Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. அட... நம்ம விஜய் என நினைத்து வந்தால், இது வேறை விஜய்...
  3. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா? பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கட்டுரை தகவல் அமரேந்திர யார்லகடா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் இரண்டு பிரபலங்களுக்கு இடையிலான திருமணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அந்தத் திருமணத்தின் பின்னணியில் உள்ள பாரம்பரியத்தைப் பற்றியதும் கூட. அதுதான் 'கொடவா' பாரம்பரியம். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ளது ராஷ்மிகடி மாவட்டம். கொடவா பாரம்பரிய திருமணம் முறை பற்றிய செய்திகள் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. குடகு என்பது கூர்க் என்றும் அழைக்கப்படுகிறது. ராஷ்மிகா கூர்க்கில் கல்வி பயின்றார். அவர்களது திருமணச் சடங்கு வழக்கமான இந்து முறைப்படி மட்டுமல்லாமல், கொடவா பாரம்பரியத்தின் படியும் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், தங்களது திருமணம் எந்த பாரம்பரியத்தின்படி நடந்தது என்பதை விஜய்யோ அல்லது ராஷ்மிகாவோ வெளிப்படுத்தவில்லை. கர்நாடகாவின் குடகு (கூர்க்) பிராந்தியத்தில் பொதுவாக திருமணங்கள் குடகு பாரம்பரிய பாணியில் நடத்தப்படுகின்றன. குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடவாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராஷ்மிகா கர்நாடகாவின் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் பாரம்பரியப்படி திருமணம் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கொடவா பாரம்பரியத்தில் நடைபெறும் திருமணத்தில் அர்ச்சகர்கள் கிடையாது. மருமகள் முறை திருமணம் என்றால் என்ன? வழக்கமான இந்து மரபுகளிலிருந்து கொடவா திருமணம் மாறுபட்டது. இந்து திருமணங்களில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க பூஜை, தாலி கட்டுதல் மற்றும் அட்சதை தூவுதல் போன்றவை இடம்பெறும். ஆனால் , கொடவா பாரம்பரியத்தில் அர்ச்சகர்களே கிடையாது. குடும்பத்தின் பெரியவர்களே திருமணச் சடங்கை நடத்துகிறார்கள். திருமண மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டு முன்னோர் வழிபாடு நடைபெறுகிறது. பாரம்பரிய கொடவா திருமணத்திற்கும், பாரம்பரிய இந்து திருமணத்திற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாக மைசூரைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். பாரம்பரிய கொடவா திருமணங்களில் மிகக் குறைவான பண்டிதர்கள் தான் கலந்து கொள்கிறார்கள் என்று ரகு சர்மா கூறினார். தானும் இதுபோன்ற நான்கு அல்லது ஐந்து பாரம்பரிய கொடவா திருமணங்களை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கொடவா திருமண விழாவில் பன்றி இறைச்சி பரிமாறுவது வழக்கம். இரண்டு நாள் திருமண விழா கொடவா பாரம்பரியத்தில், ஒரு திருமணம் 2 நாட்கள் நடைபெறும் என்று கொடவாக்லான்.காம் (Kodavaclan.com) கூறுகிறது. கொடவாக்லான் (Kodavaklan) இணையதளத்தில் சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு : திருமணத்தின் முதல் நாளில், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு வருகிறார்கள். ஒரு திருமணப் பந்தல் அமைக்கப்படுகிறது. இது மா இலைகள், வாழை இலைகள் மற்றும் பலா மரக் கிளைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. "இது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரியம். திருமணப் பந்தல் கூட பால் சிந்தும் மரங்களின் குச்சிகளால் செய்யப்படுகிறது. அதுவும் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது" என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். பன்றி மற்றும் காய்கறிகளும் வெட்டப்படுகின்றன. இந்த முழு சடங்கிலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த சடங்கு 'ஊர் கொடுவோ' அல்லது 'பந்தலா கங்கி' அல்லது 'தேரனேபெப்போ' என்று அழைக்கப்படுகிறது. கொடவா பாரம்பரியத்தில் திருமணச் சடங்குகளில் பன்றி இறைச்சி பரிமாறுவது வழக்கம். "திருமணத்தில் கண்டிப்பாக அசைவம் இருக்கும். பன்றி இறைச்சி நிச்சயம் பரிமாறப்படும். இது அவர்களின் திருமணத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படும்" என்று ரகு சர்மா கூறினார். மாலையில், அனைவரும் ஒன்றாகக் கூடி கொண்டாடுகிறார்கள். பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,பாரம்பரிய கொடவா திருமண விழாக்கள் இரண்டு நாட்கள் நடைபெறும். இரண்டாவது நாளில் என்ன நடக்கும்? இரண்டாம் நாள் 'மங்களா' என்று அழைக்கப்படுகிறது. காலையில், மணமகனின் முகத்தில் பால் தடவப்பட்டு சவரம் செய்யப்படுகிறது. பின்னர், மங்களாஸ்நானம் செய்யப்படுகிறது. இதில் மணமகனின் தாயார் மற்றும் திருமணமான இரண்டு பெண்கள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் பாரம்பரிய 'குப்யா' உடையும், இடுப்பில் ஒரு வாளையும் அணிவார்கள். இருப்பினும், விஜய்-ராஷ்மிகா திருமணச் சடங்கின் போது சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், விஜய் இந்த வகை கொடவா உடையில் காணப்படவில்லை. விஜய் கீழே வெள்ளை உடுப்பும், இடுப்பில் தங்க பெல்ட்டும், மேலே சிவப்பு நிற மேலாடையும் அணிந்திருந்தார். மணமகள் தனது மங்களாஸ்நானத்தை முடித்த பிறகு, அவர் வளையல் அணியும் சடங்கு நடத்தப்படுகிறது. திருமணத்திற்காக, மணமகள் சிவப்பு நிற, தங்கக் கரை கொண்ட புடவையில் அலங்கரிக்கப்படுகிறார். 'பலே பிருது' என்பது திருமணச் சடங்கின் ஒரு முக்கிய அம்சமாகும். அதன்படி, திருமண மண்டபத்திற்கு செல்லும் பாதையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாழை மரத் தண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். மணமகள் அல்லது மணமகனின் மாமா, ஒரு பெரிய கத்தியின் உதவியால் இந்த வாழைத் தண்டுகளை ஒரே வீச்சில் வெட்ட வேண்டும். "வாழைத் தண்டுகளை வெட்டும் கலாசாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது" என்று ரகு சர்மா பிபிசியிடம் தெரிவித்தார். "சில இடங்களில் மணமகனும் வாழைத் தண்டுகளை வெட்டுகிறார். மற்ற இடங்களில் மாமா அதைச் செய்கிறார்," என்று அவர் கூறினார். மணமகள் மீதான உரிமைகளைக் குறிக்கும் 12 கற்கள் அவர்கள் வாழைத் தண்டை மூன்று முறை சுற்றி வந்து, பூக்களைத் தொட்டு, பின்னர் வீரத்தின் அடையாளமாக அந்த வாழைத் தண்டை வெட்டுகிறார்கள். பின்னர் திருமண மேடையை மூன்று முறை வலம் வந்து கிழக்கு நோக்கி அமர்கிறார்கள். அதன்பின் ஆசிர்வாதம் நடைபெறுகிறது. முதலில் தாய், பிறகு தந்தை, அதன்பின் மற்ற பெரியவர்கள் ஆசி வழங்குகிறார்கள். பின்னர் மணமகள் அங்கு வந்து பால், பரிசுகள் மற்றும் தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் அடங்கிய பையை மணமகனிடம் வழங்குகிறார். மல்லிகை மாலைகள் பரிமாறப்படுகின்றன. பின்னர், பெரியவர்கள் புனித விளக்கின் முன் நின்று, மணமகளின் பொறுப்பை மணமகனிடம் ஒப்படைப்பதாகக் கூறுகிறார்கள். மணமகள் வீட்டின் பெரியவர்கள், மணமகளின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்குவதாகக் கூறி, மணமகன் வீட்டுப் பெரியவர்களிடம் 12 கூழாங்கற்களைக் கொடுக்கிறார்கள். மணமகன் வீட்டுப் பெரியவர்கள் 11 கற்களை எடுத்துக் கொண்டு ஒன்றை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மணமகள் மீது அவர்களுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்க இது செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் மணமகளை அழைத்துச் செல்வதோடு சடங்கு முடிகிறது. இந்தத் திருமணம் மிகக் குறுகிய நேரத்தில் நடத்தப்படும் என்று ரகு சர்மா கூறினார். இரவு விருந்தில் பெண்களுக்கு முதலில் உணவு பரிமாறப்படுவது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. மாலையில், மணமகள் கங்கா பூஜை செய்கிறார். பின்னர் பாதங்களில் சந்தனம் பூசப்படுகிறது. அவர்கள் கிணற்றுக்குச் சென்று வெற்றிலை, கிழங்கு, அட்சதை மற்றும் தேங்காய் ஆகியவற்றை நீரில் கலக்கிறார்கள். பின்னர் மணமகளுடன் நீரைச் சேகரித்து பானையில் ஊற்றுகிறார்கள். ஒரு பானை தண்ணீர் கொண்டு வரப்பட்டு புனித விளக்கின் முன் வைக்கப்படுகிறது. அங்கிருந்து புகுந்த வீட்டில் மணமகளின் பொறுப்பு தொடங்குவதாக நம்பப்படுகிறது. திருமணச் சடங்கு 'கொம்பரேக் கொடுவோ' உடன் முடிவடைகிறது. இதன் ஒரு பகுதியாக, மணமகன் மணமகளைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது முகத்தில் இருக்கும் திரையை அகற்றுகிறார். அதன் பிறகு, அவர் அவருக்கு ஒரு தங்க திருமண மோதிரத்தைப் பரிசளிக்கிறார். இத்துடன், திருமண விழா நிறைவடைகிறது. பட மூலாதாரம்,insta/rashmika_mandanna படக்குறிப்பு,கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்தனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திரையுலகப் பயணம் ராஷ்மிகா மந்தனா 2016-ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2018-இல் 'சலோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் தேவரகொண்டா, 2011-ஆம் ஆண்டு 'நுவ்விலா' திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். சில படங்களில் குணச்சித்திர நடிகராகத் தோன்றினார். 2016-ஆம் ஆண்டு 'பெல்லி சூப்புலு' திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். அடுத்த ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து 'ரணபலி' படத்தில் நடித்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?
  4. எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு Published By: Vishnu 28 Feb, 2026 | 10:17 PM மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி சனிக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 4 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் ரூ. 6 உயர்ந்து ரூ. 329 ஆக விற்பனை செய்யப்படும். மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 293 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், 95 ஒக்டேன் பெற்றோல் (ரூ. 340) மற்றும் மண்ணெண்ணெய் (ரூ. 182) விலைகளில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239835
  5. காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
  6. 😂 நாளைக்கி இந்தியாவும் வென்றால் 4 செமி பைனல் அணியை சரியாக கணித்தேன் என என்னை நானே ஆறுதல் படுத்த முடியும் என்பதால் ஒரு சின்ன சந்தோசம்😂
  7. இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய உச்ச தலைவர் காமனெயியின் வளாகத்தை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. 28 பிப்ரவரி 2026, 16:58 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் "முக்கிய போர் நடவடிக்கைகள்" குறித்து விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அரசுப் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, இரான் மீது இஸ்ரேல் "தற்காப்புத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல வாரங்களாக நீடித்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இரானில் என்ன நடந்தது? இரான் நேரப்படி காலை 09:30 மணிக்குச் சற்று முன்னதாக (06:00 GMT), தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்தன. பிபிசி பார்த்த புகைப்படங்கள் நகரத்தின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்திற்கு மேல் புகை மூட்டம் இருப்பதைக் காட்டுகின்றன. இஸ்பஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்தவர்கள் பீதியில் ஓடுவதைக் காட்டுகின்றன. அலறல் சத்தங்களும் அழுகை சத்தங்களும் பின்னணியில் கேட்கின்றன. உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை. உள்ளூர் அதிகாரி ஒருவர் அரசு ஊடகத்திடம் கூறுகையில், இரானின் தெற்கு மாகாணமான மினாப்பில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை பிபிசியால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை. தாக்குதல்களுக்குப் பிறகு இரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இந்த நடவடிக்கை 'மிகப்பெரியது மற்றும் தொடர்ச்சியானது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான" நடவடிக்கை என்று இதனை டிரம்ப் விவரித்துள்ளார். பல சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் டெஹ்ரான் முழுவதும் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன. இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. கட்டடம் நேரடியாகத் தாக்குதலுககு இலக்கானதா என்பது வீடியோ கோணத்தில் தெளிவாகத் தெரியவில்லை. இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சரிபார்க்கப்பட்ட புகைப்படம், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் சிறிய மளிகைக் கடைகளுக்கு மேலே அடர்த்தியான, இருண்ட புகை மண்டலம் எழுவதைக் காட்டுகிறது. நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூட்டுத் தாக்குதல்களை "முற்றிலும் தூண்டப்படாத, சட்டவிரோதமான தாக்குதல்" என்று விவரித்தார். முன்னதாக, இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள "தனது அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவத் திறன்களையும் சட்டப்பூர்வமான சுய பாதுகாப்பு உரிமையின் கீழ்" பயன்படுத்தும் என்று அவர் கூறினார். அருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் தொலைபேசி அழைப்புகளில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் "அந்த நாடுகளின் வசதிகள் மற்றும் நிலப்பரப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறுப்பு உண்டு" என்பதை நினைவூட்டினார் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன? அமெரிக்காவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்றை டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டார். "சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரான் மீது பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது" என்று அவர் கூறினார். "இரானிய ஆட்சியிடமிருந்து வரவிருக்கும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்" என்று கூறிய அவர், "இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை உறுதி செய்வதே" அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். மேலும், இரானிய மக்கள் தங்குமிடங்களிலேயே இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். "நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்," என்று கூறிய அவர், "அதைப் பெற்றுக்கொள்வது உங்கள் கையில் இருக்கும். தலைமுறை தலைமுறையாக உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்"என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அனைத்து இரானிய மக்களும் "அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான மற்றும் அமைதியான இரானைக் கொண்டு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், இரான் " மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். "எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்." மேலும், இஸ்ரேலிய குடிமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார். முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் "சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை" அறிவித்தார். இரான் எவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது? இரான் சார்பில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது, மேலும் "தேவைப்படும் இடங்களில் அச்சுறுத்தல்களை இடைமறித்து தாக்க" தாங்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது. இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மற்றும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன, ஆனால் அவை ஏவுகணைகள் விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டதா என்பது குறித்துத் தற்போது தெளிவாகத் தெரியவில்லை. பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் சேவை மையம் "ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக" பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவசரகால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி இஸ்ரேலியர்கள் கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல் திங்கள்கிழமை இரவு 20:00 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இஸ்ரேலின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gqpgkwwlko
  8. எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள் 28 Feb, 2026 | 04:48 PM காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் சனிக்கிழமை (28), பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களை நீக்காமல் இந்த சட்டத்திற்குள்ளே எங்களை அடிமையாக வைத்துக்கொண்டு இன்னொரு சட்டமான ஆறாம் திருத்த சட்டத்தின் ஊடாக கருத்து சுதந்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு பேச வாருங்கள் என்றால், சட்டங்களாலே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரமாக பேச முடியும்? ஆகவே இதற்காக தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய சர்வதேச நாடுகளாக இருக்கலாம் இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக தான் இந்த சட்டங்களை நீக்கவும், எமக்கு உதவி செய்யவும் முடியும். ஆகவே பேதங்கள் கடந்து எமது மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்தது மகிழ்ச்சிக்குரியது. ஆகவே எமது இலக்கு அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என்றார். https://www.virakesari.lk/article/239812
  9. கீவீஸ் உள்ளே பாக்கீஸ் வெளியே 😂. எனக்கு புள்ளிகள் கன்பர்மெடு😂
  10. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி : மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் – பல நாடுகள் வான்வெளி மூடல் 28 Feb, 2026 | 06:41 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரானின் பதிலடி ஆகியவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக, மத்திய கிழக்கின் பெரும்பாலான வான்வெளிகள் மூடப்பட்டு, உலகெங்கிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. சனிக்கிழமை (28) மோதல் வெடித்ததை அடுத்து ஈரான், இஸ்ரேல், ஈராக், ஜோர்தான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட குறைந்தது எட்டு நாடுகள் தங்களது வான்வெளிகளை மூடுவதாக அறிவித்தன. சிரியாவும் அதன் தெற்குப் பகுதியில் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியில் 12 மணிநேரத்திற்கு வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் மற்றும் கடற்படையை அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இந்தத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல் நடக்கும் வரை அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த ஈரான், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக உறுதியளித்தது. அதன்படி இஸ்ரேல் மீதும், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியது. "மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்களும் நலன்களும் நியாயமான இலக்குகளாக மாறிவிட்டன. இந்த ஆக்கிரமிப்பிற்குப் பிறகு எங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் (Red lines) இல்லை, எதையும் செய்யத் துணிவோம்," என்று மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே அந்த நாட்டு வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையிலான முக்கியப் பாதையாக இருக்கும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக, உலகளாவிய விமான நிறுவனங்கள் பல தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன அல்லது வேறு பாதையில் திருப்பிவிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மத்திய கிழக்கு வான்வெளியை முழுமையாகத் தவிர்க்கப்போவதாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், லுஃப்தான்சா (Lufthansa), ஏர் பிரான்ஸ், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ (Indigo) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தப் பிராந்தியத்திற்கான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், அதற்குப் பல வளைகுடா நாடுகளைப் பாதிக்கும் வகையிலான ஈரானின் பதிலடியும் இரண்டு 'இணையான' (Parallel) மோதல்களை உருவாக்கியுள்ளன. இது இந்தப் பிராந்தியத்தில் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான மற்றும் ஆழமான ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும். https://www.virakesari.lk/article/239825
  11. தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல் 28 Feb, 2026 | 04:32 PM யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் வெள்ளிக்கிழமை (27), பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. ம.திருவரங்கன், மூத்த சட்டத்தரணி கலாநிதி. கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா.சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்
  12. Today
  13. பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்! 28 Feb, 2026 | 04:55 PM பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அந்த சட்டமானது மிகவும் மோசமானது என தெரிவித்து, புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், மத குருக்கள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர். பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
  14. நல்லது. புர்ஜ் கலிபா பில் ஏறி பார்த்தால் - உச்ச மாடியில் ஒரு தங்க vending machine இருக்கும் - அதில் எனக்கு ஒரு பிஸ்கெட் வாங்கி வரவும்😂 சனத் பதவி விலகினார். இலங்கை 148 அடிக்குமா?
  15. விழுந்தது என்றுதான் சொல்கின்றார்கள். ஆனால் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றார்கள்
  16. Claude AI யிடம் கேட்ட போது: புவி வெப்பமடைதல் குறித்த அடிப்படை அறிவியல் ஒருமித்த கருத்து இன்னும் மாறவில்லை - ஏதாவது இருந்தால், அது மிகவும் அவசரமாகவும் கவலையளிக்கும் விதமாகவும் மாறிவிட்டது. விஷயங்கள் எங்கு நிற்கின்றன என்பதற்கான சுருக்கம் இங்கே: ஒருமித்த கருத்து எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. 99–100% காலநிலை விஞ்ஞானிகள் புவி வெப்பமடைதல் நிகழ்கிறது என்றும் அது மனிதனால் ஏற்படுகிறது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன. மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் தீங்குக்கான சான்றுகள் "அறிவியல் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை" என்று சமீபத்திய தேசிய அறிவியல் அகாடமிகளின் அறிக்கை முடிவு செய்துள்ளது. எதிர்பார்த்ததை விட விஷயங்கள் மோசமாக உள்ளன. 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை சாதனையை அமைத்தது, மேலும் தற்போது 34 கிரக முக்கிய அறிகுறிகளில் 22 சாதனை அளவில் உள்ளன. வெப்பமயமாதல் துரிதப்படுத்தப்படலாம், இது குறைக்கப்பட்ட ஏரோசல் குளிரூட்டல் மற்றும் வலுவான மேக பின்னூட்டங்களால் இயக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் 2015–2024 காலகட்டத்திற்கான தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.24°C வெப்பமயமாதலைக் காட்டுகின்றன - முந்தைய IPCC மதிப்பீட்டிலிருந்து வெறும் நான்கு ஆண்டுகளில் 0.15°C அதிகரிப்பு. 1.5°C பாரிஸ் இலக்கு அடிப்படையில் இழக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக, 2025 இல் முடிவடையும் மூன்று ஆண்டு காலம் 1.5°C வரம்பை மீறியுள்ளது, மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள், நீண்ட கால அடிப்படையில் உலகம் இந்த முக்கியமான வரம்பை ஏற்கனவே தாண்டிவிட்டதாகக் கூறுகின்றன. சில முக்கிய விஞ்ஞானிகள் பாரிஸ் ஒப்பந்தத்தை திறம்பட இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். முக்கிய புள்ளிகள் வளர்ந்து வரும் கவலை. அட்லாண்டிக் பெருங்கடல் சுழற்சியின் (AMOC) சரிவு, அமேசான் மழைக்காடுகளின் இழப்பு அல்லது கிரீன்லாந்து அல்லது மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டிகள் உருகுவது உள்ளிட்ட சாத்தியமான அடுக்கு முனைப்புப் புள்ளிகளில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர் - இது மீளமுடியாத மாற்றங்களைத் தூண்டக்கூடும். அரசியல் ரீதியாக, சில குறிப்பிடத்தக்க இயக்கங்கள் ஏற்பட்டுள்ளன. டிரம்ப் நிர்வாகம் EPA இன் 2009 ஆபத்து கண்டுபிடிப்பை - அமெரிக்க காலநிலை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் தீர்மானத்தை - ரத்து செய்ய நகர்ந்தது மற்றும் globalchange.gov வலைத்தளத்தை அகற்றியது. இதற்கிடையில், COP30 இன் இயக்குனர் ஒருவர் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பொருளாதார நடவடிக்கை மதிப்புக்குரியது என்பதை மறுப்பதை நோக்கி வெளிப்படையான அறிவியல் மறுப்பிலிருந்து மாற்றத்தைக் குறிப்பிட்டார். சுருக்கமாக: சில நாடுகளில் அரசியல் விருப்பம் பலவீனமடைந்துள்ள நிலையில், அறிவியல் முன்பை விட மிகவும் நிலையானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது.
  17. ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்? கட்டுரை தகவல் ஜெர்மி போவென் சர்வதேச ஆசிரியர் 15 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் ஒரு புதிய போரில் குதிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ள முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் அபாயகரமான தருணத்தை உருவாக்கியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேல் "தற்காப்பு" (pre-emptive) என்ற சொல்லைப் பயன்படுத்தியது. "தற்காப்பு நடவடிக்கை" என்ற சொல் குறிப்பது போல, இது ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அளிக்கப்பட்ட பதில் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, இது ஒரு "விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர்". இரானின் இஸ்லாமிய ஆட்சி பலவீனமாக உள்ளதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்துள்ளன; அதாவது அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆண்டின் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறையின் விளைவுகள் மற்றும் கடந்த கோடை காலப் போரினால் மோசமாக சேதமடைந்துள்ள பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகக் கருதுகின்றன. இது நழுவவிடக்கூடாத ஒரு வாய்ப்பு என்பதே அவர்களின் முடிவாகத் தெரிகிறது. இது தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட அமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு அடியாகும். தங்களது அறிக்கைகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இரான் தங்கள் நாடுகளுக்கு ஆபத்தானது என்று கூறினர். டிரம்ப் இதுவொரு உலகளாவிய ஆபத்து என்றும் குறிப்பிட்டார். இஸ்லாமிய ஆட்சி நிச்சயமாக அவர்களின் பரம எதிரிதான். ஆனால், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், மறுபுறம் இரானுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அதிகார ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொள்ளும் போது, தற்காப்பு என்பதற்கான சட்டரீதியான நியாயம் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பார்ப்பது கடினம். அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்பார்ப்பு இரானில் ஈடேறுமா? தாக்குதல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. ஆயுத மோதல் தொடங்கிவிட்டால், அதை கட்டுப்படுத்துவது இயல்பாகவே மிகவும் கடினமானது. தலைவர்களுக்கு தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும். பெஞ்சமின் நெதன்யாகு பல தசாப்தங்களாக இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். டெஹ்ரானில் உள்ள ஆட்சிக்கும், இரானின் ராணுவத் திறனுக்கும் தங்களால் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நெதன்யாகு தனது நாட்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஹமாஸுடனான இரண்டு ஆண்டுகாலப் போர் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இஸ்ரேல் போரில் இருக்கும் போது தனது அரசியல் நிலை வலுப்பெறுவதாக அவர் நம்புகிறார். தன் இயல்பிற்கேற்ப, டொனால்ட் டிரம்பின் குறிக்கோள்கள் அவ்வப்போது மாறி வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம், இரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி விரைவில் வரும் என்று அவர் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க கடற்படையின் பெரும்பகுதி வெனிசுவேலா தலைவரை பதவியிலிருந்து அகற்றும் பணியில் தீவிரமாக இருந்ததால், அவரிடம் ராணுவ ரீதியான தெரிவுகள் குறைவாகவே இருந்தன. அமெரிக்கா அந்தப் பிராந்தியத்திற்கு இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்களையும், கணிசமான தரைவழித் தாக்குதல் படைகளையும் அனுப்பி வைத்திருந்த நிலையில், இரானின் அணுசக்தி லட்சியங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து டிரம்ப் அதிகம் பேசினார். இருப்பினும், கடந்த கோடை காலப் போருக்குப் பிறகு, இரானின் அணுசக்தித் திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரான் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை எப்போதும் மறுத்து வந்துள்ளது. ஆனால் அணுசக்தித் திட்டத்தில் சிவில் பயன்பாட்டிற்கான தேவையைக் காட்டிலும் அதிகமாக யுரேனியத்தை அது செறிவூட்டியுள்ளது. குறைந்தபட்சம், ஒரு அணுகுண்டை உருவாக்குவதற்கான வாய்ப்பையாவது அது தன்வசம் வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதுவரை அது நிகழப்போகிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளியிடவில்லை. தனது வீடியோவில், இரான் மக்களுக்கு "சுதந்திரத்திற்கான நேரம்" நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார். நெதன்யாகுவும் இதேபோன்ற செய்தியையே அளித்தார். அதாவது இந்தப் போர் இரானிய மக்களுக்கு அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார். ஆனால் அது நடக்குமா என்பது முற்றிலும் நிச்சயமற்றது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விமானப்படை தாக்குதல் போதுமா? விமானத் தாக்குதல்களால் மட்டுமே ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. 2003-ஆம் ஆண்டில் இராக்கின் சதாம் உசேன், அமெரிக்கா தலைமையிலான பிரமாண்டமான படையால் பதவியிறக்கப்பட்டார். 2011-இல் லிபியாவின் மும்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் சில அரபு நாடுகளால் வான்வழி பாதுகாப்பு வழங்கப்பட்ட கிளர்ச்சிப் படைகளால் வீழ்த்தப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே அதன் முடிவு அரசு இயந்திரத்தின் வீழ்ச்சி, உள்நாட்டுப் போர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கொலைகளாகவே அமைந்தது. லிபியா இப்போதும் ஒரு சிதைந்த நாடாகவே உள்ளது. இராக் இன்னும் அந்த ஊடுருவலின் விளைவுகளையும், அதைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியையும் எதிர்கொண்டு வருகிறது. ஒருவேளை, வான்வழித் தாக்குதலால் மட்டுமே ஓர் ஆட்சி வீழ்ந்த முதல் நிகழ்வாக இது அமைந்தாலும் கூட, இந்த இஸ்லாமிய ஆட்சிக்குப் பதிலாக மனித உரிமைகளைப் போற்றும் ஒரு தாராளவாத ஜனநாயகம் அங்கே அமைந்துவிடாது. தற்காலிகமாகப் பொறுப்பேற்கக் கூடிய நம்பகமான மாற்று அரசாங்கம் எதுவும் காத்திருக்கவில்லை. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, இரான் அரசு ஒரு சிக்கலான அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளது; இது சித்தாந்தம், ஊழல் மற்றும் தேவைப்படும் போது இரக்கமற்ற முறையில் பலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றின் கலவையால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில், போராட்டக்காரர்களைக் கொல்ல தான் தயாராக இருப்பதை டெஹ்ரான் அரசு தனது நடவடிக்கைகளால் நிரூபித்தது. வீதியில் இறங்கி இந்த முறைமைக்கு சவால் விடுத்த ஆயிரக்கணக்கான சக குடிமக்களை, சுட்டுக் கொல்லுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் பாதுகாப்புப் படைகளை அது கொண்டுள்ளது. ஒருவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயியை கொல்ல முயற்சிக்கலாம். படுகொலைகளை ஒரு முக்கிய உத்தியாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களையும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா தலைவர்களையும், அவர்களின் கீழ் இருந்த பல தளபதிகளையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயமாகும். இது ஒரு ஆயுதமேந்திய அமைப்பை அல்ல, மாறாக ஒரு முழுமையான அரசை வழிநடத்துகிறது. இது ஒரு தனி மனிதனின் அதிகாரம் மட்டும் அல்ல. ஒருவேளை உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்படுவார்; பெரும்பாலும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) ஆதரவு பெற்ற மற்றொரு மதகுருவே அந்த இடத்திற்கு வருவார். இந்தப் புரட்சிகர காவல்படை, நாட்டின் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அதைப் பாதுகாப்பதையே தனது முதன்மையான பணியாகக் கொண்டுள்ளது. தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், இல்லையெனில் நிச்சயம் மரணம் நேரிடும் என்றும் டிரம்ப் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார். ஆனால் டிரம்பின் இந்த சலுகையால் ஐஆர்ஜிசி ஈர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இஸ்லாமியக் குடியரசின் சித்தாந்தத்திலும் ஷியா இஸ்லாம் பிரிவின் கொள்கைகளிலும் "தியாக மரணம்" என்பது ஒரு மாறாத மற்றும் முதன்மையான அங்கமாகும். இரானைப் பொருத்தவரை டிரம்பின் நம்பிக்கை சரியாகுமா? அரசியலிலும் வாழ்க்கையிலும் முதன்மையான உந்துசக்தி கொடுக்கல்-வாங்கல் (transactional) சார்ந்தது என்று டிரம்ப் நம்புகிறார். அவருடைய புத்தகம் குறிப்பிடுவது போல, அது "தி ஆர்ட் ஆஃப் தி டீல்" (ஒப்பந்தத்தின் கலை). ஆனால் இரானைக் கையாளும்போது சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையின் வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். அதை அளவிடுவது மிகவும் கடினம். ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த நெருக்கடி அதிகரித்ததாலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல் படைகளைத் திரட்டியதாலும், போர் தவிர்க்க முடியாதது என்று டெஹ்ரான் தலைமை கருதுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த கோடை காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதை உணர்ந்தே இரானும் இம்முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இரான் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலியர்களையோ நம்பவில்லை. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்திய ஜே.சி.பி.ஓ.ஏ (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இது ஒபாமா நிர்வாகத்தின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சாதனையாகக் கருதப்பட்டது. 'மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையும் மோசமாகும்' இரான் குறைந்தது அவகாசம் பெறுவதற்காகவாவது, ஜே.சி.பி.ஓ.ஏ-வின் இரண்டாவது கட்ட ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவை எதிர்க்கும் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இரான் அளிக்கும் ஆதரவு ஆகியவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிகிறது. இது இரானியத் தலைமைக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் இது முற்றிலும் சரணடைவதற்குச் சமமானது. ஏவுகணைகளையும் நட்பு நாடுகளையும் விட்டுக்கொடுப்பது, தற்போது எதிர்கொண்டுள்ள தாக்குதலை விட, ஆட்சி மாற்றத்திற்குத் தங்களை இன்னும் எளிதாகப் பலியாக்கிவிடும் என்ற எண்ணம் அந்நாட்டுத் தலைமையின் மனதில் இருந்திருக்கலாம். இரானியத் தலைவர்கள் இப்போது இந்தப் போரை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு உயிர் பிழைப்பது மற்றும் அதன் விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்துக் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்றைய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையையும் அதன் சாத்தியமான விளைவுகளையும் கண்டு சௌதி அரேபியா தலைமையிலான அண்டை நாடுகள் திகைப்படைந்து போயிருக்கும். மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குப் பிரச்னைகளை ஏற்றுமதி செய்யும் திறன் அதிகம் என்பதால், மீண்டும் வெடித்துள்ள தீவிரமான இந்தப் போர் ஏற்கனவே கொந்தளிப்பாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கும் இப்பிராந்தியத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மேலும் மோசமாக்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?
  18. அப்படி ஆராய்சியாளர்கள் பெரிதாக தம் நிலைப்பாட்டை மாற்றவில்லை. 2020, 2026 இடையே இதில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவே இல்லை. உலக விஞ்ஞான அமைப்புகளும், விஞ்ஞானிகளும் அன்று சொன்னதைதான் இன்றும் சொல்கிறார்கள். மாறியது அரசியல் அணுகுமுறையே. அத்தோடு உங்கள் போன்றோரின் நிலைப்பாடும். விஞ்னானம் அன்று சொன்னதை தான் இன்றும் சொல்கிறது. உலக வெப்பமாதல் ஒரு பிரச்சனைதான். ஆனால் உலகுக்கல்ல, மனிதனுக்கு. மனிதன் அழிந்த பின்னும் உலகம் இருக்கும். உங்கள் நிலைமாற்றத்துக்கு இதுதான் காரணம் எண்டால் அது மிகவும் ஏற்புடையது. இதைதான் நானும் மேலே எழுதியுள்ளேன் - உலக வெப்பமயமாதல் உண்மை, ஆனால் அதை தடுக்கும் ஒற்றுமை உலக மனிதரிடம் இல்லை. எனவே அதோடு வாழும் வகை பற்றி யோசிக்க வேண்டும் என. ஆனால் உலக வெப்பமயமாதலே பொய், விஞ்ஞானம்/விஞானிகள் தம் நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளார்கள் என்பது பொய்/சப்பை கட்டல்.
  19. தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம் 28 Feb, 2026 | 06:33 PM தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 40 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 24 மாணவிகள் உயிரிழந்ததாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மினாப் நகர ஆளுநர், ஈரானிய செய்தி நிறுவனம் Mehr-க்கு வழங்கிய தகவலில், மினாப் நகரில் இன்று இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு ஆரம்பப் பாடசாலை இலக்கு வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ‘ஷஜாரே தய்யிபே (Shajare Tayyebe)’ எனப்படும் பாடசாலை வளாகம் மீண்டும் தாக்கப்பட்டதாகவும், அந்தப் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவமனை, தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு முதலுதவி வழங்கும் மையமாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பாடசாலையில், காலை நேர அமர்வில் மொத்தம் 170 மாணவிகள் கல்வி பயின்று வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற போது வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் மற்றும் காயமடைந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்குப் பின்னர் உருவான கோரக் காட்சிகளை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாகக் கூறி வரும் நிலையில், ஒரு ஆரம்பப் பாடசாலை சேதமடைந்துள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மனித உரிமை அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளன. தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
  20. முன்னைய மன்னர் ஆட்சியின் ஆட்சி மோதல்களில், பூமியில் உயிர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி அழிந்தன அழிக்கப்பட்டன. பூமி பாதிப்பின்றிச் சுற்றியது. தற்போது மக்கள் ஆட்சியில் மக்கள் அறிவும் அதிகரித்த ஆட்சி மோதல்களில், உயிர்களோடு பூமியும் பாதிப்புக்கு உள்ளாகி அழிந்துவிடும்போல் தெரிகிறது. மக்களாட்சியை விடவும் மன்னராட்சி பூமிக்கு மேலானதுபோல் தோன்றுகிறது.
  21. பாகிஸ்தான் தெரிவாகிவிட்டது என்றே நினைகிறேன். ஜி, உங்கினிக்கயும் 2 மிசை விழுந்ததாமே? பத்திரமா இருங்கோ.
  22. குறைந்தது 64 ஓட்டவித்தியாசங்களுக்குல் இலங்கையை பாகிஸ்தான் அணியை வென்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகிவிடும்
  23. விஜை-திரிஷா திருமணத்துக்கு அப்பாலான உறவின் டைம்லைன் இதுதானாம்.
  24. 150-0 எவ்வளவு அடிப்பினம். ஒரு 230 அடிப்பினமா. இன்னும் 36 பந்து இருக்கு..
  25. இன்னும் விக்கட் இழப்பின்றி 120 தாண்டிட்டினம். பெரிய ஓட்டம் அடிக்கப் போகினம் போல. ஒரு தாக்குதலோடதான் வந்திருக்கினம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.