெல்லி விசாரணையை வைத்து அவர் மீதான விசாரணையில் ஏதாவது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். அப்படி ஏதும் இல்லாமல் விசாரணையை எளிதாக சமாளிக்கும் ஒரு உத்தியாகவே, கூட்டணிப் பேச்சுவார்த்தை ‘ஸ்க்ரீன் பிளே’யை தவெக தரப்பில் அரங்கேற்றியதாகவும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதற்கேற்ப, டெல்லியில் ஏழு மணி நேர விசாரணையை முடித்துக் கொண்டு வழக்கத்துக்கு மாறான புன்னகையுடன் கையசைத்தபடியே வெளியே வந்தார் விஜய். இதனிடையே இன்னொரு காரியமும் நடந்தது. மாவட்டச் செயலாளர்களுடன் கருத்துக் கேட்டுவிட்டு விஜய் டெல்லிக்குப் பயணமானது பலருக்கும் விஜய் பாஜக கூட்டணிக்குப் போகப் போகிறார் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்த நிலையில் தான் அவசர அவசரமாக விஜய் விசாரணைக்கு ஆவதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு கருத்துக் கணிப்பும் வெளியானது. அதில், விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் அடுத்த முதல்வர் ரேஸில் அவர் முன்னணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த விஷயத்தை எல்லாம் சுட்டிக்காட்டும் தவெக மேல்மட்ட நிர்வாகிகள் சிலர், “பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை குழப்புவதுதான் இவர்களது வேலையே. தேர்தல் பணிகளில் சில மாவட்டங்களில் தவெக-வினர் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று பரவலாக தகவல்கள் வந்ததால் அதை சரிசெய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவே காணொலி கூட்டத்தை நடத்தினார் ஆனந்த். அந்தக் கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி தொடர்பாகவும் தங்களது சந்தேகங்களையும் கருத்துகளையும் தெரிவித்தார்கள். அதையெல்லாம் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லி கூட்டத்தை முடித்தார் ஆனந்த். இது தான் நடந்தது. ஆனால், கூட்டணி குறித்து கருத்துக் கேட்பதற்காகவே இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியதாக திட்டமிட்டு செய்திகளை பரப்பிவிட்டார்கள். உண்மையில் விஜய்க்கு அதிமுக அணியுடன் கூட்டணி சேர இஷ்டமில்லை. செல்வாக்கு சரிந்து வரும் பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு ஏன் நாம் உயிருண்டாக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேசமயம், இந்தத் தேர்தலில் தனது பலம் என்னவென்பதை நிரூபித்துக் காட்டி அதன் மூலம் அடுத்த தேர்தல் களத்தை முழுமையாக வென்றெடுப்பதே விஜய்யின் தொலைநோக்குத் திட்டம். 2031 தேர்தல் சமயத்தில் இப்போது களத்தில் வாள் சுற்றிக் கொண்டிருக்கும் பலபேர் காணாமல் போயிருப்பார்கள். அப்போது விஜய்யும் உதயநிதியும் தான் களத்தில் இருப்பார்கள். அதில்லாமல் இப்போது பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அவர்களை அரியணை ஏற்றிவிட்டு அடுத்த தேர்தலில் அவரை எதிர்த்து அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. விஜய்யின் இந்த சிந்தனை எல்லாம் தெரியாமல், அவர் டெல்லிக்குப் போகிறார் என்றதுமே அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்ற தொனியில் அவசர அவசரமாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட வைக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால், டெல்லி செல்லும் விஜய் எக்காரணம் கொண்டும் பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிடக் கூடாது. அதற்கு முன்னதாக இப்படியொரு கருத்துக் கணிப்பு வெளியானால், நமக்கே இத்தனை செல்வாக்கு இருக்கையில் நாம் ஏன் பாஜக கூட்டணிக்குப் போக வேண்டும் என விஜய் யோசிப்பார். அதேபோல், இந்தக் கருத்துக் கணிப்பை வெளிட பாஜக தரப்பிலும் சிலர் உந்து சக்தியாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காரணம், பழனிசாமி - பாஜக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் பாஜக தலைவர்கள் சிலர், என்டிஏ அணி வென்றுவிடக் கூடாது என்பதை தங்களின் ‘பிளான் பி’ ஆக வைத்திருக்கிறார்கள். அதனால், விஜய் பாஜக அணிக்கு வந்துவிட்டால் என்டிஏ அமோக வெற்றிபெற்றுவிடும் என உள்ளுக்குள் அவர்களுக்கு பதற்றம். அதனால், ‘விஜய் தனித்து நின்றாலே வெற்றி பெறுவார். அவர் என்டிஏ அணிக்குப் போவது தற்கொலைக்குச் சமம்’ என்று வெளியான கருத்துக் கணிப்பின் பின்னணியில் அவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று முடித்தார்கள். அடுத்த ஒரு மாத காலத்துக்கு கதாநாயகன் விஜய்யை வைத்து இன்னும் என்னென்ன கதை - வசனங்களை கட்டிவிடக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்... களத்தைக் குழப்ப வெளியானதா கருத்துக் கணிப்பு?
  14. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல் Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 02:06 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்திரசேன, தனது மனைவியின் பெயரில் உருவாக்கிய போலி நிறுவனம் மூலம், இலஞ்சம் பெற்ற பணத்தை தனது சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241364
  15. இதென்ன பிரமாதம்… நேற்று கலிபோர்னியா கவர்னரை…அமெரிக்க ஜனாதிபதி என விளித்தார் தம்பர் 😂
  16. 19 Mar, 2026 | 12:33 PM ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் முன்பதிவுகளும் நேற்று புதன்கிழமை (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்றையதினம் 05 எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். முன்னர் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான கப்பல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கியூ.ஆர் முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளன. ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்: 5 கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் | Virakesari.lk
  17. 19 Mar, 2026 | 01:45 PM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம் | Virakesari.lk
  18. 19 Mar, 2026 | 04:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்) யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதது என இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஜீ.சிறிநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இப்போது அந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முற்போக்கான சிந்தனையில் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார். யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு : வடக்கில் மீண்டும் அச்சம் – சிறிநேசன் தெரிவிப்பு | Virakesari.lk
  19. யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - பல்கலை முன் மாணவர்கள் போராட்டம் 19 Mar, 2026 | 01:39 PM சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10ஆம் திகதி , பொலிஸ் வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து , துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் , துணைவேந்தர் , பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்றவருக்கு எதிராக மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பதிவாளர் ஊடாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர். குறித்த விசாரணைக்கு மாணவர்கள் அன்றைய தினம் செல்லாத நிலையில் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புக்கு அமைய , பல்கலைக்கழக மட்டத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , எமது தரப்பு நியாயங்களை தெளிவாக விசாரணை குழு முன் தெரியப்படுத்தியுள்ளோம். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிறிதொரு தரப்பினராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு எம்மை விசாரணைக்கு அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். எனவே குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அலைக்கும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வியாழக்கிழமை விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம். விசாரணைகளை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்து , மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என மாணவர்கள் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/241357
  20. 19 Mar, 2026 | 04:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் சத்தியப்பிரமாணம் அவரது வழக்கறிஞர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏயார் பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிதிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கபில சந்திரசேனவை ஏப்ரல் 2 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ஏயார்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமெரிக்க டொலர் 2 மில்லியன் இலஞ்சம் கோரல் மற்றும் பெற்றுக்கொண்டதாக அவர் முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் | Virakesari.lk
  21. 19 Mar, 2026 | 05:05 PM வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது. வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் 91 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த முன்மொழிவின் நோக்கம் வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் வகையில் அமைக்கபடுவதால் சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம் | Virakesari.lk
  22. கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையதத்தையும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 100 வருட குத்தகையில் விடலாம். அவர்கள் அந்த நிலத்தில் மாடிவீடுகள், வர்தக நிலையங்கள் அமைக்கலாம். ரயில் நிலையம், மேடைகள் புனரமைக்கப்பட்டு அரசிடம் கொடுக்க வேண்டும். வருடாவருடம் குறித்த அளவு நில வாடகையும் அரசுக்கு செலுத்த வேண்டும். ஐடியா இல்லாத பசங்க.
  23. “ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரான் மீது போரைத் தொடங்கியது என்று அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜோ கென்ட், தனது ராஜினாமா கடிதத்தில் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதிபர் ட்ரம்ப், மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் விலகுகிறேன். ஈரானில் நடக்கும் இந்தப் போரை எனது மனசாட்சியின்படி என்னால் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளியுறவுக் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஜூன் 2025 வரை, மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் அமெரிக்க வீரர்களின் உயிரையும் செல்வத்தையும் வீணடிக்கும் ஒரு வலை என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். உங்கள் முதல் ஆட்சியில், ஒரு முடிவில்லாத போருக்குள் சிக்காமல் ராணுவ பலத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் சிறந்த அதிபராக இருந்தீர்கள். ஆனால், இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் அமெரிக்க ஊடகங்களும் சேர்ந்து ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்பவைத்து, போருக்குத் தூண்டினர். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தி நம்மை ஏமாற்றியுள்ளனர். போர்க்களத்திற்கு 11 முறை சென்ற ஒரு வீரனாகவும், இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போரில் தனது மனைவியைத் தொலைத்தவனாகவும், அமெரிக்க மக்களுக்குப் பயன் தராத இந்தப் போருக்கு அடுத்த தலைமுறையை அனுப்ப என்னால் முடியாது. ஈரானில் நாம் யாருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தத் தவறான பாதையை இப்போதே மாற்றி நாட்டைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடியும். உங்கள் ஆட்சியில் பணியாற்றியதை கவுரமாக கருதுகிறேன்” இவ்வாறு ஜோசப் கென்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரே போரின் நியாயத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஈரான் போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது” - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு இயக்குநர் ராஜினாமா
  24. 19 Mar, 2026 | 05:26 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன. ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk
  25. ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 03:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையேயான மோதல்களைத் தணித்து, பிராந்திய போர் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்காக ஜீ -7 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு இராஜதந்திர முயற்சியை கனடா முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒரு “கொள்கை ஆவணத்தை” (Document of Principles) தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆவணம், பிராந்தியத்தில் போர் பரவுவதைத் தடுப்பதோடு, பொதுமக்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யவெட் கூப்பர் (Yvette Cooper) உடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் பேசிய அனிதா ஆனந்த், பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த ஜீ -7 கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அதில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அனிதா ஆனந்த், “மத்திய சக்திகள் (Middle Powers)” ஒன்றிணைந்து செயல்பட்டால் உலக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில், கனடா தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரான் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற உறுதியை கோரினாலும், தற்போதைய சூழலில் அத்தகைய உத்தரவாதம் வழங்குவது சிக்கலானதாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கியமான சவால்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/241376

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.