All Activity
- Past hour
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
நேற்றுவரை பாஜகவுடன் கூட்டணிவைத்திருந்த தேதிமுகவுக்கு கடந்த தேர்தலில் அதுவும் அமமுகவுடன் கூட்டணிவைத்து 0.43 வீத வாக்குகள்தான் அதற்கு 10+1 ராஜ்ய சபா கொடுத்த திமுகவினர்.பாஜக கூட்டணியில் சேரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இரு கம்னியூஸ்ட்டுகள்>விசிக>மநீம> தவாகவுக்கு குநறந்த இடங்களைக் கொடுத்திருப்பது. தெலுங்கு பாசத்தைத்தவிர வேறு எதைச் சொல்வது. 2.8 வீத வாக்குகளை கொண்ட மநீமய்யத்துக்கு உதய~ரியனில் நிற்க வற்புறுத்தியதால் மனமுடைந்து தேர்தலில் நிற்பதையே புறக்கணித்து விட்டார். தமிழர்களைப்புறக்கணித்து தெலுங்கர்களை அரவணைத்திருக்கிறது திமுக.
-
புலவர் started following சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தத்தை நெஞ்சம் .......சர்வர் சுந்தரம் . ......கே.ஆர் விஜயா......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்……. பருவங்கள் வாழ்க பெண் : வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும்… சொந்தங்கள் வாழ்க ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும் பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும் ஆண் : கன்னங்களே இதம் பதம்…….. காலங்கள் வாழ்க .........! ...... தேன் சிந்துதே வானம் ……..
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, ] 👆 இவர் உண்மையில் தெரிந்து தான் சொல்கின்றாரா 🙄 நிபந்தனைகளில் ஒன்று ஹோர்முஸ் கால்வாயை ஈரானிடம் நிரந்தரமாகவே கொள்ளையடித்து கப்பம் பெற்று கொள்ள ஒப்படைக்க வேண்டும் அடுத்தது ஈரானால் உருவாக்கபட்டு வழிநடத்தபடும் முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்புக்களாள ஹிஸ்புல்லா ஹமாஸ் ஹவுதி இவர்களை யாரும் இனி தாக்ககூடாது
- Today
-
ஈரான் போர் - நிம்மதி கிடைக்குமா? - பா.ரவீந்திரன்
ஈரான் போர் - நிம்மதி கிடைக்குமா? - பா.ரவீந்திரன் sudumanal image:VictorStock அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீண்டகாலப் போருக்கு தயார் பண்ணிவிட்டே இறங்கியது. அதன் விளைவாக உக்ரைன்-ரசியா போர் தொடர்கிறது. சென்ற ஆண்டு பொருளாதாரப் போரை அமெரிக்கா இதே வகைப்பட்ட தவறான மதிப்பீட்டோடு தொடங்கியது. “எல்லோரும் சமனற்ற வரி விதிப்பால் அமெரிக்காவை இதுவரை ஏமாற்றிவிட்டார்கள். எமது முன்னைய தலைவர்கள் முட்டாள்களாக இருந்துவிட்டார்கள். நான் அப்படி அல்ல. இனியும் அமெரிக்காவை மற்றைய நாடுகள் ஏமாற்ற முடியாது” என ட்றம்ப் ஒரு கதையாடலை உருவாக்கினார். ஆனால் அதன் உள்நோக்கம் அமெரிக்காவை மேவும் விதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சீனாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவது என்பதே. அதனால் மற்ற நாடுகளை விட சீனாவுக்கு வரம்பு மீறிய வரியை விதித்து அந்தப் போரை நடத்தினார். இன்னும் முடியவில்லை. சீனாவோ இந்தப் போரை நீண்டகாலத்துக்கு உரியதாக மாற்றி அமெரிக்க பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்போ ஈரானிடம் வந்திருக்கிறது அமெரிக்கா. “அணுவாயுதம் செய்யும் நிலைக்கு ஈரான் வந்துவிட்டது. உலகுக்கு ஆபத்து” என கதையாடலை முன்வைத்தது. ஆனால் அதன் உள்நோக்கம் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பிராந்திய வல்லரசுக் கனவுக்கு சவாலாக வேகமாக வளரும் ஈரானை அடித்து வீழ்த்துவது என்பதே. அத்தோடு G7 க்கு சவாலாக மேவி வரும் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் ஒரு முக்கிய தூணாக இருப்பதால், அமெரிக்க நலன் அடிப்படையில் ஈரானை ஒரு வழி பார்த்துவிட வேண்டும் என்ற இரண்டாவது கள்ள நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருந்தது. இந்த இரு கள்ள நோக்கங்களையும் மனதில் வைத்து ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை செய்ய இறங்கியது. ஆனால் ஈரான் ஒரு நீண்டகாலப் போருக்கான தயாரிப்பை கடந்த 40 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என்பதையும், தலைமைகள் வீழ்ந்தால் உடனுக்குடன் பிரதியிடக் கூடிய அரச மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை பலமாக நிறுவி வைத்திருந்தது என்பதையும் அமெரிக்கா அறியாமலிருந்தது. மறுபுறத்தில் தனது 40 ஆண்டுகால கனவை ட்றம்ப் சாத்தியப்படுத்த வந்திருப்பதாக நெத்தன்யாகு புகழாரம் சூட்டினார். ஏதோ ஓரிரு வாரங்களில் ஈரானை மண்டியிடச் செய்யலாம் என நினைத்த அமெரிக்கா ஆழமறியாமல் இன்னொரு சேற்றுள் கால்வைத்திருக்கிறது. நிலைமை எதிர்பார்த்ததுபோல் சுலபமாக அமையவில்லை. மாட்டிக்கொண்டிருக்கிறது. இப்போ தனது உலக மேலாதிக்க பவுசுக்கு பங்கம் ஏற்படாதபடி இந்தப் போரிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தத்தளிக்கிறது. அமெரிக்க மக்களில் 70 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போருக்கு எதிராக நிற்பதாக தரவுகள் சொல்கின்றன. இஸ்ரேலில் 80 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போரை ஆதரிக்கிறார்கள் என்பது மற்றொரு தரவு. இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவு சரியானது என சொல்ல முடியாவிட்டாலும், அதிகமான அமெரிக்க மக்கள் போரை விரும்பவில்லை என்பதும் அதிகமான இஸ்ரேலிய மக்கள் போரை விரும்புகிறார்கள் என்பதும் இதற்குள்ளால் பெறப்படுகிற முடிவு ஆகும். “இந்தப் போர் எமது போரல்ல. இஸ்ரேலின் போர். எதற்கான எமது இராணுவம் பலியாக வேண்டும்” என அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள். அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் வீதிக்கு வந்து குரல்கொடுக்கிறார்கள். “அமெரிக்கா ஒரு சரியான திட்டமிடலுடன் இந்தப் போரை தொடங்கவுமில்லை. எவ்வாறு இதிலிருந்து வெளியேறுவது என திட்மிடவுமில்லை” என இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காரணம் “இது அமெரிக்காவினது போர் அல்ல” என்கிறார்கள் அவர்கள். ஆப்கான் போரையும் ஈராக் போரையும் தவறானது, தேவையில்லாமல் எமது இராணுவத்தை பலிகொள்ள வைத்த முட்டாள்தனம் வாய்ந்தது என்றும், பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தின என்றும் ட்றம்ப் இந்தப் போர் தொடங்கும் வரை விமர்சித்துக் கொண்டிருந்தவர். இப்போ தவிர்க்க முடியாமல் அதே வழிமுறையில் ஈரானை அணுக விழைகிறாரா என்ற கேள்வி எழும்புகிறது. ஈரான் க்குள் அல்லது அதன் எரிசக்தி இதயமான கார்க் தீவுக்குள் அமெரிக்க இராணுவம் கால்வைக்கப் போகிறதான சாத்தியப்பாடுகள் பற்றி பலமாக விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில் மத்திய கிழக்கு அடிவருடி நாடுகளுடன் சேர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. எது எப்படியோ இந்த அணுகுமுறை எல்லாமே ஈரானுள் காலடி வைப்பதாகவே அர்த்தப்படும். அப்படி கால்வைத்தால் நீண்ட காலத்துக்கு மீள முடியாத சேற்றுள் அமெரிக்கா அகப்பட்டதாகவே அமையும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் சவாலை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் பலமான அடியை சந்திக்க நேரும். 2003 ஈராக் போரில் மட்டும் அமெரிக்கா 4 திரில்லியன் டொலரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஈராக்கைவிட பல மடங்கு பலம் பொருந்திய ஈரானின் இராணுவக் கட்டைப்பும், ஏவுகணை மற்றும் ட்றோண் தொழில் நுட்பமும், பெருநிலப் பரப்பும், மலைகள் கொண்ட நில அமைவும் அமெரிக்க இராணுவத்துக்கு இன்னும் கடினமான காலங்களையும் இழப்பையும் பரிசளிக்கும். அதேநேரம் பலம்பொருந்திய அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு ஈரான் மக்கள் பெருமளவு விலைகொடுக்கவும் நேரும். அழிவுகள்தான் எஞ்சும். உலகப் பொருளாதார கட்டமைவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தளவில் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கான், லிபியா, உக்ரைன் போர்களைப் போலல்ல ஈரான் போர். உலக இயக்கத்தின் இதயமான எண்ணெய் மற்றும் எரிசக்தி வளத்தை மோசமாக பாதிக்கக் கூடிய போர் இது. இந்த 26 நாட்களுக்குள்ளேயே அந்த நெருக்கடி பல்வேறு வடிவில் உலக மக்களின் வாசல்படிவரை வந்துள்ளது. எனவே இந்தப் போரை நீண்ட நாட்கள் இழுத்தடிக்க முடியுமா என்ற கேள்வி பலமானதாக உள்ளது. அமெரிக்கா ஈரானுக்குள் கால் பதித்தால் இந்த கால முரணுக்குள் அகப்பட்டு நசிபடும். எதிர்காலத்தில் தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வெளியேற நேரும். அதையும்விட இப்போது “நாம் போரில் வென்றுவிட்டோம்” என அமெரிக்கா ஒரு கதையாடலை உருவாக்கி வெளியேறுவது சுலபம். “எல்லா தலைவர்களையும் கொன்றுவிட்டோம், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு நிலையங்களை அழித்தொழித்து விட்டோம், யூரேனியம் செறிவூட்டும் அணுசக்தி நிலைகளை இயங்கமுடியாதபடி புதைத்துவிட்டோம், எமது எரிசக்தி தேவைக்கு ஹோமோஸ் நீரிணை முக்கியமானதல்ல. அதற்குரியவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்றவாறான கதையாடலை உருவாக்கிவிட்டு தப்பிச் செல்வது எல்லோருக்கும் நல்லது. இவையெல்லாவற்றையும் ட்றம்ப் ஏற்கனவே பேசிப் பேசி மறந்து மறந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். நெத்தன்யாகுவோ தனது கனவு மெய்ய்பட கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் ட்றம்ப் இந்தப் போரிலிருந்து வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகவே இருக்கிறார். மறுபுறத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்பது மீண்டும் தமக்கெதிரான தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்காது எனவும், அதனால் நிரந்தரமாக ஈரான் மீது போர் தொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா தர வேண்டும், அன்றேல் பேசிப் பயனில்லை என்கிறது ஈரான். தனது இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பது அதன் அர்த்தம். இந்தப் போரில் ஐரோப்பியர்கள் மற்றும் நேச பாச நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா என்பன இதுவரை பங்குபெற மறுத்துள்ள நிலைதான் உள்ளது. ஸ்பானியாவைத் தவிர, இவர்களை நம்ப முடியாது. இவர்கள் ஏற்கனவே நேட்டோ பெயர்ப்பலகையின் கீழ் நிகழ்த்திக் காட்டிய போர் வரலாறுகளிலிருந்து பெறப்படக்கூடிய பாடம் இதுவாகும். யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது. அவை முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டன. ஏற்கனவே ட்றம்ப் ஐரோப்பாவை கைவிட்டது போன்ற தோற்றம் என்பது அவர்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமான நிரந்தர விரிசலாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் இரு தரப்புக்கும் நேட்டோ என்ற இராணுவ வல்லாதிக்க கருவியாக செயற்படுபவை. அடிப்படையிலேயே இந்தப் போர்களுக்கான மனநிலையை பேணிவைத்திருப்பது காலனிய மனோபாவமும், வெள்ளை மேலாதிக்கமும்தான். அதை காக்கும் கருவி நேட்டோ அமைப்பு. அவைகளுக்கு வெளியில் எந்த நாடும் வல்லரசாக வருவதையோ, பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் மேவுவதையோ, வேறு எந்த வடிவிலும் ஆதிக்கம் செலுத்துவதையோ அந்த மனநிலை சகிப்பதில்லை. எனவே ஐரோப்பா இந்தப் போருக்கு எதிராக நிற்கிறது என்பதற்கோ, தேவைப்படும்போது அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை சேறாட மாட்டார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. உயர் நாகரிகம் அடைந்தவர்கள் தாம் என்ற கதையாடலை உருவாக்கி இப்போதுவரை அதைப் பேணும் காலனிய மனநிலை அவர்களிடம் இன்றும் தொடர்கிறது. மனிதநீக்கம் (dehumanisation) செய்கிற கதையாடல்களை உக்ரைன் போரின் போதும் கேட்டோம். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா கொடுமைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கமாஸ் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதை முன்தள்ளிய கதையாடலின் போதும் அதைக் கேட்டோம். ஆனால் ஈரானில் 168 பள்ளிச் சிறுவர்கள் மீது அமெரிக்கா வேண்டுமென்றே குண்டுவீசிக் கொன்றபோதும், இருபதினாயிரம் சிறுவர்கள் உட்பட 70000 க்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொல்லப்பட்டபோதும் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ யாரும் ‘மனிதநீக்கம்’ செய்து பேசுவதில்லை. இந்தப் போரில் இதுவரை ஈடுபடாத ஐரோப்பிய நாடுகளும் அப்படிப் பேசுவதில்லை. குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிப்பதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களை குற்றப்படுத்துவதையே தொடர்ந்து செய்கிறார்கள். இஸ்ரேல் அணுவாயுதம் வைத்திருப்பதையோ, அதை IAEA பரிசோதிக்க அனுமதிக்காமல் இருப்பதையோ பேசாத நாடுகள் மேடைக்கு வந்து “ஈரான் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது” என பேச என்ன அறம் இருக்கிறது. அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் அதைப் பேசுவது இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது. இப்போது அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கேட்டா செய்தன. அல்லது ஐநாவைத் தன்னும் கேட்டா செய்தன. அணுவாயுதம் செய்யக் கூடிய எல்லா வளத்தையும் தொழில்நுட்பத்தையும் எட்டிய ஈரான் இதுவரை அதை செய்யாமலிருந்தது. இந்தப் போரும் அதன் பின்னான கெடுபிடிகளும் ஈரானின் இருப்பு மீது தொடர்ந்து அச்சுறுத்தலலாக மாறினால், எதிர்காலத்தில் ஈரான் அணுவாயுத தயாரிப்பை நோக்கி தள்ளப்பட சாத்தியம் உண்டு. “பலமற்ற நாடுகளின் பலம்” அணுவாயுதம் என வடகொரிய அதிபர் சொல்வது ஒன்றும் பயமுறுத்தல் அல்ல. பாதுகாப்பு! கடந்த வருடம் 2025 ஆனி மாதமும் மற்றும் இவ் வருடம் பெப்ரவரி கடைசியிலும் நடந்த இரு வெவ்வேறு பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படும் நிலை கனிந்து வரும்போது, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா -இரண்டு சந்தர்ப்பங்களிலும்- ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. முதுகில் குத்திய சம்பவங்கள் இவை என ஈரான் வெளிநாட்டமைச்சர் இதை விபரித்திருந்தார். பெப்ரவரி கடைசி பேச்சுவார்த்தையில் எல்லாம் பேசி ஒரு தீர்வுக்கு அருகில் வந்துவிட்டதான திருப்தியில் இருந்தபோது, மறுநாள் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என -பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்து நடத்திய- ஓமான் வெளிநாட்டமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். ஆக அமெரிக்கா விரும்பியது தீர்வை அல்ல. இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்தவே என்பதுதான் அதன் அர்த்தம். அதனால் “சீனா, ரசியா, இந்தியா போன்ற பலம்பொருந்திய நாடுகள் ட்றம்ப் உடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு கறாராக ஒன்றைத் தெரிவித்துவிட வேண்டும்” என்கிறார் உலகின் முன்னணி அரசியல் விமர்சகர் ஜெப்ரி ஸாக்ஸ். “இந்தப் போர் உலகத்தில் எல்லோரையும் பாதிக்கிற விடயம். அதைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது எம்மையும் பாதிக்கிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பாதிக்கிறது. இன்னொரு உலகப் போரில் போய் முடிவடையக் கூடிய ஆபத்தும் கொண்டது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அழுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார் அவர். இது அவர்களின் கடமை. மவுனமாக இருக்கக் கூடாது என்கிறார். பதவியேற்ற நாளிலிருந்து ஈரான் போர் வரை மாத்தி மாத்தி கதைக்கும் ட்றம்ப் இன் கோமாளித்தனம் உலகம் அறிந்தது. அவரது நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் ஆதாரமாக கொண்டு, அவை டிமென்ஸியா நோயின் அறிகுறிகள் என உளவியல் நிபுணர்கள் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெப்ரி ஸக்ஸ் இத் தகவலை சில பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். கோமாளித்தனமோ டிமென்ஸியாவோ என்ன கோதாரியோ அவையாவது இந்தப் போரை நிறுத்தச் சொல்லி ட்றம்ப்பின் மண்டைக்குள் சொல்லிவிட்டால் பெரும் உதவியாக இருக்கும். உலகம் நிம்மதியாக இருக்கும்! https://sudumanal.com/2026/03/27/நிம்மதி-கிடைக்குமா/
-
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு
மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும் March 28, 2026 11:59 am ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில், இனங்களைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் உண்டென்றால் அவர் நடராஜா ரவிராஜ். 2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பின் இதயப்பகுதியில் கேட்கப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள், ஒரு தனிமனிதனை மட்டும் வீழ்த்தவில்லை; மாறாக, இனங்களுக்கு இடையே பாலமாக இருந்த ஒரு பலமான ஜனநாயகக் குரலையே மௌனிக்கச் செய்தன. 1962 இல் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், ஒரு சிறந்த சட்டத்தரணியாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், வெறும் வருமானத்திற்காக வாதிடுபவராக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். மனித உரிமைகள் ஊடாக அவர் ஆற்றிய பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘நீதியின் காவலன்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது. யாழ். மாநகர முதல்வராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உயர்ந்தபோது, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாக வாதிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பேசுவதோடு நிறுத்திவிடாமல், முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல், அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வலிகளை அவர்களின் மொழியிலேயே புரியவைத்த ஆற்றல் ரவிராஜுக்கு மட்டுமே இருந்தது. கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஊடக நேர்காணல் ஒன்றை முடித்துவிட்டுப் புறப்பட்ட அந்தச் காலை வேளை (காலை 8.15), மரணம் மோட்டார் சைக்கிள் வடிவில் வந்தது. நாரஹேன்பிட்டி மார்தா வீதி வழியாகத் தனது வாகனத்தில் எல்விட்டிகல மாவத்தைக்குள் அவர் பிரவேசித்தபோது, இனந்தெரியாத நபர்களால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள் 44 வயதேயான அந்த இளம் தலைவரையும், அவரது மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மனையும் சிதைத்தன. தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது. படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட, வாகரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கொழும்பில் ஐநா அலுவலகம் முன் நின்றுகொண்டு, “எங்கள் மக்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக முழங்கியவர் அவர். இந்தக் கொலையின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. உளவுப்பிரிவு அதிகாரி Liyanarachchige Abayaratne அளித்த சாட்சியத்தில், இந்தக் கொலைக்காக ‘கருணா குழு’ சார்ந்த பிரிவினருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். கங்காராம கடற்படை புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகளே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகச் சாட்சியங்கள் தெரிவித்தன. பத்து ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2016 டிசம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, நள்ளிரவு 12:25 மணிக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் கோரிக்கைப்படி, ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் ‘சிறப்பு ஜுரர் சபை’ இந்த வழக்கை விசாரித்தது. சாட்சிகள் அடையாளம் காட்டிய போதிலும், மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேரையும் ஜுரர் சபை ஏகமனதாக விடுதலை செய்தது. “தமிழர் குரலை நசுக்க இராணுவத்துடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் முயற்சி இது” என அப்போது சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகச் சாடினர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட அந்த நள்ளிரவு நேரம், இலங்கையின் நீதித்துறையில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. நீண்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2026 மார்ச் 26 அன்று இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஐந்து பேரையும் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நள்ளிரவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முறையை “அசாதாரணமானது” என நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா சுட்டிக்காட்டினர். குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் மறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ள நிலையில், இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்து உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். https://oruvan.com/the-great-man-nataraja-raviraj-the-fall-of-a-democratic-voice-and-the-long-journey-to-justice/
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது; விசாரணைகளுக்கு பருத்தித்துறை நீதிமன்று அனுமதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் நூலகமொன்றை அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் நூலகம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த அனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த உள்ளனர் எனவும் அதனூடாக விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் அனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபா நிதி வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது. https://akkinikkunchu.com/365852/
-
ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?
ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா? March 28, 2026 ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதெனினும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது என இந்தியாவின் பிரபல பூகோள அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் பிரம்மா செல்லனே சுட்டிக்காட்டியுள்ளார். https://www.ilakku.org/sri-lanka-refuses-to-return-iranian-sailors-did-it-bow-to-us-pressure/
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம் 28 Mar, 2026 | 11:24 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், குறைந்தது 10 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக த வொசிங்டன் போஸ்ட் ( The Washington Post ) செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் இருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் விளைவாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன என்பதற்கான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/242142
-
தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி
தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி adminMarch 28, 2026 தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231152/
-
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.-
- கருத்து படங்கள்
- தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு!
தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு! வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம்வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்ததுதான் இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் படும் துன்பத்திற்கு காரணமென சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை அச்சப்படுத்துகின்றார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தேசிய பூங்கா தொடர்பில் மக்களுடன் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது குறித்த கருத்தரங்கில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அபிவிருத்தி எங்களுக்கு வேண்டும் தேசிய பூங்கா கட்டாயம் எங்களுக்கு தேவை என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் அப்போது அந்தக் கருத்தரங்கில் இருந்த நான் உட்பட ஒரு சிலர் சுமந்திரனின் கருத்தை கடுமையாக எதிர்த்தோம் தேசிய பூங்காக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்பதனை கூறும்போது சுமந்திரன் அவர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை இன்று யானைகளை கொண்டுவந்து எமது பகுதிக்குள் விட்டு தேசிய பூங்காவென கூறி எமது மக்களை தமது காணிகளை விட்டு விரட்டியடிக்க பார்க்கின்றார்கள்.அன்று தமிழ் அரசுக் கட்சி இதனை எதிர்த்திருந்தால் இன்று இந்த நிலை மக்களுக்கு வந்திருக்காது அப்போதைய காலத்தில் இந்த வர்த்தமானியை நீக்குவதாக கூறினார்கள் அவர்களிடம் பெரும்பாண்மை இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கின்றது. தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியை அவர்களால் நீக்க முடியும் பெரும்பான்மையை கொண்டு நீக்குவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் https://athavannews.com/2026/1470248- ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.-
போன வாரம் ஈரானுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது என்று... தம்பர் சொன்னார். அவ்வளவும் பொய்யா.. கோபால்.- லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவும், இஸ்ரேலும்... லண்டனில் குண்டு போட்டுவிட்டு, ஈரானில்.. பழி போடப் போகிறார்கள் போலுள்ளது. இவங்கள... அப்பிடி செய்யக் கூடிய ஆட்கள். லண்டன் உறவுகள்... பஞ்சியை பார்க்காமல், இப்பவே "பங்கர்" வெட்டி வைப்பது நல்லது.- ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.-
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.- ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff )தெரிவித்துள்ளார். அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ‘எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,’ என்று தெரிவித்தார். ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff ) உறுதிப்படுத்தினார். ‘கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்’ என்று அவர் மேலும் கூறினார். ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும்,, வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார் ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470260- லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா
லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா. ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை. இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை கூறியதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து லண்டன் 4, 000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3, 300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார். இதனால்,ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப், பிரித்தானிய போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்றார். https://athavannews.com/2026/1470257- யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
தமிழ் நாட்டில் உள்ள... மணல் கொள்ளைக்காரர்களின், செயலை... யாழ்ப்பாணத்திலும் செய்கின்றார்கள். சிலகாலத்துக்கு முன்பும் மணல் லாரிகளால் சிலர் கொல்லப்பட்டு இருந்தார்கள். மணல் மாஃபியாக்களின் செயலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல், போதைக் கும்பல் மாதிரி... பலம் பெற்று விடுவார்கள்.- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
முஸ்லிம் மதம் சொல்லிவிட்டது என்பதால் முஸ்லிம்கள் யூத வெறுப்பைகடமையாக கடைபிடிக்கின்றார்கள். பின்பு ஹிட்லரின் யூத வெறுப்பு படுகொலைகள் இப்போது மேற்குலகில் உள்ள ஈழ தமிழர்கள் சிலர் யூத வெறுப்பிலா 🙄 முஸ்லிம் மத ஈரான் அமைப்பின் அம்புலன்ஸ் எரிப்பு மனித விரோத குற்ற செயல் .- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
புரிகிறது தம்பி. சகலவிதமா கருத்துக்களையும் பகிரத்தான் வேண்டும். இதுவும் உண்மையாக இருக்கலாம். குற்ற விசாரணை முடியட்டும்.- யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு Mar 28, 2026 - 11:01 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9w5z35000a356pv48tkfkzஏராளன் started following யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு- ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை
திருநங்கைகளுக்கு LA28 ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை; பெண்கள் பாதுகாப்பு குறித்த கொள்கையை IOC அறிவித்தது 27 Mar, 2026 | 01:24 PM (நெவில் அன்தனி) ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெணகள் (மகளிர்) பிரிவின் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கான வழிகாட்டி கரிசனைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கைக்கு அமைய லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அதற்கு பின்னரான விளையாட்டு விழாக்களிலும் திருநங்கைகளுக்கு பங்குபற்ற தடை விதிக்கப்படவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் இந்தக் கொள்கைக்கு வியாழனன்று (26) ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அது நடைமுறைக்கு வருவதுடன் முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்றி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்ற பின்னர், தனது முதலாவது மிக முக்கிய மற்றும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முடிவாக 'பெண்கள் பிரிவின் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான இந்தக் கொள்கையை வெளியிட்டார். இதற்கு அமைய பாலின வளர்ச்சி குறைபாடுகள் (SRY) உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கிலிருந்து விலக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும். தனிப்பட்ட மற்றும் குழுநிலை போட்டி நிகழ்ச்சிகள் உட்பட ஒலிம்பிக் விளையாட்டு விழாக்கள் அல்லது வெறு எந்த சரவ்தேச ஒலிம்பிக் குழு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் பிரிவுகளில் பாலினத்தை உறுதிசெய்யும் மரபணு (SRY) பரிசோதனையின் மூலம் உயிரியல் ரீதியாக பெண்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பங்குபற்ற முடியும் என இந்தக் கொள்கை விளக்குகிறது. சான்றுகளின் அடிப்படையிலும் நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரிலும் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை லொஸ் ஏஞ்சலிஸ் (LA28) ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் அமுலுக்கு வரும். இது மகளிர் பிரிவில் நியாயம், பாதுகாப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை நிலைநிறுத்துகிறது. இது முன்திகதியிடப்பட்டு செயல்படுத்தப்படமாட்டாது என்பதுடன் எந்தவொரு அடிமட்ட அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுத் திட்டங்களுக்கு இது பொருந்தாது. 'இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் உயிரியல் ரீதியாக ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது,' என உலக விளையாட்டின் உயர் பதவியை வகிக்கும் முதலாவது ஆபிரிக்கரும் பெண் தலைவருமான கிறிஸ்டி கொவென்ட்றி, வியாழக்கிழமை ஒரு காணொளிச் செய்தியில் கூறினார். அந்த செய்தியில், 'இனிமேல் பெண்கள் பிரிவில் போட்டியிட விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களும், அவர்களின் சரியான உயிரியல் பாலினத்தைத் தீர்மானிப்பதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் பாலின நிர்ணயப் பகுதி மரபணுப் பரிசோதனைக்கு ( Sex Determining Region Y) உட்படுத்தப்படுவார்கள் என அவர் விளக்கினார். 'ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் மிகச் சிறிய வித்தியாசங்கள் கூட வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வேறுபாடாக அமையலாம். எனவே, அது நியாயமானதாக இருக்காது என்பது முற்றிலும் தெளிவாகிறது. மேலும், சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பானதாக இருக்காது' என நிறைவேற்றுச் சபை கூட்டத்திற்குப் பின்னர் கோவென்ட்றி விளக்கினார். அதேவேளை, தனிநபர் அல்லது குழுநிலை விளையாட்டுக்கள் உட்பட ஒலிம்பிக்கிலோ அல்லது வேறு எந்த பெண் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறுவது, இனி உயிரியல் ரீதியாகப் பெண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது. 'ஒரு முன்னாள் தடகள வீராங்கனையாக, நியாயமான முறையில் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து ஒலிம்பிக் வீரர்களின் உரிமைகளையும் நான் உணர்வுபூர்மாக நம்புகிறேன். நாங்கள் அறிவித்துள்ள இந்தக் கொள்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் மருத்துவ நிபுணர்களின் தலைமையிலும் வழிகாட்டல்களிலும் தயாரிக்கபட்டுள்ளது' என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிறிஸ்டி கொவென்ட்றி மேலும் தெளிவுபடுத்தினார். 'ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த செயல்முறை தொடர்பாக நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையுடன் தெளிவான கல்வி மற்றும் அறிவுரைகள் கிடைக்க வேண்டும்.' கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களின் உரிமைகளை மீறுவதாகக் கருதியதால், கட்டாயப் பாலினப் பரிசோதனையை நீண்ட காலமாக எதிர்த்து வந்த சர்வதேச ஒலிம்பிக் குழு, இப்போது இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புதிய கொள்கையை பெண் தலைமையில் துணிந்து வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242076- இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது
இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது Mar 28, 2026 - 08:46 AM இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று (27) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த விடுதி ஒன்றில் வைத்து சந்தேகநபர்களுடன் பெருமளவிலான கணினிகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 2026.04.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmn9rd93h0005356p2uq6zsd2- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
அண்ணை, பாதிக்கப்பட்ட தரப்புடன் இருப்பது தான் அறம் என கூறுகிறார்கள். வேறொரு கோணத்திலும் சம்பவத்தை நோக்கியதால் இதனை பகிர்ந்தேன்.- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
ஒரு இனம் இப்படித்தான் என முன் முடிவு செய்து அதன் படி கருத்து நிலை எடுப்பது…பச்சை இனவாதம். இப்படி ஒரு போலிக்கொடி நடவடிக்கை நடந்தது என்பதற்கு இனவாத மனங்களில் ஏற்பட்ட ஊகங்களை தவிர வேறு ஆதாரம் ஏதும் இதுவரை இல்லை. இரெண்டு பேரை பிடித்து விசாரித்து பிணையில் விட்டுள்ளது பொலிஸ். விசாரணை முடிவுக்கு பொறுத்திருப்போம். இயல்பில் எழுந்த, புகட்டப்பட்ட யூத வெறுப்பில் நாமாக முடிவுகளை எடுக்காமல். - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.